மரண அறிவித்தல்

.

தேர்தல் - சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

.
 உஷாரய்யா  உஷாரு ! உஷாரய்யா  உஷாரு !
காலை பிடிச்சி , கையை பிடிச்சி ,
பல்லைக் காட்டி , பணிவைக் காட்டி ,
ஒட்டு வாங்க , துட்டு குடுத்து 
தோடு குடுத்து , குடத்தைக் குடுத்து , 
சேலை குடுத்து ,வேட்டி குடுத்து ,
வக்கணையா சிரிச்சி பேசி 
வஞ்சகமா வலையை வீசி  
வாக்குறுதி அள்ளி வீசி 
ஓட்டு  கேட்க வாராங்க  , உஷாரய்யா உஷாரு . 

சாதிக்காரன்  என்பாங்க.
மதத்துக்காரன் என்பாங்க.
கட்சிக்காரன் என்பாங்க 
கொள்கைக்காரன் என்பாங்க   
பல  வருஷப் பதவிக்காக 
இலவசங்க குடுப்பாங்க 
ஓட்டு வாங்கி ஜெயிச்சிப்புட்டா 
ஓடிப் போயிடுவாங்க 
தேடி நீங்க போயி நின்னா 
திரும்பிப் பார்க்க மாட்டாங்க. 

சிட்னி துர்க்கை அம்மன் கோவில் கட்டிட நிதிக்காக இராப்போசன விருந்து 14/05/2016




FUNDRAISING ANNUAL DINNER 2016

The Sri Durgadevi Devasthanam  would like to hold its Annual Dinner for 2016 and we are hoping to finish Mother Durga's temple in November 2016. 


The Sri Durgadevi Devasthanam would like to cordially invite you to the Annual Fundraising Dinner 2016!

The date for the Kumba Abhishekam has been set November 20th 2016 - the only way to meet this deadline is with your support!

The Dinner with Entertainment will commence at 6:00pm on Saturday 14th May 2016.

There will be a gourmet three-course menu with beverages included with entertainment.

திரும்பிப்பார்க்கின்றேன் முதல் பிரதியை சைவஹோட்டல் வாயிலில் வெளியிட்ட விஞ்ஞான ஆசிரியர் நாவலப்பிட்டியில் படிப்பகம் அமைத்து இலக்கியப்பயிர் வளர்த்த சீர்மியத்தொண்டர் இர. சந்திரசேகரன் விஞ்ஞானிகளின் வாழ்வையும் பணிகளையும் எளிய தமிழில் எழுதிய மூத்த படைப்பாளி முருகபூபதி



நூல் வெளியீடுகள்  எங்கும்  நடக்கின்றன.  முதல்  பிரதி,  சிறப்புப்பிரதி வழங்கும்  சடங்குகளுக்கும்  குறைவில்லை.  அவற்றை  அவ்வாறு பெற்றுக்கொள்பவர்கள்  படிக்கிறார்களா ?  என்பது  வேறு  விடயம். இவ்வாறு  நூல்களின்  அரங்கேற்றங்கள்  கோலம்கொண்டிருக்கையில்,  ஒரு  எழுத்தாளரின்  நூலை முகத்திற்காக  விலைகொடுத்து  வாங்காமல்,  எதிர்பாராத  தருணத்தில் ஒரு  சைவஹோட்டல்  வாயிலில்  அந்த  எழுத்தாளரின் கைப்பையிலிருக்கும்  நூலைக்  கண்டுவிட்டு  பணம்  கொடுத்து வாங்கிய     முகம்  மறந்துபோன ஒரு  வாசக  அன்பர்  இன்றும் அழியாதகோலமாக  அந்த  எழுத்தாளரிடம் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
அந்த  எழுத்தாளர்  தமது  முதலாவது  நூலை  1974   ஆம்  ஆண்டு புரட்டாதி  மாதம்  கொழும்பில்  ஒரு  அச்சகத்தில்  அச்சடித்துவிட்டு, அவற்றில்  25   பிரதிகளை   எடுத்துக்கொண்டு  கோட்டை  ரயில் நிலையத்திற்கு  முன்னால் அமைந்துள்ள  பிரபல சைவஹோட்டலுக்குச்செல்கிறார்.
அங்கு  தமது  புதிய  நூலின்  பிரதிகளை  விற்பனைக்கு வைக்கமுடியுமா ?  எனக்கேட்கிறார்.    இத்தகைய விற்பனைக்காக  அந்த  ஹோட்டலுக்கு  அவர்  கமிஷனும் கொடுக்கத்தயார்.

