சிட்னியிலே கம்பன் கழகம் “கம்பன் விழா” நிகழ்ச்சியில் கம்பவாரிதிக்கு வாழ்த்துப்பா

சிட்னியிலே கம்பன் கழகம் “கம்பன் விழா”வை  அண்மையில் வெகு சிறப்பாகக்கொண்டாடிது.  கம்பன் கழகத்தை ஆரம்பித்துவைத்த கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள் ஈழநாட்டிலிருந்து சிட்னிக்கு வருகைதந்து மூன்று நாள்களாகத் தொடர் சொற்பொழிவாற்றி விழாவிற் கலந்து  சிறப்பித்தமை எல்லோராலும் பாராட்டப்பட்டது. இறுதி நாள் நிகழ்ச்சியில் கம்பவாரிதிக்குச் சிட்னிவாழ் தமிழர் சார்பில் இளமுருகனார் பாரதி அவர்களினால் வாழ்த்துப்பா வழங்கப்பட்டது.


என்னடா செய்யும் விதி? - கவியரசு கண்ணதாசன்

.


ஆறிலே பிள்ளைகள் ஆடலும் பாடலும்
ஆனந்தக்கூத்துமாய் வாழும்
ஆறிரண்டானபின் பள்ளியும் பாடமும்
ஆரவாரங்களும் சூழும்
ஏறுமோர் வயதுதான் இருபதை எட்டினால்
எண்ணிலாக் காதலில் ஆழும்
தாறுமா றானதோர் வாழ்க்கை வாழ்ந்தபின்
தன்நினை வெண்ணியே வாடும்!
காலமாற் றங்களால் கணிதமாற் றங்களும்
கவனமாற் றங்களும் நேரும்
கோலமாற் றங்களும் குணத்தில் மாற்றம்வரும்
கொள்கை மாற்றம்வந்து சேரும்
ஞாலமே பெரிதாய் சிறியதாய் மோசமாய்
நல்லதாய் கெட்டதாய்த் தோன்றும்
வாலிலாக் குரங்குபோல் வாழ்ந்தநான் வாழ்ந்தபின்
வாழ்ந்ததை எண்ணியே வாடும்!
விதையிலே சிறியதாய் வளர்ந்ததும் பெரியதாய்
விண்ணுயர் மரங்களைக் கண்டேன்!
கதையிலே மரங்களின் வாழ்விலும் பல்வகை
கவலைகள் உண்டெனக் கண்டோம்!

சிட்னி முருகன் ஆலயத்தில் இடம் பெற்ற சூரன் போர் நிகழ்வு 2013

.

சிட்னி முருகன் ஆலயத்தில் இடம் பெற்ற சூரன் போர் நிகழ்வு .

படப்பிடிப்பு - ஞானி 

தமிழ் ஓசை விழா - 16.11.2013

.


இலங்கைச் செய்திகள்


இராணுவத்தினருக்கு எதிராக 12ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டம்

இசைப்ரியா இறுதி நிமிடங்கள்: இலங்கைக்குப் புதிய நெருக்கடி

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பு? மன்மோகன் சிங் யாழ். செல்லும் வகையில் பயணத்திட்டம்?

'பெண்களின் பாதுகாப்புக்கு பதில் கூறுபவர்கள் யார்?" நீதி கேட்டு யாழில் ஆர்ப்பாட்டம்

அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

இலங்கை விசா தர ஒப்புக்கொண்டமைக்கு நெருக்கடியே காரணம் : மெக்கரே


இராணுவத்தினருக்கு எதிராக 12ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டம்
05/11/2013   மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் வீடழிப்பு நடவடிக்கையினை தடுத்து நிறுத்தக் கோரியும்  எதிர்வரும் 12 ஆம் திகதி செய்வாய்க்கிழமை காலை 8 மணி தொடக்கம் மாவட்டபுரம் கந்த சுவாமி கோவில் முன்பாக தொடர் உண்ணாவிரதப்  போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலி வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் அறிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பினை மீறியும் வலிகாம் வடக்கில் மக்களின் வீடுகள் இராணுவத்தினரால் தொடர்ந்து இடித்தழிக்கப்பட்டு வருவதையடுத்தே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது எனவும் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்தார்.நன்றி வீரகேசரி  "அற்றைத் திங்கள்" - - பராசக்தி சுந்தரலிங்கம்.

