மரண அறிவித்தல்

.

                                                                                              மரண அறிவித்தல்
-                                                                                  சீதாதேவி வைத்தியலிங்கம்

                                                     
                                                                                              மறைவு : 10.09.2013

சீதாதேவி வைத்தியலிங்கம் (10-09-2013) செவ்வாய்க் கிழமை அன்று சிட்னியில் காலமானார். இவர்  காலஞ் சென்ற இலங்கை நீதிபதி வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்
காலஞ் சென்ற மகேஸ்வரன் (மலேசியா), சர்வநாதன் (மெல்போர்ன்), காலஞ் சென்ற மகாதேவன் (சிட்னி),ஆகியோரின் அன்புச் சகோதரியும்
சரோஜா (மலேசியா), ரோகினி (மெல்போர்ன்),  குணலட்சுமி (சிட்னி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்
 
சத்தியசீலன் (சிக்காகோ),சற்குணசீலன் (ஒடாவா), சத்தியா – கச்சி (சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,பத்மினி; (சிக்காகோ), வசந்தி (ஒடாவா) கருணாகரன் – கரு (சிட்னி) ஆகியோரின் அன்பு மாமியும்
சுதர்ஸன் (லண்டன்), ஜனகன் (சிக்காகோ), சிவானி; (ஒடாவா), கோபிநாத் (சிங்கபூர்) ஹரநாத்-தம்பா (லண்டன்), தர்மினி (சிட்னி) ஆகியோரின் அன்புப் பாட்டியும்

நிரோஷா (சிங்கபூர்) டிமுது (லண்டன்), ஆகியோரின் அன்புப் முறைப் பாட்டியும் ,அமாயா, ஐஷா (சிங்கபூர்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின்  பூதவுடல்  13ம்  திகதி வெள்;ளிக் கிழமை, மாலை 6.00 மணி முதல்  8.00 மணிவரை  101 South Street, Granville இல்  உள்ள Liberty Funerals இல்  பார்வைக்காக வைக்கப்பட்டு
இறுதிக் கிரியைகள் 14ம் திகதி, சனிக்கிழமை 11 மணியிலிருந்து 2மணி வரையும்,  Macquarie Park Cemetery and Crematorium, Corner Delhi and Plassey Roads, NORTH RYDE  இல் நடைபெற்று,  பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார்,  உறவினர்கள்,  நண்பர்கள் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:

Babu:  0414 816 327

or Jegan 0412 199 828

சிட்னியில் ஒலித்த தமிழும் தமிழ் மாநாடும் - செ .பாஸ்கரன்

.


சிட்னியில் 6ம் 7ம் 8ம் திகதிகளில் சிட்னி தமிழர் மண்டபத்தில் நடந்த உலகத்தமிழ் இலக்கிய மாநாடு சிட்னி தமிழர்களை மட்டுமல்லாது உலகத்தமிழர்களை ஒன்றுகூட்டியிருந்தது. விஜிபி உலகத்தமிழ்ச்சங்கமும் தமிழ்இலக்கிய கலைமன்றம் ஒஸ்ரேலியாவும் சேர்ந்து இந்த மூன்றுநாள் நிகழ்ச்சியை நடத்தியிருந்தது.


கலைச்சுவை 2013 14.09.2013

.

திரும்பிப்பார்க்கின்றேன் -- 6 கடல்கடந்தும் பேசப்பட்ட கடவுச்சீட்டு இல்லாத கவிஞர் - முருகபூபதிஆனந்தவிகடன்  இதழை,  அதில்  வெளியாகும்    நகைச்சுவைத்துணுக்குகளுக்காகவே  ஆரம்பத்தில்   விரும்பிப்படித்தேன்.  
ஆரம்பத்தில்  ஆர்வமுடன்  ஜோக்குகளை  ரசித்தபோதிலும்  காலப்போக்கில்  தரமான  இலக்கியவிடயங்கள்    ஆனந்தவிகடனில்    வெளியானால்    அவற்றை    கத்திரித்து  சேகரித்தும்   வைத்திருப்பேன்.
1985  ஆம்  ஆண்டு   ஏழு  கவிஞர்கள்,  பிறப்பு,  வளர்ப்பு,    படிப்பு,   சிலிர்ப்பு,  பொறுப்பு,  மூப்பு,  இறப்பு  என்ற  தலைப்புகளில்   எழுதிய  கவிதைகளை  தொகுத்து  இலவச  இணைப்பைத்தந்திருந்தது   ஆனந்தவிகடன்.

