வேட்டை! ---கவிதை -மப்றூக்

.
சில பாடல்கள் சில முகங்களை ஞாபகப்படுத்தும், சில முகங்கள் சிலபாடல்களை ஞாபகப்படுத்தும். ஆனால், இப்போதெல்லாம் கேட்கும் எல்லாப்பாடல்களும் உன்னையே ஞாபகப்படுத்துகின்றன.
ஆனாலும், சந்தோசப்பாடல்களில் வெட்கத்துடன் தலைகாட்டி விட்டு மட்டுமே செல்லுகின்ற நீ, சோகப்பாடல்களிலோ சீவியம் நடத்துகின்றாய்!
உன் காதல் கடிதங்களில் கூட, அதிகமாய் நீ அனுப்பி வைத்ததெல்லாம் கண்ணீரைத்தானே!
 பாலைவனைத்தில் தனித்தலையும் பசிகொண்டதொரு ஒட்டகம் மாதிரி, உன்னைத் தேடியலைகிறேன். நிழலாய்க் கூட நீ வருகிறாயில்லை?
காதல் இத்தனை சுயநலமிக்கதென்றால் உன்னைச் சந்தித்திருக்கவே மாட்டேன்!
உண்மையில் இந்த வலியை காதல்தான் தருகின்றதா இல்லை நீ தருகிறாயா?
ஓடி ஒளிய இடமற்றதொரு பரந்த வெளியினில்,  கழுகளால் விரட்டப்படும் ஒரு கோழிக்குஞ்சு போல், உன் நினைவுகளால் நான் வேட்டையாடப்படுகின்றேன்!
எரிகிறது என் இரவுகள்! நீயோ பனிப்பூக்களோடு விளையாடிக் கொண்டிருப்பாய்!
நீ சிரித்தது, நீ சினந்தது
நீ அழுதது, நீ அணைத்தது
ஒற்றை வார்த்தை சொல்லாமல்
நீ மறைந்தது, மறந்தது
இதில் – எதை
காதல் என்கிறாய்??                                         

நன்றி kaattu.wordpress








சிட்னி முருகன் ஆலயத்தில் புதுவருட தினம்

.

புதுவருட தினத்தன்று சிட்னி முருகன் ஆலயத்தில் பக்தர்கள் நிறைந்து காணப்பட்டார்கள் . வழிபாட்டிற்கு வந்திருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படங்களில் காணலாம் .




திருவாசக முற்றோதல் 2014

.


திரும்பிப்பார்க்கின்றேன் - 22 - முருகபூபதி

.

தேசபிதாவுக்கு      அஞ்சலி       செலுத்திய      மேத்தா
நாம்      அஞ்சலி     செலுத்திய     மேத்தா  தாசன்


 இலங்கையிலும்     தமிழ்நாட்டிலும்    1970 -1980       காலப்பகுதியில் புதுக்கவிதை      எழுச்சிமிக்க    இலக்கியமாக      பேசப்பட்டது.  தமிழ்நாட்டில்     வானம்பாடி    கவிஞர்களாக     வீச்சுடன்       எழுதவந்த   வைரமுத்து,       மேத்தா,    அப்துல்ரஹ்மான்,     அக்கினிபுத்திரன்,      மீரா,     சிற்பி, தமிழ்நாடன்,     தமிழவன்,     தமிழன்பன்,      கோவை    ஞானி,     பரிணாமன், புவியரசு,     இன்குலாப்,     கங்கைகொண்டான்,     உட்பட     பலரின்  புதுக்கவிதைகளின்    தாக்கம்     இலங்கையிலும்     நீடித்தது.
அதேவேளை      சிதம்பர ரகுநாதன்,      கலைமகள்  கி.வா. ஜகந்நாதன் முதலானோர்      புதுக்கவிதையை       ஏற்காமல்     எதிர்வினையாற்றினார்கள்.     வானம்பாடிகள்     இதழ்     சில  வருடங்கள் அழகான    வடிவமைப்புடன்    வெளிவந்தது.     இலங்கையில்     ஏராளமான  இளம்தலைமுறை    படைப்பாளிகள்     முதலில்    புதுக்கவிதை கவிஞர்களாகவே    அறிமுகமானார்கள்.

