நாடி வருகிறது ஆடி மாதம் !


மகாதேவ ஐயர் ஜெ
யராமசர்மா     மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்                              

மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

     பனிரெண்டு மாதங்களும் வருகின்றன. போகின்றன. சில மாதங்களை சிறப்பென்றும் சிலவற்றை ஒதுக்கிப் பார்ப்பதும் இயல்பாகி விட்டது. ஆனால் அப்படி ஒதுக்க வேண்டியது  - மனத்தில் எழுகின்ற ஒருவித மயக்கம் என்றே எண்ண வேண்டி


இருக்கிறது. எல்லா மாதங்
 களும் ஏதோ ஒரு விதத்தில் சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டு தான் வருகின்றன.மார்கழியைப் பீடை பிடித்த மாதம் என்கிறோம். புரட் டாசியையும் ஒரு பக்கம் தள்ளியே வைக்கிறோம் .ஆடியை மங்கலம் அற்ற மாதம் என்கிறோம். பங்குனியைசித்திரையைதையைவணியைக் கொண்டாடி வரவேற்கிறோம்.இப்படி நோக்குவது எங்களிடம் இயல்பாகி விட்ட நிலையில் மங்கலம் இல்லா மாதமாக எடுத்துக் கொள்ளும் ஆடி எங்களை நாடி வருகிறது ! வருகின்ற ஆடியை விட்டு விட்டு விலகத்தான் எங்களால் முடியுமா முடியவே முடியாது ! நாடிவரும் ஆடி பற்றி பார்ப்போமா வாருங்கள் !

    ஆடி என்றவுடன் - ஆடிச்செவ்வாய்ஆடி வெள்ளிஆடிப்பூரம்ஆடிக்கார்த்திகைஆடித்தபசுஆடிப்பெருக்குஆடி அமாவாசைஆடி பெளர்ணமி என்று இறை வழிபாட்டுடன் இணைந்ததாக ஆடி மாதம் முழுவதும் அமைந்திருப்பதை நாமனைவரும் மனமிருத்த வேண்டியது அவசியம். ஆடி மாதத்தை அம்மனின் மாதம் என்பதையும் அகமிருத்தல் மிகவும் அவசியமேயாகும்.அப்படி இருக்க ஆடியை நாடாமல் ஒதுக்கிப் பார்ப்பது முறையா ?

 


 
மார்கழியில் திருவெம்பாவை வருகிறது. ஆண்டாளின் திருப்பாவையும் மணி வாசகரின் திருவெம்பாவையும் மார்கழியில் கோவில்களில் பக்தி சிரத்தையுடன் பாடப்படுகிறது. வைணவர்களும் சைவர்களும் கொண்டாடும் மாதமாய் மார்கழி இருக்கிறது. மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணனே சொல்லுவதுதையும்  கருத்திருத்த வேண்டும். புரட்டாசியில் நவராத்திரி வருகிறது. கலைகளைப் போற்றும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.சமயமும் கலைகளும் சங்கமிக்கும் மாதமாய் புரட்டாசி விளங்குகிறது.ஆடி,புரட்டாசிமார்கழி இறைவழிபாட்டுக்குரிய மாதங்களாகும். அப்படி என்றால் மற்றைய மாதங்கள் இறை வழிபாட்டுக்கு ஏற்றன அல்லவா என்று வினா எழுகிறதல்லவா ஆடிபுரட்டாசி மார்கழி மாதங்களில் மங்கலமான நிகழ்வுகளான - வீடு குடுபுகுதல்திருமணம்திருமண நிச்சயார்த்தம்காது குத்தல்எதையும் செய்வதில்லை. காரணம் - இம்மாதங்கள் தேவர்களுக்கு உரிய மாதங்கள்.மனிதர்களுக்கும் அவர்களின் இன்பங் களுக்கும் உரிய மாதங்கள் அல்ல என்பதுதான் காரணம்.

எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 50 தொண்டமான் வாரிசு பட்டத்தை துறந்த வழித்தோன்றல்கள் ! கி.ரா.வின் கரிசல் மண்ணில் பெற்ற அனுபவம் !! முருகபூபதினது எழுத்தும் வாழ்க்கையும் என்ற இந்தத் தொடர், கடந்த 2020 ஆம் ஆண்டு இதே ஜூலை மாதம் எனது பிறந்த ( 13 ஆம் திகதி ) தினத்தின்போது தொடங்கியது.

