மரண அறிவித்தல்
      திருமதி இந்திராணி சிவகடாட்சம் மறைவு 24.09.2010


கரம்பனைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகர் திரு சிவகடாட்சம் சுப்பையா அவர்களின் அன்புத் துணைவியார் திருமதி இந்திராணி சிவகடாட்சம் அவர்கள் 24.09.2010 வெள்ளிக்கிழமை அவுஸ்ரேலியா சிட்னி நகரில் சிவபதம் அடைந்தார்.


இவர் காலம் சென்றவர்களான திரு திருமதி கந்தையா நீலாம்பிகையின் மூத்த புதல்வியும் திரு சிவகடாட்சம் சுப்பையா அவர்களின்
அன்பு மனைவியும் ஜெகநாதன்  (சிட்னி), விஜயரட்ணம் (இலங்கை) சந்திரகாந்தா ராஜேந்திரம் (இலங்கை), அரியரட்ணம் (இங்கிலாந்து)கோபிநாதன் (மெல்பேர்ண்), காலம் சென்ற ஈஸ்வரநாதன் (யேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஸ்ரீகாந்தா (மெல்பேர்ண்), சிவகாந்தி (மெல்பேர்ண்), ரதேஸ் (சிட்னி), தயோராணி (பிறிஸ்பேர்ண்), லக்ஸ்மன் (மெல்பேர்ண்) ,மில்சன் (சிட்னி) ஆகியோரின் அன்புத்தாயாரும்
விஸயகுமார், பாலகுமார் ,அஞ்சலா ,வாசுதேவன், தயாழினி ,ஸ்ரீபவானி ஆகியோரின் அன்பு மாமியாரும்
ருக்மன், ரெங்கன், சிந்துஜா, தனுஷா ,அஷ்வின் ,பிரவின் ,விதுஷனா வரணியா, கௌதம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்ஆவார்
அன்னாரின் பூதவுடல் 26.10.2010 மாலை 4 மணியிலிருந்து 6 மணிவரை  Macquarie Park Crematorium , Plassey Rd Off Delhi Rd , North Ryde  Magnolia Chaple லில் பார்வைக்காக வைக்கப்படும்.
27.10.2010 திங்கட்கிழமை காலை 9.45 மணியிலிருந்து 12 மணிவரை Liberty Funeral Parlor , 101 South St , Granville லில் வைக்கப்பட்டு கிரிகைகள் செய்யப்பட்டு மாலை 1.00 மணியிலிருந்து 2.00 மணிவரை 

Macquarie Park Crematorium , Plassey Rd Off Delhi Rd , North Ryde  Magnolia Chaple லில் 


தகனக்கிரிகை செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.            


தகவல் ரதேஸ் 02 9747 8274 அல்லது 


0412 231 350 

அவுஸ்ரேலிய செய்திகள்

.
புலேந்திரனுக்கு ஐந்தரை வருடச் சிறைத்தண்டனை

சட்டவிரோதமாக படகு மூலம் ஆட்களை கடத்தியமை தொடர்பான குற்றச்சாட்டில் ஒரு தமிழருக்கு நீதிமன்றம் ஐந்தரை வருடகால சிறைத்தண்டனை விதித்துள்ளது. 36 வயதான பத்மேந்திரா புலேந்திரன் என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் சிட்னி நகரில் கடையொன்றுக்கு உரிமையாளராக உள்ளார்.

பிள்ளையார் கோவிலில் ரசித்த இசைக்கச்சேரி

கடந்த 17ம் திகதி வெள்ளிக்கிழமை (17-09-10) ஹோம்புஷ் பிள்ளையார் கோவிலில் செல்வன் ஹரி மோகனுடைய கர்நாடக சங்கீத நிகழ்ச்சி இடம்பெற்றது.

மிகவும் அருமையானதோர் இசைக்கச்சேரி.  வெளிநாட்டிலே வளர்ந்து, படித்து கூடவே இந்த இசைக்கலையையும் பூரணமாகப் பயின்று, இப்படியான முதல்தர இசை நிகழ்வைத் தந்தமைக்கு ஹரியை மனமாரப் பாராட்ட வேண்டும்.  