முதலாவது   கவிதை  பிறப்பு:
இரண்டு  மெய்யெழுத்துக்களின்    உரசலில் உருவாகும்   ஓர்  உயிரெழுத்து
இதுவே  மனித   வாக்கியத்தின்   முதல்  வார்த்தை
கருவில்  அச்சாகித்தெருவில்  வருகின்ற  இந்தப்புத்தகத்தை
காலம்   படித்துவிட்டுக்  கடைசியில்  கிழித்துப்போடுகிறது.
இந்தப்பிறப்பிலக்கியத்தை   படிக்கவொண்ணா    ஆபாசம்   என்று  அறிவித்தது –

இலங்கைச் செய்திகள்


தம்புள்ளையில் பத்திரகாளி அம்மன் சிலை உடைக்கப்பட்டு சேதம்: 5 பவுண் திருமாங்கல்யமும் கொள்ளை

17 பேர் கொண்ட சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு இலங்கை வருகை

நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் தேர்த் திருவிழா: இலட்சோப இலட்சம் பக்தர்கள் பங்கேற்பு
-------------------------------------------------------------------------------------------------------

தம்புள்ளையில் பத்திரகாளி அம்மன் சிலை உடைக்கப்பட்டு சேதம்: 5 பவுண் திருமாங்கல்யமும் கொள்ளை

03/09/2013 தம்புள்ளை பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த பத்திரகாளியம்மன் சிலை நேற்று இரவு உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன் அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 5 பவுண் திருமாங்கல்யமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மூலஸ்தானத்தின் சிலையினை புரட்டி எடுத்த இனந்தெரியாத நபர்கள் அதனை ஆலயத்துக்கு அருகிலுள்ள கிணற்றடியில் சேதப்படுத்தி சென்றுள்ளனர்.
கிணற்றுக்கு அருகில் இருந்த கற்பாறையிலேயே அம்மன் சிலை உடைக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை நகரம் புனித பிரதேசமாக பிரகடப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பத்திரகாளியம்மன் கோவிலை அகற்றுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆலயத்துக்கு அருகில் அமைந்திருந்த வீடுகள் எற்கனவே இடிக்கப்பட்டிருந்தன. இந்த ஆலயத்துக்கு மாற்றிடம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே பத்திரகாளியம்மன் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2013
இப் போட்டிகள் September  மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் பிற்பகல் 2 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.
வர்ணம் தீட்டுதல் (பாலர் ஆரம்ப பிரிவுக்கும் பாலர் பிரிவுக்கும் மட்டும்), சமய அறிவுப் போட்டி, திருமுறை ஒப்புவித்தல் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (அறிவுப்போட்டிக்கான மாதிரி வினாக்களும் வழங்கப்படும்)
இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பரிசில்கள் முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவென மூன்று வகையாக வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு பிரிவிலும் ஓன்றுக்கு மேற்பட்ட திறமையானவர்களுக்கு பரிசில்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி வகுக்கப்பட்டடுள்ளது.

போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் போட்டிகளும்


பாலர் ஆரம்ப பிரிவு 
01.08.2008 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்    சமய அறிவுப் போட்டி
வர்ணம் தீட்டும் போட்டி

பாலர் பிரிவு 
01.08.2006 க்கும் 31.07.2008 க்கும் இடையில் பிறந்தவர்கள்
சமய அறிவுப் போட்டி
வர்ணம் தீட்டும் போட்டி

கீழ்ப்பிரிவு   
01.08.2004 க்கும் 31.07.2006 க்கும் இடையில் பிறந்தவர்கள்
சமய அறிவுப் போட்டி
திருமுறை ஒப்புவித்தல் போட்டி

மத்தியபிரிவு
01.08.2001 க்கும் 31.07.2004 க்கும் இடையில் பிறந்தவர்கள்
சமய அறிவுப் போட்டி
திருமுறை ஒப்புவித்தல் போட்டி

மேற்பிரிவு
 01.08.1998 க்கும் 31.07.2001 க்கும் இடையில் பிறந்தவர்கள்
சமய அறிவுப் போட்டி
திருமுறை ஒப்புவித்தல் போட்டி

அதிமேற்பிரிவு
 31.07.1998 இலும் அதன் முன்பும் பிறந்தவர்கள்
சமய அறிவுப் போட்டி
திருமுறை ஒப்புவித்தல் போட்டி

மழை மேகங்களை அனுப்ப ஒரு மனிதன்

.

American_Indians_Art_Death_peublo
அவரை ஒரு பெரிய இலவ மரத்தின் கீழ் அவர்கள் கண்டு பிடித்தனர். அவருடைய ‘லீவை’ மேலங்கியும், கால்சராயும் வெளுத்து இள நீலமாக இருந்ததால், அவரைக் கண்டு பிடிப்பது சுலபமாக இருந்தது. மணலாகக் கிடந்த அகலமான காட்டோடையில் வளர்ந்து, சிறு தோப்பாக இருந்தபடி, குளிர் காலத்தால் இலைகளை இழந்து நின்ற இலவ மரங்களிலிருந்து அந்தப் பெரிய இலவ மரம் தனித்து நின்றது. அவர் இறந்து ஒரு நாளோ, அதற்கு மேலோ ஆகி இருக்கலாம், அவருடைய செம்மறி ஆடுகள் திரிந்து, காட்டோடையில் மேலும் கீழுமாக அலைந்து கொண்டிருந்தன. லியானும், அவனுடைய மைத்துனன், கென்னும், செம்மறிகளை ஒன்று திரட்டினர், ஆடுகளுக்கான முகாமில் பட்டியில் அடைத்தனர், பின்னரே இலவமரத்துக்குத் திரும்பி வந்தனர். மரத்தடியில் லியான் காத்திருக்கையில், கென் ட்ரக்கை அடர்ந்த மணலூடாக ஓட்டிப் போய், காட்டோடையின் கரையை அடைந்தான். கண்ணைச் சுருக்கிச் சூரியனைப் பார்த்தான், தன் மேலணியின் ஜிப்பைக் கழற்றினான் – வருடத்தின் இந்த மாதத்துக்கு இது மிகவும் உஷ்ணமாகத்தான் இருந்தது. ஆனால் உயரே, வடமேற்கே, நீல மலைகளில் இன்னும் பனி படர்ந்திருந்தது. கென் நொறுங்கிக் கொண்டிருக்கிற சரிவான கரையில், ஐம்பதடி போல சறுக்கியபடி கீழே இறங்கினான், அவன் ஒரு சிவப்புப் போர்வையைக் கொண்டு வந்தான்.

