தைத்திருநாள் வருகையைக்
கொண்டாடு முகமாக, பரமற்றா நகரில் St Patricks cathedral வளாகத்தில்,
பரமற்றாப் பொங்கல், தமிழ் மக்களுடன் பிற
மக்களும் கலந்து கொள்ள சிறப்பாகக் நடைபெற்றது.
கடந்த 21 ம் திகதி சனிக்கிழமை (யனவரி) முற்பகல் 11 மணிக்கு இறை
வணக்கத்துடன் ஆரம்பித்து, பல்வேறு
கலைநிகழ்வுகளையும் அரங்கேற்றி, வருகை தந்திருந்த அனைவருக்கும் பொங்கல்,
சிற்றுண்டிகள் வழங்கியது மட்டுமன்றி பிற்பகல் 2 மணியளவில் சுவையான சைவ மதிய உணவும்
பரிமாறப்பட்டு நிகழ்வு இனிது நிறைவு பெற்றது.
பரமற்றா பொங்கல் 2023 பரமபுத்திரன்
எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 49 ஏற்றமும், இறக்கமும் ஏமாற்றமும் நிரம்பிய ஊடகத்துறை ! நனவிடை தோய்தற் குறிப்புகள் !! முருகபூபதி
வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில், பலரதும் எழுத்துப் பிரதிகளை படித்து, எழுத்துப் பிழைகளை திருத்தி, ஒப்புநோக்கி, செம்மைப்படுத்தியிருக்கின்றேன்.
இந்தப்பணி, நான் புலம்பெயர்ந்து வந்த பின்னரும் முற்றுப்பெறாமல்
தொடருகின்றது. வீரகேசரியில் எமது அலுலக நிருபர்கள்
மற்றும் வெளியூர் நிருபர்கள் எழுதும் பிரதிகளின் உருவ அமைப்பு இன்னமும் எனது மனக்கண்களில்
வாழ்கிறது. அவர்களில் பலர் இன்று இல்லை.
அத்தகையோர் பற்றி அவ்வப்போது நினைவூட்டி எழுதிவருகின்றேன். அவர்கள் எனது வர்க்கத்தை, அதாவது எழுத்தாளர் வர்க்கத்தை
சேர்தவர்கள். ஆயினும், அவர்களுக்கு ஊதியம் வழங்கிய நிறுவனத்தின் தலைவர்கள்
அவர்களை உரியமுறையில் கவனித்தார்களா..? என்பதில் எனக்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கின்றன.
இலங்கையில் தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களில் காலம் பூராவும் உழைத்த எழுத்துக்கூலிகள் அவர்கள். பலருக்கு ஏணிப்படிகளாக வாழ்ந்தவர்கள். அவர்களின் ஊடக எழுத்துக்களினால், உயர்ந்த அரசியல்வாதிகளும், தாழ்ந்த அரசியல்வாதிகளும் பலர் இருக்கின்றனர்.
ஆட்சி மாற்றத்திற்கும் உதவிய அந்த ஊடகவியலாளர்கள் , தத்தமது
பொருளாதார மாற்றம் குறித்து என்றைக்கும் சிந்திக்கவில்லை.
முடிந்தவரையில் ஓடினார்கள். முடியாதவிடத்து நாட்டை விட்டு ஓடினார்கள். அவர்களில் நானும் ஒருவன்.
காணாமல்போன ஊடகவியலாளர்கள், அச்சுறுத்தப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்கள்
தொடர்பாக நீண்ட பட்டியலும் இருக்கிறது.
தென்னிலங்கையிலும் வடக்கிலும் கிழக்கிலும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள்
பற்றி அறிந்திருப்பீர்கள். அத்துடன் புலம்பெயர்ந்து சென்று, புகலிடம் பெற்ற நாடுகளிலிருந்து
தமக்குத் தெரிந்த ஒரே தொழிலான பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களையும்,
மீண்டும் தாயகம் திரும்பி, அதே தொழிலை மேற்கொள்பவர்கள் பற்றியும் அறிந்திருப்பீர்கள்.
1987 ஆம் ஆண்டு நான் அவுஸ்திரேலியா மெல்பனுக்கு வந்த தொடக்க காலத்தில் இலங்கையில் வீரகேசரி, தினகரன், ஆகிய தமிழ்த்தேசிய நாளேடுகளுக்கும் புகலிடத்தில் பாரிஸ் ஈழநாடு, தமிழன், ஈழகேசரி முதலானவற்றுக்கும் எழுதிக்கொண்டிருந்தேன்.
