யாழ்ப்பாணம் - ஒஸ்ரேலியா மெல்போர்ன் நியூ விக்ரேர்ஸ் குணம் அண்ணா விடைபெற்றார்.

 .


யாழ்ப்பாணம் என்றால் அங்கே பல அடையாளச்சின்னங்கள் எம் மனக்கண்ணில் எழும். அவை பாரம்பரியத்திற்குரியவையாகவும் நவீனத்துவமானவையாகவும் அமைந்துள்ளன.
1970கள் யாழ்ப்பாணம் பல்வேறு விதமான நவீன தொழில் நுட்பங்களை தம்மகத்தே உள்வாங்கிக் கொண்டிருந்த காலகட்டம்.
இசைப்பிரியர்களை மகிழ்வித்துவந்த இசைக்களஞ்சியமாக யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது நியூ விக்ரேர்ஸ்.
யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியில், யாழ்.பொது மருத்துவமனைக்குப் பின்புறமாக அமைந்திருந்தது.
அந்தக்காலகட்டத்தில் திரைப்படப்பாடல்கள் கேட்பதென்றால் இலங்கை வானொலி ஒன்றே வழியாக இருந்தது.
வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்களைக் கேட்கும் இசைப் பிரியர்கள் மீண்டும் அப்பாடல்களைக் கேட்பதற்கு யாழ்ப்பாணத்தில் பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது நியூ விக்ரேர்ஸ் நிறுவனம்.
தென்னிந்தியாவில் வெளிவரும் திரைப்படங்களின் பாடல்கள் 45RPM இசைத்தட்டுக்கள், LP இசைத்தட்டுக்கள் என்பவற்றில் வெளியாகும்.
அந்த இசைத்தட்டுக்களை யாழ்ப்பாண மக்கள் பார்க்கக்கூடியதாகவும், அதிலிருந்து பாடல்களை ஒலிப்பதிவு நாடாக்களில் பதிவு செய்து கொள்வதற்கும் வழி வகுத்தவர்கள், முன்னோடிகள்.
இசைப்பிரியர்களின் இசைத்தாகத்தைத் தீர்ப்பதில் பெரும்பணியாற்றியவர்கள்.
தினமும் மாலை வேளையில் ஒரு இசை இரசிகர் கூட்டம் நியூ விக்ரேர்ஸ் முன்பாகக் கூடி நிற்பார்கள்.

பக்குவம் பேணி பருகுவோம் சுகத்தை !



மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மெல்பேண் ... அவுஸ்திரேலியா 



உடல்நலம் ஓம்பினால் உளநலன் பெறலாம்
உடல்நலம் ஓம்பினால் உவப்புடன் வாழலாம்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் இருப்பதால்
உடம்பினை ஓம்புதல் உயர்வினை அளிக்கும்  !

உள்ளம் இருப்பதால் உடல்நலம் பேணு
உன்னை இயக்க உடல்நலம் தேவை
நம்மைப் படைத்தவன் உள்ளம் இருப்பான்
நலமாய் உடம்பை பார்த்திடல் பொறுப்பே !

சுத்தம் என்பதை நித்தம் பேணு
தொற்று வியாதி கிட்டவும் வாரா
கையைக் கழுவு மெய்யைக் கழுவு
காலம் முழுவது காத்திடு நலனை  !

மனதைக் காத்தால் மருந்தும் வேண்டா
மருத்துவம் என்பது வாழ்வின் துணையே
விருந்தாய் மருந்தை கொண்டுமே இருந்தால்
விட்டுமே அகலும்  விரட்டிடும் வியாதி  !

மாண்புறு ஆண்டகை இராயப்பு யோசோப்பு - மரியசேவியர் அடிகளார் நினைவேந்தல்

 கானா பிரபா

ம்.jpg


மாண்புறு ஆண்டகை இராயப்பு யோசோப்பு  மற்றும் கலைத்தூது மரியசேவியர் அடிகளார் ஆகியோரது நினைவேந்தலை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வழியாக நடத்தியிருந்தோம். 

