மரண அறிவித்தல்


சங்கீதபூசணம் - இசைமணி திருமதி பூமணி ராஜரட்ணம் (முன்னாள் சங்கீத ஆசிரியை,  சாவகச்சேரி மகளீர் கலலூரி,  றிபேரக் கல்லூரி)சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அகில இலங்கை புகழ் பெற்ற சங்கீதபூசணம் இசைமணி திருமதி பூமணி ராஜரட்ணம் (சங்கீத ஆசிரியை) அவர்கள் ஏப்ரல் மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இராசம்மா நாகம்மா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை சின்னம்மா தம்பதியினரின் மருமகளும், காலஞ்சென்ற தம்பாபிள்ளை ராஜரட்ணம் அவர்களது மனைவியும், அம்சத்வனி(சங்கீத ஆசிரியர் சாவகச்சேரி), ராமகிருஷ்ணன் (கனடா), ஸ்கந்தராஜன் (USA) ஆகியோரது தாயாரும், மோகனராஜலிங்கம், அனுலா, செல்வி ஆகியோரது மாமியாரும் காலஞ்சென்றவர்களான நவநீதம், கருநேஸ்வரி மற்றும் நவரட்ணராஜா (கொழும்பு), நாகராஜா(சிட்னி) ஆகியோரது சகோதரியும் அபிராமி, கீர்த்தனா, நீருஷா, மீனாக்ஷி, ஆத்மிகா ஆகியோரது பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் ஏப்ரல் மாதம் 18ம் திகதி வியாழக்கிழமையும் மறுநாள் ஏப்ரல் மாதம் 19ம் திகதி வெள்ளிக்கிழமையும் மாலை 5மணி முதல் 9மணி வரை இல 420 Dundas street East, Mississauga அமைந்துள்ள  Scott Funeral Home ல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி முதல் அதே இடத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று அதன் பின்னர் இல 737 Dundas street Eastல் அமைந்துள்ள St Johns Dixie Cemetry, Mississauga வில் தகனம் செய்யப்படும். 
தகவல் : நாகராஜா
தொடர்புகளுக்கு கிருஷ்ணா 1 905 858 1435

மரண அறிவித்தல்

அமரர் டாக்டர் கனகரத்தினம் பாலாசுப்ரமணியம் 


Viewing

Date: 18 /04/2013 Thursday
Time: 6 pm - 7.45 pm
Venue: Liberty Funerals, 101 South Street, Granville

Final Rites
Date: 20/04/2013 Saturday
Time: 9.30 am - 12 Noon
Venue: Rookwood Cemetery South  Chapel


Cremation
Date: 20/04/2013 Saturday
Time: 12 Noon
Venue: Rookwood Cemetery South  Chapel


உற்றார், உறவினர், நண்பர்கள் இத்தகவலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மரண அறிவித்தல்

அமரர்  திருமதி பார்வதி தங்கநாயகம் வேலுப்பிள்ளை


மட்டக்களப்பு காரைதீவை பிறப்பிடமாகவும், சிட்னி Pennant Hills ஐ வதிவிடமாகவும்   கொண்ட திருமதி பார்வதி தங்கநாயகம் வேலுப்பிள்ளை அவர்கள் 15ஆம்  திகதி திங்கட்கிழமையன்று சிட்னியில் காலமானார். இவர் காலஞ்சென்ற Notary Public திரு P. K. வேலுப்பிள்ளையின் அன்பு மனைவியும், திரு சிவசுப்பிரமணியத்தின் (சிட்னி) அருமைத் தாயாரும், திருமதி சாந்தினியின் அன்பு மாமியாரும் திருமதி காயத்திரி மோகனன் (சிட்னி), செல்வன் சதீஷன்(U.S.A) ஆகியோரின் அன்புப் பாட்டியும், அணிதா, கிரண் ஆகியோரின் பூட்டியும், காலஞ்சென்றவர்களான திரு அரசரெட்ணம், திரு குணரெட்ணம், திருமதி செல்லப்பாக்கியம், திரு இராஜகுருநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரியுமாவார்.


