மரண அறிவித்தல்


 நித்தியானந்தன் சிதம்பரப்பிள்ளை

Retired Civil Engineer – Department of Buildings, Kandy, Sri Lanka

தோற்றம் 4 – 12 – 1934 மறைவு 29 – 08 – 2022

மயிலிட்டியில் பிறந்து வளர்ந்து பின்பு கொழும்பிலும் கண்டியிலும்  இலங்கை கட்டிட திணைக்கள மாவட்ட பொறியியளாளராக பணியாற்றி ஓய்வு பெற்று பின் சிட்னி ஒஸ்திரேலியாவில் வாழ்ந்த நித்தியானந்தன் சிதம்பரப்பிள்ளை 29-08-2022 இல் காலமானார்.  இவர் காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை கண்மணி தம்பதியரின் அன்புப்புதல்வரும், காலஞ்சென்ற ஒப்பிலாமணி சிவகாமி தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற மங்களதேவியின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற இராமலிங்கம், சோமேஸ்வரி, சிவானந்தன், பரமானந்தன், கிருஷ்ணானந்தன், சற்குணேஸ்வரி, குமரேஸ்வரி ஆகியோரின் அன்புச்சகோதரனும், பிரபாலினி (ஒஸ்திரேலியா), தயாளினி (இங்கிலாந்து), ஜெகேந்திரன் (இலங்கை), பிரபாலன் (இங்கிலாந்து), சுபோதினி (ஒஸ்திரேலியா), வினோதினி (ஒஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், இராமமூர்த்தி, இராதாகிருஷ்ணண், ஜெயலக்ஷ்மி, மைத்ரேகி விஜயஸ்ரீ, கோபிஷங்கர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், பரதன், நகுலன், நிவேதித், மிஷாலி, அஸ்மிதா, ஆரண்யா, ஷப்னா, விஜித்இ ஹாரணி, விதேஷ் ஆகியோரின் அருமை பேரனும்,  காலஞ்சென்ற குமாரசாமி, காலஞ்சென்ற இராமநாதன், காலஞ்சென்ற மங்கள்குமார், ஆசைமலர், காலஞ்சென்ற அகிலேஸ்வரி, நாகேஸ்வரி, மாலா,  ரவீந்திரன், காலஞ்சென்ற புவீந்திரன், காலஞ்சென்ற மகாமணிதேவி, காலஞ்சென்ற சிவனேந்திரன், தெய்வேந்திரன் ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் ஈம சடங்குகள் 06/09/2022 செவ்வாய் காலை  8:30 மணிக்கு 60, McMillian CCT, Kellyville NSW 2155  இல்லத்தில் நடைபெற்று காலை 11:30 மணியிலிருந்து மதியம் 12:45 வரை தகன கிரிகைகள் Camellia Chappel, Macquarie Park Crematorium  இல் நிறைவுபெறும்.

தகவல்களுக்கு:

ஓஸ்திரேலியா:

பிரபாலினி – +61 437 025 633

சுபோதினி – +61 439 898 477

வினோதினி – +1 433 448 648

இங்கிலாந்து:

தயாளினி – +44 75 9532 1290

பிரபாலன் – +44 78 7871 5285

இலங்கை:

ஜெகேந்திரன் – +94 760 184 912 


மரண அறிவித்தல்

 

                           வல்லிபுரம்  இராஜரட்ணம்           

( ஓய்வுபெற்ற மின்சார பொறியியலார் )

வட இலங்கை நெடுங்கேணியை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா மெல்பனை வதிவிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் இராஜரட்ணம் இம்மாதம்                  ( செப்டெம்பர் ) 03 ஆம் திகதி ( 03-09-2022 ) சனிக்கிழமை மெல்பனில் காலமானார்.

அன்னார் செல்வராணியின் அன்புக்கணவரும், வாசுகி, அக்‌ஷரன் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.