இந்த நிகழ்வில் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திருமதி சோனா பிறின்ஸ், மெய்வெளி ஊடக இயக்குநர்  மற்றும் திருமறைக் கலாமன்றத்தின் முக்கிய செயற்பாட்டாளர் திருமதி பிரேமலதா சாம் பிரதீபன், அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிப் படைப்பாளர் திரு ஏ.ஜெயச்ச்ந்திரா ஆகியோர் கலந்து தம் பகிர்வை வழங்கியிருந்தனர். நிகழ்ச்சி ஒருங்கமைப்பு கானா பிரபா

இந்த நிகழ்வின் ஒளிப்பகிர்வு






படித்தோம் சொல்கின்றோம்: வி.எஸ். கணநாதன் எழுதிய சத்தியம் மீறியபோது செய்தி ஊடகவாழ்வின் ஊடாக வாசிப்பு அனுபவம் ! முருகபூபதி


நே
ற்றைய செய்தி, நாளை வரலாறாகிவிடும்.


செய்திகளே படைப்பிலக்கியமாக உருமாறும்போது, அதனை வாசிக்கும் வாசகர்களுக்கு கிட்டும் வாசிப்பு அனுபவத்தில்,  தங்களையும் இனம்காணத்தூண்டும். சில வேளைகளில்  தம்மைத்தாமே சுயவிமர்சனம் செய்யவும் வழிகாண்பிக்கும்.

மெல்பனில் வதியும் கலை, இலக்கிய ஆர்வலர் வி. எஸ். கணநாதன், இலங்கையில் புகழ்பெற்ற கட்டிடக்கலைஞரும், குறிப்பிடத்தகுந்த குத்துவிளக்கு ஈழத்து திரைப்படத்தின் தயாரிப்பாளருமான  வி. எஸ். துரைராஜாவின் சகோதரர்.  இவரது மற்றும் ஒரு சகோதரர் பல் மருத்துவர் கருணாகரனின் துணைவியார் அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் எழுத்தாளர் தேவகியின் கணவர்.

கணநாதனின் மனைவி சகுந்தலா ஆங்கிலத்தில் கதைகளும்


நாவல்களும் எழுதியிருப்பவர்.

இவ்வாறு  கலை, இலக்கிய குடும்பப்பின்னணியில் வந்திருக்கும் கணநாதன், தீவிர வாசகர்.  அவர் இலங்கையில் வாழ்ந்த காலத்திலும், பின்னாளில் அங்கு போர்மேகங்கள் சூழ்ந்ததையடுத்து சென்னைக்கு குடும்பத்தினருடன் குடியேறியபின்னரும், அங்கிருந்து அவுஸ்திரேலியா மெல்பனுக்கு வந்து  இங்கு நிரந்தரமாகியதையடுத்தும் வாசிப்பு ஆர்வத்தை மட்டுப்படுத்திக்கொள்ளாமல், எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய எழுத்தாளர் விழாக்கள், இலக்கிய சந்திப்புகள், வாசிப்பு அனுபவப்பகிர்வு  முதலான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது கலை, இலக்கிய ஆர்வத்தை மேலும் வளர்த்துக்கொண்டவர்.

அருகிலிருக்கும் அன்புத்துணைவியோ, ஆங்கிலத்திலும் எழுதி கவனிக்கப்பட்ட படைப்பாளியாகியிருக்கும் சூழலில், தானும் இலக்கியப்பிரதிகள் எழுதிப்பார்க்கலாம் என்று முயன்றவர்தான்  திரு. கணநாதன்.

தமிழ் சமூகத்தில்  மாமன் -- மாமியார்   மருமகள் – மருமகன் உறவு நெருடல்களையும் ஊடல், கூடல், உரசலையும் கொண்டது. மாமியார் – மாமனார் மெச்சும் மருமகன் -  மருமகள்  பாக்கியசாலிகள்தான்.

தமிழ் சமூகத்தில் கூட்டுக்குடும்ப அமைப்பு முறையில் அவ்வாறு பாக்கியம் பெற்றவர்களின் கதைகள் ஏராளம்.

