மரண அறிவித்தல்

.

                                               திரு.தில்லையம்பலம் பாலசுப்பிரமணியம் 
                                               தோற்றம்  21.12.1928   மறைவு 29.08.2015
யாழ் சங்கரத்தை வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், சிட்னி அவுஸ்ரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் பாலசுப்பிரமணியம் அவர்கள் சனிக்கிழமை இரவு இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம்சென்ற அம்பலவாணர் தில்லையம்பலம், தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலம்சென்ற செகராஜசிங்கம் ,அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்
ஞானரசி (Dolly ) அவர்களின் ஆருயிர்க் கணவரும் ,சங்கரி, சிவகாமசுந்தரி தமயந்தி ,சௌந்தரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்
பக்தசிவம், சுரேஸ்குமார் , பரதன் , வசந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்
காலம்சென்ற தனலட்சுமி, விஜயலட்சுமி (பொன்னார்), சிவகாமசுந்தரி (மணி) தான்யலட்சுமி (ஆசை) , யோகநாதன் , இலங்கைவேல் , சிவயோகபதி சிவயோகராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்
ஷோபினி ,நிஷாந்த் ,கணேஷ் ,சேத்தன் ,சந்தியா ,ஆரணன், ஆகீசன் ,அமுதன் , சங்கரன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01.09. 2015 செவ்வாய்க்கிழமை Liberty Funerals ,
 101 South Street , Granville லில் மாலை 6.00 மணியிலிருந்து 8.00 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு
02.09.2015 புதன்கிழமை South Chapel , Rookwood Gardens Crematorium , Memorial Ave, Rookwood  இல் காலை 9.30 மணியிலிருந்து 12.15 மணிவரை இறுதிக்கிரிகைகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றார்கள்.
தகவல்
சங்கரி       9896 8461
சௌந்தரி 0419 811 450

மறக்க முடியவில்லை...காரைக்குடி பாத்திமா ஹமீத் ஷார்ஜா

.மாமரத்தில் ஊஞ்சலாடியதையும் 
மருதாணி பூசி மகிழ்ந்ததையும் 
மயிலறகுகள் சேகரித்ததையும் 
மடியில் தலை வைத்துறங்கியதையும் 

மறக்க முடியவில்லை தோழி!

கூட்டாஞ்சோறு ஆக்கியதையும் 
கும்மியடித்துக் களித்ததையும் 
கொலு பார்த்து மகிழ்ந்ததையும் 
குயில்பாட்டுக் கேட்டதையும் 

மறக்க முடியவில்லை தோழி!

வெண்ணைதிருடித் தின்றதையும் 
அன்னையிடம் அடி வாங்கியதையும் 
திண்ணைக்கதைப் பேசியதையும் 
வண்ண மலர்கள் சூடியதையும்...

எவ்வாறு நான் மறப்பேன் தோழி?

மீண்டுமொருமுறை பிறக்க வேண்டும் 
வேண்டும்படியெல்லாம் வாழ வேண்டும் 
கண்டவர் கண்பட்டுப் போனாலும் 
நீண்டு நிலைத்திருக்கும் அன்பே..
நம் நட்பு மட்டும்!மறக்க முடியாத நினைவுகளுடன்...
காரைக்குடி பாத்திமா ஹமீத்  
ஷார்ஜா

“அரங்காடல்” 2015 - - என் பார்வையில் - மது எமில்

.

2015 ஆவணித்திங்கள் 23ம் நாள் ஞாயிற்றுக்கிழமை  Parramatta வின் பிரபல்யமான Riverside திரை அரங்கு யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தினரின் “அரங்காடல்” நிகழ்வுக்காக சிட்னித்தமிழ் ஆதரவாளர்களால் நிறைந்திருந்தது…..
தாயகத்தின் தனித்துவமான நினைவுகளை சுமந்தவர்களாக,  மண்ணின் மறக்கமுடியாத நிகழ்வுகளை மீட்டிப்பார்க்கும் வீணைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களாகிய நமக்கு நிதி சேகரிப்புகளும் அதற்கான அரங்க நிகழ்வுகளும் சமகாலத்தில் சம்பிரதாயமாகிவிட்டன.
ஆதரவாளர்களில் ஒருத்தியாக அரங்கினுள் எதுவித எதிர்பார்ப்புகளுமே இல்லாமல் நுழைந்த எனக்கு ஏதேர் ஓர் மாற்றத்தையோ அல்லது தனித்துவத்தையோ இந்த “அரங்காடல்” தந்நது என்பதை ஆவணப்படுத்த முடியாமல்; இருக்க முடியவில்லை என்பது தான் உண்மை.


