மரண அறிவித்தல்

.
 இராமசாமி சிதம்பரப்பிள்ளை


பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் சிட்னி Baulkham Hills ஜ வசிப்பிடமாகவும் கொண்ட முன்னை நாள் இலங்கை வங்கி ஊழியர் திரு இராமசாமி சிதம்பரப்பிள்ளை , 08/05/2019 இல் தனது 95வது வயதில் இறைவனடி சேர்ந்தார்

இவர் காலம்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இராமசாமி, இலட்சுமிப்பிள்ளை இராமசாமி தம்பதிகளின் அன்பு மகனும் காலம்சென்ற கணபதிப்பிள்ளையின் அன்புச் சகோதரனும், காலம்சென்ற காந்தா அவர்களின் அன்புக்கணவரும், ஜெயசீலன்(Perth), ஜெயந்தி (Melbourne), காலம்சென்ற குணசீலன், DR.தவசீலன் (Sydney) ஆகியோரது அன்புத்தந்தையும், DR. கௌரி ஜெயசீலன்(Perth) ஜெயக்குமார் ஜெயக்கொடி(Melbourne) DR.சாந்தினி சீலன்(Sydney) ஆகியோரின் அன்பு மாமனாரும், Dr.அகிலன் ஜெயசீலன், ஜீவன் ஜெயசீலன் (Perth), நிலேஷ் சீலன் , சஞ்சுளா சீலன்(Sydney), ஆகியோரின் அன்புப் பேரனும், காலம்சென்றவர்களான மகேசன், கார்த்திகேசன், Dr.சிவநேசன், லீலா வேலாயுதபிள்ளை, மற்றும் சீத்தா பாலசிங்கம்(Colombo), பர்வதா வடிவேலு (Sydney) குலேபகா மகாகணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
மரணச் சடங்கு
பார்வைக்கு : வெள்ளிக்கிழமை 10.05.2019 இரவு 7.00 மணிமுதல் 9.00
            மணிவரை  Liberty Funerals , 101, South St, Granville இல்  
             வைக்கப்படும்.  
ஈமக்கிரிகைகள் : சனிக்கிழமை 11.05.2019 காலை 9.30 மணிமுதல்
South Chapel, Rookwood இல் நடைபெறும்

தொடர்புகளுக்கு : Dr. Thavaseelan  0419 464 024 மரண அறிவித்தல்

.திருமதி பத்மாவதி அருமைநாயகம்


ஆதி மயிலிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பு, சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி பத்மாவதி அருமைநாயகம்  07. 05. 2019, செவ்வாய்க்கிழமை  சிவபதமடைந்தார்.  

இவர் காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை அருமைநாயகம் அவர்களின் ஆருயிர்ப் பாரியாரும், 
காலஞ்சென்ற ஆதிமயிலிட்டி பொன் சுப்பிரமணியம் - தங்கமுத்துப்பிள்ளை  தம்பதிகளின் மூத்த மகளும், 
காலஞ்சென்ற கருகம்பனை முதலித்தம்பி சங்கரபிள்ளை - பூதாத்தைப்பிள்ளை  சங்கரபிள்ளை தம்பதிகளின் மருமகளும், 

கேதாரகெளரி (சிட்னி), அருந்ததி ரமணி (சிட்னி), தயானந்தன் (சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும், 

சிவபாலகன் (சிட்னி), ரெவர் கிறிஸ்டி டேவிட் (சிட்னி), சுசித்ரா (சிட்னி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷாமிலா, கௌசல்யா, Dr. தர்ஷிகா, நிரோஷா, நிஷேவிதா, வித்யா  ஆகியோரின் அருமைப் பாட்டியும், 
மற்றும் சதீஷ், ஶ்ரீசியாமளாங்கன், குஷால் ஆகியோரின் அன்பு பாட்டியும் 

காலஞ்சென்ற  கருணாவதி, பொன்மயிலைநாதன் (சிட்னி), காலஞ்சென்ற அருணகிரிநாதன், 
திருப்பரங்கிரிநாதன்(உடுப்பிட்டி), Dr. சிவலோகநாதன் (USA), சுசீலாவதி (கொழும்பு) ஆகியோரின் 
பாசமிகு சகோதரியும்,  

ஷரேயா, சச்சின், த்ருவி, நிஷாரா , சமாரா, ஆகியோரின்  பூட்டியும்   ஆவார். 

