தரிசனம் 2019 - செ .பாஸ்கரன்.

தரிசனம் 2019 சனிக்கிழமை இரவு  போமன் மண்டபத்தில் இடம்பெற்றது. சிட்னி இளையோர்களால் நடத்தப்படும் தரிசம் அமைப்பு இவ்வருடம் 5 வது  வருடமாக     தனது தரிசனம் நிகழ்வை நடாத்தியிருந்தது. மண்டபம் நிறைந்த மக்களோடு நல்லதோர் நிகழ்வை படைத்திருந்தார்கள்.

அருமையான இசை நிகழ்வு , நாட்டிய நிகழ்வு , திரை இசை நிகழ்வு என எல்லோரையும் கவரும் விதமாக நிகழ்ச்சிகள் அமைத்திருந்தது. இங்கு நடக்கின்ற நிகழ்ச்சிகளில் அதிகம் இளையோர்களை காணமுடியாதிருக்கும் ஆனால் இந்த நிகழ்ச்சி இளையோரால் நடாத்தப் பட்டது மட்டுமல்லாது அதிகம்  இளையோர்களையம் சிறுவர் சிறுமிகளையும் காணக் கூடியதாக இருந்தது. இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கும் கேஷிகா அமிர்தலிங்கத்தையும் அவரோடு இணைந்து செயல்படும் இளவல்களையும் பாராட்டிடவேண்டும். அது மட்டுமல்லாது மலையக மக்களுக்கும் , பாடசாலைகளுக்கும் வேலைத்திட்டங்களை  முன்னெடுக்கும் இந்த தரிசனம் அமைப்பை தொடர்ந்து ஆதரவு வழங்கும் மக்களையும் பாராட்டுவோம் .

நல்லதொரு விடயத்திற்காக இளையவர்களால் நடாத்தப்படட ஒரு நல்ல நிகழ்வை  பார்த்த திருப்தியோடு அங்கு நடந்த சில வற்றின் படங்களை தருகின்றோம் .


உலகத் தமிழர்களை பெருமையடையச் செய்யும் யாழ். நரம்பியல் வைத்திய நிபுணர் திருமதி ரூபவதனாவின் அளப்பரிய சாதனை…!!

.


இலங்கை யாழ்ப்பாணம், சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் Norwayயை வதிவிடமாகவும் கொண்ட (யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி
பழைய மாணவி) நரம்பியல் வைத்திய நிபுணர் திருமதி ரூபவதனா அவர்கள் எதியோப்பியாவில் அளப்பரிய சாதனை படைத்துள்ளார் இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவியும், அங்கு கற்பித்த ஆசிரியர் மகேஸ்வரனின் அன்பான புத்திரியும் ஆவார்.

எதியோபியாவில் பிறந்த 16 மாத பெண் குழந்தை இரட்டைத் தலையுடன் (Encehalocele)பிறந்திருந்து. பெண்குழந்தை இரட்டைத்தலை என்றபடியால் நிம்மதியாகத் தூங்குவதில் பெரும் சிரமத்தை எதிர் கொண்டு இருந்தார். வைத்திய நிபுணர் ரூபவதணா அவர்கள் Norway யிலிருந்து எதியோப்பியாவிற்கு எதுவித பலனும் எதிர்பாராது தொண்டர் அடிப்படையில் சென்று, இந்த சத்திரசிகிச்சையை மேற் கொண்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


கைகொடுத்து அரவணைக்கும் கருணையே ஐயப்பன் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


    ஐயப்பன் தரிசனத்தை அனைவருமே நாடுகிறார்
    மெய்யான உணர்வுடனே விரதமாய் இருக்கின்றார்
    நெய்கொண்டு அபிசேகம் செய்துமவர் நிற்கின்றார்

    கைதட்டி கைதட்டி கானமவர் இசைக்கின்றார்

    மாலைபோட்ட அனைவரையும் சாமியெனப் பார்க்கின்றார்
    மருள்நீக்கும் மாமருந்தாய் தர்மதாத்தாவை நினைக்கின்றார்
    காலைமாலை வேளையெல்லாம் கைகூப்பி வணங்குகின்றார்
    கயமைதனை நீக்குகின்ற கடவுளென நம்புகின்றார்

    ஆடம்பரம் அத்தனையும் அவரொதுக்கி வாழுகிறார்
    ஐயப்பன் மெய்யெனவே அகமுழுதும் இருத்துகிறார்
    கேடுகெட்ட காரியத்தை கிடங்கிலிட்டு மூடுகிறார்
    ஆடுகிறார் பாடுகிறார் ஐயப்பனின் நினைவுடனே

    சபரிமலை ஏறிவிட்டால் பிணியகலும் என்கின்றார்
    நிறைவுதரும் மனமமைய சபரிமலை உதவுதென்பார்
    கறைமிடற்கு சிவனாரும் கரியநிற திருமாலும்
    இருவருமாய் இருப்பவனே ஐயப்பன் எனப்பகர்வார்