மல்லிகை ஜீவாவின் வாழ்வில் சுவாரசியமான பக்கங்கள் --- அங்கம் 10 சிவன் - நக்கீரன் முதல் தொடரும் எழுத்தாளர் முரண்பாடு ! காடு வரை பிள்ளை , கடைசி வரை யாரோ…? முருகபூபதி


 

                                                                       ழுத்தாளர்களுக்கிடையில் 


நட்பும், பகைமையும், ஊடலும்- கூடலும் உரசலும் தவிர்க்கமுடியாத அம்சங்கள்.

கொள்கை , கருத்தியல்  ரீதியாக உருவாகும் முரண்பாடுகளுக்கும் காழ்ப்புணர்வின் நிமித்தம் தோன்றும் பகைமைக்கும் வித்தியாசம் இருக்கிறது.

 

எழுத்தாளர்களுக்கிடையே இந்த முரண்பாடுகளின் தோற்றுவாய் சிவபெருமானும், நக்கீரனுக்கிடையில் வந்த


வாதம்தான்.

 

பாண்டிய மன்னனின் மனைவியின்  கூந்தலின் மணம் இயற்கையா..? செயற்கையா..? என்பதில் தொடங்கி சிவனின் வன்முறையில் ( நெற்றிக்கண்ணால் ) முடிந்த கதை.

 

 “ பிறர்  மனைவியின் கூந்தலை முகர்ந்து பார்க்கும் பழக்கம் தனக்கில்லை   “ என்று புலவன் நக்கீரன்  திருப்பிக் கேட்டிருந்தால், கதையே வேறுவிதமாக மாறியிருக்கும் !

 

எங்கள் எழுத்தாளர்களின்  மத்தியில் தோன்றிய கருத்து முரண்பாடுகளுக்கு சித்தாந்தங்களும் கருத்தியல்களும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்புகளுமே  பிரதான காரணமாக அமைந்தன !

 

மல்லிகை ஜீவா, சார்ந்திருந்த இடதுசாரி இயக்கத்தினுள்ளேயே  அவருக்கும் ஒரு சிலருக்கும் இடையில்  கோபதாபங்கள் நீடித்திருக்கிறது.

 

கொழும்பில் C. T. O. வில் பணியாற்றிய தோழர் பரராஜசிங்கம் நயினாதீவைச்சேர்ந்தவர்.  மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகித்தவர். தோழர் வி. பொன்னம்பலம்,  பின்னாளில் தினகரன் ஆசிரியரான சிவா. சுப்பிரமணியம் ஆகியோரின் நெருங்கிய சகா.

சட்டத்தரணி பேரின்பநாயகம் - அஞ்சலிக்குறிப்பு வாழ்வும் பணியும் ஏப்ரில் 02 ஆம் திகதி முதலாவது நினைவுநாள் வர்மா


ருவருடைய வாழ்வியல் சார்ந்த விழுமியங்களையும், அவரைப்பற்றியும் அறிய  வேண்டுமானால்  அவருடைய நேரடியான நடை, உடை, பழக்கவழக்கங்களைமட்டுமன்றி அவர் சார்ந்த குடும்பத் தலைமுறையையும் சரிவர  அறிந்கொள்ள வேண்டும்.

 

 அதற்காகஅந்தஒருவர்  சார்ந்த குடும்பப் பின்னணியுடன்                  கணிப்பது மேலும் அவருடைய பெருமைக்கு அணிசேர்ப்பதாக அமையும். அமரர்  செல்வத்துரை பேரின்பநாயகம்                 அவர்களின் வாழ்க்கையினையும் அவ்வாறு இணைத்துப்             பார்ப்பதன்மூலம் அவருடைய வாழ்வின் சிறப்பம்சங்களை யும் அறிந்துகொள்ளலாம்.

 

சட்டத்தரணி செல்வத்துரை பேரின்பநாயகம்   கடந்த மார்ச்


மாதம்  02 ஆம் திகதி வடபுலத்தில் வதிரியில் மறைந்தார்.              