வர்ணம் பாடிக்கொண்டிருக்கும் போது தான் உள்ளே நுழைந்தேன். ‘கரணம்ப’ என்ற சகானா வர்ணத்தைக் கேட்ட போதே தொடர்ந்து கச்சேரி எப்படி அமையப்போகிறது என்று தெரிந்துவிட்டது.  அடுத்ததாக கரகரப்பிரியாவில் ‘கஜானனம்’ என்ற சுலோகமும் “கணபதியே கருணாநிதியே” என்ற பாவநாசம் சிவனின் கீர்த்தனையும் இடம்பெற்றது.  பிள்ளையார் கோவிலில் இருந்து அந்தப் பாடலைக் கேட்க மனதிற்கு இதமாக இருந்தது.  மிகவும் நேர்த்தியாக கரகரப்பிரியாவை பாடலில் குழைந்து கொட்டியிருந்தார் ஹரி.  ஒரு சின்னக் குறை… அழகான அந்தத் தமிழ்பாடலுக்கு விருத்தத்தையும் தமிழில் பாடியிருக்கலாம்.   ஒளவையார் ,வள்ளலார் , என்று தமிழிலா வினாயகர் விருத்தத்துக்கு குறை?  தொடர்ந்து பந்துவராளியில் ராக ஆலாபனையும் "‘என்ன காணு " என்ற கீர்த்தனையும் இடம்பெற்றது.  நேர்த்தியான பந்துவராளி  லாகவமாகப் பாடினார்.  குரலில் அனுபவ முதிர்ச்சியும், பயிற்சியும் நன்கு தெரிந்தது.  தொடர்ந்து தூரனின் பாடல், தாயே திரிபுரசுந்தரி.

இலக்கியம் / படித்துசுவைத்தவை

.

நெருப்புக் கோழி....! ந.பிச்சமூர்த்தி

 

பூவனம் வலைப்பதிவில் ஜீவி சார் எழுத்தாளர்களைப் பற்றிய தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு வருகிற விதத்தில், சென்ற மாதம், ந.பிச்சமூர்த்தியை பற்றிய ஒரு சித்திரத்தை அழகாக வரைந்திருந்தார். 


"அசப்பில் தாகூர் மாதிரி ஒரு தோற்றம். போதாக்குறைக்கு 'காபூலிக் குழந்தைகள்' என்று கதையொன்றும் எழுதியிருக்கிறார். அவரது பல கதைகள் பொறி போன்ற ஒரு வெளிச்சத்தைத் தாங்கி கொண்டிருக் கும். அந்தப் பொறி எதுவொன்றையும் உன்னிப்பாகப் பார்த்து ரசித்த அவர் மனத்தின் வெளிப்பாடாக இருக்கும்; அவராகப் புனைவாக ஒரு விஷயத்தை நீட்டி முழக்கிச் சொல்லாமல் அவர் பார்த்த காட்சி பற்றிய அதிசயப் படப்பிடிப்பாய் இருக்கும். சில அன்றாடம் நாம் பார்க்கக் கூடியவை தான் என்றாலும், 'அடடா! இந்த மனிதர் இதை இப்படி 

கவிதைகுற்றமிழைத்தவனொருவன்

பேரூந்தில் - ரயிலில்
முட்டிமோதிப் பயணிக்கையில்,
பணப்பையினால்
முச்சக்கரவண்டிக் கூலியைச்
சுமக்க முடியாமல்
போகும் வேளையில்,
'அந்தோ, எங்களிடமும் இருக்குமெனில்
சைக்கிள் அல்லாத
ஏதாவதொரு வாகனம்'
என்றெண்ணி
பணிவுடன் வேண்டுகோள் எழுப்புவாயோ
என் ப்ரியத்துக்குரிய பெண்ணே

"அப்பா....
காரொன்று
ஏன் எமக்கில்லை?"

