காற்றில் மிதக்கும் இறகு - - கிருத்திகா தாஸ்


காற்றில் மிதக்கும் இறகு - தேடல் 8 - கிருத்திகா தாஸ்

தன் நிறமொத்த
பறவையொன்றைத்
தேடித் திரிந்தது இறகு...
கனத்துப் போன
பாதைகளோடும்
கறுத்துப் போன
மேகங்களோடும்...


குருதிக் காற்றில்
மிதந்து சென்ற இறகு
பாலத்தைக் கடந்த
சாலையொன்றில்
பறந்து திரிந்தது...

"குளோபல் சக்தி சூப்பர் ஸ்டார்" 20,21-12-2014
வார்த்தைச் சித்தர் -அ.முத்துலிங்கம்

.

ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நான் ஒரு சிறுகதை எழுதினேன். அது கல்கிப் பத்திரிகையில் வெளியாகி பரிசும் பெற்றது. கொழும்பிலே எழுத்தாளர்கள் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்திற்கு நண்பர் சமீனின் வற்புறுத்தலில் புறப்பட்டேன். ‘நீதான் எழுத்தாளராகிவிட்டாயே, வா’ என்றார். நானும் போனேன். கூட்டத்தில் கைலாசபதி, சிவத்தம்பி என்று பலர் பேசினார்கள். கடைசியாக பேசவந்த எஸ்.பொ என்று அழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரை என்னுடைய சிறுகதையை எடுத்து வசனம் வசனமாக அலசி, பின்னர் கிழித்தார். அந்தக் கதை ‘விளக்கு அணைந்தது’ என்று முடியும். அதைப் பிடித்துக்கொண்டார். கதையில் இனிப் பிய்த்து எறிவதற்கு ஒன்றுமே இல்லை என்ற நிலையில் பேச்சை முடித்துவிட்டு அமர்ந்தார். நான் வெலவெலத்துப் போனேன். நான் செய்த குற்றம் எல்லாம் ஒரு சிறுகதை எழுதியதுதான். அந்தச் சம்பவத்திற்கு பின்னர் நான் எழுத்தாளர் கூட்டத்திற்கு போகவில்லை. அதுவே முதலும் கடைசியும் என்று நினைக்கிறேன்.

25 வருடங்கள் கழிந்தன. நான் அப்போது பாகிஸ்தானில் வேலை பார்த்தேன். எஸ்.பொ புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா போய்விட்டார். அங்கேயிருந்து தொலைபேசியில் என்னை அழைத்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அவருக்கு கடிதம் எழுதியிருந்தேன் ஆனால் பேசியது கிடையாது. என்னுடைய சிறுகதை சம்பவத்தை சொன்னேன். அவர் ’அப்படியா?’ என்றார். 25 வருடமாக நான் மனதிலே காவிய ஒரு சம்பவத்தை அவர் முற்றிலும் மறந்துவிட்டார். அதுதான் எஸ்.பொ.

நத்தார் ஒளி விழா 20 12 2014

.

திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
கிழக்கிலங்கையின்  உழைக்கும்  வர்க்கத்தின் ஆத்மக்குரலாக  ஒலித்த  மூத்த  கவிஞர்  மருதூர்க்கனி
   
