ஒருகணம்நாம் சிந்திப்போம் !


     பரந்திருக்கும் கடலதனை
     பலருக்கும் உவமிப்பர்
     பட்டம்பல பெற்றவரை
     பதவியிலே உயர்ந்தவரை
     பெட்டிநிறை பணம்கொண்டார்
      அத்தனபேர் தனையுலகில்
     கடலெனவே பெயர்சூட்டிக்
      களிப்புடனே அழைத்திடுவர் !

     உவமிக்கும் உவமானம்
     உயர்வினையே தரவேண்டும்
     உவர்நிறைந்த கடலதனை
     உவமித்தல் உகந்ததன்றோ
     உவர்நிறைந்த கடலதனை
     உவமானம் ஆக்கிவிடின்
     உயர்வென்று கருதுவதில்
     ஒருகுறைவு வருமன்றோ !

     தந்தாலும் பலவளத்தை
     தாகமதைத் தீர்க்காத
     கடலதனை உவமித்தல்
     கற்பனைக்கே பொருத்தமில்லை
     பசுமைதனைத் தருவதற்கும்
     பயிர்வளர்ச்சி யடைவதற்கும்
     ஒருபொழுதும் உதவாமல்
     இருக்குதன்றோ உவர்கடலும் !

இலங்கையில் பாரதி - அங்கம் 11 முருகபூபதி


"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
யாதியினைய கலைகளில் உள்ளம்
ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்
ஈன நிலைகண்டு துள்ளுவார்" 

என்னும் பாரதியின்  கவிதை வரிகளையே தாரக மந்திரமாக ஏற்று நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் வெளியான மல்லிகை மாத இதழ்தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியார் வீதியில் அமைந்திருந்த ஜோசப் சலூன் என்ற சிகையலங்கார நிலையத்திலிருந்து வெளியாகி, பின்னர் மானிப்பாய் வீதிக்கும் கே.கே.எஸ். வீதிக்கும் இடையில் ( ராஜா தியேட்டருக்கு பின்புறமாகச் சென்ற)  சிறிய ஒழுங்கையிலிருந்த சிறு கட்டிடத்தில் அமைந்த  மல்லிகைக்கான பிரத்தியேக அலுவலகத்திலிருந்து வெளியானது.
மல்லிகை முதலாவது இதழ் 1966 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியானபோது  அதன் விலை 30 சதம்தான் என்பதை அறியும்போது ஆச்சரியம்தான்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஒரு காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த மல்லிகையும் எமது மக்களைப்போன்று வடக்கில் உருவான அசாதாரண சூழ்நிலைகளையடுத்து கொழும்பில் ஶ்ரீ கதிரேசன் வீதிக்கு இடம்பெயர்ந்து --  இறுதியில் அங்கிருந்தே சில வருடங்களுக்கு முன்னர்  தனது ஆயுளையும் நிறைவுசெய்துகொண்டது.
மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டொமினிக்ஜீவா பின்னாளில் மல்லிகை ஜீவா என்றே பரவலாக அறியப்பட்டவர்.
ஒரு  சிகையலங்காரத் தொழிலாளியாக வாழ்ந்து, பொதுவுடைமைக்கருத்துக்களினால்  ஈர்க்கப்பட்டு, அரசியல்வாதியாகிவிடாமல், இலக்கியவாதியாக தன்னை வளர்த்துக்கொண்டவர்  ஜீவா.
சிறுகதை எழுதிக்கொண்டிருந்தவர் எவ்வாறு ஒரு இலக்கிய இதழை துணிந்து நடத்த முன்வந்தார் என்ற கதையை   தனது சுயசரிதையிலும் விபரித்திருக்கிறார்.  இந்தச்சரிதை  ஆங்கிலத்திலும் வெளியாகியிருக்கிறது. இதனை ஆங்கிலத்தில் வரவாக்கியவர் அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் 'நல்லைக்குமரன்' குமாரசாமி.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம் 11/03/2017






படித்தோம் சொல்கின்றோம்: கானா பிரபா எழுதிய ' அது எங்கட காலம் ' நேற்றிருந்த வீட்டினிலே நிலைத்திருக்கும் எங்கட காலம் முருகபூபதி