ஜெர்மனியில் திருவள்ளுவர்

.திருக்குறள் தமிழ் உலகின் பெருமை. சாதி, இனம், மதம் கடந்த ஒரு பொது முறையான திருக்குறளை ஐரோப்பியரும் போற்றினர். இதற்குச் சான்று தான் அவர்கள் திருக்குறளின் சிறப்பினை வியந்து அதனை தமது தாய்மொழிகளில் மொழிபெயர்த்து அதனை வெளியிட்டனர். அத்தகைய மொழிபெயர்ப்புக்களில் முக்கியத்துவம் பெறுவது திருக்குறளுக்கான ஜெர்மானிய மொழி பெயர்ப்பு. ஜெர்மானிய மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்த ஜெர்மானியர்களில் முதலில் குறிப்பிடப்பட வேண்டியவர் பாதிரியார் ஆகஸ்ட் ஃப்ரடெரிக் காமரெர் ஆவார். அவரது மொழிபெயர்ப்பு நூல் 1803ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதனை மீண்டும் மறுபதிப்பாக ஆங்கில மொழி அறிமுகத்துடன் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியிடுகின்றது. இந்த பெருமை மிகு வெளியீடு வருகின்ற 4.12.2019 அன்று ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் மாலை 6 மணிக்கு நிகழ்கின்றது. அனைவரும் வந்து கலந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
Linden-Museum, Hegelplatz 1, Stuttgart, Germany
டாக்டர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை - பன்னாட்டு அமைப்பு

தமிழீழ மாவீரர் நாள் – 2019 – மெல்பேர்ண்


2019ம் ஆண்டு தமிழீழ மாவீரர் நாள் மெல்பேணில் உணர்வுபூர்வமாக நினைவு கொள்ளப்பட்டது. ஒவ்வோராண்டும் வழமையாக நிகழ்வு நடைபெறும் ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் 27/11/2019 புதன்கிழமை மாலை 6 மணிக்கு நிகழ்வு தொடங்கியது.
மணியொலியுடன் தொடங்கிய நிகழ்வை பவித்திரன் சிவநாதன். சிரேக்சனா நந்தகரன் ஆகிய இருவரும் தொகுத்து வழங்கினர். பொதுச்சுடரினை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் திரு ரகுலேஸ்வரன் கிருஸ்ணபிள்ளை அவர்கள் ஏற்ற அதனைத் தொடர்ந்து தேசியக் கொடியேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. அவுஸ்திரேலியத் தேசியக்கொடியையும் தமிழீழத் தேசியக் கொடியையும் முறையே தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களான ஹரிதாஸ் ஞானகுணாளன், ரமேஷ் பாலகிருஷ்ணர் ஆகியோர் ஏற்றினர். தொடர்ந்து மாவீரர் லெப்.சங்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மருத்துவர் திரு. ஈஸ்வரன் கணபதிப்பிள்ளை அவர்களும் மாவீரர் 2ஆம் லெப். மாலதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த திருமதி கலைமதி கமலகுமார் அவர்களும் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து மாவீரர் குடும்பத்தினரும் உரித்துடையோரும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர் திருவுருவப்படத்துக்கு விளக்கேற்றி மலர்வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து பொதுக்கள் அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர். அடுத்ததாக அகவணக்கமும் அதனைத் தொடர்ந்து துயிலுமில்லப்பாடலும் ஒலிபரப்பப்பட்டது. அதன்பின்னர், உறுதியுரையை திரு கபிலன் நந்தகுமார் அவர்கள் வாசித்தார்.
கலைநிகழ்வுகளில் முதலாவதாக நடனாலயா பள்ளி மாணவர்களின் மாவீரர் வணக்க நடனம் இடம்பெற்றது. அதற்கு அடுத்ததாக செல்வன் துவாரகன் சந்திரன் அவர்களின் கவிதையும் சிற்றுரையும் இடம்பெற்றது. அவர் தனது உரையில் இன அடையாளங்கள், போராட்ட வரலாறுகளைப் பேணுதல், அவற்றை தமிழ்ப்பள்ளிகளில் கற்றுத்தர வேண்டிய முக்கியத்துவம், இங்கு பிறந்து வளரும் குழந்தைளுக்கும் எம் வரலாற்றை பெற்றோர்கள் சொல்லிக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்பன குறித்துப் பேசினார்.

பேச்சு சாத்தியமா?


01/12/2019  ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு தொடர்பில் பேச வேண்­டிய சூழ்­நி­லை­யொன்று விரைவில் உரு­வாகும். இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்துள்ள ஜனா­தி­ப­தி­யிடம் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இதுகுறித்து அழுத்­தம் கொடுப்பார்.   

வீழ்ச்சியும் விரிசல்களும்


01/12/2019 நடந்து முடிந்த எட்­டா­வது ஜனா­தி­பதித் தேர்தல் நாட்டில் பல்­வேறு அதிர்­வ­லை­களைத் தோற்­று­வித்­தி­ருக்­கின்­றது. இத்­தேர்தல் முடி­வுகள் நாட்டு மக்­களை இரு துரு­வங்­க­ளாக்­கி­யுள்­ள­தோடு ஒவ்­வொரு கட்­சி­யி­னதும் எதிர்­கால முன்­னெ­டுப்­புகள் தொடர்பில் ஆழ­மாகச் சிந்­திக்­கவும் வைத்­துள்­ளது. சிறு­பான்மைக் கட்­சி­களும் இதற்கு விதி­வி­லக்­காகி விட­வில்லை. சிறு­பான்மைக் கட்­சிகள் தேர்தல் முடி­வு­க­ளால் திக்குமுக்­கா­டிப் ­போ­யுள்­ளன.