.
இளைய பத்மநாதனின் "அற்றைத் திங்கள்"
பண்ணும் பரதமும் விரவிய நாடகக் கூத்து

 

            எவ்வழி நல்லவர் ஆடவர்
            அவ்வழி நல்லை வாழிய நிலனே

என்று, நாட்டை வாழ்த்துகிறார் அவ்வையார்.

நல்ல மாந்தரது ஒழுக்கமே ஒரு நாட்டை உருவாக்கி உலக மேம்பாட்டிற்கு வழி சமைக்கிறது. நல்ல அரசு அமைந்தால் நல்ல நாடு அமையும் - இது விதி.

ஒரு நல்ல அரசின் செல்வாக்கு ஏனைய அரசுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. உலகம் அதை இல்லாது ஒழிப்பதற்குச் சூழ்ச்சி செய்கிறது. ஒருவரோடு ஒருவர் எதிரிகளாக இருப்பவர் கூட நல்லவரை அழிக்க ஒன்று சேர்ந்து விடுகிறார்கள் தனது மண்ணையும் மக்களையும், மரம் செடி கொடிகளையும், நேசித்த ஒருவனை பொறாமை வஞ்சகம் சூழ்ச்சியால் அழித்த கதையை "அற்றைத் திங்கள்" அரங்காடலில் பார்க்கிறோம். வள்ளல் பாரியின் வரலாற்றை சமகால நிகழ்வுகளோடு தொடர்வுபடுத்திக் காணலாம்.


கூத்து வித்தகர் அண்ணாவியார் இளைய பத்மநாதன் இலக்கியங்களிலே காணப்படும் கதைகள், கருத்துகளை சமகாலச் சிந்தனைகளோடு பொருந்தும் வகையிலே நாடகக் கூத்து வடிவங்களை மேடையேற்றுவதில் வல்லவர். இவை கண்ணுக்கும் காதுக்கும் மாத்திரமல்ல, கருத்துக்கும் விருந்தளிக்கின்றன, சிந்தனையைத் தூண்டுவன.

வள்ளல் பாரியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் இவருடைய சிந்தனையிலே புதிய வடிவம் பெறுகிறது. பரமற்றா ரிவர்சைட் அரங்கிலே, அக்டோபர் 26ம் நாள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கம், அவுஸ்திரேலியா, ஆதரவிலே வள்ளல் பாரியின் வரலாறு அரங்காடல் கண்டது.

திரும்பிப்பார்க்கின்றேன் - 14 -முருகபூபதிகுழந்தையுள்ளம்  படைத்த  அகஸ்தியரின்  தர்மாவேசம்    'அன்புள்ள   முருகபூபதிக்கு..… கடந்தவாரம்  லண்டனிலிருக்கும்  மகனிடம் வந்திருக்கிறோம்.   பேரக்குழந்தையின்   பிரசவம்   முடிந்தது.   ஆவன   செய்தபின் பிரான்ஸ்   திரும்புவோம்.   பெண்   குழந்தை   கிடைத்திருக்கிறது.  வந்த  இடத்தில் உடல்நலம்   பாதிக்காதவகையில்    இலக்கியக்கூட்டங்களுக்கும்   பேட்டிகளுக்கும் ஒழுங்குசெய்துள்ளார்கள்.    பின்   விபரம்  அறிவிப்பேன். வீரகேசரியில் உங்கள் குறிப்பு பார்த்தேன்.  நன்றி.’ - இது  நண்பர் அகஸ்தியர் 22-08-1995   இல் எனக்கு எழுதிய கடிதம்.
அகஸ்தியர்   எனக்கு  எழுதிய  இறுதிக்கடிதம்  இதுதான்  என்பதை 09-12-1995  ஆம் திகதி   இரவு   நண்பர்   பாரிஸ்   ஈழநாடு   குகநாதன்   தொலைபேசியில்  அகஸ்தியரின்   மறைவுச்செய்தி   சொல்லும்   வரையில்  நான்   தீர்மானிக்கவில்லை.  அகஸ்தியர்  முதல்நாள்   பாரிஸ்  நகரத்தையே  ஸ்தம்பிக்கவைத்த  வேலைநிறுத்த   காலப்பகுதியில்   டிசம்பர்  8 ஆம் திகதி   மறைந்தார்.


