அமரர் திரு சண்முகம் ஆதீஸ்வரன்


தற்போதைய நாட்டின் நிலைக்கேற்ப, விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் வகையில் கிரியைகள் 05/04/2020 ம் திகதி நடைபெற்றது 

His last rites were held on Sunday 5th April in Sydney.  Visit the recording by clicking on the link below
https://www.oneroomstreaming.com/view/authorise.php?k=1585825209168161 
இறைவனின் கோபம்..!


புழுவின் கோபம்
திமிர்தலோடு சரி...
பறவையின் கோபம்
கீறுதலோடு சரி...
மிருகத்தின் கோபம்
முட்டுதலோடு சரி...
மனிதனின் கோபம்
அன்றோடு சரி....
இறைவனின் கோபம்
என்று முடியுமோ..?

இறைவா....!

உன் கோபத்தின் உச்சம்-
கோயிலை மூடினாய்...
மசூதியை மூடினாய்..
ஆலயத்தை மூடினாய்...
வீடுகளை மூடினாய்....
உலகையே மூடினாய்...!

ஆம்;

மறைக்கப்பட்ட மர்மங்கள் வரிசையில் கொரோனா - Sena Paskaran

.

உலகில் பல மர்மங்கள் அரசியல் ரீதியாக நடந்து கொண்டிருக்கும்.  இது அரசியல் ரீதியாகத்தான் நடக்கின்றதா அல்லது இயல்பாக நடக்கின்றதா என்று மக்கள் பெரிதாக குழம்பிக் கொள்வதில்லை , ஏன் என்றால் மக்கள் பார்ப்பது உலக வல்லரசுகளால்  கொடுக்கப்படுகின்ற செய்திகள்.  எதை தாங்கள் கொடுக்க வேண்டுமோ அதைத்தான் மக்கள் பார்க்க வேண்டும் என்ற நியதி எம்மக்களுக்கு எழுதப்படாத விதியாக இருந்து கொண்டிருக்கிறது. அவர்கள் நினைப்பதை  மட்டும்தான் நாம் பார்க்கக் கூடியதாக இருக்கும் இதுவே உண்மை என்றும் அவர்கள் நம்ப வைத்து விடுவார்கள். அவர்களுடைய தேவைகளுக்கேற்ப மக்களுக்கு வழிகாட்டிகளாக, மேய்ப்பர்கள் ஆக இருந்து கொண்டிருப்பது இந்த வல்லரசுகள்தான்.  தம்முடைய ஆதிக்கத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடியதாக இருக்கின்றது,  அது எடுப்பதுதான் முடிவு,  அது சொல்வதுதான் சரி மற்றவர்கள் மௌனித்துக்  கொண்டிருப்பார்கள். ட்  57 ஆண்டுகளுக்கு முன்பு John F Kennedy  நவம்பர் மாதம் 22ஆம் தேதி 1963 ஆம் ஆண்டு கொல்லப்படுகின்றார் விசாரணைகள் துரிதப்படுத்தப்படுகின்றது எப்படி இறந்தார் என்று தொலைக்காட்சிகள் சொல்லவேண்டியதை சொல்லி முடித்தது.  மரணத்தின் பின்புலம் மறைந்து கொண்டது .  டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி 1989 ஆம் ஆண்டு பாரத பிரதமராக வரஇருந்த ராஜீவ்காந்தி கொல்லப்படுகிறார் எப்படி இறந்தார் என்று அவர்களுடைய விசாரணை முடுக்கி விடப்படுகிறது ஆண்டுகள் ஓடி செல்லுகின்றது குற்றவாளிகள் என்று சிலர் கைது செய்யப்படுகின்றார்கள் 22 பேர் இருந்து 14 பேராக குறைக்கப்பட்டு ஏழு பேராக மாற்றப்பட்டு அத்தனை பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு பின்பு 3 பேருக்கு தூக்கு தண்டனை என்று மாற்றப்பட்டு பின்பு அதுவும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.  ஒரு மாபெரும் நாட்டினுடைய அரசும் , அரசு எந்திரமும் வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தது ஆனால் மக்கள் பலருக்கும் பல பெயர்கள் அரசியல் சம்பந்தமான பல பெரியவர்களின் பெயர்களில் வந்துகொண்டே இருந்தது. அதை பற்றி எல்லாம் எந்தவிதமான கணக்கிலும்  எடுக்காமல் சாமிகளை எல்லாம் சாதாரணமாக உலாவ விட்டு விட்டு அப்பாவிகளான சிலரை மட்டும் அடைத்து வைத்தார்கள் இதுதான் இந்த தொலைக்காட்சிகள் இந்த விசாரணைகள் அரச இயந்திரங்கள் போன்றவை செய்கின்ற மிகப் பெரிய சாதனைகள். மக்கள் இதனை நம்பித்தான் ஆக வேண்டும் வேறு வழியில்லை. எந்த பொழுதுபோக்கை நாம் பார்க்கவேண்டும் என்று தீர்மானிப்பதே இவர்கள் அல்லவா ஆகவே இவர்கள் கொடுக்கின்ற விடயத்தை, இவர்கள் கொடுக்கின்ற  தீர்ப்பை மட்டும்தான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், அதுதான் ஜனநாயக அரசு சொல்கின்ற தீர்ப்பு . இத்தனை கட்சிகள் பலம்பொருந்திய கட்சிகள் இருந்தும் அந்த விசாரணையை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியவில்லை,  யாரோ ஒரு சிலருடைய தூண்டுதலுக்கு யாரோ ஒரு சிலருடைய தேவைக்காக அந்த தீர்ப்பு கொடுக்கப்பட்டு கொண்டிருந்தது இன்றுவரை அதற்கு முடிவில்லாமல் சென்று கொண்டுதான் இருக்கின்றது.              இன்றும்  அதே சாமிகள் இந்தியாவினுடைய அரசியல் தீர்மானத்தை செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.