Viewing

Date: 18 /04/2013 Thursday
Time: 9.30 am
Venue: T J Andrews Funeral Parlour, 2 Auburn Road, Auburn

Final Rites
Date: 18/04/2013 Thursday
Time: 10 am - 12 Noon
Venue: T J Andrews Funeral Parlour, 2 Auburn Road, Auburn


Cremation
Date: 18 /04/2013 Thursday
Time: 1 pm
Venue: Rookwood Cemetery West  Chapel


உற்றார், உறவினர், நண்பர்கள் இத்தகவலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலதிக விபரங்களுக்குப் பின்வரும் தொலைபேசி எண்களுடன் தொடர்புகொள்ளவும்.

சிவசுப்பிரமணியம் 0418245575
மோகனன் 0439439054

ஏக்கம் - செ.பாஸ்கரன்

.


வருசமொன்று 
புதிதாய் பிறக்க
வயதொன்று கூடி 
பழசாய் போகிறது
என்வாழ்வு

இளமை திரும்பாதென்ற
என் ஏக்கம்
அனுபவம் அணைப்பதாய்
மனது சாந்திபெற
புதிய ஆண்டில் 
கால்பதிக்கிறேன்.

14 04 2013

சிட்னி முருகன் ஆலயத்தில் சித்திரை வருடபிறப்பு

.
சிட்னி முருகன் ஆலயத்தில் சித்திரை வருடபிறப்பு  மிக கோலாகலமாக இடம் பெற்றது. ஆலயம் நிறைந்த பக்தர்கள் வருகை தந்திருந்தார்கள் .
அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர் விழா 2013 20 .04 13

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் நடாத்தும் தமிழ் எழுத்தாளர் விழா 2013, சிட்னியில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை முழுநாளாக நடைபெறும் இவ்விழாவில் வெளியிடப்படும் விழா மலருக்கு இலக்கியகர்த்தாக்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து பின்வரும் தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

 கட்டுரைத் தலைப்புகள்  
அ. தமிழ் வளர்ச்சியில் இசையும் கலையும்
ஆ. இணையமும் தமிழ் இசைவும்.
இ. தமிழ்க் கல்வியில் அடுத்த கட்டம்.

பிரசுரத்திற்கென கிடைக்கப்பெறும் கட்டுரைகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட ஆக்கங்கள் கலந்துரையாடலுக்காக ஆய்வரங்கில் சேர்த்துக்கொள்ளப்படும்.  வழமை போல இம்முறையும் மாணவர்களுக்கும், வளர்தோருக்குமென தனித்தனியாக இரு வேறு அமர்வுகள் இடம்பெறுகின்றன.
கட்டுரைகள் A4 தாளில் இரு பக்கங்களுக்கு மேற்படாமல் கணினியில்    ஒருங்குறியில் (யூனிகோட்) தட்டச்சிடப்பட்டு மென் பிரதியாக (Soft copy – Word Format only) மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படல் வேண்டும்.  கணினியில் தட்டச்சிட முடியாதவர்கள் கட்டுரைகளை 250 சொற்களுக்கு மேற்படாமல் தாளின் ஒருபக்கத்தில் எழுதி அனுப்பலாம்.
கட்டுரைகளை அனுப்பிவைக்கவேண்டிய இறுதித் தினம் மார்ச் மாதம் 03ஆம் திகதி (03/03/2013) ஆகும்.
விழா இடம்பெறும் இடம் மற்றும் பிற விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்புகளுக்கும் மேலதிக விபரங்களுக்கும்:
            மாத்தளை சோமு –  02 96366674
      சௌந்தரி கணேசன் - 0433 343 007
      திரு திருநந்தகுமார் – 0403534458  
      மின்னஞ்சல்: thirunantha@gmail.com
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்துடன் தொடர்புகொள்ள;
பாடுமீன் சு சிறீகந்தராசா ( தலைவர்) 03 9465 1319

