சித்தாந்தத்தை நாடுவார்க்குத் திருவருட்பயன் தந்த திருவருட் செல்வர் !

 


மகாதேவ ஐயர் ஜெயராமமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் .... அவுஸ்திரேலியா 

 

  சமயம் என்றால் என்ன சமயம் என்றாலே கடவுள் நெறி பற்றிச்


சொல்லுவதா ? என்னும் ஐயம் எழுவது இயல்பா னதுதான். இதனால் சமயம் என்றால்  என்ன வென்று ஒரு தெளிவு அவசியமாய் வேண்டப்படுகிறது அல்லவா ! சம யம் என்றால் " மக்கள் ஆன்மலாபத்தை அடைதற்குரிய வழியைத் தெரிவிப்பதே " என்று சொல்லப்படுகிறது. கடவுள் நெறி பற்றிக் கண்டு கொள்ளாமலே சமயம் என்று சொல்லிக் கொள் ளும் நெறிகளும் காணப்படுகின்றன என்பதும் நோக்கத்தக்கது.

  சமயங்கள் யாவுமே கடவுள் கொள்கையினை ஏற்றுக் கொண்டுள்ளனவா என்பதிலும் தடுமாற்றம் காணப்படுகி றது. சமயங்கள் என்று பெயரளவில் இருந்தாலும் கடவுள் என்னும் சிந்தனையினைத் தொடாதன வாகவும் சமயங்கள் இருப்பதையும் காணமுடிகிறது.


கடவுள் கொள்கையினுக்கு முதன்மை கொடுக்காமல் ஓரளவு நிலையில் ஒத்துக் கொள்ளும் சமயங்களும் இருக்கின்றன.அதேவேளை சமயம்  என்னும் பெயரில் இந்தியாவில் தோற்றம் பெற்ற பெளத்தமோ சமணமோ கட வுள் என்னும் கருத்தை ஏற்றிடாச் சமயங்களாகவே இருக்கின்றன. தர்க்கம் வேறு. தத்து வம் வேறு. தர்க்கிப்பது என்பதை மூலமாய்க் கொண்ட னவே பெளத்தமும் சமணமும். தத்துவத்தை முதன்மைப் படுத்தும் சமயங்கள் நிலை  வேறாய் அமைகிறது. அந்த வகையில் சைவசமயமானது சைவசித்தாந்தம்  என்னும் தத்துவத்தை முழுமையாக்கி கடவுள் நெறியினை வலிமையாக்கி நிற்கிறது என்பதைக் கருத்திருத்தல் அவசிய மாகும்.

  உலகில் பிறக்கின்ற உயிர்களின் நிலையினை மையபடுத்தி சமயங்களின் நிலையினை நோக்குதல் அவசிய மாகிறது.எல்லாச் சமயங்களுமே உயிரின் இறுதி நிலை என்ன என்பது பற்றி எடுத்துக் கொள்ளு வதில் நாட்டம் உடையனவாக இருக்கின்றன என்பதும் கருத்திருத்த வேண்டியதே.இந்த நோக்கில் பார்க்கின்ற பொழுது உயிரின் முடிந்த பயன் என்பது " முத்தி " அல்லது  வீடுபேறு " என்னும் நிலைக்குள் வந்து விடுகின்றன. ஆனால் இதிலும் ஒருமித்த நிலை இல்லை என்றே ஆகிறது. அந்தந்த சமயத்தின் நிலைக்கு ஏற்பவே  இந்த " முத்தி " என்பதும் எடுக் கப்படுகிறது என்பதும் மனங்கொள்ளத்தக்கது.

காரைநகர் தந்த செந்தண்மை அந்தணன்---- தமிழையும் சைவத்தையும் தன்னிரு கண்போற்காத்து வளர்த்த அமரர் வைத்தீசுவரக் குருக்கள்!