வேலணை மத்திய கல்லூரி ஒன்றுகூடல் (சிட்னி) 15-09-2013

தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில் - கனா பிரபாKana Praba's profile photoஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு ஈறாகவும், ஐக்கிய இராச்சியம் போன்ற புலம்பெயர் நாடுகளிலும், சென்னையிலே லயோலா கல்லூரியிலும் தனிநாயகம் அடிகளாரது நூற்றாண்டு நினைவுச் சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.  கடந்த நூற்றாண்டிலிருந்து அதிகப்படியான புலப்பெயர்வைச் சந்தித்த ஈழத்தமிழினத்தின் பெரும்பான்மை மக்கள் வாழும் கனடா நாட்டிலும் இன்று ஆகஸ்ட் 31 ஆம் திகதி தனிநாயகம் அடிகளாரது நூற்றாண்டுப்பெருவிழா பெரும் எடுப்பில் நடந்தேறியது. இந்த நிகழ்வில் சிறப்பு இசைவட்டு ஒன்றும், எழுநூறு பக்கங்கள் அடங்கிய தனிநாயகம் அடிகளார் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. 

தனிநாயகம் அடிகளாரது வாழ்க்கை என்பது அவர் சார்ந்த சமயப்பணியாகக் குறுகிய வட்டத்தோடு நின்றுவிடாது, தான் சார்ந்த தமிழ்மொழி சார்ந்த சமூகப் பணி கடந்து விரவியிருந்ததை அவரது வாழ்நாளில் எமக்களித்துவிட்டுப் போன சான்றுகள் மூலம் ஆதாரம் பகிர்கின்றன. தமிழாராய்ச்சி மாநாட்டை உலகளாவிய ரீதியிலே நடத்துவதற்கு முன்னோடியாக அமைந்து அதைச் செயற்படுத்தியவர். மேலைத்தேய, கீழைத் தேய நாடுகளுக்கெல்லாம் சென்று, தேடித் தேடி கடந்த நூற்றாண்டுகளில்  பதிந்த தமிழரது சுவடுகளை வெளிக்கொணர்ந்தார். ஆனால் முப்பது வருஷங்களுக்கு முன்பு வரை வாழ்ந்த அந்தப் பெருந்தகை யார் என்று தெரியாத நிலையில் புலம்பெயர் ஈழத்தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல, நம் தாயகத்திலும் இருப்பதை எண்ணும் போது வேதனையும் வெட்கமும் பிறக்கின்றது. நமது கண்ணுக்கு முன்னால் தமிழ்ச்சமுதாயத்துக்காக உழைத்தவரை மறந்த நிலையில் இருக்கின்றோம்.

படித்தோம் சொல்கின்றோம் -ரஸஞானி

.
கிருஷ்ணமூர்த்தியின்  மறுவளம்

விவேகானந்தர்  துறவி  என்றாலும்ää அவர்  மனிதன்  தனது  அடையாளத்தை  விட்டுச்செல்வதற்கு  மூன்று  ஆலோசனைகளை   சொல்லியிருக்கிறார்.
மனிதன்  பிறக்கிறான்ää  மறைகிறான்.  இடையில்  அவனிடமிருப்பது  நீண்ட  அல்லது  குறுகிய  கால  வாழ்க்கை.  அந்த  இடைவெளியில்  அவன்  உருப்படியாக  மூன்று  விடயங்களில்  ஏதாவது  ஒன்றையாவது  செய்துவிடவேண்டும்.  இல்லையேல்  அவனுக்குப்பிறகு  அவனது  பெயர்  சொல்வதற்கு  அடையாளமாக  ஒன்றும்  இருக்காது.
இல்லறத்தில்  ஈடுபட்டு  ஒரு  பிள்ளைக்காவது   பெற்றோராகிவிடவேண்டும்.   அல்லது  தனது  பெயர்    சொல்ல  ஒரு  வீட்டையாவது    விட்டுச்செல்லவேண்டும்.  அல்லது  ஒரு   புத்தகம்  எழுதிவிடவேண்டும்.
நண்பர்  கிருஷ்ணமூர்த்தியின்  மறுவளம்   நூலை  கையிலெடுத்தபொழுது   விவேகானந்தர்  சொன்னதுதான்   எனது    நினைவுக்கு  வந்தது.
கிருஷ்ணமூர்த்தி   ஒன்றல்ல  மூன்று  கடமையையும்   செய்துவிட்டார்.  குழந்தைகளின்  தந்தையாக  குடும்பத்தலைவன்ää  புகலிடத்தில்    உழைத்து  வீடு.    தற்பொழுது ஒரு  நூலையும்    வாசகர்களுக்கு    சமர்ப்பித்துவிட்டார்.
நீண்டகாலமாக    அவர்    எழுதிவந்தாலும்   தற்பொழுதுதான்   ஒரு  நூலை  வெளியிடவேண்டும்   என்ற   விருப்பத்திற்கு   வந்துள்ளார்   என்பதனால்  விவேகானந்தரின்   கூற்றையும்   இங்கு  குறிப்பிட்டேன்.
இலங்கையில்  தமிழில்  பத்தி  எழுத்துக்களை  பரவலான  அறிமுகத்துக்கு  விட்டவர்  திறனாய்வாளர்  கே.எஸ். சிவகுமாரன்.   அவர்  தாம்  படித்த  தமிழ்  ஆங்கில  நூல்கள் மற்றும்  பிறமொழிப்படைப்பு  மொழிபெயர்ப்புகள்ää  தரமான  திரைப்படங்கள்ää  நாடகங்கள்  பற்றியெல்லாம்   நயப்புரையாக   திறனாய்வு   செய்பவர்.