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 11. 05. 2019 காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை கமிலியா மலர்ச்சாலை, மக்குவாரி பார்க்கில் (Camellia Chapel, Macquarie Park, NSW) வைக்கப்பட்டு, 10.30 மணி முதல் 12.30 மணி வரை கிரியைகள்  நடைபெற்று தகனம் செய்யப்படும் என்பதனை உற்றார், உறவினர் , நண்பர்களுக்கு அறியத் தருகின்றோம்.

தொடர்புகளுக்கு:  

கௌரி: +612 9639 8851;   +61 419 428 205.
ரமணி:  +612  9744 5503;  +61 423 892 440. 
தயா: +612 9642 1395;   +61 421 616 334

சிட்னியில் சித்திரை திருவிழா

.


 இன்று தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக்கு கழகம் ATBC அனுசரணையுடன்  நடாத்திய நாள் முழுக்க கொண்டாட்ட நிகழ்வு மிக சிறப்பாக நடந்தது. 
சூப்பர் சிங்கர் பாடகர்களும் கிராமிய பாடகர்களுமான செந்தில் கணேஷ் , ராஜலடசுமி மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் வருகை தந்து சிறப்பித்திருந்தார்கள். மரக்கால் ஆடடம் , கருப்பு சாமி ஆடடம் , கிராமிய பாடல்கள் , திரைப்பட பாடல்கள் , நடனம் நாட்டியம் என்று பல சிறப்பு நிகழ்வுகள் இடம் பெற்றது. மக்கள் நிறைந்த சபையில் இந்நிகழ்வு இடம் பெற்றது. 8 வது வருடமாக இந்நிகழ்வு இம்முறை இடம் பெற்றது. 

சத்திமுத்தப் புலவரின் "நாராய் நாராய் செங்கால் நாராய்" - செ .பாஸ்கரன்

.
கவிஞர்கள் ஏழையாக இருந்து ஊர் ஊராக  திரிந்து பாடிக்கொண்டு இருப்பார்கள். அப்படியான ஒரு கவிஞர்தான் இந்த  சத்திமுத்தபுலவர்.
நாராய் நாராய் செங்கால் நாராய்’ என்ற இப்பாடல் எனக்கு பிடித்த பாடல். மிகவும் எளிமையாகப் புரியக்கூடியது. புற்நானூற்றுத்தொகுப்பில் இடம் பெற்ற பாடல் என்று தமிழாசிரியர் திரு. வேலையா குறிப்பிட்டுள்ளார். 

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமேவைஷ்ணவி சோதிராஜாவின் அரங்கேற்றம்

.இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை செல்வி வைஷ்ணவி சோதிராஜாவின் பாரத நாட்டிய அரங்கேற்றம் River side theatre Parramatta வில் இடம்பெற்றது. Vaishnavi commenced her Bharathanatyam journey at the age of five in Dubai, U.A.E. under the tutelage of Guru Devarajan, who had laid a solid foundation of dance in her formative years. Since migrating to Australia in 2004, she has continued this journey under Guru Smt. Anandavalli, as a student at the Lingalayam Dance Academy. Under Guru Smt. Anandavalli’s tutelage, Vaishnavi deepened her love for this ancient art form and has been inspired by her Guru to continuously hone and perfect her skills as a dancer. Vaishnavi would like to thank her Gurus for their belief, inspiration and vision that has led to tonight’s performance. Since graduating from The University of Sydney in 2016 with a Bachelor of Commerce and Bachelor of Arts, Vaishnavi currently works full-time at Macquarie Bank. She is also simultaneously completing her Graduate Diploma in Chartered Accounting. Vaishnavi would like to take this opportunity to thank her parents, who have been her pillars of support throughout this 20-year journey. Their unending encouragement and selflessness have culminated in tonight’s performance. Vaishnavi is also humbled by the love and support from her relatives, friends and well-wishers and would like to thank all of you for being present to witness this momentous occasion.

