மரண அறிவித்தல்

.

மரண அறிவித்தல்

.

தெய்வம் தெரிய மனிதம் தொழு - வித்யாசாகர்

.

புண் போல மனசு முள்போல எண்ணம்
எல்லோருக்குமே குத்தும் வாழ்க்கை,
இங்கே யார்மேல் வருந்தி
யாருக்கென்னப் பயன்.. ?
ஒரு சொட்டு உண்மை
சிறுதுளி கருணை
உருகாத மனசுருக; உள்ளேப்
பேரன்பு ஊறாதோ...?
கோபத்தை முட்களுள் தொலைக்கும்
நினைக்க மனசு துடிக்கும்
மன்னிப்பில் எல்லாம் மறக்கும்
மனசெங்கும் வாராதோ... ?
அன்பிற்கே அணங்கும் உடம்பு
அடுத்தவற்கழவே கண்ணீர்
கொடுக்க உயிர்
கொஞ்சும் தீண்டலில் கொடுவாள் உடையாதோ...?
கைத்தடிபோல் பெரியோர்
ஊனியெழ பாடம்
விளங்கிக்கொள்ள வலி
வாழ்க்கை' திருத்தத்தைத் தாராதோ...?
திட்டம் விடு இயல்பு உணர்
திருப்பி அடித்தாலும்
திருத்த யோசி
திருந்தா உள்ளமும் வலிக்காதோ...?
நல்லது செய்
கெட்டதைத் தவிர்
கல்லுக்கும் புல்லுக்கும்கூட
மனதைத் திற; சமயம் சொல்படி கேளாதோ...?
மொத்தத்தில் - சுயநலம் விடு
மனிதம் கொள்
மனமாசு அறு
மறுபக்கமிருக்கும் தெய்வம்; தோல்வியை மற!!
-------------------------------------------------------------------------------------------

அனகோண்டாவுக்கு இரையாகப்போவதாக அமெரிக்கர் அறிவிப்பு

.
anaconda


டி.வி. நிகழ்ச்சிக்காக அனகோண்டாவுக்கு இரையாகப்போவதாக அமெரிக்கர் அறிவிப்பு விலங்கியல் ஆர்வலர்கள் கண்டனம்

அனகோண்டா பாம்புக்கு இரையாகப்போவதாக அமெரிக்க இயற்கை ஆர்வலர்யயெஉழனெய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதற்கு விலங்கியல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
உலகில் வாழும் மிகப்பெரிய பாம்பு இனங்களில் அனகோண்டா பாம்புகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. தென் அமெரிக்காவின் வெப்ப மண்டல பகுதிகளை பூர்வீகமாக கொண்ட இந்த பாம்புகள்இ அமேசான் காடுகளில் அதிகமாக காணப்படுகின்றன.

அமெரிக்காவை சேர்ந்த இளம் சாதனையாளரான பால் ரோசாலிஇ அமேசான் காடுகளில் பல ஆண்டுகளாக உயிரினங்கள் மற்றும் இயற்கையை ஆய்வு செய்து வருகிறார். இவர்இ சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு விலங்கின ஆர்வலர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
‘உயிரோடு இரையாதல்’

படித்தோம் சொல்கின்றோம் - முருகபூபதி

.
யாழ்.குடாநாட்டின்   ஒரு  கால கட்டத்தின்  ஆத்மாவை  பிரிதிபலிக்கும்  கொல்லைப்புறத்து   காதலிகள்
புதிய   தலைமுறைப்படைப்பாளி   ஜே.கே.யின்  பால்யகால    வாழ்வனுபங்களின்   பதிவு.
   