 

 

     ஈழவளநாட்டின் தலையாக திகழ்வது வடமராட்சி. வடமராட்சியில்  நீண்ட பாரம்பரியத்தையும் நயத்தக்க நாகரீகத்தையும் கொண்ட வதிரிக்கிராமத்தின்   மிகவும் பிரபலமான சமூக           சேவையாளரும் ஆசிரியருமான அமரர் ஆ. ம. செல்வத்துரை -    மீனாட்சியம்மா   தம்பதியருக்கு 1937 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 28 ஆம் திகதி பேரின்பநாயகம் அவர்கள் பிறந்தார்.

 

வதிரியில் பூவற்கரையில் அண்ணமார் வழிபாடு இருந்தது.            அப்போது அந்த அண்ணமார் பிள்ளையாராக மாறுவார்  என  எழுதியவர் கவிஞ‌ர்  ஆழ்வார். ஆழ்வாரின் மகன் மயிலு சிறந்த ஓவியர்.              மயிலுவின் மகன் செல்லத்துரையின் சமூக சேவையைப்              பாராட்டி "சமூகஜோதி" எனும் கெளரவம் வழங்கப்பட்டது.               செல்லத்துரையின் மகன்   பேரின்பநாயகம் எமது சமூகத்தின் முதலாவது சட்டத்தரணி.

 

 அமரர் பேரின்பநாயகம் சட்டப் புத்தக‌ங்களை மட்டும் படிக்கவில்லை. கலை, கலாசாரம், பண்பாடு, இலக்கியம்,  சமூகம், அரசியல் போன்ற பல்வேறு புத்தகங்கள் அவரது வீட்டு வாசிகசாலையில் உள்ளன. இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழையும் அமரர் பேரின்பநாயகம் விட்டுவைக்கவில்லை.

 யாழ்ப்பாணத்திலும்,கொழும்பிலும் நடைபெறும் சகல நிகழ்ச்சிகளிலும் தவறாது கலந்துகொள்வார்.

ஈழத்தின் கலைக் காவலர் மரிய சேவியர் அடிகளார்

165874699_521891862135327_7665863695597949530_n.jpeg

  கானா பிரபா


சொந்த இனத்தில், மொழியில், மதத்தில் கலாசாரத்தில் பற்று வைக்க வேண்டும்; அப்பற்று, வெறியாக மாறிவிடக்கூடாது. ஒவ்வொருவருடையதும், ஒவ்வொன்றினதும் தனித்துவம் போற்றப் பட வேண்டும் . அத்தனித்துவம், பொதுநலனுடனும், பொது நோக்குடனும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. எந்த ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளும் நில்லாது, தற்பண்பு, தற்சிறப்பு, தன்னிறைவு பேணிக்காத்து வாழ்வை நெறிப்படுத்துவதே உயர்மானிடம்.” – மரிய சேவியர் அடிகளார் ( கலைமுகம் ஆடி – புரட்டாதி 1994)

ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் திருமறைக் கலாமன்றத்தின் செயற்பாடுகளை பத்திரிகை வழி அறிந்திருந்ததோடு சரி, அவ்வப்போது அவர்களது அரங்காற்றுகள் குறித்து கட்டுரைளும், செய்திகளுமாக வரும். ஒரு விதத்தில் தெளிவு இருந்தது. மதம் கடந்து ஒரு பொதுமையான கலை முயற்சிச் செயற்பாட்டில் இயங்குகின்ற இயக்கம் என்ற விளக்கம் மனதில் பதிந்திருந்தது.
இருபது வருடங்களுக்கு முன்னர் வானொலியில் “ஈழத்து முற்றம்” என்ற ஈழத்துக் கலை, இலக்கியப் பதிவுகள் சார்ந்த வானொலிச் சஞ்சிகையை நடத்திய போது ஒரு நேயர் இறுவட்டு ஒன்றைக் கொண்டு வந்து தந்தார். அருட் தந்தை மரிய சேவியர் அடிகளார் அவர்கள் நெறிப்படுத்திப் பல்வேறு நாட்டுக் கூத்துப் பாடல்களை அறிமுகப்படுத்திப் பாடிய அந்த இசைப் பெட்டகம் ஈழத்து முற்றம் நிகழ்ச்சியில் ஒரு புதுப் பரிமாணத்தை நேயர்களுக்கு அறிமுகப்படுத்த ஏதுவாக இருந்தது. அன்றிலிருந்து மரிய சேவியர் அடிகளார் மீதான நன்மதிப்பைத் தூர இருந்தே மனதில் பதித்து வைத்துக் கொண்டேன்.
டான் தமிழ் தொலைக்காட்சி அவருக்கு “சாதனைத் தமிழன்” என்ற விருதை வழங்கிக் கெளரவித்த தருணம் அடிகளாரை ஒரு பேட்டி செய்ய ஆசைப்பட்ட வேளை அவர் உடல் நலம் குன்றிப் பேச முடியாத சூழலுக்குச் சென்று விட்டார்.