தமிழ்நாட்டில்    கோவையில்     உருவான     வானம்பாடிகள்     இயக்கத்தில்    பல    கவிஞர்கள்      இணைந்தும் -   பிரிந்தும்-     கவிதைகளினால்      மோதியும்  பிளவுண்டனர்.
புதுக்கவிதைகள்      வாசகர்கள்     படைப்பாளிகள்     சிற்றிதழ்களின்    வரவேற்பை      பெற்றதுடன்      அன்றைய      திரையுலக     பிரபலங்களையும் பெரிதும்     கவர்ந்தன.
ஜெயலலிதா,     கமல்ஹாஸன்.       இயக்குநர்    பாலச்சந்தர்      முதலானோரும்    வானம்பாடிகளின்     புதுக்கவிதைகளை       விரும்பி      வாசித்தார்கள்.
தமிழ்நாட்டில்     தி.மு.க.     அரசின்      கண்காணிப்புகளுக்கும்     வானம்பாடி கவிஞர்கள்      இலக்கான      தகவல்      உண்டு.      மார்க்சீய     கண்ணோட்டத்துடன்     தீவிரமான     சிந்தனைகளுடன்       அக்காலப்பகுதி கவிதைகள்      வெளிவந்தமையும்      அதற்குக்காரணம்.     சில     கவிஞர்கள் நக்சலைட்     தீவிரவாதிகளுடனும்     நெருங்கியிருந்ததாக      தி.மு.க.  அரசு      சந்தேகித்தது.      சிலர்    தலைமறைவு      வாழ்க்கையையும் தொடர்ந்தனர்.

இலங்கைச் செய்திகள்

கடற்படை வீரரால் நான்கு வயது சிறுமி துஷ்பிரயோகம்

மன்னார் மாவட்ட பெரும் போக விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பாக அவசர கலந்துரையாடல்

வடக்கில் 71,716 ஹெக்டெயர் காணிகளை கரும்பு உற்பத்திக்கென சுவீகரிக்க திட்டம்

யாழ்ப்பாணத்தில் ராதிகா சிற்சபேசன்

இவ்வருடத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் கவர்ந்த டெவோன் நீர்வீழ்ச்சி

ராதிகா சிற்சபேசன் நல்லூரில் விசேட வழிபாடு 

ராதிகாவை தேடிய குடிவரவு அதிகாரிகள்

ராதிகாவிடம் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணை 

பள்ளி வாயல் மீது இனம்தெரியாத குழுவினர் தாக்குதல்

அரச ஆதரவுடன் அப்பட்டமான நில அபகரிப்பு

மன்னார் மனித புதை குழியில் மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

 வவுனியா பொது வைத்தியசாலை தாதியர்கள் ஆர்ப்பாட்டம்

 மதஸ்தலங்கள் தாக்கப்படுவதை கண்டித்து அக்குறணையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
============================================================

கடற்படை வீரரால் நான்கு வயது சிறுமி துஷ்பிரயோகம்

30/12/2013    குச்­ச­வெளி பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட திரி­யாய 5 ஆம் வட்­டா­ரத்தில் 4 வயது சிறு­மி­யொ­ருவர் கடற்­படை வீரர் ஒரு­வ­ரினால் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தப்­பட்ட சம்­ப­வ­மொன்று நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.குறித்த பகு­திக்கு பௌசர்­களின் மூலம் நீர் விநி­யோ­கித்து வரும் கடற்­ப­டையைச் சேர்ந்த ஒரு­வ­ரி­னா­லேயே மேற்­படி சிறுமி துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக குச்­ச­வெளி பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

வீட்டில் யாரும் இல்­லாத நிலையில் தனது சகோ­த­ரி­யுடன் இருந்த சிறு­மியை அழைத்துச் சென்ற குறித்த நபர் அவரை துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தி­யுள்ளார்.

கோவையில் “தாயகம் கடந்த தமிழ் 2014” மாநாடு – ஜனவரி 20-22, 2014

.

தாயகம் கடந்த தமிழ் என்ற பொருளில்இ ஓர் அனைத்துலக மாநாடு ஜனவரி 20இ 21இ 22இ 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நிகழவிருக்கிறது.

கோவையிலுள்ள தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆதரவில் நிகழவிருக்கும் இந்த மாநாட்டில் 11 நாடுகளிலிருந்து 16 எழுத்தாளர்கள்இ கல்வியாளர்கள்இ ஊடகவியலாளர்கள் வல்லுநர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள்...

அரசு அல்லது அரசியல் அமைப்புக்களைச் சாராத எழுத்தாளர்களால் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. மாலன் (இந்தியா)இ ரெ.கார்த்திகேசு (மலேசியா)இ சேரன் (கனடா)இ நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்ஸ்) ஆகியோர் அமைப்புக் குழுவினராகச் செயல்படுகின்றனர்.
இருமுறை சாகித்திய அகதாமி பரிசு பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்இ சென்னைஇ மதுரை ஆகிய இரு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராகப் பணியாற்றிய நாவலாசிரியர் முனைவர் ப.க.பொன்னுசாமிஇ ஆகியோர் ஆலோசகர்களாக வழி நடத்துகின்றனர்