மனிதவாழ்வில்  மூன்று  காலங்கள்  முக்கியமானவைஇறந்த காலம், நிகழ்காலம்,  எதிர்காலம்இதுபற்றி  ஆரம்பப் பாடசாலையிலேயே சொல்லித் தந்துவிடுவார்கள்.
இறந்த காலமானது, நிகழ்காலத்தில்  பின்தொடர்ந்து வந்து கணங்கள்தோறும்  நினைக்கத்தூண்டுவதுஅந்தக்கணங்களும்  கடந்துவிடும்போது  இறந்தகாலத்தில் மேலும் ஒரு அங்கம் இணைந்துவிடும்.   எதிர்காலம்  நிச்சயமற்றது. நினைப்பது ஒன்று நடப்பது வேறு ஒன்றாகவும் மாறிவிடும்.
அதனால்தான்  இறந்தகாலமென்பது  ஒவ்வொருவர் வாழ்விலும் வசந்த காலமாகவோ -  வலிநிறைந்த காலமாகவோ - அடிக்கடி நினைத்துப் பார்க்கத்தூண்டும்  நனவிடை  தோய்தலுக்கு உகந்த பொற்காலமாகவோ மனதில் சாசுவதமாக  நீடித்து  நிலைத்துவிடுகிறது.   கானா. பிரபாவின் அது எங்கட காலம்  நூல் முழுமையாகவே இறந்த காலத்தை நனவிடைதோய்தலாக  சித்திரிக்கும் அழியாதகோலங்களாக  பதிவாகியிருக்கிறது.




மெல்பனில் அனைத்துலக பெண்கள் தின விழா கண்காட்சி - கருத்தரங்கு - பட்டிமன்றம் - மெல்லிசை, நடன அரங்கு - ஆவணப்படக்காட்சி.



அவுஸ்திரேலியா மெல்பனில் நடைபெறவுள்ள  அனைத்துலகப் பெண்கள் தினவிழாவில்,  ( அண்மையில் மெல்பனில் மறைந்த ) இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை முன்னாள் பணிப்பாளர் திருமதி பொன்மணி குலசிங்கம் அவர்களைப்பற்றிய நினைவுரை இடம்பெறும்.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வருடாந்தம் நடத்தும் அனைத்துலகப் பெண்கள் தினவிழா இம்முறை மெல்பனில் - பிரஸ்டன் நகர மண்டபத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி ( 11-03-2017) சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணிவரையில் நடைபெறும்.

Mata Amritanandamayi Centre - Sydney 11/03/2017





இலங்கைச் செய்திகள்


சொந்தமண்ணில் கால் பதித்த கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள்

சிறைச்சாலை பஸ் தாக்குதல் : காரைதீவைச் சேர்ந்த தமிழ் சிறைச்சாலை உத்தியோகத்தர் பலி

வவுனியாவில் மேலும் 5 பேருக்கு பன்றிக்காய்ச்சல்

கறுப்பு துணியால் கண்ணைக் கட்டியவாறு கிளிநொச்சியில் போராட்டம்

காணாமல் போன உறவுகளுக்கு ஆதரவாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பேரணி

மனித சங்கிலி போராட்டத்தில் குதித்துள்ள மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள்

ஜனாதிபதி இன்று யாழ்.விஜயம்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா அதிருப்தி..!





உலகச் செய்திகள்


தவறுதலாக அறிவிக்கப்பட்ட ஒஸ்கார் விருது (காணொளி இணைப்பு)

36 விமானங்களில் 1500 பேருடன் சவூதி மன்னரின் ஆடம்பர சுற்றுப்பயணம்..!

கிம் ஜாங் நாம் கொலைக்கு கொடூர இரசாயனம் பயன்படுத்தப்பட்ட சம்பவம் : மலேசியா கடும் கண்டனம்

பரம்பரியமிகு பல்மைராவை கைப்பற்றிய சிரிய இராணுவம்..!

சிரியாவில் அமெரிக்காவை சரமாரியாக தாக்கிய ரஷ்யா.. !

அமெரிக்காவின் பயணத்தடையிலிருந்து ஒரு நாட்டிற்கு தற்காலிக விலக்கு..! 


