தெற்காசியாவைச் சேர்ந்த 4 ஆயிரம் பேருக்கு அவுஸ்திரேலியாவில் குடியுரிமை :அவுஸ்திரேலியா - மலேசியா புதிய ஒப்பந்தம்

.

 25/07/2011
புகலிடக்கோரிக்கை தொடர்பாக அவுஸ்திரேலியா மலேசியா ஆகிய நாடுகளுக்கிடையில் இன்று திங்கட்கிழமை ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியுள்ளது.

எதிர்வரும் வருடங்களில் அவுஸ்திரேலியாவில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட அகதிகள் 4 ஆயிரம் பேருக்கு குடியுரிமை வழங்குவதெனவும் மேலதிகமாக தங்கியுள்ள 800 பேரை மலேசியாவுக்கு அனுப்புவதெனவும் ஒப்பந்தத்தினூடாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெறுவோர் அனைவரும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தோர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

20வது ஆண்டில் தமிழ் மூத்த பிரஜைகள் சங்கம்

                  .
இருபதாவது ஆண்டில் பயணிக்கும் மூத்த பிரசைகள் சங்க விழாவின் போது.

                                                                                                                  படப்பிடிப்பு : ஞானி 

போரின் கொடுமையில் -ஆவூரான்

.


பசிக்கு சோறில்லை

பார்க்க ஆளில்லை

குடிக்க கூழில்லை

படிக்க முடியல்லை

வன்னி மண்ணில

வாழ வழியில்லை

“சிங்கள நிட்டாயவோ” இன்னும் இருக்கிறார்கள்.- குசல் பெரேரா

.
இருபத்தெட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன ஆனால் “சிங்கள நிட்டாயவோ” இன்னும் இருக்கிறார்கள்.
அரசியலும் ஆட்சியும்

இலங்கையில் உள்ள “ நிட்டாயவோ” பற்றி எழுதும்போது பிரட்ரிக் லூயிஸ் சொன்னார், தோற்றத்தில் அவர்கள் குள்ளமாகவும், நீளமான பலம் வாய்ந்த கரங்களையும், கழுகின் பாதத்திலுள்ள நகங்களைப்போல கொக்கி போன்ற நகங்களையும் கொண்டு, கிட்டத்தட்ட மனிதர்களைப் போலத்தான் இருப்பார்கள் என்று.

இந்த நிட்டாயவோக்கள் 15 இலிருந்து 20 வரையான சிறிய குழுக்களாகச் சேர்ந்துதான் வசிப்பார்கள். அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் இரைகளின் வயிற்றை கழுகின் பாதம் போன்ற தங்கள் கூரிய நகங்களால் கொடூரமாக குத்திக் கிழிப்பார்கள், என்று ஹக் நெவில் என்கிற மற்றொரு எழுத்தாளர் கூறியுள்ளார். அவர்கள் வேடர்களின் பிள்ளைகளைப் பிடித்துச் சென்றதால்தான் வேடர் இனமே அழிந்து போனது என இரண்டு எழுத்தாளார்களுமே எழுதியுள்ளார்கள்.

இலங்கைச் செய்திகள்

.
புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு நிதி திரட்டும் நடைபயணக் குழுவுக்கு யாழ்நகரில் வரவேற்பு
Tuesday, 26 July 2011

தெய்வேந்திர முனையிலிருந்து பருத்தித்துறைவரை, யாழ்ப்பாணத்தில் சிறுவர் புற்று நோய் சிகிச்சைக் கூடமொன்றை நிறுவுவதற்கு நடைப்பயணம் மூலம் நிதிதிரட்டி யாழ்ப்பாணம் வந்த குழுவினரை யாழ்ப்பாண சமூகம் பொதுவரவேற்பளித்து கௌரவிக்கவுள்ளது.

இந்நிகழ்வு நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம் பெறவுள்ளது. இந்நிகழ்வில் இலங்கையின் முன்னணி கிரிக்கெட் வீரர்களான டில்சான், முரளிதரன், அஞ்சலோ மத்தியுஸ், மஹேல ஜயவர்தன ஆகியோர் விருந்தினராகக் கலந்து கொள்வதுடன், நடைப்பயணத்தை ஆரம்பித்து வைத்த "நாளை நமதே' இளைஞர் அமைப்புத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அமைச்சர்கள், வடமாகாண ஆளுநர், அரசாங்க அதிபர், லயன்ஸ்கழக பிரமுகர்கள் என பலரும் பங்கு கொள்வார்கள்.

நிதிதிரட்டும் பணியில் ஜனசக்தி இன்சூரன்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி, மொபிற்றல் தொலைத்தொடர்பு நிறுவனம், சிலிங்கோ காப்புறுதி நிறுவனம், டி.எச்.எல்.என பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

வடலிகள் - சிறுகதை -கே.ஆர்.டேவிட்

. 