                            
1960  களில்  ஈழத்தில்  அலையடித்த  கவித்துவ  வெள்ளத்தின் கிழக்கிலங்கை  ஊற்றுக்களில்  மருதூர்க்கனியும்  ஒருவர். மருதூர்க்கனியின்  கவித்துவம்  கற்பனைகளின்  இரசனைக்கூடாரமாக அமையவில்லை.   அது  சமத்துவமான  ஒரு  சமூகத்தேடலுக்கான ஒரு   ஆயுதமாக  அமைந்தது  என்று  சொல்கிறார்  பேராசிரியர் கா. சிவத்தம்பி.
முற்போக்கு  இலக்கிய  சித்தாந்தத்தின்  இலட்சிய  வாதத்தினால் ஈர்க்கப்பட்ட   மருதூர்க்கனி   தனது  பிரதேசத்தில்  தனது மருதமுனைக்கிராமத்தில்  தான்  கண்ட  ஏழை   மக்களை நெசவாளிகளை - மீனவர்களை -  பாய்பின்னிப்பிழைத்தாலும் சுயகௌரவத்துடன்  வாழ்கின்ற   பெண்களை  தனது  கதைகள்   ஊடாக இனம்   காட்டுகிறார்.  அவர்கள்  பக்கம்  நின்று  குரல்  கொடுக்கிறார். என்று    சொல்கிறார்   பேராசிரியை  திருமதி  சித்திரலேகா  மௌனகுரு.
இளம்  பருவத்திலிருந்தே  நாடகப்பிரியர்  மருதூர்க்கனி.  மனித இயக்கத்தை  அவரது  கண்கள்  நாடகமாகக்  கண்டன.   மனிதர்களின் குணாதிசயங்கள் - ஆளுமை -  துலங்கித்தெரியும்  குணப்பாங்கு - என்பனவற்றை  இதனால்  வெகு  நுணுக்கமாக  அவர் கவனிக்கலானார்.   என்று     எழுத்தாளர்   செ. யோகநாதன் தெரிவித்துள்ளார்.
மருதூர்க்கனி - காணும்தோறும்  பேசும்தோறும்  உள்நெக்க  நின்று உருகும்    மனிதனாக  இலக்கிய  உலகில்  தன்னை   இனங்காட்டி வந்தவர்.    இவரை   அரசியலிருந்து  பிரித்து  கவிஞனாக  மட்டும்  காண    முடியாது.   இவர்  ஒரு  தேசிய  அரசியற்  கலாசாரத்தின் மூலவிசை   என்கிறார்  வீரகேசரி -  தினக்குரல்  நாளேடுகளின் முன்னாள்    பிரதம    ஆசிரியர்  ஆ.சிவநேசச்செல்வன்.

ஸ்ரீ காயத்ரி சிட்னி ஹோமம் 20/12/2014
சங்க இலக்கியக் காட்சிகள் 33- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்ää பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.
கவலைப்படாதே தோழி! காதலன் சென்றது நல்ல வழி!

முல்லை நிலத்து மக்களின் தொழில் ஆடுமாடுகளை மேய்ப்பது. அதன் மூலம் கிடைக்கும் பால். தயிர்ää நெய் என்பவற்றை ஏனையோர்க்கு விற்று அல்லது பண்டமாற்றுச் செய்து தமக்குரிய பொருட்களை வாங்கி வாழ்க்கை நடத்துவதே அவர்களது வாழ்வியலாக இருந்தது. கோடைகாலத்தில் தம் மந்தைகளை மேய்ப்பதற்காகப் புல்தரைகளை நாடியும்ää நீர்நிலைகளைத் தேடியும் செல்லவேண்டிய தேவை ஆடவர்களுக்கு இருந்தது. அதனால் நாட்கணக்கில் வாரக்கணக்கில் மட்டுமன்றிää மாதக்கணக்கிலும் அவர்கள் தம் சொந்த இடத்தைவிட்டுத் தொலை தூரம் சென்று தங்கவேண்டி ஏற்படும். அப்போதெல்லாம் ஆடவரைப்பிரிந்த அரிவையர் தம் காதலர் திரும்பிவரும்வரை கவலையொடு காத்திருப்பார்கள்.

மெல்பனில் எஸ்.பொ- காவலூர் ராஜதுரை நினைவரங்கு

.
மெல்பனில் எஸ்.பொ-  காவலூர்   ராஜதுரை  
      நினைவரங்கு - மதிப்பீட்டு விமர்சன  அரங்கு
அவுஸ்திரேலியாவில்  அண்மையில்  மறைந்த  ஈழத்தின்  மூத்த இலக்கியப்படைப்பாளிகள்  எஸ்.பொன்னுத்துரை   (எஸ்.பொ)  மற்றும் காவலூர்   ராஜதுரை   ஆகியோரின்   நினைவாக  அவர்களின்  படைப்புலகம் குறித்த  மதிப்பீட்டு  அரங்கும்  எழுத்தாளர் முருகபூபதியின்   20  ஆவது   நூல்  சொல்லமறந்த  கதைகள்  தொகுதியின் விமர்சன    அரங்கும்    மெல்பனில்   எதிர்வரும்   20   ஆம் திகதி (20-12-2014) சனிக்கிழமை   மாலை   5   மணிக்கு,
   Darebin Intercultural Centre - Preston (59 A, Roseberry Avenue, Preston -3072)  இல்  நடைபெறும்.
கலை, இலக்கிய  ஆர்வலர்   சட்டத்தரணி   செ.ரவீந்திரன்  தலைமையில் நடைபெறவுள்ள    இந்நிகழ்வில்,  மறைந்த  மூத்த  எழுத்தாளர்  எஸ்.பொ. வின்  ஆக்க  இலக்கியப்படைப்புகள்  (சிறுகதை,  நாவல்)  தொடர்பான மதிப்பீட்டுரையும்  அவர்  அவுஸ்திரேலியாவில்  வெளியான  திங்கள் இதழ்களான  மரபு  - அக்கினிக்குஞ்சு   ஆகியவற்றில்    வழங்கிய  பங்களிப்பு தொடர்பான  உரைகளும்  இடம்பெறும்.
மூத்த  எழுத்தாளர்  காவலூர்  ராஜதுரையின்  படைப்புலகம்,  இலங்கை வானொலி   மற்றும்  திரைப்படம்,  குறும்படத்துறையில்  அவரது  பங்களிப்பு தொடர்பாகவும்    உரைகள்   நிகழ்த்தப்படும்.
நினைவரங்கைத்தொடர்ந்து    எழுத்தாளர்    முருகபூபதியின்     சொல்லமறந்த கதைகள்   நூல்  விமர்சன உரைகள்  இடம்பெறும்.
மேலதிக  விபரங்களுக்கு: முருகபூபதி