அ.முத்துலிங்கம் (கனடா)இ எஸ். பொன்னுதுரை (ஆஸ்திரேலியா)இ டாக்டர் சண்முக சிவா (மலேசியா)இ உல்ரிகே நிகோலஸ் (ஜெர்மனி) சவோ ஜியாங் (சீனம்) முத்து நெடுமாறன் (மலேசியா)இ சீதாலட்சுமி (சிங்கப்பூர்)இ அழகிய பாண்டியன் (சிங்கப்பூர்)இ வெற்றிச் செல்வி (அமெரிக்கா)இ அன்பு ஜெயா (ஆஸ்திரேலியா)இ இளைய அப்துல்லா (இங்கிலாந்து)இ அனார் (இலங்கை)இ பெருந்தேவி (அமெரிக்கா)இ டாக்டர் கிருஷ்ணன் மணியன் (மலேசியா)இ பேராசிரியர் மணி (ஜப்பான்)இ திருமூர்த்தி ரங்கநாதன் (அமெரிக்கா) ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் கட்டுரையளித்துப் பங்கேற்க இசைவு தெரிவித்துள்ளனர்.

35,000 புத்தகங்களைக் காப்பாற்றிய பெண்மணி

.
    இந்திய அமைதி காக்கும் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த போரின்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்த 35,000 புத்தகங்களைக் காப்பாற்றிய பெண்மணி.
துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை
   

யாழ்ப்பாணத் தமிழ்ப்பெண்ணான ரோகிணி பரராஜசிங்கத்தை பலருக்குத் தெரியாது. அவர் மென்மையாகப் பேசும் உயர் குணங்களைக் கொண்டவர்,குடாநாட்டில் மோதல்கள் நடைபெற்ற சமயம் மதிப்புமிக்க 35,000 தொகுதி நூல்களை காப்பாற்றிய பெருமை அவருக்கு உண்டு. அவர் ஒரு உதவி நூலகராகப் பணியாற்றி தனது திறமை மற்றும் அர்ப்பணிப்பு மிக்க சேவையின் காரணமாக ஏணிப்படிகளின் உச்சிக்கு சென்று கௌரவம் வாய்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதம நூலகராகப் பதவி உயர்த்தப்பட்டவர். யாழ்ப்பாண குடாநாட்டில் யுத்தம் நடைபெற்ற காலமான, மோசமான 35 வருட காலம் சேவையாற்றி அதற்கு சாட்சியாக இருந்துள்ளார். அவர் 1994ல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதம நூலகராகப் பதவி உயர்த்தப்பட்டு 2005ல் ஓய்வு பெற்றார்.
அவர் ஒரு அன்னைக்குரிய அரவணைப்புடன் என்னை அன்பாக முத்தமிட்டு பளிச்சென்ற புன்னகையுடன் என்னை வரவேற்றார். யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியான உரும்பிராயில் உள்ள அவரது வீட்டுக்குச் செல்லும் ஒரு ஒடுக்கமான பாதையில் நாங்கள் இருவரும் நடந்து செல்லுகையில், அவர் எனது வலக்கரத்தினை மிருதுவாகவும் மற்றும் மெதுவாகவும் பற்றிப்பிடித்தபடி இருந்தார்.


சிங்களத்துக்குத் திருவாசகம் - மறவன்புலவு க. சச்சிதானந்தன்

.


திருவாசகம் அருளியவர் மாணிக்கவாசகர்.
சிங்கள மன்னன் தலைமையில்
சிதம்பரத்துக்கு வந்த புத்த சமயத்தவருடன் சந்திப்பு.
கருத்துப் பரிமாற்றம்.
சைவ சமயக் கொள்கை விளக்கம்.
புத்த சமய மன்னன்அதுவும் சிங்கள மன்னன் சைவ சமயத்தைத் தழுவுகிறான்.
ஆனாலும் திருவாசகம் சிங்களத்தில் இதுவரை இல்லை.
இதோ இந்தத் தலைமுறையில் சிங்களத்தில் திருவாசகம்.
1200 
ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழில் இருந்து சிங்களத்துக்கு.
நேற்று 31.12.2013 முழுவதும் கல்முனையில் இருந்தேன்.
மொழிபெயர்ப்பாளர் வடிவேலு
பதிப்பாசிரியர் முகில்வண்ணண்
தட்டச்சாளர் தம்பி
யாவரும் திருவாசகம் சிங்கள மொழிபெயர்ப்புக்கு இறுதி வடிவம் கொடுத்தோம்.

