சொல்லாமல் நெஞ்சள்ளிப் போன வாணி ஜெயராம் 💔 கானா பிரபா

 சிலர் எவ்வளவு கோபப்பட்டு வார்த்தையைக் கக்கினாலும் அவர்களின் குரலில் ஒரு ஓசை நயமும், தண்மையான ஒலியாகவே வெளிப்படும். அப்படியொரு குரல் ஜெயச்சந்திரனுக்கு. இதே பாங்கில் வாணி ஜெயராமின் குரலையும் கவனிக்கலாம். இந்தக் குரல்களுக்குள் சங்கீதம் தடவியிருக்கும். பேசும் போதும் ஏதோ சுரம் பிரித்துப் பாடும் ஒரு ஜீவன் இருக்கும்.


கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட திருமதி வாணி ஜெயராம் அவர்கள் நவம்பர் 30 ஆம் திகதி, 1945 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர். 

சாஸ்திரிய சங்கீத மற்றும் இந்துஸ்தானி இசை மரபுடனோடு  திரையிசைப் பாடகியாகக் களமிறங்கிய அவரின் குரலில் மிளிர்ந்த பாடல்களைக் கேட்கும் போது ஜேசுதாஸ் குரலில் கொடுக்கும் தெய்வீக உணர்வு மிளிரும்.  
கவியரசு கண்ணதாசனும், வைரமுத்துவும் விதந்து பாராட்டிக் கட்டுரை எழுதுமளவுக்கு அவர்களைப் போன்ற உயரிய பாடலாசிரியர் வரிகளுக்கு மகத்துவம் செய்தவர்.

































புலனெலாம் நன்னெறி புகுந்திடும் நன்னாள் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா 



 தந்தைக்கு உபதேசம் செய்த குருநாதன் 
தாயின்றி உருவான ஞான குருநாதன்
 வந்திக்கும் அடியார்க்கும் வரமருளும் நாதன்
 வள்ளிதெய்வ யானையுடன் காட்சிதரும் நாதன் 

ஆறுபடை வீடமர்ந்த ஆறுமுக நாதன் 
அருணகிரி தமிழ்பாட அருள்புரிந்த நாதன் 
 வீறுடைய அசுரர்தமை வெற்றி கொண்டநாதன் 
 வியந்துமே போற்றுகின்ற வெற்றிவேல் நாதன் 

  தந்தைக்கு குருவான தயையுடைய நாதன்
  தைப்பூசத் திருநாளில் அவதாரம் செய்தார்
  சிந்தைக்குள் புகுந்திருக்கும் அகந்தையினை அகற்ற
  கந்தனாய் தைப்பூசம் வந்துதித்தார் காக்க 

 சிதறிய பொறிகள் மலர்களில் வீழ்ந்தன
 அழகுடை குழந்தைகள் அறுவர் தோன்றினர்
  கார்த்திகைப் பெண்கள் கைகளில் எடுத்தனர்
  கனலது கந்தனாய் உருவினைப் பெற்றது 

 ஆணவ அரக்கரை அழித்திட வேலினை
 அன்னை உமையவள் கொடுத்தனள் கையினில்
 வேலவன் வாகையைச்  சூடிய நாளதாய் 
 பூசத் திருநாள் பொலிந்தது புவியினில் 


கந்தன் கோவில்கள் ஒளியினில்  மிதந்திடும்
 காவடி பலபல சன்னதி நிறைந்திடும் 
 கற்பூர சட்டிகள் தலைகளில் அமர்ந்திடும்
 தைப்பூசத் திருநாள் சந்தோஷம் தந்திடும் 

ஒளியினில் இறைவனைக் கண்டிடும் திருநாள்
உணர்வுகள் இறையுடன் கலந்திடும் திருநாள்
பலபல இடங்களில் மிளிர்ந்திடும் திருநாள்
பாங்குடை தைப்பூச திருநாள் ஆகும் 

குறுங்கவிதை(ஹைகூ) - மெல்போர்ன் அறவேந்தன்


 



எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 51 மாரடைப்பு மகாத்மியம் சொல்லும் கதைகள் ! மாறியது வாழ்க்கை ! மாற்றியது யாரோ ? முருகபூபதி


இலங்கையில் வாழ்ந்த காலப்பகுதியில், என்றைக்குமே மருத்துவ மனைகளில்  சிகிச்சைக்காக நான் அனுமதிக்கப்படவில்லை.