பேயாட்டம் ஆடியிங்கே பேரழிவைச் செய்கிறையோ ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ...... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


          கொரனோவே கொரனோவே எதற்காக நீவந்தாய்
          குழந்தைகள் பெரியோர்கள் உனக்குத்தான் என்னசெய்தார்
          நடுத்தர வயதுயுடையார் நாட்டின் முதுகெலும்பன்றோ 
          அனைவரையும் அழிக்கவென்று ஆருனக்கு ஆணையிட்டார்  !

          சர்க்கரை நோயுள்ளார் சந்தோஷம் கெடுக்கின்றாய் 
          மூச்சுவிடத் துடிக்கின்றார் மூச்சினையே எடுக்கின்றாய் 
          கர்ப்பிணியைப் பற்றுகிறாய் கருணையினைக் கொல்லுகிறாய் 
          இப்படியே செய்கவென்று எவருன்னை அனுப்பிவைத்தார்  ! 

          படிக்கின்ற பிள்ளைகள் படிப்பில்கையை வைத்தநீ 
          எடுக்கின்ற நடவடிக்கை அத்தனையும் குலைக்கின்றாய் 
          உதவிக்கரம் நீட்டவரும் உயர்வுள்ளம் கொண்டவரை 
          ஒடுக்கிவிட உடனடியாய் ஓடிவந்து நிற்கின்றாய்  ! 

          வணக்கத்தலம் அத்தனையும் மூடிவிட வைத்துவிட்டாய் 
          பிணக்குவியல் விழவைத்து பெருமகிழ்வு எய்துகிறாய் 
          சனம்நிறைந்த இடம்பார்த்து சன்னதத்தை ஆடுகின்றாய் 
          சதிசெய்ய உலகினுக்கு அனுப்பியது யார்சொல்லு  !

image1.JPG           அன்றாடம் உழைக்கின்றார் அல்லலுக்கு  ஆக்கிவிட்டாய்   
           அரிசியொடு அத்தனையும் வாங்குதற்கு அலைவிட்டாய் 
           வீடுகளில் அமைதியின்மை உருவாகக் காலானாய் 
           வில்லங்கமாய் உன்னை அனுப்பியது யார்சொல்லு  ! 

           சாதி சமயமெல்லாம் பேதமறச் செய்துவிட்டாய் 
           ஓதி உணர்கவென்று ஓய்வெடுக்கச் செய்துவிட்டாய் 
           நீதி நெறிமுறையை நீபாரா ஒதுக்கிவிட்டாய் 
           காதலுடன் உனைச்செய்ய அனுப்பியது யார்சொல்லு  ! 

           சீனாவா அனுப்பியது  செப்பிவிடு  கொரனோவே 
           யார்நலனை கருத்தேற்றி வந்தாய்நீ கொரனோவே 
           ஊரழித்து வாவென்று உன்னெஜமான் உரைத்தானா 
           நீயழித்து உன்கடமை நிறைவேற்றத் துடிக்கின்றாய்  ! 

இப்போதே நீபோனால் நிம்மதி அடைவார்களாம் – 2 பரமபுத்திரன்


கேட்பதை மறுத்து கேடுசெய்தல்  நன்றல்ல
பணிவாய் இருந்தால்  இழிவாக நினைத்தல்  
பாரிலும்  சிலரது பண்பற்ற செயல்தான்  
எதிரி இல்லையென எகிறி நிற்கிறாய்   
உயிரும் உனக்கில்லை உயிரற்றும்  நீஇல்லை  
தனித்து வாழமாட்டியாம் தக்கஉயிர் வேணுமாம்
இதற்குத்தான் மனிதர்களை இதமாய்  பிடிக்கிறாயோ
நின்று நிலைப்பதென நீள்சபதம் எடுத்தாயோ 
கொன்று  சரிப்பதென்று கொடும்சபதம் செய்தாயோ- எமக்கு   
புத்தி சொல்லித்தர புதுவடிவம் புரிந்தாயோ
நன்றாய் ஆடுகின்றாய் நாசூக்காய் கொல்லுகிறாய்
என்றைக்கோ ஒருநாள் அழிக்கத்தான் போகினமாம்  