வாஷிங்டனில் புறநானூறு: பன்னாட்டு மாநாடு

.

வாஷிங்டன்: வாஷிங்டனில் புறநானூறு: பன்னாட்டு மாநாடு ஆகஸ்ட் மாதம் 31 மற்றம் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது.
06-1378453613-international-conference-wவெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமக்கென தமிழ்ச் சங்கங்கள் அமைத்து, தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் கூடி அளவளாவுகின்றனர்; கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். சில சமயங்களில் இந்தியாவிலிருந்து முக்கியப் பிரமுகர்களை வரவழைத்துப் பங்கேற்க வைப்பதும் உண்டு.
அமெரிக்கத் தலைநகரின் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் இந்தச் சம்பிரதாயங்களுக்கு அப்பாலும் தமிழை - தமிழ் மொழியை முன்னிறுத்தி - சில அரிய பணிகளை ‘சத்தம் போடாமல்' செய்து வருகின்றது. ‘இலக்கிய வட்டம்' என்ற பெயரில் தமிழார்வமுள்ள உறுப்பினர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஒன்று கூடியும், பல்வழித் தொலைபேசியிலும் (Conference call) திருக்குறள், புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற நம் இலக்கியங்களைப் படிக்கிறார்கள்; விவாதிக்கிறார்கள்; ரசிக்கிறார்கள். அவ்வப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கியப் பாடல்களில் வினாடி-வினா நடத்துகிறார்கள்.
கர்நாடக சங்கீதம் என்றாலே தெலுங்கு கீர்த்தனைகள் தான் நினைவுக்கு வருகின்ற இந்தக் காலக்கட்டத்தில் பாரதி பாடல்களையும், தமிழ் இலக்கியப் பாடல்களையும் கொண்டு ‘தமிழிசைப் பாடல்கள்' நிகழ்ச்சியை ஆண்டு தோறும் நடத்துகின்றனர். இவையாவற்றிலும் பங்கேற்பவர்கள் தமிழகத்திலிருந்து வந்து இங்கு பணியாற்றும் (பெரும்பாலும்) கணிப்பொறி வல்லுநர்களும் (IT professionals) அவர்களின் பிள்ளைகளும் தான் என்பது கூடுதல் ஆச்சரியம்! தவிர, வாஷிங்டன் வட்டாரத்தில் மட்டும் விடுமுறை நாட்களில் குழந்தைகள் தமிழ் கற்பதற்கான தமிழ்ப் பள்ளிகள் ஐந்துக்கு மேல் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

உலகச் செய்திகள்


கிம் ஜொங்- உன்னின் முன்னாள் காதலிக்கு மரண தண்டனை: ஆபாச பட விவகாரமா? மனைவியின் பழிவாங்கலா?