ஒரு வாழ்க்கையின் துகள்கள்

.  
                                                                                                                      ராமகிருஷ்ணன்                           
எல்லா திருமணங்களிலும் இரண்டு திருமணங்கள் இருக்கின்றன.
ஒன்று அவனுடையது. மற்றது அவளுடையது.
அவனுடையது அவளுடையதை விட மேலானதாக இருக்கிறது.
- ஜெஸ்ஸி பெர்னார்டு

மைதிலி சிவராமன் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மூத்த தலைவர், பெண்உரிமைகள் சார்ந்த தீவிர செயல்பாட்டாளர். அவர் தனது தாய்வழிப்பாட்டியான சுப்புலட்சுமியின்நாட்குறிப்பு களைச் சேகரித்து அதன் வழியே அவரது வாழ்க்கை சித்திரத்தை எழுதியிருக்கிறார்.

யாழ் உலா

.
                           மரபுக் கதைகள் சொல்லும் அழகுக் கிராமம் 'அச்சுவேலி'
                                                                            பி.ராஹினி (பி.ஏ) யாழ். பல்கலைக்கழகம்

'அச்சு' என்ற சொல்லுக்கு தேயம், அகத்தி, மரம், அச்சுத்தினை எனவும் அடையாளம், தேரச்சு, முத்திரை எனவும் மதுரை தமிழ்ப் பேரகராதி பொருள் கூறுகின்றது. மேலும் அச்சுக் கட்டு என்பதற்கு நெல் பயிரிடத்தக்க நிலம் என்ற பொருளும் கூறப்பட்டுள்ளமையைக் காணலாம். அத்துடன் அச்சு என்பது வடமொழி 'AKSHA' என்ற சொல்லின் திரிபென்று கதிரவேற்பிள்ளையின் தமிழ் அகராதி கூறுகின்றது.

தமிழ் அகதிகளின் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்துள்ளது

.

விலாவூட் தடுப்பு நிலையத்தின் கூரை மீதேறி
தமிழர்களான 9 புகலிடக்கோரிக்கையாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் 29 மணித்தியாலங்களின் பின்னர் முடிவுக்கு வந்துள்ளது.

குடிவரவுத் திணைக்களம் தமது விண்ணபப்டிவங்களை மீள்பரிசீலனை செய்யாவிட்டால், கூரையிலிருந்து பாயப்ப போவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

சினிமா

.

எந்திரன் கதை

விஞ்ஞானி ரஜினி 10 வருடங்களாக கடுமையாக போராடி,தன்னைவிட 100 மடங்கு அறிவிலும்,திறமையிலும் மேன்பட்ட எந்திரனை உருவாக்குகிறார்.அந்த எந்திரன் 10 செகண்டில் ஒரு புத்தகத்தை மனப்பாடம் செய்து விடும்.அனைத்து விதமான சண்டைகளும் போடும்.அனைத்து விதமான நடனங்களும் ஆடும்.அனைத்து மொழிகளும் பேசும்.விஞ்ஞானி ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் காதலர்கள்.அவர்கள் காதல் புரிவதை ரோபோ ரஜினி ரசிக்கிறார்.கொஞ்சம் கொஞ்சமாக ஐஸ்வர்யாராயையும் ரசிக்கிறார்.


இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் - பாகம் 07

.
ஆரியச் சக்கரவர்த்தி


பாண்டியரின் மேலாதிக்கத்தில் அமைந்த இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் ஓரு சுதந்திரமான இராச்சியத்தை ஆரியச் சக்கரவர்த்திகள் ஏற்படுத்தினார்கள்.

அவர்கள் பாண்டிய மன்னர்களுக்குச் சேவகம் புரிந்த ஆரியச் சக்கரவர்த்தி என்று பட்டம் பெற்ற சேனாதிபதிகளையும் உயரதிகாரிகளையும் செகராச சேகரமாலை மூலமாகவும் பாண்டியரின் சாசனங்கள் மூலமாகவும் அறியமுடியும்.