ஒளடதம் இப்போ அதுவாகும் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா...... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -07 சுட்டபழமா…? சுடாத பழமா..? நாவல் மரத்தடி நினைவுகள்


பிள்ளைகள் வீட்டின் செல்வம். நாட்டின் செல்வம். ஆனால், அவ்வண் செல்வமெனக் கணிக்கப்படுவதற்கு முன், பிள்ளைகள்  கல்வி அறிவும் உடல் நலனும் மன நலனும் உடையவராக இருத்தல்  அவசியம். இவற்றை எய்துதற்குப் பெற்றோரின் அக்கறையும் பேணி வளர்க்கும் பண்பும் பெரிதும் தேவை. இளமைப்பருவத்திலிருந்தே அது தேவை. அத்தேவையை நிறைவு செய்வதற்கு என் பெற்றோர் தவறவில்லை.
ஐந்து வயதிலேயே என் ஆரம்பப் பாடசாலைக் கல்வி துவங்கியது. நாவற்குழி சீ. எம். எஸ். தமிழ்க்கலவன் பாடசாலையிலே 1934 ஆம் ஆண்டு  அரிவரி வகுப்பிலே படிப்பதற்குச்சேர்ந்தேன். அக்காவுடன் நடந்து மணல் ஒழுங்கை வழியாக நாம் பள்ளி செல்வதுண்டு. துவக்கத்தில், பெத்தாச்சி வந்து மத்தியானமே என்னை அழைத்துச்செல்வார் என்பது நினைவில் உண்டு. நான் மூன்றாந்தரம் படித்த காலம் வரை, என்னையும் அக்காவையும் வீட்டுக்கு அழைத்துச்செல்வதற்குப் பெத்தாச்சி பள்ளிக்கூடத்துக்கு வருவதுண்டு என்பதும் நினைவிலுண்டு.

இலங்கைச் செய்திகள்


ஏப். 08 - 21 வரை அனைத்து விமானங்களும் நிறுத்தம்

இலங்கையில் 3ஆவது கொரோனா மரணம் பதிவு; 73 வயது நபர்

இலங்கையில் 4ஆவது கொரோனா மரணம் பதிவானது!

மார்ச் 17 முதல் 2,961 கைதிகள் பிணையில் விடுதலை

மேலும் 04 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 166

இடர் வலயங்களில் ஊரடங்கு தொடரும்; ஏனைய இடங்களில் நாளை காலை தளர்த்தப்படும் 


ஏப். 08 - 21 வரை அனைத்து விமானங்களும் நிறுத்தம்


ஏப். 08 - 21 வரை அனைத்து விமானங்களும் நிறுத்தம்-SriLankan Airline Temporarily Suspend all Flights-April 08-April 21
சரக்கு விமானங்கள் சேவையில்; தேவையேற்படும் போது விசேட விமானங்கள் செயற்படும்

சுவீடசிஸ்ட்டி - களத்தூர் கண்ணம்மா - சுந்தரதாஸ்

. தமிழில் இதுவரை ஆயிரக்கணக்கான படங்கள் வெளிவந்துள்ளன ஆனால் இவற்றில் எந்த படத்திற்கும் கிட்டாத பெருமை ஏவிஎம் தயாரித்த களத்தூர் கண்ணம்மா விற்கே உண்டு ஒரு படம் ஒரு மொழியில் ஒரு தடவை தயாரிக்கப்பட்டு பின்னர் ஆண்டுகள் கடந்து மீண்டும் தயாரிக்கப்படுவது வழமை, ஆனால் களத்தூர் கண்ணம்மாவோ  ஒரே காலகட்டத்தில் நான்கு மொழிகளில் இரண்டு தடவைகள் தயாரிக்கப்பட்டு சாதனை புரிந்திருக்கிறது. இதனை வேறு எந்த படமும் இதுவரை முறியடித்ததாக தெரியவில்லை Nobody's Child  என்று ஆங்கிலத்தில் வெளிவந்த படம் தான் இந்த படங்களுக்கு எல்லாம் மூலம்.  