அதனால்,  மருந்து, மாத்திரைகளும் என்னை அண்டவில்லை. எனது உடலை  மருத்துவமனை சத்திர சிகிச்சை கருவிகளும்


தீண்டவில்லை.  காய்ச்சல், தலையிடி, தடிமன், இருமல் வந்தால், பாட்டியும் அம்மாவும்  கொத்தமல்லி குடிநீர் தந்து குணப்படுத்திவிடுவார்கள்.

கண்பார்வையும் தெளிவாகவும் கூர்மையாகவும் இருந்தமையால் கண்ணாடியும் அணியவில்லை.

அவ்வாறு 1951 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் அங்கே நல்ல சுகதேகியாக வாழ்ந்திருக்கும்  நான், பின்னாளில்  இந்த புகலிட தேசத்தில்  மருந்து , மாத்திரைகளுடன்  பொழுதுகளை


கடக்கின்றேன்.  அவை நெருங்கிய உறவாக மாறியது.   வயது செல்லச்செல்ல,  தொடர்ந்தும் அருகிலிருப்பவை மருந்தும் மாத்திரைகளும்தான்.  இது அனைவருக்கும் பொதுவான விதி. கடந்த பல வருடங்களாக இன்சுலினும் நெருங்கிவிட்டது.  வீட்டில் குளிர்சாதனப்பெட்டிக்குள்   அவையும் பெட்டி பெட்டியாக வாசம் செய்கின்றன.

தூரப்பயணங்கள் செல்லும்போது அவற்றையும் மறக்காமல் காவிச்செல்லவேண்டும். அதற்கென பிரத்தியேகமான குளிரூட்டப்பட்ட  பையும்  இருக்கிறது. விமானப்பயணங்களின்போது முதலில் தோன்றும் கண்காணிப்பாளர்களிடம் இன்சுலின் ஊசிகளையும் காண்பிக்கவேண்டும். நான் நீரிழிவு உபாதையுள்ளவன் என்பதை அங்கே பிரகடனப்படுத்தவேண்டும். என்னை பரிசோதிப்பவருக்கும் அது இருக்கலாம்.  சக பயணிகளுக்கும் விமான ஓட்டிகளுக்கும் விமான பணிப்பெண்களுக்கும் கூட இருக்கலாம்! யார் கண்டது! ?

தங்கியிருக்கும் விடுதிகள், வீடுகளில் குளிர்சாதனப்பெட்டி இருக்கிறதா என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.  எடுத்துச்செல்லும் இன்சுலின் பேனைகளை பேணிப்பாதுகாக்கவேண்டும். 

மாறியது வாழ்க்கை !   மாற்றியது யாரோ ?  என பாடவும் தோன்றும்.

எனது வாழ்வின்  தரிசனங்களே நான் எழுதும் கதைகள் என தொடர்ந்து கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இலக்கியப் பிரதிகள் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து சொல்லி வருகின்றேன்.  புகலிடம் பெற்றபின்னர், எனது எழுத்துக்களில் இந்த மருந்து மாத்திரைகளும் பாத்திரங்களாகிவிடும். அல்லது மருத்துவ சிகிச்சைகளும் பதிவாகிவிடும்.

மெல்பனில் நான் முதல் முதலில் வேலைக்குச்சேர்ந்த Australia Textiles Printing Company இல், என்னுடன் பணியாற்றிய கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர் தோற்றத்தில் கொலிவூட் நடிகர் ரிச்சர்ட் பேர்டனைப் போன்றிருப்பார்.  என்னைவிட வயதில் மூத்தவர். எப்பொழுதும் ஏதாவது ஜோக் சொல்லி அங்கிருப்பவர்களை சிரிக்கவைத்துக்கொண்டிருப்பார்.

எமக்கு இரவு நேர வேலை. மாலை 5-15 மணிக்குத் தொடங்கினால், மறுநாள் அதிகாலை 3-45 மணிக்குத்தான் முடிவடையும். தினமும் எமக்கு இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஓவர்டைம் வேலையும் இருக்கும்.  அதனால் மேலதிகமாக Night Allowance உம் பெற்றோம்.