குரல் வளையோடு வெட்டப்பட்டு தலையை இழந்து விட்ட அந்தமொட்டைப் பனைமரம் வெதும்பி.... அழுகின்றதுஇன்று நேற்றல்ல கடந்தபல மாதங்களாக அந்த மொட்டைப் பனைமரமும், அதைச் சூழநின்றஎண்ணுக் கணக்கற்ற மொட்டைப் பனைமரங்களும் அழுதுகொண்டேயிருக்கின்றன.

இந்த மொட்டைப் பனைமரங்களின் அழுகைக்கான காரணம்....? அதுஒன்றும் இரசிகசியமானதல்ல... பரகசியமானது... அதுவும் சர்வதேசம் வரைவிரிந்திருக்கும் பரகசியம்....!

'முகமாலை'.....

நூல்: சில்லறை சப்தங்கள் (கவிதை) -

.
                       ஆசிரியர்: வித்யாசாகர் -வெளியீடு: முகில் பதிப்பகம்
வணக்கம்

ஆசிரியர் வித்யாசாகரின் உலக அசைவிற்கேற்ப அகபுற செயல்பாடுகளையும், வாழ்க்கை சூழலையும் கருத்தியல்பாகக் கொண்ட படைபிலக்கியத்தை அவர் வசிக்கும் குவைத்தில் இருந்தே நன்கு அறிந்தவள் என்கிற பெருமையில்.............. இதோ...... 'சில்லறை சப்தங்கள்' எனும் கவிதை பூங்காவிற்குள் நுழைந்து வார்த்தைகளின் வசியத்தில் வாழ்ந்து, ஒவ்வொரு தமிழ் மணம் கமழும் வரிகளிலிருந்தும் வாழ்வின் நிதர்சனத்தை கண்டு பிரம்மித்தவளாய், இலக்கிய நிழலில் நின்று இளைப்பாரிய பாலைக்குயிலாக நிறைவு பெற்ற மனதோடு மீண்டும் சற்றே யதார்த்தத்திற்கு வந்தமர்ந்து என் பணிந்துரையை எழுதுகிறேன்.

மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் -பகுதி 2


.
கணவன்-மனைவி ஊடல்




கணவன் மனைவிக்கிடையிலான ஊடலும், கூடலும் சம்பந்தமான பாடல்கள் இவ்வத்தியாயத்தில் தொகுக்கப்படடுள்ளன.

கணவன் மனைவிக்கிடையில் சிறு கருத்து வேறுபாடு. சண்டை, சச்சரவு என்று பெரிதாக எதுவுமில்லை.  ஊடல்தான்! அதனால் அன்றிரவு ஒன்றாகப் படுத்திருந்தாலும் மனைவி ஒருக்களித்துப் படுத்துக் கொள்வாள்.  காலையில் எழுந்து களனிக்குப் போனவனுக்கு வேலை முடிந்து வீடு திரும்பும்போது விரகதாபம் தலைக்கேறியிருந்தது.  மனைவியின் அணைப்புக்கு ஏங்கி அதையே நினைத்திருந்தவனுக்கு உள்ளம் கசிந்தது.  உடலும் கசிந்தது.  வீட்டுக்கு வரும்போது வழமைபோல வாசலுக்கு வந்து வரவேற்கும் மனைவி அன்று வரவேயில்லை. அதனால் மனைவியை அழைப்பதுபோலப் பாடுகிறான்.

கண்டு வம்மிப் பூநிறத்தாள்
கவரிபுள்ளி மான் குயிலாள்
அரும்புகசு பூமுலையாள்
ஆசனையில் நித்திரையோ

திருமுறை முற்றோதல் - (62வது மாதாந்த தொடர்நிகழ்ச்சி)

.
உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தல்

உலக சைவப் பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையின் மாதாந்த திருமுறை முற்றோதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 07.08.2011 காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது. அன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறையில் “அடியார்க்கும் அடியார்” எனும் தலைப்பில் கலாநிதி வடிவேலு அவர்களால் விளக்கம் கூறப்பட்டு பின்னர் ஏழாம் திருமுறையில் ஐந்தாம் பதிகம் (திருஓணகாந்தன்தளி) தொடக்கம் திருமுறைப்பாடல்கள் கூட்டுவழிபாட்டு முறையில் பாராயணம் செய்யப்படவுள்ளன.

ஈழமுரசு வழங்கும் நகைச்சுவை இரவு சிரிப்போ சிரிப்பு

.

ஈழமுரசு அவுஸ்திரேலியா வழங்கும் நகைச்சுவை இரவு


”சிரிப்போ சிரிப்பு”

அவுஸ்திரேலியாவின் பிரபல நகைச்சுவை நட்சத்திரங்கள் இணைந்து வழங்கும் முழு நீள நகைச்சுவையுடன் கூடிய பல்சுவை கதம்ப நிகழ்ச்சி.