உலகச் செய்திகள்

பங்­க­ளா­தேஷில் ஆர்­பாட்­டக்­கா­ரர்­களும் பொலி­ஸாரும் உக்­கிர மோதல்: ஒருவர் பலி

ரஷ்யாவில் புகையிரத நிலையத்தில் பெண் தற்கொலை குண்டுதாரி தாக்குதல்
ரஷ்­யாவில் மீண்டும் தற்­கொலை குண்டுத் தாக்­குதல்; 15 பேர் பலி 23 பேர் காயம்

எல் ­சல்­வா­டோ­ரி­லுள்ள சபர்ரஸ்­ரி­கியு எரி­மலை குமுற ஆரம்­பிப்பு பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் வெளி­யேற்றம்

அமெரிக்காவில் எண்ணெய் ஏற்றிச் சென்ற புகையிரதம் தடம்புரண்டதால் தீ அனர்த்தம்

மெக்ஸிக்கோவில் 300 அடி ஆழத்துக்கு இறங்கிய நெடுஞ்சாலை

வட­கி­ழக்கு அமெ­ரிக்­காவைத் தாக்­கிய பனிப்­புயல்
==========================================================================
பங்­க­ளா­தேஷில் ஆர்­பாட்­டக்­கா­ரர்­களும் பொலி­ஸாரும் உக்­கிர மோதல்: ஒருவர் பலி

30/12/2013      பங்­க­ளா­தேஷின் தலை­நகர் டாக்­காவில் பொலி­ஸா­ருக்கும் எதிர்க்­கட்சி ஆர்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்­கு­மி­டையே  ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற உக்­கிர மோதலில் ஒருவர் பலி­யா­கி­யுள்ளார்.
ஜன­நா­ய­கத்­துக்­கான நடை பவனி என்ற தலைப்பில் டாக்கா நக­ரி­னூ­டாக ஊர்­வ­ல­மாகச் சென்ற ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களில் சிலர் தம்மை எதிர் கொண்ட பொலிஸார் மீது வீடு­களில் தயா­ரிக்­கப்­பட்ட குண்­டு­களை வீசி தாக்­குதல் நடத்­தி­ய­தாக கூறப்­ப­டு­கின்­றது. இந்த ஊர்­வ­லத்தை தடுக்கும் நட­வ­டிக்­கையில் 11000 பொலி­ஸாரும் அதி­கா­ரி­களும் ஈடு­பட்­டி­ருந்­தனர்.
இதன்போது சுமார் 1000 எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.   நன்றி வீரகேசரி 

பட்டி திரும்பிய பசுக்களும் பால் குடித்த நினைவுகளும்....

.

'எழும்படா மேனை

பால்க் கோப்பி குடியடா..'

உலுப்புவாள் அம்மம்மா

குளிரடங்க கிழி சாரம் உடல் மூட

குறண்டிக் கிடப்பேன்.

படுக்கைப் பாயில்

காலைக் கனவுகளைக்

கலைக்க மனதின்றி

அம்மையா கறந்த பால்.

பொன்னென ஜொலிக்கும்

செம்பில்

மடி தடவி

முலை பிசுக்கி

விளிம்பில் நுரை வழிய

கறந்தெடுப்பார்.

கீழ்வானில் தலைநீட்ட

காத்திருப்பான் சூரியன்

அந்நேரம்.

வியாசனின் பாதங்களில்…ஜெயமோகன்

.

இந்தப்புத்தாண்டு முதல் ஒருவேளை என் வாழ்க்கையில் இதுவரை நான் ஏற்றுக்கொண்டதிலேயே மிகப்பெரிய பணியைத் தொடங்குகிறேன். மகாபாரதத்தை ஒரு பெரும் நாவல்வரிசையாக எழுதவிருக்கிறேன். இளவயதின் கனவு.அப்படி பல கனவுகள் தொடர்ந்து ஒத்திப்போடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதுவும் அப்படித்தானிருந்தது.
நேற்று [டிசம்பர் 24-ஆம் தேதி] இரவில் விஷ்ணுபுரம் விழா முடிந்து வந்து சைதன்யாவிடமும் அஜிதனிடமும் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாக மகாபாரதம் பற்றிய பேச்சு எழுந்தது. நள்ளிரவுக்குப்பின்னரும் அந்த உரையாடல் நீடித்தது. பாரதத்தின் உத்வேகம் மிக்க கதையோட்டம். கண் ததும்பவைக்கும் விதிமுகூர்த்தங்கள். சைதன்யா “அப்பா எனக்காக இதையெல்லாம் எழுது” என்றாள்.
இன்று கிறிஸ்துமஸ். சிறுவயதிலிருந்தே எனக்கேயான அந்தரங்கமான கொண்டாட்டம் கொண்ட நாள் இது. நெகிழ்வும் தனிமையும் நிறைந்தவனாக இருப்பேன். காலையில் எழுந்ததும் சட்டென்று தோன்றியது, ‘இந்தநாளில் மகாபாரதத்தை தொடங்கினாலென்ன?”
திட்டத்தை நினைத்தால் எனக்கு பிரமிப்பாகவே இருக்கிறது. ஐநூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்கள். இன்றிலிருந்து ஒவ்வொருநாளும் ஓர் அத்தியாயம் என பத்துவருடங்கள். ஆனால் எந்த பெரும் பயணமும் ஒரு காலடியில்தான் தொடங்குகிறது. தொடங்கிவிட்டால் அந்தக் கட்டாயமும், வாசகர்களின் எதிர்வினைகளும் என்னை முன்னெடுக்குமென நினைக்கிறேன். இப்போது தொடங்காவிட்டால் ஒருவேளை இது நிகழாமலேயே போய்விடக்கூடும்.

