மரணஅறிவித்தல்

.

திரு விசுவலிங்கம் கனகசபாபதி

Image may contain: one or more people
தாவடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு விசுவலிங்கம் கனகசபாபதி (ஓய்வுபெற்றஆசிரியர், தரவளை இந்து தமிழ்க் கலைவன் பாடசாலை, டிக்கோயா, ஹைலண்ட்ஸ் கல்லூரி, ஹற்றன், தாவடி இந்து தமிழ்க் கலைவன் பாடசாலை) அவர்கள் 01.09.2019 அன்று காலமானார்.
அன்னார் திருமதி தவமணி (ஓய்வுபெற்றஆசிரியை, இணுவில் மத்திய கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும், விசுவலிங்கம், திருப்பதி ஆகியோரின் அன்பு மகனும், விசுவலிங்கம், இராசமணி ஆகியோரின் அன்பு மருமகனும், இரகுபதி, அமரர் சத்தியசோதி (பாபு), பிரபாகர் ( கானா பிரபா) ஆகியோரின் அன்புத் தந்தையும். சிவனேஸ்வரி, ஊர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும், குமரன், மஞ்சுளா, இலக்கியா ஆகியோரின் அன்புப் பாட்டனும், காலஞ் சென்ற பாக்கியம், விசாலாட்சி, மற்றும் நாகம்மா, செல்லம்மா, கனகம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரனும், தெய்வேந்திரம், பூபாலசிங்கம், சுப்பிரமணியம், காசிப்பிள்ளை, இராசரத்தினம், புனிதவதி, தனலக்சுமி, தருமகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுப்ரமணியம், அமரர் குமாரசுவாமி,அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகலனுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் திங்கட்கிழமை 02.09.2019 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் தாவடி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறியத் தருகிறோம்.
தகவல்
தவமணி(மனைவி) 021 221 4691
இரகுபதி(மகன்) +44 7894 910482
பிரபாகர்(மகன்) + 61 416 141 792
கோண்டாவில் மேற்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.

“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்ற வானிலும் நனி சிறந்தனவே" கானா பிரபா

.
வானொலியாளர் , பத்திரிகையாளர் , சிட்னியில் பிரபலமான எழுத்தாளர் திரு கானா பிரபாவின் அன்புத் தந்தையார் இறைபதம் அடைந்து விட்டார். அவர் அந்த வேதனையின் வலிகளோடும் நினைவுகளோடும் பதிவிட்டதை இங்கு தருகிறோம் . அவரின் மறைவுக்கு தமிழ்முரசின்  அஞ்சலிகள்.

Image may contain: indoor

அப்பாவைப் பார்க்கப் போய்க் கொண்டிருக்கிறேன். இந்த முறை வழக்கம் போல என் யாழ்ப்பாண வருகையில் என்னைக் கண்டதும் கையைப் பிடித்துக் கொண்டே அழும் அப்பாவைப் பார்க்கப் போவதில்லை. அவர் நம்மை விட்டுப் பிரிவதற்கு முன் ஒரு சில வார்த்தைகள் பேச இருந்தேன். ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு சில மணி நேர என் வாகனப் பயணத்தில் இருந்து கொண்டே அவரை நினைக்க வைத்து விட்டு நிரந்தமாகப் போய் விட்டார்.
“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே"
இப்படித்தான் சொல்லி முடிப்பார் ஊரிலிருக்கும் எனது அப்பா அப்பா தன் பெரும்பாலான தொலைபேசி உரையாடல்களில். தன்னுடைய வாழ்நாளின் அதிக பட்ச காலத்தைத் தன் சொந்த ஊரில் தான் கழிக்க வேண்டும் என்ற வேட்கையோடு இருப்பவர் அவர்.
அதிகபட்சமாக தன் சொந்த ஊரை விட்டு விலகி இருந்தது ஆசிரியப்பணிக்காக இலங்கையின் மலையகப் பகுதியான ஹட்டனில் இருந்ததும், அதற்குப் பின்னர் 95 ஆம் ஆண்டின் இடப்பெயர்வின் போது சாவகச்சேரி என்ற பகுதியில் இருந்ததும் தான் அவரின் உச்சபட்ச சாதனை.
"ஐயா! நீங்கள் பின்னடிக்கு இந்த நாட்டுக்கு வந்து சீவிப்பீங்களோ?"
"எங்கட நாட்டுச் சுவாத்தியம் உங்கட அவுஸ்திரேலியாவில் இருக்குதோ"
"அங்கை ஆட்களைத் திருப்பி அனுப்பினமாம் நீங்களும் வரலாம் தானே"
இப்பிடி அடிக்கடி கேட்டு என் மனதில் என்ன ஒட்டியிருக்கிறது என்று ஆழம் பார்ப்பார் அவர். ஐயா, தம்பி என்று மரியாதையான வார்த்தையோடு தான் சிறுவயதில் இருந்து அழைக்கும் பழக்கம் அவருக்கு.
கூழைக் குடிச்சு வாழ்ந்தாலும் சொந்த ஊரில் இராசா மாதிரி இருக்கலாம் என்று பெருமையடிப்பார் 20 ஆண்டுகளைத் த்ச்ன் புலம்பெயர்வுச் சூழலில் மூழ்கடித்துவிட்ட என்னைப் பார்த்து.
ஒரு ஏழைக் கமக்காரத் தந்தைக்கு ஐந்து பெண் சகோதரிகளோடு ஒரேயொரு ஆண் என்று வாய்த்தவர் அவர். கஷ்டப்பட்டுப் படித்து ஆசிரியத்தொழிலைக் கையிலெடுத்துப் பணிக்கு அவர் சேரவும் அவரின் தகப்பனார் காத்திருந்தது போலப் பொறுப்பைச் சுமத்திவிட்டுக் காலமாகிவிட்டார். அப்பாவைப் பொருத்தவரை தன்னுடைய வாழ்நாளின் முக்கால் பங்கை தோட்டத்துச் செம்ப்பாட்டு மண்ணிலும் பங்கு போட்டுக் கொண்டவர். விடிகாலை மூன்று, நான்கு மணிக்கே எழுந்து கிட்டத்தட்ட அரைமணி நேரம் தொலைவில் இருக்கும் தோட்டம் காணத் தன் சைக்கிளில் இருளைக் கிழித்துப் போட்டுவிட்டு இறங்கிவிடுவார். 

அகநிறைவாய் வாழுகிறேன் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


                   அப்பாவின் தோழேறி 
                         ஆசையாய் பார்த்ததெல்லாம் 
image1.JPG                  இப்பவுமே என்மனதில்
                          இனிப்பாக இருக்கிறது
                   தப்பிதங்கள் செய்தாலும்
                           தவறென்று சொல்லாமல்
                   இப்படிநீ செய்யாதே
                          என்றுரைப்பார்  எங்களப்பா ! 