சீவன்முத்தராகத் திருத்தக வாழ்ந்த வைத்தீசுவரக்குருக்கள ‘அண்டமெலாம் அருள்விரிக்கும் அந்தி வண்ணன் அருட்சோதி தனிற்கலந்தார் தெய்வந்; தானே’ என்று நான் அவரின் பிரிவை ஆற்றாது யாத்த அஞ்சலிக் கவிதையிலே அவர் ஒரு சீவன்முத்தராகவே வாழ்ந்து பிறவாப் பேரின்னமுற்றார் என்பதைக் குறிக்கும் இறுதிக்கட்ட நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டியுள்ளேன். சித்தர்கள் தாங்கள் சமாதி அடையும் கால நேரத்தை முன்கூட்டியே தங்களின் சீடர்களுக்கு அறிவிப்பதைப் போலவே வைத்தீசுவரக்குருக்கள் ஐயா அவர்களும் செயற்பட்டவிதம் அவரை ஓர் சீவன்முத்தரெனவே கொள்ளவேண்டியுள்ளது. குருக்கள் ஐயா அவர்கள் முத்தியடைந்த ஏழாவது  நினைவு ஆண்டிலே அந்த  அஞ்சலிக் கவிதைகளை வாசகர்களுடன் பகிர்வதிலே மகிழ்வடைகிறேன்.

 

நிலைக்காத உடல்நீத்து ஆவி பிரியுமுன்.

   நினைந்துருகி வழிபடுந்தன் கூத்த னாரின்

கலைக்கோலக் குடமுழுக்குக் காட்சி காணக்

   காததூரம் பலசெல்ல விழைந்த குருக்களை

அலைக்காது அன்றிரவு அதிசய மாயவர்

   அறையிருந்தே முழுநிகழ்வைப் பார்த்தின் புறவே

தொலைக்காட்சி ஒலிபரப்புச் செய்த தென்றால்

   சுந்தரேசப் பெருமானருள் சொல்லப் போமோ?.

 

உற்றநண்பன் இளமுருகன் உவந்தே யாத்த

   ஒப்பரிய சிதம்பரபு ராணத் திற்குக்

கற்றறிந்த புலவோரும் நாணா நிற்கக்

   கலைமகளின் அருள்பெற்று உரைவி ரித்த

பொற்புமிகு பரமேசுவரி அம்மை யாரின்

   புகலரிய நல்வாழ்க்கைச் சரிதம் எழுதி

அற்புதத்தல புராணமதிற் சேர்க்கத் தாரீர்

   அவசரமிது” எனவெனக்குப் பணித்தவ ரெங்கே?;

மருதூர்க்கொத்தன் நினைவுகள் ஏப்ரில் 19 நினைவு தினம் ! கண்டியில் இம்மாதம் நினைவுகளின் தேரோட்டம் நூல் வெளியீட்டு அரங்கு முருகபூபதி


பல   படைப்பாளிகள்   தமது   இலக்கியப்பிரதிகளை  எழுதும்பொழுது இயற்பெயரை  விடுத்து   புனைபெயர்களில்    அறிமுகமாவார்கள்.   பலர்   தமது   பிறந்த  ஊருக்குப்பெருமை   சேர்க்கும்   வகையில் தமக்குத்தாமே   ஊருடன்   இணைந்த  புனைபெயர்களை சூட்டிக்கொள்வார்கள்.

பின்னாளில்  அவர்களின்    இயற்பெயரை    பிறப்புச்சான்றிதழ் - பதிவுத்திருமண சான்றிதழ் -  மரணச்சான்றிதழ்களில்தான் காணமுடியும்.    இலக்கிய   வட்டத்திலும்   குடும்ப  மட்டத்திலும் புனைபெயரே   நிலைத்துவிடும்.

கிழக்கு   மாகாணத்தில்   இஸ்மாயில்    என்ற   பெயரில்  ஒரு


எழுத்தாளர்  இருந்தார்    எனச்சொன்னால்  எவருக்கும்  தெரியாது. மருதூர்க்கொத்தனையா  சொல்கிறீர்கள்   என்று   அவருக்கு  மிகவும் நெருக்கமான   சிலரே    குறிப்பிடுவார்கள்.

கிழக்கு   மாகாணத்தில்   கல்முனைக்கு   அருகாமையில்   பெரிய நகரமும்   அல்லாமல்   சிறிய   கிராமமாகவும்   காட்சியளிக்காத கடலோர   சிற்றூர்   மருதமுனை.

இந்த   ஊரில்  மருதூர் ஏ. மஜீத்  -   மருதூர்க்கனி   -   மருதூர் வாணன் என்ற   பெயர்களில்   எழுதியவர்களின்   வரிசையில்   முன்னோடியாக இருந்தவர்   மருதூர்க்கொத்தன்.