letchumananm@gmail.com     - தொலைபேசி:  04 166 25 766

கொப்புளக்காரன்! கிறிஸ்மஸ் சிறுகதை - நவீனன் ராசதுரை

.
என் அன்புத் தந்தை காவலுர் ராசதுரைக்கு சமர்ப்பணம்அந்த திருச்சபை நகர சபைக்குச் சொந்தமான நூல்நிலைய மண்டபம் ஒன்றில் ஞாயிறு தோறும் கூடியது.
சபையில் ஏறத்தாழ முன்னூறு பேர். தவிர ஒரு டசின் போதகர்.
நகர சபை மண்டபமானதால் வேறு நிகழ்வுகளும் இந்த மண்டபத்தில் நடைபெற்றன. இதனால்   ஞாயிறு தோறும் திருச்சபைகூட முன்னர் கதிரைகளை அடுக்கி ஒழுங்கு செய்யவேண்டும். இதற்காக மாறி மாறி குறிப்பிட்ட சிலரை ஒவ்வொரு ஞாயிறும் திருச்சபை நியமித்திருந்தது.
சபை கூடி பிரார்த்தனை ஆரம்பிக்கும் நேரம் காலை பத்து மணி. ஆனால் கதிரை அடுக்கிறவர்கள் காலை எட்டு மணிக்கே வந்துவிடவேண்டும் என்று நியமிக்கப்பட்டிருந்தது.

விழுதல் என்பது எழுகையே பகுதி 30 இளைய அப்துல்லாஹ் (அனெஸ்) இலண்டன்-

.
இளைய அப்துல்லாஹ் (அனெஸ்)  இலண்டன் அவர்களின் அறிமுகம்
இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற எழுத்தாளர்

இளைய அப்துல்லாஹ் (1968)

1984 ம் ஆண்டில் இருந்து சிறுகதைகள்இ இலக்கியக்கட்டுரைகள் கவிதைகள் மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவர் இளைய அப்துல்லாஹ்.
இலங்கையில் இருந்து வெளிவரும் முன்னணி தமிழ் பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகள் சிறுகதைகள் கவிதைகள் எழுதி பிரபல எழுத்தாளரானார்.
1995 களில் இருந்து ‘புலம்பெயர்’ தமிழ் சஞ்சிகைகளுடன் தனது தொடர்பை ஏற்படுத்தி அதனை ஸ்திரப்படுத்திக் கொண்டார். சுமார் 28 புலம் பெயர் சஞ்சிகைகள் பத்திரிகைகளில் இவரின் கவிதைஇ சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. அத்தோடு புலம் பெயர் சஞ்சிகைகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.
1996இ 97 களில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையில் ‘விடியலை நோக்கி’ எனும் சமாதானத் தொனிப் பொருளில் சஞ்சிகை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
1998 இல் ஜேர்மனில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் கலந்து கொண்டார்.
2000ம் ஆண்டு ஜுலை 19 ஆம் மாதம் லண்டன் தீபம் தொலைக்காட்சியில் இணைந்து செய்தி வாசிப்பாளர்இ அறிவிப்பாளர்இ நிகழ்ச்சி விவரணத் தயாரிப்பாளராகஇ ஒருங்கிணைப்பாளராக பணி புரிந்து ஐரோப்பியஇ பிரித்தானியஇ மத்திய கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பேரபிமானத்தை பெற்றார். 
சளைக்காது தொடர்ந்து விவரணக் கட்டுரைகளை மிகச் சுவைபட எழுதி வரும் இளைய அப்துல்லாஹ்வின் எழுத்துக்கள் பிரபல்யமானவை.
அவரது அனுபவங்கள் கூறும் உண்மைச் சம்பவங்களை பதிவதில் திறமையானவர்.
இளைய அப்துல்லாஹ் இப்பொழுதும் லண்டன் ‘தீபம்’ தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகவும்இ விவரணத் தயாரிப்பாளராகவும் 13 வருடங்கள் பணிபுரிந்தார்.