குரல் கொடுப்போம் வாருங்கள் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


            வெடி குண்டு வென்று 
            வெறியினை ஊட்டி நிற்பார்  
            பறி போகும் உயிர்பற்றி 
image1.JPG            பார்த்து விட மறுக்கின்றார் 
            நெறி முறைகள் பற்றியவர்
            நெஞ்ச மதில் கொள்ளாமல்
            பொறி புலனை எல்லாமே
            அழியும் வழி ஆக்குகிறார்  !

            அறம் அவர்கள் சிந்தையிலே
            அமர்ந்து விட மறுக்கிறது 
            அழி என்னும் தத்துவமே
            ஆணி வேராய் அமர்கிறது 
            அரக்கர் எலாம் இருந்திருந்தார்
             என்று கதை படித்திருப்போம்
             அரக்கரை நாம் காண்பதற்கு
             அடையாளம் இவர் அன்றோ ! 

அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் சந்திரசேகர சர்மா நினைவுகள் - முருகபூபதி


இலக்கியவாதியும் விஞ்ஞான ஆசிரியரும் சீர்மியத் தொண்டருமான சந்திரசேகர சர்மா அவர்கள் திடீரென மறைந்துவிட்டார் என்ற செய்தி இடியாக மனதில் விழுந்தது.
சில வாரங்களுக்கு முன்னர்தான் அவர் அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் தனது மகள் குடும்பத்தினரைப் பார்க்க வந்திருந்தார். இதற்கு முன்னரும் இங்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் சில கலை, இலக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்து சிறப்பித்தவர்.
இறுதியாக கடந்த ஜனவரி மாதம் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியிலும் -  கடந்த மார்ச் மாதம் நடந்த அனைத்துலக பெண்கள் தினவிழாவிலும் கலந்துகொண்டார்.
"மீண்டும் வருவேன் "  எனச்சொல்லிவிட்டே, கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி யாழ்ப்பாணம் புறப்பட்டார். எளிமையானவர். இனிய குணாதிசயங்கள் கொண்டவர்.  சந்திரசேகர சர்மா, யாழ்ப்பாணத்தில்   ஆவரங்காலில்  பிறந்து  அங்குள்ள  அமெரிக்க மிஷன்   பாடசாலைபுத்தூர்  சோமஸ்கந்தா  ஆகியவற்றில்  தமது ஆரம்பக்கல்வியை   கற்றார்தந்தையார்  ஆலயக்குருக்கள்  என்பதால், பெற்றவர்களுடன்   இவரும்  இடம்பெயர்ந்து நாவலப்பிட்டிக்குச்சென்றார்.


தந்தையார்  இரத்தினசர்மாவுக்கு  அங்கு  கதிரேசன்  கோயிலில் திருப்பணி.   சந்திரசேகரன்  அங்கு புனித அன்ரூஸ் கல்லூரியில் கற்றுவிட்டு, அங்கேயே முதலாவது ஆசிரிய நியமனமும் பெற்று,       கல்விப்பணியில்  ஈடுபட்டார். அறுபதுகளில்   மலையகத்தில்  வாழ்ந்தவாறு  இலக்கியப்பிரவேசம் செய்தார்.    சிறுகதைகள்கட்டுரைகள்,   விஞ்ஞானக்கட்டுரைகள் எழுதினார்.   தினகரனில்  தத்துவச்சித்திரங்கள்  என்னும்  தொடரையும்  எழுதினார்.இவரது   எழுத்துக்களை  1965  காலப்பகுதியில்  படித்திருக்கின்றேன். மாணவர்களுக்குப்புரியும்  வகையில்  எளிய  தமிழில்  அவர் எழுதியமையால்   மாணவர்களின்  அபிமான  எழுத்தாளராகவும்  அவர் அந்நாட்களில்   திகழ்ந்தார்.