இரவு நேர வேலையிலிருந்த சிலர், உணவு இடைவேளையில்  “தண்ணீ    பாவிப்பார்கள்.  பெரும்பாலும் பியர்தான்.  அத்துடன் வெளியே இருந்து Fast Food தருவித்து உண்பார்கள். நான் வீட்டிலிருந்துதான் உணவு எடுத்துச்செல்வேன்.

பணத்தோட்டம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 அறுபது ஆண்டுகளுக்கு முன் தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராகத் திகழ்ந்தவர் ஜி என் வேலுமணி. இவர் சிவாஜியின் நடிப்பில் தயாரித்த பதிபக்தி, பாகப்பிரிவினை, பாலும் பழமும் ஆகிய படங்கள் பெரும் வெற்றியைக் கண்டு வெற்றிகரமான தயாரிப்பாளராக இவரை உயர்த்தி இருந்தது. சிவாஜியின் படத் தயாரிப்பாளர் என்று அடையாளம் காணப்பட்ட இவர் திடீர் என்று எம் ஜி ஆரின் தயாரிப்பாளராக மாறினார். அப்படி மாறி தனது சரவணா பிலிம்ஸ் பட நிறுவனம் மூலம் அவர் தயாரித்தப் படம்தான் பணத்தோட்டம்.



எம் ஜி ஆர் நடிப்பில் உருவான இப் படத்தின் கதையை எழுதியவர் மணிக்கொடி புகழ் பி எஸ் ராமையா ஆவார்.ஆனால் அவர் எழுதிய கதையா இது என்ற சந்தேகம் படம் முழுதும் தொடரும் வண்ணம் படத்தின் கதை மிக சாதாரணமாக அமைத்திருந்தது.கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் கோஷ்டியின் சாதித் திட்டத்துக்கு பலியாகும் செல்வம் என்ற அப்பாவி இளைஞன் சிறையில் அடைப் படுகிறான்.தான்

நிரபராதி என்று நிரூபிக்க சிறையில் இருந்து தப்பும் அவனை சீமான் பொன்னம்பலத்தின் மகள் கலா அடைக்கலம் கொடுத்து காப்பாற்றுகிறாள்.அதன் தொடர்ச்சியாக இருவரிடையே காதல் மலர்கிறது.மறுபக்கம் போலீஸ் துரத்துகிறது.செல்வத்தின் தாயே மகன் மீது சந்தேகப்படுகிறாள்.ஆனாலும் குற்றவாளியை பிடிக்க செல்வம் முயற்சி செய்கிறான்.

இப்படி எழுதப் பட்ட கதையில் செல்வமாக எம் ஜி ஆர் நடித்தார். இந்தப் படத்தில் அவர் ஆறு விதமான மறுவேடங்களில் வருகிறார்.தபால்காரராக,மேல் நாட்டு நடனக்காரராக,வண்டி இழுப்பவராக, தெருவில் சப்பாத்துக்கு பாலிஷ் போடுபவராக வயதான வழிப்போக்கனாக,குடிகாரனாக, பல வேடங்களில் அவர் வருகிறார்.அவரின் காதலி கலாவாக சரோஜாதேவி நடித்தார்.இவர்களுடன் எஸ் வி சுப்பையா,நம்பியார், எம் வி ராஜம்மா,ஷீலா,அசோகன்,கரிக்கோல் ராஜு,ஆகியோரும் நடித்திருந்தனர்.

படத்திலேயே சரோஜாதேவியின் நடிப்புதான் நிறைவாக இருந்தது.எம் ஜி ஆரிடம் அவர் நெளிவதும்,குழைவதும் இனிமை.சுப்பையா அவ்வப்ப்போது வெள்ளந்தியாக சிரிக்கிறார்.ராஜம்மா கலங்குகிறார். வில்லன் நம்பியார் அடக்கி வாசிக்கிறார்,ஆனால் எம் ஜி ஆருடன் ஆக்ரோஷமாக சண்டை போடுகிறார்.அசோகனுக்கு போலீஸ் இன்ஸ்பக்டர் வேடம். இவர்களுடன் நாகேசும்,ஏ வீரப்பனுக்கு செய்யும் கூத்துகளை நகைச்சுவை என்பதா,அபத்தம் என்பதா! நாகேஷ் நடித்த முதல் எம் ஜி ஆர் படம் இதுதான்.ஆனால் எம் ஜி ஆருடன் ஒரு காட்சியில் கூட அவர் சேர்ந்து நடிக்கவில்லை. இந்தப் படத்தில் நடிக்க வேலுமணியிடம் பெற்றுக் கொண்ட மூவாயிரம் ரூபாயை கொண்டே நாகேஷ் முதன் முதலாக ஒரு செகண்ட் ஹாண்ட் காரை வாங்கினார்.