 படலை   வெளீயிடாக  இந்த  ஆண்டு  (2014)   இறுதிப்பகுதியில் வெளியாகியிருக்கும்   மெல்பனில்  வதியும்  ஜே.கே.  என்ற ஜெயக்குமரன்  சந்திரசேகரத்தின்   பால்ய கால  நினைவுப்பதிவாக வெளியாகியிருக்கும்  அவரது  என்  கொல்லைப்புறத்து  காதலிகள் நூலைப்பற்றி  அதனைப்படித்துப்பார்க்காமல்  ஒரு  வாசகர்  பின்வரும் முடிவுக்கும்  வந்துவிடலாம்.
ஜே.கே. என்ற   எழுத்தாளரின்   வாழ்வில்   வந்து  திரும்பிய  நிஜக் காதலிகள்  பற்றிய  கிளுகிளுப்பூட்டும்  கதைகளாக  அல்லது கட்டுரைகளாகத்தான்   இந்த  நூலின்  உள்ளடக்கம்  இருக்கலாம்  என்ற உத்தேச  முடிவுக்கு  அவர்கள்  வரலாம்.
ஆனால் , அவரது  காதலிகள்  அவரது  பால்யகாலத்து  நண்பர்கள் மட்டுமல்ல  அவரது  பெற்றோர்,  சுற்றம்,  சிநேகிதிகள்,  ஊர்மக்கள், அவரது  செல்லப்பிராணிகள்,  அவரைக்கவர்ந்த  படைப்பாளிகள், சொற்பொழிவாளர்கள்,    இசைக்கலைஞர்கள்  ,  நடிகர்,  போராளிகள்... என்று  பலரை  ஜே.கே.  இந்த   நூலில்   அடையாளம்   காட்டுகின்றார்.
344   பக்கங்கள்  கொண்ட  இந்த  நூலின்  உள்ளடக்கம் -  அதில் எழுதப்பட்டிருப்பது   சிறுகதைகளா,  கட்டுரைகளா,   நனவிடை   தோயும் பதிவுகளா,   புனைவு  இலக்கியமா,   நடைச்சித்திரமா  முதலான மயக்கங்களை    வாசகர்களுக்குத்தரலாம்.
ஜே.கே.யின்   கலை,  இலக்கிய  வாழ்வில்  அவருக்கு  ஆதர்சமாக இருந்த -  அவர்  மேடையேறும்  வேளைகளிலும்   மறக்காமல்  அவர் குறிப்பிடும்  இருவரான  சுஜாதாவுக்கும்    கம்பவாரிதிக்கும்தான்    இந்த நூலை   சமரப்பித்திருக்கிறார்.
அதிலும்    தமிழுக்குள்  தன்னை   ஆட்கொண்ட  எழுந்து  வேந்தர் சுஜாதா   என்றும்  அன்புக்குரிய  கம்பவாரிதி  என்றும்  அழுத்தமாகவே   ஜே.கே.   பதிவு   செய்கின்றார்.
அதிலிருந்து   இந்த  நூலின்  உள்ளடக்கத்தை   தேர்ந்த  வாசகர்களினால்  புரிந்துகொள்ள  முடியும்.

வால் நட்சத்திரத்தில் இறங்கியது ஆய்வுக் கலம்; மாபெரும் சாதனை - என்.ராமதுரை

.
.

67P  வால் நட்சத்திரம் எங்கே உள்ளது என்பதைக் காட்டும் படம்உழஅநவ 67 P ழெஎ 11 2014  சநளணைநன
மணிக்கு சுமார் 65 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கின்ற சிறிய வால் நட்சத்திரம் ஒன்றில் மனிதன் அனுப்பிய ஆய்வுக்கலம் வெற்றிகரமாகத் தரை இறங்கியுள்ளது.   வால் நட்சத்திரம் (ஊழஅநவ) ஒன்றில் ஆய்வுக் கலம் மெதுவாகத் தரை இறங்குவது என்பது விண்வெளி வரலாற்றில் இதுவே முதன் முறையாகும்.

ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ( நுளுயு) அனுப்பிய ரோசட்டா (சுழளநவவய) என்னும் விண்கலம் புதன்கிழமை ( நவம்பர் 12 ஆம் தேதி)  இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. கடந்த இரு மாதங்களாக ரோசட்டா அந்த வால் நட்சத்திரத்தைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருக்கின்ற லாரியின் பின் புறத்தில் ஒரு ஹெலிகாப்டரிலிருந்து குதிப்பது மிகக் கடினமானது. ஆளில்லா விண்கலத்திலிருந்து ஒரு சிறிய ஆய்வுக் கலம் ஒன்று வால் நட்சத்திர்த்தில் இறங்குவது அதை விடக் கடினமானது.

பிலே(Phடையந) என்னும் ஆய்வுக் கலம் அந்த வால் நட்சத்திரத்தில் பல நாட்கள் தங்கி ஆய்வுகளை நடத்தி வால் நட்சத்திரம் பற்றிய பல தகவல்களை அனுப்பும்.