வாராந்தம் இதனை எழுதிவருகின்றேன். வருடத்தில் 52 வாரங்கள். அதனால்,  இந்த அங்கம் 52 ஆவதாக வந்திருக்கவேண்டியது.

இடையில் என்ன சிக்கல் வந்தது என்பது தெரியவில்லை. நாட்களும் உருண்டோடிவிட்டன.  இம்மாதம்  13 ஆம் திகதி அதிகாலையே  என்னை துயில் எழுப்பிய வெளிநாட்டு நண்பர்கள் – உறவினர்கள்  தொடக்கிவைத்த வாழ்த்து அலைப்பறை ஓய்வதற்கு இரண்டு நாட்கள் சென்றன.

அதற்கு முன்னர் இலக்கிய நண்பர்கள்  மெல்பனிலிருந்து நடேசனும் கன்பராவிலிருந்து பிரம்மேந்திரனும் இணைந்து நடத்திய  “நம்மவர் பேசுகிறார்  “ அரங்கிலும் என்னை இழுத்துவிட்டு வேடிக்கை காண்பித்தார்கள்.

அந்த அரங்கில் இணைந்து வாழ்த்தியவர்களுக்கும் நேரிலும்
தொலைபேசி – மின்னஞ்சல் வாயிலாகவும், எனது மனைவி மாலதியின் முகநூல் கணக்கின் ஊடாகவும் உலகெங்குமிருந்தும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கும்  எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு இந்த ஐம்பதாவது அங்கத்திற்குள் வருகின்றேன்.

நம்மவர் பேசுகிறார் அரங்கில் எனது நீண்ட கால நண்பரும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் தற்பொழுது யாழ். ஈழநாடு பத்திரிகை மற்றும் டான் தொலைக்காட்சி குழுமத்தின் நிருவாக இயக்குநருமான குகநாதன் உரையாற்றுகையில் என்னை ஒரு பத்திரிகையாளனாகவே நிலைநிறுத்திப்பார்த்தார்.  அத்துடன் இலக்கியவாதியாக மல்லிகையில் சிறுகதை எழுத ஆரம்பித்து,    அதே காலப்பகுதியில் பத்திரிகையாளனாகவும்  பயணித்த கதையையும் அவர் சொன்னார்.

இரண்டு தோணிகளில் பயணித்தால் என்னவாகும் என்பது தெரிந்ததுதான்.  அதனால், இரண்டு தோணிகளையும்  ஒன்றாக பிணைத்துத்தான் நான் எனது எழுத்துலகப்பயணத்தை தொடருகின்றேன்.

ஈழத்தில் இருந்து வடைப் பாட்டு பேசும் அரசியல்

 ஈழத்தில் கடந்த வாரம் வெளியான வடைப் பாட்டு குறித்த என் பார்வைhttps://www.youtube.com/watch?v=lBUVfaFD3dQ

இந்தப் பாடலின் பின்னால் எங்களின் அரசியல் வரலாற்றில் ஈழக் குடிகள் மூன்றாம் தரப்பால் ஏமாற்றப்பட்டும் நீதி சொல்லப்படுகின்றது. 

வடைப் பாடலைக் கேட்க

எழுத்தும் & இசையும் : பூவன் மதீசன்
பாடகர் : சுஜித் ஜி


காலமும் கணங்களும் : ஜூலை 15 எழுத்தாளர் எம்.எச்.எம்.ஷம்ஸ் பிறந்த தினம் ! வெள்ளிச்சிறகடிக்கும் வெண்புறாவை வானலையில் பரவச்செய்த கவிஞன் ! ! முருகபூபதில்லிகை  இதழ் ஊடாக அதன் ஆசிரியர் டொமினிக்ஜீவா  இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய தென்னிலங்கை திக்குவல்லை யை ஒரு கணம் நினைத்தவுடன் அடுத்தடுத்து பல படைப்பாளிகளின்  பெயர்கள்தான்  எமது  நினைவுக்கு வரும்.  

இவர்களில் முதன்மையானவர் எம். எச். எம்.  ஷம்ஸ்.