முருகபூபதியின் பறவைகள் நாவல்


 “ எல்லாவகையான மனிதர்களும் நிறைந்தது தான் நம் சமூகம். நாம் யாராக அதில் நிற்கப்போகிறோம் என்று நம்மை ஒரு படைப்பு சிந்திக்க வைப்பதுதான் ஒரு சிறந்த இலக்கியம் !  “

 

                  மதிப்பீடு  :  விஜிராம் – அவுஸ்திரேலியா

 


"எங்கெங்கோ வானத்தில் வட்டமிட்டாலும் பறவை இரை தேட தரையிறங்கி வந்துதான் ஆகவேண்டும்" என்று முன்னுரையில் ஒரு தத்துவார்த்த வாக்கியத்தோடு தன்னுடைய முதல் நாவலை சுவாரஸ்யமாக்கியிருக்கிறார் ஆசிரியர் முருகபூபதி அவர்கள்.   பறவைகள்  2001 ஆம் ஆண்டு எழுதப்பட்ட நாவல்.

உறவுகளிடையே உள்ள ஆத்மார்த்தமான பந்தத்தையும் உறவுகளின் சிக்கல்களையும் இந்த நாவல் அழகுற காட்சிப்படுத்தியுள்ளது. இனப்போராட்டம், யுத்தம், அதனால் இடப்பெயர்வு, வர்க்க அரசியல், ஜாதி மற்றும் தீண்டாமை போன்ற பிரச்சினைகளுக்கு இடையில் இலங்கை தமிழ் மக்களின் இரண்டு சகாப்தத்திற்கு முந்தைய வாழ்வை


படம்பிடிக்கிறது நாவல்.

 

யாழ்ப்பாணத் தமிழில் படைக்கப்பட்டுள்ளது சுவையாகவுள்ளது. நீர்கொழும்பை மையமாக வைத்து இயங்கும் இந்த நாவல், நம்மை நீர்கொழும்பில் ஒவ்வொரு வீதியிலும், கடற்கரையிலும், அங்குள்ள கோவில்களிலும் ஒரு மெய்யான தரிசனத்தைத் தருகிறது.

 

பெற்ற தாய் தந்தையையும், இயக்கத்தில் தம்பியையும் இழந்து, பாதியில் விடப்பட்ட  தாதிப்பயிற்சி, கருகிப்போன காதல், அங்கொன்றும் இங்கொன்றுமாக தடுக்கும் நரைமுடி என்று மாமாவிற்குப் பின் தன்னுடைய எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாக தொக்கிநிற்கும் முதிர் கன்னி தேவகி நாவலின் நாயகி.

 

கலப்புத்திருமணம் செய்துகொண்ட பெற்றோரை தன் சொந்த தாய்மாமனான ஓய்வு பெற்ற தமிழாசிரியர் சிற்றம்பலத்தார் வெறுத்து ஒதுக்கியிருப்பார். அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மூத்தவன் பாலன்,  திருமணமாகி குடியுரிமைக்காக சுவிஸ் தேசத்தில் காத்திருக்கிறான். இளையவன் குமார், தேவகியை காதலித்து திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குறுதியும், முத்தங்களும் தந்த பின், தந்தையின் சூதினால் மேல் படிப்பிற்காக ஆஸ்திரேலியா குடியுரிமை பெறவேண்டி தன்னலத்தினால் அங்கேயே புனிதா எனும் பெண்ணை மணந்து வாழ்கிறான்.