ஆனால்,  அங்கு  மறுத்துவிடுகிறார்கள்.  சொல்லப்பட்ட  பதில் "இலங்கை  நூல்கள்  விற்பனை  செய்வதில்லை."
அங்கிருந்த  கண்ணாடி   அலுமாரியில்  தமிழகத்தின்  நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.   மேசையில்  தமிழக  வணிக  இதழ்கள் வண்ணம்   வண்ணமாக  விற்பனைக்கு  இருந்தன.
அந்த  எழுத்தாளர்  ஏமாற்றத்துடன்  படி  இறங்கியபோது,  அந்த ஹோட்டலில்  உணவருந்திவிட்டு  கையை    காகிதத்தால் துடைத்துக்கொண்டு  வந்த  ஒரு  தமிழ்  அன்பர்,  அந்த  எழுத்தாளரை நிறுத்தி  "  உங்கள்  புத்தகத்தின்  விலை  என்ன ?   என்று கேட்கிறார்.
" மூன்று  ரூபா  தொன்னூறு  சதம்."
அந்த  அன்பர்  நான்கு  ரூபாவை  நீட்டி  நூலைப்பெற்றுக்கொள்கிறார்.

அகத்தில் வைத்துப் பூசிப்போம் - ( எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா )

.

        பெற்றவளோ தவித்திருக்க பெருஞ்செலவில் ஊரழைத்து
        நற்றமிழும் மறந்துவிட்டு நாகரிகம் தனிலமர்ந்து
        சுற்றமெலாம் சூழ்ந்திருக்க சுவையாக விருந்தளித்து
        வெற்றிக் களிப்பிலவர் வீற்றிருந்து மகிழ்ந்திடுவார்   !

        தான்சுமந்து பெற்றபிள்ளை தலைநிமிர்ந்து வாழ்வதற்கு
        தனக்குவரும் வலியனைத்தும் தாயேற்று நின்றிடுவாள்
        ஊணுறக்கம் தனைப்பாராள் ஒருகணமும் தனையெண்ணாள்
        தான்பெற்ற பிள்ளைதனை தரமாக்கத் துடித்துநிற்பாள் !

       பள்ளிசெல்லும் பிள்ளைபார்த்து துள்ளிநிற்கும் அவள்மனது
       கள்ளமில்லா மனத்துடனே கன்னமதில் கொஞ்சிடுவாள் 
       பள்ளிவிட்டுப் பிள்ளைவரும் பாதைதனில் நின்றுஅவள்
       துள்ளிவரும் பிள்ளதனைத் தூக்கிடுவாள் அன்பொழுக !

       உச்சிமுகந்திடுவாள் ஊரார் கண்படா  வண்ணம் 
       குட்டியாப் பொட்டுவைப்பாள் குளிவிழும் அக்கன்னமதில்
       கட்டியணைத் தணைத்து கற்கண்டே  எனவிழித்து
       தொட்டிலே இட்டபடி தூங்கத்தமிழ் பாடிநிற்பாள் !

      ஏங்கித்  தவிக்கும்தாய்  இதையெல்லாம் எண்ணுகின்றாள்
      எதையுமே மனங்கொள்ளா இருக்கின்றான் அவர்பிள்ளை 
      தூங்காமல் கண்விழித்த தூயவளைப் பாராமல்
      துரையாக வாழ்ந்துகொண்டு தூரவைத்தான் தாயவளை !