Mahajana Annual Dinner - NSW & ACT - 05/09/2015
திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
வீரகேசரி  குடும்பத்திலிருந்து  ஒரு  ஓவியர்  மொராயஸ்.
இலங்கை  புத்தக  அபிவிருத்திச்சபையின் விருதினைப் பெற்றவர்.    மல்லிகை  அட்டைப்பட  அதிதியாக கௌரவிக்கப்பட்டவர்.
இலங்கையில்  நூற்றுக்கணக்கான  எழுத்தாளர்களின் கதைகளுக்கு   படம்  வரைந்தவர்.    எம்.ஜீ.ஆரின் விருப்பத்தில்   அவரது ' தாய் ' இதழுக்கும்  படம் வரைந்தார்
                                            

உலகப்பிரசித்திபெற்ற  ஓவியர்  பிக்காசோ,   மொனாலிசா  ஓவியம் பற்றி   அறிந்திருப்போம்.  ஆனால்,  இந்தப்பெயர்களை   இலங்கையில் பிறந்து,  தனது  வாழ்நாள்  முழுவதும்  ஓவியராகவே  வாழ்ந்த ஒருவர்  தமது  பிள்ளைகளுக்கு  வைத்து  அழகு பார்த்த  செய்தி தெரியுமா...?
வீரகேசரியுடன்  எனக்கு  உறவும்  தொடர்பும்  ஏற்பட்ட  1972  ஆம் ஆண்டு  முதல்  என்னுடன்  நட்புறவாடிவரும்  ஓவியர்  மொராயஸ் அவர்களது   பிள்ளைகள்தான்  அந்த  பிக்காசோவும்  மொனாலிசாவும். அவரது  மற்றும்  ஒரு  மகன்  சார்ள்ஸ்.
ஓவியத்துறைமீது   அவருக்கு  இருந்த  ஆர்வம்தான்  அவரது பிள்ளைகள்  இருவருக்கு  பிரசித்தி  பெற்ற  அந்தப் பெயர்களை சூட்ட வைத்திருக்கிறது.   சிலர்  தமது  முன்னாள்  காதலிகள்,  காதலர்களின் அல்லது   தமது   விருப்பத்துக்குரிய  கடவுள்களின்  பெயர்களை -வாசித்து  அனுபவித்த  கதைப்பாத்திரங்களின்  பெயர்களை  அல்லது குடும்பத்தின்  பரம்பரை பெயரை  தமது  பிள்ளைகளுக்கு  வைப்பார்கள்.
அவ்வாறு  தமக்குப் பிடித்த  ஓவியத்துறை   சார்ந்த  பெயர்களை மொராயஸ்   தமது  பிள்ளைகளுக்குச்  சூட்டியது  வியப்பல்ல.
வத்தளை  புனித  அந்தோனியார்  வித்தியாலயத்தில்  தனது ஆரம்பக்கல்வியை  முடித்திருந்த  மொராயஸ்  விரும்பியவாறு இவரது    தந்தையார்  தமிழ்நாட்டுக்கு  இவரை   அனுப்பி படிக்கவைத்தார்.    இளம் வயதுமுதலே  இவருக்கு   ஓவியம் வரைவதில்    இருந்த  நாட்டம்தான்  பின்னாளில் ஓவியக்கல்லூரியிலும்  இணையச் செய்திருக்கிறது.
பொதுவாக  எமது  தமிழ்  சமூகத்தில்  தமது  பிள்ளைகள் மருத்துவர்களாக   பொறியியலாளராக  சட்டத்தரணிகளாக கணக்காளராக   வரவேண்டும்  என்ற  எதிர்பார்ப்புத்தான்  அந்நாளைய பெற்றோர்களிடம்    இருந்தது.   காரணம்  இந்தத்துறைகளில்  நிறைய சம்பாதிக்கமுடியும்    சமூக  அந்தஸ்தை வளர்த்துக்கொள்ளவும்முடியும்   என்ற  மனப்பான்மைதான்.