சிட்னியில் சிலப்பதிகார விழா 10/04/2021






 

இயேசுபிரான் கீர்த்தனைகள்


இயற்றியவர் - பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்


1)

அவதாரம் செய்தார் அம்மா - இயேசுபிரான்


அவதாரம் செய்தார் அம்மா

தவமான பெத்லகாமில் இதமான சுபநேரம்

அவதாரம் செய்தார் அம்மா

                                    (அவதாரம்)

 

புவனம் உய்ய அன்னை மேரி பூரிப்பில்

இன்பங் கொள்ள

பவவினையை அவித்தெமக்குப் பாவமன்னிப்(பு)

அருளிக் காக்க

                                    (அவதாரம்)

பரிசுத்த ஆவிவந்து கரிசனையோ(டு) ஆசி நல்க மரியாளும் மகிழச் சூசை மைந்தன்முகம் ஒளியிற் கால புரியாத புதிராய் விண்மீன் வழிகாட்ட மாந்தர் நாடித் தரிசித்தே வணங்கி நிற்கச் சங்கைமிகு பாலனாக

                                         அவதாரம்)

 

 

 

அப்புவிட அப்புவும்,பேரனும்..! - பசுவூர்க்கோபி


கந்தையா அண்ணரும்

காசிம் நானாவும்

றம்பண்டா மல்லியும்

ஒரு குடும்பமாய்

திரிந்த காலம்

அப்போது ..

ஒருநாளும்

நான் கண்டதில்லை 

சண்டையை..

 

புத்த பெருமானுக்கும் 

நபிகள் நாயகத்துக்கும்

ஜேசு பிரானுக்கும் 

சித்தர் சிவனுக்கும்-மதம் 

பிடித்ததாய்..

அப்போது..

ஒருநாளும்

 நான் கண்டதில்லை 

சண்டையை..

 

இலங்கை முஸ்லீம் சமூக எழுத்தாளர் திரு ஜுனைதா ஷெரீப் பேசுகிறார்

 கானா பிரபா


ஈழத்தில் எண்பது, தொண்ணூறுகளில் வார வெளியீடுகளைப் படித்தவர்களுக்கு மறக்க முடியாத எழுத்துலக ஆளுமைகளில் ஒருவர் எழுத்தாளர் ஜூனைதா ஷெரீப் அவர்கள். இவர் கிழக்கிலங்கையின் காத்தான்குடியைச் சேர்ந்தவர்.

சிறுகதைகள், நாவல்கள், வானொலி நாடகங்கள், சிங்களத்தில் இருந்து தமிழ் மொழி பெயர்ப்பு இலக்கியம் என்று தன் படைப்பாற்றலை வெளிக் கொணர்ந்தவரின் சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள்.  வானொலி நாடகப் பிரதி என்று நூலுருப் பெற்றிருக்கின்றன.

இலங்கை முஸ்லீம் எழுத்தாளர் சமூகத்தில் அதிகமான நாவல்களை எழுதியவர் என்று கொள்ளப்படுபவர். நான்கு சாகித்திய விருதுகளோடு, பல கெளரவ விருதுகளையும் தன் எழுத்துப் பணிக்காகப் பெற்றிருக்கிறார்.

2011 ஆம் ஆண்டில் நான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக எழுத்தாளர் ஜூனைதா ஷெரீப் அவர்களைப் பேட்டி கண்டிருந்தேன். இன்றைய YouTube யுகத்தின் ஒலி ஆவணப்படுத்தலாக இந்தப் பேட்டியை இப்போது இணைய ஊடக வழி பகிர்கின்றேன்.

 




எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 35 எழுதித்தீராத பக்கங்களில் சில ஆளுமைகள் பற்றிய குறிப்புகள் ! மனக்குகை ஓவியமாக வாழும் அழியாத சித்திரங்கள் ! ! முருகபூபதி



சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தபோதுதான்  1972 ஆம் ஆண்டு வீரகேசரியில் நீர்கொழும்பு பிரதேச நிருபர் வேலை கிடைத்தது. 