சைவ மன்ற ஆதரவில் இசை நிகழ்ச்சி

.
சைவ மன்ற ஆதரவில் இசை நிகழ்ச்சி சாந்தினி வர்மன் கீத்யா வர்மன்




சமகால உலகத்தமிழ்க்கவிதை- “எங்கள் மொழிபெயர்ப்புலகத்தில்” -தமிழாக்கம்: தேவஅபிரா

.

சமகால உலகத்தமிழ்க்கவிதை- “எங்கள் மொழிபெயர்ப்புலகத்தில்” தமிழாக்கம்: தேவஅபிரா
கனடா ரொரொன்ரோ பல்கலைக்கழகத்தின் ஆங்கிலக்கற்கை நெறிப்பீடத்தின் பேராசிரியரான திரு செல்வா கனகநாயகம் அவர்களின் வழிப்படுத்தலில்,  கடந்த பல தசாப்தங்களில் உலகின் பல்வேறு பாகங்களுக்கும் பரவிச் சென்று வசிக்கும் தமிழ்க்கவிஞர்களால்  பல்வேறு காலங்களிலும் எழுதப்பட்ட தமிழ்க்கவிதைகளும் அவற்றின் மொழிபெயர்ப்புகளும் முதன் முறையாக  ஒரே அணியாகத்(தமிழ்+ஆங்கிலம்) தொகுக்கப்பட்டு “ எங்கள் மொழிபெயர்ப்புலகத்தில்”  என்னும் பெயரில் வெளி வந்துள்ளன.
நவீனத்துவம் நிகழ்காலத்தின் பரிமாணங்களை பல்வேறு வழிகளிலும் வடிவமைத்துக்கொண்டிருக்கும் இக்கணத்தில் கடந்த மூன்று தசாப்தங்களில் எழுதப்பட்ட தமிழ்க்கவிதைகளில் மரபுக்கும் நவீனத்துவத்துக்குமான போராட்டம் நெய்யப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.


கோயில் யா​​னை

.

தெருவில் ஒவ்​வொரு வீட்டின் வாசல் முன்னும் நின்று ​கொண்டு
இறுகச் சாத்தி தாளிடப்பட்ட கதவுகளுக்கு முன்னால்
பிளிறிக் ​கொண்டிருக்கிறது அந்த யா​னை.
​பொதுவாக யா​னைகள் அசமந்தமான​வை.
அவற்றின் உருவ​மே கவரக்கூடிய​வை. நடவடிக்​கைகள் ​சோர்வு தரக்கூடிய​வை.
இதுவ​ரை அந்தக் ​​கோயிலில் இருந்த எல்லா யா​னைகளும் அந்த ரகம் தான்.
இது வழக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
இது வந்த பிறகுதான் ​கோயில் நிர்வாகத்திற்​கே நம்பிக்​கை வந்தது.
எப்படி​யேனும் இந்த ஊர் மக்க​ளை நம் சுவாமி​யை ​சேவிக்க ​வைத்துவிட முடியு​மென.
அந்த ​வே​​லை ஒன்றும் அவர்கள் நி​னைத்தது ​போல் அத்த​னை எளிதாக இல்​லை.
ஒவ்​வொரு நாளும் யா​னை ​தெருவில் ​செய்யும் அட்டகாசங்களுக்கு கு​றைவில்​லை.
அரண்டு பார்க்கும் நாய்க​ளின் பக்கம் துலாவியபடி​யே தும்பிக்​கை​யை சுழற்றி மிரண்டு ஓட ​வைப்ப​தென்ன
சத்தமின்றி கழு​தைகளின் பின்​னே ​சென்று வா​லை இழுத்து கத்த ​வைப்ப​தென்ன
முன்​னேறும் குதி​ரைவண்டிகளுக்கு இடம் ​கொடாமல்
வண்டிக்காரன் வண்டி​யோடு கு​டை சாயும் வண்ணம் குதி​ரைக​ளை மிரள ​வைப்ப​தென்ன

