.
26, August 2023, BRYAN BROWN THEATRE-இல் ‘கோதை’ என்ற தலைப்பில் கார்த்திகா மனோகரன் பரத நாட்டிய நிகழ்வை நடத்தியிருந்தார். கோதை என்பது பெரியாழ்வார் தன் மகளுக்கு இட்டப் பெயர். பெரியாழ்வாரின் செல்வ மகள் கண்ணனில் பிரியமுள்ளவளாக வளர்பவள். கண்ணனுக்குத் தொடுத்த மலர் மாலையை தானே அணிந்து அழகுபார்க்கிறாள். சிறுமி பெரியவளாக வளர்ந்தவள், கண்ணனில் ஆழக் காதல் கொள்கிறாள். அவளையே மணாளனாகக் கொள்ளத் துடிக்கிறாள். அவனது வாய் அமுதை அனுபவிக்கத் துடிக்கிறாள். திருமாலின் கரத்திலே எப்பொழுதும் ஒட்டி உறவாடும் சங்கைக் கேட்கிறாள்.
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே.
வைணவ பக்தியிலே மேலோங்கி இருப்பது ‘மதுர பக்தி.’ பக்தர்
தம்மைப் பெண்ணாக வரித்து இறை மேல் காதல் கொண்டு, அவனையே அடையத் துடிக்கும்
காதலியாகத் தம்மை பாவனை செய்து வெளிப்படுத்துவதே ‘மதுர பக்தி’. ஆண் பக்தர்கள்
உருகி உருகிப் பாடினாலும் ஒரு பெண்ணின் விரகத்தை உணர முடியாத பாவனையே அவை.
ஆனால் ஆண்டாள் ஒரு பெண்ணாக தன் காதலால் அவனை அடையத்
துடிக்கும் பாடல்களை உணர்ந்து உருகி உருகிப் பாடுகிறார். அதனால்தான் அவரது மதுர
பக்தி யாவரையும் விஞ்சி நிற்கிறது.
கோதை நாச்சியார் ஒரு புனிதமான பக்தை. கண்ணனையே
மணவாளனாகக் கலந்தவள். ஆன்மீக உறவிலே மதுர பக்தியின் உச்சத்தைத் தொட்டு நிற்பவை
அவள் பாடல்கள். கண்ணன் கனவிலே தன்னை மணந்தான் எனக் கொண்டாள். அவள் கனாக் கண்ட வரிகள்,
‘கதிரொளி தீபம் கலச முடனேந்தி
சதிரிள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்
அதிரப் புகுதக் கனா கண்டேன் தோழி நான்’
மதுரையார் கண்ணன் அடிநிலையைத் தொட்டு உடம்பெல்லாம்
அதிரும்படி புகுந்தானாம். கண்ணன் கலந்த இந்த உடலை வேறொருவன் தொடக் கூடாது என்பதே
இதன் அர்த்தம்.