      தாயவளோ  காப்பகத்தில் தனையனையே நினைக்கின்றாள்
      தாய்மைநிறை அவளுள்ளம் தவியாகத் தவிக்கிறது 
      தவிப்பறியா மனத்துடனே தனயனுமே இருக்கின்றான்
      தாய்மனதை நோகடித்து தாம்வாழ்தல் முறையன்றோ !

      காப்பகத்தில் தாயைவிட்டுக் களியாட்டம் நடத்துகின்ற
      கருணையில்லா உள்ளங்களே கடவுளுமை மன்னிக்கார்
      கர்ப்பத்தில் சுமந்தவளை கண்போலக் காத்தவளை
      கவலையிலே மூழ்கவிட்டு வாழ்வதுதான் முறையாமோ !

ஓசிமாண்டியாஸ் - சிவகுமாரன்

.

பண்டை நாட்டுப் பயணியவன் 
   பழம்பெருங் கலைகளின் ரசிகனவன் 
கண்டேன்  நானொரு  காட்சியென 
   கண்கள் விரிய உரைத்திட்டான்.
"முண்டம் இல்லை, முகம்தனியே 
    முறிந்த கிளைபோல் முன்கிடக்க 
துண்டாய் இரண்டு கால்மட்டும் 
   தூண்போல் நிற்கும் துயர்கண்டேன்.

அருகில் மணலில் புதைந்திட்ட 
   அலட்சிய முகத்தில் என்னதிமிர் ?
சுருங்கிய இதழில் புன்சிரிப்பு 
   சுழலும் கண்களில் கம்பீரம் 
நெருங்க முடியா வெற்றிகளை 
   நிகழ்த்திக் காட்டிய போர்ச்செருக்கு.
கருங்கல் தன்னை உயிப்பித்த 
   கலைஞன் தன்னை வியக்கின்றேன்.

தூசி படிந்ததன் பீடத்தில்  
    துல்லிய எழுத்தில் இவைகண்டேன்.
'ஓசி மாண்டியாஸ் என்பெயராம் 
    உலகில் எனக்கு எவர்நிகராம்?
மாசில் வெற்றிகள் கண்டவன்நான் 
   மன்னர்க் கெல்லாம் மன்னன்நான்
பேசிடும் எந்தன் படைப்பைப் பார் 
   பெருமையை முடிந்தால் மிஞ்சப் பார்'

சுற்றும் முற்றும் பார்க்கின்றேன் 
   சுடுமணல் தன்னில் ஏதேனும் 
வெற்றிச் சுவடுகள் தெரிகிறதா 
   விழிகள் திறந்து தேடுகிறேன் 
வெற்றுப் பாலையும் சூனியமும் 
   வெட்டுப் பட்ட  முகக்கல்லும் 
முற்றுப் பெறாத தொடுவானும் 
   முன்னே கிடந்தன வேறில்லை"

-சிவகுமாரன் 

ஜே.கே.யின் அசோகவனத்தில் கண்ணகி ஆண்கள் இயற்றிய காவியங்களில் பெண்களுக்கு ஏன் இந்த நிலை???? அங்கதச்சுவையில் காவிய மாந்தர்களை சித்திரித்த நாடகம் ரஸஞானி - மெல்பன்