UNION FUN NIGHT 2013 - 16.11.2013

.

உலகச் செய்திகள்


செவ்வாய்க்கான இந்தியாவின் முதல் விண்கலம் இன்று ஏவப்பட்டது

வீசா 'பிணைத் தொகை' திட்டத்தை பிரிட்டன் கைவிடுகிறது

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பழ. நெடுமாறனால் திறக்கப்பட்டது

பங்களாதேஷில் இராணுவ சதிப்புரட்சி தொடர்பில் 150 படைவீரர்களுக்கு மரணதண்டனை

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது 'மங்கள்யான்'


பிலிப்பைன்ஸில் புயலுக்கு 10,000 பேர் பலியானதாக அச்சம்

===================================================================

செவ்வாய்க்கான இந்தியாவின் முதல் விண்கலம் இன்று ஏவப்பட்டது


05/11/2013  செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா மங்கள்யான் விண்கலத்தை பி.எஸ்.எல்.வி. சி-25 ரொக்கெட் மூலம் இன்று பகல் 2.30 மணியளவில் ஏவியது.

இந்த விண்கல முயற்சி வெற்றியா? இல்லையா என்பது 10 மாதங்களுக்குப் பின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதா எனவும் அங்குள்ள கனிம வளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றை ஆராய்வதற்காகவும் ஆயிரத்து 340 கிலோ எடை கொண்ட மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு இஸ்ரோ அனுப்பியுள்ளது.

மொத்தம் ரூ.450 கோடி (இந்திய ரூபா) செலவிலான இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அடுத்தபடியாக செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும்.

ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து இந்த ரொக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செல்லும் வகையில் நிலைநிறுத்தப்பட்ட நேரத்தில் சுமார் 10 நிமிஷங்களுக்கு விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராடார்கள் மூலம் பார்க்க முடியவில்லை. அது தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறது. நன்றி வீரகேசரி கந்தர் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்ன?

.


சில வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்கே தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் சில வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு. அது ஒரு பங்குச்சந்தை வியாபார நிறுவனமாக இருந்ததால் மார்க்கெட்டிங் வேலை மிக முக்கியமானதாக இருந்தது. பங்குச்சந்தை மார்க்கெட்டிங் என்றால் சாதாரனம் இல்லை. உங்களிடம் இருக்கும் பணத்தை நீங்கள் முழித்திருக்கும் போதே உங்கள் சட்டைப்பையிலிருந்து எடுத்து நிறுவனத்திற்கு கொடுத்துவிட வேண்டும். இது குளோப்ளைசேஷன் மூலமாக வந்த புதிய வியாபார உத்தி. அது ஒரு புறம் இருக்கட்டும். தொழிலாள‌ர்களுக்காக நடத்தப்படும் இந்த வகுப்பில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும், உடலைப் பேணிப் பாதுகாக்கவும் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். அதில் ஒன்று அதி டென்ஷனாகவே வாழும் நாம் மனதை எப்படி அமைதிப்படுத்திக் கொள்வது என்பதற்க்கு ஒரு புதிய முறையைக் கற்றுக் கொடுத்தார். 

இதை அறிமுகப்படுத்தியவர் என்று சொல்லி ஒரு ஆங்கிலேயரின் பெயரைச் கூறினார். மனோவியல் ரீதியாக அவர் கொடுக்கும் இந்தப் பயிற்ச்சி நல்ல பலனைக் கொடுத்தது என்றும் கூறி அதை செய்யச் சொன்னார். அவர் சொன்னதாவது: 

நந்திக்கடல் – 2012 ஆவணி -நிலாந்தன்

.
                                            
மிஞ்சியிருப்பது
இரும்பும் சாம்பலுமே,
மாமிசத்தாலானதும்
சுவாசிப்பதுமாகிய
அனைத்தையும் சுட்டெரித்த பின்
தங்கத்தாலானதும்
துருப்பிடிக்காததுமாகிய
அனைத்தையும் கவர்ந்து சென்றுவிட்டார்கள்.
மாமிசத்தாலாகாததும்
துருப்பிடிக்கக் கூடியதுமாகிய
இரும்பையெல்லாம் சேகரித்து
உப்புக்களியில்குவித்து வைத்திருக்கிறார்கள்.
உப்புக்களியில்
இருபோக மழையில்
துருவேறிக் கிடக்கிறது
கனவு.
காடுகளின் சூரியன்
நந்திக் கடலில்
உருகி வீழ்கிறான்.
கானாங்கோழி
காணாமற்போனவரின்
கடைசிச் சொற்களை
அடைகாத்திருக்கிறது.