வருசப்பிறப்பு வந்திட்டுது --கானா பிரபா


புதுவருசம் பிறக்கப் போகுதெண்டா ஊரிலை இருக்கிற குஞ்சு குருமானுகளுக்கு மட்டுமே கொண்டாட்டம், பெரியாக்களுக்கும் தானே. வருசப்பிறப்பிறப்புக்கு முதல் இரண்டு மூண்டு நாட்களுக்கு முன்னமே எங்கட வீட்டிலை குசினி (அடுக்களை) அடுப்பு எல்லாம் சாணத்தாலை மெழுகி, மச்சப்பாத்திரமெல்லாம் மீன் வெடுக்குப் போக சாம்பலால் தேச்சுக் கழுவி பின் பக்கம் இருக்கிற அறைப்பக்கமா கவுட்டு வச்சிடுவா அம்மா. அப்பாவின்ர வேலை தூசி தட்டி, எல்லா அறையும் கழுவி வச்சிடுவார். வீடு காயும் மட்டும் அறையளுக்குள்ளை போகேலாது எண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போட்டு விடுவினம். வெளியில முத்தத்தில இருக்கிற வேப்பமர நிழலில் கதிரை போட்டு சாப்பாடு தருவினம். பள்ளிக்கூட லீவும் விட்டுவிடுவினம் என்பதாலை ஊரிலை இருக்கிற குஞ்சு, குமர் எல்லாம் இப்பிடித்தான் இருக்க வேண்டிய நிலை பாருங்கோ.

வரியப்பிறப்புக்கு முதல் நாள் கோயிலடிக்குப் போய் ஐயர் வீட்டுப் படலையைத் தட்டி ஒரு ருவா குடுத்தா, கொண்டு போன பிளாஸ்டிக் போத்தலுக்குள்ளை,அல்லது சருவசட்டிக்குள்ளை நிறைய மருத்து நீரை அள்ளி இறைப்பார். மருத்து நீர் எண்டா என்ன எண்டு ஆவெண்டு வாயைப் பிளக்காதேங்கோ, மாட்டின் கோசலத்தோட இன்ன பிற திரவியங்களும் கலந்து, அறுகம்புல்லையும் நிறைச்சு ஒரு பெரிய கிடாரத்துக்குள்ளை ஐயர் கலக்கி வச்சிருப்பார். 

நித்திரை வந்தாத் தானே, நாளைக்கு வரியம் பிறக்கும் எண்டு மனசுக்குள்ளை ஒரே புழுகம். 

அந்த நாளும் வந்திட்டுது. வருசம் பிறக்கிறதுக்கு முன்னமேயே முதல் நாள் வாங்கி வச்ச மருத்து நீரை எல்லாற்றை தலையிலும் தடவி விடுவார் அப்பா, கடைசியா தன்ர தலையில் மிச்சத்தை ஒற்றி விட்டுட்டு கிணத்தடிப் பக்கம் அனுப்புவார். ஏற்கனவே அயலட்டைச் சனமும் பங்குக் கிணற்றுக்கு இரண்டு பக்கமும் நிண்டு தண்ணி அள்ளித் தோஞ்சு கொண்டு நிக்கும் பாருங்கோ. நாங்களும் அதுக்குள்ளை ஒருமாதிரி இடம்பிடிச்சு சலவைக் கல்லுக்கு மேலை குந்திக் கொண்டிருப்பம். துலாவாலை அள்ளின தண்ணீரை அப்படியே சளார் எண்டு பாய்ச்சுவார் அப்பா.

சிட்னியில் சித்திரைத் திருவிழா

.

இலங்கைச் செய்திகள்


இந்தியா விடுதலைப் புலிகளுக்கு 50 இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியது: விக்கிலீக்ஸ்

வடகொரிய எச்சரிக்கை தொடர்பில் அவசர தீர்மானங்கள் எடுக்கப்பட மாட்டாது: அரசாங்கம்

பேரினவாத செயற்பாடுகளால் மந்த நிலையில் இருந்த முஸ்லிம் பிரதேசங்கள் களைகட்டின

சிட்னியில் சித்திரைத் திருவிழா - நாள் முழுக்க 21 .04 13 தமிழர்களின் கொண்டாட்டம் !! காசில் ஹில் லோயர் ஷோ

.

இருவேறு பார்வைகள் - கே.எஸ்.சுதாகர்
இன்று காலை 11 மணிக்கு எனக்கொரு ஹொஸ்பிட்டல் அப்பொயின்மன்ற் இருந்தது. தேநீர் குடித்துவிட்டு அவசர அவசரமாகப் புறப்படுகின்றேன். இந்தத்தடவை இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்காமல் ஹொஸ்பிட்டலைவிட்டு நான் திரும்பப் போவதில்லை.

மூன்றாவது தடவை ஒப்பரேஷன்.