1935  ஜூன்  மாதம்  6  ஆம்  திகதி   அநுராதபுரத்தில்   பிறந்த   இஸ்மாயில்   என்ற    மருதூர்க்கொத்தன்    ( இன்று  அவர்  உயிருடன் இருந்திருந்தால்  89   ஆவது   வயதை   குடும்பத்தினருடனும் இலக்கிய   நண்பர்களுடனும்    கொண்டாடியிருப்பார். )  2004 ஆம் ஆண்டு  ஏப்ரில்  மாதம்  19  ஆம்   திகதி  மறைந்தார்.

  மருதமுனையில்தான்    வாழ்க்கைத்துணையை  பெற்றார்.

மருதமுனையில்   முன்னர்    அரசினர்  தமிழ்  ஆண்கள் பாடசாலையாக   விளங்கிய    இன்றைய    பிரபல்யமான  அல் - மனார் மத்திய   கல்லூரியில்   பயின்ற   காலத்தில்   புலவர்மணி  ஆ.மு. ஷரிப்புத்தீன்   மற்றும்   வைரமுத்து    ஆகியோரின் மாணக்கராகவிருந்து    அட்டாளைச்சேனை   மற்றும்   பலாலி ஆசிரியப்பயிற்சிக்கலாசாலைகளிருந்து   பயிற்றப்பட்ட   ஆசிரியராக கல்விப்பணிக்கு   வந்தார்.

மனிதர்களின்   வாழ்வை    பெற்றவர்களும்  ஆசிரியர்களும் நண்பர்களும்தான்   தீர்மானிக்கிறார்கள்  எனச்சொல்வார்கள்.   தான் பெண்ணெடுத்த   மருதமுனை   ஊரின்   பெயரையே   முதன்மைப்படுத்தி    கல்விப்பணியையும்   இலக்கியப்பணியையும் தொடர்ந்த    மருதூர்க்கொத்தன்   எனக்கு  அறிமுகமானது  1975  ஆம் ஆண்டிற்குப்பின்னர்தான்.

மருதூர்க்கொத்தனும்    அவரது   நெருங்கிய    உறவினரான மருதூர்க்கனியும்   ( ஹனிபா)    எமது    இலங்கை  முற்போக்கு எழுத்தாளர்    சங்கத்தின்   கிழக்கிலங்கையின்    தூண்களாக விளங்கியவர்கள்.

கிழக்கில்   கல்முனை  -  மருதமுனை  -   பாண்டிருப்பு   -   நீலாவணை முதலான    கடலை  அண்டிய   ஊர்கள்    ஈழத்து   இலக்கிய   உலகிற்கு ஆளுமையுள்ள     பல     படைப்பாளிகளைத்தந்திருக்கிறது.    அவர்களின் பெயர்    விபரம்   எழுதினால்    ஒரு   பட்டியலாகவே    விரியும்.

பூமராங் மின்னிதழ் அறிமுகம் அனைத்துலக பெண்கள் தின சிறப்பிதழாக இம்மாதம் வெளியாகியுள்ளது. முருகபூபதி


அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் காலாண்டு மின்னிதழான பூமராங்,   இம்மாதம்  தனது இரண்டாவது இதழை வரவாக்கியிருக்கிறது.

அனைத்துலக பெண்கள் தின சிறப்பிதழாக இம்முறை வெளிவந்துள்ள பூமராங், சிறுகதை, கட்டுரை,  நூல் விமர்சனம், வாசகர் முற்றம், மற்றும் சங்கத்தின் சமகால நிகழ்வுகள் பற்றிய தகவல் குறிப்புகளுடனும் பதிவேற்றப்பட்டுள்ளது.

இதன் ஆசிரியத் தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

 “ அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் மின்னிதழின் வருகை,  இந்த ஆண்டு ( 2024 ) தமிழர் திருநாள், தைத்திருநாளின்போது ஆரம்பமானது.

இரண்டாவதாக வெளிவரும் இவ்விதழ்,  உலகெங்கும் வாழும் இஸ்லாமிய மக்களின் புனித நோன்பு அனுட்டிக்கப்பட்ட  ரம்ஸான்  பண்டிகைக் காலத்திலும்,   இந்து தமிழ் மக்களினால் கொண்டாடப்படும் சித்திரை புதுவருட காலத்திலும் வெளிவருகின்றது.