படித்தோம் சொல்கின்றோம்: வெளிநாட்டுத் தமிழ்க் குழந்தையும் பெற்றவர்களின் தாயக வேரின் சால்பும் சிந்துவின் தைப்பொங்கல் – முருகபூபதி
தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு ஏற்கனவே பல திரைப்படப் பாடல்களும், குழந்தை இலக்கியப் பாடல்களும், கதைகளும் வெளிவந்துள்ளன. இந்தப் பின்னணியில், புகலிட தமிழ்ச் சூழலில் தாயும் மகளும் இணைந்து குழந்தைகளுக்கான இலக்கிய நூலை படைப்பது என்பது அதிசயமான செயல்தான்.
கனடாவில் வதியும் எழுத்தாளர்
ஶ்ரீரஞ்சனி விஜேந்திராவும் அவரது மகள் சிவகாமியும் இணைந்து தமிழிலும் ஆங்கிலத்திலும்
படைத்திருக்கும் சிந்துவின் தைப்பொங்கல்
நூலுக்கு வே. ஜீவனந்தன் பொருத்தமான ஓவியங்களை வரைந்திருக்கிறார். அதனால், புகலிடத்தில்
மட்டுமல்ல இலங்கையில் வாழும் தமிழ்க்குழந்தைகளும் இதனை விரும்பிப் படிப்பார்கள்.
இந்நூல் தற்போது பிரெஞ்சு மொழியிலும் பெயர்க்கப்பட்டிருப்பது
குறிப்பிடத்தகுந்தது.
இலங்கையில் பல சர்வதேசப்
பாடசாலைகளில் எமது தமிழ்க் குழந்தைகள் ஆங்கில மொழி மூலமும் கற்கிறார்கள்.
ஶ்ரீரஞ்சனி அண்மையில் மெல்பனுக்கு
வந்த சமயத்தில் இந்த நூலையும் மீராவின் தம்பி மற்றும் வேறு சில கதைகள் என்ற நூலையும்
எனக்குத் தந்தபோது, இவற்றையே எனது பேத்தி ஆண்யாவுக்கு கிறிஸ்மஸ் - புத்தாண்டு பரிசாகக் கொடுத்தேன்.
ஆர்வமுடன் வாங்கிக்கொண்ட
பேத்தி, முதலில் பக்கங்களைப் புரட்டி படங்களைத்தான் பார்த்தாள். இதிலிருந்து குழந்தைகளின்
முதல் கவனம் என்ன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இதனால்தான் குழந்தை இலக்கிய நூல்கள்
வண்ணப் படங்களுடன் வெளியாவதன் சூட்சுமத்தை நாம் புரிந்துகொள்கின்றோம்.
நான் வதியும் அவுஸ்திரேலியாவில்
தற்போது கோடை காலம். இக்காலத்தில்தான் எமது தைத்திருநாளும் வருகிறது.
நன்றி என்ற மகத்துவமான
சொல்லுக்கு வள்ளுவர் – ஔவையார் முதல் பல முன்னோர்கள் பல விளக்கங்களை தந்துள்ளார்கள். தைப்பொங்கலும் ஒரு வகையில் நன்றி செலுத்தும் திருநாளாக
– பண்டிகையாக குறிப்பாக எமது தமிழ்க் குழந்தைகளுக்கு
அறியத்தரப்படுகிறது.
பயிர்களின் வளர்ச்சிக்கு
உதவும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் விழாவாக கொண்டாடப்படும்போது, அதனை வீட்டு முற்றத்தில் அல்லது வயல் வெளியில் எம்மவர்கள்
கூடிக் குதூகளித்து நடத்துகிறார்கள்.
அவுஸ்திரேலியாவில் இந்த நிகழ்வு கோடைப்பருவத்தில் வருகிறது. அதாவது சுட்டெரிக்கும் வெய்யில் காலத்தில் Fire Band இருப்பதனால், எம்மவர்கள் தங்கள் வீட்டு முற்றத்தில் அடுப்பெரித்து பொங்கல் வைப்பதற்கு தயங்குவார்கள். அவ்வாறு செய்து ஏதும் விபரீதம் நடந்துவிட்டால், பிறகு பொலிஸ் நிலையத்தில்தான் பொங்கல் சாப்பிட வேண்டிவரும்.
கே.எஸ். சுதாகரின் 'பால்வண்ணம்' சிறுகதைத் தொகுப்பு - ஒரு கண்ணோட்டம் - ரஞ்ஜனி சுப்ரமணியம் –
'நான் எழுதும் கதைகளை உடனே பிரசுரிப்பதில்லை. என்னுடனே
இருந்து கொள்ளும் அந்தக் கதைகளை ஒரு சிற்பி செதுக்குவது போல் செதுக்குகிறேன்' என்று எழுத்தாளர் கே.எஸ். சுதாகர் சிறுகதைத் தொகுப்பொன்றில் கூறியிருக்கிறார்.