முதல் சந்திப்பு பள்ளி ஆசிரியராகவிருந்து படைப்பாளியாக உருவான மெல்பன் மணி முருகபூபதி


அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்தை 2001 ஆம் ஆண்டு ஆரம்பித்தபோதே, நூல்கள் தொடர்பான வாசிப்பு அனுபவப் பகிர்வு நிகழ்ச்சியையும் அதில் இணைத்துக்கொண்டோம்.  கடந்த 22 வருடகாலமாக இந்நிகழ்வு நடந்துவருகிறது.

எழுத்தாளர்கள் எவ்வளவுதான் எழுதினாலும் அவற்றை படிப்பதற்கு வாசகர்கள் இல்லையேல் எழுத்தாளர்கள் காணாமல் போய்விடுவார்கள். கலைஞர்களுக்கு ரசிகர்கள் எவ்வளவு முக்கியமோ, அவ்வாறே எழுத்தாளர்களுக்கும் வாசகர்கள் மிக மிக முக்கியம்.

2003 ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் விழாவை நான் வதியும்


மெல்பனில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தபோது, எனது கண்ணில் கலியுகத்தின் சில பக்கங்கள்  என்ற சமூக நாவல் தென்பட்டது.  அதனை எழுதியிருந்தவர் மெல்பன் மணி.  எனக்கு இந்த எழுத்தாளரின் பெயர் அப்போதுதான் முதல் முதலில் அறிமுகமானது.

எழுதியவர் பெண்தான் என்பதை அக்கதையின் படைப்பு மொழியிலிருந்து புரிந்துகொண்டேன்.  பின்னர் விசாரித்துப்பார்த்தேன். அவ்வாறுதான் அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் நகரில் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் வதியும்  திருமதி கனகமணி அம்பலவாணபிள்ளை அவர்கள் எனக்கு முதலில் அறிமுகமானார்.

குறிப்பிட்ட  நூலைப்பற்றி விழாவில் பேசவேண்டும். யாரைப் பிடிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது எவரும் உடனடியாகக் கிடைக்கவில்லை.  கையிலே வெண்ணெயை வைத்துக்கொண்டு,  நெய்க்காக வெளியே அலைவானேன் என்ற முடிவுக்கு வந்தேன்.

 இலங்கையில் ஆசிரியையாக பணியாற்றிவிட்டு வந்திருந்த எனது மனைவி மாலதியிடம் குறிப்பிட்ட கலியுகத்தின் சில பக்கங்கள்  நூலைக்கொடுத்து படிக்கச்செய்து, பேசவைத்தேன்.  அதுவே  அவுஸ்திரேலியாவில் மாலதியின் முதலாவது மேடைப்பேச்சு. 2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில்  அந்த விழா நடந்தது.

அன்றைய தினம் கவிஞர் அம்பியின் தலைமையில் நடந்த கருத்தரங்கில் மெல்பன் மணி,  “ முதியோரும் புலம்பெயர் வாழ்வும்   என்ற தலைப்பில் உரையாற்றினார்.  

இந்த வருடம் ( 2023 )  ஜனவரி மாதம் 22 ஆம் திகதி தனது 84 வயது பிறந்த தினத்தை, தனது மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் சகிதம் வீட்டில் அமைதியாக கொண்டாடியிருக்கும் மெல்பன்மணி,  சிறுகதை, கவிதை, நாவல் , கட்டுரை முதலான துறைகளில் எழுதிவருகிறார்.