இந்தப் பண்டிகைகளை கொண்டாடும்  அனைவருக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கலையும் இலக்கியமும் இனத்தின் கண்கள் என்ற தாரக மந்திரத்துடன், அறிந்ததை பகிர்தல், அறியாததை அறிந்துகொள்ள முயற்சித்தல் என்னும்  நோக்கத்துடனும்  கடந்த இரண்டு தசாப்த காலமாக இயங்கிவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வளர்ச்சியில் மற்றும் ஒரு மைல்கல்லாக திகழ்ந்திருக்கும் பூமராங் மின்னிதழுக்கு தமிழ் கூறும் நல்லுலகில் சிறந்த வரவேற்பு கிட்டியிருந்தது.

சில வாசகர்கள்  பூமராங் குறித்த தாங்களது வாசிப்பு அனுபவத்தையும் ஊடங்களில் பகிர்ந்துகொண்டார்கள்.

மெல்பனில் நீண்டகாலமாக இயங்கு தமிழ் மூத்த பிரஜைகள் அமைப்பினர்,  முதலாவது பூமராங் மின்னிதழை அச்சிட்டு,  பல பிரதிகளை தங்கள் அமைப்பின் மாதாந்த ஒன்றுகூடலிலும் அறிமுகப்படுத்தி, தங்கள் உறுப்பினர்களுக்கு விநியோகித்தனர்.

அதன் மூலமும் பூமராங் மின்னிதழுக்கு சிறந்த வரவேற்பு கிட்டியது.  சில மூத்த பிரஜைகளுக்கு, தாங்களும் எழுத்துப்பணிகளில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வத்தையும் பூமராங் மின்னிதழ் தூண்டியிருக்கிறது. 

சங்கம், இந்த ஆண்டின் தொடக்கம் முதல் அடுத்தடுத்து சில நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருக்கிறது.

பூமராங் மின்னிதழின் முதலாவது இதழ் வெளியீட்டினையடுத்து, 
மார்ச் மாதம்
10 ஆம் திகதி தமிழக எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுடனான சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்வினையும்,  மார்ச் மாதம் 23 ஆம் திகதி அனைத்துலக பெண்கள் தின விழாவை மெய்நிகரிலும்,  ஏப்ரில் மாதம் 07 ஆம் திகதி,  இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கிய நூல்களை தெரிவுசெய்யும் போட்டியில் பரிசுபெற்ற நூல்களுக்கான வாசிப்பு அனுபவப் பகிர்வினை மெய்நிகரிலும் நடத்தியிருக்கிறது.

அரங்கில் சாதனை புரிந்த சண்முகலிங்கம் மாஸ்டர் (கன்பரா யோகன்)


கடந்த தை மாதத்தில் குழந்தை மாஸ்டர் என்று பலராலும் அழைக்கப்படும் திரு ம. சண்முகலிங்கம் மாஸ்டர் அவர்களை அவரது திருநெல்வேலி வீட்டில் சந்திக்கப்  போனோம்.

அன்றைக்கு மாஸ்டரின் வீட்டைக் கண்டுபிடிப்பது சற்றுச் சிரமமாகவிருந்தது. எட்டு வருடங்களுக்குப் பிறகு சென்றதால் தெருக்கள், வீடுகளில் மாற்றம் இருந்தது என்பது ஒரு காரணம். இன்னொன்று நாம் வழமையாக செல்லும் திருநெல்வேலிச் சந்தி வழியாக வராமல் இம்முறை எதிர்த்திசையிலிருந்து கல்வியங்காட்டுச் சந்தி ஊடாக வந்ததும் ஒரு காரணமாயிருந்திருக்க வேண்டும். இரண்டு முறை ஆட்களிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டோம்.