 பிரபாகரன் இரட்ணராஜா, பிரஸன்னா அக்‌ஷரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், செல்விகள் அஸ்மிதா, அனீஷா,  செல்வன்கள் அஷ்வின், அஷாந்த் , திலன் ஆகியோரின் அன்புப்பேரனுமாவார்.

அன்னார் அமரர்கள் சிவசிதம்பர உடையார் வல்லிபுரம் – பொன்னம்மா தம்பதியரின் பாசமிகு புதல்வனும், அமரத்துவம் எய்திவிட்ட  பரராஜசிங்கம் , திலகவதி அவர்களின் அருமைத்தம்பியும் ( கனடா ) இரத்தினாவதி               ( இலங்கை ) ஶ்ரீஸ்கந்தராஜா ( அவுஸ்திரேலியா )  பாலசிங்கம் ( கனடா  ) ஆகியோரின் சகோதரருமாவார்.

அமரர்கள்  திருமதி அகிலாண்டேஸ்வரி பரராஜசிங்கம் , கனகசபை, பொன்னையா ஆகியோரின் மைத்துனரும், திருமதி பத்மினி ஶ்ரீஸ்கந்தராஜா, திருமதி யோகசக்தி பாலசிங்கம் ஆகியோரின் மைத்துனருமாவார். 

இறுதிச்சடங்குகள் பின்னர் அறியத்தரப்படும்

தகவல் :  வாசுகி பிரபாகரன்             ( 0434 095 011 )

                    அக்‌ஷரன் இராஜரட்ணம் ( 0466 320 245 )

                    செல்வத்துரை ரவீந்திரன் ( 0423 799 803 )

                     அருண்                                          ( 0416 255 363 )

23, DALVEEN  ROAD, IVANHOE – VICTORIA  3079 , AUSTRALIA

மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டில் முருகபூபதியின் பாரதி தரிசனம் நூல் வெளியீடு

 இம்மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  மகாகவி பாரதியார்


மறைந்து 101 வருடங்களாகின்றன.

இந்நினைவு நூற்றாண்டில் எழுத்தாளரும், ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி எழுதியிருக்கும் பாரதி தரிசனம் என்ற புதிய படைப்பு மின்னூலாக வெளியாகின்றது.

கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டு ஆரம்பமானது. அதனை முன்னிட்டு முருகபூபதி எழுதிவந்த பாரதி தரிசனம் தொடர் தற்போது மின்னூலாக கிண்டிலில் வெளியாகின்றது.

பன்னிரண்டு அங்கங்கள் கொண்டிருக்கும் இந்நூல் இம்மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை,  மெய்நிகரில் வெளியிடப்படவிருக்கிறது.

எழுத்தாளரும், ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின்


நடப்பாண்டு தலைவருமான திருமதி சகுந்தலா கணநாதன் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார்.

அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் இலக்கியவாதியும் சிட்னி தமிழ் பாடசாலைகளின் உயர்தர வகுப்பு ஆசிரியருமான  திரு. திருநந்தகுமார் தலைமையில் நடைபெறவுள்ள இந்த அரங்கில்,  பாரதியாரின் உடன்பிறந்த தங்கையின் கொள்ளுப்பேத்தி கவிஞர் உமா பாரதி,  கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி.யின் பேரன் திரு. கே. காளிராஜன் , புதுவை பல்கலைக்கழகத்தின்  வருகைதரு பேராசிரியர் முனைவர் அரிமளம். பத்மநாபன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் நூலாசிரியர் முருகபூபதி ஏற்புரை வழங்குவார்.  கலை, இலக்கியவாதிகளையும்   ஊடகவியலாளர்களையும்   பாரதி இயல் ஆய்வாளர்களையும் இந்த மெய் நிகர் அரங்கில் இணைந்துகொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்   அன்புடன் அழைக்கின்றனர்.