சிட்னி முருகன் ஆலய விஷேட நிகழ்வுகள்

.
 கார்த்திகை விரதம் , சனி மாற்றம் , விநாயகர் சஷ்டிநோபல்பரிசு 2014 குழந்தைகளின் உரிமைக்காகவா? - நோர்வே நக்கீரா

.

பேரழிவுக்கு வித்தாக இருக்கும் டைனமெட்டைக் கண்டுபிடித்த சுவீடனைச் சேர்ந்த அல்பிரட் நோபலின் பிறந்த தினத்தன்று, 10 மார்கழியில் அமைதிக்கான நோபல்பரிசு நோர்வேயில் வளங்கப்பட்டு வருகிறது. நோர்வே அன்று முதல் இன்று வரை அமைதியை விரும்பும் அமைதிக்காகப் பணிபுரியும் நாடு எனக்கருதியதால் அமைதிப்பரிசை நோர்வே கொடுக்கவேண்டும் என்பது அல்பிரட் நோபலில் விருப்பாக இருந்தது. இந்த நோபல் பரிசானது 1901ல் இருந்து தொடர்ச்சியாக நோர்வேயில் இருந்தே வளங்கப்பட்டு வருகிறது.

2014க்கான அமைதிப்பரிசு இந்தியாவைச் சேர்ந்த கைலா~; சத்தியாதிக்கும் பாக்கிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய்கும் வளங்கப்படுகிறது. இருவரும் நேற்று ஒஸ்லோ விமானநிலையத்தை வந்தடைந்தார்கள். இம்முறை நோபல்பரிசானது குழந்தைகளின் உரிமைக்காகப் போராடியவர்களுக்கு மொத்தம் 278 பேரில் இருவருக்கு வளங்கப்படுகிறது. இந்த நோபல்பரிசு வழங்கும் நிகழ்வில் 6000 குழற்தைகள் பங்கு பற்ற உள்ளார்கள். இப்பரிசுக்கான 16கரட் தங்கப்பதக்கமும் பெரும்தொகை பணமும் காத்துக்கொண்டு இருக்கிறது.

இலங்கைச் செய்திகள்


அச்சுறுத்தலுக்குள்ளான யாழ். ஊடகவிலாளர்களிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

இதுவரை 45 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவு: பெப்ரல்

இலங்கை வந்தது சுகன்யா

அம்பாறையில் வெள்ளம்: 6105 பேர் பாதிப்பு

மைத்திரிக்கு 59% மஹிந்தவுக்கு 41%: பத்திரிகையின் ஆசிரியர் புலனாய்வு பிரிவினரால் விசாரணை

அச்சுறுத்தலுக்குள்ளான யாழ். ஊடகவிலாளர்களிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை


09/12/2014 வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவரப்பட்ட மக்களின் வீடுகள் இடித்தழிகக்ப்படுவது தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற  ஊடகவியலாளர்கள் ஐந்து பேருக்கு இராணுவத்தினரால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட வழக்கு இன்று முற்பகல் கொழும்பில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுதொடர்பாக விசாரணைக்கு யாழ்.ஊடகவியலாளர்கள் சமுகமளித்திருந்தபோது முறைப்பாட்டில் குற்றம்சாட்டப்பட்டிருந்த இராணுவத்தினர் சார்பாக எவரும் சமுகமளித்திருக்கவில்லை.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

முண்டாசுக் கவிஞன் பார-'தீ'

.
பாரதியார் பிறந்த நாள் 11.12 1882 தமிழ் முரசு நினைவு கூறகிறது 

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்."
-'மகாகவி' சுப்பிரமணிய பாரதி

பாரதி...
இவன் முரட்டுக்காளையாய் வலம் வந்த முண்டாசுக் கவிஞன்... முறுக்கிய மீசைக்குள் நறுக்கென சுதந்திரத் தீ வளர்த்த சுதேசிக் கவிஞன்... எமக்குத் தொழில் கவிதை என அனல் தெறிக்கும் கவிதைகளை வார்த்த கவிஞன்.