இதுவரையில் 13 நூல்களையும் வரவாக்கியிருப்பவர்.  இவரது பூர்வீகம், வடக்கில் கொடிகாமத்திற்கு சமீபமான கரம்பகம் என்ற கிராமம். குடும்பத்தில் கனிஷ்ட புத்திரியான இவர், தனது ஆரம்பக்கல்வியை ஒட்டுவளி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையிலும், சிரேஷ்ட கல்வியை உசன் இராமநாதன் வித்தியாலயத்திலும் தொடர்ந்து, பால பண்டிதர் பரீட்சையிலும் சித்தி பெற்றிருக்கிறார். தனது 19 வயதில் ஆசிரிய நியமனம் பெற்றவர். கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கலாசாலையில் கற்றவர்.

ஜீவநதி முருகபூபதி சிறப்பிதழ்


இலங்கை வடபுலத்தில் அல்வாயிலிருந்து கடந்த பல வருடங்களாக வெளிவந்துகொண்டிருக்கும் ஜீவநதி கலை, இலக்கிய மாத இதழ், 2023 தை மாத வெளியீடாக , அவுஸ்திரேலியாவில் வதியும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் , படைப்பிலக்கிய முயற்சிகளையும் பதிவுசெய்யும் வகையில் சிறப்பிதழை   வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே பல சிறப்பிதழ்களையும் கலை, இலக்கிய ஆளுமைகள் தொடர்பான சிறப்பிதழ்களையும் வரவாக்கியிருக்கும் ஜீவநதியின் ஆசிரியர் கலாமணி பரணீதரன், முன்னர் அவுஸ்திரேலியச் சிறப்பிதழையும் வெளியிட்டிருப்பவர்.

இவ்வருடம் தைமாதம் வெளியாகியிருக்கும்   இலக்கிய ஆளுமை முருகபூபதி சிறப்பிதழில், கிறிஸ்ரி நல்லரெத்தினம், தாமரைச்செல்வி, காரைக்கவி கந்தையா பத்மநாதன், ஜெயபிரசாந்தி ஜெயபாலகேரம், கே. எம். செல்வதாஸ், ஐங்கரன் விக்னேஸ்வரா, ருஸ்னா நவாஸ், சிவ ஆரூரன், பேராசிரியர் செ. யோகராசா, புலோலியூர் வேல் நந்தகுமார், அஷ்வினி வையந்தி, சிதம்பரப்பிள்ளை சிவக்குமார், வ. ந. கிரிதரன், த. கலாமணி, மகேந்திரராஜா பிரவீணன், புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் ஆகியோர், முருகபூபதி எழுதிய நூல்கள் பற்றிய வாசிப்பு அனுபவங்களுடன், முருகபூபதியின் தன்னார்வத் தொண்டு பணிகள் குறித்தும் எழுதியுள்ளனர்.

முருகபூபதியின் வாழ்க்கைக்  குறிப்புகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.

பிரதிகளுக்கு :  ஜீவநதி, கலைஅகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், இலங்கை.

மின்னஞ்சல்: jeevanathy@yahoo.com

 

 

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல்

அதிகாரம் 6 : புங் ஒரு புதிர்

 தன் வேலை செய்யும் பகுதிக்கு முதல் பகுதியான BODY SHOP இல்


சில தமிழ் இளைஞர்கள் வேலை செய்து வந்தார்கள். இந்த ‘பொடி ஷொப்பில்’ தயாரிக்கப்படும் காரின் முதுகெலும்பான பனல்கள், கதவுகள், உதிரிப்பாகங்கள் போன்ற இரும்பிலான பாகங்கள் வெல்டிங் மூலம் இணைக்கப்படுகின்றன. பின்னர் அந்த உடல்கள் கொன்வேயர் (conveyor) மூலம் PAINT SHOP இற்கு இழுத்து வரப்படுகின்றன.

 ’பெயின்ற் ஷொப்பில்’ வேலை முடித்து நந்தன் வீடு திரும்பும்போது அந்தத் தமிழ் இளைஞர்கள் வெளியிலே இருக்கும் வாங்குகளில் இருந்து கதைப்பதை அவதானித்திருக்கின்றான். அன்று அவர்கள் பெரிதாகச் சத்தம் போட்டு வாக்குவாதத்தில் இருந்தார்கள். அதற்குக் காரணம் குலம்.