" வேத்தியல்  பொதுவியலாக  இருந்த  நாடகம்,  கோயில்களில் தஞ்சமடைந்து  பின்  தெருக்கூத்தாக  இருந்து  பார்சி  நாடக வருகையால்  மறு  எழுச்சி  பெற்றுப்  புராணம்,  வரலாறு,  சமூகம் என்ற  வகைகளைப் பெற்று மேடையில்  வளர்ந்தது,  அதன்பின் நாடகம்  படிப்பதற்கும்  கேட்பதற்கும் உரியதாயிற்று. பதிவு செய்யப்பட்டுத்  திரைப்படம்  போலத்  தொலைகாட்சியில் ஒளிபரப்பப் படுவதாகவும்  அது  ஆயிற்று."
இவ்வாறு  எழுதப்பட்ட  குறிப்பொன்றை  இக்கால  நாடகவகைகள் என்ற  ஒரு  கட்டுரையில்  அண்மையில்  படித்தேன்.
இன்று  தொலைக்காட்சி  நாடகங்களின்  தீவிரத்தால்,  மேடை நாடக அரங்காற்றுகைகள்   நலிவடைந்து  வருகின்றன.
அத்துடன்  குறும்படங்களும்  அவ்விடத்தை  ஆக்கிரமித்துவிட்டன.
எனினும்   அங்கொன்றும்  இங்கொன்றுமாக  சில  கூத்து முயற்சிகளையும்   மேடை  நாடகங்களையும்  அவதானித்து வருகின்றோம்.
இந்தப்பின்னணியில்  நீண்ட  நாட்களுக்குப்பின்னர் அவுஸ்திரேலியாவில்  மெல்பனில்   அரங்கேறிய  இளம் படைப்பாளி ஜே.கே.ஜெயக்குமாரனின்  அசோகவனத்தில்  கண்ணகி  என்ற நாடகம்  பற்றிய  எனது  ரஸனைக்குறிப்பை  இங்கு பதிவுசெய்கின்றேன்.


மொழிபெயர்ப்பாளர் லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் மறைந்தார்!


ஈழத்து இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் நேற்று காலமாகியுள்ளார். இந்தியாவில் பிறந்த லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்தவர். தமிழின் முக்கியமான எழுத்துக்களை மொழிபெயர்த்த லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் ஈழத்து மற்றும் புலம் பெயர் படைப்புக்களையும் மொழிபெயர்த்துள்ளார். 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத் துறையில் இளமானிப் பட்டம் பெற்ற இவர் லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தார். 

தமிழின் முன்னோடி எழுத்தாளர்களான மௌனி, புதுமைப் பித்தன் ஆகியோரின் படைப்புக்களை மொழியாக்கம் செய்ததுடன் அசோகமித்திரன், சுந்தரராமசாமி, அம்பை, இமயம் ஆகியோரின் எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். 

ஈழத்து மற்றும் புலம்பெயர் இலக்கியங்களை ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்த லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம், 
அண்மையில் வெளியிட்ட Lost Evenings, Lost Lives ஆங்கில மொழியாக்கம், ஈழத்தின் மூத்த தலைமுறை முதல் இன்றைய தலைமுறைக் கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளைஉள்ளடக்கியுள்ளது.

Nantri http://globaltamilnews.net/

லக்சுமி ஹோல்ம்ஸ்டோம் காலமானர் - மௌனகுரு

.

தமிழ் இலக்கியம் தமிழகத்தில் மாத்திரமல்ல இலங்கையிலும், புலம் பெயர்ந்தும் நீட்சி பெற்றுள்ளது என எடுத்துகாட்டிய லக்சுமி ஹோல்ம்ஸ்டோம் காலமானர்


இந்தியாவில் பிறந்தவரும்
பிரித்தானிய எழுத்தாளருமான லக்சுமி ஹோல்ம்ஸ்டோம் காலமானார்.
இவர் சமகாலத் தமிழ் எழுத்தாளர்களான
மாதவையர்,
புதுமைப்பித்தன்,
மௌனி,
அம்பை,

அசோகமித்திரன்

,பாமா
இமயம்,
சுந்தர ராமசாமி.
நா. முத்துசாமி
.
சல்மா,
சேரன்
ஆகியோரின் படைப்புகளை சிலவற்றையும்
சிலப்பதிகாரம்,மணிமேகலை ஆகிய காவியங்களையும்
ஆங்கிலத்தில் அழ்குற மொழிபெயர்த்தவராவார்.