அவுஸ்திரேலியா இளைஞர்கள், யுவதிகள் இந்தியா புட்டபர்த்தியில் நடாத்திய இசைக்கச்சேரி


.
25 இளைஞர்கள், 35 யுவதிகள் அடங்கிய குழு ஒன்று அவுஸ்திரேலியாவிலிருந்து யூலை மாதம் 16ம் திகதி புறப்பட்டு புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் இரண்டு கிழமைகள் தங்கியிருந்தார்கள். சென்ற 25ம் திகதி பிற்பகல் 5மணியளவில் பகவான் சாய் பாபாவின் மகா சமாதியின் முன்பாக சாய் குல்வான்ற் மண்டபத்தில் உள்ளம் உருகி ஒரு இசைக்கச்சேரியை நடாத்தினார்கள்.

உலகச் செய்திகள்

ஜப்பானில் சக்தி வாய்ந்த பூகம்பம்
Monday, 25 July 2011

ஜப்பானில் 6.2 ரிச்டர் அளவிலான சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9.0 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டதனால் அங்கு மிகமோசமான அழிவுகள் ஏற்பட்டன.எனினும் மீண்டும் அப்பகுதியிலேயே தற்போது 6.2 ரிச்டர் அளவிலான சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் அளவீட்டு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு டோக்கியோவிலிருந்து 282 கிலோ மீற்றர் தொலைவில் மையம் கொண்டிருந்த இப்பூகம்பமானது பியுகுஷிமாவிலிருந்து 94 கிலோ மீற்றர் தொலைவில் பசுபிக் சமுத்திரத்தில் 35.6 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,கடந்த சனிக்கிழமை குறித்த இப்பகுதியில் ஹொன்சு கடற்கரைக்கு அப்பால் 6.4 ரிச்டர் அளவிலான பிறிதொரு பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் வடகிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தின்போது 23,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் பியுகுஷிமா அணுஉலை வெடிப்பினால் உருவான கதிரியக்கப் பரவலினால் 80,000 பேர் வரை தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தினக்குரல்

ஒற்றுக்கேட்டல் விவகாரத்தில் கேட்டும் அவரது குடும்பமும் இலக்கு Monday, 25 July ௨௦௧௧

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமின் மனைவியும் கேம்பிரிட்ஜ் சீமாட்டியுமான கேட் மிடில்ரன் மற்றும் அவரது குடும்பத்தினரும் ஒற்றுக்கேட்டல் விவகாரத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் செய்தியொன்று தெரிவிக்கின்றது.

தரமான இலக்கியங்களை எவ்வாறு அடையாளம் காண்பது ?


.
-                                                                                                     முருகபூபதி

 ‘ வாசிப்பு மனிதனை முழுமையாக்கும் || என்றார் மகாத்மா காந்தி.
காந்தி சொல்லிய பல நல்ல அறிவுரைகளை, குறிப்பாக அகிம்சையை கவனிக்கத்தவறியதுபோன்றே, இந்த வாசிப்பு தொடர்பான அவரது சிந்தனையிலும் எம்மவர்கள் கருத்தூண்றவில்லை.
 மரக்கறிக்கடை, இறைச்சி, மின் கடைகள், நகை,புடவைக்கடைகள், உணவு விடுதிகள், பலசரக்குக்கடைகள், பியுட்டி பாலர்கள், சலூன்கள் இவற்றுக்கெல்லாம் வாரமோ மாதமோ தவறாமல் போய் வந்து விடுவோம்.
எமது தேவைகளையும் எப்படியோ- கையிலே பணம் இல்லாது போனாலும் கிரடிட்கார்ட், விசாகார்ட் முதலான கடன் அட்டைகளின் தயவினால் பூர்த்தி செய்துகொள்வோம்.
 ஆனால், எத்தனைபேர் புத்தகக்கடைகளுக்கு ஒழுங்காகப் போய் வருகிறோம்? எத்தனை பேர் நாள்தோறும் பத்திரிகை படிக்கின்றோம். மாதம் தவறாமல் இலக்கிய இதழ்களைப் படிக்கின்றோம்?
 கோயிலுக்குப் போகின்றோம், பிறந்தநாள், திருமண வைபவம் உட்பட பல குடும்ப ஒன்றுகூடல்களுக்கெல்லாம் தவறாமல் போய் வந்துவிடுவோம்.
 ஆனால், நூலகங்களின் பக்கம் தலைவைத்துப் படுக்கவும் தயங்குகிறோம்.
ஏன் இப்படி? எனக்கேட்டால்,  கௌரவமான  ஒரு பதில் எப்பொழுதும் இருக்கிறது.