மல்லிகை எனக்கு அறிமுகப்படுத்திய எழுத்தாளர்  திக்குவல்லை கமால், எனக்கு அறிமுகப்படுத்தியவர்தான் ஷம்ஸ். எனது இலக்கியப் பிரவேசத்தையடுத்து, திக்குவல்லையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரின் பூ என்ற புதுக்கவிதைத் தொகுதியை அச்சிடுவதற்காக கமால்,  நீர்கொழும்புக்கு வந்தார். அவருடன் வந்தவர் ஷம்ஸ்.

இது நிகழ்ந்து  நான்கு தசாப்தங்கள்   கடந்திருக்கலாம்.

அப்பொழுது எனது அக்கா, பிரசவத்திற்காக வீட்டுக்கு வந்திருந்தார். பிள்ளை இன்றோ நாளையோ பிறக்கவிருக்கும் பரபரப்பான சூழ்நிலை வீட்டிலே.

கமாலையும் ஷம்ஸையும்  எமது மாமா மயில்வாகனன் அவர்களின் சாந்தி அச்சகத்தில் இரவு தங்க வைத்தேன். நானும் அவர்களுடன் தரையில் பாய் விரித்து உறங்கினேன். இந்த அச்சகத்திலிருந்து 1966 ஆம் ஆண்டில் அண்ணி என்ற இலக்கிய இதழும் வெளியானது. எனது முதல் கதைத் தொகுதி சுமையின் பங்காளிகள், எழுத்தாளர் ஐ. சாந்தனின் ஒரே ஒரு ஊரிலே கதைத்தொகுதி மற்றும் புத்தளம் கவிஞர் தில்லையடிச்செல்வனின் விடிவெள்ளி , கவிஞர் ஈழவாணனின் அக்னி இதழ் என்பனவும் வெளியாகியிருக்கின்றன.

சீனா vs இந்தியா: இலங்கையின் உண்மையான நண்பன் யார்? - ஓர் அலசல்

 ரஞ்சன் அருண் பிரசாத பிபிசி தமிழுக்காக

இலங்கையின் உண்மை நண்பன் சீனாவா? இந்தியாவா?- ஓர் அலசல்

பட மூலாதாரம்,ISHARA S.KODIKARA

சீனாவே தமது உண்மையான நண்பன் என இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட கருத்து, தெற்காசிய பிராந்திய அரசியலில் பேசுபொருள் ஆகியுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

பருவநிலை மாற்றம்: வெள்ளத்தையும், வெப்பத்தின் தீவிரத்தையும் முன் கணிக்கத் தவறிய அறிவியல்


  • ரோஜர் ஹர்ராபின்
  • பிபிசி சுற்றுச்சூழல் பகுப்பாய்வாளர்
ஐரோப்பிய வெள்ளம்.

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,

ஐரோப்பிய வெள்ளம்.

ஜெர்மனி வெள்ளப்பெருக்கையும், வட அமெரிக்காவில் வீசிய வெப்ப அலையையும் கணிக்கத் தவறிவிட்டதாக முன்னணி சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டனர்.

ஆனால், புவி வெப்பநிலை வேகமாக அதிகரிப்பது நாசம் விளைவிக்கும் வெப்ப அலைகளையும், பெரு வெள்ளத்தையும் கொண்டுவரும் என்று பல பத்தாண்டுகளாக சரியாகவே எச்சரித்து வந்தனர்.

ஆனால், அது போன்ற வானிலை சீற்றங்களின் தீவிரத்தை துல்லியமாக முன் கணிக்கும் அளவுக்கு தங்கள் கணினிகள் வலிமையானவை அல்ல என்று அவர்கள் கூறுகின்றனர்.

உலக நாடுகள் தங்களுக்குள் பொதுவாக பருவநிலைக்கான சூப்பர் கம்ப்யூட்டரை நிறுவ கூட்டாக செலவிடவேண்டும் என்கிறார்கள் அவர்கள்.

பருவநிலை மாற்றம், வானிலை ஆகியவற்றை முன் கணிக்க கணினிகள் மிக முக்கியமானவை.