உள்நாட்டுப் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துதல் புதிய ஜனாதிபதி கோத்தபாயவிற்குப் பெரியதொரு சவால்..!


-பி.கே.பாலசந்திரன்
01/12/2019 இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ வேறு எந்தவொரு தலைவரும் எதிர்நோக்காத கடுமையான உள்நாட்டு மற்றும் சர்வதேச சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியவராக இருக்கின்றார். பொருளாதார ரீதியானதாக இருந்தாலென்ன அல்லது அரசியல் ரீதியாக இருந்தாலென்ன அவரது உள்நாட்டுப் பிரச்சினைகள் வெளிநாட்டுப் பரிமாணம் ஒன்றையும் கொண்டிருக்கின்றன என்பது இங்கே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும். 
உள்நாட்டுப் பிரச்சினைகள் சர்வதேசமயமாவது 1980 களின் ஆரம்பத்திலிருந்து இலங்கை அரசியலில் ஒரு அம்சமாக இருந்து வருகின்றது. அந்த அம்சம் நெருக்கடிகளின் காலத்தை அநாவசியமாக நீடித்ததன் மூலமாக நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியைத் தாமதப்படுத்துகின்றது. அதனால் நெருக்கடிகள் தீவிரமடைந்ததுடன் கையாள முடியாதவையாகவும் மாறின. நாட்டின் நலன்களுக்குப் பாதகமான முறையில் விசேடமாகப் பொதுமக்களைப் பாதிக்கத்தக்க வகையில் பொருளாதாரத்தடைகள் விதிக்கப்படும் நிலையையும் அது உருவாக்கியது. எப்படி இருக்கப்போகிறார் புதிய ஜனாதிபதி?


25/11/2019  ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெற்­றி­யுடன், துட்­ட­கை­மு­னுவின் வர­லாறு மீண்டும் ஆரா­யப்­பட்டு வரு­கி­றது.
யார் இந்த துட்­ட­கை­முனு, அவ­ருக்கு ஏன் கோத்­தா­பய ராஜபக் ஷ முக்­கி­யத்­துவம் அளிக்­கிறார் என்­றெல்லாம், ஆய்­வா­ளர்கள் ஆராயத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

ராஜபக்ஷவின் வெற்றியும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்


25/11/2019  இலங்கை கால­நி­லையின் பிர­காரம், இரண்டு மழைக்­கா­லங்­க­ளுக்கு இடைப்­பட்ட ஒரு கால­மாக கரு­தப்­படும் ஒக்­டோபர் -– நவம்பர் மாதங்­களில் திடீ­ரென வீசும் காற்­றினால் எதிர்­பா­ராத வித­மாக வானிலை மாறி, திடீ­ரென மழை பெய்­வ­துண்டு. அப்­பேர்ப்­பட்ட ஒரு பரு­வ­கா­லத்தில் நாட்டின் ஆட்­சியில் சட்­டென குறிப்­பி­டத்­தக்க ஒரு கள­நிலை மாற்­ற­மொன்று நடந்­தே­றி­யி­ருக்­கின்­றது.
‘மாற்றம் ஒன்றே மாறா­தது’ என்­ப­தையும், காலங்கள் மாறும்­போது காட்­சி­களும் மாறிச் செல்லும் என்­ப­தையும் இந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் ஊடாக நாம் மீண்டும் உணர்ந்­தி­ருக்­கின்றோம். பெரும்­பான்மை மக்­களின் பெரும்­பான்மை ஆத­ரவைப் பெற்ற கோத்­தா­பய ராஜபக் ஷ இந்­நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக வெற்றி பெற்­றி­ருக்­கின்றார். சிறு­பான்மை முஸ்­லிம்கள் மற்றும் தமி­ழர்­களின் பெரும்­பான்மை ஆத­ரவைப் பெற்­றி­ருந்த போதும் சஜித் பிரே­ம­தாஸ தோல்­வி­ய­டைந்­தி­ருக்­கின்றார். இதுதான் கால­நி­யதி என்­றா­கி­யி­ருக்­கின்­றது.

ராஜபக்ஷவினருக்குள் உருவாகும் தலைமைத்துவப் போட்டி


25/11/2019 ஜனா­தி­பதித் தேர்­தலின் முடிவு, இலங்­கையின் அர­சியல் நடை­மு­றை­களில் பெரி­ய­ள­வி­லான மாற்­றங்­க­ளுக்கு வித்­திடும் சூழல் ஒன்றை உரு­வாக்­கி­யுள்­ள­தாக  தெரி­கி­றது. இந்த தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக்ஷ பெற்­றி­ருக்­கின்ற வெற்­றி­யா­னது, சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தி­க­ளுக்குப் பெருந்­தீ­னி­யாக அமைந்­தி­ருக்­கி­றது இது முதல் விடயம். இந்த வெற்­றியைக் கொண்டு, ராஜபக் ஷவினர் நிரந்­த­ர­மான அர­சியல்  இருப்­புக்கு வழி­தேடத் தொடங்­கி­யி­ருக்­கின்­றனர் என்­பது இரண்­டா­வது விடயம். இந்த இரண்டும் வெவ்­வே­றான விட­யங்­க­ளாக இருந்­தாலும், தனித்­த­னி­யாக இந்தப் பத்­தியில் ஆராய்­வது பொருத்தம்.