இலங்கைச் செய்திகள்


ஜனாதிபதியினால் மூன்றாவது தடவை போட்டியிட முடியும் :உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையில் 10 நீதியரசர்கள் ஏகமனதான தீர்மானம்

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் ராஜித சேனாரட்னவின் இணைப்புச் செயலாளர் பொன். இராமலிங்கம் காலமானார்!

ஒக்டோபர் மாதம் 3,700 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு

ஜனாதிபதியினால் மூன்றாவது தடவை போட்டியிட முடியும் :உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையில் 10 நீதியரசர்கள் ஏகமனதான தீர்மானம்


11/11/2014 ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவினால்   மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்று    உயர்நீதிமன்றம்     ஏகமனதாக  ஆலோசனை வழங்கியுள்ளதாக  பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி. சில்வா   தெரிவித்தார். 
அந்தவகையில் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று    உயர்நீதிமன்றத்தின்  10 நீதியரசர்களும் ஏகமனதாக   தீர்மானித்து  அறிவித்துள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

விழுதல் என்பது எழுகையே பகுதி 26 பொலிகை ஜெயா - சுவீஸ்

.
சுவிஸிலிருந்து பொலிகை ஜெயா  அவர்கள் பற்றிய அறிமுகம்

பொதுவாக இவர் ஒரு இலக்கியவாதி.முக்கியமாக அவர் ஒரு கட்டுரையாளர்.அதன் பின்பே சிறுகதை,கவி வடிப்பவர்,   அவரது கட்டுரைகள் இலங்கை வீர கேசரி,ஜீவநதி,புதிய பூமிஇஇந்தியா இனிய நந்தவனம்இகனடா உதயன் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தன சிறு கதைகள் சில சுவிஸ் தமிழ் ஏடு, வீரகேசரி ஜீவநதி ஆகியவற்றில் பிரசுரமாகியன.
கவிதைகள் பல ஐரோப்பிய வானொலிகளில் வெளிவந்தன அத்தோடு வானொலிகளில் அரசியல் களத்தில் பங்கெடுத்துள்ளார்.
சுவிஸில் பல பட்டிமன்றங்களில் பேச்சாளராகவும் தலமை ஏற்றும் உள்ளார்.
முல்லையமுதன் டழனெழn டைஉ வானொலியில் நடாத்தும் இலக்கியப்பூக்கள் 
நிகழ்வில் அண்மைக்காலமாக பங்குபற்றுகிறார்.
2010 பாரிசிலும்,2014 ஜெர்மன் காம் ல் நடைபெற்ற உலக தமிழர் பண்பாட்டு இயக்க மாநாட்டில் பங்கு பற்றி கட்டுரைகள் சமர்ப்பித்து தமிழ் ஆய்வரங்கத்தில் பங்கெடுத்து தமிழ் ஆய்வு  செய்தார்.

தகவல் தொகுப்பு :பண்ணாகம் இக.கிருட்ணமூர்த்தி (எ.வி.வி)
ஏலையா முருகதாசன் (எ.வி.வி)

கதை தொடர்கிறது

தாயுடனும் காதலி கலாவுடனும் கதைத்த பின் அதிகாலை மூன்று மணிபோல் தூக்கத்திற்கு சென்ற சீலனை தூக்கம் அணைக்க மறுத்தது.படுக்கையில் சிந்தனை ஓட்டங்களை "தெறித்திட்ட முத்துக்களைப்போல சிதறவிட்டு" புரண்டு புரண்டு படுத்து தூக்கத்திற்கு முயன்றான்.

சங்க இலக்கியக் காட்சிகள் 31- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

அன்பினால் இணைந்த இன்ப வாழ்க்கை!


தனது அழகான மகளை அன்பும், ஆண்மையும் நிறைந்த ஒருத்தனுக்கு மணம் முடித்துக்கொடுத்த தாயொருத்தி, தன் மகள் எப்படி வாழ்க்கை நடாத்துகிறாள் என்பதை அறிய விரும்பினாள். தனது மகளைப் பிறந்தநாள்முதல் நன்கு வளர்த்து, பராமரித்தவளான செவிலித்தாயை மகளின் புகுந்த வீட்டுக்குச் சென்று நிலைமையை அறிந்து வருமாறு அனுப்புகிறாள். செவிலித்தாயும் மகளின் வீட்டுக்குச் சென்று சிலநாட்கள் தங்கியிருந்துவிட்டுத் திரும்பி வந்து, பெண்ணின் தாயிடம் அவளின் மகள் நடாத்தும் இன்பமான வாழ்க்கையைப்பற்றி எடுத்துரைக்கிறாள்.