Nobody's Child அதாவது எவரது குழந்தையும் அல்ல என்று பெயர் வைத்த நேரமோ என்னவோ பலரும் இந்தக் கதையை கையாண்டிருக்கிறார்கள்.  இந்தப் படத்தின் கதையை தழுவி பிரபல நடிகரும் கதாசிரியரும் ஆன ஜவகர் சீதாராமன் களத்தூர் கண்ணம்மா படத்தின் கதையை எழுதி அதில் ஒரு வேடத்தில் நடித்தார். ஏவிஎம் தயாரித்த இந்தப் படத்தில் நடிக்கும் போதே அவருக்கு சின்ன அண்ணாமலை கதை வசனம் எழுதி தயாரித்த கடவுளின் குழந்தை படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதில் நடிக்கும் போது தான் அவருக்கு தான் எழுதிய கண்ணம்மாவும் கடவுளின் குழந்தையும் ஒரே கதை என தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த ஜவகர் விஷயத்தை  ஏவிஎம்மின் காதில் போட்டுவிட்டார். கலக்கமடையாத  ஏவிஎம், தன்  நிறுவனத்தின் தரத்திற்குரிய விதத்தில் களத்தூர் கண்ணம்மாவை தயாரித்து வெளியிட்டார்.  அதே கையோடு கடவுளின் குழந்தையும் வெளிவந்தது.  இந்த பட ரேசில் கண்ணம்மா வெற்றி பெற்று  விட்டாள் . இதன் வெற்றியைத் தொடர்ந்து ஏவிஎம் இப்படத்தை தெலுங்கில் டப் செய்து மாவூரி அம்மாயி என்ற பெயரில் வெளியிட்டார்.  படம் இரண்டு வாரங்கள் ஓடிக் கொண்டிருக்கும்போதே தெலுங்கு விநியோகஸ்தர் ஏ வி எம் இடம் வந்து நல்ல படமான இதை என் டப் செய்தீர்கள் தெலுங்கிலேயே எடுத்தால் நன்றாக இருக்கும் என்று வற்புறுத்தி டப்பிங் படம் நிறுத்தப்பட்டு தெலுங்கு படம் தயாராகத் தொடங்கியது.  முகநோமு  என்ற பெயரில் தெலுங்கில் வெளிவந்து வெற்றிகண்டது. 


உலகச் செய்திகள்


கொரோனா வைரஸ் எட்டியும் பார்க்காத அதிர்ஷ்ட தேசங்கள்!

சீனாவில் மீண்டும் இயங்கத் தொடங்கிய இறைச்சிச் சந்தைகள்

குளிர் நாடுகளிலேயே அதிக உயிரிழப்புகள்!

மூன்றாம் உலக நாடுகளை விடவும் மோசமான நிலையில் அமெரிக்கா!

இத்தாலியில் இருந்து ஆறுதல் தரும் செய்தி!

சீனாவில் துக்கதினம் அனுஷ்டிப்பு

ஒரே நாளில் அமெரிக்காவில் 1,480 பேர் பலி

சிங்கப்பூரில் ஒரு மாதம் ஊரடங்கு அமுல் 

கொவிட் – 19 அமெரிக்கா முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டது எவ்வாறு?கொரோனா வைரஸ் எட்டியும் பார்க்காத அதிர்ஷ்ட தேசங்கள்!


எறும்புதின்னியில் இருந்து பரவியதா கொரோனா வைரஸ்?
விஞ்ஞானிகளின் ஆய்வில் புதிதாக தோன்றியிருக்கும் சந்தேகம்!

மழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 30 முருகபூபதி


ஜீவிகா கணினியில் எழுதியிருந்த கட்டுரையின் தலைப்பைப் பார்த்த அபிதா,  “ நான் இதனை வாசிக்கலாமா..? “  எனக்கேட்டாள்.
“ ஓம் தாராளமாக வாசிக்கலாம்.  இதிலும் உங்களுக்கு ஒரு வேலை கொடுக்கப்போகிறேன்.  இப்போது உங்களுக்கும் ஓரளவு பயிற்சி இருக்கும்தானே…? வீட்டு வேலைகளை செய்து முடித்துவிட்டு வாங்க.  பார்க்கலாம். என்றாள் ஜீவிகா.
காலை வேளைக்கான உணவைத்தயாரித்துக்கொண்டே, எல்லோரும் துயில் எழுவதற்கு முன்னர் வெளியே சென்று மங்களேஸ்வரி ரீச்சரின் வீட்டுக்குப்போய் வந்த செய்தியையும் அபிதா சொன்னாள்.
மூன்று பெண்களும் அபிதா சொல்வதை ஆர்வமுடன் கேட்டனர்.
“ ஏதோ செமினார் இருக்கிறது என்று சொன்னாவே. போகிறாவா…“  என்று கண்ணை சிமிட்டிக்கொண்டு மஞ்சுளா கேட்டாள்.
“ இந்த ஊரடங்கு  காலத்தில்  இங்கே வீட்டில் இருந்தால் ஏதும் வேலை செய்யவேண்டி வரும் என்றுதானாக்கும் தப்பினேன் பிழைத்தேன் என்று அவ ஓடிவிட்டா“  என்றாள் சுபாஷினி.
ஜீவிகா எந்தவொரு எதிர்வினையும் சொல்லாமல்,  “  என்ன… திரும்பி வருவாங்களா… அல்லது கொரோனா ஓடிப்போனபின்னர் வருவாங்களா..? “  எனக்கேட்டாள்.
“ நானும் வரச்சொல்லித்தான் இருக்கிறேன். பாவம் ரீச்சர்.  என்னுடைய கைப்பக்குவம் அவவுக்கு தேவைப்படுது. நான் வைத்துக்கொடுக்கும் மிளகு ரசம் சுவையானது  என்றா.   நாக்குச்செத்துப்போயிருக்கிறா போலும்.  எல்லோரும் இங்கே முடங்கிவிட்டோம்.  கற்பகம் ரீச்சர்தான் இல்லை. அங்கே இருந்தாலும் எப்போதும் உங்கள் அனைவரதும் நினைப்புத்தான் அவவுக்கு. “  புட்டுக்கு தேங்காய் துருவிக்கொண்டே அபிதா சொன்னாள்.

ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்.


சென்னையில் எழுத்தாளர் மாலனைச் சந்தித்தபோது அவரால் தமிழாக்கம் செய்யப்பட்ட ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் என்ற சைரஸ் மிஸ்திரியின் நாவலை எனக்குத் தந்தார். அந்த நாவலை வாசித்த பின்பு எனக்கு குஜராத்தின் காந்தி நகரில் நடந்த சம்பவத்தையும் நினைத்துப் பார்த்தேன் .
இரண்டு கிழமைகள் இடைவெளியில் நான் அங்கு சந்தித்த இருவரால் ஒரு விடயம் என் கவனத்தில் வந்தது.
சுற்றுச் சூழல் பாதுகாப்பில் தன்னார்வமாக இயங்கும் பாரதிதாசன் எந்த அறிமுகமும் அற்றவர் . சந்தித்த இடத்தில் பேசியபோது தனது ஆர்வத்தைச் சொல்லி அவர் எழுதிய புத்தகத்தைக் கொடுத்தார்.
அவரது புத்தகத்தில் பாறு கழுகுகள் எனும் பிணந்தின்னும் கழுகுகள் மாடுகளுக்கு ஜுரம் மற்றும் வலியைக் குறைக்கக் கொடுக்கும்( diclofenac) வல்ராரன் எனப்படும் மருந்துகளே கழுகுகள் அழிவதற்குக் காரணமாக இருந்ததாக எழுதியிருந்தார்
இறந்த மாடுகளில் இருந்து அந்த மருந்தினால், மாடுகளைத் தின்ற கழுகுகள் சிறுநீரகம் அழுகி இறக்கின்றன. இந்தியாவில் பல இடங்களில் இது நடந்துவருவதால் பாறுக்கழுகுகள் அருகி வருவதாக எழுதியிருந்த அந்த புத்தகத்தை உடனே படித்துவிட்டு எனது நண்பரான ஒரு மிருகவைத்தியரிடம் சென்னையில் கொடுத்துவிட்டேன்.
சென்னையில் மாலனைச் சந்தித்துப் பேசியபின் தன்னால் மொழி பெயர்க்கப்பட்ட நாவலை எனக்குக் கொடுத்தார். .அதை வாசித்தபோது , இறுதியில் கழுகுகளின் அழிவில் அந்த நாவல் முடிகிறது . பார்சி மதத்தவர்கள் இறந்த பின்பு அவர்களது உடலைக் கழுகுகளுக்கு இரையாக்குவதையும் அத்துடன் அவர்கள் தொடர்ச்சியாக தங்கள் சமூகத்திலேயே திருமணம் செய்வதால் அவர்களது சமூகம் சிறிதாகி வருவதையும் கேள்விப் பட்டிருந்தேன்.

ஆபிரிக்க இலக்கிய மொழி, அரசியல் குறித்து கூகி வா தியாங்கோவின் சிந்தனைகள் ஆக்கம்: ஞா.டிலோசினி கிழக்குப் பல்கலைக்கழகம்