மெய்நிகர் இணைப்பு: 

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 29 அவுஸ்திரேலியாவில் இலக்கிய சிற்றிதழ்களின் தோற்றமும் மறைவும் முருகபூபதி

மெல்பனிலிருந்து 1988 – 1989 காலப்பகுதியில் வெளியான மக்கள் குரல் கையெழுத்து மாத இதழ், சமூகத்தில் எதிர்வினைகளையும்


சர்ச்சைகளையும்  ஏற்படுத்தி பின்னர் வெளிவராதுபோனாலும், புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே அரசியல் விமர்சனத்தேடலுக்கும் மாற்றுக்கருத்து பரிமாறலுக்கும் – இதழ்களை – அவை செய்தி ஏடாகவிருந்தாலும், இலக்கியம் சம்பந்தப்பட்டதாகவிருந்தாலும் வெளியிட முடியும் என்ற நம்பிக்கைக்கு வித்திட்டது.

மக்கள் குரல் ஏற்படுத்திய தாக்கமே 1989 நவம்பரில் அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மாணவர் அமைப்பின் வெளியீடாக உணர்வு என்ற இதழ் வெளியாகத் தொடங்கியது.

எனினும்,  உணர்வு மூன்று இதழ்களுடன் நின்றுவிட்டது.


1990 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சுழலும் சக்கரத்தின் சுழலாத புள்ளியே மரபு என்று தனது வருகையை அறிவித்தவாறு மரபு மாத இதழ் வெளிவரத்தொடங்கியது.

அவ்விதழில்   முதலாவது  ஆசிரியத் தலையங்கத்தில் பின்வருமாறும் எழுதப்பட்டிருந்தது:

    இச்சஞ்சிகையில் இடம்பெறும் கருத்துக்கள் யாவும் சஞ்சிகையின் கருத்துக்களை பிரதிபலிப்பவையல்ல. எழுத்தாளர்களின் சிந்தனைக்கு வரையறை போடாமல் முழுப்பத்திரிகைச் சுதந்திரத்தையும் அளித்து,  அவர்களின் சிந்தனை ஊற்றுக்கள் சந்திக்கும் ஒரு தளமாகவே இருக்க விரும்புகின்றோம்.  

இவ்வாறு எழுத்தாளனின்  உரிமை – சுதந்திரம் பற்றி மரபு பேசியிருந்தாலும்,  இலக்கியவாதிகளும் போதனாசிரியர்களும்  என்ற எனது கட்டுரையை முழுமையாக மரபு வெளியிடாமல், அக்கட்டுரையின் முதல் இரண்டு பக்கங்களை மாத்திரமே பிரசுரித்தது.

முதல் சந்திப்பு வன்னியின் நிலக்காட்சியை படைப்பு இலக்கியத்தில் சித்திரித்த தமிழ்க்கவி அம்மா முருகபூபதி


லங்கையில்  போர் மேகங்கள் சூழ்ந்துகொண்டிருந்த காலப்பகுதியில்  நான் அவுஸ்திரேலியாவுக்கு  வந்துவிட்டேன். 

போருக்கு  தூபம் போட்டுக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் வாழ நேர்ந்திருந்தாலும்,  அவர்களிடமிருந்து தூர விலகியே இருந்தேன். தாயகத்தில் போர் நீடித்தால்,  இறுதியில் என்ன எஞ்சும், என்ன மிஞ்சும் என்பதில் பத்திரிகையாளனாக போர்க்கால செய்திகளை எழுதி வந்த எனக்கு தீர்க்கதரிசனமாகத் தெரிந்திருந்தது.

அதனால், போரில் ஈடுபட்டிருந்த இரண்டு தரப்பினரையும்


விமர்சிப்பதை விடுத்து,  போரினால் பாதிக்கப்பட்ட ஏழைத் தமிழ் மாணவர்களின் தேவைகளை கவனிக்க தன்னார்வத் தொண்டு அமைப்பினை ( இலங்கை மாணவர் கல்வி நிதியம் )  உருவாக்கி செயற்படுத்தினேன்.