                   கோவிலுக்குப் போனாலும் 
                          கூடவே கூட்டிச்செல்வார்
                    காவலனாய் எங்களப்பா
                           கருணையுடன் இருந்தாரே 
                    கோபமுற வைத்தாலும் 
                              குறும்புபல செய்தாலும்
                      காதலுடன் எனையணைத்து
                              கன்னமதில் கொஞ்சிநிற்பார் ! 

                      காய்ச்சலிலே நானிருந்தால்
                            கஷாயமெலாம் தரமாட்டார் 
                     கசப்பாக இருக்குமென்று
                            கற்கண்டை  சேர்த்திடுவார் 
                      நானழுதால் தானழுவார்
                              நான்சிரித்தால் தான்சிரிப்பார் 
                      தன்வாழ்வின் சொத்தெனவே
                             தானிருந்தார் எங்களப்பா  ! 

அரவணைக்கத் தேரேறி வாமுருகா மால்மருகா ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா



யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா..!


யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா இன்று (29.08.2019) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

படித்ததில் பிடித்தது . செ.பாஸ்கரன்

.

வெளியே தெரியாதவன் –சிறுகதை-பொள்ளாச்சி அபி



“தம்பி..வணக்கம்..! டைரக்டர் சார் இருக்காரா..?” மையமாகக் குளிரூட்டப்பட்ட அந்த அறையின் ஏ.சி.வீணாகிவிடக் கூடாது என்று அளவாய்த் திறந்த கதவின் முன் கைகூப்பியபடி நின்றுகொண்டிருந்தார் வெங்காய மண்டி வெங்கடேசன். எங்களுக்கெல்லாம் வி.எம்.வி. அவருடைய இடதுபுற கக்கத்தில் அமர்ந்திருந்த கைப்பையின் கனம் அதிகமாக இருந்திருக்க வேண்டும்.குவித்த கை இறக்கியவுடன்,வலது கையால் அதனை இறுகப் பிடித்துக் கொண்டார். 

“சார்..இப்ப வந்துருவாரு..உள்ள வந்து உக்காருங்க..!” என்றான் ப.ரத்தினகுமார். எதிர்காலத்தில் பல தேசிய,மற்றும் ஆஸ்கார் விருதுகளை வாங்கப் போகும் பரத்குமார். 

உள்ளே வந்து சோபாவின் குஷனில் புதைந்த வி.எம்.வி, அறையைச் சுற்றிலும் நோட்டம் விட்டார்.டைரக்டரின் வருகைக்காக காத்திருக்கும் எதிர் சோபாவையும்,அதற்கு முன் இருந்த டீப்பாய்., அதன்மீது பரப்பி வைக்கப்பட்டிருந்த உயர்ரக மதுபானங்கள், நறுக்கி வைக்கப்பட்டிருந்த பழங்கள்,மற்றும் இத்யாதிகளை பார்த்தார். கண்களுக்குள் ஒரு அங்கலாய்ப்பு மின்னி மறைந்தது. அதனைக்கண்டு கொள்ளதவர் போல நிமிர்ந்தவர், உதவி இயக்குனர்களான பரத்குமாரையும்,தியாகுவையும்,கார்த்திக்கையும் மையமாகப் பார்த்தார். “உக்காருங்கப்பா..ஏன் நிக்கிறீங்க..புரொட்யூசர்,டெக்னீசியன் எல்லாம் சூட்டிங்லேதான்., இங்க நாம ப்ரீயா இருப்போமே..!” குரலில் தெரிந்த நட்பை மதித்து,அருகிலிருந்த சாதாரண நாற்காலிகளை மூவரும் ஆக்ரமித்தார்கள். 

“ஆமா..கதாநாயகன் முதல்பாதிலே வில்லனா இருக்கான்.அப்ப அவன் வந்து கதாநாயகியைக் கற்பழிக்கும் போது,அந்த இடத்திலே ஏதோ புதுசா ஒரு சீன் வெக்கலாம்.. சீன் புடிச்சாச்சுனு டைரக்டர் சொல்லியிருந்தாரே..அந்த சீனைக் கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்.!” 

கார்த்திக்கும்,தியாகுவும் சற்றே தயங்கி நிற்க, பரத் வாயைத் திறந்தான் “சார்..அது வந்து..டைரக்டர் வந்துதான் விளக்கமாச் சொல்வாரு சார்..”, 

உதவி இயக்குனர்கள் எப்போதுமே,படத்தின் இயக்குனர் எண்ணப்படிதான் இயங்குவார்கள்.அவருடைய அனுமதியின்றி,படத்தின் கதாநாயகன்,நாயகி என்று யாராயிருந்தாலும் ஒரு சீனைக்கூட சொல்லக்கூடாது.இது எழுதப்படாத விதி.மீறினால்,அவனை வெளியேற்ற ஆயிரம் காரணங்களும் உண்டு.அதற்குப்பின் இன்னொரு இயக்குனரிடம் உதவி இயக்குனர் அந்தஸ்தைப் பெறுவதற்குள் அவனின் ஆயுள் முடிந்துவிடும் என்பது முதல்நிலை உதவி இயக்குனரான பரத்துக்கு தெரியும். 


நிலைமாறுகால நீதி நிலைநாட்டப்படுமா?


28/08/2019 பாது­காப்புப் படைத்­த­ரப்பைச் சேர்ந்­த­வர்­களிள் தண்­டனை விலக்­கீட்டுக் கலா­சாரம் உச்ச நிலையைத் தொட்­டி­ருக்­கின்­றது. இதனைத் தெளி­வாகக் கோடிட்டு காட்­டு­வ­தாக இரண்டு சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. 
ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வாகி இருப்­பது ஒரு விடயம். லெப்­டினன் ஜெனரல் பதவி உயர்த்­தப்­பட்டு, சவேந்­திர சில்வா நாட்டின் இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மனம் பெற்­றி­ருப்­பது இரண்­டா­வது விடயம். 
இரு­வ­ருமே பாது­காப்புப் படைத்­த­ரப்பைச் சேர்ந்­த­வர்கள். ஒருவர் முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக இருந்­தவர். மற்­றவர் இரா­ணு­வத்தின் பிர­தா­னி­யாக மேஜர் ஜெனரல் பதவி அந்­தஸ்து பணியில் இருந்­தவர். 
இவர்கள் இரு­வ­ருமே யுத்­த­கால மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்­டி­ருந்­தார்கள் என்று குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்கள். மனித உரி­மை­க­ளையும், சர்­வ­தேச மனி­தா­பி­மானச் சட்­டங்­க­ளையும் மீறிச் செயற்­பட்­டார்கள் என்று இவர்­கள மீது குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. 
பாதிக்­கப்­பட்ட மக்­களும் உள்ளூர் மற்றும் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களும் இந்தக் குற்­றச்­சாட்­டுக்­கள் முன் வைத்­தி­ருக்­கின்­றன. சனல் 4 வெளி­யிட்ட ஊடக ஆவணப் பதிவில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தக­வல்கள் இந்தக் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு, குற்றம் சுமத்­தி­ய­வர்கள் தரப்பில் வலிமை சேர்த்­துள்­ளன. 