தமிழ் சினிமா

யமன் 


தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் விஜய் ஆண்டனி. இவர் இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக அறிமுகமாகிய படம் நான். அப்படத்தின் இயக்குனர் ஜீவா ஷங்கர் நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் ஆண்டனியுடன் இணைந்து இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்ற ஒரு அரசியல் கதையை படமாக கொடுத்துள்ளார். அரசியல் ஆட்டம் சூடுப்பிடித்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

விஜய் ஆண்டனி அப்பா அரசியலில் பெரும் புள்ளியாக உள்ளார். அவரை பதவிக்காக தங்க பாண்டி என்பவர் கொல்கிறார்.
அதை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் அம்மாவும் இறக்க, தாத்தாவின் அரவணைப்பில் வாழ்கிறார். ஒரு கட்டத்தில் பணத்திற்காக சிறை செல்கிறார் விஜய் ஆண்டனி.
அங்கிருந்து Ex எம்.எல்.ஏ தியாகராஜன் நட்பு கிடைத்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வரவும் முடிவு செய்கிறார். இவரின் அரசியல் ஆசைக்கு பலர் முட்டுக்கட்டாக இருக்கின்றனர்.
அதை அறிந்துக்கொண்ட விஜய் ஆண்டனி தன்னை சுற்றி நடக்கும் அத்தனை சூழ்சிகளையும் எப்படி முறியடிக்கின்றார் என்ற சகுனி ஆட்டமே இந்த எமன்.

படத்தை பற்றிய அலசல்

விஜய் ஆண்டனி எப்போதும் தனக்கு எது செட் ஆகும் என்பதை மிக தெளிவாக தெரிந்து வைத்துள்ளார், ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு, அளவாக நடித்துள்ளார், அதிலும் அரசியவாதியாக அவர் மாற, ஆடும் ஆட்டம் அதிரடி காட்டுகின்றார், ஆனால், கொஞ்சமாவது கலகலப்பாக இருங்க சார், ரொம்ப டல்லாவே இருப்பது எப்போவுமே செட் ஆகுமா என்று தெரியவில்லை.
தங்கப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் வரும் எம்.எல்.ஏ மிரட்டியிருக்கிறார், திருநெல்வேலி ஸ்லாங்கில் செம்ம ஸ்கோர் செய்கிறார். விஜய் ஆண்டனியை வீழ்த்த, அவர் செய்யும் வேலைகள் ரசிக்க வைக்கின்றது.
மியா ஜார்ஜ் முதன் முதலாக ஆடல், பாடல் என வேறு முகத்தை காட்டியுள்ளார், கொஞ்சம் இப்படியும் நடியுங்கள், விஜய் ஆண்டனிக்கு பிறகு 6 அடிப்பது தியாகராஜன் தான். ஏன் சார் இத்தனை நாட்கள் நடிக்கவில்லை என கேட்கத்தோன்றுகின்றது.
அதிலும் தன் சாதிக்காரர்களை வைத்து எதிரணியை வீழ்த்த நினைப்பது, பின் அவர்களையே காரியத்திற்காக கொல்வது, என அரசியவாதியாகவே கண்முன் தெரிகின்றார். படம் பார்ப்பதற்கு ஏதோ ராம்கோபால் வர்மா படம் போலவே உள்ளது.
மெதுவாக நகரும் கேமரா, காட்சியமைப்புகள் என ஜீவா ஷங்கர் கொஞ்சம் கமர்ஷியல் பார்முலாவில் வித்தியாசம் காட்டியுள்ளார். ஒளிப்பதிவும் அவரே என்பதால் அதிலும் பாஸ் மார்க் வாங்குகின்றார். ஆனால், மெதுவாக செல்லும் சில காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றது.

க்ளாப்ஸ்

எடுத்துக்கொண்ட கதைக்களம், இன்றைய சூழ்நிலையில் எளிதில் மக்கள் மனதில் பதியும்.
படத்தின் வசனம், அரசியல் விஷயத்தில் சொந்த மகனை கூட நம்பமாட்டார்கள், இது சகுனியும், சாணக்கயனும் விளையாட்ற ஆட்டம் போன்றவை ரசிக்க வைக்கின்றது.
குறிப்பாக கிளைமேக்ஸில் விஜய் ஆண்டனிக்கும், தியாகராஜனுக்கு வரும் கான்வர்சேஷன் செம்ம.

பல்ப்ஸ்

மெதுவாக நகரும் திரைக்கதை, விஜய் ஆண்டனி உடனே உடனே முன்னேறுவது கொஞ்சம் அழுத்தமாக காட்டியிருக்கலாம்.
மொத்தத்தில் எமன் வேகம் குறைவு என்றாலும் விவேகமானவன்
Direction: 
Production: 
Music: 










நன்றி CineUlagam