‘நேரம் இல்லை|.
 

கறுப்பு ஜுலை மாதத்தில் இரத்த தானம்

.
இலங்கையில் 1983ம் ஆண்டு அந்த கறுப்பு ஜுலை மாதத்தில் நடைபெற்ற இனக் கலவரத்தில் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட, தமிழின மக்களின் அவலநிலையை நினைவூட்டும் முகமாகவும், தமிழர் மாத்திரமன்றி உலகின் ஏனைய இன மக்களும் அறிய வேண்டும் என்ற நோக்கத்துடன் அவுஸ்திரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரதி ஆண்டுதோறும் ஜூலை மாதத்தை, துயர்துடைப்பு மாதமாக அனுஷ்டித்து வருகிறது. அந்த வகையில் துயர்துடைப்பு மாத நிகழ்வுகளில் இறுதி நிகழ்வாகவும், கறுப்பு ஜுலை நினைவாகவும், அடைக்கலம் தந்த அவுஸ்திரேலியா நாட்டிற்கும் நன்றிக் கடனாகவும் நடைபெறும் “இரத்த தானம்”, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் 11.30 மணிவரை Mt Waverly, Blackburn வீதியில் Pinewood Shopping centre,இல் அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் இரத்தவங்கி ஊடாக இரத்ததானம் வழங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ளது”. இப்புனிதகொடைக்கு உதவ முன்வரும் கொடையாளிகள் தயவுசெய்து உங்கள் பெயர்களை முன்கூட்டியே 0414 185 348 அல்லது 0413 506 183 எனும் இலக்கத்திலும் தொடர்பு கொண்டு பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

அவுஸ்திரேலியா குடிசன மதிப்பீடு 2011

பணப்புழக்கத்தில் ஆதிக்கப்போர்

.


2007, 2008 இல் டொலர் வீழ்ச்சி பற்றிப் பேசப்பட்டது.உலகப் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டு அதிலிருந்து மீள்வதற்குள் இன்று ஒரு புதிய அச்சுறுத்தல் தோன்றியுள்ளது.அதுவே பணப்புழக்க ஆதிக்கப் போர்.இதன் விளைவால் 1930 களில் நிகழ்ந்த மாபெரும் வீழ்ச்சி கிரேட் டிப்ரஷனை நோக்கி உலகம் செல்வதாகத் தோன்றுகிறது.

யு.எஸ்.பெடரல் ரிசர்வ் பணப்புழக்கச் செலாவணியில் சீன ஆதிக்கத்தை எதிர்த்து க்யூஈ என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது.ஆங்கிலத்தில் க்யூர்ஈ என்றால் க்வாண்டிட்டேட்டிவ் ஈசிங் வேண்டுமென்றே டொலரை மதிப்பிழக்கச் செய்வது சீனா யுவான் மதிப்பைக் குறைத்து மலிவு விலையில் ஏற்றுமதி செய்வதுபோல் அமெரிக்காவும் தொடங்கிவிட்டது.சீனா தொடங்கி வைத்த செயலை இப்போது அமெரிக்கா மட்டுமல்ல உலக நாடுகள் எல்லாமே

திமுக அவலத்தின் உச்சம் -சின்னக்கருப்பன்


.

திமுக ஒன்றும் சங்கரமடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன், அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும் என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.
முதலமைச்சராக இருந்தால் என்னவேண்டுமானாலும் பேசலாம். ஒரு கும்பல் கைதட்டும் என்பதற்கு இந்த வரிகளே உதாரணம். சங்கரமடத்தில் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் மகன் அல்ல ஜெயேந்திரர். ஜெயேந்திரரின் மகன் அல்ல விஜயேந்திரர். எந்த சங்கரமடத்திலும் மகன் பதவி ஏற்பதில்லை. திருமணம் செய்த பின்பு வாழ்க்கை வாழ்ந்த பின்பு சன்னியாசம் வாங்கிகொண்டு ஜீயர்களாக ஆகும் ஜீயர் மடங்களிலும் மகன்கள் பதவிக்கு வருவதில்லை. ஆனால் சங்கரமடமா என்று கேட்ட திமுகவின் நிலை கேவலத்திலும் கேவலமாக அசிங்கத்திலும் அசிங்கமாக பொதுக்குழுவா பொதுகக்கூசா என்று கேட்கும் வண்ணம் அசிங்கப்பட்டு கிடக்கிறது.

தமிழ் சினிமா

வேங்கை

ஹரியின் வழக்கமான அரிவாள் கலாச்சாரம் நிறைந்த அதிரடி படம் தான் 'வேங்கை'.

