நவாலி புனித பேருவானவர் தேவாலயத்தின் மீதான விமானத்தாக்குதல் 1995 – ஜூலை.
வடமராட்சி
நாகர்கோவில் மகாவித்தியாலயம் மீதான குண்டுத்தாக்குதல் 1995 – செப்டெம்பர்.
இலங்கை சுதந்திரம்பெற்ற காலம் முதல் அரசியல் படுகொலைகளும் இனரீதியான படுகொலைகளும் நீடித்துகொண்டிருப்பதை அவதானித்து வருகின்றோம்.
தமது கணவர்மார் படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஆட்சி அதிகாரத்திற்கு
வந்த இரண்டு பெண்களின் பதவிக்காலத்திலும் அரசியல் படுகொலைகளும், இன ரீதியான படுகொலைகளும்
குறைவின்றி தொடர்ந்தன.
1959 ஆம் ஆண்டு பிரதமராக பதவியிலிருந்த எஸ். டபிள்யூ. ஆர். டீ
. பண்டாரநாயக்கா, இதே செப்டெம்பர் மாதத்தில் அவரால் வளர்த்துவிடப்பட்ட பௌத்த பிக்குகளின் சதியினால் சுட்டுக்கொல்லப்பட்டபோது, எனக்கு எட்டு வயது. அவ்வேளையில் சரஸ்வதி பூசை காலம்.
எங்கள் நீர்கொழும்பு விவேகானந்தா வித்தியாலய தலைமை ஆசிரியர்
பண்டிதர் மயில்வாகனம், சரஸ்வதி பூசை நிகழ்ச்சி
முடிந்தபின்னர், கொல்லப்பட்ட பிரதமர் பற்றி
சில வார்த்தைகள் பேசி அஞ்சலியுரை நிகழ்த்தினார்.
பண்டாரநாயக்காவின் மறைவுக்குப் பின்னர் சரியாக ஒருவருடம்
கழித்து 1960
ஆம்
ஆண்டு அவரது மனைவி ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா பிரதமரானார். இவர் 1960 – 1965 , 1970 – 1977
, 1994 – 2000 காலப்பகுதிகளில் மூன்று தடவைகள் பிரதமராகவிருந்தார்.
அத்துடன் உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையும் பெற்றார்.
இவரது புதல்வி சந்திரிக்கா பண்டாரநாயக்கா, வெளிநாடொன்றுக்கு படிக்கச்சென்றவர். மீண்டும் வந்து அரசியலில் ஈடுபட்டார்.
தந்தை ஆரம்பித்து, தாயார் வளர்த்துவிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டவேளையில், நடந்த இடைத்தேர்தல் ஒன்றில் அறிமுகமான திரைப்பட நடிகர் விஜயகுமாரணதுங்கவை காதலித்து கரம்பிடித்தார்.