 

இப்போது சண்முகலிங்கம் மாஸ்டருக்கு 92 வயது.  நினைவுகள் மங்கிக் கொண்டு வரும் வயதாகையால் எம்மை அடையாளம் காண்பதற்கு சிரமப்பட்டார்

 

இன்று தமிழ் நாடக உலகில் நன்கு அறியப்பட் நாடக ஆசிரியரா அவர் இளமைக்காலத்தில் திறமையான நாடக நடிகராக குறிப்பாக கலையரசு சொர்ணலிங்கம் தயாரித்த 'தேரோட்டி மகன்'  போன்ற  நாடகங்களிலும், சரித்திர நாடகங்கள் , ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் என்று பலவற்றிலும் நடித்திருந்தார். ஈழத்தில் எழுபதுகளில் வெளிவந்த  ‘பொன்மணி’ என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

 

இந்த அனுபவங்கள்தான் அவரை நாடக ஆசிரியராக,  இயக்குநராக, அரங்க ஆய்வாளராக, கட்டுரையாளராக, விமரிசகராக என்று பல பரிமாணங்களில் பயணிக்க வைத்தது

 

சென்னையில்  பி.எ பட்டப் படிப்பை முடித்துக் கொண்டு

இலங்கை திரும்பியவர் கல்வியங்காடு செங்குந்தா பாடசாலை ஆசிரியராக வும் பணியாற்றினார்.  இதனாலேயே அவர் சிறுவர்க்கான நாடகங்களில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

கொழும்பில் நாடக டிப்ளோமா கற்கை நெறியைப் பயின்ற பின்னர் சில அரங்கியலாளருடன் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் நவீன நாடகத்துக்கான 

நாடக அரங்க கல்லூரி ஒன்றை நிறுவி நவீன அரங்கில் ஆர்வம் கொண்டோருக்கான பயிற்சிக் களமாக அதனை இயக்கி வந்தார்.

 

மாஸ்டர் எப்போதுமே தன்னை முன் நிறுத்தாது பணிவுடன் அமைதியாக இயங்குபவர். மேடைகளில் பேசுவது குறைவு என்றாலும் அவரது எழுத்துக்கள், கருத்துக்கள் பல நூறு அரங்கங்களில் பேசி நடிக்கப்பட்டன.

தமிழ் அரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய எதிர்காலம்?

 April 17, 2024


இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமிழ்த் தேசியத்துக்குள்ளும் – தமிழ்த் தேசிய எதிர்நிலை அரசியலுக்குள்ளும் சிக்கி சிதைவின் விளிம்பில் ஊச லாடிக் கொண்டிருக்கின்றது. நீதிமன்றத்துக்குள் சிக்கிக்கிடக்கும் கட்சியின் எதிர்காலம் தொடர்பான கேள்விக்கு ஏதோவொரு வகையில் பதில் கிடைத்தாலும்கூட தமிழ் அரசுக் கட்சி அதன், தமிழ்த் தேசிய கற்பை நிரூ பிப்பது மிகவும் கடினமானது. ஏனெனில், தேவையற்ற உட்கட்சித் தேர்தல் ஒன்றால் அது ஏற்கனவே நெருக்கடியின் உச்சத்துக்குச் சென்றுவிட்டது. இவ்வாறானதொரு பின்னணியில், அதன் தமிழ்த் தேசிய கற்பை மீளவும் எவ்வாறு நிரூபிக்கப் போகின்றது என்பதே தமிழ் அரசுக் கட்சிக்கு முன்னா லுள்ள பிரதான – அதேவேளை தவிர்த்து ஓடவே முடியாத நெருக்கடியும் சவாலுமாகும்.
தமிழ் அரசுக் கட்சிக்கான புதிய தலைவரைத் தெரிவு செய்யும் தேர்தலா னது கட்சிக்குள் தமிழ்த் தேசியம் மற்றும் தேசிய எதிர்நிலை என்னும் இரண்டு பிரிவுகளை உருவாக்கிவிட்டது.
இந்த இரண்டு பிரிவுகளும் ஓர ணியில் இணைந்து பணியாற்றுவது முடியாத காரியம். ஏனெனில், இது கற்புநெறிக்கும் பால்வினைத் தொழிலுக்கும் இடையிலான பிரச்னை. இரண்டும் எவ்வாறு ஒரு நேர்கோட்டில் பயணிக்க முடியும்? தமிழ் அரசுக் கட்சி தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதன் கோர முகத்தைக் காண்பிக்கும் – உள் சிக்கல்கள் மிகவும் அசிங்கமாக வெளிப்படும். தற்போது அதனைத் தெளிவாகவே காணமுடிகின்றது.

ஈழத் தமிழர் விவகாரம் காணாமல் போகும் ஆபத்து!