ஊரில் மிகப்பெரிய கையாக இருக்கும் ராஜ்கிரண் அவரது மகன் தனுஷ். அந்த ஊரில் இருக்கும் எம்.எல்.ஏ. பிரகாஷ்ராஜ் இந்த மூவருக்கும் இடையில் கதை பின்னப்பட்டிருக்கிறது.

துவக்க காட்சியில் ஹரியின் அதிரடியான துவக்க பாடலுடன் துவங்குகிறது. தன் மகன் தன்னைப்போல் ரவுடியாக ஆகவேண்டாம் என திருச்சிக்கு அனுப்ப திட்டமிட்டு அங்கு ரியல் எஸ்டேட் செய்யும் லிவிங்ஸ்டன் அலுவலகத்தில் பணியாற்ற அனுப்பப்படுகிறார் தனுஷ். திருச்சியில் பஸ்ஸில் தமன்னாவை பார்த்த மாத்திரத்தில் சின்ன வயதில் தன்னுடன் பள்ளியில் படித்த ராதிகா என கண்டுப்பிடித்து இருவருக்குமான நட்பு ஆரம்பித்து விடுகிறது. தமன்னா விலக இவர் விரட்ட என பல்வேறு குழப்பங்களுக்கிடையே இருவருக்கும் காதல் மலர்கிறது. ராஜ்கிரண் தயவில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் பிரகாஷ்ராஜ் மணல் கொள்ளையில் அதிகம் சம்பாதித்து அதிக சொத்து வாங்குகிறார். இதை தட்டிக்கேட்ட ராஜ்கிரணுடன் மோதல் துவங்குகிறது. ராஜ்கிரணுக்கு வலிக்கவேண்டும் என்பதற்காக திருச்சியில் இருக்கும் தனுஷை கொலை செய்ய ஆட்களை ஏவிவிடுகிறார் பிரகாஷ்ராஜ். ஆனால் அது தோல்வியில் முடிகிறது. இப்போது தனுஷும், பிரகாஷ்ராஜும் நேர் எதிரிகளாக ஒருவரையொருவர் கொல்ல சபதமெடுக்கிறார்கள். இதில் யார் ஜெயித்தார்கள் என்பது மீதிக்கதை.

னுஷுக்கு பெரியதாய் வேலையில்லை. மொத்தமாய் அருவாள் சைஸில் இருந்து கொண்டு, சடசடவென மரத்தில் ஏறி அருவாளை மரத்தின் மீது பாய்ச்சி நிற்பது நன்றாக இருந்தாலும், ஒரு அருவாளே அருவாளை தாங்குகிறதே என்று கவிதை படிக்க தோன்றுகிறது. காதல் காட்சிகளில் தனுஷ் தனியே தெரிகிறார். படத்தின் பலம் படம் வேகமாக விறுவிறுப்பாக செல்வதுதான். அதே அருவாள், டாடா சுமோ, வெள்ளைவேட்டி, வெள்ளை சட்டை என்று நாம் ஏற்கனவே பார்த்த விசயங்களாக இருந்தாலும் அலுப்புத்தட்டவில்லை. ஹரியின் ஹீரோக்களின் வழக்கமான அந்த புத்திசாலித்தனமான அணுகுமுறை தனுஷுக்கும் தரப்பட்டுள்ளது. அதை தனுஷ் நன்றாக செய்திருக்கிறார். தமன்னாவுக்கு ஒன்றும் பெரிய ரோல் இல்லை. நன்றாக நடித்திருக்கிறார். அழகாய் இருக்கிறார். ஆனால் பாடல் காட்சிகளை தவிர மற்ற காட்சிகளில் முகத்தில் ஏதோ ஒரு மென் சோகத்தை அப்பிக் கொண்டவாறு இருப்பது ஏன் என்று தெரியவில்லை. தமன்னாவை விட, அவருடன் வரும் தோழிகள் க்யூட்டாக இருக்கிறார்கள். தனுஷின் தங்கையாக வரும் அம்முகூட.

படத்தில் ஊர்வசி, சார்லி, பொன்னம்பலம், ஒய்.ஜி.மகேந்திரன், 'பரவை' முனியம்மா, ஜஸ்வர்யா என நிறைய நடிகர் பட்டாளம் தன் பங்குக்கு அவர்களின் வேலையை செய்திருக்கிறது. 'சிங்கம்' படத்தில் கொடுத்த கால்ஷீட்டின் நீட்சியோ என்று யோசிக்கும் அளவு அதே டயலாக், அதே பாடி லாங்குவேஜ், அதே வீராப்பு முதல் முறையா இந்தப் படத்துல போரடிக்கிறீங்க பிரகாஷ்ராஜ். ராஜ்கிரணும் நன்றாக நடித்திருக்கிறார் ஆனால் ஒரு அருமையான நடிகரை எவ்வளவு நாளுக்கு ஒரே கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பார்கள் என்று தெரியவில்லை. கொமெடியனாக கஞ்சா கருப்பு. யாராவது நல்ல கொமெடி ரைட்டர் இவருக்கு உடனடித் தேவை. சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், ஹாண்ட்பார் காமெடி எரிச்சல் மூட்டுகிறது. தெரு மாறி வந்து சைக்கிளை விடும் காட்சியில் மட்டும் தியேட்டரே சிரிப்பில் அதிர்ந்தது.