தமிழ் ஊக்குவிப்புப் போட்டி 2010

.
தமிழ் பேணலில் பதினாறு வருடங்கள் ;
தமிழ் ஊக்குவிப்புப் போட்டி 2010
அவுஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்கம்அகில அவுஸ்திரேலிய தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் 2010

அவுஸ்ரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 16 ஆண்டுகளாக நடாத்தப்பட்ட தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 10வது ஆண்டிலிருந்து அவுஸ்ரேலியா பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் தலைமையின் கீழ் நடாத்தப்பட்டு வருகின்றன. இவ்வருடமும் இந்த தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் சிட்னியில் மட்டுமல்லாது மற்றைய அவுஸ்திரேலிய மாநிலங்களிலும் நியூசிலாந்திலும் நாடாத்தப்பட்டுள்ளன என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இம்முறை எழுத்தறிவுப் போட்டி, கவிதை மனனப் போட்டி, பேச்சுப் போட்டி என 10 போட்டிகள்  அவுஸ்திரேலிய, நியூசிலாந்து மட்டத்தில் 

அரசும், அரச இயந்திரங்களும் போர்க்கால அடிப்படையில் விரைந்து பணியாற்ற வேண்டும். சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை

கடந்த ஆண்டு நடைபெற்ற யுத்தத்தினால் மிகவும் பாதிப்புற்ற வவுனியா வடக்கு வலயத்தில் அமைந்துள்ள மாறாவிலுப்பை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மிகவும் பாதிப்படைந்துள்ளது. இப்பாடசாலையின் நிலையை நேரில் கண்டறிந்த வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் புலம்பெயர் தமிழர்களிடம் வேண்டிக்கொண்டதற்கு இணங்க இப்பாடசாலை மாணவர்களுக்கான சப்பாத்து ,கழுத்துப்பட்டி (ரை) மற்றும் சமையல் பாத்திரங்கள் என்பன அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபத்தினரால் (ATBC )அவர்களது நேயர்களின் நன்கொடைகளினூடாக 21.09.2010 செவ்வாய்க்கிழமை அன்று வழங்கப்பட்டது. இவற்றை சிவசக்தி ஆனந்தன் கொள்வனவு செய்து பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.ஆன்மீகம்

 முதலாழ்வார்கள்  


இம் மண்ணுலகில் மானுட கோடிகளின் மாயை என்னும் இருளை போக்கி ஞானம் என்னும் ஒளியை காட்ட பகவான் தன் பரிவாரங்களை இந்த மண் உலகத்தில் ஆவதரிக்க செய்தார்.
அவர் திரு உள்ளம் படி துவாபர யுகத்தின் முடிவில் ஆவதரித்தவர்கள் முதல் மூன்று ஆழ்வார்கள். இந்த வாரம் அவர்களை பற்றி காண்போம்.
பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் என்னும் ஊரில் பொய்கை கு ளத்தில் மலர்ந்த தாமரை மலரில் அவதரித்தார்.
இவர் அவதரித்த மறுநாள் பகவானின் கதை அம்சமான பூதத்தாழ்வார்( பூத யோகி) 


உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தல்

.
திருமுறை முற்றோதல்   03.10.2010 ஞாயிற்றுக்கிழமை

உலக சைவப் பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையின் மாதாந்த திருமுறை முற்றோதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 03.10.2010 காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது. அன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை திருத்தாண்டகச் சிறப்பு (ஆறாம் திருமுறை) பற்றி கலாநிதி இராசு வடிவேலு அவர்களால் விளக்கம் கூறப்பட்டு பின்னர் ஆறாம் திருமுறையில் முதலாம் பதிகம் தொடக்கம் திருமுறைப்பாடல்கள் கூட்டுவழிபாட்டு முறையில் பாராயணம் செய்யப்படவுள்ளன.