                       
கூகி வா தியாங்கோ கிழக்கு  ஆபிரிக்காவில் கென்யாவில் தோன்றிய திறமையான, தரம்வாய்ந்த எழுத்தாளராகக் காணப்படுகிறார். பல பல்கலைக்கழகங்களில் கடமையாற்றிய இவர்,  ஒப்பிலக்கியம் மற்றும் அளிக்கைகள்  தொடர்பான பேராசிரியராகவும் கடமையாற்றினார்.
தியாங்கோ நாவல், நாடகம்,  சிறுகட்டுரை முதலானவற்றையும் இலக்கிய விமர்சனம், சமூக விமர்சனம், சிறுவர் இலக்கியம் முதலான துறைகளிலும் எழுதியுள்ளார். 1977 இல் நாவல் எழுத ஆரம்பித்தார். தியாங்கோ சாதாரண மக்களைக் கருத்திற் கொண்டே தனது படைப்புக்களை எழுதினார். இவரது,
Essay on African and Caribbean Literature, Decolonising the mind: The Politics of Language in Africa Literature, writers in politics, detained: A writer’s prison Diary, Moving the Centre: The Struggle for Cultural Freedoms, Weep not Child, The River Between, a Grain of Wheat, Petals of Blood, Devil on the Cross.
ஆகியவை இவரது நாவல்களாகும். தியாங்கோவின்  படைப்புக்கள் ஆபிரிக்க இலக்கியம், அரசியல், மற்றும் அடிமை வாழ்க்கை குறித்து எழுதப்பட்டவையாகும். ‘அடையாள மீட்பு காலனிய ஓர்மை அகற்றல்’ என்ற கூகி வா தியாங்கோவின் நூலை அடிப்படையாக வைத்து ஆபிரிக்க இலக்கிய மொழி, அரசியல் குறித்து தியாங்கோவின் சிந்தனைகளை அறியமுடியும். 
காலனிய ஆதிக்கத்தில் இருந்து தமது மொழியையும், இலக்கியத்தையும்,  பண்பாட்டையும் மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் ஆபிரிக்கப் படைப்பாளிகள் மேற்கொண்ட முயற்சிகள் அடையாள மீட்பின் மகத்துவத்தை உணர்த்துகின்றன. கென்ய மொழி எழுத்தாளரான கூகி வா தியாங்கோ ‘அடையாள மீட்பு காலனிய ஓர்மை அகற்றல்’ என்ற தமது நூலில் ஆபிரிக்க அடையாளத்தை  ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கக் கூறுகளில் இருந்து மீட்டெடுக்க மேற்கொண்ட எதிர்ச் செயற்பாடுகளை விபரித்துள்ளார்.
ஐரோப்பிய, பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கீசரின் காலனியம், அமெரிக்க ஏகாதிபத்தியம், உள்நாட்டு நவகாலனிய ஆட்சி, அதிகாரம் ஆகியவை ஆபிரிக்க நாடுகளில் ஆதிக்கம் செலுத்தின. ஆபிரிக்க மக்களின் மொழி, கலை மற்றும் பண்பாடு ஆகியன காலனிய ஆதிக்கத்தால்,  சீரழிக்கப்பட்டன.

இரக்கமுள்ள அன்பர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்உலகெங்கும் தோன்றியிருக்கும் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலினால், இலங்கையில்  நிலவும் ஊரடங்கு உத்தரவு மற்றும் அசாதாரண சூழ்நிலைகளையடுத்து, அன்றாடம்  தேவைப்படும் உலர் உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும்  நலிவுற்ற மக்களுக்கு உதவும் பணியில், யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையமும்   (Centre for Child Development)  -   வவுனியா  நலிவுற்ற மக்களின் அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பும்,  ( VOLUNTARY ORGANIZATION FOR VULNERABLE COMMUNITY DEVELOPMENT ) மலையக சமூக அபிவிருத்தி நிறுவனமும்(Plantation Community Development Organization) ஈடுபட்டுவருகின்றன.
குறிப்பிட்ட தன்னார்வ அமைப்புகள், அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்புகளாகும்.
நீண்டகாலமாக இயங்கிவரும்  இந்த அமைப்புகள் பதிவுசெய்யப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களாகும்.
முன்னர் நீடித்த போரினால் பெற்றவர்களை, குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்து, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக, அவுஸ்திரேலியா – இலங்கை மாணவர் கல்வி நிதியம் மற்றும்  புகலிட நாடுகளின்  தன்னார்வ அமைப்புகளின் ஆதரவுடனும்  இவை இயங்கி  வருகின்றன.
இந்த அமைப்புகள், அண்மையில் எதிர்பாராத வகையில் தோன்றியிருக்கும் அசாதாரண நிலைமைகளினால், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் வேளைகளில், நலிவுற்ற மக்களின் தேவைகளின் நிமித்தம் உலர் உணவுப்பொதிகளை வழங்கிவருகின்றன.