 குலம் சமீபத்தில் அவர்கள் வேலை செய்யும் பகுதிக்கு புதிதாக வேலைக்கு வந்திருந்தான். அவனுக்கு ஒரு பிரச்சினை இருந்தது. அவன் வேலை செய்யும் இடங்களில் யாராவது சிங்களவரைக் கண்டுவிட்டால் – அவர் யாரென்றும் பாராமல் அடித்துவிடுவான். பிறகு வீட்டிற்கு வந்துவிடுவான். இத்தனைக்கும் அவன் மனநிலை பாதிப்படைந்தவன் அல்ல. மனநிலை பாதிப்படைந்த சிங்களவர்களால் அவன் குடும்பத்திற்கு நேர்ந்த அவலம். அவனது இந்த அடிக்கும் செயலால் பல இடங்களில் வேலையை இழந்திருக்கின்றான். இதனால் அவன் ஒருபோதும் வேலையில் நிரந்தரமாக இருந்தது கிடையாது.. குலத்திற்கு என்ன நடக்கும் என்பது அங்குள்ளவர்களின் கவலையாக இருந்தது.

 குலத்தைப் பற்றி சிந்தித்தபடி வீடு போய்ச் சேர்ந்தான் நந்தன்.

குலத்துடன் புங்கும் சேர்ந்து அவன் மனதைக் கும்மியடித்தார்கள்.

 புங்கின் அழகு, துடுக்குத்தனம், பேச்சு வன்மை, எல்லோரையும் கவர்ந்திழுக்கும் வசீகரத்தன்மை, அவளை ஒரு ஹீரோயின் ஸ்தானத்தில் அங்கு வைத்திருக்கின்றது. அத்துடன் வேலையைத் துரிதமாகச் செய்யும் வேடிக்கையான பெண் அவள்.

மஹா சிவராத்திரி & சனி பிரதோஷம் சனிக்கிழமை, 18 /02/2023 & ஞாயிற்றுக்கிழமை, 19 /02/2023

 




எப்பொழுதும் மகிழ்ச்சியில் வசிப்பவனே, சிவனே, சங்கரனே, சம்புவே, நம் வாழ்வின் இறைவன் யார், விபு யார், உலகத்தின் இறைவன் யார், விஷ்ணுவின் இறைவன் யார் (ஜகந்நாதர்), எப்பொழுதும் மகிழ்ச்சியில் இருப்பவனே, உன்னைப் பிரார்த்தியுங்கள். , ஒளி அல்லது பிரகாசத்தை அனைத்திற்கும் தருபவர், உயிர்களுக்கு இறைவன் யார், பேய்களின் இறைவன் யார், அனைவருக்கும் இறைவன் யார். கழுத்தில் கபால மாலையை ஏந்தியவனே, உடம்பில் பாம்பு வலையை ஏந்தியவனே, மகத்தான நாசக்காரன் காலனை அழிப்பவனே, விநாயகரின் அதிபதியானவன், மெத்தை உடையவனே, சிவனே, சங்கரா, சம்பு, உன்னைப் பிரார்த்திக்கிறேன். -கங்கையின் அலைகள் அவன் தலையில் விழுவதால் முடி பரவி, எல்லோருக்கும் இறைவன் யார்.  சிவா, சங்கரா, சம்பு, [உலகில்] மகிழ்ச்சியை சிதறடிப்பவனே, பிரபஞ்சத்தை அலங்கரிப்பவனே, மகத்தான பிரபஞ்சமே அவனே, சாம்பலின் அலங்காரத்தை உடையவனே, ஆரம்பம் இல்லாதவனே, இல்லாதவனே, உன்னைப் பிரார்த்திக்கிறேன். அளந்து, பெரிய பற்றுகளை நீக்குபவர் யார், அனைவருக்கும் இறைவன் யார்.  வத (ஆலய) மரத்தின் கீழே வசிப்பவனே, அபரிமிதமான சிரிப்பை உடையவனே, மிகப் பெரிய பாவங்களை அழிப்பவனே, எப்பொழுதும் பிரகாசமாக இருப்பவனே, இமயமலையின் அதிபதியான, பலவிதமான கணங்களும், தேகங்களும் கொண்டவரே, சிவனே, சங்கரா, சம்பு, உன்னைப் பிரார்த்திக்கிறேன். கடவுள்கள், யார் பெரிய இறைவன், யார் அனைவருக்கும் இறைவன்.  சிவா, சங்கரா, சம்பு, இமயமலையின் மகளுடன் தனது உடலில் பாதியைப் பகிர்ந்து கொள்ளும், மலையில் (கைலாசம்), மனச்சோர்வடைந்தவர்களுக்கு எப்போதும் தங்குமிடமாக இருப்பவர், ஆத்மன் யார், அவர்களால் போற்றப்படுபவர். (அல்லது) பிரம்மாவும் மற்றவர்களும் வணங்கத் தகுதியானவர், மேலும் அனைவருக்கும் இறைவன் யா
ர்.