ஐரோப்பாவின் மிகப்பெரிய நூலகம் பேர்மிங்ஹாமில்!

சிரிய கடல் பிராந்தியத்துக்கு புலனாய்வு கப்பலை அனுப்பியுள்ள ரஷ்யா?

சிரி­யா­வி­லி­ருந்து 2 மில்­லியன் அக­திகள் வெளி­யேற்றம்
--------------------------------------------------------------------------------------------

கிம் ஜொங்- உன்னின் முன்னாள் காதலிக்கு மரண தண்டனை: ஆபாச பட விவகாரமா? மனைவியின் பழிவாங்கலா?

30/08/2013 வட கொரியாவின் ஆட்சியாளரான கிம் ஜொங்- உன்னின் முன்னாள் காதலியான பாடகியொருவரும், அப் பெண் அங்கம் வகித்த இசைக்குழுவின் உறுப்பினர்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆட்சியாளரான கிம் ஜொங்- உன்னின் உத்தரவுக்கமையவே இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆபாச பட விவகாரமொன்றே இத்தண்டனைக்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
சுட்டுக்கொல்லப்பட்ட பாடகியின் பெயர் ஹயோன் சொங்-வொல் எனவும் அவரோடு அவர் அங்கம் வகிக்கும் இசைக்குழுவைச் சேர்ந்த பாடகர்கள், இசைக்கலைஞர்கள் என 12 பேர் பொது இடத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
அவ் இசைக்குழுவின் பெயர் 'ஹுனாசு' எனவும் இக்குழு உறுப்பினர்கள் அமைவரும் இணைந்து தாமே ஆபாசப்படங்களில் நடித்து அவற்றை விற்பனை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இம்மாதம் 17 ஆம் திகதி இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும், 20 ஆம் திகதி இவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
வட கொரியாவின் ஆட்சியாளரான கிம் ஜொங்- உன் மற்றும்  ஹயோன் சொங்-வொல் ஆகிய இருவரும் 13 வருடங்களுக்கு முன்னர் ஒருவரையொருவர் சந்தித்துள்ளனர்.
எனினும் கிம் ஜொங்- உன்னின் தந்தையும் தென்கொரியாவின் முன்னாள் ஆட்சியாளரான கிம் ஜொங்-இல் இக்காதலுக்கு சம்மதம் தெரிவிக்காமையால் அவர்கள் பிரிய நேர்ந்துள்ளது.
இதன்பின்னர் ஹயோன் சொங்-வொல் வேறு ஒருவரை மணந்துள்ளார்.
தமிழ் சினிமா