ஐனாதிபதியின் இந்திய விஜயம் உறவில் பரிமாணத்தை ஏற்படுத்துமா?


30/11/2019  பேரா­சி­ரியர் கொட­கார இலங்­கை யின் வெளிநாட்டுக் கொள்கை வகுத்தல் பற்றி குறிப்­பி­டும்­போது இலங்­கையின் வெளிநாட்­டுக்­கொள்­கையின் அத்­தி­பாரம் இந்­தி­யா­வு­ட­னான உற­வு­களே எனக் குறிப்­பிட்டார். (Corner stone of Sri Lankan Foreign Policy is its relations with India ) இலங்கை இந்­தி­யா­வுக்கு மிக அண்­மை­யி­ல­மைந்­துள்ள மிகப் பெரிய இடப்­ப­ரப்பு, சனத்­தொகை கொண்ட நாடென்­பது மட்­டு­மல்ல வர­லாற்­றுக்கு முந்­திய காலத்­தி­லி­ருந்து இலங்கை இந்­திய தொடர்­புகள் உற­வுகள் மிக நெருக்­க­மாக தொடர்ந்­த­மையும் பிர­தான கார­ண­மாகும்.

ஜனாதிபதித் தேர்தலில் இருந்து தமிழ்க்கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும் பாடங்கள்


ஜனாதிபதித் தேர்தல்கள் எப்போதுமே தமிழ் சமூகத்திற்குமா ஒரு நெருக்கடியைத் தோற்றுவிக்கின்றன. அண்மைய கடந்த காலத்தில் இந்தத் தேர்தல்கள் தமிழர்கள் வாக்களிப்பைப் பகிஷ்கரிக்க வேண்டுமா அல்லது யாராவது ஒரு வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமா என்ற விவாதங்கள் மூள்வதற்கு வழிவகுத்திருந்தன. தீவிர போக்குடைய விளிம்புநிலைக் குழுக்களே பெரும்பாலும் பகிஷ்கரிப்பை நியாயப்படுத்துகின்றன. ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் ஒரு விவகாரம். தமிழர்களின் பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்டதல்ல என்று கூறியே பகிஷ்கரிப்பை இந்தக் குழுக்கள் நியாயப்படுத்துகின்றன. அவ்வாறு கூறியே விடுதலைப் புலிகள் 2015 ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரித்தார்கள். அந்தத் தீர்மானம் இறுதியில் அவர்களின் அழிவுக்கே வழிவகுத்தது. தமிழ் அரசியல் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்ப்பது ஒரு பொது விதியாக இருந்துவருகிறது. ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் ஒரு தமிழரினால் வெற்றி பெறமுடியாது என்ற உண்மையும், தங்களுக்கு விருப்பமான தென்னிலங்கை வேட்பாளரின் வாய்ப்புக்களைப் பாதித்துவிடும் என்ற நம்பிக்கையுமே தமிழ் வேட்பாளர்களை நிறுத்தாமல் இருப்பதற்குத் தமிழ்க் கட்சிகள் தீர்மானித்தமைக்குக் காரணமாகும். 2019 ஜனாதிபதித் தேர்தல்களும் இத்தகைய இக்கட்டான நிலையை ஏற்படுத்தியது. 
வழமைபோன்றே 2019 ஜனாதிபதித் தேர்தலையும் பகிஷ்கரிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதிகப் பெறும்பான்மையான தமிழ் வாக்காளர்கள் அதை அலட்சியம் செய்தார்கள். பகிஷ்கரிப்பொன்றை விரும்பியவர்களுக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமை தாங்கினார். ஜனாதிபதித் தேர்தல்களைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்று பொன்னம்பலம் யோசனை முன்வைத்தது இதுதான் முதற்தடவையல்ல. 

ஜனா­தி­பதி தேர்தல் முடிவும் தமி­ழரின் எதிர்­கா­லமும்


28/11/2019 ஜனா­தி­பதி தேர்­தலை அடுத்து ஏற்­பட்­டுள்ள அர­சியல்  மாற்றம்  தொடர்­பிலும்    தமிழ் மக்­களின் எதிர்­கால  திட்­டங்கள் குறித்தும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு  உட்­பட தமிழ் கட்­சி­களின் தலை­மைகள் தற்­போது  ஆராய்ந்து வரு­வதை  காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.
ஜனா­தி­பதி தேர்­தலில் பொது­ஜன பெர­மு­னவின்  வேட்­பாளர்  கோத்­த­பாய ராஜ­பக் ஷ பெரும்­பான்மை சிங்­கள மக்­களின் ஆத­ரவைப் பெற்று   வெற்­றி­யீட்­டி­யுள்ளார்.  இந்த தேர்­தலில்  வடக்கு, கிழக்கு உட்­பட  நாட்டில்  உள்ள  சிறு­பான்­மை­யின மக்கள்  பெரும்­பான்­மை­யாக   புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு  ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தனர்.  இவ்­வா­றான நிலை­யிலும் பெரும்­பான்மை மக்­க­ளது   பெரும்­பான்மை வாக்­கு­க­ளைப்­பெற்று  ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வு­செய்­யப்­பட்­டி­ருக்­கின்றார். பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான புதிய  அர­சாங்­கமும்  பத­வி­யேற்­றி­ருக்­கின்­றது.