தமிழ் சினிமா


என்றென்றும் புன்னகை







 ஜீவா, வினய், சந்தானம் மூவரும் இணைபிரியாத தோழர்களாக வளர்கிறார்கள். சிறு வயதிலேயே தனது அம்மா ஓடிப்போய் விட்டதால், பெண்களை கண்டாலே ஜீவாவுக்கு அலர்ஜியாகிறது. இதில் போதாக்குறைக்கு மூவரும் தாங்கள் கல்யாணமே பண்ணிக்கக் கூடாதுன்னு உறுதி மொழி வேற எடுத்துகிறாங்க. ஆனால், வினய் பெண்களை பார்த்தாலே வலிய ஆரம்பித்துடுவார். அப்புடி இருந்தும் காதல் எனும் மாய வலைக்குள் சிக்காத அளவுக்கே அவரது டாவிருக்கும். இப்புடி கூத்து, கும்மாளம்ன்னு சுத்திட்டு இருந்த ஜீவா & கோ-வினர், த்ரிஷா, ஆன்ட்ரியாவுடன் சேர்ந்து ஒரு விளம்பரப் படத்தை எடுக்கிறார்கள். விளம்பரமும் பெரியளவில் ரீச் ஆகிறது, ஆனால் என்ன இதில் ஜீவாவுக்கும், ஆண்ட்ரியாவிற்கும் தான் டமால் டுமீல் சச்சரவு நடந்து விடுகிறது. இதற்கிடையில் வினய், சந்தானத்துக்கு ஞானஉதயம் பிறந்து டும் டும் செய்துகொள்ள ஆயுத்தமாகின்றனர். இவர்களின் கட்டிமேள அழைப்பிதழ் ஜீவாவை அதிர்ச்சியில் ஆழ்த்த, நட்புக்கு குட் பை சொல்லிவிடுகிறார். வினய், சந்தானத்தின் மனமாற்றத்திற்கு காரணம் என்ன? ரெண்டு ஹீரோயின் இருக்கிறதனால ஜீவாவுக்கு காதல் வந்துச்சா? இல்லையாங்கிறது இழுவை க்ளைமாக்ஸ். ஜீவா காமெடிக்கு கவுண்டர் கொடுப்பதிலும், நட்பிற்காக கரைவதிலும், காதலுக்காக உருகுவதிலும் செண்டம் எடுத்துள்ளார். வினய் தனது வழக்கமான பாடி லேங்குவேஜையே இதிலும் பயன்படுத்தினாலும், சற்று கவனம் பெறுகிறார். சந்தானத்தின் காமெடி சர வெடிகள் படத்திற்கு பெரிய பலம், சில இடங்களில் தான் இவர்களின் சேஷ்ட்டைகள் அலுப்பு தருகிறது, மத்தபடி ஜோரா இருந்துச்சு. த்ரிஷா வழக்கமான ஹீரோயினா வந்து டூயட் பாடிச் செல்லாமல், மனதை கொள்ளை கொள்ளும் வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார். ஆண்ட்ரியாவை ஒரு பாட்டுக்கும், அவரது வசீகரப் பார்வைக்கும் மட்டுமே உபயோகப் படுத்தியிருக்கிறார்கள். மேலும் ஜெகன், நாசர், டி.எம்.கார்த்திக், அபிநய் ஆகியோர் படத்தின் தேவைகேற்ப நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் 'வான் எங்கும் நீ மின்ன, எனை சாய்த்தாளே' பாடல்கள் மட்டும் மனதை வருடுகிறது. பின்னணி இசை பெரிதாக கவரவில்லை. மதியின் ஒளிப்பதிவு நம்மை அழகாக பிக்னிக் கூட்டிட்டு போன மாதிரி பீலிங்! படத்தொகுப்பாளர்கள் பிரவீன்-ஸ்ரீகாந்த் இன்னம் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம் பாஸ். 'வாமனன்' அஹமத் இயக்கத்தில் முதல் பாதி முழுக்க கலகலவென செல்கிறது, இரண்டாம் பாதி இழுத்துக்கொண்டே போவதுதான் பெரிய சலிப்பை ஏற்படுத்துகிறது. மொத்தத்தில் என்றென்றும் புன்னகைன்னு சொல்லி குபீர் சிரிப்பலைகளை வரவழைத்ததில்லாமல், சில சென்டிமென்ட் ரசாயனத்தையும் மிக்ஸ் பண்ணி கலப்படம் செஞ்சுட்டாங்க. ரேட்டிங்: 2.75/5  நடிகர்கள்: ஜீவா, வினய், சந்தானம், நாசர், ஜெகன் நடிகைகள்: த்ரிஷா, ஆண்ட்ரியா இசை: ஹாரிஸ் ஜெயராஜ் இயக்கம்: ஐ.அஹமத் தயாரிப்பு: டாக்டர்.வி.ராமதாஸ், ஜி.கே.எம்.தமிழ் குமரன்  நன்றி விடுப்பு 