பொது வேலி பொட்டு காதல் . பொன் குலேந்திரன் – கனடா


முன்னுரை

யாழ்ப்பாண வாழ்வியலில் வேலிக்கு எத்துணை பெரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது என்பதை அந்த வேலிகள் பறை சாற்றின எனலாம்.அதுவும் கிடுகு வெலியில் பொட்டு ( சிறு கதவு)  வைத்து   முன் வாசல்  வழியே பலர் பார்க்க போகாமல் பொட்டின் வழியே ரகசியமாய் போய் வருவது  ஒரு  யாழ்ப்பாணக் கலாச்சாரமமாக  ஒரு காலத்தில் த்தில் இருந்து வந்தது . இப்போ தொழில் நுட்பம் முன்னேறிய   காலத்தில்  இந்த குறுக்கு  வ வழி மறைந்திருகலாம்.
யாழ்ப்பாண இராச்சியத்தில் நெடுங்காலமாக நிலவி வந்த வழமைகளை அடிப்படையாகக் கொண்டு உருவானது தேச வழமையாகும். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட நீதி மன்றங்கள் தேச வழமை அடிப்படையிலே வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்கின. இந்த வழமையானது ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில், அதாவது 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் சட்டமாகத் தொகுக்கப்பட்டது. இத்தேச வழமையானது இலங்கையில் வாழும் தமிழர்களுக்கான சட்ட நெறியாக இன்றும் நடைமுறையில் இருக்கிறது.)
****

கானல் தேசம்-நொயல் நடேசன்எஸ்.எல்.எம்.ஹனீபா
கானல் தேசம்- நொயல் நடேசன் என்ற மனிதன் தான் சார்ந்த சமூகத்தின் தனக்கு கிடைத்த கரிசனைக்கு வாழ்க்கை என்ற சாளரத்தினூடே இந்த நாவலை உருவாக்கியுள்ளார். செய் நேர்த்தியும் – உழைப்பும் மிக்க படைப்பு.
தனது மற்றைய எழுத்துக்களிலிருந்து, இந்த நாவலை அவர் எழுத கைக்கொண்ட மொழி ஒரு கோட்டோவியம் போன்றது. நாவலில் வரும் கதாமாந்தர்கள் அனைவரும் தங்களுக்கு படைப்பாளியால் வழங்கப்பட்டஎல்லைகளிலிருந்து ஒரு இஞ்சியேனும் பிசகாத நிலையில் கனகச்சிதமாக வந்து போகிறார்கள்.
நாவலில் பல பாத்திரங்கள் மறக்க முடியாத சிலர் அதிசயிக்கும் படியாக தங்கள் தங்கள் எல்லையிலேயே நிற்கிறார்கள் அல்லது நடேசனின் மேற்பார்வையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள், அழகிய ஜெனி மட்டும் எல்லைகளை மீற துடிப்பவளாகவும், அதே நேரம் பின்வாங்குபவளாகவும் ஓ… ஜெனி உன்னை மறக்கமுடியவில்லை ❣️

Laal Salaam (Red Salute) மலையாள சினிமா - கானா பிரபா

சம தர்மப் போராளியாக வாழ்வதென்பது ஒரு இயக்கத்தின் பின்னணியில் இருந்து தான் பயணிக்க வேண்டியதில்லை.

குறித்த அரசியல் சித்தாந்தத்தை வாழ்வியலிலும் கைக்கொள்ளும் போதும், வெற்றிகரமான அரசியல் எழுச்சியில் அதனைத் தொடரும் போதும் எழு முரண்பாடுகளின் யதார்த்தத்தை ஆட்சிக் கட்டிலில் ஏறும் போது தான் அனுபவ ரீதியாகக் கண்டுணர முடியும்.

 நம் வாழ்வுக்கும்  கொண்ட அரசியல் சித்தாந்தங்களுக்கும் இடையில் எழும் உரசல்களில் அதுவரை தியாக மனப் பான்மையோடு போராடிய தோழர்களின் உழைப்பு உரமானதைக் காலம் மறந்து விடுகிறது. இந்தச் சமூகம் மெய்யான வரலாற்றையும், தியாகங்களையும் நினைவில் வைத்துக் கொள்ள விரும்புவதுமில்லை, விரும்ப முற்படுவதுமில்லை. 
இப்படியான பல உள்ளார்ந்த கேள்விகளை எழுப்பி விட்டது “லால் சலாம்” மலையாளத் திரைப்படம்.

கம்யூனிசிய சித்தாந்தங்கள் முளை விட்ட காலத்தில் இயக்க ரீதியாக அதனை முடக்கியப் போட்ட சூழலில், வர்க்க எதிர்ப்புப் போராட்டம் ஒன்றில் எழுந்த கொலைப் பழியால் கேரளச் சிறையில் இருந்து வெளியே வரும் தோழர்கள் ஸ்டீபன் நெத்தூர் (மோகன்லால்), டி.கே.ஆன்டனி (முரளி), சேது லட்சுமி (கீதா) இவர்களின் தொடர்ந்த அரசியல் பயணம் எப்படிச் செல்கிறது, தம்முடைய பழைய அந்தப் போராட்ட வாழ்வியலில் இருந்து எப்படி முரண்படுகிறார்கள் என்பதைத் தொடர்ந்து வரும் கதையோட்டம் காட்டுகிறது.