ஆயினும்,  தாயகம் செல்லும் சந்தர்ப்பங்கள் கிடைத்தும், வடபகுதிக்குச்  செல்ல நீண்ட காலம் எடுத்தது.

1997 இல் பதினொரு வருடங்களின் பின்னர் சென்றவேளையிலும், அதன்பின்னர் 1999 ஆம் ஆண்டு சென்றபோதும் வடக்கிற்கு செல்ல முடியவில்லை.

2004 இறுதியில் சுநாமி கடற்கோள் அநர்த்தம் வந்தபோது, இரண்டு பெரிய கொல்கலன்களில் நிவாரணப்பொருட்களுடன் அங்கே சென்றவேளையிலும்,  வடக்கிற்கு செல்வதற்கு தயக்கம் இருந்தமையால், கிழக்கிற்கு மாத்திரம்  சென்று திரும்பிவிட்டேன்.

2009 மே மாதம் போரின் இறுதிநாட்களை அவுஸ்திரேலியா கண்டத்திலிருந்து ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.

2010 ஜனவரி மாதம் வடக்கிற்கு சென்றபோதுதான் எழுத்தாளர் கருணாகரனின் அறிமுகம் கிடைத்தது. அதன்பின்னர் அங்குசெல்லும் சந்தர்பங்களில்  கிளிநொச்சியில் அவரது இல்லம் எனது மற்றும் ஒரு இல்லமாகியது.

வெள்ளிவிழா - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 இந்தியாவின் 75வது சுதந்திரத் தினம் சில தினங்களுக்கு முன்


கொண்டாடப்பட்டது.ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் இருபத்தைந்தாவது சுதந்திர வெள்ளிவிழா கொண்டாடப்பட்ட போது ,

அதனை முன்னிலைப் படுத்தி தான் இயக்கிய படத்துக்கு வெள்ளிவிழா என்று பெயரிட்டு வெளியிட்டார் இயக்குனர் சிகரம் கே பாலசந்தர்.

படத்தின் பேர் வெள்ளிவிழா என்பதால் எதோ இந்திய சுதந்திரத்தை

முன்னிலைப் படுத்தும் கதை,படம் என்று நினைத்து விடக்கூடாது. படத்தின் ஆரம்பத்தில் 25வது இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்படும் போது கதாநாயகன் 25ஆண்டுகளுக்கு முன் தன் வாழ்வில் நடந்தவற்றை அசைபோடுவதாக கதை தொடங்குகிறது. படம் இரண்டு நாயகிகளுக்கு மத்தியில் மாட்டிக் கொண்டு சுதந்திரத்தை இழந்து தடுமாறும் நாயகனின் கதை ஆகும்.இப்படி சொன்னவுடன் கதாநாயகன் யார் என்று யூகித்து விடலாம்.ஆம் காதல் மன்னன் ஜெமினி கணேசன் தான் படத்தின் ஹீரோ.அவரின் ஜோடிகளாக ஜெயந்தி,வாணிஸ்ரீ இருவரும் நடித்திருந்தனர்.இவர்களுடன் பாலசந்தரின் நிரந்தர குரூப்பை சேர்ந்த வி கோபாலகிருஷ்ணன்,மனோரமா,எஸ் வரலஷ்மி,வீ எஸ் ராகவன்,எஸ் வீ சகஸ்ரநாமம் ,எஸ் என் லஷ்மி,ஆகியோரும் நடித்தனர்.

பாலசந்தர் படம் என்றால் நாகேஷ் அதில் நிச்சயம் நடிப்பார்.நீர்க்குமிழி படம் முதல் தொடர்ந்த இந்த உறவு கண்ணா நலமா படத்துடன் அறுந்தது.நாகேஷின் கால்ஷீட் கிடைக்காமல் விரக்தியடைந்த பாலசந்தர் வேறு வழியின்றி நகைச்சுவை வேடத்துக்கு இந்த படத்துக்கு தேங்காய் சீனிவாசனை அமர்த்திக் கொண்டார்.அதன் பிறகு ஐந்து ஆண்டுஆண்டுகள் கழித்து அபூர்வ ராகங்கள் தான் மீண்டும் இவர்களை இணைத்தது.