மெல்பன் நினைவரங்கில் கலந்துகொள்ளும் மூன்று இலங்கை இலக்கியவாதிகள்


அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில் ஒழுங்குசெய்துள்ள நினைவரங்கிலும் இலக்கியச்சந்திப்பிலும் இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள மூன்று இலக்கியவாதிகள் உரைநிகழ்த்துகிறார்கள்.


அண்மையில்  இலங்கையில்  அடுத்தடுத்து  மறைந்தவர்களான  படைப்பாளி செங்கை  ஆழியான்,  நூலியல்  பதிவு  ஆவணக்காப்பாளர்  புன்னியாமீன், ஊடகவியலாளரும்  எழுத்தாளருமான  கே. விஜயன்  ஆகியோரின் வாழ்வையும்   பணிகளையும்  நினைவுகூரும்  நிகழ்ச்சியும்   இலக்கியச்சந்திப்பும்



   எதிர்வரும்   மே  மாதம்  14   ஆம் (14-05-2015 )  திகதி  சனிக்கிழமை  மாலை 3 மணிக்கு   மெல்பனில்   VERMONT  SOUTH   COMMUNITY  HOUSE    (1,  Karobran Drive - Vermont   South, Vic - 3133)   மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

தமிழகத் தேர்தல் -- வழக்கறிஞர் சந்திரிகா சுப்ரமண்யன்

.
கட்சிகளும் காட்சிகளும்

அண்ணாவின் அன்புத் தம்பியின் அரசியல் சாகசம்

அம்மாவின் “விலையில்லா”அரசியல் முன் எடுபடுமா?

தமிழகத்தில் 15வது சட்டசபைக்கான ஆயத்தங்கள் விறுவிறுப்பாக நடை பெற்றுக்கொண்டிருக்கும் அதே வேளையில் பரபரப்பான கட்சிக் கூட்டணிஇ மற்றும் கட்சி முறிவுகளும் நடந்துகொண்டிருக்கின்றன.

தமிழகம் தேர்தல் களை கட்டத் தொடங்கி விட்டது. கட்சிகள் சேர்வதும்இ கலைவதுமாக் இருக்கின்றன.  உச்ச பட்ச இறுக்கத்தில் திமுகவும்இ சகல அலட்சியமாக அதிமுகவும் இருக்கின்றன. தேர்தல் களத்தில் விஜயகாந்தின் தே தி மு க யார் பக்கம் என்று பரபரப்பான எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கும் வேளையில்இ நாம் தனித்தே நிற்போம் என்று விஜய்காந்த் குரல் கொடுக்க ஆடி போனது திமுக .


இலங்கைச் செய்திகள் '


தொடரும் முன்னாள் போராளிகளின் கைது: பிரபாவும் கைது

கட்டி­பு­ரண்டு சண்­டை­யிட்­டனர், ஒருவருக்கு இரத்த வடிந்தது, சிலருக்கு முகம் வீங்கியது, ஆடைகள் கலைந்தன : பாராளுமன்றத்தில் நடந்தது என்ன? (முழு விபரம்)

வரலாற்றுச் சம்பவம் : சுவாமிநாதன் கூறுகின்றார்

இன்று தாயகம் திரும்புகின்றனர் தமிழகத்திலுள்ள அகதிகள்

வெள்ளை வேன் கடத்தல் வேண்டாம்' மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணி






தொடரும் முன்னாள் போராளிகளின் கைது: பிரபாவும் கைது


உலகச் செய்திகள்


கென்­யாவில் 70,000 சட்­ட­வி­ரோத யானைத் தந்­தங்கள் தீக்­கிரை

16 ஆண்டுகளுக்கு பின் இமயமலை ஏறும் போது உயிரிழந்தவர்களின் சடலம் மீட்பு (வீடியோ இணைப்பு)






தமிழ் சினிமா


மனிதன்



உதயநிதி தன்னை ஒரு நடிகனாக நிரூபித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இதற்கு முன் வெளிவந்த அனைத்து படங்களும் சந்தானத்தின் காமெடி, ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களை நம்பி மட்டுமே படம் வெளிவந்தது.