ஈழத்தமிழர் அரசியலில் சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ! அவதானி


ஈழத்தமிழர் அரசியல் எப்போதுமே இடியப்பச் சிக்கலாகவே காட்சியளிக்கிறது.  அத்துடன் ஊர்ப்பாஷையில் சொன்னால் சில்லெடுப்பே நிரந்தர அடையாளமாகியிருக்கிறது.

தந்தை செல்வநாயகமும், தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலமும் முதலில் ஒன்றாகவிருந்து வளர்த்த கட்சி தமிழ்க்காங்கிரஸ். அதிலிருந்து தந்தையார் பிரிந்து தமிழரசுக்கட்சியை உருவாக்கி கட்டி வளர்த்தார்.

இன்று அதே தமிழரசுக்கட்சி, எத்தனையோ வருடங்களின் பின்னர் சந்தி சிரிக்கும் கட்சியாகியிருக்கிறது.

முன்னைய தலைவர்கள் மேடைகளில் ஆளையாள் விமர்சித்தாலும்


அதில் ஒரு நாகரீகம் இருந்தது. ஜனநாயக அரசியல் தமிழர் தரப்பில் 1970 வரையில்தான் நீடித்தது.  அதன்பின்னர் படிப்படியாக வன்முறைகள் தலைதூக்கின.

ஈழத்தமிழர் அரசியலில்  மிதவாதமும் தீவிரவாதமும்  உருவானதும் இக்காலப்பகுதியில்தான். யாழ். மேயர் அல்ஃபிரட் துரையப்பாவின் படுகொலையுடன் தமிழ்த்தலைவர்கள் பலர் மீதான படுகொலைகள் தொடர்ந்தன.

வி. தருமலிங்கம், ஆலாலசுந்தரம், அமிர்தலிங்கம், தங்கத்துரை, வேல்முருகு, யோகேஸ்வரன், சரோஜினி யோகேஸ்வரன், ஜோசப் பரராஜசிங்கம், குமார் பொன்னம்பலம், ஶ்ரீசபாரத்தினம், பத்மநாபா, உமா மகேஸ்வரன், மாத்தையா மகேந்திரராஜா… என இந்தப் பட்டியல் நீளும். தவிர, சகோதரப் படுகொலைகளும் தொடர்ந்தன.

இக்கொலைகளைச்  செய்தவர்கள் சிங்களவர்களோ அல்லது ஆயுதம் ஏந்திய சிங்களப்படையினரோ  அல்ல என்பது தெளிவு. 

இந்திய தேச பிதா மகாத்மா காந்தி ,  நாதுராம் கோட்சே என்ற இந்தியப்பிரஜையால் சுட்டுக்கொல்லப்பட்டு,  கடந்த 30 ஆம் திகதியுடன் 75 வருடங்களாகின்றன.

காந்தி கொல்லப்பட்டபோது இந்தியாவில் வைஸ்ராயாக இருந்த மவுண்ட் பேர்ட்டன்  இவ்வாறு சொன்னார்:

 “ காந்தி தொடர்ந்தும் வெள்ளையனே வெளியேறு என்று, பிரிட்டிஷாருக்கு எதிராகத்தான் குரல் கொடுத்து வந்தார். ஆனால், அவருடைய உயிரை  பிரிட்டிஷ் வெள்ளைக்காரர் பறிக்கவில்லை.  எந்தத் தேசத்தின் சுதந்திரத்திற்காக காந்தி போராடினாரோ, அதே இந்தியாவின் குடிமகன் ஒருவன்தான் அவரது உயிரை எடுத்தான்.   

