தண்ணளி தரணியில் மலர்ந்திட வேண்டும் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
குழந்தை சண்முகலிங்கம் மாஸ்டர்: ஈழத் தமிழ்அரங்கில் ஒரு சகாப்தம் - ஓர் அஞ்சலிக் குறிப்பு - கன்பரா யோகன்
குழந்தை மாஸ்டர் என்று பலராலும் அழைக்கப்படும்
திரு ம.சண்முகலிங்கம் மாஸ்டர் அவர்களை சரியாக ஒரு வருடத்துக்கு முன் கடந்த 2024 ஆம் ஆண்டு தை மாதத்தில் அவரது திருநெல்வேலி வீட்டில் சந்திக்க நானும் மனைவியும் போயிருந்தோம்.
அன்றைக்கு மாஸ்டரின் வீட்டைக் கண்டுபிடிப்பது சற்றுச் சிரமமாகவிருந்தது. எட்டு வருடங்களுக்குப் பிறகு சென்றதால்
தெருக்கள், வீடுகளில் மாற்றம் இருந்தது என்பது ஒரு காரணம். இன்னொன்று நாம் வழமையாக
செல்லும் திருநெல்வேலிச் சந்தி வழியாக வராமல் இம்முறை எதிர்த்திசையிலிருந்து கல்வியங்காட்டுச்
சந்தி ஊடாக வந்ததும் ஒரு காரணமாயிருந்திருக்க வேண்டும். இரண்டு முறை ஆட்களிடம் விசாரித்துத்
தெரிந்து கொண்டோம்.
அப்போது சண்முகலிங்கம் மாஸ்டருக்கு 92 வயது. நினைவுகள் மங்கிக் கொண்டு வரும் வயதாகையால் எம்மை
அடையாளம் காண்பதற்கு சிரமப்பட்டார்
1985 இன் ஆரம்பத்தில் யாழ் பல்கலைக்கழக
கலாச்சாரக் குழுவினரின் நாடக அரங்கேற்றுகைக்காக
அவரை அணுகிய காலங்களில்தான் நான் அவரை முதலில் சந்திக்க நேர்ந்தது. சண்முகலிங்கம் மாஸ்டர் கைப்பட எழுதிய ‘மண் சுமந்த
மேனியர்’ நாடகப் பிரதியை நாடக இயக்குனர்
க.சிதம்பரநாதன் எமக்கு தந்திருந்தார். அதில் செறிந்திருந்த சுருக்கமான,
ஆனால் ஆழ்ந்த அர்த்தம் கொண்ட உரையாடல்கள், பல இடங்களில் சிலேடையும், நகைச்சுவையும் கொண்ட வசனங்கள், கதையோட்டத்துக்கு பொருத்தமான
திருவாசகப் பாடல்கள், நாட்டார் பாடல்கள், நவீன கவிதை வரிகள் என்று அவரின் நாடக பிரதி தனித்துவமாக இருந்தது.
நாடகப் பயிற்சிகள் பல்கலைக்கழக மாணவர் பொது அறையில், பின்னர் கைலாசபதி கலையரங்கில் என்று நடைபெற்று வந்த காலத்தில்,
பயிற்சிகளுக்கு வரும் நடிகர்களுக்கு 'ரோசம் கெட்டவன் ராசாவிலும் பெரியவன்' என்ற பழமொழியை சண்முகலிங்கம் மாஸ்டர் அடிக்கடி சொல்லி நினைவு படுத்திக் கொள்வது வழக்கம். நடிகர் ஒருவர் மேடையில் ஏறிவிட்டால் வெட்கமோ, ரோசமோ இல்லாது நடிக்கப் பழக வேண்டுமென்பதற்காகவே இதை அவர் சொல்வது வழக்கம்.
ஈழத்து நாடக உலகப் பேராளுமை குழந்தை மா.சண்முகலிங்கம் விண்ணேகினார் 🙏 - கானா பிரபா
ஈழத்தில் எண்பதுகளின் வாழ்வியலில் இருந்தவர்களுக்கு “மண் சுமந்த மேனியர்” ஓர் அழியா நினைவுச் சித்திரமாக மனதில் இன்னும் இருக்கும், எனக்கும் அவ்விதமே. எங்கள் இணுவில் அமெரிக்கன் மிஷன் பள்ளிக்கூடத்தின் ஆரம்ப வகுப்பு மாணவர்கள் எல்லாரும் அந்த இரண்டாம் மாடிக் கட்டடத்தின் தரையில் இருந்து வியப்போடு அந்தப் புதியதொரு நாடக அனுபவத்தையும், கவிதா நிகழ்வையும் கண்டது மறக்க முடியாது.
பலனிற் பற்றுவைக்காது நற்செயல் செய்வோம் - கலாநிதி பாரதி
மானிடனே!
பிறக்கும்போ(து) எதனைநீ கொண்டுவந் தாய்உயிர்
பிரியும்போ(து) எதனையெலாம் தேவை
யென்று
மறக்காது இறைவனிடம் வரங்கேட் பதழகோ?