ஜீவா, வினய், சந்தானம் மூவரும் இணைபிரியாத தோழர்களாக வளர்கிறார்கள். சிறு வயதிலேயே தனது அம்மா ஓடிப்போய் விட்டதால், பெண்களை கண்டாலே ஜீவாவுக்கு அலர்ஜியாகிறது.
இதில் போதாக்குறைக்கு மூவரும் தாங்கள் கல்யாணமே பண்ணிக்கக் கூடாதுன்னு உறுதி மொழி வேற எடுத்துகிறாங்க. ஆனால், வினய் பெண்களை பார்த்தாலே வலிய ஆரம்பித்துடுவார். அப்புடி இருந்தும் காதல் எனும் மாய வலைக்குள் சிக்காத அளவுக்கே அவரது டாவிருக்கும்.
இப்புடி கூத்து, கும்மாளம்ன்னு சுத்திட்டு இருந்த ஜீவா & கோ-வினர், த்ரிஷா, ஆன்ட்ரியாவுடன் சேர்ந்து ஒரு விளம்பரப் படத்தை எடுக்கிறார்கள். விளம்பரமும் பெரியளவில் ரீச் ஆகிறது, ஆனால் என்ன இதில் ஜீவாவுக்கும், ஆண்ட்ரியாவிற்கும் தான் டமால் டுமீல் சச்சரவு நடந்து விடுகிறது.
இதற்கிடையில் வினய், சந்தானத்துக்கு ஞானஉதயம் பிறந்து டும் டும் செய்துகொள்ள ஆயுத்தமாகின்றனர். இவர்களின் கட்டிமேள அழைப்பிதழ் ஜீவாவை அதிர்ச்சியில் ஆழ்த்த, நட்புக்கு குட் பை சொல்லிவிடுகிறார்.
வினய், சந்தானத்தின் மனமாற்றத்திற்கு காரணம் என்ன? ரெண்டு ஹீரோயின் இருக்கிறதனால ஜீவாவுக்கு காதல் வந்துச்சா? இல்லையாங்கிறது இழுவை க்ளைமாக்ஸ்.
ஜீவா காமெடிக்கு கவுண்டர் கொடுப்பதிலும், நட்பிற்காக கரைவதிலும், காதலுக்காக உருகுவதிலும் செண்டம் எடுத்துள்ளார். வினய் தனது வழக்கமான பாடி லேங்குவேஜையே இதிலும் பயன்படுத்தினாலும், சற்று கவனம் பெறுகிறார்.
சந்தானத்தின் காமெடி சர வெடிகள் படத்திற்கு பெரிய பலம், சில இடங்களில் தான் இவர்களின் சேஷ்ட்டைகள் அலுப்பு தருகிறது, மத்தபடி ஜோரா இருந்துச்சு.
த்ரிஷா வழக்கமான ஹீரோயினா வந்து டூயட் பாடிச் செல்லாமல், மனதை கொள்ளை கொள்ளும் வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
ஆண்ட்ரியாவை ஒரு பாட்டுக்கும், அவரது வசீகரப் பார்வைக்கும் மட்டுமே உபயோகப் படுத்தியிருக்கிறார்கள்.
மேலும் ஜெகன், நாசர், டி.எம்.கார்த்திக், அபிநய் ஆகியோர் படத்தின் தேவைகேற்ப நடித்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் 'வான் எங்கும் நீ மின்ன, எனை சாய்த்தாளே' பாடல்கள் மட்டும் மனதை வருடுகிறது. பின்னணி இசை பெரிதாக கவரவில்லை.
மதியின் ஒளிப்பதிவு நம்மை அழகாக பிக்னிக் கூட்டிட்டு போன மாதிரி பீலிங்! படத்தொகுப்பாளர்கள் பிரவீன்-ஸ்ரீகாந்த் இன்னம் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம் பாஸ்.
'வாமனன்' அஹமத் இயக்கத்தில் முதல் பாதி முழுக்க கலகலவென செல்கிறது, இரண்டாம் பாதி இழுத்துக்கொண்டே போவதுதான் பெரிய சலிப்பை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் என்றென்றும் புன்னகைன்னு சொல்லி குபீர் சிரிப்பலைகளை வரவழைத்ததில்லாமல், சில சென்டிமென்ட் ரசாயனத்தையும் மிக்ஸ் பண்ணி கலப்படம் செஞ்சுட்டாங்க.
ரேட்டிங்: 2.75/5 
நடிகர்கள்: ஜீவா, வினய், சந்தானம், நாசர், ஜெகன்
நடிகைகள்: த்ரிஷா, ஆண்ட்ரியா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம்: ஐ.அஹமத்
தயாரிப்பு: டாக்டர்.வி.ராமதாஸ், ஜி.கே.எம்.தமிழ் குமரன்
- See more at: http://www.cineulagam.com/tamil/reviews-tamil/all/20131220100045/#sthash.OcFRGT4u.dpuf