அதனால், அவ்வப்போது கொழும்பு கிராண்ட்பாஸில் அமைந்த வீரகேசரி பணிமனைக்குச்செல்வேன்.  பின்னாட்களில் முதலில் ஒப்புநோக்காளராகவும் , துணை ஆசிரியராகவும்  பணியாற்றி, 1987 இல்  விடைபெற்றிருந்தாலும்,  அந்த ஆசிரிய பீடம் இன்னமும் எனது மனக்கண்களில் அழியாத காட்சிதான்.

பிரதான வாயில்,  அங்கிருந்த கண்ணாடி யன்னல்கள், மேலே சுழன்றுகொண்டிருக்கும் மின்விசிறிகள், இடதுபுறம் சுவரில் பொருத்தப்பட்டிருந்த வானொலிப்பெட்டி, அச்சுக்கோப்பாளர் பிரிவுக்குச்செல்லும் திசையில் இடது பக்க மூலையிலிருந்த தண்ணீர் குடுவை. ஆசிரியபீடத்தில்  செய்தி ஆசிரியர் டேவிட் ராஜூவின்  மேசைக்கு இருமருங்கும்  இருந்த துணை செய்தி


ஆசிரியர்களின் மேசைகள், அவற்றுக்குப்பின்னாலிருந்து, வெளியூர் நிருபர்கள் எழுதிய செய்திகளை அடிமட்டம் வைத்து அளந்து பார்த்து அதற்கான சன்மானத்தை கணக்குப்பார்க்கும் செல்வி நிர்மலா மேனன் அமர்ந்திருக்கும் மேசை,  வலதுபுறம் சிரேஷ்ட துணை ஆசிரியர் திருமதி அன்னலட்சுமி இராஜதுரை அமர்ந்து செய்திகளை செம்மைப்படுத்தும் மேசை, ஓவியர்கள் மொராயஸ், சந்திரா, ஜெயா, ஶ்ரீகாந்த் ஆகியோர் அமர்ந்து படங்கள் வரையும் மேசைகள், ஆசிரியபீடத்தின் நடுவே வட்ட வடிவில் துணை ஆசிரியர்கள் அமர்ந்திருக்கும் வட்ட மேசை என்பனவெல்லாம் மனக்கண்ணில் இன்றும் அழியாத சித்திரம்தான்.

எனது இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடரில் சிலரைப்பற்றி சொல்லாமல், கடந்துசெல்ல இயலாது.

க. சிவப்பிரகாசம் 

1977 -1983 காலப்பகுதியில் வீரகேசரி  பிரதம ஆசிரியர்                      க. சிவப்பிரகாசம் அவர்களுக்கு அருகாமையிலிருந்து பணியாற்றிய  என்போன்றவர்களுக்கு  அவரது பொறுமை, நிதானம் வியப்பானதுதான்அச்சமயம் அவருக்கு ஆசிரிய பீடத்தில் பக்க பலமாக இருந்தவர்களின் பணியும் விதந்து போற்றுதலுக்குரியதுதான்.

தேர்தல் என்பது திருவிழா திரவியம் தேடும் பெருவிழா !



மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மெல்பேண் ... அவுஸ்திரேலியா 



தேர்தல் என்பது திருவிழா
திரவியம் தேடும் பெருவிழா
வென்றால் பொக்கிஷம் நிச்சயம்
தோற்றால் பொக்கிஷம் அன்னியம் !

பொய்களே உண்மையாய் குவிந்திடும்
உண்மைகள் ஒதுங்கியே நின்றிடும்
கண்ணியம் காற்றிலே பறந்திடும்
கருத்துகள் மக்களை உலுக்கிடும் !

நல்லவர் தேர்தலில் வந்திடார்
வல்லவர் வாய்மையை கண்டிடார் 
கள்ளமும் கபடமும் துள்ளிடும்
கயமைகள் கட்டிலில் அமர்ந்திடும் !

மக்களின் மனங்களில் மாயையை
இருத்திடும் வித்தையை அறிந்தவர்
மாநில முதல்வராய் வந்துமே
வாழ்ந்திடச் செல்வத்தை ஈட்டுவார் !

சிலப்பதிகார விழா

 


சிட்னி / மெல்பேர்னில் நடைபெறும் நிகழ்ச்சிகள்..

சிட்னியில்  நடைபெறும் நிகழ்ச்சிகள்..