முதன்முதலில் இந்த வைத்தியசாலைக்கு வந்தபோது, 'Fistula' என்று அந்த இளம் டாக்டர் சொன்னதும் நான் சிரித்துவிட்டேன். பென்குவின் போன்ற உதடுகளைக் கொண்ட அந்த பிலிப்பீன்ஸ் நாட்டுப்பெண், ஏதோ தனது பாஷையில் சொல்கின்றாளாக்கும் என நினைத்துக் கொண்டேன். ஆனால் சிரிப்பதற்கு இதில் எதுவும் இல்லை என்று பின்னர் புரியலாயிற்று. பயந்து விடாதீர்கள். 'பிஸ்ரியூலா' என்பது ஒரு வருத்தத்தின் பெயர். இந்தமாதிரி ஒரு வருத்தம் எமது நாடுகளில் வந்திருந்தால், அதைக் குணப்படுத்த எடுக்கும் செலவை ஈடு செய்ய வாழ்நாள் முழுக்க உழைக்க வேண்டியிருந்திருக்கும். இங்கு அவுஸ்திரேலியாவில் எல்லாமே இலவசம். வருத்தங்களும் இலவசம். அது எனக்கு எப்படி வந்தது என்பதை உங்களுக்கு நான் சொல்லியாக வேண்டும். அது ஒரு சிறு சரித்திரம்.

நாட்டுப்பற்றாளர் நாள் – 2013 விக்ரோறியா, அவுஸ்திரேலியா


தமிழர் ஒருங்கிணைப்புக்குழு,
விக்ரோறியா,
அவுஸ்திரேலியா.
30.03.2013

நாட்டுப்பற்றாளர் நாள் – 2013 ஐ முன்னிட்டு நடாத்தப்படும் அன்னை பூபதி பொது அறிவுப் போட்டி தொடர்பான அறிவித்தல்.
அன்புடையீர்,
எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு ஆண்டுதோறும் வழமையாக நடாத்தப்பட்டுவரும் அன்னை பூபதி பொது அறிவுப்போட்டி இவ்வாண்டும் நடைபெறவுள்ளதால் அப்போட்டியில் பங்குபற்றும் அணிகள் தங்களை முற்கூட்டியே பதிவுசெய்துகொள்ளும்படி அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
காலம்: 21-04-2013 ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணி
இடம்: Preston Shire Hall (next to town hall) 286 Gower St, VIC. 3072

தமிழ் - சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை


முருகபூபதி


படைப்பிலக்கியவாதிகளினதும் ஊடகவியலாளர்களினதும் கலைஞர்களினதும் பிரதான கடமை குறித்து தீவிரமாக சிந்தித்து செயலாற்றவேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
இலங்கையில் அரசியல்வாதிகளும்இ பேரினவாதிகளும் எவ்விதம் செயற்பட்டபோதிலும்இ மேலே குறிப்பிட்ட மூன்றுபிரிவினரும் இனநல்லுறவுஇ மதநல்லிணக்கம்இ இனமதமொழிவேறுபாடற்ற மனிதநேயம் என்பனபற்றி அக்கறையுடன் கலந்துரையாடவேண்டியது அவசியம்.
குறுகிய சிந்தனைகள்தான் மக்களை பிரிக்கும் அல்லது பிளவுபடுத்தும் சாத்தான். அந்த சாத்தானை ஓட ஓட கலைத்துவிடவேண்டும்.
தேசிய இனப்பிரச்சினைக்கு மூலகாரணமாக இருப்பது மொழி மற்றும் இனம்சார்ந்த விவகாரங்கள்தான். ஆனால் மனிதநேயம் அனைவருக்கும் பொதுவானது.
நீரிழிவுஇ புற்றுநோய்இ எயிட்ஸ் உட்பட பல உலகப்பிரசித்திபெற்ற நோய்கள் அல்லது உடல் உபாதைகள் எவருக்கும் வரலாம். ஒரு நோய் ஒருவரைத்தொற்றிக்கொள்ளும்பொழுது அவரது இனம் இமதம்இ மொழிஇ பிரதேசம் பார்ப்பதில்லை. அதுபோன்று நோயாளிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவர் (டொக்டர்) தன்னிடம் வரும் நோயாளியை இனஇ மதஇ மொழி வேறுபாடுகளுக்கு அப்பால்தான் கருணையுடன் சிகிச்சைக்கு உட்படுத்தி குணமடைவதற்கு பணியாற்றுகிறார்.
அந்த வகையில் படைப்பாளிகளும் (றசவைநசள) ஊடகவியலாளர்களும் (தழரசயெடளைவள) கலைஞர்களும் (யுசவளைவள) மக்களிடம் உருவாகும் இனமுறுகல் உபாதைகளுக்கு சிகிச்சை அளிக்கும் தொண்டர்களாகவேண்டும். அவர்கள தமது படைப்புகளின் ஊடாக நஞ்சை விதைத்தால் அந்த நஞ்சு இறுதியில் அவர்களையே அழித்துவிடும்.


நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து


.

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………23
சுஜாதா – ‘இரயில் புன்னகை’
வே.சபாநாயகம்.

 எழுதுகிறவனுக்கு கவனம் முக்கியம். எல்லோரும் கவனிக்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் கவனிப்பதில்லை. யோசித்தப் பார்த்தால் நாம் கவனிக்க விரும்புவதைத்தான் கவனிக்கிறோம் – நம் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப. எப்படி? சொல்கிறேன்.
 சின்ன வயசில் எங்கள் மாமா வீட்டுக் கல்யாணத்தில் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் சங்கீதக கச்சேரி. அய்யகார் ரொம்ப ரசித்து ‘தோடி’ பாடிக் கொண்டிருந்தார். மாமா என்னை ரகசியமாய்க் கூப்பிட்டு “டேய்! அவர் என்னத்தையோ அப்பப்ப வாயில் போட்டுக்கிறாரே அது என்னன்னு போய்ப் பார்த்துட்டு வா” என்றார் மாமா கவனித்தது தோடியை அல்ல.
 இரண்டாவது உதாரணம் : ‘இலக்கிய சிந்தனை’யில் “கதையின் கதை” என்கிற தலைப்பில் தொல்காப்பியத்திலிருந்து துவங்கி மேற்கோள்கள் காட்டி, தீவிரமான ஆராய்ச்சிக் கட்டுரை போல எனக்கே திருப்தி தரும்படியாகப் பேசினேன். பேச்சு முடிந்த்தும் ஒரு எழுத்தாள அன்பர் என்னை அணுகி, “உங்கப் பேச்சைக் கேட்டேன்; ஏன் அப்பப்ப மூச்சிறைக்கிறது உங்களுக்கு? ஏதாவது ஹெல்த் ப்ராபளமா?” என்றார். அவர் கவனித்த்து பேச்சை அல்ல; மூச்சிறப்பை மட்டுமே.
மூன்றாவது  – அமெரிக்காவில் ஒரு பரிசோதனை. ஒரு  ஆளைக் கொலை பட்டினி போட்டு ஒரு அழகான சித்திரத்தை அவனிடம் காட்டினார்கள். அவனுக்கு சித்திரத்தில்  ஓரத்தில் வரைந்திருந்த திராட்சைப் பழம் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிந்ததாம்.

எழுத்தாளர் விழாவில் எஸ்.கிருஷ்ணமூர்த்தியின்மறுவளம்

.

ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி அவுஸ்ரேலியா சிட்னியில் நடைபெறவுள்ள எழுத்தாளர் விழாவில் எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் மறுவளம் என்னும் புத்தகம் வெளியீட்டு நிகழ்வும் இடம் பெறவுள்ளது. அந்த புத்தகத்திற்கு கவிஞர் கருணாகரன் எழுதிய முன்னுரை.இது எஸ். கிருஷ்ணமூர்த்தியின் பல வகை எழுத்துகளைக் கொண்ட ஒரு  தொகுப்பு. அனுபவங்களின் பதிவு. திரைப்படங்களைக் குறித்த பார்வை. நேர்காணல்இ புத்தக விமர்சனம், ஆளுமைகளைப் பற்றிய வெளிப்பாடு எனப் பல வகையில் அமைந்த எழுத்துகள் இதிலுண்டு. ஆறு பிரிவுகளாக இவை தொகுக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணமூர்த்தி எழுதிய சிறுகதைகள் இதில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அவை பின்னொருபோது இன்னொரு புத்தகத்தில் கிடைக்கலாம். பொதுவாக நமக்குக் கிடைக்கும் புத்தகங்கள் ஏதோ ஒரு வடிவத்தை மையப்படுத்தியிருக்கும். சிறுகதை அல்லது நாவல் இல்லையென்றால் கவிதை அல்லது கட்டுரை என்று ஏதோ ஒரு வகைப்பாட்டுக்குள். ஆனால், இங்கே அவ்வாறில்லாமல் தான் எழுதியவற்றில் ஒரு தொகுதியை எடுத்து பல வகை  எழுத்துகளை உள்ளடக்கிய ஒரு களஞ்சியமாக உருவாக்கி, இவற்றைத் தருகிறார் கிருஷ்ணமூர்த்தி. ஏறக்குறைய ஒரு சஞ்சிகையைப்போல இதை நாம் வாசிக்கலாம். இதன்மூலம் கிருஷ்ணமூர்த்தியின் ஈடுபாடுகளை நாம் அறிய முடிகிறது. அதேவேளை அவர் கொண்டுள்ள அக்கறைகளின் வழியாக நாமும் பல விசயங்களைத் தெரிந்து கொள்ள வாய்க்கிறது.