MailPrint
சென்னை எக்ஸ்பிரஸ்

தமிழ் சினிமாவில் பார்த்த மசாலா படங்களை காரம் மசாலாவாக மாற்றி இருக்கிறது சென்னை எக்ஸ்பிரஸ்.
கில்லி, முத்து, அலெக்ஸ் பாண்டியன் சண்டைக்காட்சிகள், சில தெலுங்கு படங்கள் என அனைத்தையும் கலந்துகட்டிய சென்னை எக்ஸ்பிரஸ் படு வேகத்தில் பறக்கிறது.
தன் தாத்தாவின் அஸ்தியை ராமேஸ்வரம் கடலில் கரைப்பதற்காக தென்னிந்தியாவை நோக்கி புறப்படுகிறார் ஷாருக்கான் (ராகுல்). எதிர்பாராத விதமாக சென்னை எக்ஸ்பிரசில் தீபிகா படுகோனேவை (மீனம்மா என்கிற மீனலோச்சனி அழகுசுந்தரம்) சந்திக்கிறார். அவர் கூட உருவத்தில் பெரியதாக இருக்கும் நான்கு அடியாட்களும் இருக்கிறார்கள்.
தன் அப்பா பார்த்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்பதால் ஊரைவிட்டு தப்பிவந்த என்னைக் கண்டுபிடித்து மீண்டும் தன் அப்பாவிடமே கொண்டுசெல்கிறார்கள் என்ற உண்மையை ஷாருக்கானிடம் சொல்லி தன்னைக் காப்பாற்ற சொல்கிறார் தீபிகா.
ஷாருக்கானும் ஏதேதோ ட்ரை பண்ண, எல்லாமே கொமெடியாக முடிந்துவிடுகிறது. வில்லன்களிடம் தன் குறும்புத்தனமான சேஷ்டைகளை காட்டியதால் ஷாருக்கானும் பிடித்துவைக்கப்படுகிறார். ரயில் தீபிகாவின் சொந்த ஊருக்கு வந்து சேர்கிறது. அங்கு தான் சத்யராஜ் அசத்தல் எண்ட்ரி கொடுக்கிறார்.
வேறு வழியில்லாமல், ஷாருக்கானைக் காட்டி இது தான் என் காதலன் என்று அப்பாவிடம் பொய்சொல்லிவிடுகிறார் தீபிகா. தூக்குங்கடா என் மாப்பிள்ளைய என்று சத்யராஜ் சொன்னதும் ஷாருக்கானுக்கு ராஜ மரியாதை வழங்கப்படுகிறது.
அப்போது தான் வில்லன் வருகிறார். அவர் தான் தீபிகாவுக்கு சத்யராஜ் பார்த்திருக்கும் மாப்பிள்ளை. ஒத்தைக்கு ஒத்தை சண்டைபோடுவோம் என்னை ஜெயிச்சிட்டு தீபிகாவை கல்யாணம் பண்ணிக்கோ என்று சவால் விடுகிறார்.
வில்லனின் கம்பீர உருவத்தைப்பார்த்து மிரண்டுபோகிறார் ஷாருக்கான். அங்கிருந்து தப்பிசெல்ல முயன்றும் மீண்டும் அதே ஊரில் வந்து அவர்களிடமே சிக்கிக்கொள்கிறார்.
என்ன செய்வதென்று தெரியாமல் கில்லி விஜய் ஸ்டைலில் ஒரு கத்தியை தீபிகா கழுத்தில் வைத்து அவரை ஒரு ஜீப்பில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து இருவரும் எஸ்கேப் ஆகிறார்கள்.
ஒரு கட்டத்தில் இருவருக்குமே காதல் வருகிறது. தீபிகாவுடன் தன் சொந்த ஊருக்குத் தப்பிக்க போகிறார் ஷாருக் என எதிர்பார்க்கிற நேரத்தில் மீண்டும் சத்யராஜிடம் மாட்டிக் கொள்கின்றார்.
பின்பு தன் தாத்தாவின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைத்து, தன் பாட்டி தனக்கு கொடுத்த கடமையை நிறைவேற்றுகிறார் ஷாருக். வில்லனை வீழ்த்தி தீபிகாவை எப்படி மணம் முடிக்கிறார். என்ற மீதிக் கதையோடு பயணிக்கிறது சென்னை எக்ஸ்பிரஸ்.
கதாநாயகனாக வரும் ஷாருக்கான் எந்தவித அலட்டலும் இல்லாமல் நடிப்பில் அசத்தியுள்ளார், காட்சிகளில் தமிழ் தெரியாமல் திணருவதும், இரண்டு மூன்று வார்த்தைகளை தமிழில் பேசும் கலாட்டா காட்சிகளும் ரசிக்க வைக்கிறது.