சேக்கிழார் விழ 2015 - 6 Sep 2015

.ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 2 - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.

தமிழகத்திலே பரதக்கலைக்கு பெரு விருட்சம்போல் விளங்கிவர் பத்மஸ்ரீ வழுவூர் இராமையா பிள்ளை அவர்கள்.
ஆடற்கலையில் சிறந்து விளங்கிய நர்த்தகிகளான கமலா லக்ஷ்மணன் வைஜெந்திமாலா மாலி பத்மா சுப்பிரமணியம் சித்திரா விஸ்வேஸ்வரன் போன்றோரை உருவாக்கியவர் ஸ்ரீ வழுவூர் இராமையா பிள்ளை அவர்களே. சென்னையில் அவர் வீட்டிலேயே தங்கி பரதத்தைக் கற்றுக்கொண்டேன். எனது குரு நாதருக்கு பத்மஸ்ரீ விருது இந்திய ராஷ்ட்டிரபதியால் வழங்கப்பட்ட பொழுது ராஸ்ட்ரபதி பவனில் நடந்தகலை நிகழ்ச்சியில் பரதம் ஆடுவதற்கு எனது குரு நாதர் என்னையே தெரிவு செய்திருந்தார். எனது குருவிற்கு எனது ஆற்றல்மேல் இருந்த நம்பிக்கையை இது காட்டுகிறது.
அதை அடுத்து 1967 Febuary 17 இல் எனது பரத நாட்டியம் பம்பலப்பிட்டி கொழும்பு இந்துக்கல்லூரி கட்டிட நிதி திரட்டுவதற்காக நடைபெற்றது. பத்மஸ்ரீ வழுவூர் இராமையா பிள்ளை அவர்கள் சென்னையில் இருந்து வருகை தந்து நடாத்தி வைத்தார். அவரது நட்டுவாங்கத்துடன் கச்சேரி சிறப்பாக நடந்தேறியது.
நிகழ்ச்சியின் பின் பிரமாதமான விமர்சனங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன சிந்தாமணி வார இதழ் 24 02 67 இல் “யோகாவின் விமர்சனம்
கார்த்திகாவின் நாகநிருத்தியத்தில் பிரதிபலித்த ருத்ரபாவமும் சர்ப்பமாக தன் உடலை வளைத்து நளினமாக ஆடியது மனதைவிட்டு அகலாது. கிறஸ்ண ஜயர் கூறியது போன்றே வழுவூராரின் பாணியில் சிலையை வெல்லும் நடன நிலைகளும் சிறப்புப் பயிற்சி மூலமே பெறப்படும்  அங்கக் குழைவும்


அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் இவ்வாண்டிற்கான 'மாருதி'விருது
அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் இவ்வாண்டிற்கான 'மாருதி'விருதுக்குரியவரை,
தேர்ந்தெடுப்பதற்கான பரிந்துரைகளை உங்களிடமிருந்து வேண்டி நிற்கின்றோம்.

தமிழ் மொழியினதும், தமிழ்ச் சமுதாயத்தினதும் உயர்வுக்காக,
அவுஸ்திரேலிய மண்ணில் / மண்ணிலிருந்து தன்னலமற்ற சேவையாற்றிய ஒருவரை,
தமிழ் மக்களிடமிருந்து பெறப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்வுசெய்து,
அவுஸ்திரேலியக் கம்பன் கழக உயர் 'மாருதி' விருதினை,
2012ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவரும் கம்பன் விழாக்களில் வழங்கி வருகின்றோம்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஞ்சம்

.
DSC_0138வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி  ஆலயத்தின்  வருடார்ந்த மகோற்சவத்தின் 10ஆம் திருவிழா (28.08.2015)  வெகு சிறப்பாக இடம்பெற்றது. பெருந்திரளான அடியவர்கள் கலந்து கொண்டு வழிபாடாற்றினார்கள்.இலங்கைச் செய்திகள்


தமிழ் அரசுக் கட்சியின் தேசியப்பட்டியல்

உடன் பிறப்புகளை இழந்த சகோதரனின் கதறல்

அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய நிஷா இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பு

வித்தியா கொலை வழக்கு : டீ.என்.ஏ பரிசோதனை செய்ய உத்தரவு
த.தே. கூட்டமைப்பு - அமெரிக்க உதவிச் செயலாளர் சந்திப்பு


 ஓமந்தையில் சோதனைச்சாவடி நடவடிக்கைகள் இடை நிறுத்தம்தமிழ் அரசுக் கட்சியின் தேசியப்பட்டியல்


24/08/2015 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியலில், கதிர்காமதம்பி துரைரெட்ணசிங்கம் மற்றும் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.