உப்புக்களி – கடைசி யுத்தம் நிகழ்ந்த மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் கிராமங்களிற்கும், கடலேரிக்கும் இடைப்பட்ட உப்புச்செறிவானகளி மண் தரை.
கானாங்கோழி – நீர்க்கரைகளில் வளரும் சிறு பற்றைக்; காடுகளில் வசிக்கும் ஒரு வகைச் சிறு பறவை


இரண்டு சந்தோசங்கள் - அ முத்துலிங்கம்

.
                             
இன்று எனக்கு இரண்டு சந்தோசங்கள். கனடாவில் நேரத்தை ஒரு மணித்தியாலம் பின்னுக்கு தள்ளி வைக்கும் நாள் இது. அதாவது ஒரு மணி நேரத்தை மீண்டும் வாழலாம். மொத்தத்தில் எனக்கு இன்று 25 மணித்தியாலங்கள் கிடைக்கும். ஒரு வருடத்தில் ஒருமுறை மட்டுமே இப்படி நடக்கும். ஆகையால் நான் இந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன்.

இரண்டாவது சந்தோசம் நான் பெருமதிப்பு வைத்திருக்கும் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்புக்கு இவ்வருடம் விஷ்ணுபுரம் இலக்கிய விருது கிடைத்திருக்கிறது. அவருக்கும், இந்த விருதை வழங்கும் விஷ்ணுபுரம் இயக்கத்துக்கும் என் வாழ்த்துக்கள். கனடாவில் வதியும் நண்பர் ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து ‘இலங்கை எழுத்தாளருக்கு இந்தியாவில் விஷ்ணுபுரம் விருது கிடைத்திருக்கிறது’ என்றார். நான் ‘இலங்கை எழுத்தாளர் என்பதோ, மலையக எழுத்தாளர் என்பதோ அவர் மதிப்பை குறைப்பதாகும். அவர் இலங்கையில் பிறந்த  தமிழ் எழுத்தாளர்’ என்று கூறினேன்.

சிட்னி முருகன் ஆலயத்தில் சூரன் போர்

.உலகை மாற்றிய சில தத்துவங்கள் - காவிரிமைந்தன்

.

உலகில் நமக்கு நம்பிக்கைத் தருகின்ற வரிகள்.. தத்துவங்கள் எத்தனையோ கொட்டிக்கிடக்கின்றன.
சொன்னவர் யார் என்பதைவிட..
சொல்லப்பட்டது என்ன என்பதை அறிவதே சிறந்ததாகும்.
உலகில் பல துறைகளில் வெற்றி பெற்றவர்களின் தத்துவங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு..


ஆஸி.யில் தமிழருவி மணியன் வெளியிட்டுவைத்த 'நீந்திக்கடந்த நெருப்பாறு' நாவல்

.