எட்டயபுரம் கொடுத்த கொடை அவன்... எட்டாத உயரத்திற்கு தமிழால் உயர்ந்தவன். கவிதையை காசாக்கும் வியாபாரியாக இருக்க நினைக்காமல் வேள்வித் தீயை பற்ற வைக்கும் கருவியாக நினைத்தவன். சிறுவயதில் தாயை இழந்தாலும் தாய்த் தமிழை இழக்காமல் கவி பாடி 'பாரதி' என்ற பட்டம் பெற்றவன்.

பெண்ணுரிமை போற்றிய பாரதிக்கு செல்லம்மா சிறுமியாக இருக்கும் போதே மனைவியானாள். பாரதியோ கட்டவிழ்ந்து ஓடும் காட்டாறு... செல்லம்மாவோ மெல்லிய தென்றல்... அவனின் போக்கோடு செல்லம்மாவால் இணைந்து செல்ல முடியவில்லை என்றாலும் இயைந்துதான் வாழ்ந்தாள்.
.

சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 12). அவரை பற்றிய அரிய முத்துக்கள் பத்து..
 கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவரது இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். ஐந்து வயதில் தாயை இழந்தார். பெங் களூரில் உள்ள ஆச்சாரிய பாடசாலை, விவேகானந்த பால சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படிப்பிலும் விளையாட்டிலும் கெட்டிக் காரராக விளங்கியவர்.
 சிறு வயதில் பயமே இல்லாதவ ராக, எதைப் பற்றியும் கவலைப்படாதவராக இருந்தார். பெங்களூரில் பேருந்து நடத்துநராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் மேடை நாடகங்களில் பங்கேற்ற இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் ஆசை பிறந்தது.
 நடிக்கும் ஆசையுடன் சென்னை வந்தார். நண்பரின் உதவியுடன் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்தார். 1975ல் கே. பால சந்தரின் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். இது அவரை சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது.

உலகச் செய்திகள்


சவூதியில் தீவிரவாதத்துடன் தொடர்புபட்டிருந்த குற்றச்சாட்டில் 26 வெளிநாட்டவர்கள் உட்பட 135 பேர் கைது

மலாலாவின் இரத்தக்கறை படிந்த ஆடை முதல் தடவையாக காட்சிக்கு வைப்பு

சவூதியில் தீவிரவாதத்துடன் தொடர்புபட்டிருந்த குற்றச்சாட்டில் 26 வெளிநாட்டவர்கள் உட்பட 135 பேர் கைது
09/12/2014 சவூதி அரேபியாவில் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருந்த குற்றச்சாட்டில் 26 வெளிநாட்டவர்கள் உட்பட 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 16 பேர் சிரிய நாட்டவர்கள் என சவூதி அரேபிய உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஜெனரல் மன்சூர் அல் - துர்கி தெரிவித்தார்.
ஏனைய கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் யேமன், எகிப்து, லெபனான், ஆப்கான்,  எதியோப்பியா, பஹ்ரெயின், ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் நாடற்ற நபரொருவரும் உள்ளடங்குகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 40 பேர் மோதல்கள் நடைபெறும் இடங்களுக்குச் சென்று தீவிரவாதிகளுடன் இணைந்து ஆயுதங்களை கையாளுவதற்கு பயிற்சி பெற்ற பின் தாய் நாட்டின் ஸ்திரத் தன்மையை குலைக்கும் முயற்சியில் திரும்பியவர்கள் என மன்சூர் அல்துர்கி தெரிவித்தார்.