கருவொன்றை தாய் சுமந்து குழந்தையாக உருவாவதற்கும், கருவொன்றை கதாசிரியர் சுமந்து கதையாவதற்கும் அதிக வித்தியாசங்கள் இருக்காதென இவ்வசனங்கள் நிரூபிக்கின்றன.
படைப்பாளியின் இயல்பான திறன், அழகியல் ரசனை என்பவற்றிற்கு ஏற்ப படைப்பின் தரம் பலவாறாக நிர்ணயிக்கப் படுகின்றது.படைத்த பின்னும் அக்குழந்தை எதிர்காலத்தில் நற்பெயர் பெற வேண்டுமே என்ற எதிர்பார்ப்பும் இரண்டுக்குமே பொதுவானது.
'பால்வண்ணம்' சிறுகதைத் தொகுப்பும் சிறப்பான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பது நியாயமே. தலைப்புக்குரிய முதலாவது சிறுகதையாகிய 'பால்வண்ணம்' , நுட்பமான புள்ளிகளால் வரையப்பட்ட வாழ்க்கைக் கோலங்களில், மனிதமனதின் உணர்வுச் சிதறல்களை அழகுறக் கூறுகிறது. இத்தொகுப்பு பற்றி எழுதுவதற்குரிய முக்கிய உந்துசக்தியாகவும் அதுவே அமைந்தது.
பொய்மான் 🦌 மெய்மை தேடும் ஒரு பயணம் 🏡 திரை அனுபவம் 🎬கானா பிரபா
ஈழத்தில் இருந்து படகு வழி ஏதிலிகளாக நம் உறவுகள்
அவுஸ்திரேலியாவை எட்டும் செய்திகள் ஊடகப் பரப்பிலும், அரசியல் அரங்கிலும் பரபரப்பாகப் பேசப்பட்ட நேரமது.
எங்க வீட்டுப் பிள்ளைதான் மக்கள் திலகம் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
இடம்கொண்டார். இதயக் கனியானார். வாழவைத்த தெய்வமானார்.கலங்கரை விள க்கமானார்.எங்க வீட்டுப்பிள்ளை ஆகி என்றுமே மக்கள் திலகமாக எம் ஜி ஆர் விளங்கு கிறார்.
அவர்கடந்து வந்த பாதை கல்லும், முள்ளும், காட்டாறுகளு
நல்ல நிலையில் வாழ்ந்த குடும்பம் நலிவடைந்து போனதால்
நாட்டை விட்டு நாடு வரும் நிலையங்கு தோன்றியது.தந்தையை இளம் வயதில் பறி கொடுத்து விட்டு தாயு டனும் சகோதரருடனும் ஈழத்தைவிட்டு இந்தியா வந்தனர் எம் ஜி ஆர் குடும்பத்தார்.
பசியைப் போக்குவதே பெரும்பாடாக இருந்தமையால் படிப்பு என்பதைநினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்றாகி இருந்தது.பாலகனான எம் ஜி ஆர் மூன்றாம் வகுப்புடன் பள்ளியைவிட்டு நாடகத்துறைக்குள் புகுந்துவிடும் நிலை உருவானது.வருமானத்துக்கு நடிப்பே வழிகாட்டியது.
எழுத்தாளர் அனுராத ரமணனின் தாத்தா குடிலன் ஆர். பாலசுப்பிரமணியன் எம் ஜி ஆரின் ஆசிரியராக இருந்தார். இவர் பிற்காலத்தில் குணசித்திர நடிகரானார்.
நாடகத்தில் இருந்து படிப்படியாக திரைத்துறைக்குள் எம் ஜி ஆர் வந்து சேர்ந்தார்.1945 ல் ஜுபிடர் நிறுவனத்தார் எம்ஜிஆரை தமது படங்களான ராஜகுமாரி, அபிமன்யு,
1947 - 1948 காலப் பகுதியில் எம்ஜிஆருக்குக் கிடைத்த மாதச் சம்பளம் எவ்வளவு தெரி யுமா ரூ350 ஆகும்.
இக்காலகட்டமானது எம் ஜி ஆரின் முதல் காலகட்டம் எனக் கொள்ளலாம். சாதாரண எம் ஜிஆராக அவர் இருந்தாலும் அவருக்குள்ளே- தான் முனேற வேண்டும் என்னும் வேகமே காணப்பட்டது எனலாம். அவர் யாரையும் நோகடிக்கமாட்டார் .முரண்டு பிடிக்க மாட்டார். மரியாதை கொடுப்பார்.சற்றுக் கூச்சச் சுபாபம் உள்ளவராகவும் காணப்பட் டார்.காந்தியச் சிந்தனை அவர்மனத்தில் அக்காலத்தில் பதிந்து காணப்பட்டது.