"கூலித் தமிழ்" ஈழத்து மலையகத் தமிழரின் துயர்மிகு வரலாறு பேசும் சாட்சியம் - கானா பிரபா‏

.

வீரகேசரி வாரமலர் ஒன்றின் புத்தக அறிமுகப்பகுதி வழியாகத் தான் மு.நித்தியானந்தன் அவர்கள் எழுதிய
"கூலித் தமிழ்" என்ற நூல் குறித்த அறிமுகம் எனக்குக் கிடைத்தது.
அப்பொழுதே இந்த நூலை வாங்கி விட வேண்டும் என்ற வேட்கை என்னுள் எழுந்தது. 
ஈழத்து இலக்கிய அரங்கில் மலையக இலக்கியமும் செழிப்பான பங்களிப்பைத் தந்திருக்கின்றது என்றாலும் ஒப்பீட்டளவில் அந்த மண்ணும் மக்களும் இன்று வரை எவ்வளவு தூரம் அரசியல் தான் தோன்றித் தனங்களால் உரிமை மறுக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்ட சமூகமாக இருக்கிற சூழலே வாசகப்பரப்பில் மலையக இலக்கியங்களுக்கும் நிகழ்வதாக நான் கருதுகிறேன். மலையக இலக்கியகர்த்தாக்கள் குறித்த பதிவு இதுவன்று என்பதால் இத்தோடு முற்றுப்புள்ளி வைத்து "கூலித் தமிழ்" இற்குத் தாவுகிறேன்.

மு.நித்தியானந்தன் அவர்கள் எழுதிய இந்த "கூலித் தமிழ்" ஒரு முறையான வரலாற்று ஆவணம். 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் மலையகத்தில் தேயிலைத் தோட்டப் பயிர்ச் செய்கைக்காக இந்தியாவிலிருந்து, குறிப்பாகத் தமிழகத்தில் இருந்து வந்த சமூகத்தின் துயரம் தோய்ந்த வரலாற்றை உண்மைத் தரவுகளோடு சான்று பகிர்கின்றது. இந்த நூலில் பொதிந்திருக்கும் வரலாற்று ஆதாரங்களை நூலாசிரியர் நூற்றாண்டுக்கு முந்திய வரலாற்று ஆவணங்களை முன் வைத்து எழுதியிருப்பதே இந்த நூலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

மலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை இல-4 திருமதி.சுபாஜினி சிறீரஞ்சன்டென்மார்க்

.
என்னுள் தீண்டிய உணர்வுகள்
எண்ணைச்  சுரங்கமாய்......
அள்ள குறையா அமிர்தமாய்
வேண்டுமே

ஐம்புலனும் அடங்கி அள்ளிப் பருகும்
ஊற்றாய் பாய்ந்து
தேனாய் இனித்து
தினம் பார்க்கும் மலர்ந்த
முகமாய் வேண்டுமே..........

கலைகள் பெருகிட
காலமெலாம் படைத்து
புதிதாய்  முகம் காட்டி
மலரும் முகமாய் வேண்டுமே......

பிறமொழிக் கலைகளை பெயர்த்து
நுகர்ந்;;து இன்பம் எனச் சொல்லி....
இணையவலையில் நிலையாய்
தமிழே நின் முகமே வேண்டுமே.......

அழகு மொழி கற்றும்
அதில் ஏதும் உணராத
உயிரோடும் கலக்காத
உணர்வுகளை தந்த
தமிழே என்றும்
தொடுகை(ஸ்பரிச)இல்லா
தீண்டலாக வேண்டுமே.........