80 லட்சம் வாடிக்கையாளர்கள் பங்கேற்ற ஆன்லைன் திருவிழா

.
கூகுள் நிறுவனம் நடத்திய கிரேட் ஆன்லைன் ஷாப்பிங் திரு விழாவில் (ஜி.ஓ.எஸ்.எப்) 80 லட்சத்துக்கும் மேலானவர்கள் கலந்து கொண்டதாக கூகுள் தெரிவித்திருக்கிறது.
மூன்று நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை இரவு முடிவடைந்தது. இந்த இணையதளத்தை விளம்பரப்படுத்தும் காலத்தையும் எடுத்துக் கொண்டால் மொத்தம் 1.4 கோடி வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டார்கள் என்று கூகுள் தெரிவித்தது.
டிசம்பர் 10 முதல் 12-ம் தேதி வரை நடந்திருந்தாலும், இந்த ஆன் லைன் விழாவுக்கான 14 நாட்கள் இந்த இணையதளம் செயல்பட்டது. தற்போது இந்த இணையதளம் மூடப்பட்டுவிட்டது. கடந்த வருடம் நான்கு நாட்கள் இந்த விழாவில் 20 லட்சம் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டார்கள். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது வாடிக்கை யாளார்களின் வருகை ஏழு மடங்கு அதிகரித்திருக்கிறது.
220-க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டார்கள். குறிப்பாக ராஞ்சி, குண்டூர், ஹூப்ளி ஆகிய நகரங்களில் இருந்தும் கலந்துகொண்டதாக கூகுள் தெரிவித்தது. முதல் முறை வருபவர்கள் 299 ரூபாய் பொருள்கள் மீது கவனம் செலுத்தியதாகவும் கூகுள் கூறியது. இதில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களும் துணி வகைகளும் அதிகமாக விற்பனையானது.

http://tamil.thehindu.com/

பாரதியார் பிறந்தநாள்: டிசம்பர்-11, 1882

.

தமிழின் தலைமகன்களில் ஒருவரான பாரதியைக் கொண்டாடுவோம்
ஓடி விளையாடும் பாப்பாவாக நாம் இருக்கும்போது நம் அன்னையரிடமிருந்தும் அதற்குப் பிறகு ஆரம்பக் கல்வியில் பள்ளிக்கூடத்திலும் வாஞ்சையான தகப்பனைப் போல பாரதி நமக்கு அறிமுகமாகிறார். கூடவே, ‘அச்சம் தவிர், ஆண்மை தவறேல்’ என்று ஆத்திசூடி மூலமும், ‘ஒளிபடைத்த கண்ணினாய் வாவா…’ ‘அச்சமில்லை அச்சமில்லை’ போன்ற உத்வேகம் மிக்க முழக்கங்களாலும் பாரதி மேலும் நம்முள் ஆழமாக ஊன்றப்படுகிறார். அப்புறம், தேசப் பற்றுப் பாடல்கள், மொழிப் பற்றுப் பாடல்கள். அதற்குப் பிறகு பாரதி நம்முடன் திரைப்படங்கள் வழியாகவும் உறவுகொள்கிறார்.
பாரதியின் பல்வேறு பாடல்கள் திரைப்படங்களிலும், பாரதியின் பல்வேறு வரிகள் திரைப்படத் தலைப்பு களிலும் இடம்பிடித்திருக்கின்றன. நாவல்களுக்கோ கவிதைத் தொகுப்புகளுக்கோ தலைப்பு கிடைக்கவில்லை என்றாலும் பாரதிதான் உதவிக்கு வருகிறார். அதுமட்டுமா? ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்’ வரிகள் இல்லை என்றால், ஊழல் வழக்குகள் உள்ளிட்டவற்றில் கைதாகும் அரசியல்வாதிகள் என்ன செய்வார்கள் என்பதையே நினைத்துப்பார்க்க முடியவில்லை.
இப்படியாக நம் சமூகத்தின் கலை, பண்பாடு, அரசியல் என்று எல்லாவற்றுக்கும் விதைநெல் களஞ்சியமாக பாரதி இருப்பது, எந்த அளவுக்கு நம் சமூகத்தில் இன்றியமையாத ஒருவராக அவர் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.
ஆனால், பாரதி அவ்வளவு மட்டுமா? உண்மையான பாரதியை, அதாவது முழுமை பெற்ற (அல்லது முழு மையை முயன்ற) பாரதியை அறிந்துகொள்ள நாம் இன்னும் கொஞ்சம் பாரதிக்குள் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் பயணத்தின் பாதி வழியில், ‘பாரதிதான் என்ன?’ என்ற கேள்வி வரும்.
.

