தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

இருக்கும் வரைக்கும் ஏற்றதைச் செய்வோம்!




   

















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா 


குடும்பம் என்றால் குதூகலம் வேண்டும்
தாத்தா பாட்டியைத் தாங்கிட வேண்டும்
மூத்தோர் வார்த்தை கேட்டிட வேண்டும்
முடியும் வரைக்கும் உதவிட வேண்டும்

உறவுகள் ஒன்றாய் இணைந்திட வேண்டும்
மறைவுகள் நமக்குள் அகன்றிட வேண்டும்
கரவுடன் பழகுதல் மறந்திட வேண்டும்
கனிவுடன் உறவினைப் பேணிட வேண்டும்

செல்வம் பார்க்கா சேர்ந்திட வேண்டும்
சிறந்த பண்பை மதித்திட வேண்டும்
பொய்மை நட்பை உதறிட வேண்டும்
பொங்கும் சினத்தைப் பொசுக்கிட வேண்டும்

தமிழாய் இசையாய் மலர்ந்த கீதை


உலகளாவிய சின்மயா இயக்கம் தனது 75 - ஆவது ஆண்டினை 

கொண்டாடி வருகின்றது.   அதனொரு செயல்பாடு பகவத் கீதை  முழுவதையும் தமிழ்
ப் படுத்துவது. சுவாமி  மித்ரானந்தா அவர்களின் வழிகாட்டுதலின்படி பகவத் கீதை ஏழுபேர் கொண்ட குழுவினரால்  சிறப்பாக  தமிழ்ப்படுத்தப்பட்டது.   பதினெட்டு அத்தியாயமும் தமிழ்ப் படுத்தப்பட்டு , இசைஞானி இளையராஜா அவர்களால் 
இசையமைக்கப்பட்டது

.

மாண்புமிகு பாரத  பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்கீதை கங்கைகொண்ட சோழபுரத்தில் 27. 8 . 25 அன்று  வெளியிடப்பட்டது.

மக்களின் மேலான புரிதலுக்கு ஒரு சான்று:

பரித்ராணாய சாதுனாம் வினாஷாய ச துஷ்க்ரிதம்
தர்ம-ஸன்ஸ்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே

எப்போதெல்லாம் தர்மம் குன்றி அதர்மம் தழைத்தோங்குமோ                     அப்போதெல்லாம் என்னை நானே தோற்றுவிக்கிறேன் பாரதா!

 இந்த மாபெரும் பணியில் எழுவரில் ஒருவராய் நானும் இணைந்திருந்தது எனக்கு பெருமகிழ்வையும் நிறைவையும் தருகிறது.

 

பா. மா. சாயிலட்சுமி

சின்மயா இயக்கம்

'மிஸ்டர் கிளீனின்' கைது வரலாற்றுத் தடம்

 

24 Aug, 2025 | 10:31 AM


ஆர்.ராம்

இலங்­கையின் 8ஆவது நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­யா­க­வி­ருந்­தவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. அர­சியல் சாணக்­கி­யங்கள் நிறைந்த அவ­ருக்கு 'மிஸ்டர் கிளீன்' என்ற பெய­ரு­முண்டு. இலஞ்ச, ஊழல், மோச­டிகள் உள்­ளிட்ட  கறை­களை அவ­ரது கரங்கள் கொண்­டி­ருக்­கா­மையால் கிடைத்த பெரும் கௌரவம்.

அத்­த­கைய ஒருவர் மீது, அண்­மைய காலத்தில் அர­சாங்க நிதியை தவ­றாக பயன்­ப­டுத்தி தனிப்­பட்ட வெளி­நாட்டுப் பய­ணங்­களை மேற்­கொண்டார் என்ற குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டன. விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

இந்­நி­லையில் நேற்று முன்­தினம் வெள்­ளிக்­கி­ழமை குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால்  ரணில் அழைக்­கப்­பட்டார்.