உலகச் செய்திகள்


சிரி­யாவில் படை­யினர் வான் தாக்­குதல் 12 சிறு­வர்கள் உட்­பட 34 பேர் உயி­ரி­ழப்பு

சிறைக்கு திரும்பிய மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி நஷீட்

யேமனில் வான் தாக்­குதல், மோதல்கள் 24 மணி நேரத்தில் 40 பேர் உயி­ரி­ழப்பு

அமெரிக்காவில் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் சுட்டுக்கொலை

ஈராக்கில் மனை­விக்கு துரோகம் செய்த கண­வ­னுக்கு தலையை நசுக்கி மர­ண­தண்­டனை நிறை­வேற்றம்ஆயிரக்கணக்கான பக்த வெள்ளத்தின் நடுவே தேரில் அசைந்தாடி வந்த சந்நிதி முருகன்

.

வரலாற்றுப் புகழ் மிக்க செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா   வெள்ளிக்கிழமை பகல் மிகவும் பக்திப் பரவசமாக இடம்பெற்றது.
அதிகாலையில் இடம் பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகரா கோசத்தின் மத்தியில் முருகப்பெருமான் அழகிய திருத் தேர் ஏறி அடியவர்களுக்கு காட்சியளித்தார்.
யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலும் இருந்து இடம்பெற்ற இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் மினிபஸ்வண்டிகளின் சேவையுடன் அதிக எண்ணிக்கையான அடியவர்கள் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டார்கள்.
இத்துடன் புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்த அதிக எண்ணிக்கையானவர்களும் கலந்து கொண்டார்கள்.
அடியவர்கள் கற்பூரச் சட்டி எடுத்தும், அடியடித்தும், அங்கப்பிரதட்டை செய்தும், தூக்கு காவடிகள், பறவைக்காவடிகள், மற்றும் சப்பாணிக் காவடிகள் எடுத்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவு செய்தார்கள்.
பொலிஸார், சாரணர் இயக்கம், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ், தொண்டர் படையினர் இணைந்து ஒழுங்கு படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.

அவள் ஏன் அவரை பின்தொடர்கிறாள்?

.

அப்பா அலுவலகம் கிளம்பும்போது புன்னகை பூத்து டாடா சொல்லி, "வரும் போது அதை மறக்காமல் வாங்கிட்டு வந்திடு... அப்புறம், ஈவினிங் என்னை அங்கே கட்டாயம் கூட்டிட்டுப் போகணும்" என்று நம் குழந்தைகள் சொல்வதை கேட்டிருக்கிறோம்.
ஆனால், நாம் வாழும் இதே திருநாட்டில் நம் வயிற்றுக்கு சோறு அளிக்கும் விவசாயின் மகளோ/மகனோ ஒவ்வோர் நாளும் தன் அப்பா வயலுக்குச் சென்றுவிட்டு உயிருடன் திரும்புவாரா என்ற அச்சத்துடன் தவிக்கும் சூழலும் இருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோமா?
பெருமிதத்தோடு 69-வது சுதந்திர தினம் கொண்டாடி முடித்திருக்கிறோம். ஆனால் ஆண்டுகள் வளர்வதைப் போல் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதை உணர்ந்திருக்கிறோமா?
விவசாயிகளின் தற்கொலை தலைப்புச் செய்தியில் இருந்து சிங்கிள் காலம் செய்தியாகிவிட்டிருக்கிறது.
சுதந்திர தின பேருரையில் பிரதமர் மோடி, "வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதேவேளையில் விவசாயிகள் நலனை புறந்தள்ளிவிட முடியாது. எனவே, வேளாண் அமைச்சகம், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை என அழைக்கப்படும்" என்றார்.
பெயர் மாற்றத்தால் பெரும் மாற்றம் வந்துவிடுமா? கேள்விக் கணைகள் சூழ்ந்து கொள்கின்றன.
இது துனியாவின் கதை. துனியாவுக்கு துள்ளிக்குதிக்கும் வயது. ஏனோ அவள் புன்னகை களவாடப்பட்டிருந்தது. பொய்த்துப் போன பருவ மழையால் விவசாயி தற்கொலை, கடன் சுமையால் விவசாயி தற்கொலை, கடன் சுமையால் விவசாயி தற்கொலை நாளும், பொழுதும் இப்படிப்பட்ட செய்திகள் அவள் புன்னகையை களவாடியிருந்தன. அப்பா வயற்காட்டுக்கு கிளம்பும்போதெல்லாம் அவள் மனதில் ஜிவ்வென படர்கிறது ஒரு வித அச்ச உணர்வு.