இறுதிப்போரை மையமாக வைத்து வன்னியின் மூத்தபடைப்பாளி ஒருவரால் எழுதப்பட்ட 'நீந்திக்கடந்த நெருப்பாறு' நாவல் வெளியீட்டு நிகழ்வு அவுஸ்திரேலியாவில் அறுநூறுக்கு மேற்பட்ட மக்கள் முன்னிலையில் சிறப்புற நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் (2-11-2013) சிட்னியில் பொதுச்சுடர் ஏற்றல், அகவணக்கத்துடன் தொடங்கிய குறித்த நிகழ்விற்கு திருவேங்கடம் ஆறுமுகம் தலைமை தாங்கினார். முன்னதாக பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் திருவுருவப்படத்திற்கு இன்பத்தமிழ் ஒலி வானொலிப் பணிப்பாளர் பாலசிங்கம் பிரபாகரன் சுடரேற்றி மலர்மாலை அணிவித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து, மாவீரர் வணக்க நடனம், எழுச்சிநடனம், தமிழ் மொழிப் பெருமை கூறும் பாடல்களைத் தொடர்ந்து வரவேற்புரையினை யோகராஜா நிகழ்தியதை அடுத்து தலைமை உரை இடம்பெற்றது. தொடர்ந்து நீந்திக்கடந்த நெருப்பாறு வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் பதிப்பகத்தின் அறிமுகச் செய்தியினை சுதா தனபாலசிங்கம் சமர்ப்பித்தார். நூலின் ஆய்வுரையினை திரு.நந்தகுமார் நிகழ்த்தினார். வாழ்த்துரையினை கலாநிதி கௌரிபாலன் வழங்கினார்.
'நீந்திக்கடந்த நெருப்பாறு' நூலினை தமிழருவி மணியன் வெளியிட்டு வைக்க முனைவர் பர்வீன் சுல்தானா பெற்றுக்கொண்டார். சிறப்புப் பிரதிகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து ஏற்புரையினை நூல் ஆசிரியர் சார்பில் மெல்பேர்ன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் செல்வ கணேசன் வழங்கினார். தொடர்ந்து அரங்கை அதிரவைக்கும் தமிழரவி மணியனின் 'நம்மை நாமறிவோம்' சிறப்புரை இடம்பெற்றது. முனைவர் பர்வீன் சுல்தானா தலைமையிலான , 'புரிந்து கொண்டவர்கள் பெற்றோரே!, புரிந்து கொண்டவர்கள் பிள்ளைகளே!' தலைப்புகளிலான பட்டிமன்றமும் இடம்பெற்றன. இறுதியாக நன்றியுரையினை வசந்தன் நிகழ்த்தினார். நிகழ்வில் பலநூற்றுக்கணக்கானோர் பங்குகொண்டு சிறப்பித்தனர்