மண்ணிலொரு
அணுவளவை மட்டும் உன்னால்
இறக்கும்போ(து) எங்கெடுத்துச் செல்ல முடியும்?
இறைபணியில்
சிவநெறியில் வாழ்ந்தே ஆசை
துறந்தெல்லாப் பற்றறுத்து அரன்வழி நின்றால்
தோன்றிடுமே
சிவனார்செஞ் சரண மன்றோ?
பாடகர் ஜெயச்சந்திரன் பாடலுக்குக் காத்திருந்த விருது ❤️ - கானா பிரபா
படித்தோம் சொல்கிறோம் : சிரித்து வாழவேண்டும், முத்துலிங்கம் படைப்புகளை படித்தும் வாழவேண்டும் ! அ.முத்துலிங்கம் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள் - முருகபூபதி
“ வாய்விட்டுச்சிரித்தால் நோய்விட்டுப்போகும். “ என்பார்கள்.
மனிதர்களுக்கு பிரச்சினைகள் அதிகாரித்துக்கொண்டிருப்பதனால்
சிரிப்பதும் சிந்திப்பதும் குறைந்துகொண்டு போகிறது.
மரபார்ந்த இலக்கியம், நவீன இலக்கியம், முற்போக்கு
இலக்கியம், பிரதேச மொழி வழக்கு இலக்கியம், மண்வாசனை இலக்கியம், போர்க்கால இலக்கியம், புலம்பெயர்ந்தோர் – புகலிட இலக்கியம் என்று எமது
ஈழத்தவர்கள் கடந்து வந்த இலக்கியப்பாதை நெடியது. எல்லாம் கடந்து வந்து பின்னாட்களில்
கொரோனோ கால இலக்கியமும் அறிமுகமாகியது.
உயிர்வாழ்வதற்காக கண்ணுக்குத் தெரியாத கிருமியுடன் போராடிக்கொண்டு,
இடைவெளிபேணி உறவுகளை தக்கவைத்துக்கொள்வதற்கு இணையவழி சந்திப்புகளை நடத்தும் காலத்திற்கு
வந்துள்ளோம்.
பயணிக்காமல், விசா பெற்று விமானம் ஏறிச்செல்லாமல்
இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம்
சௌக்கியமே என்பதுபோல், மூடிய அறைக்குள்ளிருந்து
உலகெங்கும் வாழ்பவர்களின் முகம் பார்த்து பேசிக்கொண்டிருக்கின்றோம்.
இந்த இணையவழிக்கும் (ZOOM) மெய்நிகர் என்று புதிய சொற்பதம் கண்டுபிடித்துள்ளனர். எல்லாம் கடந்துபோகும் என்பதுபோல், இந்த புதிய பதத்தையும் கடக்கின்றவேளையில் எம்மால் கொண்டாடப்படும் கனடாவில் வதியும் படைப்பாளி அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம் பற்றிய உரையாடல்கள் ஏற்கனவே
பல மெய்நிகர் அரங்குகளில் இடம்பெற்றுள்ளன..
அவற்றின் தொடர்ச்சியாக எமது அவுஸ்திரேலியத் தமிழ்
இலக்கிய கலைச்சங்கமும் கடந்த 19 ஆம் திகதி, முத்துலிங்கம் அவர்களின் 88 ஆவது பிறந்த தினத்தின்போது
அவரது படைப்புகள் தொடர்பாக கருத்தரங்கினை மெய்நிகரில் நடத்தியது.
எமது சங்கம், தொடர்ச்சியாக
இயங்கிவரும் பாதையில் நாம் பெற்ற
அனுபவங்களின் நிமித்தம், எம் மத்தியில் வாழ்ந்துவரும் கலை, இலக்கிய சாதனையாளர்களையும்
முடிந்தவரையில், பாராட்டி கௌரவித்து வந்துள்ளோம்.
நின்றேனும் கொல்லும் தீங்கு (05) - (திகில் தொடர்) - சங்கர சுப்பிரமணியன்.
- சங்கர சுப்பிரமணியன்.
"தம்பி சிவா, இங்க என் மக சிவகா
மதியின் மாமியார்அழுதபடியே சொன்
தொலைபேசியை வைத்து விட்டு வி
மனைவியிடம்சொல்லி அவளையும் அழை
கொண்டு மதி வீட்டுக்குச்சென்றே
அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிசெ
சிகிச்சையைக் கொடுத்தோம்.
சிவகாமிக்கு கவலைப் படும்படி ஒன்
என்றாலும்குறைந்த இரத்த அழுத்
இல்லாததாலும் தான் தலைசுற்றும்
கரணம் என்று டாக்டர் சொன்னபின்தா
கற்பகத்தை அவர்களுக்கு துணையாக
சுழன்று கொண்டிருந்த நினைவிலிரு
என்காதில் காலிங் பெல் மணியின்
எழுந்து முன்கதவின் பக்கம் சென்
"கற்பகம் உன்னை அவங்களுக்கு து
யார் உன்னை அழைத்து வந்தார்கள்?"
