சிட்னியில் ஆகாயவிமானம் விழுந்ததில் இருவர் மரணம்.

சிட்னி மேற்குப்பகுதியில் ஒரு விமானியும் அதில் பிரயாணம் செய்த இன்னொருவரும் பயணம் செய்த அவர்களுடைய விமானம் வீதியொன்றில் விழுந்து நொருங்கியதால் மரணமானர்கள்.
சிட்னியிலே மாபெரும் இசை விழா
                                                         நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்


இசைக்கு ஒரு விழா மாபெரும் விழா. இது சென்னையில் வருடா வருடம் நடக்கும் மார்கழி இசை விழாவல்ல. சிட்னியிலே வருடா வருடம் ஜூன் மாதத்திலே மகாராணியாரின் பிறந்ததினத்தை கொண்டாடும் பொருட்டு வரும் நீண்ட வார விடுமுறையின் போது நடைபெறுவது. பெரும் திரளாக இசை ரசிகர்களை  கவரும் விழா. இருபதுக்கும் அதிகமான கர்நாடக இசைக்  கலைஞர்கள்  மூன்று  நாட்கள் சிட்னியிலே வந்து இசைக் கச்சேரியை வழங்குவார்கள். Swaralaya Fine Arts Society யே சிட்னியில் வருடா வருடம் இந்த விழாவை நடாத்துகிறது . சென்னைக்குப் போய் மார்கழியில் இசை கச்சேரியை கேட்டு வந்த இரசிகர்களுக்கு  இது ஒரு வரப்பிரசாதமே. நம்ம ஊரிலேயே நமக்காக இசைவிழா நடக்க நாம் எதற்கு சென்னை போக வேண்டும்? காலை ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் இவ்விழா இரவு  ஒன்பது முப்பது மணிவரை நடைபெறும். மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இவ்விழாவில்   இன்று கர்நாடக இசை உலகின் நட்சத்திரம் என ஒளிரும் அத்தனை கலைஞர்களின்  இசையையும் கேட்டு மகிழலாம்.

இயற்கையின் இசையரங்கு

தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,

கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்வண்டுகள் இனிது பாட, -மருதம் வீற்றிருக்கும் மாதோ.

என்ற கம்பனின் கவிநயத்தை வியக்காதவர்களே அரிது.

கம்பனின் இப்பாடலைப் படிக்கும் போது என்மனம் ஏனோ இந்த அகநானூற்றுப் பாடலையே ஒப்புநோக்கிறது.
அருமரு‌ந்தான துளசி

துளசி என்றால் எல்லோருக்கும் தெரியும். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.

அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாகக் கிடைக்கும் அந்த துளசியில்தான் எத்தனை எத்தனை மகத்துவங்கள். அவற்றில் ஒரு சில உங்களுக்காக.
யாழ் இந்துக் கல்லூரி கீதவாணி விருதுகள் ஓர் பார்வை
                                                                                                     யாழ்  ரமணா


சிட்னி தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

மளிகை பொருட் கடைகள் மலிந்து விட்டன
உணவகங்கள் அவரவரின் சுவைக்கேற்ப ஆங்காங்கே முளைத்துவிட்டன.
புடவைக் கடைகள் தெருவுக்குத் தெரு அலங்கரிக்கின்றன.
புதினப் பத்திரிகைகள், வார இதழ்கள், மாதாந்த சஞ்சிகைகள் நமது அறிவை வளர்க்கின்றன.
இவை போதாதென்று வாராவாரம் ஏதோ ஒரு வகையிலான இசை நிகழ்ச்சி நமது செவிக்கு விருந்தளிக்கின்றது.
இவ்வார செய்திகள்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரபலமான டைம்ஸ் சதுக்கத்தில் வெடி குண்டு நிரப்பிய காரை மோதி தாக்குதல் நடத்த முயற்சித்த தீவிரவாதி திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார். நியூயார்க் நகரில் உள்ள கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபைக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போது அவரை அந்நாட்டு புலனாய்வுத் துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.
பாசையூர் புனித அந்தோணியார் திருச்சொருப பவனிபாசையூர் புனித அந்தோணியார் ஆலயம், பாலைதீவு அந்தோணியார் ஆலயம் என்றால் கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல சைவசமயத்தவர்களுக்கு கூட வணக்கத்துக்குரிய இடமாக கொள்ளப்படுவது நான் சின்ன வயதில் பார்த்தது.வெள்ளை மணற்பரப்பு பாய்விரிப்பில் கம்பீரமாக நிமிர்து நிற்கும் கொடிமரமும் அதில் கட்டப்பட்டிருக்கும் நூலும் அந்த நூல்களில் படபடத்துக்கொண்டிருக்கும் கொடிகளும் என்னைக் கவர்தவைகள்.