தமிழ்சினிமா

ஆல் இன் ஆல் அழகுராஜா – விமர்சனம்

ஆல் இன் ஆல் அழகுராஜா – விமர்சனம்

எப்போதுமே ராஜேஷ் படங்களில் சூப்பரா நாலு சீன், சுமாரா ஜந்து சீன் அதுக்கு பட்டி டிங்கரிங் பார்த்து ரசிக்கக் கூடிய படமாக எடுத்து விடுவார். இந்த படத்தையும் அப்படித்தான் எடுத்துள்ளார். ஆனால் பெரும்பாலான காட்சிகளை ரசிக்கத்தான் முடியவில்லை. அதற்காக ஒரேடியாக ஒதுக்கி விட முடியாது. அதற்கு முக்கிய காரணம் எம்.எஸ்.பாஸ்கரும், காஜல் அகர்வாலும் தான்.
போகட்டும் கதை என்ன?
அப்பா பண்ண தப்பு அத சரி செய்யும் பையன் இது தான் கதை. யாருமே இல்லாத டீ கடையில யாருக்குடா டீ ஆத்துற ரேஞ்சுக்கு யாருமே பார்க்காத லோக்கல் கேபிள் சேனலை நடத்தி வருகிறார் நம்ம ஹீரோ கார்த்தி(ராஜா) இவருடைய  கோ-வொர்க்கர் சந்தானம்(கல்யாணம்) இருவரும் சேர்ந்து இந்த AAA TV சேனலை மக்களிடையே பிரபலமாக்கி நம்பர் ஒன் சேனலாக மாற்ற நிறைய ப்ளான் போட்றாங்க அதுக்காக அவங்க அடிக்கிற லூட்டியும் அதனால சந்தானம்  கோட்டா ஸ்ரீனிவாஸிடம் மாட்டிக்கிட்டு முழிக்கிற காட்சிகளில் தியேட்டரில் சிரிப்போ சிரிப்பு… சந்தானமும் கார்த்தியும் படம் முழுவதும் ஒன்றாக டிராவல் செய்கிறார்கள், அட அந்த 80களில் நடக்கும் ஃப்ளாஷ்பேக்கிலும் ஒன்றாக வருவது ஏம்ப்ப்ப்பா இப்படி என்று சொல்ல வைக்கிறது.
சித்ரா தேவி பிரியாவாக காஜல் அகர்வால், இவரை பார்த்த உடனே காதலில் விழுகிறார் கார்த்தி. இந்த காதலை ஏற்க மறுக்கும் அவரை கலாய்த்து கலாய்த்தே காதலை ஒப்புக்கொள்ள வைக்கிறார். முதலில் இந்த காதலை பூ போட்டு வரவேற்கும் கார்த்தியின் அப்பா பிரபு, பின் அந்த காதலை ஆதரிக்காமல் போவதும், அதற்கு காரணம் கேட்ட கார்த்தியிடம் ஒரு மொக்கை ஃப்ளாஷ்பேக் சொல்வதும் படத்தை ரசிக்க விடாமல் செய்கிறது. கரீனா சோப்ரா என்ற பெண் வேடத்தில் கலக்கியிருக்கிறார் சந்தானம்.
படத்தின் இன்னொரு பிளஸ்ஸான எம்எஸ் பாஸ்கர் சாட்டையால் அடித்துக் கொண்டு தெருவில் பிச்சை எடுப்பவர். பரத நாட்டியம் கற்றுக்கொள்ள விரும்பும் காஜலிடம் பெரிய பரத நாட்டிய குரு என்று எம்.எஸ்.பாஸ்கரை கார்த்தி கோர்த்து விடுகிறார். பாஸ்கரும் அவர் சாட்டையை அடிக்கும் போது செய்யும் மேனரிசங்களை பரதநாட்டியம் என்று காஜலுக்கு கற்றுக் கொடுக்கிறார். அந்த காட்சிகளில் திரையங்கமே சிரித்து தெறிக்கிறது. உண்மை தெரிந்து காஜல் காட்டும் எக்ஸ்பிரசன்களும் சூப்பர். இதைத் தவிர நல்ல விஷயம் 80களின் சாயலில் உள்ள பாட்டு. மற்றபடி மோசமான படம்லாம் சொல்ல முடியாது இதுக்குமேல படத்தை பத்தி ஒன்னும் சொல்றதுக்கு இல்ல பாஸ். யாருக்காவது போரடிச்சா ஓசியில டிக்கெட் உஷார் பண்ணிட்டு போய் படத்தை பாருங்க ப்ரோ…
இசை தமன் பாடல்களும், பின்னணி இசையும் சுமாராகவே தோன்றுகிறது எதுவுமே மனதில் நிற்கவில்லை. ஆக இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா, அ(ழு)க்கு ராஜாவாக மாறியது வருத்தத்தை அளிக்கிறது. இயக்குநர் ராஜேஷ் இந்த படத்தில் குடி, புகையை காட்டாததால்தான் என்னவோ ராஜேஷிடம் சரக்கு இல்லை என காது பட கமெண்ட் அடிக்கிறார்கள் கொஞ்சம் முழுச்சிக்கோங்க பிரதர் ஆல் தி பெஸ்ட்…
 நன்றி தமிழ்சினிமா ஆரம்பம் – திரைப்பட விமர்சனம்