இலங்கைச் செய்திகள்

கடந்த ஜூலை 13 நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நாடு திரும்பினார் 

தமிழகம் முழுவதும் இலங்கை தமிழருக்கு வீடு

பிரபல பாடகர் பம்பா பாக்யா காலமானார்

 இலங்கை பிரஜைகள் சிலரின் சொத்துக்கள் பறிமுதல்


கடந்த ஜூலை 13 நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நாடு திரும்பினார் 

கடந்த ஜூலை மாதம் நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் இலங்கை வந்தடைந்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடம்பெற்று வந்த மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் உச்சமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 09ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்‌ஷ, அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 13ஆம் திகதி அதிகாலை, இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானம் மூலம் மாலைதீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

உலகச் செய்திகள்

 பாகிஸ்தான் வெள்ள அனர்த்தம்: உயிரிழப்பு 1200 ஐத் தாண்டியது

படுகொலை முயற்சி: நூலிழையில் உயிர் தப்பினார் ஆர்ஜன்டீன துணை ஜனாதிபதி

ஆங் சான் சூகிக்கு மேலும் 3 வருட சிறை

 கொர்பச்சேவ் காலமானார்


 பாகிஸ்தான் வெள்ள அனர்த்தம்: உயிரிழப்பு 1200 ஐத் தாண்டியது

பாகிஸ்தான் வெள்ள அனர்த்தத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,200ஐத் தண்டியுள்ளது. இவர்களில 400க்கும் அதிகமானவர்கள் சிறுவர்களாவர்.

பாகிஸ்தானின் தென் பகுதியே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஐம்பதாயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

திருச்சிற்றம்பலம் திரைவிமர்சனம்

 தனுஷ் நடிப்பில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் திரைக்கு வந்துள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து, ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக தனுஷை ஓடிடியில் கண்டு ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள், திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் தனுஷை திரையில் காண மிகுந்து எதிர்பார்ப்புடன் இருந்தனர். அத்தகைய எதிர்பார்ப்பை திருச்சிற்றம்பலம் முழுமையாக பூர்த்தி செய்தாரா? இல்லையா? விமர்சனத்தில் காண்போம்..

கதைக்களம்

டெலிவரி பாய் வேலை செய்து வரும் {திருச்சிற்றமபலம்} தனுஷின் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு விபத்தின் காரணமாக தனது அப்பா பிரகாஷ் ராஜிடம் கடந்த 10 வருடமாக பேசாமல் கடும் கோபத்தில் இருந்து வருகிறார். சிறு வயதில் இருந்தே தனுஷின் நெருங்கிய தோழியாக இருக்கும் {ஷோபனா} நித்யா மேனன் தனுஷுடைய நல்லது கெட்டதில் பங்கெடுத்துக்கொள்கிறார்.

திருச்சிற்றம்பலம் திரைவிமர்சனம் | Thiruchitrambalam Review

ஒரு வீட்டிற்கு உணவை டெலிவரி செய்ய செல்லும் தனுஷ் தனது பள்ளிவருவ ஒருதலை காதலி ராஷி கன்னாவை எதிர்ச்சியாக சந்திக்கிறார். அதன்பின், இருவரும் மீண்டும் பழைய நட்பின் அடிப்படையில் பேச துவங்குகிறார்கள். இருவரும் சற்று நெருங்கி பழக துவங்கியவுடன் தனது காதலை ராஷி கன்னாவிடம் கூறுகிறார் தனுஷ். ஆனால், தனுஷின் காதலை ராஷி கன்னா ஏற்றுக்கொள்ளவில்லை.