 April 20, 2024


உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தின்மீதான கவனம் இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தத்தை தொடர்ந்து புதியதொரு நிலைக்கு சென்றது. உலகின் பிரதான கவனம் மத்திய கிழக்கை நோக்கி நகர்ந்தது. தற்போது நிலைமைகள் மேலும் சிக்கலடைந்திருக்கின்றன.
மத்திய கிழக்கின் யுத்த மேகம் உலக அரசியல் நிகழ்ச்சி நிரலையே மாற்றப் போகின் றது. ஈரானின் தாக்குதலை தொடர்ந்து நிலைமைகள் வேகமாக மாறி வருகின்றன. இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றது.
இந்த யுத்தமானது மத்திய கிழக்கு இதுவரை காணாத யுத்த மாகவும் மாறலாமென்று சர்வதேச அரசியல் அவதானிகள் எச்ச ரிக்கின்றனர். இவ்வாறானதொரு நிலையில் ஈழத் தமிழர்கள் மீதான சர்வதேச கரிசனை என்று ஒன்றிருக்கப் போவதில்லை.
கடந்த பதினான்கு ஆண்டுகால அரசியல் நகர்வுகள் படுதோல்வியிலேயே முடிந்தி ருக்கின்றது. சர்வதேச அழுத்தங்கள் தொடர்பான கதைகள் அனைத் தும் புஷ்வாணமாகிவிட்டது. இவ்வாறானதொரு பின்புலத்தில் வெளியாருக்காகக் காத்திருக்கும் அரசியல் தொடர்பில் நம்பிக்கை களை எவரேனும் விதைக்க முற்பட்டால் – சந்தேகமில்லை – அவர் கள் மக்களை ஏமாற்றுகின்றனர். அவர்களது நோக்கும் தமிழ் மக்க ளுக்கு நல்லதோர் எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதல்ல மாறாக தங்களின் கதிரைகளை பாதுகாத்துக் கொள்வது மட்டும்தான்.
இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தத்தின்போதான மனித உரிமைகள் சார்ந்த குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரேல் எவ்வாறு பதிலளித்திருந்தது – அதேவேளை, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா எவ்வாறு பதில ளித்திருந்தது என்பதெல்லாம் நமக்கு எதை கற்றுத்தருகின்றது? எதை யாவது நாம் கற்றுக்கொள்ள முயற்சிக்கின்றோமா? நமது அரசியல் சூழலை அவதானித்தால் எதையும் கற்றுக்கொள்வதற்கான முதிர்ச் சியை காணமுடியவில்லை. தொடர்ந்தும் கதிரைகளை பாதுகாப்பதற்கு ஏற்றவாறு அரசியல் கருத்துகளை முன்வைப்பதையே காண முடிகின்றது.

அவள் விதி அவன் – சிறுகதை - கே.எஸ்.சுதாகர்


எனது மைத்துனரின் கலியாணவீட்டிற்காக கனடா போயிருந்தேன். கலியாணத்தின் போது எனது பள்ளி நண்பன் சதீசை சந்தித்தேன். அவன் தான் ஒரு அதிசயச் செய்தி ஒன்றைச் சொன்னான்.

எங்களுடன் படித்த மனோரஞ்சன்---மனோ---கனடாவில் பெரிய செல்வந்தனாக இருக்கின்றான். 25 மில்லியன்களுக்கும்  மேற்பட்ட வியாபாரத்தைக் கொண்ட, பல உணவகங்களுக்குச் சொந்தக்காரன்.

25 மில்லியன் டொலர்கள்…. இந்த விடயம் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. இது எப்படி நிகழ்ந்தது?

படிக்கும் காலங்களில் அவன் என்றுமே திறமைசாலியாக இருந்தது கிடையாது. சுமார் ரகம் அவன்.

மனோ அகதியாக வந்து வேலை தேடி அலைந்தான். ஒருநாள் ஆங்கில வகுப்பு முடிந்து, சுவிஸ் சலற்றில் உணவருந்திக் கொண்டிருக்கும்போது அவனுக்கொரு யோசனை வந்தது. அங்கே வேலை கேட்டுப் பார்த்தால் என்ன? என்ன ஆச்சரியம். வேலை கிடைத்தது. டிஸ்வாசரில் பாத்திரங்கள் கழுவும் வேலை.