புலிவாலை பிடித்த ஜனா­தி­பதி...!

26/08/2019
2015இல் நிகழ்ந்த ஆட்­சி­மாற்­றத்­துக்குப் பின்னர், எல்­லா­வற்­றையும் நிறை­வேற்­றுவோம் என்று ஜெனீவாவில் வாக்­கு­று­தி­களைக் கொடுத்து, சர்­வ­தேச சமூ­கத்தை நம்­ப­வைத்து வந்த இலங்­கையின் தற்­போ­தைய அர­சாங்கம், தமது வாக்­கு­று­தியை மீறும் வகையில் செயற்­ப­டு­வதை சர்வ­தேச சமூ­கத்­தினால் பொறுத்­துக்­கொள்ள முடி­யா­ தி­ருக்­கி­ன்றது.
இலங்­கையின் புதிய இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்ள விவ­காரம், புதி­ய­தொரு பரி­மா­ணத்தைத் தொட்­டி­ருக்­கி­றது, இதனை ஐ.நாவும் சர்­வ­தேச சமூ­கமும், தமக்கு விடுக்­கப்­பட்ட சவா­லா­கவே பார்க்­கின்­றன.
2010ஆம் ஆண்டு தொடக்கம், இலங்­கையின் மனித உரிமை மீறல்­க­ளுக்கு, பொறுப்­புக்­கூ­று­வ­தற்கு எடுக்­கப்­பட்டு வந்த நட­வ­டிக்­கைகள், 2015இற்குப் பின்னர் மந்­த­க­தியை அடைந்த சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்திக் கொண்டே, இலங்கை அர­சாங்கம் இவ்­வா­றான ஒரு நகர்வை முன்­னெ­டுத்­தி­ருக்­கி­றது.
மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் ஐ.நா மற்றும் மேற்­கு­ல­கத்­துடன் பனிப்போர் நடத்திக் கொண்­டி­ருந்­தது. அப்­போது, லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தால் இந்­த­ள­வுக்கு எதிர்­வி­னைகள் வந்­தி­ருக்­காது.



தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு யாருக்கு..?: சூடு பிடிக்கும் தேர்தல் களம்


ஆட்சி மாற்­றத்­துக்­காக 2015ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் தமிழ் மக்கள் அளித்­தி­ருந்த ஆத­ரவின் மூலம் நன்­மைகள் விளை­ வ­தற்குப் பதி­லாகக் குழப் ­ப­க­ர­மான நிலை­மையை உரு­வாக்­கு­வ­தற்கே வழி­யேற்­ப ­டுத்தி இருந்­தது. அந்த வகையில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு வழங்கியிருந்த உறு­தி­யான – நிபந்­த­னை­ யற்ற ஆத­ரவு விழ­லுக்கு இறைத்த நீராகி உள்­ளது. 
ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் மக்கள் யாரை ஆத­ரிப்­பது? யார் தமிழ் மக்­க­ளுக்கு விசு­வா­ச­மாகச் செயற்­ப­டு­வார்கள்? யாரைத் தெரிவு செய்தால் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கிடைக்கும்? என்ற கேள்­விகள் சாதா­ரண வாக்­கா­ளர்­களின் மனங்­களைக் குடைந்து கொண்­டி­ருக்­கின் ­றன. 
ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் தேர்தல் திணைக்­க­ளத்­திடம் இருந்து அதி­கா­ர­பூர்­வ­மான அறி­வித்தல் வெளி­யி­டப் ப­டாத போதிலும், அந்தத் தேர்தல் நாட்டு மக்கள் மத்­தியில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­பதே இதற்கு முக்­கிய காரணம். 
பெரும்­பான்மை இன மக்­க­ளிலும் பார்க்க, சிறு­பான்மை தேசிய இன மக்­க­ளுக்கு அடுத்த ஜனா­தி­பதி குறித்த அக்­க­றையும் கரி­ச­னையும் அதி­க­மாக இருப்­பதும் இந்த மனக்­கு­டைச்­ச­லுக்கு மற்­று­மொரு முக்­கிய கார­ண­மாகும்.
ஜனா­தி­ப­தி­யாக வரு­பவர் அதி­காரம் உள்­ள­வ­ரா­கவும், அதே­வேளை, அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களில் செல்­வாக்கு செலுத்­து­ப­ வ­ரா­கவும் இருப்பார் என்ற அனு­மா­னமே, தமிழ் மக்கள் வரப்­போ­கின்ற ஜனா­தி­பதி குறித்து அக்­கறை கொள்ளச் செய்­தி­ருக்­கின்­றது.  
ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் அர­சியல் தலை­மைகள் என்ன முடிவை எடுக்கப் போகின்­றன என்­ப­தற்குத் தெளி­வான சமிக்­ஞைகள் இன்னும் வெளிப்­ப­ட­வில்லை. ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் தெரி­வா­கின்ற வேட்­பா­ள­ருக்கு சாத­க­மா­கவே அந்த முடிவு இருக்கும் என்ற தக­வல்கள் அடி­ப­டு­கின்­றன. ஆயினும் அவை உறு­திப்­ப­டுத்­தப்­ப­டா­த­வை­யா­கவே உள்­ளன.




இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்களை தமிழர்கள் எவ்வாறு ஆதரிப்பது?: இறுதியில் எமக்கு எஞ்சியது ஏமாற்றமே..!


சிங்கள பௌத்த ஆதரவை கொண்டிருக்கும் கோத்தாபய தமிழர்களின் அபிலாஷைகளை ஏற்று இதயசுத்தியுடன் எழுத்துமூல உத்தரவாதத்தினை வழங்குவாரா?