பயணியின் பார்வையில் - அங்கம் -05 பிறக்கும் நண்பர்களும் உருவாக்கப்படும் நண்பர்களும் " எல்லா விளக்குகளும் அணைந்தன- காற்று, படிக்கொண்டே கடந்தது மரங்கள் நடுங்கின - மிருகங்கள் மரித்தன எவரும் விட்டுவைக்கப்படவில்லை " - PIERRE REVERDY - பிரெஞ்சுக்கவிஞர் முருகபூபதி


கடந்த கால வரலாற்றை நோக்கினால், பலரும் தங்கள் தங்கள் பங்குக்கு தங்கள் தேசத்தையும் மக்களையும் அழித்தொழிக்கும் அதிதீவிர பயங்கரவாத  வேலைகளைச்செய்திருப்பதை பார்க்கமுடிகிறது.
உலகவரலாற்றிலும் இலங்கை வரலாற்றிலும் காலத்துக்குக்காலம் யாராவது ஒருவர் அல்லது  ஆயுததாரிகளான  இயக்கம் அல்லது ஆட்சியாளர்கள் தங்கள் பங்குக்கு நிர்மூலமாக்கும் வேலைகளை தொடர்ந்திருக்கிறார்கள்.
20 ஆம் நூற்றாண்டின் ஹிட்லர் தொடக்கம் இது நடந்தேறிவருகிறது. நிர்மூலம் நிகழ்ந்த பின்னர், உயிர்வாழ்பவர்கள், உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்து அஞ்சலி நிகழ்த்துகின்றனர். வேறு என்னதான் செய்யமுடியும்?
தனிநபர்கள் மட்டுமல்ல, இயற்கையும் நிர்மூலங்களில் உயிர்களை பறிக்கின்றது. சில சமயங்களில் விஞ்ஞான தொழில் நுட்பக்கோளாறுகளும் நிர்மூலத்தில் தனது  பங்கிற்கு இணைந்துகொள்கின்றது.
சமகாலத்தில் தீயினால் எரியுண்ட வரலாற்றுச்சிறப்புமிக்க பாரிஸின் நோத்ரதாம் தேவாலயத்திற்கு நேர்ந்த பேராபத்தைக்கண்டு, உலக அதிசயங்களில்  ஒன்றான பாரிஸின் ஈஃபிள் கோபுரமும் ஒரு நாள் தனது விளக்குகளை அணைத்து  மௌன அஞ்சலி செலுத்தியது.
இதற்கு முன்னரும் அமெரிக்காவில் பென்ஸில்வேனியாவில் தீவிரவாதிகள் தாக்குதலை மேற்கொண்டதையடுத்து அதில் கொல்லப்பட்டவர்களுக்காக ஈஃபிள் கோபுரம் தனது விளக்குகளை அணைத்துக்கொண்டது.
பொதுமக்களின் கண்டனங்கள், பிரார்த்தனைகள்,  ஈஃபிள் கோபுரம் போன்ற வரலாற்றுச்சின்னங்களின் மௌன அஞ்சலிகளைக்கண்டு அதிதீவிர பயங்கரவாதிகள் அடங்கிவிட்டதாக சரித்திரமும் இல்லை.
எனது பிரான்ஸ் பயணத்தில் ஏனையோரைப்போன்று நான் பார்க்கவிரும்பிய இடம் உலகின்  ஏழு அதிசயங்களில் ஒன்றான ஈஃபிள் கோபுரம் அமைந்துள்ள பிரதேசம்.  ஈஃபிள் கோபுரம் தனது 130 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகியிருந்த தருணத்தில் அதனைப்பார்க்கச்சென்றேன்.
நீர்கொழும்பில் எனது உடன்பிறவாத சகோதரி அம்பிகாவின் புதல்வனும் குறும்பட இயக்குநருமான ரவி பிரதீபன் என்னை அங்கு அழைத்துச்சென்றார். இவரது பெற்றோர்கள் அம்பிகா - ரவீந்திரனின் திருமணத்தை 1970 களில் முன்னின்று நடத்திவைத்திருக்கின்றேன். பிரதீபனின் தாய்மாமனார் நவரட்ணராஜா,  அங்கு சாந்தி அச்சகத்தை பொறுப்பேற்று நடத்திய காலத்தில், எனது முதலாவது கதைத்தொகுதி சுமையின் பங்காளிகள் அங்கே அச்சாகியது.
இவ்வாறு எனது நெஞ்சத்துக்கு நெருக்கமான ரவிபிரதீபன் நீண்டகாலமாக பாரிஸில் வசிக்கிறார். அன்றும் வெளியே பனிபொழிந்துகொண்டிருந்தது. அந்த பனிமழைக்குள் ஈஃபிள் கோபுரத்தை அவருடன் பார்க்கச்சென்றேன்.