குரங்குகள்வாங்கும்பென்சன் - முனைவர் எம். சஞ்சயன்

.
9 வருடங்களுக்கு முன்னர் என் மகன் அப்போதைய இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமைச் 
சந்தித்தபோது அதைப் பதிவு செய்தார். நான் அதை மொழிபெயர்த்து அது பிரசுரமானது. இன்று மனித நேயத்தில் 
உயர்ந்து நிற்கும் இந்த மாமனிதர் நினைவாக மீண்டும் பதிவிடுகிறேன். 

குரங்குகள்வாங்கும்பென்சன்
முனைவர் எம். சஞ்சயன்
அந்த அலுவலகம் பிரம்மாண்டமானதாக, குடைந்துவைத்ததுபோல
குறைவான வெளிச்சத்தில் இருந்தது. இடுப்பளவு உயரத்தில் இருந்து
சீலிங்வரைக்கும் நீண்ட பிரெஞ்சு யன்னல்கள். பெரும்பாலான
யன்னல்கள் வேலைப்பாடுகள்செய்த வெல்வெட் திரைச்சீலைகளால்
மறைக்கப்பட்டு டில்லியின் சூரியனும், வெக்கையும் உள்ளே வராமல்
தடுத்தன. புறாக்கள் யன்னல் விளிம்புகளில் உட்கார்ந்துசத்தமிட்டன.
அண்மையில் இருந்தமரங்களிலும், கட்டிடங்களிலும் குரங்குகள்
நிறைய சஞ்சரித்தன. இயற்கையான வனப்பிரதேசச் சூழல்யன்னல்
களை அங்காங்கே கறைபடவைத்திருந்தது. எந்த மனிதனுக்கு
இந்தயன்னல்களை கழுவும்பணி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று
நான்யோசித்தேன். அதுவரைஒருபெண்பணியாளரைக்கூட
நான்காணவில்லை.

ஈழத்து தமிழ் குறுந்திரைப்படத் துறை

.
அமரர் ராஜஸ்ரீகாந்தன் ஞாபகார்த்தமாக  அட்சரம் நடத்திய குறுந்திரைப்பட போட்டியை முன் வைத்து…..

 1 தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை, சினிமாக் கலை இன்னும் சரியாகப்  புரிந்து கொள்ளப்படாத நிலையில், உலக மொழிகளிலும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் விரிவாகச் செல்வது என்றால்,  நமது சகோதர மொழியான சிங்கள மொழிச் சூழலில், சிணிமாக் கலை புரிந்துக் கொள்ளப்பட்ட, ஏற்றுக் கொள்ளப்பட்ட அளவுக்கு, தமிழகச் சூழலில் சினிமா புரிந்துக்  கொள்ளப்;படாமல் அதுவொரு வணிகத் துறையாக வளர்த்தெ டுக்கப் படுகிறது. இப்படிச் சொல்வது தமிழகச் சூழலில்  மாற்றுச் சினிமா அல்லது மீடில் சினிமா முயற்சிகள் நடைபெறவில்லை என்ற அர்த்தமாகாது. அங்கும் அத்தகைய முயற்சிகளில் ஒரு சிலர் ஈடுபட்டாலும், அவர்கள் வெற்றி அடையவில்லை என்றே சொல்லப்பட்டது. இங்கு வெற்றி என்பது வணிக ரீதியான வெற்றியே மனங்கொள்ளப்படுகிறது. அத்தகைய முயற்சிகளில் சில நல்ல சினிமா வெளிப்பாடுகளாக இருந்தமையும் இங்கு குறிப்பிடதக்கது.  மாற்று வழியாகத் தமிழ்ச் சூழலில்  குறுந்திரைப்பட முயற்சிகள் பரவலாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வருகின்றன. 