கொஞ்ச1ம் வித்தியாசமாக கெத்து படத்தில் சந்தானம் இல்லாமல் ஒரு ஆக்‌ஷன் படத்தில் களம் இறங்கினார். அந்த படம் பெரிதும் அவருக்கு கை கொடுக்கவில்லை, அதனால், முதலில் தன்னை ஒரு நடிகனாக நிரூபிக்க வேண்டும் பாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற ஜாலி llb படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தயாரித்து நடித்துள்ளார். ஒரு நடிகனாக உதயநிதி வெற்றி பெற்றாரா? என்பதை பார்ப்போம்.

கதைக்களம்

ஊரில் வக்கீலுக்கு படித்துவிட்டு எந்த கேஸும் கிடைக்காமல், போராடிக்கொண்டு இருக்கிறார் உதயநிதி, சுற்றி இருப்பவர்கள் தன்னை கிண்டல் செய்வது கூட தெரியாத அப்பாவி, ஒரு வழக்கில் வெற்றி பெற்றால் தான், தன் மாமாவிடம் பொண்ணு (ஹன்சிகா) கேட்க முடியும் என கோபமாக சென்னை கிளம்பி செல்கிறார்.
சென்னையில் இதற்கு மேல் கஷ்டப்படுகிறார், விவேக்கை நம்பி உதயநிதி சென்னை வந்தால் அவரே அங்கு ஊறுகாய் கடை போட்டு பிழைத்து வருகின்றார். இந்த நேரத்தில் தான் நாடே தீர்ப்பு எதிர்ப்பார்க்கும் ஒரு வழக்கில் வாண்ட்டாக ஆஜர் ஆகிறார் உதயநிதி.
நடைப்பாதையில் படுத்திருந்தவர்களை கார் ஏற்றி கொன்ற ஒரு பெரிய இடத்து பையன் வழக்கை, கையில் எடுக்கிறார். ஆனால், அந்த பையனுக்கு ஆதரவாக இந்தியாவில் நம்பர் 1 வக்கீலான பிரகாஷ்ராஜ்வாதாடுகிறார்.
ஊரே தன்னை ஒரு மொக்கை லாயர் என்று சொல்கின்றது, நாம் சாதிக்க இது தான் சரியான தருணம் என பிரகாஷ்ராஜுக்கு எதிராக உதயநிதி களமிறங்க, இறுதியில் வெற்றி யாருக்கு என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