ஒரு சமூகம் தன்னை காப்பாற்றிக்கொள்ளாவிட்டால் ஆண்டவன் கூட அதைக் காப்பாற்ற முடியாது - நிவேதனா அச்சுதன் ( சிரேஷ்ட சட்டத்தரணி)


இன்று  இலங்கை  முழுவதும் நிலவுகின்ற பதட்ட நிலை, தமிழ்-சிங்களம் , இந்து-கிறிஸ்தவ-இஸ்லாமிய-பௌத்த என்ற மொழி, மத  வேறுபாடுகளைத்  தாண்டி எல்லோரையும் பாதித்து இருக்கின்றது. வெளி நாடுகளில் வாழ்கின்ற எம்மில் பலரும் , எமது மக்கள் - எமது நாடு  என்ற துடிப்போடு இலங்கையில்  நடக்கும் சம்பவங்களை அவதானித்து வருகின்றோம்.

கடந்த பத்து வருடங்களாக எவ்வளவோ பெரிய  விலை கொடுத்து, இழக்கமுடியாத-இழக்கக்  கூடாத பலவற்றையும் இழந்து , தக்க வைத்திருக்கின்ற சமாதானமும் அமைதியும் , மீண்டும்  பறிபோய்விடுமோ என்ற வேதனையும் இயலாமையும் எம்மில்  பலரை சூழ்கின்றது . அதே  சமயம் , மீண்டும் எமது நாடு சமூகப்பிளவுகளில் சிக்குண்டு அடுத்த தலைமுறையின் எதிர்காலம் இருண்டு போகக்கூடாது என்ற பொறுப்புணர்வும் மேலோங்குகிறது.

எமது தமிழ் பாடப்புத்தகங்களில் ஒரு பாட்டு உண்டு " சிங்களர்-தமிழர் -முஸ்லீம் யாம் , சீருடன் பயின்று இணைந்தாலே , மங்களம் பொங்கும் நல்லுலகாய் மாண்புடன் விளங்கும் நம் இலங்கை". நம்மை எதிர் கொண்டு இருப்பது ஒரு சமூகப்பிரச்சனை-அது பூதாகரமாக வெடிக்காமல் , முளையிலே கிள்ளி எறிவது, சமூக உணர்வுள்ள ஒவ்வொருவரினதும் சமூகக் கடமை. இதற்கு அரசியல் தலைமைத்துவத்தை  எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல், எம்மால் முடிந்த சமூகத் தலைமைத்துவத்தை ஓருவருக்கொருவர் வழங்க முன்வருவது  எமது கையில் இருக்கின்றது.

வெளி நாட்டில் இருப்பவர்களோ உள் நாட்டில் இருப்பவர்களோ, வெறுமனே தகவல்களை மட்டும் ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ் அப்பிலும் சுடச்சுட பகிர்ந்து  கொண்டு, 'எமோஜிக்களில்' மட்டும் வாழ்க்கையை நடத்தாமல் , நாட்டைப்பற்றிய உண்மையான உணர்வுடன் செயற்பட வேண்டும் .

சமீபத்தில் நடந்த சம்பங்களில் உயிர் இழந்தோ, காயப்பட்டோ , அன்புக்குரியவர்களை இழந்தோ தவிப்பவர்கள் அனுபவிக்கும்  உயிர் வலி, இழப்பைத் தம் வாழ்க்கையில் எதோ ஒரு விதத்தில் எதிர்கொண்ட ஒவ்வொருவருக்கும் முழுமையாகத் தெரியும். இலங்கையை சுற்றுலாப் பயணிகளாகப் பார்க்க வந்து குடும்பத்தினரை  இழந்து இடிந்துபோயிருக்கும் வெளி  நாட்டவர்களும்  சாதாரண மனிதர்கள் தான் . அவர்களது வலியும் வேதனையும் விலை பேச முடியாதவை.