கோயில்களில் எனக்குப் பிடித்தது அங்கு இருக்கும் சிற்ப வேலைப்பாடுகள் தான். அதுதான் கலையின் உச்சம் என்றே சொல்லலாம். நம் முன்னோர்களின் மிகச் சிறந்த கலை ஆளுமை நம் பழைய கோயில்களில் மட்டுமே இன்னும் கிடைக்கின்றன. நம் வாழ்வின் அறங்களைக் கற்றுக்கொடுத்த இடமாக நம் கோயில்கள் இருந்திருக்கின்றன.
பிரான்ஸில் இருந்து வந்திருந்த திரைப்பட இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஒருவரை யும் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். கிழக்கு வாசல் கோபுரத்தைப் பார்த்தவுடனையே அவர்களின் பயணத் திட்டங்கள் மாறிப் போனது. இரண்டு மணிநேரம்தான் அங்கு இருக்கத் திட்டமிட்டிருந்தோம். புதுச்சேரியில் இருந்த பணிகளையெல்லாம் உடனே தள்ளிப் போட்டுவிட்டு கேமராவை எடுத்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்துவிட்டார்கள். பின்னர் மனமே இல்லாமல்தான் நடராஜர் கோயிலில் இருந்து திரும்பிப் போனார்கள்.
அவர்களுடன் நானிருந்த ஒருவார காலமும் நம் வாழ்க்கை நிலையும் முறைகளும் சீரழிந்தது பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கேள்விகளுக்கு என்னிடமிருந்து பதில்களே இல்லை. நந்தனார் பற்றிய கதையைச் சொன்னபோது, அதனை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இவ்வளவு மிகச் சிறந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் ஏன் இவ்வளவு மோசமாகவும் வாழ்ந்தார்கள் என்கிற கேள்வியை அவர்கள் எழுப்பினார்கள். எந்த சாதியைப் பற்றியோ, எந்த ஒரு மதத்தைப் பற்றியோ, எந்த ஒரு கடவுளைப் பற்றியோ குறிப்பிட்டு திருவள்ளுவர் எழுதாதபோது, எவ்வாறு இவை உள்ளே நுழைந்தன… என்கிற கேள்விகள் எனக்கு அதன்பின் எழுந்தன.

புதிய பெயர் மாற்றம் 24.11.2014

.

எங்கள் அன்புக்குரிய எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும், இணையதள ஆசிரியர்களுக்கும்
எங்கள் பணிவன்பான வணக்கம்.
நீங்கள் தொடர்ந்தும் அளப்பரிய ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கி வருகின்றமைக்காக உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.
இதுவரை காலமும் விழுதல் என்பது எழுகையே என்ற பெயரைக் கொண்ட குழுமம் சார்பாக நெடுந்தொடரை இணையத்தளங்களில் நெடுந்தொடரைப் பிரசுரித்து வருகின்றோம். இக்கதைப்பிரிவு தொடந்து தனது பணியை உங்களுக்காக தொடரும்.
இன்றாகிய 24.11.2014 இருந்து எமது பாரிய தேடுதலின் பயனாக ஒன்றுபட்ட உலக எழுத்தாளர்களின்; ஒற்றுமையை நினைத்து „தமிழ் எழுத்தாளர் இணைய அகம்“ என்ற பொதுவான பெயருடன் இனிவரும் காலத்தில் தனது தமிழ் இலக்கியப் பயணத்தை பன்முகப் பணியாக மேற்கொள்ளும்.
இது தொடர்பான முன்னோட்ட அறிவித்தலை எமது வெளியீட்டுப் பொறுப்பாளர் பண்ணாகம் திரு.இக.கிருஸ்ணமூர்த்தி அவர்கள் முன்பு (விழுதல் தொடர்கதை முகநூலில்) இன்று திமிழ் எழுத்தாளர் இணைய அகம் Tamil Writers Net Portal ஆக முகநூலாக மாறி உள்ள தளத்தில் பதிவு செய்திருந்தார். மேலும் இன்று இந்த இணைப்பு பணியில் நேரகாலம் பாராது தோழமையுடன் பணியாற்றிவரும் ஏலையா சஞ்சிகையின் பொறுப்பாசிரியரகவிருந்த திரு- ஏலையா முருகதாசன் அவர்களின் பாரிய முயற்சிகளே இன்றைய எமது வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளது.
நெடுந்தொடரைத் தொடர்ந்து கவிதைத் தொடரையும் ஆரம்பிப்பது எனத் திட்டமிடப்பட்டு அதற்கான நடைமுறையை ஆரம்பித்துள்ளோம்.
இன்று எழுத்தாளர்கள் வாசகர்கள் என நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாகியுள்ளோம். உங்களுடன் நாங்கள் கொண்டுள்ள ஐக்கியத்திற்கு எமக்கிடையிலிருக்கும் உண்மையான நேர்மையான நன்மதிப்பும் பெரும் நம்பிக்கையுமே மூலதனமாகும்.