2001 ஆம் ஆண்டு வேலுப்பிள்ளை பிரபாகரன் உருவாக்கிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது 22 வயது பூர்த்தியை அடையுமுன்பே சிதறி சின்னாபின்னமாகியிருக்கிறது.

இக்கூட்டமைப்பில் இணைந்திருந்தவர்கள் மிதவாதிகளும் ஆயுதம் ஏந்திய தீவிரவாத இயக்கத்தினரும்தான் என்பது வெளிப்படை.  இந்திய சுதந்திர போராட்ட காலத்திலும் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் கருத்து ரீதியில்தான் மோதிக்கொண்டனர்.  

ஆனால், எமது ஈழத்தமிழர் அரசியல் பொது எதிரியை இனம்காணாமல்,  ஆளையாள் விமர்சித்துக்கொண்டு முச்சந்திக்கு வந்திருக்கின்றனர். தற்போது அந்த முச்சந்தி சிரிக்கிறது.

தனித்தமிழ் ஈழம்கேட்டு, அடக்கு முறை அரசுகளுக்கு எதிராக சாத்வீக ரீதியிலும் ஆயுதம் ஏந்தியும் போராடிக்கொண்டிருந்தவர்கள் சாதாரண உள்ளுராட்சி சபைக்காக கன்னை பிரிந்து, கிளித்தட்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இலங்கைச் செய்திகள்

 11 தூதுவர்களும் 6 உயர் ஸ்தானிகர்களும் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்கள் கையளிப்பு

கொழும்பு பல்கலைக்கழகம் உலக தரவரிசையில் முதலிடம் பெற்று சாதனை

75ஆவது தேசிய சுதந்திர தின விழாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து

பெப்ரவரி 22, 23, 24: உள்ளூராட்சி சபைத் தேர்தல் தபால் வாக்களிப்பு

வலி வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 109 ஏக்கர் காணி விடுவிப்பு


11 தூதுவர்களும் 6 உயர் ஸ்தானிகர்களும் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்கள் கையளிப்பு

- கண்டி ஜனாதிபதி மாளிகையில் நிகழ்வு

இலங்கைக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்களும் 6 உயர் ஸ்தானிகர்களும் நேற்று (02) பிற்பகல் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நாற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.

உலகச் செய்திகள்

அமெரிக்க வானில் சீனாவின் உளவு ‘பலூன்’ கண்டுபிடிப்பு

இந்திய கொவிட் மருந்துகளை தேடி வாங்கும் சீனர்கள் நல்ல பலன் தருவதாக பாராட்டு

உக்ரைன் மீது விரைவில் பாரிய தாக்குதலுக்கு ரஷ்யா நடவடிக்கை

காசா பகுதியில் இஸ்ரேல் சரிமாரி வான் தாக்குதல்

உலக பொருளாதார வளர்ச்சி கணிப்பை உயர்த்தியது சர்வதேச நாணய நிதியம்

இந்தியா, பனாமா இடையே ஒப்பந்தம்


அமெரிக்க வானில் சீனாவின் உளவு ‘பலூன்’ கண்டுபிடிப்பு

நாட்களில் அமெரிக்காவின் முக்கிய தளங்களுக்கு மேலால் பறந்த சீனாவினது என்று சந்தேகிக்கப்படும் உளவு பார்க்கும் பலூன் அவதானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் பொங்கல் 07/02/2023

 


இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 27 “தமிழில் மொழிபெயர்ப்புச் செயற்பாடுகள்”


நாள்:
         ஞாயிற்றுக்கிழமை 12-02-2023       

நேரம்:     

 இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 8.30        

இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30 

 

வழி:  ZOOM

 

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09              

சிறப்புப் பேச்சாளர்கள்:

 

‘சிங்களப் புனைகதை மொழிபெயர்ப்புச் சிக்கல்களும் தீர்வு முன்மொழிவுகளும்’  - லறீனா அப்துல் ஹக் 


‘ஈழத்து கவிதை மொழிபெயர்ப்புகள் -  சி.ரமேஷ்

 

‘மொழிபெயர்ப்பு வளர்ச்சியில்  பெண்கள்' - இரா பிரேமா


மேலதிக விபரங்களுக்கு:  - அகில்  001416-822-6316