தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் 2016 – மெல்பேர்ண்


கவி விதை - 15 - ஆசான் - -- விழி மைந்தன் --

.


பொன்னிறப் புல்  வெளிகளுக்கு மத்தியில் இருந்த  சிறிய ஊர் அது. ஊரின் நடுவில் ஒரு ஆரம்பப் பாடசாலை.

அந்தப் பாடசாலையில் ஆசிரியராக அவர் இருந்தார்.

மாபெரும் போர் ஒன்றின் வடுக்களைச் சுமந்த தேசம் அது. இறுதியில் வெற்றியைக் கண்டிருந்தாலும் அந்தத் தேசத்தின் மனநிலை, பாரத யுத்தத்தில் வென்ற தருமனின் மன நிலையை ஒத்திருந்தது அப்போது.

யுத்தத்தில் தந்தையை அல்லது தாயை அல்லது இருவரையும் இழந்த பல குழந்தைகள் அவ்வூரின் ஆரம்பப் பாடசாலையில் படித்தனர். எஞ்சியவர்களும் வீடு வாசல்களை இழந்திருந்தனர். மனதளவில் எல்லாக் குழந்தைகளும் வடுவுற்றிருந்தனர்.

அக்குழந்தைகளின் வகுப்பு ஒன்றைக் காலையில் இருந்து இரவு வரை அவர் கவனித்தார்.

அனிச்சம் பூவிலும் அதிகமான மென்மையுடன்  தனது குழந்தைகளை அவர் நடத்தினார்.

இன்றிரவின் முத்தம் - எச்.ஏ. அஸீஸ்

.
இன்றிரவின் முத்தம்
---------------------- 
                                
ஒரு முச்சக்கர வண்டிக்கு
முத்தம் கொடுத்தது
என் கார் இன்றிரவு
இடுப்புடைந்து போனது
முச்சக்கர வண்டி
நொண்டி நகர்ந்தது
ஒரு பார்க்கில் நடந்த காதல் போல
பார்க்க வந்தனர் எல்லோரும்
உரத்துக் கதைத்தனர்
ஒரு சிலர் என்னிடம்
உன் கார் கொஞ்சம் அவசரப் பட்டதோ 
வாயும் பல்லும் உடைந்து
வழிகிறது இரத்தம்
அழுது தீர்க்கக் கண்ணீரில்லை


Opposition leader Bill Shorten visit to Sydney Murugan Temple

.
NewYear 14.04.2016 & Leader of Opposition Bill Shorten, Member of Austria Parliament Julie Owen & Strathfield MP JodiMckay at SydneyMurugan Temple


சமயச் சொற்பொ ழிவுகள் - சிட்னி முருகன் கோவில்
Sri Meenakshi Thiru'Kalyanam at Sri Venkateswara Temple.

திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
திரும்பிப்பார்க்கின்றேன்

இதழியல்  துறையிலிருந்து  சட்டவல்லுநராக மாறியவரின்  கதை எம்.ஜி.ஆரின்  தாய்  ஏட்டிலிருந்து  தாயகம்  கடந்த   தமிழ் அவுஸ்திரேலியன்  வரையில்  பயணித்த   பன்முக ஆளுமை    கலாநிதி  சந்திரிக்கா   சுப்பிரமணியம்
சென்னை    மழை வெள்ளத்தின்   காரணிகளை துல்லியமாக   ஆராய்ந்த   சுற்றுச்சூழல்   ஆய்வாளர்
                                                                                      

அவுஸ்திரேலியாவுக்கு  நான்   வந்தபின்னர்,  தமது  மறைவுவரையில் எனக்கு   அடிக்கடி  கடிதங்கள்  எழுதியவர்  நண்பர்  ராஜஸ்ரீகாந்தன்.   இலங்கையில்   நடைபெறும்  கலை,   இலக்கிய  நிகழ்வுகள் பற்றிய    தகவல்கள் அவற்றில்  இருக்கும்.   மின்னஞ்சல்,  இணையத்தள  வசதிகள்   இல்லாத  அக்காலப்பகுதியில்,  அங்கு  நடைபெறும் (சமகால)   நிகழ்வுகளை   உடனுக்குடன்  அவர் கடிதங்கள்  தெரிவிக்கும்.
அந்நிகழ்ச்சிகளில்   பேசுபவர்கள்  பெரும்பாலும்  எனக்கு  நன்கு  தெரிந்தவர்களாகத்தான்  இருப்பார்கள்.  ஆனால்,  அவருடைய கடிதங்களில்  இடம்பெறும்  ஒருவரின்  பெயர்  மாத்திரம் எனக்குப்புதியது.   அவர்  குறித்து  நான்   விசாரித்ததும்  அந்தப்பெயருக்குரியவர்   வீரகேசரியில்  பணியிலிருப்பதாகவும் சென்னையில்  படித்து  திரும்பியிருப்பதாகவும்  ஊடகத்துறையில் பயின்று   பட்டம்  பெற்றவர் -  சிறந்த  ஆய்வாளர்  எனவும்,  உலக விவகாரங்கள்  அறிந்தவர்  என்றும்  ராஜஸ்ரீகாந்தன்  விதந்து குறிப்பிட்டிருந்தார்.