அவ்­வாறு வாக்­கு­மூலம் பெறு­வ­தற்­காக அழைக்­கப்­பட்ட நிலையில் 9 மணி­ய­ளவில் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தில் ஆஜ­ரா­னவர் சுமார் 4 மணி நேரம் வாக்­கு­மூ­லங்­களைப் பதிவு செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து, பிற்­பகல் 1.15 மணி­ய­ளவில் குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்தின் நிதி விசா­ரணை பிரிவின் மூன்றாம் இலக்க பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நளின் ஹேரத்­தினால் கைது செய்­யப்­பட்டார்.

பின்னர் அவர் பிற்­பகல் 3 மணி­ய­ளவில் கோட்டை நீதிவான் நீதி­மன்­றத்தில் நீதிவான் நிலு­புலி லங்­கா­புர முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு பிணைக் கோரிக்­கைக்­கான வாதப்­பி­ர­தி­வாங்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

ஈற்றில் பிணை அனு­ம­தியை வழங்­கு­வதா இல்­லையா என்­பதை தீர்­மா­னிப்­ப­தற்­காக 6.15 இலி­ருந்து 9.50 வரையில் விசா­ர­ணைகள் ஒத்­தி­வைக்­கப்­பட்டு இறு­தியில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை 26ஆம் திகதி வரையில் விளக்­க­ம­றி­யலில் வைப்­ப­தற்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.  

நீதி­மன்ற உத்­த­ர­வை­ய­டுத்து ரணி­லுக்கு கைவி­லங்­கி­டப்­பட்டு சிறைச்­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்டு, அங்கே மருத்­து­வர்­களின் ஆலோ­ச­னையில் தற்­போது சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.  

ரணிலின் கைதும் தடுத்­து­வைப்பும், இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் அழிக்­க­மு­டி­யாத தடத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.  1815இல் ஸ்ரீ விக்­கி­ரம இரா­ஜ­சிங்கன் ஆங்­கி­லேய ஆட்­சி­யா­ளர்­களால் சிறைப்­பி­டிக்­கப்­பட்டார். அவர் சிறையில் தடுத்து வைக்­கப்­பட்டார்.

மீதியை மனத்திரையில் காண்க! 

 

மோகனசுந்தரம் மனைவியிடம் மிகவும் அன்பு காட்டுபவர். அந்த அன்பு எப்படி என்றால் மனைவி கற்பகம் ஒரு கன்னத்தில் அறைந்தால் பிரியசகியே இதோ இன்னொரு கன்னம் என்று மற்றொரு கன்னத்தையும் காட்டும் வள்ளல் பெருமான்.

ஒரு நாள் மிகவும் சிரமப்பட்டு மனைவி காலால் இட்ட கட்டளையை தலைமேல் வைத்து செய்து கொண்டிருந்தார். அது அப்படி என்ன தலைபோகிற வேலை என்கிறார்களா? கற்பகம் சொல்வதை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள்.

“என்னங்க சொல்லி இரண்டு நாளாச்சு அந்த ரவிக்கையில கொக்கியை தைத்து கொடுங்கன்னா ஒன்னுமே கண்டுக்க மாட்டுக்குறீங்க” என்று அங்கலாய்த்தாள் கற்பகம்.

“மணி ஏழு ஆறது. இன்னும் பெட் காபி வந்தபாடில்லை”

“முதல்ல கொக்கியை சரி படுத்துங்க. அப்புறம்தான் காபி”

எங்கே காபி கிடைக்காமல் போய்விடுமோ என்ற நினைப்பில் கருமமே கண்ணாகி ஊசியால் கொக்கியை தைத்துக் கொண்டிருந்தார். கணவன் மேலிருந்த அன்பின் மிகுதியால் காபியை எடுத்து வந்தாள். வேலைவாங்கவே கொக்கியை சரிசெய்தால்தான் காபி என்று சொன்னாள்.

