SYDNEY SHRI DURGA DEVI DEVASTHANAM - Third Day


Durga Devi Annual Festival 07.02.14 Friday - Second Day


SYDNEY SHRI DURGA DEVI DEVASTHANAM ANNUAL FESTIVAL -2014


Sydney Murugan temple - Karthikai Viratham







உணர்வுக் கோலம் - கணேசலிங்கம்

தந்தை பெரியார் காண விழைந்த திராவிடம் கானல் நீராகலாம்.
கடவுள் மறுப்புக் கொள்கை காற்றிலே போகலாம். ஆனால்
அவர் ஏற்றிய சுயமரியாதைச் சுடர் தொடர்ந்து எரியவேண்டும். 
   
சுயமரியாதைச் சுடர்

சுயமரி  யாதைச்  சுடரினை  ஏந்திச்
சூழ்ந்திடு  சிறுமைகள்  எரித்தான்!
உயர்இன  மான  உணர்வினைத்  தமிழர்
உளங்களில்  நிலைத்திட  உழைத்தான்!
கயமையின்  சின்னம்  எனஒரு  கூட்டம்
காட்டிடும்  சாதிவேற்  றுமையை
புயலெனச்  சாடிப்  புலியெனப்  பாய்ந்தான்!
பார்ப்பனச்  சூழ்ச்சியீ  தென்றான்!

உலகச் செய்திகள்


நூற்றுக்கணக்கான சிரிய அகதிகளை ஏற்கத் தயாராகும் பிரித்தானியா

சாதிக்க நினைத்தவர் சாவை தழுவிய பரிதாபம்!

அமெரிக்காவின் தென் பிராந்தியத்தை தாக்கிய பனிப்புயல்


இலங்கைச் செய்திகள்


மனித புதை குழியில் இருந்து மேலும் மூன்று எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

வெள்ளை வேனில் கடத்தப்பட்ட குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

சர்வதேச விசாரணை வேண்டும் : வட மாகாணசபையில் தீர்மானம்

வவுனியாவில் பழங்கால நாணயங்கள் கண்டுபிடிப்பு


சின்னத்திரை கலாட்டா 22.02.2014

.

கோவை மாநாட்டில் அன்பு ஜெயா


.


There are around 2,000 children of Tamil origin in Australia who are now learning the language in as formal a way as one can get in a foreign land.
The story behind the effort is nearly 40 years old involving people from Tamil Nadu, Sri Lanka, and other parts of the Tamil speaking world.
It has now reached a stage, where people of Tamil origin in Australia are trying to create a chair in an Australian university.
At present the language is taught up to the school final stage with the recognition of a few provincial governments.
Recalling the journey the Tamils there went through to reach the stage, Anbu Jaya, a Tamil who has played an active part, says it is now 36 years since a group of Tamil families began the initiative to teach Tamil to their children after observing that the young ones started conversing in English at home as well.
He was here in the city to participate in the ‘Thayagam Kadantha Tamil’ conference, organised by the Center for Tamil Culture.
The families began the first school, ‘Balar Malar Tamil Palli’ in Sydney in 1977 when they met over weekends for get-togethers. As part of the meetings, they began teaching Tamil to children at homes were the events were organised.
After sometime, the families shifted the classes to a government school in Ashfield, Sydney, with permission from the New South Wales Government.
At present, the ‘Balar Malar Tamil Palli’ is spread over many Sydney suburbs like Seven Hills, Holsworthy, and Hornsby.

தாயகம் கடந்த தமிழ் - பவள சங்கரி

.

சென்ற வாரம் (ஜனவரி 20 – 22, 2014) இந்தியாவில், கோயம்புத்தூர் மாநகரில், ‘தமிழ்ப் பண்பாட்டு மையம்’ என்ற அரசு மற்றும் அரசியல் அமைப்புகள் சாராத, தன்னார்வத் தமிழர்கள் மூலம் கோவையில் சென்ற ஆண்டு துவக்கப்பட்ட ‘தமிழ்ப் பண்பாட்டு மையம்’ என்ற அமைப்பின் மூலமாக உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கு வழமையான அலங்காரங்களுடன் நடந்தேறியது.  புலம்பெயர் தமிழ் அறிஞர்கள் பலர் நம் தாய்மொழியைக் காக்க வேண்டும் என்ற ஆதங்கத்துடன் தங்கள் உரை மற்றும் கட்டுரைகளை முன் வைத்தார்கள். தொன்மையும், செழுமையும் நிறைந்த  நம் தமிழ் மொழி காக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறதே என்ற துக்கம் எழாமல் இல்லை.  12 நாடுகளிலிருந்து, 35 எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் வல்லுநர்களைக் கொண்டு, அரசு அல்லது அரசியல் அமைப்புகளைச் சாராத எழுத்தாளர்களால் இந்தக் கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கவிஞர் முனைவர், மொழிபெயர்ப்புக்காகவும், படைப்பிலக்கியத்துக்காகவும் இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்றவர், தமிழில் தலைசிறந்த கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் சிற்பி அறக்கட்டளை மூலம் விருதுகள் அளித்து வருபவருமான திரு சிற்பி பாலசுப்பிரமணியம் மற்றும் முனைவர் ப.க. பொன்னுசாமி ஆகியோர் அறங்காவலர்களாகவும் இப்பணியை முன்னெடுத்துள்ளனர். மாண்பமை நீதியரசர் திரு வி. ராமசுப்ரமணியன் அவர்கள் (சென்னை உயர்நீதி மன்றம்) கருத்தரங்கைத் தொடங்கி வைத்து முதன்மை உரை நிகழ்த்தினார். முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன் வாழ்த்துரை வழங்கினார்.