ஜீவா, வினய், சந்தானம் மூவரும் இணைபிரியாத தோழர்களாக வளர்கிறார்கள். சிறு வயதிலேயே தனது அம்மா ஓடிப்போய் விட்டதால், பெண்களை கண்டாலே ஜீவாவுக்கு அலர்ஜியாகிறது.
இதில் போதாக்குறைக்கு மூவரும் தாங்கள் கல்யாணமே பண்ணிக்கக் கூடாதுன்னு உறுதி மொழி வேற எடுத்துகிறாங்க. ஆனால், வினய் பெண்களை பார்த்தாலே வலிய ஆரம்பித்துடுவார். அப்புடி இருந்தும் காதல் எனும் மாய வலைக்குள் சிக்காத அளவுக்கே அவரது டாவிருக்கும்.
இப்புடி கூத்து, கும்மாளம்ன்னு சுத்திட்டு இருந்த ஜீவா & கோ-வினர், த்ரிஷா, ஆன்ட்ரியாவுடன் சேர்ந்து ஒரு விளம்பரப் படத்தை எடுக்கிறார்கள். விளம்பரமும் பெரியளவில் ரீச் ஆகிறது, ஆனால் என்ன இதில் ஜீவாவுக்கும், ஆண்ட்ரியாவிற்கும் தான் டமால் டுமீல் சச்சரவு நடந்து விடுகிறது.
இதற்கிடையில் வினய், சந்தானத்துக்கு ஞானஉதயம் பிறந்து டும் டும் செய்துகொள்ள ஆயுத்தமாகின்றனர். இவர்களின் கட்டிமேள அழைப்பிதழ் ஜீவாவை அதிர்ச்சியில் ஆழ்த்த, நட்புக்கு குட் பை சொல்லிவிடுகிறார்.
வினய், சந்தானத்தின் மனமாற்றத்திற்கு காரணம் என்ன? ரெண்டு ஹீரோயின் இருக்கிறதனால ஜீவாவுக்கு காதல் வந்துச்சா? இல்லையாங்கிறது இழுவை க்ளைமாக்ஸ்.
ஜீவா காமெடிக்கு கவுண்டர் கொடுப்பதிலும், நட்பிற்காக கரைவதிலும், காதலுக்காக உருகுவதிலும் செண்டம் எடுத்துள்ளார். வினய் தனது வழக்கமான பாடி லேங்குவேஜையே இதிலும் பயன்படுத்தினாலும், சற்று கவனம் பெறுகிறார்.
சந்தானத்தின் காமெடி சர வெடிகள் படத்திற்கு பெரிய பலம், சில இடங்களில் தான் இவர்களின் சேஷ்ட்டைகள் அலுப்பு தருகிறது, மத்தபடி ஜோரா இருந்துச்சு.
த்ரிஷா வழக்கமான ஹீரோயினா வந்து டூயட் பாடிச் செல்லாமல், மனதை கொள்ளை கொள்ளும் வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
ஆண்ட்ரியாவை ஒரு பாட்டுக்கும், அவரது வசீகரப் பார்வைக்கும் மட்டுமே உபயோகப் படுத்தியிருக்கிறார்கள்.
மேலும் ஜெகன், நாசர், டி.எம்.கார்த்திக், அபிநய் ஆகியோர் படத்தின் தேவைகேற்ப நடித்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் 'வான் எங்கும் நீ மின்ன, எனை சாய்த்தாளே' பாடல்கள் மட்டும் மனதை வருடுகிறது. பின்னணி இசை பெரிதாக கவரவில்லை.
மதியின் ஒளிப்பதிவு நம்மை அழகாக பிக்னிக் கூட்டிட்டு போன மாதிரி பீலிங்! படத்தொகுப்பாளர்கள் பிரவீன்-ஸ்ரீகாந்த் இன்னம் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம் பாஸ்.
'வாமனன்' அஹமத் இயக்கத்தில் முதல் பாதி முழுக்க கலகலவென செல்கிறது, இரண்டாம் பாதி இழுத்துக்கொண்டே போவதுதான் பெரிய சலிப்பை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் என்றென்றும் புன்னகைன்னு சொல்லி குபீர் சிரிப்பலைகளை வரவழைத்ததில்லாமல், சில சென்டிமென்ட் ரசாயனத்தையும் மிக்ஸ் பண்ணி கலப்படம் செஞ்சுட்டாங்க.
ரேட்டிங்: 2.75/5 
நடிகர்கள்: ஜீவா, வினய், சந்தானம், நாசர், ஜெகன்
நடிகைகள்: த்ரிஷா, ஆண்ட்ரியா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம்: ஐ.அஹமத்
தயாரிப்பு: டாக்டர்.வி.ராமதாஸ், ஜி.கே.எம்.தமிழ் குமரன்
- See more at: http://www.cineulagam.com/tamil/reviews-tamil/all/20131220100045/#sthash.OcFRGT4u.dpuf