உலகச் செய்திகள்

இங்கிலாந்தின் இரும்புப் பெண்மணி மார்கிரட் தட்சர் காலமானார்!

மும்பை தானே கட்டிட விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக உயர்வு

வடகொரிய ஏவுகணைகள் தயார் நிலையில்!

=======================================================================

இங்கிலாந்தின் இரும்புப் பெண்மணி மார்கிரட் தட்சர் காலமானார்!

08/04/2013 இங்கிலாந்தின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்படும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மார்கிரட் தட்சர் தனது 87 வயதில் இன்று காலமானதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர் 1979 முதல் 1990 வரையான காலப்பகுதியில் பிரித்தானியாவின் பிரதமராக பதவி வகித்தார்.
http://www.virakesari.lk/image_article/article-2305754-192CCA51000005DC-239_634x480.jpg
மேலும் 20 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் 3 வருடங்களுக்கு தொடர்ச்சியாக பிரதமராக தெரிவு செய்யப்பட்ட ஒரே நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவின் முதல் பெண் பிரதமரான இவர் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு 2002 ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற்றார்  நன்றி வீரகேசரி

சாதி….! - மலை மங்கை

.
என் மனைவி சுமி போன்செய்திருந்தாள். இன்று கீதனை படசாலையிலிருந்து வீட்டுக்கு கூட்டிச்செல்லும்படி. தனக்கு அலுவலகத்தில் அவசர வேலை இருப்பதால் என்னைத்தான் மகன் கீதனை அழைத்துச்செல்லும்படி அன்புக்கட்டளை  இட்டிருந்தாள். இரண்டு மணித்துளிகள் விடுப்பு எடுத்துக்கொண்டு கீதனின் பாடசாலைக்கு விரைந்தேன். கீதன் அங்கு என்னை எதிர்பார்க்கவில்லை என்பது என்னைக்கண்டதும் அவன் முகம் மாறியதிலிருந்து என்னால் உணரமுடிந்தது.
“Where is mum? What happened to her? …” அவன் கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்தன. கீதனுக்குப்பக்கத்தில் ஒரு சிறுமி நின்றிருந்தாள். அவளும் என்னைக்கண்டு மிரண்டாள். அவள் மிரட்சியும் பார்வையும் அவளும்கூட என்னை எதிர்பார்க்கவில்லை என்பது புரிந்தது.
“எங்கே அன்ரி? ..” சிறுமியின் வாயிலிருந்து வார்த்தைகள் தயங்கித் தயங்கி வெளிவந்தன. ஆனால் வார்த்தைகளை அவள்முடிக்கவில்லை. என்னிடமிருந்து பதிலையும் அவள் எதிபார்த்ததாக தெரியவில்லை.
“Bye Keethan .. Cherrio..” கூறிவிட்டு அவள் நகர்ந்துவிட்டாள்.
தனித்துவிடப்பட்ட கீதன் ஓடிவந்து புத்தகப்பையை ஒருபுறமாக காரினுள் எறிந்துவிட்டு முன் சீட்டில் எனதருகில் அமர்ந்து சீட் பெல்ட்டை பொருத்தினான். ஆங்கிலத்தில் கதைக்கும் என் மகன் கீதனும் ஆங்கிலத்திலும் தமிழிலும் கதைக்கும் சிறுமியும் என் எண்ணத்தில் வந்து போனார்கள். கீதன் தமிழை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவனுடன் எப்பொழுதுமே தமிழில் தான் நாம் கதைப்போம். ஆனால் அவன் எம்முடன் ஆங்கிலத்தில்தான் பதில் கூறுவான். இத்தனைக்கும் கீதனுக்கு ஐந்து வயதுதான் ஆகிறது. முதலாம் ஆண்டு ஆரம்ப பாடசாலையில் பட்டிக்கிறான். தமிழ் நன்றாகதெரியும். ஆனால் வெளியில் காட்டிக்கொள்வதில்லை. நாம் இங்கிலாந்துக்கு வந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகின்றன. இங்குதான் கீதன் பிறந்தான். வசதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். சுமியும் நானும் உயர் பதவிவகிக்கின்றோம். ஆனாலும் மனதில் ஒரு ஏக்கம். ஏப்படி கீதனை இங்குள்ள சூழலில் நல்லபடியாக வளர்த்தெடுப்பது என்பது, மற்றது இன்னுமொரு பிள்ளை பெற்றெடுப்பதா வேண்டாமா போன்ற யோசனைகள்.
”Dad ..” கீதனின் குரல். அவன் கேள்விகளுக்கு பதில் சொல்வது கடினம். என்ன கேட்கப்போகின்றான். யோசித்தபடி அவனைத்திரும்பிப் பார்த்து நான் முந்திக்கொண்டேன்.