அன்பான கணவனோடு அவள் நடாத்தும் இல்லறத்திலே அவர்களுக்கு அழகானதொரு ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தைக்கு அவள் முலைப்பாலை ஊட்டிக்கொண்டிருக்கிறாள். அப்போது சிறிய மலைகள் பலவற்றைக்கொண்டிருக்கும் நாட்டைச்சேர்ந்த அவளின் கணவன், அவளின் முதுகை அன்போடு தடவிக்கொடுத்துக்கொண்டிருக்கிறான். பாசத்தோடு தன் பிள்ளைக்குப் பாலூட்டி மகிழ்கிறாள் உள் மகள். அவள்மேல் தான் கொண்ட தணியாத காதலால் அவளின் முதுகை ஆதரவாகத் தடவிக் கொடுத்து அவளையும் மகிழ்வித்துத் தானும் மகிழ்ந்து இன்புறுகிறான் உன் மகளின் கணவன், உன் மருமகன். அதனை நான் கண்டேன் என்று செவிலித்தாய் நற்றாயிடம் சொல்கின்றாள்.

நவம்பர் 16 - இந்த நாளை மறக்க முடியுமா சச்சின்?

.
நவம்பர் 16. இந்த நாளை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதாக மறக்கமுடியுமா என்ன? 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக பாலகனாகக் களமிறங்கி சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்த சச்சின், தனது சொந்த மண்ணான மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு தனது கால் நூற்றாண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். சச்சின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று ஓராண்டு ஓடிவிட்டாலும், அவருடைய அலை மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
சென்ற வருடம் இன்றைய நாளில்தான் (நவம்பர் 16) மும்பையில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி மூன்றே நாட்களில் போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தது இந்தியா. அதோடு சச்சினின் வியப்பான சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவடைந்தது.
சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டியைக் காண அவருடைய தாய், குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர் ராம்காந்த் அச்ரேக்கர் ஆகியோர் மைதானத்துக்கு வந்திருந்தார்கள். அந்தப் போட்டியில் டாஸ் போடுவதற்கு விசேஷ நாணயம் பயன்படுத்தப்பட்டது. அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் மஹாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தின் இலச்சினையும், மறுபக்கத்தில் சச்சினின் உருவப்படமும் பொறிக்கப்பட்டிருந்தன. டாஸ் போட்டபிறகு அந்த நாணயம் சச்சினிடமே வழங்கப்பட்டது.

.
மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம் - புதையல் கொடுக்கும் பூவரசு! 

News Service
மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இது கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு.
   
கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை. அதுமட்டும்மல்ல இவற்றினால் செய்யப்படும் பிரோ, கட்டில் போன்ற பொருட்களுக்கும் தனிமதிப்புண்டு அத்தகைய பூவரசு மரத்தை வணிகரீதியாக வளர்ப்பதை பற்றிபார்ப்போமா......!
ஏக்கருக்கு 1,200 மரங்கள். ஐந்தாம் ஆண்டு முதல் வருமானம். பராமரிப்புச் செலவு இல்லை.

உலகச் செய்திகள்


ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டு தாக்குதல் 10 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலி

நைஜீரிய பாடசாலையை இலக்குவைத்து தாக்குதல்: 47 பேர் பலி:79 பேர் காயம்

ஆசிய - பசுபிக் பிராந்திய சுதந்திர வர்த்தக திட்டத்திற்கு அபெக் நாடுகள் ஆதரவு


ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டு தாக்குதல் 10 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலி


 கிழக்கஆப்கானிஸ்தானில் ன்று திங்கட்கிழமை இடம்பெற்ற இரு குண்டு தாக்குதல்களில் குறைந்தது 10 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியாகியுள்ளனர். 
லோகர் மாகாணத்தில் பொலிஸ் தலைமையகமொன்றை  இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 7 உத்தியோகத்தர்கள் பலியாகியுள்ளனர். 

காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் எல்லாள காவியத்திற்கு மூன்று விருதுகள்

.
எல்லாள காவியத்திற்கு மூன்று விருதுகள்


காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் எல்லாள காவியத்திற்கு இவ்வாண்டின் சிறந்த காவியத்திற்கான மூன்று விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை யாழ் இலக்கிய வட்டப் பரிசில். எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய தமிழியல் விருதுää கிழக்கு மாகாண நூல்தேர்வுப் பரிசில் என்பனவாகும்

பிரபல நாவலாசிரியர் செங்கை ஆழியானின் ஈழராஜா எல்லாளன் என்ற புதினத்தை கதைக்கருவாகக் கொண்டு வரலாற்றுக்கமைய கற்பனைவளங் கூட்டி 1464 பெரும்பாலும் விருத்தப் பாக்களினால் படைக்கப்பெற்றது இக்காவியம். இது நூலாசிரியரின் பத்தாவது காவியப் படைப்பாகும். இந்நூலுக்கு வடமாகாண முதலமைச்சர் மாண்புமிகு சீ.வி. விக்னேஸ்வரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளார். மூத்த கவிஞர் பன்மொழிப் புலவர் சோ.பத்மநாதன் அவர்கள் பாயிரம் பாடியுள்ளார். பிரபல ஓவியர் ஆசைஇராசையா அவர்கள் அட்டைப்பட ஓவியத்தினை வரைந்துள்ளார்.

நந்தவனம் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள்

.

நந்தவனம் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இணந்து நடத்திய சிறப்பு விழா


நந்தவனம் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இணந்து நடத்திய சிறப்பு விழா
24.10.2014 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு நந்தவனம், வளைகுடா
வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இணைந்து நடத்திய சிறப்பு விழா இந்திய தூதரக
அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் மணற்பூக்கள் என்ற
கவிதை தொகுப்பும், நடந்து முடிந்த தொல்லிசை மீட்ட வந்த தூய தமிழ்
கலைவிழாவின் குறுந்தகடும் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 12.12.2014 அன்று
நந்தவனம் நடத்தவிருக்கும் பல்சுவை கலைவிழா - 2 ன் நோட்டீஸ் வெளியீடு
சிறப்பாக நடைபெற்ற‌து.


குழந்தைகளின் நடனங்கள் பாடகர்களின் இன்னிசைப்பாடல்
வந்த்திருந்த அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. திரு.மகேஷ்
,திரு.சரவணன் இயக்கத்தில் நநதவன சிறார்களின் தமிழைத் தேடி என்ற குறு நாடகம் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெற்றது. நிகழ்வுகளை திரு.விருதை பாரி மிகவும் சிறப்பக
தொகுத்து வழங்கினார். நநதவன நிகழ்வுகளை திருமதி.தேவிரவி தொகுத்தளித்தார்.
திரு.முனு.சிவசங்கரன் வரவேற்புரையுடன் வளமாய் தொடங்கிய விழா, இரவு 9.00
மணிக்கு திரு.ஐயப்பன் நன்றியுரை நிகழ்த்த இனிதே நிறையுற்றது.
Muduvai Hidayath

எம்.எஸ்.எஸ். பாண்டியன்: அறிவை ஆயுதமாக்கிய சிந்தனையாளர்

.

அனைத்திந்திய அளவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதிலும் உள்ள தென்னாசிய ஆய்வாளர்களிடமும் பெருமதிப்பைப் பெற்றிருந்த அறிஞர்தான் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியன். 10.11.2014 மாலை, டெல்லியிலுள்ள ஏ.ஐ.ஐ.எம்.எஸ். மருத்துவமனையில் தனது 56-ம் வயதில் காலமான செய்தி பேரதிர்ச்சியாய் என் செவிகளை வந்தடைந்தது.
ஏறத்தாழ 30 ஆண்டு கால நண்பரொருவரின் மறைவு என்பதைக் காட்டிலும், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயமொன்றில் பிறந்து, நவீன சிந்தனையாளர்களில் ஒருவராக, கிராம்ஷியின் மொழியில் கூறுவதானால் ஓர் அங்கக அறிவாளியாக (organic intellectual) வளர்ச்சியடைந்து, தமிழகத்தின் சமகால அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றைத் தமக்கே உரிய கண்ணோட்டத்திலிருந்து பகுத்தாய்வும் மதிப்பீடும் செய்துவந்த மனிதர் மறைந்துவிட்டார் என்னும் துக்கமே என் போன்றோரிடம் மேலோங்கி நிற்கிறது.
கல்வியும் ஆய்வும்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் பிறந்து, பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படித்த தனக்கு, சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் சேரும் வரை ஆங்கிலத்தில் பேசவோ எழுதவோ முடிந்ததில்லை என்று அவர் அடிக்கடி கூறுவதுண்டு. சொந்த முயற்சியால் ஆங்கிலத்தில் புலமை பெற்ற அவர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (எம்.ஐ.டி.எஸ்.) மார்க்ஸியப் பொருளாதார அறிஞர் சி.டி. குரியனின் வழிகாட்டுதலில் தமிழகத்தின் நாஞ்சில் நாட்டுப் பகுதியிலுள்ள நில உடைமை உறவுகளைப் பற்றிய மிகச் சிறப்பான ஆய்வைச் செய்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.