இன்றைய நிலையில் புலம்பெயர் தமிழர்களின் தமிழ் மொழிப்பற்று உடையவர்கள் என்று பார்த்தால், இளம் சிறார்களின் பெற்றோர்களில் ஒரு பகுதியினர் மற்றும் ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் மத்திய வயதைக் கடந்தவர்கள் மட்டுமே என்பதே உண்மை.  இந்நிலையில் அடுத்த தலைமுறை குழந்தைகளை ஓரளவிற்கு இழுத்துப்பிடித்து தமிழ் கற்க வைக்கலாம் என்றாலும், அதற்கு அடுத்த தலைமுறையினரின் நிலை குறித்த கவலை எழாமல் இல்லை.  கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் இப்படி ஒரு அச்சம் இருப்பது புரிந்துகொள்ள முடிந்தது. நான் கருத்தரங்கின் மூன்றாம் நாள் மட்டுமே கலந்து கொள்ள முடிந்ததால் அன்று உரையாற்றியவர்களான முனைவர் ப.க. பொன்னுசாமி அவர்கள், பேராசிரியர் உல்ரிக்கே நிகோலஸ் (ஜெர்மனி) திருமதி. வெற்றிச்செல்வி, (அமெரிக்கா), பேராசிரியர் வீரமணி, (ஜப்பான்), திரு.அன்பு ஜெயா (ஆஸ்திரேலியா), டாக்டர் ந.சுப்ரமணியம் , (அமெரிக்கா)  ஆகியோரின் உரைகளை மட்டுமே கேட்க முடிந்தது. பெரும்பாலும் தாங்கள் சமர்ப்பித்த கட்டுரையின் சாரமே உரையாக அமைந்ததால், ஏனையோரின் கட்டுரைகளின் சாராம்சம் கொண்டு அவர்களின் கருத்துகளையும் உணரும் வகையில் நம் தமிழ் மொழியின் வருங்கால நிலை குறித்து அறிய முற்பட்டேன்.
​​வல்லமை இதழில் வெளியிட்டுள்ள இக்கருத்தரங்கின் நிறைவு நாள் நிகழ்வுகள் குறித்த பதிவு இதோ இங்கேஇருக்கிறது.

திரும்பிப்பார்க்கிறேன் - இலங்கையில் இசைத்துறையில் நிறைகுடமாக வாழ்ந்த கலைஞர் வயலி ன் வி.கே. குமாரசா - முருகபூபதி

.திரும்பிப்பார்க்கிறேன்  

இலங்கையில்      இசைத்துறையில்       நிறைகுடமாக    வாழ்ந்த    கலைஞர்    வயலி ன்  -    வி.கே. குமாரசாமி

                                      


சுமார்    102     வருடங்களுக்கு   (15 ஏப்ரில் 1912)    முன்னர்      கடலில் மூழ்கிய       உல்லாசப்பயணக்கப்பல்      டைட்டானிக்    பற்றிய    திரைப்படம் சில    வருடங்களுக்கு     முன்னர்      வெளியானதும்      அதனைப்பார்த்து   வியந்த    கோடிக்கணக்கான      ரசிகர்களை       அத்திரைப்படத்தின் இறுதிக்காட்சிகள்      மெய்சிலிர்க்கச்செய்திருக்கும்.

ரோமாபுரி     பற்றி      எரிந்த   பொழுது     அந்நாட்டு   மன்னன்    நீரோ    பிடில் வாசித்துக்கொண்டிருந்ததாக       வரலாறு      சொல்கிறது.  அதுபோன்று டைட்டானிக்கப்பல்       அத்திலாந்திக்     கடலில் மூழ்கிக்கொண்டிருந்தவேளையில்        அதில்    பயணித்த     இசைக்குழுவின்  தலைவர்      ஹார்ட்லி      தமது      கையிலிருந்த    வயலின்    இசைக்கருவியில்  -     இறைவா     உன்னருகில்     நானிருந்தால்    -  என்ற பாடலுக்கு    இசைமீட்டிக்கொண்டிருந்தாராம்.

அந்த    விபத்தில்   சுமார்   1500    பேர்     மாண்டுபோனார்கள்.    அவர்களில்  வயலின்    இசை     விற்பன்னர்     ஹார்ட்லியும்      ஒருவர்.
டைட்டானிக்    கப்பல்     மூழ்கிக்கொண்டிருப்பதை    அறிந்ததும் -    அந்த வயலின்    இசைக்கருவியும்      தன்னோடு      சேர்ந்து     மூழ்கட்டும்     என்ற எண்ணத்தில்     அதனை     தனது     உடலோடு      பிணைத்து கட்டியிருந்திருக்கிறார்.

தமிழ் சினிமா


மாலினி 22 பாளையங்கோட்டை


பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நடைபெறும் வன்கொடுமையை தோலுரித்துக் காட்ட நினைத்திருக்கும் படமே மாலினி 22 பாளையங்கோட்டை.

சென்னையில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்வதற்காக கேரளாவில் இருந்து நாயகி நித்யா மேனன், கோவை சரளா மற்றும் அஞ்சலி ஆகியோர் வருகிறார்கள்.

அஞ்சலி ராவ் மூலம் சென்னையில் ஒரு ஆடம்பர வீட்டில் இருந்து கொண்டு ஒரே மருத்துவமனையில் மூவரும் வேலைக்கு சென்று வருகிறார்கள்.
நித்யாமேனன் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார். அதற்காக ஒரு நிறுவனத்தை அணுகுகிறார்.