மணிவிழா நாயகர் கலாமணி

அமைதியும் ஆற்றலும் ஆளுமையும்  இணைந்த இலக்கிய கலாவித்தகர்
மணிவிழா நாயகர் கலாமணி
                                            முருகபூபதி

எல்லாமே நேற்று நிகழ்ந்தது போலிருக்கிறது. காலங்கள் நடக்கவில்லை. சக்கரம்பூட்டிக்கொண்டு ஓடுவதனால்தானோ என்னவோ,  நண்பர் கலாமணியுடனான நட்புறவின் தொடக்கமும் நீட்சியுற்ற நேசமும் பல்வேறு நிகழ்வுகளின் ஊடே மனதில் பசுமையாக நிறைந்திருக்கிறது.
இலங்கையில் கலாமணிக்கும் எனக்குமிடையே துளிர்த்த நட்பு அவுஸ்திரேலியாவில்தான் கொடியாக,  செடியாக,  மரமாக செழித்து கிளைவிட்டு படர்ந்தது என கருதுகின்றேன். அவர் தனது பட்டமேற்படிப்பு ஆய்வுக்காக அவுஸ்திரேலியா சிட்னிக்கு வந்தார். நான் வாழ்ந்த மாநில மாநகரம் மெல்பன்.
மனைவி,  பிள்ளைகளை விட்டுப்பிரிந்து வரும் துயரத்தை கடந்துவருதல் என்பது எத்தகைய மனஉளைச்சல் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றேன். ர்ழஅந ளiஉம இடம்பெயர்ந்தவர்களும் புலம்பெயர்ந்தவர்களும் அனுபவித்த புத்திக்கொள்முதல்தான்.
எனினும் தான் வந்தநோக்கத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து,  அந்த இக்கட்டான காலகட்டத்தை கடந்துவந்தவர் கலாமணி. சிறிது காலத்தில் மிகவும் பிரயாசைப்பட்டு மனைவி மக்களை இங்கு அவர் அழைத்துக்கொண்டபின்பு ஓரு குடும்பத்தலைவன் என்ற முறையில் அவர்களின் எதிர்காலம் குறித்த ஏக்கமும் கவலையும் அவரது மனதில் கொழுவேறியது.