அப்புறம் பிரியாவைத் திருமணம் முடித்த கையோடு, ஒரு உணவகத்தை விலைக்கு வாங்கினான். பின்னர் தொடர்ந்து அவனுக்கு யோகம் அடித்தது. எல்லாம் பிரியா வந்த நல்ல நேரம்தான் எனச் சொல்லுமளவுக்கு மூன்று பிள்ளைகளுக்கும் ஐந்து உணவகங்களுக்கும் சொந்தக்காரனானான். அவனின் ஆளுமை, ஆற்றல் – எல்லோரும் அண்ணார்ந்து பார்க்குமளவிற்கு கிடுகிடுவென்று உயர்ந்தான். எத்தனையோ பேருக்கு வேலை வழங்கிக் கொண்டிருந்தான்.

ஆயிரம் கனவுகளுடன் பிரியாவை மகாராணியாக்கி வாழ்ந்தான் மனோ.

அகதியாக வந்து இன்று எத்தனையோ தொழிலகங்களுக்கு அதிபதியாக இருக்கும் மனோவிற்கு, மேஜர் விருது வழங்கிக் கெளரவித்தார்.

அந்தக்காலத்தில்தான் நான் எனது மைத்துனனின் கலியாணத்திற்காக கனடா சென்றிருந்தேன். கலியாணவீட்டிற்கு வரமுடியவில்லை என மிகவும் மனம் வருந்தினான். தனது வீட்டிற்கு வரும்படி எங்களுக்கு அழைப்பு விடுத்தான்.

தமிழ் திரைப்படம் பார்க்க பேருந்து சேவை $25 (மூத்தவர்கள் மட்டுமே)

 எந்த மூத்தவர்களும் திரையரங்குகளுக்குச் செல்ல விரும்பினால் (கீழே கொடுக்கப்பட்ட விவரங்கள்), அவர்களுடன் இதைப் பகிரவும்.   நன்றி


புதிய பறவை - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக விளங்கிய எம் ஜி ஆர், சிவாஜி


இருவரும் தனிப்பட்ட முறையில் நண்பர்களாக விளங்கிய போதும் தொழில் ரீதியில் கடும் போட்டிக்கு மத்தியிலேயே செயற்ட்பட்டு வந்தனர். இந்த வகையில் எம் ஜி ஆர் தனது சொந்த பட நிறுவனமான எம் ஜி ஆர் பிக்ஸர்சை 1958 ல் தொடங்கி நாடோடி மன்னன் படத்தை தயாரித்து இயக்கி நடித்து அப் படம் மகத்தான வெற்றியைப் பெற்றது. ஆனாலும் சிவாஜி தனது சொந்த பட நிறுவனத்தை உடனயாக ஆரம்பிக்கவில்லை. ஆறாண்டுகள் கழித்தே சிவாஜி

பிலிம்ஸ் என்ற தனது சொந்த பட நிறுவனத்தை தொடங்கினார் அவர். அவ்வாறு தொடங்கி அவர் தயாரித்த முதல் படம்தான் புதிய பறவை. முதலில் ஆங்கிலத்திலும் பின்னர் ஹிந்தியிலும் , அதன் பின் வங்காள மொழியிலும் உருவாகி பின்னர் தாதா மிராசியின் திரைக்கதையினால் இப் படம் புதிய பறவை ஆனது.


வித்தியாசமான கதை, நடிப்பு, ஆடை அலங்காரம் என்று ஈஸ்ட்மென் கலரில் படம் தயாரானது. ஒரிஜினல் திட்டப்படி சிவாஜியின் நூறாவது படமாக புதிய பறவையை பறக்க விடுவதே சிவாஜி குழாமின் எதிர்ப் பார்ப்பாக இருந்தது. ஆனாலும் சில பல காரணங்களால் 98 வது படமாக புதிய பறவை திரை வானுக்கு வந்தது.