சில படங்களின் கதைக்களம் நடிக்கும் நடிகர்களை வைத்து தெரிந்த, அரைத்த மாவுக் கதையாகவேயிருந்தாலும் எடுபட்டுவிடும். ஆனால் சில நடிகர்களுக்கு பெரிதாய் எடுபடாது. அந்த வகைதான் தனுஷுக்கு இந்தப் படம். விக்ரம், சூர்யாவை வைத்து திரைக்கதையெழுதும் போது இருக்கும் விறுவிறுப்பு மற்ற நடிகர்களுக்கு எழுதும் போது ஹரிக்கு குறைந்து போவது என்ன காரணமோ?. வில்லனுக்கும், ஹீரோவுக்குமான காட்சிகள் எல்லாமே ஏற்கனவே பார்த்த ஃபீலீங் வருவதால் போரடிக்கிறது.இடைவேளைக்கு முன்னால் வரும் சேஸிங் காட்சியும், சண்டைக் காட்சியை கோரியோகிராப் செய்த விதமும் தீயாய் வேலை செய்திருக்கிறார்கள். 'சிங்க'த்தில் ஆகட்டும், 'சாமி'யில் ஆகட்டும் என்ன தான் லாஜிக் இல்லாவிட்டாலும் யோசிக்க விடாதபடி அடுத்தடுத்து வில்லனுக்கு ஹீரோவுக்குமான கன்பர்ண்டேஷன் அடிதூள் பரத்தும். இதில் பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை வில்லன் செல்போனை தரையிலடித்து உடைப்பதை தவிர வேறேதும் பெரிதாய் இல்லை. படத்தில் ஆரம்பத்தில் வரும் காதல் காட்சிகள் கொஞ்சம் இண்ட்ரஸ்டிங்.

ஆனால் அதேநேரத்தில் படத்தில் அடியாட்கள் என்ற பெயரில் பல பேருக்கு வேலை, சம்பளம், பேட்டா கொடுத்து மெயிண்ட்டெயின் செய்தது அரிவாள் செய்யும் கலைஞர்கள், அரிவாள் தீட்டும் கலைஞர்களுக்கு மறுவாழ்வு அளித்தது என ஹரியை பாராட்டும் விஷயங்களும் உண்டு. மசாலாப் படத்துக்கு இசையமைக்க தேவிஸ்ரீ பிரசாத்-ஐ விட்டால் பொருத்தமான ஆள் வேறு யார் படத்திற்கு பெரிய பலம் சூப்பர் ஹிட் பாடல்கள். 'என்ன சொல்லப் போறே', 'புடிக்கலை', 'ஒரே ஒரு வார்த்தைக்காக' என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் மனதைக் கவர்கின்றன. குறிப்பாக கார்த்திக்கின் குரலில் 'காலங்காத்தால' பாடல் பலரின் விருப்பப் பாடலாக அமைந்ததில் சந்தேகமில்லை. வெற்றியின் கேமராவும், வி.டி.விஜயனின் எடிட்டிங்கும் படத்தின் வேகத்திற்கு பக்கபலம். தன்னை ஒரு கமர்சியல் டைரக்டர் என்று அறிவித்துக்கொண்ட ஹரியிடம் உலகச் சினிமா எதிர்பார்ப்பது நம் தவறு. சொன்னபடி கமர்சியல் படம் கொடுத்திருக்கிறாரா என்று பார்த்தால், சொல்லி அடித்திருக்கிறார்.

நன்றி விடுப்பு



தேநீர் விடுதி
பந்தல் கான்ட்ராக்டராக வரும் ஹீரோ, பெட்டிக்கடை வைத்திருக்கும் பெண் மீது கொள்ளும் காதல் எப்படி கை கூடுகிறது என்பது தான் கதை.

'பூ' படத்தின் பாடல்களுக்காகப் பேசப்பட்டவர் அதன் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன். அதன் பின்னர் 'களவாணி', 'விருந்தாளி', 'நெல்லு' ஆகிய படங்களுக்கும் இசையமைத்துவிட்டார். இவரே தயாரித்து, இயக்கியுள்ள படம்தான் இது.