 

 

 

10/04/2021

Sat

சிலப்பதிகார விழா - மாலை 6 மணி சிட்னி ஸ்ரீ துர்க்கா ஆலய மண்டபம் - மாலை 5.30 மணி

 

 

 

10/04/2021

Sat

திருக்குறள் மனனப் போட்டிகள்  பரிசளிப்பு நிகழ்ச்சி 2020

மாலை 8 மணி சிட்னி ஸ்ரீ துர்க்கா ஆலய மண்டபம்

 

10/04/2021

Sat

சமய அறிவுப் போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி 2020

மாலை 8 மணி சிட்னி ஸ்ரீ துர்க்கா ஆலய மண்டபம்


மெல்பேர்னில் நடைபெறும் நிகழ்ச்சிகள்..


ஆரோக்கியம் என்பது ஆனந்தமான வாழ்வாகும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ...  அவுஸ்திரேலியா

 

உடல்நலம்மனநலம்சமூகநலன் சிறப்பாய் இருந்தால் ஆரோக்கியம் என்பது அழகாக மலர்ந்துவிடும். ஆரோக்கியம் காத்திட வேண்டும் என்பதுதான் உலக சுகாதார அமைப்பினது முக்கிய நோக்கமாகும். ஆரோக்கியம் என்பதுதான் உலகத்தின் அத்திவாரம் ஆகும். " நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் " என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் அந்த நோயற்ற வாழ்வினை வாழ்கிறோமா என்பதுதான் பெருங் கேள்வியாய் தொக்கி நிற்கிறது. நோயற்ற சமூகம் என்பது உலகம் முழுவதும் வரவேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் தலையாய நோக்கம் எனலாம். அதற்காக உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு காலகட்டத்திலும் எவை எவை முக்கியதுவத்துக்கு உட்படுத்தப் படவேண்டுமோ அவையனைத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு முயன்று வருகிறது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

  உலகில் எந்தக் கோடியில் மக்கள் வாழ்ந்தாலும் - அவர்கள் எந்த இனமாக , எந்த மதமாகஎந்த கலாசாரம் பண்பாடுகளை உடையவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் உலகப் பந்திலே உலக மக்கள் என்னும் வடத்துக்குள்ளேதான் வருகிறார்கள். நிறத்தால்உருவத்தால் வேறு பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் உடலும் இருக்கிறது. அந்த உடலை இயக்க உயிரும் இருக்கிறது. அதனால் அவர்கள் அனைவரும் நலத்துடன் வாழ்ந்தால் உலகமே நலமாக இருக்கும் என்பதுதான் முக்கியம். இக்கருத்தை மூலமாக்கியே உலக சுகாதார அமைப்பு " உலக சுகாதாரத்தை மையமாக்கி உலகசுகாதார தினத்தை " வெளிச்சமிட்டுக் காட்டுகிறது எனலாம்.

இலங்கைச் செய்திகள்

 ஸஹ்ரானின் கொள்கைகளை பரப்பிய இருவர் உள்ளிட்ட நால்வர் TID கைது

ஜேர்மன், சுவிஸிலிருந்து 24 இலங்கையர் நாடு கடத்தல்

உலக நீதி அரங்கில் தமிழரின் முதல் சாட்சி இராயப்பு ஜோசப்

வடமாகாண சுகாதார தொண்டர்களை ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் உள்ளீர்க்க உறுதி


ஸஹ்ரானின் கொள்கைகளை பரப்பிய இருவர் உள்ளிட்ட நால்வர் TID கைது

ஸஹ்ரானின் கொள்கைகளை பரப்பிய இருவர் உள்ளிட்ட நால்வர் TID கைது-4 Including 2 Suspects Arrested by TID-Spreading Extremism & Zahran Hashim's Ideology

சமூக வலைத்தளங்கள் ஊடாக கடும்போக்குவாத மற்றும் ஸஹ்ரான் ஹாஷிமின் கொள்கைகளை பரப்பியமை தொடர்பில் இருவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 31 வயதான ஒருவரும், திஹாரியைச் சேர்ந்த 32 வயதான ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.