தமிழ்த் தரப்பின் விட்­டுக்­கொ­டுப்­புக்­களை தென்­னி­லங்கை கருத்­திற்­கொள்­ளாது எத­னையும் வழங்­காது ஏமாற்­றி­விட்­டது. எமது தரப்பின் இரா­ஜ­தந்­திரம் தோற்­று­விட்­டது. இத்­த­கை­ய­தொரு நிலை­மை­யா­னது அடுத்த தலை­மு­றையின் சிந்­த­னை­களில் திசை­மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்தும் சூழலை தோற்­று­வித்­தி­ருப்­ப­தாக  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வியில் குறிப்­பிட்டார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,

கேள்வி:- பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்கும் உங்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்கும் வகையில் இரா­ணுவம் செயற்­ப­டு­வ­தாக கூறி­யுள்­ளீர்­களே?
பதில்:- ஆம், சவேந்­திர சில்­வாவின் நிய­மனம் தொடர்பில் கடு­மை­யான விமர்­ச­னத்­தினை பாரா­ளு­மன்றில் முன்­வைத்த மறு­தி­னமே வட்­டக்­கச்­சியில் உள்ள எனது காணியில் ஆய்வு செய்­ய­வேண்டும் என்று இரா­ணு­வத்­தினர் கூறி­யுள்­ளார்கள். உட­ன­டி­யா­கவே அவ்­வி­டத்­திற்கு வரு­கை­தந்­த­வர்­களை தொடர்பு கொண்ட போது அந்த விட­யத்­தினை திசை திருப்­பி­விட்­டார்கள். 2011ஆம் ஆண்­டி­லி­ருந்து இரா­ணு­வத்­தி­னரும், புல­னாய்­வா­ளர்­களும் இவ்­வாறு என்­மீது அவ்­வப்­போது அச்­சு­றுத்தும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்­றார்கள். 


தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் பங்கேற்காது விட்டால் கோத்தாபய ஆட்சியில் அமரும் நிலைமை நிச்சயம் ஏற்படும்

பண்­பட்ட ஊடகவியளார் மொறா­யஸின் மறைவு ஈடு­செய்ய முடி­யாத இழப்பு


29/08/2019 எம்­முடன் பத்­தி­ரி­கைத்­து­றையில் பணி­யாற்­றி­ய­வர்­களில் மிகுந்த அமை­தி­யா­ன­வர்­க­ளையும், எந்தப் பிரச்­சி­னை­யையும் பதற்­றப்­ப­டாமல் நிதா­ன­மாக அணு­கு­ப­வர்­க­ளையும் கூறுங்கள் என்று கேட்டால் நண்பர் அகஸ்டின் மொறா­யஸை தவிர வேறு எவரும் முதலில் நினை­விற்கு வர­மாட்­டார்கள். அத்­த­கைய அமை­வ­டக்­க­மான, பண்­பட்ட ஒரு மூத்த ஊட­க­வி­ய­லாளர் எம்­மத்­தி­யி­லி­ருந்து மறைந்து விட்டார்.
கடந்த திங்­கட்­கி­ழமை இரவு இடம்­பெற்ற அந்த மரணம் தமிழ் ஊட­கத்­து­றைக்கு ஒரு ஈடு­செய்ய முடி­யாத இழப்பு என்று சொல்­வ­திலும் பார்க்க, ஈடு­செய்­யப்­பட வேண்­டிய இழப்பு என்­றுதான் கூற­வேண்டும். அத்­த­கைய ஒரு பண்­பா­ளனை எம்­மத்­தியில் நாம் கொண்­டி­ருக்க வேண்டும்.

தமிழ் உத்தியோகத்தர்களை நியமிப்பதில் ஏன் இந்த பாரபட்சம்?


28/08/2019 அமைச்சுக்கள் அதன் கீழ் இயங்கும் அரசாங்க திணைக்களங்களில் தமிழ் தகவல் வழங்கும் அதிகாரிகள் நியமிக்கப்படாததால் செய்திகளுக்குரிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதில் அதிக காலதாமதம் ஏற்படுகின்றது. ஏன் தமிழ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவில்லை என்று தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக கேள்வியெழுப்பினாலும் இதே நிலைமை தான். தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் , உத்தியோகத்தர்கள் இல்லாத காரணத்தினால் சிங்கள மொழியிலேயே எமக்கு தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. 
இந்நிலையில் ஊடக அமைச்சின் தகவல் அறியும் பிரிவில் தமிழ் உத்தியோகத்தர்கள் ஏன் நியமிக்கப்படவில்லை என்ற விடயத்தை முன்வைத்து தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக நாம் ஊடக அமைச்சிடம் கேள்வி எழுப்பியிருந்தோம். 
அதற்கு பதில் வழங்கியிருந்த ஊடக அமைச்சு குறித்த உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் இதுவரை கோரப்படவில்லை என்றும் அவர்களை தெரிவு செய்வது தொடர்பில் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதி இதுவரை பெறப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தது. இது குறித்த செய்தியை நாம் 07/07/ 2019 வீரகேசரி வாரவெளியீட்டில் பிரசுரம் செய்திருந்தோம். 
இதேவேளை மேற்படி தமிழ் உத்தியோகத்தர்களை நியமிப்பதில் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் ஏன் திட்டங்களை வகுக்கவில்லை என்று தகவல் அறியும் சட்டமூலத்தின் அடிப்படையில் பின்வரும் கேள்விகளை முன்வைத்திருந்தோம்,

கீழடியில் சுடுமண் குழாய் கண்டுபிடிப்பு

.





சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தொல்லியல் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ம் தேதி முதல் நடைபெறு கிறது. முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

இதுவரை மணிகள், அணிகலன் கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்புக் காசுகள், உணவு குவளை, தண்ணீர் மக் உட்பட 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள் ளன. மேலும் அதிகளவில் சுவர் களும் கிடைத்தன.

2 தினங்களுக்கு முன் முரு கேசன் என்பவரது நிலத்தில் செங்கற் களால் கட்டப்பட்ட குளியல் தொட்டி கண்டெடுக்கப்பட்டது. நேற்று முன் தினம் நீதி என்பவரது நிலத்தில் வடிகால் சுவர் கண்டுபிடிக்கப் பட்டது.

மேலும் அவரது நிலத்தில் நேற்று சுடுமண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது.