இதன்பின், சில நாட்கள் காதல் தோல்வியில் வாடி வரும் தனுஷ், இரண்டாவது முறையாக வேறொரு பெண்ணுடன் காதலில் விழுகிறார். ஆம், தனது தாத்தா பாட்டியின் அழைப்பை ஏற்று உறவுக்கார திருமணத்திற்காக ஊருக்கு செல்லும் தனுஷ், அங்கு பிரியா பவானி ஷங்கரை சந்திக்கிறார். பார்த்தவுடன் அவரை காதலிக்க துவங்கும் தனுஷிற்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.

திருச்சிற்றம்பலம் திரைவிமர்சனம் | Thiruchitrambalam Review

தான் காதலித்து இரு பெண்களும் தன்னை காதலிக்க வில்லை என்று புலம்பும் தனுஷிடம், அவரது தாத்தா பாரதிராஜா ஒரு யோசனை கூறுகிறார். உன் சிறு வயதில் இருந்து உனக்காக, உன்னுடன் மட்டுமே இருக்கும் {ஷோபனா} நித்யா மேனனை காதலிக்க சொல்கிறார். இதன்பின், சற்று தயக்கத்துடன் நித்யா மேனனை காதலிக்க துவங்கும் தனுஷ், சமயம் பார்த்து தனது காதலை நித்யா மேனனிடம் கூறுகிறார். நித்யா மேனன் தனுஷின் காதலை ஏற்று கொண்டாரா? இல்லையா? தனது தந்தையின் மீது தனுஷுக்கு இருந்த கோபம் தணிந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை..

படத்தை பற்றிய அலசல்

வழக்கம் போல் நடிப்பில் 100% ஸ்கோர் செய்துள்ளார் தனுஷ். செண்டிமெண்ட், காதல், காமெடி, சோகம் என அனைத்திலும் தனித்துநிற்கிறார். தனுஷின் தோழியாக வரும் நித்யா மேனன் தனுஷை மிஞ்சும் அளவிற்கு பிரமாதமாக நடித்துள்ளார். அதற்க்கு தனி பாராட்டு. இயக்குனர் பாரதிராஜாவின் நடிப்பு சிறப்பு. இப்படியொரு தாத்தா நமக்கு இல்லையே என்று ஏங்கும் அளவிற்கு அருமையாக நடித்துள்ளார்.

தந்தையாக வரும் பிரகாஷ் ராஜ் ரசிகர்களின் மனதை வென்றுவிட்டார். ராஷி கன்னா, பிரியா பவானி ஷங்கர் இருவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்கள். நித்யா மேனனின் தம்பிய வரும் நடிகர் பப்பு கிளைமாக்ஸில் க்ளாப்ஸை அள்ளிவிட்டார்.

திருச்சிற்றம்பலம் திரைவிமர்சனம் | Thiruchitrambalam Review

இயக்குனர் மித்ரன் ஆர். ஜவஹரின் இயக்கம் பக்கா. திரைக்கதை எந்த ஒரு இடத்தில் தொய்வு இல்லாமல் ஃபீல் குட்டாக நகர்கிறது. வசனங்கள் படத்திற்கு பலம். நகைச்சுவை அதைவிட பிரமாதம். அனிருத்தின் பாடல்கள், பின்னணி இசை படத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்கிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவிற்கு தனி அப்லாஸ். பிரசன்னா ஜி.கேவின் எடிட்டிங் சூப்பர்.

க்ளாப்ஸ்

தனுஷ், நித்யா மேனன் நடிப்பு

பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிப்பு

மித்ரன் ஆர். ஜவஹரின் இயக்கம், திரைக்கதை

அனிருத்தின் பாடல்கள், பின்னணி இசை

வசனம்

பல்ப்ஸ்

சிறு சிறு தவறுகள் ஆங்காங்கே இருந்தாலும், குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு பெரிதாக ஒன்றுமில்லை

மொத்தத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்துள்ளது திருச்சிற்றம்பலம்    நன்றி cineulagam

திருச்சிற்றம்பலம் திரைவிமர்சனம் | Thiruchitrambalam Review