அபயகரம் வழங்கும் 24 ம் ஆண்டு நிகழ்வு 23 04 2016

.


யாழ் மத்திய கல்லூரியின் சுப்பர் சிங்கர் 2016. 24 04 2016

.
இலங்கைச் செய்திகள்


கொழும்பு வடக்கில் மனதுக்கு இதமானதொரு சூழல்

சீனாவின் காலடியில் இலங்கை மண்டியிட்டமைக்கான காரணத்தை விளக்குகிறார் கெஹலிய

ஜனாதிபதி சட்டத்தரணி சுரேந்திரன் காலமானார்

சாவகச்சேரி மீட்கப்பட்ட தற்கொலை அங்கி சம்பவத்தில் வெளிநாட்டில் வசிக்கும் இரு இலங்கையர் சம்பந்தமா ?

சுபீட்சமிக்க தேசத்தை கட்டியெழுப்புவதற்கு உறுதி கொள்வோம் : ஜனாதிபதி வாழ்த்து

65 ஆயிரம் வீடுகளை பெறுபவர்களின் பெயர், விபரங்கள் இதோ
கொழும்பு வடக்கில் மனதுக்கு இதமானதொரு சூழல்

11/04/2016 கொழும்பு வடக்கில்  275 மில்லியன் ரூபா செலவில் மீள்நிர்மாணிக்கப்பட்ட காக்கைதீவு கடற்கரைப்பூங்கா கடந்த சனிக்கிழமை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.


அக்காவின் ஆதங்கம் - சிறுகதை - V.S. கணநாதன்

.

அன்று காலை மோகன் கிறீஸ்தவ  ஆலயத்துக்குப் போக  லம்ரோடு  பஸ் நிலையத்தில் நின்றான். வழக்கமாய் வரும் 848  நம்பர்  வண்டி தாமதமாயிற்றே என்று வருந்தும்போது,   அவன் எதிரே ஒரு புத்தம் புது டொயோடா   கார் வந்து நின்றது

அதை ஓட்டிய யுவதி கண்ணாடியைக் கீழே இறக்கினாள்.  “நீங்கள் ஆலயத்துக்குத் தானே  செல்கிறீர்கள்,”  என்றாள்
அது கேள்வியா அல்லது கூற்றா? You are going no என்று ஊரில் சொல்கிற மாதிரி  இருந்தது அவள்  பேச்சு.   

என்ன, கடும், யோசனை?”

 “ஆமாம்கிறீஸ்தவ ஆலயத்துக்குப்  போக வேணும், ” என்று அழாக் குறையாய் கூறினான்.

முன் கதவைத் திறந்து அவனை அமரச் சொன்னாள்.

கார்  ரேடியோவில் இயேசு பாட்டு கேட்டவன்,  கொஞ்சம் தைரியம் அடைந்து  ஸீட்டில் உட்கார்ந்தான்

உலகச் செய்திகள்


மீளப் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய பால்கன் 9 ஏவு­கணை வெற்­றி­க­ர­மாக சமுத்­திர தளத்தில் மீள தரை­யி­றக்கம்

வடகொரியாவால் கண்டம் விட்டு கண்டம் தாக்கக்கூடிய ஏவுகணை இயந்திரம் வெற்றிகரமாக பரிசோதனை

 பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் மோதல் ; லண்டனில் பரபரப்பு 

பாரிய பணமோசடிக்கு வழிவகுத்து கொடுத்த நிறுவனம் முற்றுகை

400 பேர் அமெரிக்காவில் கைது

வாட்ஸ்ஆப் தடை செய்யப்படுமா ?

ஜப்பானை உலுக்கிய இரு பூமியதிர்ச்சிகள் : 29 பேர் பலி, பலர் காயம், வீடுகளுக்கு சேதம்

சக்திவாய்ந்த நிலநடுக்கம், 30 பேர் பலி : சுனாமி எச்சரிக்கை.!மீளப் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய பால்கன் 9 ஏவு­கணை வெற்­றி­க­ர­மாக சமுத்­திர தளத்தில் மீள தரை­யி­றக்கம்

11/04/2016 அமெ­ரிக்க ஸ்பேஸ் எக்ஸ் கம்­ப­னியால் ஏவப்­பட்ட மீளப் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய ஏவு­க­ணை­யா­னது வெற்­றி­க­ர­மாக சமுத்­திர தள­மொன்றில் தரை­யி­றங்­கி­யுள்­ளது.
அந்த கம்­ப­னியால் இதற்கு முன் மேற்­கொள்­ளப்­பட்ட 4 முயற்­சிகள் தோல்­வியைத் தழு­வி­யி­ருந்­தன. பால்கன் 9 ஏவு­க­ணை­யா­னது அமெ­ரிக்க புளோ­ரிடா மாநி­லத்­தி­லுள்ள கனா­வெரல் விண்­கல ஏவு­த­ளத்­தி­லி­ருந்து டிரகன் விண்­க­லத்தின் சகிதம் அந்­நாட்டு நேரப்­படி வெள்­ளிக்­கி­ழமை இரவு ஏவப்­பட்­டது.
இந்­நி­லையில் விண்­க­லத்தை விண்­வெ­ளிக்கு எடுத்துச் சென்ற குறிப்­பிட்ட ஏவு­கணை, பின்னர் அதி­லி­ருந்து பிரிந்து நாசா விண்­வெளி நிலை­யத்தின் சமுத்­தி­ரத்தில் மிதக்கும் தள­மொன்றில் தரை­யி­றங்­கி­யுள்­ளது.