படத் தயாரிப்பில் தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்துக் கொண்ட சிவாஜி படத்துக்கு வசனங்களை எழுத ஆரூர்தாஸை அமர்த்திக் கொண்டார். அதே போல் தான் நடித்த இரத்தத் திலகம் படத்தை டைரக்ட் செய்த்து அப் படம் வெற்றி பெறாத போதும் அதன் டைரக்டர் தாதாமிராசிக்கு தன்னுடைய சொந்த படத்தை டைரக்ட் செய்யும் சந்தர்ப்பத்தையும் வழங்கினார். ஸ்ரீதர் பட யூனிட்டை சேர்ந்த படத் தொகுப்பாளர் என் எம் சங்கர் இப்படத்தின் எடிட்டராக உள் வாங்கப்பட்டார்.

சிட்னி துர்கா தேவி தேவஸ்தானம் - வருஷ அபிஷேகம் | ஏப்ரல் 22, 2024 திங்கட்கிழமை | மாலை 06:00 மணி

 


இலங்கைச் செய்திகள்

 யாழ். மணிக்கூட்டு கோபுரம் முதல் பண்ணைவரை தூய சுற்றுலா வலயம்

வவுனியாவில் 376 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கல்

SSW வீசா திட்டத்தின் கீழ் ஜப்பான் கனவை நனவாக்குங்கள்

கைதான வீதியோர கடைக்காரர் பிணையில் விடுதலை

திருச்சி முகாமிலுள்ள இலங்கை பெண்ணுக்கு இந்திய வாக்குரிமை


யாழ். மணிக்கூட்டு கோபுரம் முதல் பண்ணைவரை தூய சுற்றுலா வலயம்

April 19, 2024 9:53 am 

யாழ். மணிக்கூட்டுக் கோபுரம் தொடக்கம் பண்ணைவரையான பகுதியை தூய்மையான சுற்றுலா வலயமாக்கும் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் அண்மையில் நடைபெற்றது.

உலகச் செய்திகள்

 இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் தாக்குதல்: 3 பலஸ்தீனர் பலி 

ஈரான் தாக்குதலையடுத்து காசாவில் ‘போரைத் தொடர’ இஸ்ரேல் உறுதி

காசா போர் நிறுத்தப் பேச்சில் பலவீனம்: மத்தியஸ்த பணியை கட்டார் மீளாய்வு

தொடரும் மழையால் டுபாய் விமானநிலையம் தொடர்ந்தும் ஸ்தம்பிதம்

மழை, வெள்ளத்தால்: பாக்., ஆப்கானில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

ஐ.நாவில் பலஸ்தீனத்தை நிராகரித்தது அமெரிக்கா

பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு


இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் தாக்குதல்: 3 பலஸ்தீனர் பலி 

April 17, 2024 4:48 pm 

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் நப்லுஸ் மாகாணத்தில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

புதிய ஆரம்பம் புதிய நம்பிகை

 

ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம் 2024 - 28 ஏப்ரல் 2024 ஞாயிறு @ மதியம் 2.00 மணி

ஓ திரிபுர சுந்தரி தேவியே, கடம்ப மரங்களின் காடுகளில் அலைந்து திரிபவளே, ஆன்மிக தாகம் நிறைந்த முனிகளுக்கு மகிழ்ச்சியான மேகக் கூட்டமாகச் செயல்படுகிறாள்.

தன் இடுப்பினால் மலைகளை வென்றவளே, சிறந்த பண்புகளைக் கொண்ட வான கன்னிகளால் சேவை செய்யப்பட்டவளே.

தாமரை போன்ற கண்களை உடையவர், புதிதாக உருவான மேகம் போன்ற தோற்றம் கொண்டவர், கருநீல நிறத்தில் இருப்பவர்

மூன்று கண்களைக் கொண்ட கடவுளின் மனைவி, திரிபுர சுந்தரி தேவியே, நான் உன்னிடம் அடைக்கலம் தேடுகிறேன்.

மீனாட்சி திருக்கல்யாணத் திருவிழாவானது மீனாட்சி அம்மன் / ஸ்ரீ திரிபுரசுந்தரி பகவான் ஸ்ரீ சுந்தரேஸ்வரர்வருடன் தெய்வீக திருமணத்தை கொண்டாடுகிறது.

மீனாட்சி திருக்கல்யாணம் புகழ்பெற்ற 'சித்திரை திருவிழா' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த விழா தமிழ் நாட்காட்டியில் "சித்திரை" மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு, SVT இல், மீனாட்சி திருக்கல்யாணம் 2024 ஏப்ரல் 28 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2.00 மணிக்குத் தொடங்குகிறது.