ஈழத்தமிழர் கழக சீட்டிழுப்பின் முடிவுகளில் ஏற்பட்ட அச்சுப்பிழை காரணமாக திருத்திய விபரம் பதிவிடபடுகிறது.


தர்க்கத்திற்கு அப்பால்..... சிறுகதை
ஜெயக்காந்தன்.

வெற்றி என்ற வார்த்தைக்குப் பொருளில்லை.நினைத்தது நடந்தால் வெற்றி என்று நினைத்துக் கொள்கிறோம்.தோல்வி நிச்சயம் என்று எண்ணித் தோற்றால் அந்தத் தோல்வியே வெற்றி தான்.ஒரு காலத்தில் எனக்கு இப்படிப்பட்ட'வெற்றி'கள் வாழ்க்கையில் நிறையவே சம்பவித்தன.

என் வாழ்வையே நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரியமாய் பக்கத்து நகரத்துக்குப் போயிருந்தேன்.வழக்கம் போல'தோல்வி நிச்சயம்'என்ற மனப்பாண்மையுடன் போன நான், வழக்கத்துக்கு மாறாக அன்று தோற்றுப் போனேன்.தோல்வி நிச்சயம் என்ற என் மனப் போக்கு தோற்றது.என் வாழ்க்கையே நிர்ணயிக்கப் பட்டு விட்டது.
புருஷோத்தமா மாதம் - முதல் பகுதி
ஹரே கிருஷ்ணா! வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். புராணங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பதாகவும், ஏதாவது ஒரு புராணத்தில் இருந்து ஒரு பகுதியைப் பற்றி எழுதுமாறு ஒரு வாசகர் எனக்கு இனைய அஞ்சல் அனுப்பி இருந்தார். அவருக்காக பத்ம புராணத்தில் இருந்து புருஷோத்தம மாதத்தின் புகழ் குறித்து இதோ ஒரு பகுதி. இந்த வரலாற்றை மொழிபெயர்ப்பு செய்து உதவிய சகோதரி ஸ்ரீ குரு பக்தி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்தக் கட்டுரை சற்று நீலமாதலால், மூன்று பகுதிகளாக இந்தவாரமும், இனி வரும் அடுத்த இரண்டு வாரமும் வெளி வரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். புராணங்கள் மிக விரிவானவை. சிலர் இதைப் படிப்பதில் சிரமம் இருப்பதாகக் கூட உணரலாம். இவற்றை படிப்பதால் நாம் பகவத் கீதையை இன்னும் அதிக மரியாதையுடன் கற்க முடியும். ஆதலால் சற்று பொறுமையுடன் இந்த மூன்று பகுதிகளையும் படிக்கும் படி வேண்டிக் கேட்டு கொள்கிறேன்.


முன்னொரு காலத்தில் நைமிசாரண்யம் என்ற புண்ணியஷேத்திரத்தில் ஆயிரக்கணக்கான முனிவர்கள் யக்ஞம் செய்ய ஒன்று கூடினார்கள்.அவர்களது நற்பேரால்,பல புண்ணியஷேத்திரத்திற்கு சென்றுக் கொண்டிருந்த ஸூதகோஸ்வாமி தனது சீடர்களுடன் அங்கு வந்தார்.அங்கு இருந்த முனிவர்கள் இவரை கண்டு உயிரூட்டம் பெற்றார்கள்.அவர்கள் எழுந்து அந்த உயர்ந்த மகானிற்கு மரியாதை செலுத்தி, சிறந்த வியாசசனம் அளித்து,கூப்பிய கைகளுடன் அவரை அதில் அமரும்படி வேண்டிக்கொண்டனர்.

சேக்கிழார் விழா

நீரின்றி அமையா யாக்கை.மனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா? என்று இங்கு இருந்துகொண்டே சிந்தி்த்து வருகிறான் மனிதன். புதிய கோள்களில் முதலில் தேடுவது மனிதன் வாழ அடிப்படைத் தகுதியான நீர் உள்ளதா? என்பதைத் தான்.

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும். என்பதை,
ராவணன்

சிட்னி மெல்பேன் திரையரங்குகளில் 17ம், 18ம், 19ம், 20ம், 21ம், திகதிகளில் காணத் தயாராகுங்கள் ராவணன் விக்ரம், ஜஸ்வர்யா ராய் நடித்த திரைக்காவியம்

காட்சி நேரங்கள் திரையரங்குகளின் விபரங்களை கீழே பார்க்கவும்

 மெல்லியலாள் நினைவு பதிகிறது xxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


                                                     கவிஞர். வைகை வளவன்
வன்னி மண்ணின் வாய்க்கால் அழகும்
வளைந்து செல்லும் மண் பாதைகளும்
குளக் கட்டில் படுத்துறங்கும்
கபறக் கொய்யாக்களும்
ஒற்றை வயல் வரம்பில் சைக்கிள் ஓட்டியதும்
இன்னும் பசுமையான நினைவுகளாக இருக்கிறது