கம்யூனிசிய இயக்கம் கேரளாவில் எவ்வளவுக்கெவ்வளவு சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கட்டியெழுப்பப்பட்டதோ அவ்வளவுக்கவ்வளவு விமர்சனங்களையும் அது எதிர் கொள்ளத் தவறவில்லை.
இந்தப் படம் ஒரு கடும் போக்கான விமர்சனத்துடனான கதையோட்டத்தைக் கொண்டிராவிட்டாலும் பல கேள்விகளை முன் வைக்கிறது. கேரளாவில் முப்பது ஆண்டுகளுக்கு முன் வெளியாகி 200 நாட்களைக் கடந்த ஒரு திரைப்படம் இப்படியான அதிர்வான எண்ண அலைகளை எழுப்புவது ஆச்சரியம் தருகிறது. 

லால் சலாம் படத்தின் கதைப் பின்னணி கம்யூனிசிய இயக்கத்தின் எழுச்சி, அந்த இயக்கம் ஆட்சிக் கட்டிலில் ஏறுவது போன்ற மெய் வரலாற்றோடே நகர்வதால் இந்தப் படத்தின் கதை மாந்தர்களாக அமையும் கம்யூனிசிய இயக்கத்துக்காகவே தன் வாழ்வைப் பங்கு போட்டு ஈற்றில் தூக்கி வீசப்படும் நெத்தூரான் என்ற மோகன்லால் பாத்திரம் வர்கீஸ் வைத்தியனையும், தோழர் டி.கே.ஆன்டனி என்ற அரசியலுக்கும், குடும்ப வாழ்வுக்கும்
இடையில் திரிசங்கு வாழ்வைக் கொண்ட முரளியின் பாத்திரம் T.V தோமஸ் ஐயும், அமைச்சராகப் பொறுப்பேற்று
இன்னும் கடும் கம்யூனிசக் கொள்கையோடு பயணிக்கும் சேதுலட்சுமி என்ற கீதாவின் பாத்திரம்  கே.ஆர்.கெளரி அம்மாவையும் நிஜ வாழ்வில் பொருத்திப் பார்க்கிறது. இவர்கள் கேரளாவின் முதல் கம்யூனிஸ்ட் ஆட்சியில் இருந்த ஈ.எம்.எஸ் நம்பூதிரி பாட் இன் அமைச்சரவையில் இருந்தவர்கள். கே.ஆர்.கெளரி அம்மாள் 100 வயது கடந்து இன்னும் உயிர் வாழ்கிறார் என்பது உபரித் தகவல்.

தன்னுடைய இயக்கத்துக்காக உயிரைக் கொடுத்துப் போராடும் தொண்டனாகவும், அந்த இயக்கத்தாலேயே அவமானப்பட்டுத் தலை குனியும் பாத்திரத்தில் மோகன்லால் வழக்கம் போல நடிப்பில் நெகிழ வைக்கிறார். முரளியின் பாத்திரம் படத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் போலவே குழ்ப்பமானது. முறை தவறிய வாழ்க்கையை இறுதி வரை அவர் நியாயப்படுத்துவது போலுள்ளது.
கீதாவுக்கு மலையளவு நடிப்பைக் கொடுத்து, ஊர்வசியை அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார்கள். ஆனாலும் அந்த ஊர்ப் பெருந்தனக்காரர் வெளாந்தி மகள் வேலையில்லாக் கம்யூனிஸ்ட்காரனைக் கல்யாணம் கட்டித் தன் சுக துக்கங்கள் பறி போகும் சின்னச் சின்ன இடங்களில் நடிப்பால் அசரடிக்கிறார். ரேகா, மது, நெடுமுடி வேணு, ஜெகதி ஶ்ரீகுமார்  என்று தத்தம் பாத்திரங்களில் மின்னும் நட்சத்திர அணி வகுப்பு.

மலையளத்தின் முக்கிய நடிகர் சக இயக்குநர் வேணு நாகவல்லி இயக்கிய படமிது. 

1990 ஆம் ஆண்டில் தான் பாரதிராஜாவின் “என் உயிர்த் தோழன்”, மற்றும் வேணு நாகவல்லியின் “லால் சலாம்”. வெளியாகியிருக்கின்றன.
முன்னது தன் அரசியல் இயக்கத்துக்காக ஓடாய் உழைத்து நொந்து வீழ்ந்தவனின் கதை,
பின்னது தன் அரசியல் இயக்கத்துக்காக ஓடாய் உழைத்து நொந்து வாழ்வியல் யதார்த்தத்தை உணர்ந்த் மீண்டவனின் கதை. ஆனாலும் அவன் இன்னொரு போராளியை உருவாகத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

பி.கு
லால் சலாம் Amazon Prime இலும் கிடைக்கிறது. வீட்டில் முடங்கியிருக்கும் காலத்தில் பார்க்கத் தகுந்தது.