பெரும்பான்மை சமூகத்தினரின் விருப்பத்திற்கு மாறாக எதனையும் செய்யமுடியாது- அதிகார பகிர்வு குறித்த கேள்விக்கு கோத்தாபய பதில்- இந்துவிற்கு பேட்டி


01/12/2019 இலங்கையின் பெரும்பான்மை சமுகத்தினரின் விருப்பத்திற்கு மாறாக எதனையும் செய்ய முடியாது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்
த இந்துவிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களிற்கு நீதி சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி இந்திய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது, அதற்கு உங்கள் பதில் என்ன என்ற கேள்விக்கு பெரும்பான்மை சமுகத்தின் விருப்பங்களிற்கு எதிராக எதனையும் செய்ய முடியாது எனவும் நான் கருதுகின்றேன்.பெரும்பான்மை சமூகத்தின் விருப்பத்திற்கு மாறாக யாராவது ஏதாவது வாக்குறுதியளித்தால் அது பொய்.பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவேண்டாம் வேலைவாய்ப்பை வழங்கவேண்டாம் என எந்த சிங்களவரும் தெரிவிக்க மாட்டார்.ஆனால் அரசியல் விவகாரங்கள் வேறு மாதிரியானவை என கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினத்தவர்கள் முன்னால் மண்டியிடாத சிங்கள தலைவர் அவசியம் என்ற கொள்கையை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்- ஞானசார தேரர்


ஏபி
தமிழில் ரஜீபன்
27/11/2019  பல வருடங்களாக இலங்கை மன்னர்களின் முக்கிய பகுதியாக  விளங்கிய -சமீபத்தில் மதவன்முறைகளால் பாதிக்கப்பட்ட மலைகளின் நகரத்தில் , இலங்கை புதிய தலைவரை தெரிவு செய்திருப்பது குறித்து பௌத்த தலைவர்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
இலங்கையின் பெரும்பான்மை இனத்திற்கு இன்னொரு பொற்காலத்தை ஏற்படுத்துவார் அவர் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத ஒரு சிங்கள தலைவர் நாட்டிற்கு அவசியம் என்ற கொள்கையை நாங்கள் உருவாக்கினோம் என்கின்றார்,பௌத்தமதகுருவான ஞானசார தேரர்.
அந்த  கொள்கை வெற்றிபெற்றுள்ளது என அவர் குறிப்பிடுகின்றார்.

மழைக்காற்று தொடர்கதை - அங்கம் 12 - முருகபூபதி


வழக்கம்போன்று அபிதா அன்றும் அதிகாலையே துயில் எழுந்துவிட்டாள். முதல்நாள் இரவு அங்கிருப்பவர்கள் கட்டில்களுக்குச்சென்ற பின்னரும் விழித்திருந்து அந்த இரண்டு மாணவர்களின்  நாவன்மைப்போட்டிக்கான உரையை எழுதி,  திருத்தங்கள் செய்து முடிக்க பன்னிரண்டு மணியும் கடந்துவிட்டது.
ஜீவிகாவிடம் இரண்டு நீண்ட கடித உறைகளை வாங்கிவைத்திருந்தாள். அவற்றில் அந்த உரைகளை வைத்து, தனது அறையில் படுக்கை மீது வைத்திருந்தாள்.
காலை ஐந்து மணிக்கு அலார்ம் வைத்து எழுந்தவுடன், தேநீர் தயாரித்து அருந்தியவாறு, அந்த  உரையை மீண்டும் எடுத்து படித்துப்பார்த்தாள்.  அவளுக்கு பூரண திருப்தி.
இம்மாணவர்களுக்கு இவ்வாறு பேச்சு எழுதிக்கொடுத்ததை, ஊருக்குச்சென்று இன்றோ நாளையோ திரும்பவிருக்கும் கற்பகம் ரீச்சர் எவ்வாறு எடுத்துக்கொள்ளப்போகிறாள்..?  என்ற கவலையும் யோசனையும் அபிதாவுக்கு வந்தது.
இங்கே, ஜீவிகாவும் சுபாஷினியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் முறுகிக்கொண்டிருக்கிறார்கள். கற்பகம் ரீச்சர் வீட்டில் இல்லாதபோது என்னவெல்லாமோ  நடந்துவிட்டன.
சுபாஷினி தான் திட்டமிட்டவாறு இன்று பெட்டி படுக்கைகளுடன் மூட்டை கட்டிவிடுவாளோ..?  என்ற கவலையும் அபிதாவை ஆட்கொண்டது.
 “ நான் ஏன் இதற்கெல்லாம் அநாவசியமாக கவலைப்படவேண்டும். இந்த வீட்டுக்கு வேலைக்காரியாக வந்த எனக்கு இவர்களின் தனிப்பட்ட விவகாரங்களில் ஏன் எனக்கு  தீவிர அக்கறை. நானும் ஒரு பெண்ணாக இருப்பதனாலா..? 
இறுதிப்போருடன் பார்த்திபனின் உறவுகளின் புறக்கணிப்பு நாடகங்களினால்  தனித்துப்போயிருந்த எனக்கு கிடைத்திருக்கும் இந்த அடைக்கலத்தில் அன்பைத் தேடுவதற்கான உந்துதல் மனதில் தோன்றியிருக்கிறதா..?