ஆரம்பம் – திரைப்பட விமர்சனம்

தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே ரிலீஸ் ஆனதால் இந்த தீபாவளி “தல” தீபாவளிதான் என்று கொண்டாடக் காத்திருந்த அஜித்தின் ரசிகர்களுக்கு நிஜமாகவே தல தீபாவளிதான்…
சென்னையிலிருந்து மும்பைக்கு இண்டர்வியூக்கு வரும் ஆர்யா அதே விமானத்தில் ஆர்யாவின் தோழியான நயன்தாரா இருவரும் மும்பைக்கு வருகின்றனர் இவர்களுடன் சக பயணியாக அஜித்தும் அதே விமானத்தில் வருகிறார். வந்த இடத்தில் நயன்தாராவை சில மர்ம நபர்கள் கடத்த முயல அவர்களிடம் இருந்து நயன்தாராவை காப்பாற்ற முயல்கிறார். ஆனால் இவர்கள் இருவரையும் அந்த மர்ம கும்பல் கடத்தி விடுகிறது. கடத்தியது யார், எதற்காக என்று சிக்கும்போதே எண்ட்ரி ஆகிறார் அஜித். நயன்தாராவை பணயக் கைதியாக வைத்துக்கொண்டு ஆர்யாவிடம் பேரம் பேச, தன் தோழியை காப்பாற்ற வேண்டும் என்று, அஜித் சொல்லும் வேலையை முடித்து தர ஒப்புக்கொள்கிறார். பின் அடுத்தடுத்து நடக்கும்
திருப்பங்களை மிக சுவாரஸ்யமாக காட்டியுள்ளார் விஷ்ணுவர்தன்.
நயன்தாரா அஜித்தின் கூட்டாளிதான் எனத் தெரிந்ததும் அதிர்ச்சிக்குள்ளாகி போலிஸிடம் போக துடிக்கிறார் ஆர்யா. ஆனால் ஆர்யாவின் காதலி டாப்சியையும் நம்பவைத்து தனது பாதுகாப்பில் வைத்துக்கொள்கிறார் அஜித். மேலும் அவரை வைத்து ஹேக்கிங்கில் தேர்ந்தவரான ஆர்யாவை மிரட்டி காரியம் சாதித்துக்கொள்கிறார். இதன் மூலம் மும்பையின் முன்னணி டிவி தொலைக்காட்சியின் சாட்லைட் சிக்னலை கட் செய்கிறார் ஆர்யா. அஜித் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார் என்று குழப்பத்தில் இருக்கும் நமக்கு இடைவெளிக்குப் பின் தான் தெளிவு கிடைக்கிறது.
அதிகார வர்க்கத்தில் மேலோங்கி இருக்கும் சிலர் பணத்துக்காக ஆசைப்பட்டு செய்யும் ஊழலால் தன் உயிர் நண்பனான ராணாவை இழக்கிறார். இதற்கு காரணமாக இருந்தவர்களை கண்டுபிடிக்கும் அவர். அந்த ஊழலே ஹோம் மினிஸ்டரால் தான் நடந்ததது எனத் தெரிந்ததும் கொஞ்சமும் பதப்படாமல் தன் நண்பனின் மரணத்துக்கு காரணமானவர்களை அம்பலப்படுத்துவதோடு பணத்துக்காக பயங்கரவாதத்துக்குத் துணைபோகும் அவர்களின் மற்றொரு திட்டத்தையும் தகர்ப்பதே மீதிக்கதை…
படத்திற்கு பெரிய தூணாக நிற்பவர் அஜித்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒன் மேன் ஆர்மியாக கலக்கியிருக்கிறார். அஜித்துக்கு வசனங்கள் அதிகமாக இல்லையென்றாலும் அவர் வரும் காட்சிகள் ஆக்சன் தான். சாஃப்ட்வேர் இன்ஜினியராக ஆர்யா துறு துறு நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதை திறன்பட செய்திருக்கிறார் ராணா டகுபதி, படத்தில் காமெடி இல்லையென்றாலும் வில்லன் மகேஷ் மஞ்ஜுரேக்கர் கிளைமேக்சில் பேசும் வசனங்கள் நகைச்சுவக்கு உத்திரவாதம் பாஸ்…
யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களில் “ஆரம்பமே” மற்றும் “என் ஃப்யூஸ் போச்சே” பாடல்கள் தவிர மற்றவை மனதில் நிற்கவில்லை. ஆனால் அதற்கு இணையாக பின்னணியில் பலம் சேர்த்திருக்கிறார்.
ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ் பாடல் காட்சியானாலும் சரி, சண்டைக் காட்சியானாலும் சரி அதில் ஒரு பிரம்மாண்டத்தை அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார். மும்பையை அதன் இயல்பு மாறாமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஒரு ஹாலிவுட் படம்போல ஆரம்பம் முதல் இறுதிவரை பரபரப்பாக நகர்கிறது திரைக்கதை, அஜித்தின் பஞ்ச் டயலாக் “சாவுக்கு பயந்தவன் தான் ஒவ்வொரு நாளும் சாவான், பயப்படதாவன் ஒரு தடவைதான் சாவான்”…
இறுதியில் படத்தை இரண்டாம் பாகம் எடுக்கப்போவது போல காட்சி அமைத்திருக்கிறார்கள், ஒருவேளை அடுத்த பாகத்தையும் எடுக்க ரெடி ஆயிட்டாங்களோ…
ஆக இந்த தீபாவளி தீவிர அஜித் ரசிகர்களுக்கு செம விருந்துதான்….
  நன்றி தமிழ்சினிமா