"முதல்ல வீட்டுக்குள்ள போங்க. எ
வாசலிலேகேட்கணுமா?" என்றாள்.
"சரி, உள்ளே வா" என்று அவளை வீ
கதவைத்தாளிட்ட பின்,
மிகுபுகழுடன் வாழ்ந்திடு --- அன்பு ஜெயா, சிட்னி (எண்சீர் கழி நெடிலடி ஆசிரிய மண்டிலம்)
நாளுமே
ஒழுக்கமே முதன்மையாய்க் கொண்டு
நானிலம் மீதினில் வாழ்ந்திடு சிறப்பாய்!
நாளுமே
வளர்ச்சியை நோக்கிநீ முயன்றால்
நலமுடன் இலக்கினை விரைவிலே அடைவாய்!
ஆளுமை
யோடுநீ அனைவரின் வாழ்த்தை
அன்புடன் பெற்றுமே அமைதியில் வாழ்வாய்;
தாளுமே
பணிந்துநீ இறைவனைப் போற்றித்
தளர்விலா அன்புடன் வணங்கியே வாழ்வாய்! (1)
என்றுமே
உண்மையும் நேர்மையும் கொண்டே
ஏற்றமும் பெற்றிட முயன்றுநீ உழைப்பாய்;
அன்றுதான்
சீர்த்தியில் வாழ்ந்திட வழியும்
அருகினில் தோன்றிடும், அவ்வழிச் செல்வாய்!
இன்றுநீ
இளமையாய் இருப்பினும் என்றும்
இனியநல் பண்பினைப் போற்றியே வாழ்வாய்;
வென்றுநீ
வாழ்வினில் உயர்ந்திடப் படியாய்
விளங்குமே பண்புமே என்பதை அறிவாய். (2)
-------------------------------
அன்பின் ஆழம் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்
.
இன்று எதேச்சையாக Lifestyle Channel இன் பொத்தானை அழுத்தினேன் அங்கு உடற் பயிற்சி செய்துகொண்டு இருந்தார்கள். போதனையாளர் நடுத்தர வயது பெண் போதனையாளருக்கு இருக்க வேண்டிய சகல திறமைகளும் கொண்டவர், நிகழ்சி திறமையாக யாவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. நிகழ்ச்சியின் நிறைவில் போதனையாளர் ஒரு பெண்ணை நோக்கி இன்றய உனது சிந்தனைத் துளி யாது என வினவினார். ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் சிந்தனைக்கு ஒரு சிறு விருந்து கொடுப்பார்கள் போலும். அவள் “அன்பு இருக்கிறதே அதை நாம் இழந்துவிட முடியாது, அது நாம் அள்ளி கொடுக்க கொடுக்க எம்மையே வந்தடையும், எப்போது? மோட்ச உலகிலோ மறு பிறவியிலோ அல்ல, உடனடியாக தொடர்ச்சியாகவே அன்பானது திரும்பி வந்து எம்மையே அடையும் என்றார். இது ஒன்றும் புது கருத்து அல்ல, காலம் காலமாக நாம்கேட்டு வந்ததுதான். வள்ளுவர், சோகிரடீஸ் போன்ற அறிஞர்கள் கூறிதான் உள்ளார்கள். ஆனால் இங்கு பழய உண்மையை ஒரு புதிய ஒளியில் கண்டேன். இங்கோ உடற்பயிற்சியில் ஈடுபடும் ஓர் இளம் பெண் கூறியது, இந்த பின்னணி தான் என் சிந்தனையை கிளறியது எனலாம்.
அன்பு என்பது ஒரு பண்டமாற்று பொருளோ விற்பனை பொருளோ அல்ல, ஆனால் யாவற்றையும் பொருளியல் நோக்கில் அணுகுவோர்க்கு அன்பும் விற்பனை பொருளாகத் தான் காணப்படும். பல நூறு வருடங்களுக்கு முன் பக்தி ரசத்தை பாடலாக வடித்த மாணிக்கவாசர்ருக்கு அவ்வாறே தெரிந்தது போலும். திருவாசகத்தில் ஓர் இடத்தில்,
“ தந்தது உன்தன்னை, கொண்டது என்தன்னை,
சங்கரா யார்கொலோ சதுரர்” என்கிறார்
அதாவது நீ என்னை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஈடாக உன்னை எனக்கு தந்தாய், யார் இந்த வியாபாரத்தில் வெற்றி ஈட்டியவர் என்கிறார்.
மாணிக்கவாசகரின் பின்னணி என்ன? அவர் அரசனின் மந்திரி, நாட்டை பரிபாலனம் செய்தவர். ஆகவே யாவற்றையும் பொருளியல் ரீதியில்
பார்பதற்கு பழக்கப்பட்டவர், எனவேதான் பக்தியையும் அவ்வாறே நோக்க முனைந்தார்போலும். இன்றய உலகிலும் பக்தியையும் விற்பனை பொருளாக்குபவர்களை நாம் காணத்தான் செய்கிறோம்.