காபி கொண்டு வந்தவள் இந்தாங்க காபி என்று தோள்பட்டையை அழுத்தவே ஊசி விரலில் குத்திய வலியால் துடித்துப்போய் அவர் அவளைத் தள்ளிவிட காபியை மோகனசுந்தரத்தின் தலையில் கொட்டியதோடு பக்கத்தில் இருந்த அலமாரியிலும் இடித்துக் கொண்டாள்.

கீழே விழுந்தவள் ஏங்க ஆசையா காபி கொண்டு வந்தா இப்படியா தள்ளிவிடுவீங்க என்றாள். ஊசிகுத்திய வலியால் தள்ளிவிட்டேன். அதற்குத்தான் எனக்கு காபியாபிசேகம் பண்ணிட்டியே என்றார். நான் மட்டும்தான் தள்ளிவிட்டேன் என்று எண்ணாதே உனக்கும் எனக்கும் கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிருக்கும் படியளக்கும் பரமசிவனே பார்வதியைத் தள்ளி விட்டுருக்கிறார் என்றார். அதைக்கேட்டதும்,

சொந்தங்கள் வாழ்க - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 தமிழில் வெளிவரும் சிறந்த இலக்கிய மாத இதழ் கலைமகள்.


நூற்றாண்டை நோக்கி நடை போடும் கலைமகளில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சிறுகதை காணிநிலம். பூவை எஸ் . ஆறுமுகம் எழுதிய இந்த கதை 1975ம் வருடம் சொந்தங்கள் வாழ்க என்ற பேரில் படமாக வெளியானது. 




படத்துக்கு திரைக்கதை ,வசனம் எழுதி இயக்கியவர் மதுரை திருமாறன். இவர் இயக்கிய சூதாட்டம், வாயாடி, திருடி, ரோஷக்காரி ஆகிய படங்களில் நிரந்தர நாயகியாக கே. ஆர் விஜயா நடித்து வந்த கால கட்டத்தில் இந்தப் படத்தில் அவர் நடிக்காமல் அவருக்கு பதில் கதாநாயகியாக ஜெயசித்திரா நடித்திருந்தார். காரணம் படத்தின் ஹீரோயின் ஒரு கல்லூரி மாணவி! 


கிராமத்தில் அரசியல் தலைவராக கோலோச்சுகிறார் நாகலிங்கம்.

ஆலயத் தலைவராக செல்வாக்குடன் விளங்குகிறார் கோயில் தர்மகர்த்தா. இருவரும் நெருங்கிய நண்பர்கள். மனைவியை இழந்த தர்மகர்த்தா மறுமணம் செய்யாமல் தன் ஒரே பெண் குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார். அவரின் மகளான பூங்கொடி பிடிவாதம் மிக்கவள். ஊர் மக்கள் தன் தந்தைக்குத் தான் முதல் மரியாதையை செய்ய வேண்டும் என்று எல்லா இடத்திலும் வற்புறுத்துகிறாள். நாகலிங்கத்தின் மகன் குமாரோ தன் தந்தைக்குத்தான் முதல் மரியாதையை என்று வலியுறுத்துகிறான். பெரியவர்கள் இருவரும் இதில் ஆர்வம் காட்டாத போதும் பிள்கைகளின் தொல்லை பெரும் பாடாக மாறுகிறது. பூங்கொடியின் வற்புறுத்தலால் தேர்தலில் நாகலிங்கத்தை எதிர்த்து தர்மகர்த்தா போட்டியிடுகிறார். ஆனால் அரசியல்வாதியான நாகலிங்கம் சூழ்ச்சி செய்து தர்மகர்த்தா மீது திருட்டு பட்டமும், தாசி தாசன் என்ற பழியையும் சுமத்தி அவரை தேர்தலில் இருந்து ஒதுங்க செய்கிறார். இதற்கு பழி வாங்கும் முகமாக குமார் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பூங்கொடி பஞ்சாயத்தில் குற்றம் சாட்டுகிறாள். இதன் காரணமாக குமார், பூங்கொடி திருமணம் நடக்கிறது. ஆனால் இருவரும் தாம்பத்திய உறவின்றி விலகியே இருக்கிறார்கள். இவர்கள் இணைந்தார்களா என்பதே மீதிக் கதை. 