மழைக்காற்று ( தொடர்கதை) --- அங்கம் 04 முருகபூபதி



சுபாஷினியின்  தொடுகையிலிருந்த மென்மையால் நெகிழ்ந்துபோன அபிதா,    “ வெல்கம் டு நிகும்பலை   என அவள் சிந்திய வார்த்தைகளிலிருந்த குளிர்மையை ரசித்தாள்.
ஜீவிகா, கற்பகம் ரீச்சர், சுபாஷினி அவரவர் அலுவல்களில் மூழ்கிவிட்டனர். மஞ்சுளாதான் இன்னமும் துயில் எழவில்லை. அவளது தோற்றம் எப்படி இருக்கும்? குணாதிசயம் எத்தகையது?  யாருடைய  சாங்கத்திலிருப்பாள்?
அந்த வீட்டுக்கு அபிதா வந்ததுமுதல் தொடர்ச்சியாக அவளது மனதில் கேள்விகளே எழுந்துகொண்டிருந்தமையால், கேள்வியின் நாயகி என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ள முடியுமா..?  என்றும் நினைத்து தனக்குள் சிரித்தாள்.
அந்த வீட்டின் முன்விறாந்தாவில் பேச்சரவம் கேட்டது. துயில் எழுந்துவிட்ட மூவரும் நடத்தும் மந்திராலோசனையை செவிமடுக்காமல்,  துடைப்பத்தை எடுத்து வீட்டின் சமையலறையையும் கூடத்தையும் கூட்டிப்பெருக்கினாள்.
சுவரில் மாட்டியிருந்த ராஜேஸ்வரியின் படத்தில் சருகாகிப்போயிருந்த பழைய பூமாலையை அகற்றினாள். அகற்றும்போது உதிர்ந்தவற்றையும் கூட்டிப்பெருக்கிக்கொண்டு, முன்விறாந்தாவுக்கு அபிதா வந்தாள்.
அவளது வருகையை கண்டதும் அங்கு நின்ற அவர்கள் மூவரும் தங்கள் உரையாடலை வேறு திசைக்கு மாற்றுவதற்கு பிரயத்தனம் செய்ததையும் அவதானித்தாள்.
அதுவரையில் தன்னைப்பற்றியும் தனக்கு  பிறப்பிக்கவிருக்கும் கட்டளைகளைப் பற்றியும் பேசியிருப்பார்கள்.  தன்னைக்கண்டதும் பேச்சின் திசையை மாற்றியிருப்பர்.  அபிதா ஊகித்துக்கொண்டாள்.
தனக்கிடும் கட்டளை தவிர்ந்து வேறு எந்த உரையாடலுக்கும் செவிகொடாதிருக்கும் கலையை இனித்தான்  கற்றுக்கொள்ளவேண்டும்.
அந்த வீட்டின் முற்றத்தில் நின்ற நந்தியாவட்டை, நித்தியகல்யாணி மரங்களில் மலர்கள் பூத்துக்குலுங்கின. ஒரு மூலையில் நின்ற மரத்தில் செவ்வரத்தம் பூக்கள் மலர்ந்திருந்தன. வீட்டுக்குள் திரும்பி, ஒரு எவர்சில்வர் தட்டம் எடுத்துவந்து மலர்களை கொய்யத்தொடங்கினாள்.
 அதனை அவதானித்த ஜீவிகா,  “ என்ன செய்கிறாய்..?  “ எனக்கேட்டாள்.

நினைவுகளில் ஓவியமாகிவிட்ட ஓவியர் மொராயஸ் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களின் கதைகளுக்கு உயிர் வழங்கிய ஓவியர் எம்.ஜீ.ஆரின் விருப்பத்தில் அவரது ' தாய் ' இதழுக்கும் படம் வரைந்தார் - முருகபூபதி


உலகப்பிரசித்திபெற்ற  ஓவியர்  பிக்காசோ,   மொனாலிசா  ஓவியம் பற்றி   அறிந்திருப்போம்.  ஆனால்,  இந்தப்பெயர்களை       இலங்கையில் பிறந்து,  தனது  வாழ்நாள்  முழுவதும்  ஓவியராகவே  வாழ்ந்த ஒருவர்  தமது  பிள்ளைகளுக்கு  வைத்து  அழகு பார்த்த  செய்தி தெரியுமா...?

வீரகேசரியுடன்  எனக்கு  உறவும்  தொடர்பும்  ஏற்பட்ட  1972  ஆம் ஆண்டு  முதல்  என்னுடன்  நட்புறவாடியவரான   ஓவியர்                           மொராயஸ்  கடந்த 26 ஆம் திகதி  திங்கட்கிழமை  மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன்.


அவ்வாறு  தமக்குப் பிடித்த  ஓவியத்துறை   சார்ந்த  பெயர்களை மொராயஸ்   தமது  பிள்ளைகளுக்குச்  சூட்டியது  வியப்பல்ல.
வத்தளை  புனித  அந்தோனியார்  வித்தியாலயத்தில்  தனது ஆரம்பக்கல்வியை  முடித்திருந்த  மொராயஸ்  விரும்பியவாறு இவரது    தந்தையார்  தமிழ்நாட்டுக்கு  இவரை   அனுப்பி படிக்கவைத்தார்.   
 
இளம் வயதுமுதலே  இவருக்கு   ஓவியம் வரைவதில்    இருந்த  நாட்டம்தான்  பின்னாளில் ஓவியக்கல்லூரியிலும்  இணையச் செய்திருக்கிறது.
பொதுவாக  எமது  தமிழ்  சமூகத்தில்  தமது  பிள்ளைகள் மருத்துவர்களாக   பொறியியலாளராக  சட்டத்தரணிகளாக கணக்காளராக   வரவேண்டும்  என்ற  எதிர்பார்ப்புத்தான்                                                     அந்நாளைய பெற்றோர்களிடம்    இருந்தது.   காரணம்  இந்தத்துறைகளில்                         நிறைய சம்பாதிக்கமுடியும்    சமூக  அந்தஸ்தை வளர்த்துக்கொள்ளவும்முடியும்   என்ற  மனப்பான்மைதான்.


ஓவியம்,    கலை,  ஊடகம்  முதலான  துறைகள்  புகழைமட்டும்தான் தரும்,  சோற்றுக்கு  திண்டாட்டத்தைதான்  தரும்  என்று                              அந்நாளைய பெற்றோர்கள்   நினைத்தார்கள்.

தமது  மகனின்  விருப்பம்  அறிந்து  தமிழ்நாட்டில் ஓவியக்கல்லூரியில்    இணைத்துவிட்ட  அந்தத்  தந்தை   சற்று வித்தியாசமானவர்தான்.    அத்துடன்  மொராயஸின்  அண்ணன் லெனின்  மொராயஸ்,  இலங்கையில்  பிரபலமான  சினிமா இயக்குநர்.    
 
சுமார்  நாற்பது  சிங்களப்படங்களை   இயக்கியிருப்பவர். அவர்    இறுதியாக  இயக்கிய  படம்  நெஞ்சுக்குத்தெரியும்  என்ற தமிழ்ப்படம்.   ஆனால்,  அது  வெளியாகவில்லை.   எஸ்.ரி.ஆர். பிக்சர்ஸ்  ( எஸ்.ரி. தியாகராஜா  தயாரித்த)  படம்  வத்தளை  சினிமாஸ் ஸ்டுடியோவில்  1983  வன்செயலில்  எரிந்து  சாம்பரானது.