தமிழ் சினிமா


தி ஜங்கிள் புக் (The Jungle Book)
பிரபல எழுத்தாளர் Rudyard Kipling'ன் நாவலை மையமாக வைத்து இன்றைய கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பிரமாண்டமாக வெளிவந்துள்ளது "தி ஜங்கிள் புக்".

கதை:

காட்டு விலங்குகளுக்கு மத்தியில் வளரும் ஒரு 10 வயது சிறுவன் "மோக்லி"தான் இந்த படத்தின் ஹீரோ. அடர்ந்த காட்டில் அனாதையாக இருக்கும் சிறுவனை பகீரா என்ற கரும்சிறுத்தை கண்டெடுத்து ஒரு ஓநாயிடம் கொடுத்து வளர்த்து வருகிறது.
ஓநாய் கூடத்தில் வளர்ந்து வரும் மோக்லிக்கு 'ஷேர்கான்' உருவில் ஒரு பெரிய பிரச்சனை வருகிறது. காட்டில் மனிதர்கள் இருப்பதை விரும்பாத வேட்டை ராஜாவான ஷேர்கான் என்ற புலி, மோக்லியை கொல்ல துடிக்கிறது. இந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்காக காட்டை விட்டு வெளியேறி மனிதர்களோடு இணைய நினைக்கும் இந்த சிறுவனுக்கு பல தடைகள் வருகிறது.
சிறுவன் தப்பிவிட்டதால் கோபமான ஷேர்கான், ஓநாய் கூட்டத்தின் தலைவியை கொல்கிறது, இந்த செய்தியை கேட்ட மோக்லி, மீண்டும் திரும்பி வந்து எவ்வாறு பழிவாங்குகிறான் என்பது தான் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்:

12 வயதே ஆன நீல் சேதி நடிப்பில் குறை காண முடியாத அளவிற்கு நடித்துள்ளார். உலகத்தை பற்றி ஒன்றும் அறியாத சிறுவனாக மனதை கவர்கிறார்.
மோக்லிக்கு அடுத்து, பார்ப்பவர்களை கவரும் கதாபாத்திரம் என்றால் அது கரடி 'பாலு'தான். கொடிய பாம்பிடமிருந்து மோக்லியை காப்பாற்றும் பாலு, அதற்கு நன்றிகடனாக அவனை கொஞ்சம் வேலைவாங்குவது முதல், அவனுக்கு ஆபத்து என தெரிந்து 'நீ எனக்கு நண்பனுமில்லை, உன் உதவி எனக்கு தேவையுமில்லை.. நீ உடனே இங்கிருந்து சென்றுவிடு!' என கூறிவிட்டு கிளைமாக்ஸில் புலியுடன் சண்டை போடுவது வரை, படம் பார்ப்பவர்கள் மனதில் இடம் பிடித்துவிடுகிறது இந்த கதாபாத்திரம்.
ஒரே ஒரு நடிகரை மட்டும் வைத்து கொண்டு மற்ற அனைத்து கதாபாத்திரங்களையும் தத்ரூபமாக சிஜியில் உருவாக்கி ஆச்சர்யப்பட வைத்துள்ளார் இயக்குனர் Jon Favreau. அயன் மேன் படங்களை இயக்கி புகழ் பெற்ற Favreau, தன்னால் இயற்கையான சூழ்நிலையில் ஒரு படத்தை உருவாக்கமுடியும் என நிரூபித்துள்ளார்.
அவதார், லைப் ஆப் பை போன்ற படங்களை போல் இந்த படத்தையும் முழுக்க முழுக்க கிரீன் மேட்டில் படமாக்கியுள்ளனர்.
சிறுவயதில் படித்த, டிவியில் பார்த்த ஒரு கார்ட்டூன் கதையை இப்போது பெரிய திரையில் பிரமாண்டமாக பார்க்கும் போது கண்டிப்பாக அனைவருக்கும் புல்லரிக்கும். மெதுவாக செல்லும் படம் சற்று பொறுமையை சோதித்தாலும், 3Dயில் பிரமாண்ட காட்சிகளுக்காக கண்டிப்பாக பார்க்கலாம்.
படம் பார்த்து முடித்த பிறகு ஒரு நிஜ காட்டிற்கே சென்று வந்த அனுபவம். மொத்தத்தில் The Jungle Book - குழந்தைகளை நிச்சயம் கவரும்.

Rating: 3.75/5.0   நன்றி  cineulagam