வாழ்வை எழுதுதல் -- அங்கம் –06 தேவாலயங்களில் இறுதிமூச்சை காணிக்கையாக்கிய ஆத்மாக்கள் ! அரசியல்வாதிகளே…. நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்…!? - முருகபூபதி


அந்த   தேவாலயத்தின் முன்னால் நிற்கின்றேன்.  சில மாதங்களுக்கு முன்னர்தான் ஏப்ரில் மாதம் 21 ஆம் திகதி அங்கு பலர் தங்கள் இறுதிமூச்சை காணிக்கையாக்கினர்.
அவர்களின் பெயர்ப்பட்டியல் பதிவான காட்சிப்பலகையின் முன்னால் நின்று மௌனமாக பிரார்த்தித்தேன்.  பிரார்த்தனையின்போது அமைதி அவசியம்  என்று  சிறுவயதில் எனது அம்மாவும் பாட்டியும் அடிக்கடி சொல்லித்தந்திருக்கிறார்கள்.
எங்கள் வீட்டில்  நவராத்திரி , கந்தசஷ்டி விரத காலங்களில் பிரார்த்தனை வழிபாடு நடக்கும்போது அதற்கு இடையூறு தரும்வகையில் சத்தம் போடக்கூடாது, குழப்படி செய்யக்கூடாது என்று அம்மாவும் பாட்டியும் எச்சரித்துக்கொண்டே இருப்பார்கள்.
அவர்களுக்குப்பயந்து  அமைதியாக இருப்போம். வெள்ளிக்கிழமைகளிலும் திருவிழாக்காலங்களிலும் கோயில்களுக்கு செல்லும்போதும், அங்கே அமைதியாக இருக்கவேண்டும் என்றுதான் புத்தி சொல்லி அழைத்துப்போவார்கள்.
செவ்வாய்க்கிழமைகளில் அம்மா, எங்கள் ஊரில் சிலாபம் செல்லும் பாதையில் தழுபொத்தை என்ற இடத்தில் வரும் அந்தோனியார் கோயிலுக்கு அழைத்துச்செல்வார்கள். அங்கு மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கும்போது, அம்மா கையோடு எடுத்துவரும் தேங்காய் எண்ணெய் போத்திலை என்னிடத்தில் தந்து அங்குள்ள தீபவிளக்கிற்கு எண்ணெய் வார்க்குமாறு சொல்வார்கள்.
அந்தோனியார் கோயில் மிகவும்  அமைதியாக இருக்கும். வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் அங்கு செல்வோம். கோயில்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்வோம். ஊரின் புறநகரத்திலிருக்கும் பௌத்த விகாரைக்கு வெசாக், பொசன் பண்டிகை  காலங்களில் செல்வோம். எனினும் அங்கிருந்த பள்ளிவாசல்களுக்கு செல்லும் பழக்கம் இருந்ததில்லை. ஆயினும்,  அங்கிருந்த  அல்கிலால் மகா வித்தியாலயத்தில் மேல் வகுப்பு படிக்கும்போது, அவர்களின் பிரார்த்தனைகளை கேட்பதுண்டு. எனக்கு ஆசிரியர்களாக இருந்தவர்களில் அநேகர் இஸ்லாமியர். மூவினத்தவர்களும் செறிந்து வாழ்ந்த பிரதேசமாக  எங்கள் ஊர்  விளங்கியமையால், மூவினத்து நண்பர்களையும் சம்பாதித்திருக்கின்றேன்.

இலங்கைச் செய்திகள்


மே முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல்

"சிறுபான்மையின வாக்குகள் கிடைக்கவில்லை என்பதற்காக அவர்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்க்க எவரும் முயற்சிக்கக்கூடாது"

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

சவூதி அரேபிய தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிலிருந்து 900 பொலிஸ் அதிகாரிகள் நீக்கம்!

திருகோணமலையில் இந்திய கப்பல் 

யாழ் - சென்னை இடையிலான மற்றுமொரு விமான சேவை அடுத்த வருடம்

மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் 

கண்ணீர் காணிக்கைக்கு தயாராகும் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லங்கள் 

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

இரு நாடுகளின் வரலாற்றுத் தொடர்புகளை வலுவூட்டியுள்ள இலங்கை ஜனாதிபதியின் விஜயம்: இந்திய ஜனாதிபதி புகழாரம்

முக்கிய முடிவை அறிவித்தார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

யாழில் ரயிலை கவிழ்க்க முயற்சி!

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு - யாழ். மேல் நீதிமன்ற உத்தரவு

தூதரக பணியாளருக்கு கொழும்பில் நடந்தது என்ன? சுவிஸ் தூதரகம் உத்தியோகபூர்வ அறிக்கைமே முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல்

25/11/2019 பாராளு­மன்றத் தேர்தல் பெரும்­பாலும் அடுத்த ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் நடத்­தப்­ப­டு­வ­தற்கு வாய்ப்­புகள் உள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
விரைவில் பாரா­ளு­மன்றத் தேர்­தல் நடத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ கூறி­யி­ருந்­தாலும், பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­ப­தற்­கான அதி­காரம் மார்ச் முதலாம் திக­திக்குப் பின்­னரே அவ­ருக்கு கிடைக்கும்.
இந்த நிலையில், ஜனா­தி­பதி பாரா­ளு­மன்றத் தேர்தல் அறி­விப்பை வெளி­யிட்ட பின்னர், தேர்­தலை நடத்­து­வ­தற்கு, தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு குறைந்­தது இரண்டு மாதங்கள் தேவைப்­படும் என்று ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.
எனவே மார்ச் 2 ஆம் திகதி பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான அறி­விப்பை ஜனா­தி­பதி வெளி­யிட்­டாலும், மே மாதம் முதல் வாரத்­தி­லேயே தேர்தல் நடத்தப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  நன்றி வீரகேசரி 

உலகச் செய்திகள்


இங்கிலாந்தில் கொள்கலனிலிருந்து மீட்க்கப்பட்ட வியாட்நாமியர்களில் சடலங்கள் தாய் நாட்டிற்கு!

சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்மீது மிளகாய்த்தூள் வீச்சு

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் அசஞ்சே சிறையில் உயிரிழக்கும் ஆபத்து- 60 வைத்தியர்கள் கடிதம்

ஹொங்கொங் தேர்தலில் ஜனநாயக ஆதரவு குழுக்கள் பெரும் வெற்றி

ஜப்பானில் அணுகுண்டு தாக்குதல் இடம்பெற்ற நகர்களுக்கு பாப்பரசர் முக்கியத்துவ விஜயம்

லண்டனில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட உஸ்மான் கானின் அச்சமூட்டும் கடந்தகாலம்

வடகொரியா ஜப்பானிய கடலுக்குள் இரு ஏவுகணைகளை ஏவிப் பரிசோதனை

ஹொங்கொங் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தால் பதிலடி ; அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கைஇங்கிலாந்தில் கொள்கலனிலிருந்து மீட்க்கப்பட்ட வியாட்நாமியர்களில் சடலங்கள் தாய் நாட்டிற்கு!

27/11/2019 இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பகுதியில் கொள்கலன் ஒன்றிலிருந்து உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 வியட்நாமியர்களில் சடலங்களில் 16 பேரின் சடலங்கள் தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வியட்நாம் செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன. 

பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் 1969 - 2019 ச சுந்தரதாஸ் - பகுதி 22


நிறைகுடம்

சிறியளவில் படத்தயாரிப்பில் ஈடுபட்டு படிப்படியாக முன்னேறியவர்கள் முக்தா பிலிம்ஸ் ராமசாமி சீனிவாசன் சகோதரர்கள்.  ஜெமினி ஜெய்சங்கர் ரவிச்சந்திரன் என்று இவர்களின் நடிப்பில் படங்களை உருவாக்கிய சகோதரர்களுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது. அந்த ஆவலின் விளைவே நிறைகுடம் படம்!

சிவாஜியின் திரைவாழ்வின் ஆரம்பகாலம் முதலே முக்தா சீனிவாசனுடனான அறிமுகம் இருந்தே வந்துள்ளது.  பின்னர் சிவாஜி சீனிவாசன் இருவரும் காமராஜரின் காங்கிரஸ் கட்சியில் அங்கத்துவர்களாகவும் பணியாற்றினார்கள்.  இதனால் இருவருடையே ஏற்பட்ட நெருக்கமே படம் தயாரிப்பதற்கு ஏதுவானது.

தன்படங்களில் நடிக்கும் நடிகர்களுடன் பேரம் பேசி குறைந்த சம்பளத்திற்கு அவர்களை ஓப்பந்தம் செய்வதற்கு பெயர் போனவர் முக்தாபிலிம்ஸ் தயாரிப்பாளர் ராமசாமி.  அந்த அடிப்படையில் நிறைகுடம் படத்திற்கு சிவாஜியும் ஒப்பந்தமானார்.