தமிழ் சினிமா

காவியத்தலைவன்

காவியத்தலைவன் - Cineulagam
நாடகம் என்பது திரைப்படங்களின் முதுகெலும்பு என்பதை அறிய வேண்டும். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினிகனேஷன், பாலசந்தர் என இந்திய சினிமாவே போற்றும் கலைஞர்கள் அனைவரும் நாடகத்துறையில் இருந்து வந்தவர்கள் தான். நம் கலாச்சாரம், பண்பாடு ஆகிய அனைத்தின் வெளிப்பாடே நாடகம் தான் அதை இக்கால மக்களுக்கு உணர்த்தவே காவியத்தலைவனை உருவாக்கியுள்ளார் வசந்தபாலன்.


நாடகத்தின் கதை

படம் முழுவதும் நாடக அரங்கிலே நடக்கிறது. புகழ் வெறியும், பொறாமை குணமும் ஒரு சேர பிடித்தால் என்ன ஆகும்? அவர் எந்த துறையை சார்ந்தாலும் அது அழிந்து போகும் என்பதே காவியத்தலைவனின் கதை சுருக்கம்.


நாசர் வைத்திருக்கும் பெரிய நாடக கம்பெனியில் வந்து இணைகிறார்கள் பிருத்விராஜ், சித்தார்த். இது போல் வரும் அனைவரையும் தன்னுடன் இணைந்து கொண்டு நாடகம் நடத்தி வருகிறார். இவர்களை போலவே பஞ்சம் பிழைக்க வரும் வேதிகாவையும் தங்களுடன் சேர்த்து கொள்கிறார்கள். நன்றாக நாடகம் சென்று கொண்டிருக்கும் போது கூட்டத்தில் ஒருவனுக்கு கர்வம் ஏற இதை தொடர்ந்து நாடகம் அரங்கேறியதா? என்பதே மீதிக்கதை.

நடிகர், நடிகை மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள்

படத்தில் கதாநாயகர்கள் பிருத்விராஜும், சித்தார்த், நாசர் என்று யாரும் இல்லை, கடைசி வரை திரையில் படத்தை தாங்கி பிடிப்பது ஏ.ஆர்.ரகுமானின் இசை தான். திரைக்கு பின்னால் தாங்கி பிடிப்பது வசந்தபாலனின் இயக்கமும், நீரவ் ஷோவின் ஒளிப்பதிவும் தான்.

சித்தார்த், பிருத்விராஜ், நாசர் ஆகியோர் தங்களில் அனுபவ நடிப்பை வைத்து பாஸ் மார்க் வாங்கி விடுகின்றனர். அதேபோல் பரதேசி மூலம் நல்ல தேர்ச்சி பெற்றுள்ளார் வேதிகா. படத்தில் இரண்டாம் கதாநாயகியாக வரும் அனைகா தான் படத்திற்கு ஒட்டவில்லை.

வாழ்த்துக்கள்

கண்டிப்பாக ஏ.ஆர்.ரகுமானுக்கு தான், படத்தின் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. கிளைமேக்ஸ் நெஞ்சை உறையவைக்கிறது. நாடக கலைஞர்களாக நடித்த அனைவரும் வாழ்ந்து இருக்கிறார்கள். நீரவ் ஷோவின் ஒளிப்பதிவு நாடகத்தை நம் கண்முன் கொண்டு வருகிறது.

வருத்தங்கள்

முதல் பாதி சற்று நீளமாகவும், மெதுவாகவும் நகர்கிறது. அனைகா கதாபாத்திரம், மற்றப்படி ஏதும் இல்லை.

இதுபோல் ஒரு கதையை களமாக எடுக்க வேண்டும் என்று நினைத்ததற்காகவே வசந்தபாலனுக்கு மலர் கொத்துக்களை கொடுத்து வரவேற்கலாம். மெல்ல மெல்ல மறைந்து வரும் நாடக கலைஞர்களின் இன்பம், துன்பம், சிரிப்பு, அழுகை என அனைத்தையும் நம் கண்முன் கொண்டு வந்து நம்மை நிஜ நாடக பார்வையாளராகவே மாற்றியுள்ளார். வாழ்த்துக்கள்+ நன்றி வசந்தபாலன்.
மொத்தத்தில் கண்டிப்பாக காவியத்தில் இடம்பெறுகிறான் இந்த தலைவன்.
நன்றி cineulagam