அவரிடம் கடவுள் நம்பிக்கையிருந்தது.உருத்திராட்
கல்யாணியின் கணவன் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்
தமிழ் திரையுலகில் பிரபலமாக விளங்கிய
தயாரிப்பாளர்,டைரக்டர்களில் குறிப்பிடக்கூடியவர்களில் ஒருவர் பக்க்ஷிராஜா பிலிம்ஸ் அதிபர் எஸ் எம் ஸ்ரீராமுலு நாயுடு.சென்ற நூற்றாண்டில் இவர் தயாரித்து இயக்கிய சிவகவி,ஆரியமாலா,ஜெகதலப்ரதாபன்,
தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.அதுமட்டுமன்றி இப் படம் ஹிந்தி,தெலுங்கு,கன்னடம்,மலையா
மெல்பேர்ண் வெதர் – குறுநாவல்
அதிகாரம் 4 : தவறுகள் வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன
கணவனும் மனைவியும் தங்கள் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யாமல் இருக்கும்போது பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. குடும்பத்தில் இருவரும் வேலை செய்யும் போது, குடும்பத்தை கொண்டு நடத்துவதில் சிக்கல் ஏற்படுகின்றது, அடுத்தவருடன் தம்மை, தம் பிள்ளைகளை ஒப்பிடுதல் சிக்கலுக்கு ஆரம்பம்.
மறுநாள் தன் பதின்ம வயதுப்
படங்கள் கொண்ட அல்பம் ஒன்றை நீட்டி நந்தனைப் பார்க்கச் சொன்னாள். அவன் அதைப்
பார்த்ததும் கிறங்கிப் போனான்.
நந்தனும் புங்கும் சோடியாக வேலை செய்யத் தொடங்கினார்கள். அங்கு வேலை செய்பவர்கள் எல்லாரும் அவர்களை ’வேர்க்கிங் பாற்னேஸ்’ என்று சொல்லிக் கொள்வார்கள். அப்படி வேலை செய்யாத சிலவேளைகளில் ’எங்கே உனது பாற்னர்’ என்று நந்தனைச் சிலர் கேட்பதுண்டு.
வெளிச்சம் கழகத்தாரின் முதல் நிகழ்வு
மனிதனை வாழ்வாங்கு வாழ்வதை மனிதருக்கு உரைக எழுதப்பட்டது என்பதை விளக்கி கஜறாகோ கோவில் சிற்பங்கள் அவற்றை சிலையாக வடித்தை மனித வாழ்வில் ஆண்-பெண் தாம்பத்தியத்தை மக்கள் மனதில் வலியுறுத்தும் நோக்குடன் படைக்கப் பட்டதாக விளக்கினார் .
திருநந்தகுமார் இந்திய பாரம்பரிய கல்வி முறை எவ்வாறு குரு சிஷ்ய
ன் பாரம்பரியமாக வளர்ந்தது என்பதை விளக்கினார் .தொடர்ந்து இந்துமத சிந்தனையில் பரிணாம சிந்தனையை விஷ்ணுவின் தசாவதாரமாக கூறப்பட்டுள்தையும் அதே கருத்தை தொல்காப்பியத்திலும் காண முடிகிறது என விளக்கினார்
க பிரபா இந்திய அறிவியல் பற்றி விளக்கமாக எடுத்து ஆராய்தார். ஆச்சாரியார் கணாதர் கி மு800 இல் வாழ்ந்தவர் இவரை இன்றய அறிஞர் அணு பற்றிய அறிவின் மூல கர்தாவாக கருதுவதாக கூறி வரலாற்றாசிரியர் T .N . Colebrook " Compared to the scientists of Europe,Kanad and other Indian scientists were global mastered of this field. என கூறியுள்ளதை வியந்து கூறினார்.
இறுதியாக சௌந்தரி கணேசன் நடராச மூர்த்தியின் ஆனந்த தாண்டவம் எவ்வாறு திருமூலர் திருமந்திரம் விளக்கும் அணு பற்றிய சிந்தனையை விளக்குகிறது என கூறி திருமந்திர பாடல்கள் சிலவற்றை எடுத்து விளக்கி அவை அணு பற்றிய ஆழமான கருத்தை கொண்டிருப்பதை எடுத்துவிளகினார். இன்றைய விஞ்ஞான வளர்ச்சி இந்து மத சிந்தனையாக எமது பாரம்பரியத்தில் வழர்ந்துள்ளதை கூறினிர்
வெளிச்சம் கழகத்தாரின் முதல் நிகழ்வு தேனீர் விருந்துடன் இனிதே நிறைவேறியது.