தமிழ் சினிமா


MailPrint

சென்னையில் ஒரு நாள் 

சில வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரன் எனும் இளைஞனின் இதயத்தை சிறுமி அபிராமிக்கு பொருத்தி அச்சிறு‌மியை உயிர் பிழைக்க செய்த நிஜமான சாதனை கதை தான் "சென்னையில் ஒரு நாள்".
ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணன் தம்பதிகளின் ஒரே மகன் விபத்தில் சிக்குகிறான். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறான்.
அதே நேரத்தில், பிரகாஷ்ராஜ்–ராதிகாவின் ஒரே மகள் இதய நோய் காரணமாக ஆபத்தான நிலையில் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள்.
யாராவது இதய தானம் செய்தால், அவர் பிழைத்துக் கொள்வார் என்கிற நிலையில் ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணா தம்பதிகள் மனதை கல்லாக்கிக் கொண்டு தங்கள் மகனின் இதயத்தை தானம் செய்ய முன் வருகிறார்கள்.
தானமாக பெற்ற இதயத்தை சென்னையில் இருந்து வேலூருக்கு கார் மூலம், ஒன்றரை மணி நேரத்தில் கொண்டு போனால்தான் அந்த பெண் பிழைப்பார்.
இத்தனை குறுகிய காலத்தில், வேலூருக்கு போகமுடியாது என்று மற்ற பொலிசார் அனைவரும் பின்வாங்கும்பொழுது, சேரன் மட்டும் துணிச்சலாக முன்வருகிறார்.
அவர் சென்னையில் இருந்து ஒன்றரை மணி நேரத்தில் காரில் வேலூர் போக முடிந்ததா? தானமாக பெற்ற இதயம் அந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டதா? அவர் உயிர் பிழைத்தாரா? என்பது, இருக்கை நுனியில் அமரவைக்கும் பதற்றமான ‘கிளைமாக்ஸ்.’
பொலிஸ் கமிஷனர் வேடத்தில் சரத்குமார், கம்பீரம் காட்டுகிறார். சென்னைக்கும், காஞ்சிபுரத்துக்கும் இடையில் வயர்லஸ் தொடர்பு துண்டிக்கப்பட்டு, கார் காணாமல் போனதும் அவரும் பதறி படம் பார்ப்பவர்களையும் பதற வைக்கிறார்.
தானம் பெற்ற இதயத்தை வேலூருக்கு மின்னல் வேகத்தில் கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு மிகுந்த பொலிஸ் கார் டிரைவராக சேரன்.
பொலிசாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதையே நினைத்து வருந்தும்போது அவர் முகத்தில் காட்டிய உணர்ச்சிகளை, பயங்கர வேகத்தில் காரை ஓட்டிச் செல்லும்போதும் காட்டியிருக்கலாம்.
செல்வாக்கு மிகுந்த நட்சத்திர நடிகராக பிரகாஷ்ராஜ், கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். அவருடைய மனைவியாக ராதிகா. பெரிய நட்சத்திர நடிகராக இருந்தாலும், குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்று பிரகாஷ்ராஜுக்கு பொறுப்பை உணர்த்துகிற காட்சியில், ராதிகா ராதிகாதான்.
மகனின் உயிர் இயற்கையாக பிரிவதற்கு முன்பே அவருடைய இதயத்தை தானம் கொடுக்கிற அனுதாபத்துக்குரிய தந்தை–தாயாக ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணா.
மகனின் இதயத்தை சுமந்து கொண்டு கார் போகிற காட்சியை பார்த்து, இருவரும் வாய்விட்டு கதறுகிற இடத்தில் படம் பார்ப்பவர்களின் கண்களும் குளமாகி விடுகின்றன.
விபத்துக்குள்ளாகும் இளைஞராக சச்சின், அவருடைய காதலியாக பார்வதி, டொக்டராக பிரசன்னா ஆகிய மூவரும் அந்தந்த கதாபாத்திரங்களாக கண்ணுக்குள் நிற்கிறார்கள்.
கதையை அதன் போக்கில் நகர்த்தி செல்லும் அம்சங்களாக பின்னணி இசையும், ஒளிப்பதிவும் அமைந்துள்ளன. வித்தியாசமான ஒரு கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார், இயக்குனர் ஷஹித் காதர்.
பிரகாஷ்ராஜ்–ராதிகாவின் மகள் இதய நோயாளி என்பதை ஆரம்ப காட்சிகளில் காட்டியிருக்கலாம் அல்லது உணர்த்தியிருக்கலாம்.
அதேபோல் பொலிஸ் கமிஷனர் அலுவலகம் சம்பந்தப்பட்ட காட்சிகளை, இன்னும் சிரத்தை எடுத்து படமாக்கியிருக்கலாம்.
மருத்துவமனையில் சச்சின் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில், காதலி பார்வதி கலங்கிய கண்களுடன் அங்கு வருவதும், அவரை ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணா பார்ப்பதும், சச்சின் இறந்தபின் பார்வதியிடம், ‘‘அப்பாவும், அம்மாவும் வீட்டில் இருக்கிறோம். நீ கொஞ்சம் வர முடியுமாம்மா?’’ என்று ஜெயப்பிரகாஷ் போனில் கேட்பதும், சோகமும் சுகமும் கலந்த கவிதை.
மொத்தத்தில் "சென்னையில் ஒரு நாள்", "சிறப்பான ஒரு நாள்"
நன்றி விடுப்பு