ஒகஸ்டின்  மொராயஸ்  இலங்கை  பத்திரிகை  ஊடகத்துறையில் ஓவியர்   மொராயஸ்  என்றே  அறியப்பட்டவர்.
அண்ணன்   காட்டிய  வழியில்  அவர்  தம்பி  மொராயஸ_ம் ஆரம்பத்தில்   இலங்கையில்  திரைப்படத்துறையில்  கலை இயக்குநராகவும்   திரைப்படங்களுக்கு  டைட்டில்  எழுதுபவராகவும் தொழிற்பட்டிருக்கிறார்.



தமிழ்நாடு   ஓவியக் கல்லூரியில்  மூன்று  ஆண்டுகள்  ஓவியம் பயின்றுவிட்டு  அங்கேயே  இரண்டு  ஆண்டுகாலம்  ஓவிய ஆசிரியராகவும்    பணியாற்றிய பின்னரே  நாடு  திரும்பிய மொராயஸ்,    கொழும்பில்  வெளியான  சிங்களப்படங்களுக்கு சுவரொட்டிகள்   வரைந்தார்.   அக்காலத்தில்  வெளியான                             தமிழ்ப்படம் மஞ்சள்    குங்குமம்.    இந்தப்படத்திற்குரிய  சுவரொட்டிகளை வரைந்துகொண்டிருந்தபொழுது,    அதில்  நடித்த  நடிகர்  ஸ்ரீசங்கர், இவரை    அழைத்துக்கொண்டு  வீரகேசரி  அலுவலகம்  வந்து,                அச்சமயம்  அங்கு  செய்தி  ஆசிரியராக  இருந்த  டேவிட்  ராஜூவிடம்    அறிமுகப்படுத்தினார்.

1969   இலிருந்து  வீரகேசரியில்  ஓவியராக  பணியாற்றிய                                மொராயஸ்1982  ஆம்   ஆண்டிலேயே  அங்கு  நிரந்தர  ஊழியரானார்.

சாதனைகள் பல பெற்ற இளம் இசைத் தாரகை வைசாலி யோகராஜன்

.



2014இன் சக்தி யூனியர் சுப்பர் ஸ்டார் மகுடத்தை தனதாக்கிக் கொண்டவர் தான் வைசாலி யோகராஜன் அன்று முதல் இலங்கை வாழ் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். பாரம்பரியமான இசைக்குடும்பத்தில் பிறந்த வைசாலி கர்நாடக இசையிலும் கைதேர்ந்த பாடகியாவார், அதற்கு எடுத்துக் காட்டாக இலங்கையின் சிறந்த கர்நாடக இசைப் பாடகிக்கான ஜனாதிபதி விருதினை இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பெற்றவர். அது மட்டுமன்றி அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டிகளிலும் பல தடவைகள் முதலிடம் பெற்றவர்.

சிறந்த குரல் வளம் சங்கதிகளை சரளமாக கையாளல், பொருத்தமான இடங்களில் ப்ருக்காக்களை பிரயோகித்தல், போன்ற அம்சங்களை விசாலியின் சங்கீத ஞான பலத்திற்கு உறுதுணையாக அமைந்து வெற்றியளிக்கின்றன. இலங்கையின் பிரபலமான சபாக்களான கம்பன் கழகம், ஆலாபனா, நல்லை ஆதீனம், இலங்கை வானொலி, ரூபவாகினிக் கூட்டுத்தாபனம் போன்றவற்றில் சிறு வயதிலேயே கர்நாடக சங்கீதக் கச்சேரிகளை அளித்து பல இசை வித்துவான்களிடம் பாராட்டைப் பெற்றிருக்கிறார்.

விமானத்தில் கதறகதற ஏற்றப்பட்ட தமிழ் தம்பதியினர்- நீதிமன்றத்தின் தலையீட்டினால் இறுதிநேரத்தில் நாடுகடத்தல் தடுக்கப்பட்டது-நடுவானில் திரும்புகின்றது விமானம்


29/08/2019 அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது.
நடேஸ் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்ட பின்னர் நீதிமன்றம் அவர்களை வெளியேற்றும் உத்தரவைபிறப்பித்தது என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நடேஸ் பிரியா தம்பதியினரை குழந்தைகளுடன் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு பிரிவினர் இன்று இரவு மெல்பேர்ன் தடுப்பு முகாமிலிருந்து விமானநிலையத்திற்கு இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக அழைத்து சென்றுள்ளனர்.
இந்த தகவல் கேள்விப்பட்ட தமிழ் தம்பதிகளிற்கு ஆதரவான மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் விமானநிலையத்திற்கு விரைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை நடேஸ்பிரியா தம்பதியினரின் சட்டத்தரணி கரீனா போர்ட்டின் சட்டத்தரணி மேற்கொண்ட அவசர  முயற்சிகளை தொடர்ந்து நீதிமன்றம் தமிழ் குடும்பத்தை வெளியேற்றுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.நீதிபதியொருவர் தொலைபேசி மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இலங்கைச் செய்திகள்


சவேந்திரசில்வா நியமனம் பாதிக்கப்பட்டவர்களை அவமதிக்கும் நடவடிக்கை- உலகநாடுகள் சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்தவேண்டும்- ஐநா நிபுணர்கள் குழு

பிரான்ஸ் – நோர்வே நாடு­க­ளுடன் கைச்­சாத்தானது நிலக்கீழ் கனிய எண்ணெய் ஆய்வு ஒப்­பந்தம்

மட்டு. ஆர்ப்பாட்டம் ; பொலிஸாரின் தடியடி தாக்குதலில் நால்வர் வைத்தியசாலையில்

தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகம் புதைப்பு ; தணிந்தது மட்டு.வில் உண்டான பதற்றம்

சிரேஷ்ட  ஊடகவியலாளர் மொராயஸ் காலமானார்

ஆண்டின் இறுதிக்குள் பலாலி - இந்தியாவுக்கிடையில் விமான சேவை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் ; இடைக்கால தடை உத்தரவு  மேலும் நீடிப்பு

கள்ளியங்காடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் திங்கள் ஹர்த்தால்

மகாவலி அபகரித்துள்ள தமது காணிகளை விடுவிக்ககோரி ஆர்ப்பாட்டம் ; மகஜரும் கையளிப்பு

காணாமல்போனவர்களின் உறவுகள் எதிபார்த்து காத்திருக்கும் நீதி கிடைக்குமா? சாலிய பீரிஸ் அதிர்ச்சி கருத்து.

48 நாடுகளுக்கு விசாக் கட்டண நீக்கம்!

காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஐ.நா.வின் விசேட அறிக்கை!

வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியை திறந்து வைத்தார் ஜனாதிபதி

கல்முனையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி பாரிய போராட்டம்

பருத்தித்துறை துறைமுகத்திற்கான அடிக்கல்லை நாட்டினார் ஜனாதிபதி

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் !