கொடுமுடி சுரேஷ், ஆதித் சகோதரர்கள், கிராமத்து விசேஷங்களுக்கு பந்தல் போடும் தொழில் செய்பவர்கள். அண்ணன் சுரேஷுக்கு அத்தை மகளை திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. தம்பிக்குப் பிறகுதான் அண்ணனுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று ஜோதிடர் கொளுத்திப்போட, தம்பிக்கு பெண் தேட ஆரம்பிக்கிறார் அண்ணன். அதே ஊரில் இருக்கும் சார்பதிவாளர் பிரபாகர், கடமை தவறாத அதிகாரி. அவரால் பாதிக்கப்படும் ஒருவர், அவரை அவமானப்படுத்துவதற்காக, அவரது மகள் பருவத்துக்கு வந்து விட்டதாகப் பொய் சொல்லி, பந்தல் போடச் சொல்கிறார். இரவோடு இரவாக பந்தல் போட்டு திரும்புகிறார்கள் சகோதரர்கள். இதனால் கொதித்தெழும் சார்பதிவாளரின் மகள் ரேஷ்மி, ஆதித்திடம் மல்லுக்கட்டுகிறார். கடைசியில் அதுவே காதலாகிறது.

குடிப்பவர்களைக் கண்டாலே பிடிக்காத சார்பதிவாளருக்கு குடிகார மருமகனை எப்படி பிடிக்கும் அமெரிக்க மாப்பிள்ளைக்கு மகளை கட்டி வைக்க முயற்சிக்கிறார். அப்பாவின் திட்டம் ஜெயித்ததா மகளின் காதல் ஜெயித்ததா என்பது மீதி கதை. ஆதித் தாடி வைத்த ஜெய்யின் காப்பியாக இருக்கிறார். முகபாவம், மேனரிஸத்திலும் அவரையே ஞாபகப்படுத்துகிறார். சமீபகாலமாக இதே மாதிரியான கிராமத்து தெனாவட்டு ஹீரோக்களை நிறையவே பார்த்து விட்டதால், ஆதித் கேரக்டர் இம்ப்ரஸ் செய்யவில்லை. ஹீரோயின் ரேஷ்மி அம்சமான அழகு என சொல்ல முடியாவிட்டாலும் அடக்கமான குத்து விளக்கு மாதிரி அழகாக வந்து போகிறார். ரேஷ்மியிடம், என்ன ஒரே மைனஸ் என்றால் அவரிடம் காதல் உணர்வுகள், சிரிப்பு இவை எல்லாம் ஸ்விட்ச் போட்ட மாதிரி வந்து போகின்றன. அதாவது டைரக்டர் ஓக்கே சொன்னதும் டக் என்று சிரிப்பதும், ஸ்டார் கேமரா ஆக்ஷன் என்றதும் உடனே காதல்கொள்வதும் லேசான செயற்கை இழை தட்டும் நடிப்பு.

சார்பதிவாளர் நாச்சியப்ப செட்டியாரின் குடும்பத்து உறவுகள் அனைவருமே நிஜமான செட்டி முகங்களாக பார்த்து நடிக்க வைத்திருப்பதற்கு முதல் பாராட்டு. அதிலும் நாச்சியப்ப செட்டியாரின் பண்பட்ட நடிப்பை மறக்க முடியவில்லை. இத்தனைக்கும் அவர் மிக இளம் வயதானவர். டிரம்ஸ் வாசிக்க வாய்ப்பு கேட்டு வந்த பிரபாகரனை அப்படியே பிடித்து நடிக்க வைத்துவிட்டாராம் குமரன். அவசரத்தில் கட்டிங்கை அடித்துவிட்டு முதல் முறையாக போதையில் புலம்புவது. நிலத்தை முறைகேடாக பதிவு செய்யச் சொல்லிப் பணத்துடன் வரும் நபரிடம் முறைத்து பேசுவது. தலையைக் குனிந்தபடியே தனது மகளால் ஏற்பட்ட அவமானத்தை ஏற்றுக்கொள்வது. மகளுக்காக ஹீரோ அம்மாவின் காலில் விழுவது என்று இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்திலுமே ஸ்கோர் செய்திருக்கிறார்.

ஹீரோவுக்கு அண்ணனாக வரும் கொடுமுடி சுரேஷ், ரசிகர்களை சிரிக்க வைக்க ரொம்பவே முயற்சி செய்திருக்கிறார். சில இடங்களில் இவருடைய உடல்மொழியை பார்த்து சிரிப்பு வந்தாலும், போகப் போக அதுகூட அலுப்பு தட்டுகிறது. ஹீரோயினின் அண்ணன்களாக நடித்திருக்கும் இருவரில் குணாவின் சீரியஸ் பார்வைகூட நம்மை சிரிக்க வைக்கிறது. இவர்களைத் தவிர படத்தில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் நிற்க மறுக்கிறது. ஹீரோயினை படம் முழுக்க கண்ணியமாக காண்பித்ததற்காகவே இயக்குநரை பாராட்டலாம். ஹீரோவுக்கு பஞ்ச் டயலாக், ஓப்பனிங் ஃபைட், ஃபினிஷிங் ஃபைட் எதுவும் கொடுக்காமல் இயல்பாய் வந்து போக வைத்திருப்பது திருப்தி அளிக்கின்றது.மகள் காதலிக்கிறாள் என்பது தெரிந்ததும், தந்தை மண்ணெண்ணெய் கேனை தூக்கிக்கொண்டு ஓட, அவர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக எல்லோரும் பின்தொடர, அவரோ காதலன் போட்ட பந்தலை எரிக்கிறார்.