.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலர்
                                                                                       புதியமாதவி 
அண்மையில் கொங்குமண் கோவையில் நடந்து முடிந்த முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி
மாநாட்டு மலரை முழுமையாக வாசித்துவிட்டு அது பற்றிய என் கருத்துகளை
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற ஆட்சிக்குழுத் தலைவர் பேராசிரியர் அண்ணன் சமீராமீரான்
பரிமாறிக்கொண்டதுண்டு. அதனாலேயோ என்னவோ இந்த மாநாட்டு மலர் குறித்த ஆய்வுரையை
நிகழ்த்தும்படி கேட்டுக்கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.

மருத்துவம்

.

*வெற்றிலையும் மருத்துவமும்..


இஞ்சி இடுப்பழகா...

இஞ்சி இடுப்பழகா... என்ன பாட்டு வரிதானே என்று மட்டும் நினைச்சிடாதீங்க. உண்மையில் இஞ்சி உடலிலுள்ள ஊளைச்சதைகளை குறைத்து உங்கள் இடுப்பை அழகாக்கும் வல்லமை கொண்டது.

அதற்கு இஞ்சிச் சாறோடு தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் உண்டு அத்தோடு வெந்நீரும் அருந்தி வந்தால்

விஸ்வ்வசேது இலக்க்கியப்ப்பாலம்

 விஸ்வ்வசேது இலக்க்கியப்ப்பாலம்
(நினைவு நல்ல்லது வேண்டும்)

அன்புடன் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்களுக்கு,
மிக விரைவில் விஸ்வசேது இலக்கிய பாலம் தனது கணனிப் பக்கத்தை வெளியிட உள்ளது என்பதனை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இது 3 பிரதான பக்கங்களை கொண்டிருக்கும். இணையத்தளங்களில ; உலா வந்து கொண்டு இருக்கும்
வௌ;வேறு தளங்களை ஒருங்கிணைத்த வடிவமாக இருக்கும்.
பக்கம் 1 : பதிப்பகம்-வெளியீடுகள்-ஒன்லைனில் நூல்களை; வேண்டுதல் பற்றிய தகவல்கள் இடங்கும்.
பக்கம் 2 : இதில் இலக்கிய உலகம் பற்றிய செய்திகள்-தகவல்கள் மற்றும் எழுத்தாளர்களின் இலக்கிய
படைப்புகள் (கதை-கவிதை-கட்டுரை), எழுத்தாளர்களின் டிடழபகள் இடம் பெறும்.
பக்கம் 3 : இது இளைய தலைமுறையினர்களின் ஆக்கங்கள் அவர்களின் கிறவிக்ஸ் திறமையுடன்
வெளியிடும் பக்கமாக அமையும். இது அவர்களுக்கான பக்கமாக அமையுமிடத்து அவர்களை
அவர்களாகவே வளர்த்துக் கொள்ள தளம் அமைக்கும். இவ்வாறு டென்மார்க்கில் இயங்கும்
இளையோரின் இணையத்தளத்தில் வந்த கவிதைகளின் தொகுப்புத்தான் ”மெல்லத் தமிழ் இனித்
துளிர்க்கும”; என்ற கவிதை தொகுதியாக 2008ல் வெளியாகியது. தற்பொழுது அதே பணி இந்த
இணையத்தளத்தின் மூலம் உலகளாவிய வகையில் விரிவுபடுத்தப்படுகிறது.
.

உலகச்செய்திகள்

*இந்தியாவில் பொதுநலவாய விளையாட்டுக் கிராமம் திறந்து வைக்கப்பட்டுள்ளது


*இந்தியாவில் நேரு விளையாட்டரங்கின் நடைப்பாலம் உடைந்ததில் 23 பேர் காயம்   பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் இம்முறை இந்தியாவில் நடைபெறவுள்ளன. இதனையடுத்து அங்குள்ள ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கு புனரமைக்கப்பட்டு வருகிறது. இதன் போது, விளையாட்டரங்கின் நடைப்பாலம் சரிந்து விழுந்ததில் 23 பேர் காயமடைந்தனர்.