சவேந்திரசில்வா நியமனம் பாதிக்கப்பட்டவர்களை அவமதிக்கும் நடவடிக்கை- உலகநாடுகள் சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்தவேண்டும்- ஐநா நிபுணர்கள் குழு

28/08/2019 இலங்கையின் புதிய இராணுவதளபதியாக சவேந்திர டிசில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கியநாடுகள் நிபுணர்கள் குழுவொன்று கடும் கவலை வெளியிட்டுள்ளதுடன் இந்த நியமனம் பாதிக்கப்பட்ட மக்களை அவமதிக்கும் விதத்தில் அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
ஐநாவின் உண்மை நீதி இழப்பீடு மற்றும் மீள நிகழாமைக்கான விசேட அறிக்கையாளர் பாபியன் சல்வியோலி , பலவந்தமாக காணாமல் போகச்செய்யப்படுதல் குறித்த ஐநாவின் செயற்குழுவின் உறுப்பினர்கள், சட்டவிரோத படுகொலைகளிற்கான ஐநாவின் விசேட அறிக்கையாளர், சித்திரவதை குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் உட்பட ஐநாவின் பல நிபுணர்கள் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
 ஆகஸ்ட் 18 ம் திகதி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக நியமித்துள்ளார் என தெரிவித்துள்ள ஐநா நிபுணர்கள் இலங்கையின் 25 வருட கால உள்நாட்டு யுத்தத்தின் போது அவர் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுவதால் ஐநா மனித உரிமை ஆணையாளர் உட்பட பலர் இந்த நியமனம் குறித்து கரிசனை வெளியிட்டுள்ளனர் எனவும்  தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான  குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் சவேந்திர சில்வாவை இலங்கை இராணுவத்தின் உயர் பதவிக்கு நியமித்தமை பாதிக்கப்பட்ட  மக்களை அவமரியாதை செய்யும் நடவடிக்கை எனவும் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது இலங்கையில் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் நீதியின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரம் நீடிப்பதை காண்பிக்கின்றது என தெரிவித்துள்ள ஐநா நிபுணர்கள் குழுவினர் இது அரச ஸ்தாபனங்கள் மீதான சமூகத்தின் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தி மேலும் ஸ்திரமின்மையை  ஏற்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
  சவேந்திர சில்வா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து உரிய முறையில் விசாரணைகள் இடம்பெறவில்லை எனவும்  ஐநா நிபுணர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உலகச் செய்திகள்


இந்தியாவுக்கு வான்வெளியை தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு? 

"காஷ்மீர் பிரச்சினை இருதரப்பு விவகாரம், 3 ஆம் நாட்டின் தலையீடு அவசியமில்லை"

அமேசனில் பற்றி எரியும் தீ : ஜி 7 நாடுகளின் உதவியை ஏற்க மறுத்த பிரேசில் 

ராஜிவ் கொலை: 7 பேரை முன்கூட்டியே விடுவிக்கக் கோரிய நளினியின் வழக்கு தள்ளுபடி

பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்க மகாராணி ஒப்புதல்!

பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தை கலைக்கும் பிர­த­மரின் தீர்­மா­னத்­திற்கு கடும் எதிர்ப்பு

கிறிஸ்மஸ் தீவில் அடைக்கப்பட்ட தமிழ் குடும்பம்- தாய்க்கு காயம் - தொடர்ந்து அழுதவண்ணம் பிள்ளைகள்

பாடசாலை உதைபந்தாட்ட போட்டியின் பின்னர் துப்பாக்கி பிரயோகம்- அமெரிக்காவில் சம்பவம்


இந்தியாவுக்கு வான்வெளியை தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு? 

27/08/2019 ஆப்கன் உள்ளிட்ட நாடுகளில் இந்தியா வர்த்தகம் செய்ய பாகிஸ்தானின் வான்வெளியை பயன்படுத்தி வரும் நிலையில் அதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்தரதாஸ் பகுதி 9


குருதட்சணை

சிவாஜி கணேசன் ஏபி நாகராஜன் கூட்டணியில் உருவாகி வெற்றிகண்ட படம் தில்லானா மோகனாம்பாள். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான சாதாரணப் படம் தான் குருதட்சணை.

தில்லாணாமோகனாம்பாளில் நடித்த எல்லா நடிகர்களும் அனேகமாக இந்தப் படத்திலும் இடம்பெற்றார்கள். நாகேஷ் மட்டும் இதில் இடம் பெறவில்லை. ஆனால் சிவாஜிக்கு ஜோடியாக பத்மினி இதில் நடிக்கவில்லை. ஜெயலலிதா இந்தப் படத்தில் சிவாஜிக்கு இணையாக தோன்றினார். பத்மினிக்கு சிவாஜிக்கு கல்வி போதிக்கும் ஆசிரியர் பாத்திரம் இந்தப் படத்தில் வழங்கப்பட்டிருந்தது.

கிராமத்தில் பால் விற்கும் கண்ணன் படிப்பறிவில்லாதவன் அவனுக்கு இளைஞன் பிறகு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கிறது. கிராமத்திற்கு புதிதாக வரும் ஆசிரியையிடம் பாடம் படிக்கிறான்.

இதனிடையே கண்ணனுக்கும் கன்னிக்கும் இடையில் காதல் பிறந்து கல்யாணத்தில் முடிகிறது. கண்ணனுக்கும் ஆசிரியைக்கும் உருவாகும் கல்விசார் நட்பை ஊரில் சில பொல்லாதவர்கள் தவறாக பிரசாரம் செய்கிறார்கள். கன்னியும் அதனை நம்பி விடுகிறாள். இதனால் மனமுடைந்து போகும் கண்ணன் தற்கொலைக்கு முனைகிறான். ஆனால் முயற்சி கைக்கூடவில்லை. தான் கற்பித்த கல்விக்கு குருதட்சணையாக தற்கொலை செய்து கொள்வதில்லை என்று கண்ணன் சத்தியம் செய்து மனைவியுடன் வாழ வேண்டும் என்று ஆசிரியை குருதட்சணை கேட்கிறார்.
இதுதான் குருதட்சணைப் படத்தின் கதை. கண்ணனாக சிவாஜியும் கன்னியாக ஜெயலலிதாவும் ஆசிரியையாக பத்மினியும் நடித்திருந்தார்கள். இவர்களுடன் தங்கவேலு நம்பியார் பாலாஜி ரமாபிரபா செந்தாமரை மனோரமா என்று பலர் நடித்திருந்தார்கள்.

படத்திற்கு திரைக் கதை வசனம் எழுதி டைரக்ட் செய்தவர் ஏ பி நாகராஜன். சிவாஜி ஏபி என் கூட்டில் ஏற்கனவே திருவிளையாடல் திருவருட்செல்வர் தில்லானா மோகனாம்பாள் என்று வண்ணத்தி; பிரம்மாண்டமான முறையில் படங்கள் வெளிவந்து வெற்றி கண்டிருந்தன.