க்ளைமாக்ஸ் காட்சியில் ‘உயிரோட வந்த நீ உயிரோட போமாட்ட, வெட்டி பீஸ் பீஸ் ஆக்கி பார்சல் அனுப்பிடுவேன்’ என்று வில்லன் பேசிய வசனத்தை அவரிடமே ஷாருக் பேசிக்காட்டுவது தூள்.
மீனலோச்சனி அழகுசுந்தரம் என்ற பெயரில் வரும் அழகு என்ற வார்த்தையை உச்சரிக்க முடியாமல் ஒவ்வொரு முறையும் ‘அசுட அசுட’ என்று ஷாருக் பேசுவது கலகலப்பு.
வழியைத் தொலைத்து திசைமாறி சென்றுவிடும் ஷாருக்கான் கேரளா பக்கம் போக, அங்கே ஒருவர் எந்தானு ஜோலி என்று கேட்க. ‘ஐ யம் நாட் ஏஞ்சலினா ஜோலி’ என்று ஷாருக் பதில் சொல்வது குபீர் சிரிப்பு.
கதாநாயகியாக வரும் தீபிகா படுகோனே தனது அழகு, அசத்தல் நடிப்பால் அசரடிக்கிறார். தமிழ் வசனங்களுக்கு அவரே குரல் கொடுத்திருப்பது, கேட்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், மெச்சத் தக்க முயற்சி.
ப்ரியாமணி ஒரு குத்துப்பாட்டுக்கு வருகிறார், அதிகமான கவர்ச்சி இல்லை என்றாலும் வழக்கமான திமிரோடு ஷாருக்கானுடன் கலக்கியிருக்கிறார், தமிழ் சினிமாவில் சரிந்த மார்க்கெட்டை பிடிப்பதற்கு இவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
பெரியதலையாக வரும் சத்யராஜ் அவருக்கு கொடுத்திருக்கும் பொருத்தமான கதாபாத்திரத்தை தனக்கே உரிய பாணியில் அசத்தியுள்ளார், படத்தில் மிகப்பெரிய பங்கு என்னம்மா கண்ணு சௌக்கியமா? என்று உச்சரிப்பதுதான்.
படத்தின் இசையில் மெலோடி பாடல் ஒன்று வருகிறது, மீதியுள்ள பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் தான், ஒளிப்பதிவாளரும் ரயில் பாலம் காட்சிகள், அருவிகள் என்று சில இடங்களில் பிரமிக்க வைத்துள்ளார்.
இயக்குனர் ரோஹித் ஷெட்டி தமிழ் மசாலா படங்களை காப்பியடித்து காரமான மசாலாவாக மாற்றி கொமடி, காதல், சென்டிமெண்ட் என்று கலந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார்.
படத்தில் ஏராளமான தமிழ் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள், கதை நடப்பது அனைத்தும் தமிழகத்தில் என்பதால் படம் பார்க்கும் போது தமிழ் படம் பார்க்கிற உணர்வுதான் வருகிறது.
ரஜினிக்கு மரியாதை என்ற பெயரில் கடைசியில் இடம்பெறும் அந்த லுங்கி டான்ஸ் முடியும் வரை கூட்டம் காத்திருக்கிறது. ஷாரூக்கானின் புத்திசாலித்தனத்துக்கு இன்னொரு சான்று இது.
தமிழ் புரியாமல் மாட்டிக்கொண்டு சிரமப்படும் ஷாருக்கான், கலர் கலர் உடைகளோடு பளிச்சென வலம்வரும் தீபிகா படுகோனே, தென்னிந்தியாவின் டான்-னாக இருக்கும் சத்யராஜ் (பெரியதலை) என படம் முழுக்க கலர் புல் கலாட்டா தான்.
மொத்தத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படம்.
நடிகர்கள்: ஷாரூக்கான், தீபிகா படுகோன், சத்யராஜ்
இசை: விஷால் சேகர்
ஒளிப்பதிவு: டட்லீ
இயக்கம்: ரோஹித் ஷெட்டி
தயாரிப்பு: கவுரி கான், ரோனி ஸ்க்ரூவாலா, சித்தார்த் ராய்கபூர்
நன்றி விடுப்பு