இதுவரை நடித்த 5 படங்களில் இது தான் உதயநிதியின் பெஸ்ட் என்று சொல்லிவிடலாம், எந்த ஒரு இடத்திலும் அலட்டிக்கொள்ளாத நடிப்பு, ஹீரோ திட்டு வாங்குகிறார், ஒரு சில இடங்களில் எல்லாம் ஜுனியர் ஆர்டிஸ்டே கலாய்க்கிறார்கள், அடி வாங்குகிறார், திணறி திணறி வாதடுகிறார். இதுபோன்று தன் குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து முதன் முறையாக ஒரு ஹீரோவாக நம் மனதை உதயநிதி வென்றுவிட்டார். ஹன்சிகா உதயநிதிக்கு சப்போர்ட் தரும் கதாபாத்திரம் தான் என்றாலும் முதன்முறையாக ஓவர் ஆக்டிங் இல்லாமல் அளவான அழகான நடிப்பால் கவர்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், விவேக் ஆகியோர் கதைக்கு தேவையான நடிப்பை தந்துள்ளனர்.
படத்தின் மற்றொரு ஹீரோ கண்டிப்பாக பிரகாஷ்ராஜும், ராதாரவியும். படத்தில் இவர்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் என்றால், இவர்கள் பெயரை தான் முதலில் போடுகிறார்கள், பிறகு தான் உதயநிதி பெயரே வருகின்றது. பிரகாஷ்ராஜ் ஒரு சீனியர் லாயராக மிரட்டுகிறார், ஏதோ பள்ளி சிறுவனை ஆசிரியர் மிரட்டுவது போல் உதயநிதியை அதட்டி உட்கார வைக்கும் இடத்தில் கம்பீரம். ஆனால், ஒன்றே ஒன்று சொல்லியே ஆகனும், ராதா ரவி சார் நடிகர் சங்க தேர்தலில் தோற்றதால் மிகவும் சந்தோஷப்படுவது பல இயக்குனர்கள் தான்.
ஏனெனில் இப்படி ஒரு நடிகனை தான் நாம் இத்தனை நாட்கள் தொலைத்து விட்டோம், அவர் பேசினாலே திரையரங்கம் கைத்தட்ட ஆரம்பித்து விடுகின்றது, அதிலும் படத்தின் பாதி வரை அமைதியாகவும் நிதானமாகவும் இருந்து, ஒரு கட்டத்தில் கோபத்தில் கையை உயர்த்தி பேசும் இடத்தில் சார் சூப்பர் சார்.
படத்தின் பல காட்சியமைப்புகள் மிகவும் யதார்த்தமாக உள்ளது, உதயநிதி ஒரு சாதாரண மனுஷனாக கேஸை வாபஸ் வாங்க பணம் வாங்கி, அவர் திருந்தும் இடத்திற்கு வைத்த காட்சிகள் கிளாஸ், அதைவிட கிளைமேஸில் நடைப்பாதையில் படுத்திருந்து தன் குடும்பத்தை இழந்தவர் கோர்ட்டில் பேசும் இடம் சூப்பர் அஹமத்.
படத்தின் மிகப்பெரும் பலமே ஒளிப்பதிவு, இசையும் தான், மதியின் கேமராவில் நீதிமன்றத்தை நம் கண்முன்னே கொண்டு வந்துள்ளார், சந்தோஷ் நாரயணின் இசையின் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட் , அதை விட பின்னணி இசையில் கலக்கியுள்ளார், அதிலும் குறிப்பாக ‘அதோ’ BGM படத்தின் கதையை தாங்கி செல்கின்றது.

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்கு பொருந்திய கதாபாத்திரங்கள், அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
பிரகாஷ்ராஜ்+ராதாரவி போன்ற சீனியர் நடிகர்களின் பங்களிப்பு, படத்தின் இரண்டாம் பாதி வேகம் எடுக்கின்றது.
கிளைமேக்ஸில் உதயநிதியும், பிரகாஷ்ராஜும் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கின்றது. படத்தின் வசனம் ‘உங்களுக்கு தெரியாத விஷயத்தில் அறிவை தேவையில்லாமல் பயன்படுத்தாதீர்கள்’ போன்றவை யோசிக்க வைத்து ரசிக்க வைக்கின்றது.
இவை அனைத்தையும் விட, ரீமேக் படம் என்றாலும், நம் சமூகத்தில் பணக்காரர்களால் நடக்கும் பெரிய விபத்துக்களை எப்படி மூடி மறைக்கிறார்கள் என காட்டிய களம்.

பல்ப்ஸ்

படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாகவே நகர்கின்றது, எந்த இடத்திலும் சோர்வு இல்லை என்றாலும், இன்னும் கொஞ்சம் வேகமாக இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கின்றது. சில யதார்த்த மீறல், காட்சிகளில் மட்டும்.
மொத்தத்தில் இந்த மனிதனில் எடுத்த வழக்கை உதயநிதி வெற்றிகரமாக முடித்தது மட்டுமில்லாமல், ஒரு நடிகனாகவும் வெற்றி பெற்றுவிட்டார்.

ரேட்டிங்-3.25/5  நன்றி  cineulagam