ஐரோப்பாவை புரட்டிப்போட்ட வெள்ளம்: முற்றிலும் அழிந்த ஊர்கள், 150 பேர் பலி

மியூஸ் ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை வெள்ளக் காடாக்கியது.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மியூஸ் ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை வெள்ளக் காடாக்கியது.

மேற்கு ஐரோப்பாவில் பல பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் குறைந்தது 150 பேர் இறந்துள்ளனர்.

உயிர் பிழைத்தவர்களை தேடுவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

வரலாறு காணாத மழையால் ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு, சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

ஜெர்மனியில் பலி எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது. பருவநிலை மாற்றத்திற்கு எதிரான தீர்க்கமான போருக்கு அந்நாட்டு சேன்சலர் ஏங்கலா மெர்கல் அழைப்பு 

பெல்ஜியத்தில் குறைந்தது 20 பேர் இறந்துள்ளனர். நெதர்லாந்து, லக்சம்பர்க், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இலங்கைச் செய்திகள்

யாழில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 67 பேர் வீடு திரும்பினர்

யாழ். யுவதிக்கு பிரான்ஸ் நாட்டில் உயரிய விருது

சீனா மேலும் 1.6 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை அன்பளிப்பு செய்ய தீர்மானம்

30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் இருமாதங்களுக்குள் ஊசி வடக்கு, கிழக்கிற்கு விசேட தடுப்பூசி வழங்கும் திட்டம்

தடுப்பூசி திட்டத்திற்கு WHO ஒத்துழைக்கும்

மஜ்மா நகர் மையவாடியில் ஆயிரத்தை கடந்த உடல்கள் நல்லடக்கம்


யாழில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 67 பேர் வீடு திரும்பினர்

யாழில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 67 பேர் வீடு திரும்பினர்-Quarantine Completed Foreign 67 Returnees Sent Home

- வௌிநாடுகளிலிருந்து வந்தவர்கள் இராணுவத்திற்கு நன்றி தெரிவிப்பு

உலகச் செய்திகள்

மியன்மாரின் கொந்தளிப்பான சூழல் மிகுந்த கவலை தருகிறது 

ஆப்கானின் பாகிஸ்தானுடனான முக்கிய எல்லைக் கடவை தலிபான்களின் வசம்

இனவாதக் கருத்துகளைப் பதிவு செய்வோர் காற்பந்து விளையாட்டுகளை பார்வையிட தடை

நேபாளத்தின் புதிய பிரதமராக ஷேர் பகதூர் தியூபா பதவியேற்பு

தென்னாபிரிக்காவில் வன்முறை; உயிரிழந்தோர் 72 ஆக அதிகரிப்பு

கம்யூனிஸ்ட் அரசாங்கத்துக்கு எதிராக கியூபாவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள்

ஜெர்மனி, பெல்ஜியத்தில் வரலாறு காணாத மழை; வெள்ளத்தினால் 70 பேர் உயிரிழப்பு


மியன்மாரின் கொந்தளிப்பான சூழல் மிகுந்த கவலை தருகிறது 

அமெரிக்கா

மியன்மாரில் நிலவும் கொந்தளிப்பான சூழல் மிகுந்த கவலையளிப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

மியன்மாரில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவந்து, மீண்டும் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken), ஆசியான் அமைப்பிடம் வலியுறுத்தினார்.

விர்ஜின் கேலக்டிக்: சொந்த ராக்கெட்டில் விண்வெளி சென்று திரும்பிய பிரிட்டன் வணிகர் ரிச்சர்ட் பிரான்சன்

 11 ஜூலை 2021

Richard Branson on the flight

பட மூலாதாரம்,VIRGIN GALACTIC

விண்வெளியின் எல்லைக்கு சென்று திரும்ப வேண்டும் என்ற தனது வாழ்நாள் கனவை 71 வயதில் நனவாக்கிக்கொண்டுள்ளார் பிரிட்டன் வணிகர் சர் ரிச்சர்ட் பிரான்சன். அதுவும் சொந்த பணத்தில் உருவாக்கிய ராக்கெட் மூலம்.

விர்ஜின் கேலக்டிக் என்ற அவரது நிறுவனம் உருவாக்கிய யுனிட்டி என்ற ராக்கெட் விமானம் தனது ஒன்றரை மணி நேர விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிவிட்டது.