தமிழ் சினிமா -- ஜெய்ஹிந்த்-2

ஜெய்ஹிந்த் என்ற மாபெரும் வெற்றி படத்தின் அடுத்த பாகமாக அர்ஜுன் எடுக்க நினைத்திருக்கும் படம். ஆனால், அந்த படத்திற்கும், இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. முதல் பகுதியின் வெற்றியின் காரணமாக அந்த ப்ராண்ட் டைட்டிலை பயன்படுத்தி வழக்கம் போல் நாட்டிற்கு கருத்து சொல்லும் ஒரு படத்தை இயக்கிவுள்ளார் அர்ஜுன். 


இன்றைய சமூகத்தில் ஊழல் தலை விரித்து ஆடுகிறது. இதை தடுக்க வேண்டும் என்றால் அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டும், இங்கு அந்த படிப்பிலேயே ஊழல் நடக்க அதை தன் பாணியிலிலேயே அர்ஜுன் பழிவாங்குகிறார். 

படத்தின் கதை 

கராத்தே பள்ளி நடத்தி வரும் அர்ஜுன், பணம் கொடுத்து வேலையில் சேர விருப்பமில்லாமல் நேர்மையான முறையில் வாழ வேண்டும் என்று நினைப்பவர். அவர் வசிக்கும் ஏரியாவிலுள்ள ஏழை தொழிலாளி ஒருவரது மகளுக்கு பெரிய பள்ளி ஒன்றில் படிக்க இடம் கிடைக்கிறது. 


ஆனால், அந்த பள்ளி நிர்வாகத்தினர் கேட்ட பணத்தை குழந்தையின் பெற்றோர்களால் கட்ட முடியவில்லை. இதனால் மனவேதனை அடைந்து ஒட்டுமொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதை பார்த்து வெகுண்டு எழும் அர்ஜுன், நாட்டில் உள்ள அத்தனை பள்ளிகளையும் அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும் என்று மீடியாக்களுக்கு பேட்டி அளிக்க, அதற்கு மக்கள் மத்தியிலும் பெரும் ஆதரவு கிடைக்கிறது. 


இதனால் பதறிபோகும் தனியார் பள்ளி அதிபர்கள் ஒன்று சேர்ந்து அர்ஜுனை ஒழித்துக்கட்ட முயற்சிக்கின்றனர். இதிலிருந்து தப்பித்து அர்ஜுன் எப்படி வெற்றி பெறுகிறார் எனபதே ‘ஜெய் ஹிந்த்-2’வின் கதை. 

பலம் 

படத்தின் பலமே ஒன்லி ஒன் அர்ஜுன் மட்டும் தான். திரைக்கதையில் இடை இடையே வரும் திருப்பங்களும், ஹாலிவுட் தரத்தில் அமைந்துள்ள சண்டை காட்சிகளும், எச்.சி.வேணுகோபாலின் கலர்புல் ஒளிப்பதிவு. பாடல்கள் எடுத்த விதம் அருமை. 


பலவீனம் 

காமெடி காட்சிகள் மிகவும் சோதிக்கிறது. படத்தின் கதாநாயகிகள் சுர்வின் சாவ்லா, சிம்ரன் கபூர் இருவருமே கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுகின்றனர், மற்றப்படி நடிப்பு எத்தனை கிலோ என்று கேட்பார்கள் போல. மொத்தத்தில் டைட்டிலை மட்டும் கம்பீரமாக வைத்து திரைக்கதையில் ஏமாற்றிவிட்டார் ஆக்‌ஷன் கிங். 
நன்றி cineulagam