ஆனால் குருதட்சணையோ கிராமத்தில் நடக்கும் கதையாக கறுப்பு வெள்ளை படமாக பிரம்மாண்டம் ஏதுமின்றி உருவாகியிருந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.

அருணோதயாவின் இன்னிசை மாலை 07/09/2019








முதலாவது அனைத்துலக சிலப்பதிகார மாநாடு சிட்னி 27, 28, 29 /09/2019









தமிழ் சினிமா - சிக்ஸர் திரைவிமர்சனம்

சினிமாவில் நல்ல கதைகளை தாங்கி வரும் படங்களுக்கு மக்கள் நல் ஆதரவளிப்பார்கள் என்பது அண்மைகாலமாக நிரூபிக்கப்பட்டவருகிறது. அதில் எந்த நடிகர் நடித்திருந்தாலும் அப்படம் நல்ல வசூலை ஈட்டுகிறது. அப்படியான ரகமாக சிக்ஸர் வந்துள்ளது. வாருங்கள் சிக்ஸர் அடிக்க போகலாம்.

கதைக்களம்

படத்தின் நாயகன் வைபவ் சிவில் கள பொறியாளராக இருக்கிறார். அவரின் அப்பா இளவரசு அம்மா ஸ்ரீ ரஞ்சினி. வைபவ்க்கு மாலை 5.30 மணியாகிவிட்டால் நேரடியாக வீடு தான். பிரச்சனை என்னவெனில் அவரின் கண் தான்.
இப்படி அவர் வீட்டிற்கு செல்லும் போது ஒரு நாள் எதிர்பாராத விதமாக கடற்கரையில் கிடக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை. அப்போது ஒரு பெரும் போராட்டம் அங்கு நடக்க, வழக்கம் போல அதை போலிசார் கலைக்க முற்பட அதில் நிஜ போராளியாக செய்தி சானல் மூலம் பிரபலமாகிவிடுகிறார் வைபவ். 
போராட்ட பிரச்சனைக்கு காரணமாக இருக்கின்ற அரசியல் வாதி வைபவ் ஐ கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார். இதற்கிடையில் கண் பிரச்சனையை மறைத்த வைபவ் காதலில் ஜெயித்தாரா, அரசியல் வாதியிடம் இருந்து தப்பினாரா என்பதே இந்த சிக்ஸர்.

படத்தை பற்றிய அலசல்

வைபவ் ஐ இதயம் முரளியாக நாம் கடைசியாக பேட்ட படத்தில் பார்த்திருப்போம். சரோஜா, மங்காத்தா, சென்னை 28 என பல படங்கள் மூலம் பிரபலமானவர் ஒரு முழு ஹீரோவாக அவர் மேயாத மான் படம் மூலம் தனக்க வெற்றி இடத்தை பிடித்தார். அவருக்கான ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது.
தற்போது அவர் சிக்ஸர் படத்தில் களமிறங்கியுள்ளார். படத்தின் பெயருக்கேற்றார் போல அவர் 6 மணிக்கு மேல் அடித்தால் சிக்ஸர் தான். வழக்கம் போல அவருக்கான ஒரு சிம்பிளான ஹீரோயிசம் இப்படத்திலும். அதிலும் கடற்கரை போராட்ட காமெடி பலரையும் சிரிக்க வைத்தது.ஹீரோவுடன் சதிஷ் காமெடியனாக கூட்டு சேர்ந்துள்ளார். இப்படத்தில் சதிஷ் காமெடி நல்ல என்ஜாய்மெண்ட். அதிலும் அவர் கவின், லோஸ்லியா, மோகன் வைத்யா, வனிதாவை வைத்து கமெண்ட் அடித்ததற்கு நல்ல வரவேற்பு. ஹீரோ, காமெடியன் காம்போ நல்ல ஒர்க்கவுட்.
செய்தி தொகுப்பாளராக ஹீரோயின் பல்லக் ஹீரோவுக்கு இணையாக கேரக்டரில் சேர்ந்துள்ளார். காதல் பிரேக் அப், அப்பாவித்தனமாக நம்புவதிலும் அவரிடம் ஒரு எதார்த்தமான ஒரு ஃபீல். இருவருக்குமான கெமிஸ்ட்ரியும் இப்படத்தில் ரியல் லவ் ஃபீல் போல தான்.
அப்பாவாக இளவரசும், அம்மாவாக ஸ்ரீ ரஞ்சனியும் செய்யும் காமெடியான விசயங்களும், ராதா ரவி செய்யும் காமெடிகளும் ஆங்காங்கே படத்தை நிறைக்கின்றன.
சேட்டா ரவுடியாக என்னமா ராமர் தனக்கே உரிய அந்த ஹிட் பாடலால் எண்ட்ரி ஆவது படத்தில் கூடுதல் ஃபன். கலக்கப்போவது யாரு புகழ் குரேஷி, ஒல்லியான ஒருவர் செய்யும் காமெடிகள் சிம்பிள். இயக்குனர் சாச்சி படத்தின் காட்சிகளை திட்டமிட்டு கொண்டு சென்றுள்ளார் என்பது நன்றாக தெரிகிறது. முதல் பாதி இயல்பாக செல்வதும், இரண்டாம் பாதி சீரியஸாக கொண்டுபோனதால் படம் இண்ட்ரஸ்டிங்க்.
வாழ்க்கையில் சில குறைகளை சகித்துகொள்வது, சில குறைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதும் தான் வழி என ஹீரோயின் மூலம் சொல்லும் மெசேஜ் நிதர்சனமான உண்மை.
ஒளிப்பதிவாளர் காட்சிகளை காட்டிய விதமும், இசையமைப்பாளர் ஜிப்ரானின் பாடல்களும் படத்திற்கு பொருத்தமானது.

கிளாப்ஸ்

வைபவ்வின் கதை தேர்வு சரியான ஜாலி ரைட். 6 மணி பிரச்சனையை சமாளிக்கும் விதம் நன்று.
சதிஷ் ஹீரோ காம்போ காமெடி, சூப்பர் ஸ்டாரின் போராட்ட கருத்துக்கு கமெண்ட்ஸ், போராட்டத்தில் லைட் அடிக்கும் காட்சிகளுக்கு நல்ல கிளாப்ஸ்.

பல்பஸ்

படத்தில் என்னமா ராமர் காட்சிகளால் ஓவர் காமெடி போல ஒரு ஃபீல்..

மொத்தத்தில் சிக்ஸர் பெயருக்கேற்றார் போல மக்களிடமும் சிக்ஸர் அடிக்கும். சிரிப்புக்கு கியாரண்டி.

நன்றி CineUlagam
நன்றி CineUlagam