தமிழ் சினிமா வாலு


சிம்பு ரசிகர்களுக்கு எப்படியோ 3 வருட தவம் கலைந்து விட்டது. போடா போடி படத்திற்கு பிறகு வெறும் கெஸ்ட் ரோலில் மட்டும் பார்த்து வந்த சிம்புவை முழுப்படத்தில் பார்க்க ரசிகர்கள் நீண்ட நாட்கள் காத்திருந்தனர்.
விஸ்வரூபம், தலைவா படங்கள் பல பிரச்சனைகளை கடந்து வெளிவந்தது. இந்த படங்களை விட வாலு என்ன பிரச்சனை என்று தெரியாமலேயே பெட்டிக்குள் தூங்கியது. சரி அதெல்லாம் இருக்கட்டும் படம் தான் வந்து விட்டதே. கதையை பார்ப்போம்
கதைக்களம்
தமிழ் சினிமாவின் 80 வருட பாரம்பரியம் கெடாதபடி ஹீரோ இந்த படத்திலும் வேலைக்கு போகாமல் நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகின்றனர். அப்பா பேச்சை கேட்பது கிடையாது, ஆனால், அப்பா மகன் மீது பாசத்தை அள்ளி தெளிக்கிறார்.(டி.ஆர் சாரை பார்த்தது போலவே இருக்கும்).
அம்மா பேச்சை கேட்பது இல்லை, தங்கச்சியை சண்டைக்கு இழுப்பது என சிம்பு மிடில் கிளாஸ் பையனாக வலம் வர, வழக்கம் போல் ஹன்சிகாவை பார்த்து முதல் பார்வையில் காதல் தொற்றிக்கொள்ள, விரட்டி விரட்டி காதலிக்கிறார்.
பின் ஒரு கட்டத்தில் ஹன்சிகாவிற்கு சூழ்நிலைக்காரணமாக கட்டப்பஞ்சாயத்து செய்யும் அவருடைய தாய் மாமாவுடன் திருமணம் நிச்சியக்கப்பட்டது சிம்புவிற்கு தெரிய வர, எப்படி இதையும் மீறி ஹன்சிகாவை சிம்பு கரம் பிடித்தார் என்பதை கலகலப்பாக கூறியிருக்கிறார் இயக்குனர் விஜய் சந்தர்.
படத்தை பற்றிய அலசல்
சிம்பு எத்தனை வருடங்கள் கழித்து வந்தாலும் அதே எனர்ஜி. அவர் வரும் ஓவ்வொரு காட்சிகளிலும் விசில் பறக்கிறது. அதிலும் லவ் பெயிலியர் கிங் என்பதால் சிம்பு பேசும் பல வசனங்கள் இன்றைய இளைஞர்களின் தேசிய கீதம் தான்.
சந்தானம் தான் படத்தின் அடுத்த ஹீரோ என்று சொல்லலாம், அவர் வாய் திறந்தாலே மக்கள் சிரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். சிம்புவிற்கு ஏற்ற பக்கா ஜோடி சந்தானம். சந்தானத்திற்கு துணையாக VTV கணேஷ் கரகர குரலால் கலக்கியுள்ளார்.
அவரே அப்படி இருக்கும் போது ரியல் லைப் ஜோடியாக இருந்த ஹன்சிகா சொல்லவா வேண்டும்? செம்ம கெமிஸ்ட்ரி சார். இதையெல்லாம் விட ஆச்சரியம் இசை தமன்? இதுவரை தமன் இசையமைத்த படங்களிலேயே இது தான் பெஸ்ட்.
க்ளாப்ஸ்
படத்தின் வசனம், பின்னணி இசையில் மிரட்டியுள்ளார் தமன். இத்தனை வருடம் கழித்து வந்தாலும் இன்றைய காலகட்டத்திற்கு பொருந்தும் காட்சிகள்.
பல்ப்ஸ்
கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி எதற்கு என்று இயக்குனருக்கே தெரியவில்லை போல, படத்தில் வில்லன் என்று ஒருத்தன் இருக்கனும் என்பதற்காக ஒருவரை வைத்துள்ளார்கள் போல.
மொத்தத்தில் ரசிகர்கள் மனதின் ஈர்ப்பு தெரிந்தவர் இந்த ஷார்ப்பு....
ரேட்டிங்- 2.75/5

நன்றி cineulagam