முத்தமிழ் மாலை - 19 AMAF 08/12/2019
தமிழ் சினிமா - அடுத்த சாட்டை திரைவிமர்சனம்

சமுத்திரக்கனி நடிப்பில் 2012ல் வெளிவந்த படம் சாட்டை. பள்ளி ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என காட்டி நல்ல வரவேற்பையும் பெற்ற படம் அது. அதன் இரண்டாம் பாகம் 'அடுத்த சாட்டை' இன்று திரைக்கு வந்துள்ளது.
படம் எப்படி இருக்கு? வாங்க பாப்போம்.
கதை:
சாட்டை முழுவதும் பள்ளியை மையப்படுத்திய கதை என்றால், அடுத்த சாட்டை அப்படியே கல்லூரியில் நடப்பது போன்ற கதை. தயாளன் (சமுத்திரக்கனி) அப்பா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜில் தமிழ் ஆசிரியராக இருக்கிறார். மற்ற ஆசிரியர்கள் கடமைக்கு வேலை செய்துகொண்டு மாணவர்கள் மீது வெறுப்பை காட்டிக்கொண்டிருக்க, மாணவர்களுக்கு பிடித்தபடி நெருங்கி பழகி பாடம் நடத்தும் ஒரு சில ஆசிரியர்களில் சமுத்திரக்கனியும் ஒருவர்.
அந்த கல்லூரியின் தலைமை ஆசிரியர் தம்பி ராமையா. (அவர் தான் படத்தின் வில்லன்.) பல விஷயங்களில் அவருக்கும் சமுத்திரக்கனிக்கும் முட்டிக்கொள்கிறது.
தம்பி ராமையா மகன் பழனிமுத்து(யுவன்) அதே கல்லூரியில் படிக்கிறார். அவருக்கு அவரது வகுப்பில் இருக்கும் போதும் பொண்ணு (அதுல்யா) மீது ஒருதலை காதல். ஜாதி வெறி பிடித்த பழனிமுத்து அதுல்யாவிடம் பழகும் மற்றவர்களை தாக்குகிறார். கல்லூரியில் இருக்கும் அனைவரும் தங்கள் ஜாதிக்கு ஒரு குறிப்பிட்ட நிறத்தில் கயிறு கட்டிகொண்டிருக்கிறார்கள்.
ஒரு சமயத்தில் அதுல்யா வேற்று ஜாதியை சேர்ந்த ஒரு பையனுடன் நெருங்கி பழகுகிறார். அதனால் பல பிரச்சனைகளும் வருகிறது. மறுபுறம் அதே பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் ஒரு பெண்ணுடன் சமுத்திரக்கனியின் லவ் ட்ராக் ஓடுகிறது.
தன் காதல், மாணவர்கள் இடையில் ஜாதி வெறி, தம்பி ராமையா கொடுக்கும் குடைச்சல், மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் உள்ள சிக்கல் என பல்வேறு பிரச்சனைகளுக்கு சமுத்திரக்கனி எப்படி தீர்வு கண்டார் என்பது தான் மீதி படம்.
படத்தை பற்றிய அலசல்:
சமுத்திரக்கனி - மொத்த படமும் அவர் தலை மீது தான். அவரை சுற்றியே நடக்கும் கதை என்பதால் படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை எதாவது அறிவுரை கூறிக்கொண்டே இருக்கிறார். சாட்டை படத்தில் மற்ற கதாபாத்திரங்களிடம் பேசி அட்வைஸ் கொடுத்துக்கொண்டிருந்த சமுத்திரக்கனி, இந்த முறை நேராக படம் பார்க்கும் ஆடியன்ஸை பார்த்தே கருத்து சொல்கிறார்.
படிச்சது நியாபகத்தில் இல்லை என கூறும் மாணவனிடம், "உனக்கு சினிமா பிடிக்குமா. ஒவ்வொரு questionகும் பேரு வெச்சிக்கோ. இது அஜித் question, இது vijay question" என சமுத்திரக்கனி கொடுக்கும் அட்வைஸ் எல்லாம் தனி ரகம்.
நெகடிவ் வேடத்தில் நடித்த தம்பி ராமையா தான் நடிப்பில் பின்னியுள்ளார். அதுல்யா ரவி - கொடுத்த ரோலை கச்சிதமாக நடித்து கொடுத்துள்ளார். இண்டெர்வெல் காட்சியில் அவரது அந்த நீண்ட பேச்சு கவர்கிறது.
யுவன், புதுமுகம் கௌஷிக் (விக்ரம் வேதா நடிகர் பிரேம் குமாரின் மகன்), பசங்க பட புகழ் ஸ்ரீராம் என மற்ற நடிகர்களும் நடிப்பில் குறை வைக்கவில்லை.
முதல் பாதியில் மிக மெதுவாக பரபரப்பே இல்லாமல் ஓடும் நிலையில், இரண்டாம் பாதி ஓரளவு நம்மை நிமிர்த்து பார்க்க வைக்கிறது. சென்சார் போர்டு mute செய்துள்ள சில வார்த்தைகள் தான் தியேட்டரில் சிரிப்பலைகளை எழுப்புகிறது.
பாசிட்டிவ் & நெகடிவ்:
-ஜாதி பிரிவினைகள், தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுகிறது என்பது மட்டுமே இந்த படத்தின் பிளஸ்.
-சாட்டை படத்தில் பள்ளி சூழ்நிலை மற்றும் பிரச்சனைகளை ரியலாக காட்டியிருந்ததால் அது நம்மை வெகுவாக கவர்ந்தது. ஆனால் அடுத்த சாட்டையில் பல இடங்களில் அப்பட்டமாக பல விஷயங்களில் செயற்கைத்தனம் தெரிகிறது என்பதும், கொஞ்சம் கூட இடைவெளி விடாமல் அட்வைஸ் மேல் அட்வைஸ் கொடுக்கிறார்கள் என்பது மட்டுமே தான் பெரிய நெகட்டிவ்.
-ஒருவர் விடாமல் அனைவரும் கயிறு கட்டிக்கொண்டு அலைகிறார்கள் என்பது நம்பும்படியா இருக்கு?
-அப்பா கலை கல்லூரி என பெயரை படத்தில் காட்டும் இயக்குனர் ஷூட்டிங் ஸ்பாட்டில் சில விஷயங்களை கவனித்திருக்கலாம். ஷூட்டிங் நடப்பது அன்னை பொறியியல் கல்லூரி என படத்தில் சில இடங்களில் தம்பி ராமையா டேபிள் மீது இருக்கும் புத்தகமே காட்டிக்கொடுத்துவிடுகிறது.
அட்வைஸ் ஓன்றிரண்டு சொல்லலாம், ஆனால் படம் முழுவதும் ஒவ்வொரு நொடியும் அட்வைஸ் சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி?
மொத்தத்தில் 'அடுத்த சாட்டை' கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமான பாடம்.  நன்றி CineUlagam