சார்பதிவாளர் அலுவலகத்தில் தன்னை அறியாமலேயே தன் மகளுக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்துவிட்ட சோகத்தில், கதவைப்பூட்டி தாழ்ப்பாள் போட்டுக்கொள்ள, எல்லோரும் பதட்டத்துடன் கதவைத் தட்ட, அதுவரை குடிக்காதவர், இப்போது குடிக்கத் தொடங்கியிருப்பார். இப்படி சில திடீர் திருப்ப காமெடிகள் படத்தை அவ்வப்போது சுவாரஸ்யப்படுத்துகிறது. ஆனால் பெண் வயதுக்கு வரும் விஷயத்தை வைத்து காமெடி செய்வது ரொம்ப ஓவர். குடும்பத்தின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் காதலனுடன் ஓடிப்போவதிலும், பின்பு காரணம் அறிந்துகொள்ளாமலேயே வீட்டுக்கு திரும்புவதும், பிறகு அப்பாவின் திட்டம் அறிந்து மனம் மாறி காதலுடன் செல்வதிலுமாக, ஹீரோயின் ஆடும் கபடி ஆட்டத்தில் அழுத்தம் மிஸ்ஸிங். வில்லன் செயலிலும் சுவாரஸ்யம் இல்லை. படத்தோட ஓப்பனிங் சீன்ல ஹீரோவோட அம்மா உப்பு பெறாத விஷயத்துக்காக தான் செத்துப்போனது போல நடிப்பதும், ஊரே திரண்டு வந்து நின்ற பிறகு சர்வசாதாரனமாக எழுந்து "பார்த்தியா? நான் செத்தா யாரும் வர மாட்டாங்கன்னு சொன்னியே" இத்தனை பேர் வந்திருக்காங்களே என கேட்பது படு மொக்கை. சார்பதிவாளர் மகள் ஏன் பெட்டிக்கடை நடத்தணும் பெட்டிக்கடை நடத்தும் பெண்ணுக்கு அமெரிக்கா மாப்பிள்ளையா அமெரிக்க மாப்பிள்ளையாக நடிக்க ஒரு நல்ல துணை நடிகர் கிடைக்கலையா பொண்ணு வேணாம்னு போன மாப்பிள்ளை திரும்ப ஏன் வர்றாரு இப்படியே கேட்டுட்டே போனா நிறைய கேட்கலாம்.

படத்துல அழகான ரெண்டு விஷயம்: ஒன்னு படத்தோட டைட்டில் டிசைன். டீ நுரை சூப்பர். அப்புறம் ரேஷ்மியோட கலர்ஃபுல் காஸ்ட்யூம்ஸ். ஒளிப்பதிவாளர் மணவாளன் இதுல கொஞ்சம் மின்னுகிறார். தான் ஒரு இசையமைப்பாளர் என்பதால் படத்தில் பாடல்களை திணிக்காமல் தேவைப்பட்ட இடங்களில் மட்டும் அளவான பாடல்களை கொடுத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. பாடல் ஆசிரியர் முருகன் மந்திரம் அவர்கள் எழுதிய மூன்று பாடல்களில் இரண்டு பாடல்கள் சூப்பர் ஹிட். 'ஜில்லென சிரிப்பாளோ, நெஞ்சுக்குள் இனிப்பாளோ' செம மெலோடி. பாடல் வரிகளுக்கும், மென்மையான இசைக்கும் ஒரு சபாஷ் அதே போல் 'அட என்னமோ ஏதோ பண்ணுது புள்ளே...' பாடல் வரிகளும் மனசுக்குள் வந்து என்னமோ ஏதோ பண்ணுது.

காதல் கதைதான் என்றாலும் ஒரு அடிதடி இல்லை வெட்டுக்குத்து இல்லை ரத்தம் சிந்தவில்லை அரிவாள் இல்லை என்பதெல்லாம் இந்தப் படத்தை ஒருமுறை சிரித்து ரசிக்கலாம். ஒரு இசையமைப்பாளராக குறுகிய காலத்தில் வெற்றி பெற்ற எஸ்.எஸ்.குமரன், ஒரு இயக்குநராக வெற்றி பெற இன்னும் சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது.

நன்றி விடுப்பு