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

27-09- 2025  Sat: சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி at The Bryan Brown Hall, Bankstown 6pm.:'

25-10-2025 Sat: சிட்னி துர்கா கோவிலில்  நிதி திரட்டும் இரவு விருந்து

26-10-2025 Sun: சிட்னி துர்கா கோவில்  மண்டபத்தில் தமிழர் விழா - துர்கா போட்டிகள் மற்றும் திருக்குறள் போட்டிகளுக்கான பரிசளிப்பும் நடைபெறும்

09-11-2025  Sunமாத்தளைசோமுவின்  100 சிறுகதைகள் நூல் வெளியீடு   ANTHONY CATHOLIC CHURCH-TOONGABBIE-4-00 pm to 6-30 pm.

29-11- 2025  Sat: Australian Medical Aid Foundation proudly presents முத்தமிழ் மாலை

இலங்கைச் செய்திகள்

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரணிலை பார்வையிட சென்றார் மஹிந்த ராஜபக்ஷ!

 மன்னாரில் 20வது நாளாக தொடரும் போராட்டம் - ஜும்ஆ தொழுகையின் பின்னர் போராட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் வர்த்தகர்கள்

சத்துருக்கொண்டான் படுகொலை : மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் மௌன அஞ்சலி ; புதைகுழி தோண்டக் கோரி பிரேரணை நிறைவேற்றம்

யாழ். பலாவி விமான நிலைய 2 ஆவது கட்ட அபிவிருத்திக்கான நிதியை இந்தியாவிடமிருந்து பெறுவதில் அரசாங்கத்திற்கு என்ன தடை உள்ளது - ஸ்ரீதரன் 


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

Published By: Digital Desk 3

22 Aug, 2025 | 02:19 PM

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கைது செய்யப்பட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 

உலகச் செய்திகள்

சந்திப்பு "மிகவும் சிறந்தது" : புட்டினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்யவுள்ளதாக டிரம்ப் தெரிவிப்பு !

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் : 29 பேர் படுகாயம்

இந்தியா மீதான அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு சீனா கண்டனம்

பாகிஸ்தான் வான் வெளியில் இந்திய விமானங்களுக்கு தடை நீடிப்பு

கராச்சியும் வெள்ளத்தில் மூழ்கியது; 10 பேர் பலி



சந்திப்பு "மிகவும் சிறந்தது" : புட்டினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்யவுள்ளதாக டிரம்ப் தெரிவிப்பு !

Published By: Priyatharshan

19 Aug, 2025 | 07:18 AM

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி மற்றும் ஏனைய ஐரோப்பிய தலைவர்களுடன் முன்னெடுக்கப்பட்ட சந்திப்பு "மிகவும் சிறந்ததாக" இருந்தது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில்,  உக்ரைன் பாதுகாப்பு நிலைமை, ஐரோப்பிய நட்டு நாடுகளுடன் இணைந்த ஒத்துழைப்பு, உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான தற்போதைய பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தாம் தொலைபேசியில் உரையாடியதாகவும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நேரடி சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். 

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 52 “நூல்களைப் பேசுவோம்”


நாள்:         சனிக்கிழமை 30-08-2025       

நேரம்:  

இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 9.30      

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

வழி:  ZOOM

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

நூல்களைப் பேசுவோம்:

தாமரைச்செல்வியின் “சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு” சிறுகதைத்தொகுப்பு

 

உரை: இரா. பிரேமா

பா.இரகுவரனின் “காத்தவராயன் வழிபாடு காத்தவராயன் நாடகம்” ஆய்வு நூல் 

உரை: சு.குணேஸ்வரன்

ப.சண்முகத்தின் “தென்னிந்தியப் பொருளாதாரம் - சில பரிமாணங்கள் ஆய்வு நூல் 

உரை: எம்.எம்.ஜெயசீலன்

ஒருங்கிணைப்பு: அகில்  சாம்பசிவம்

விநாயகர் சதுர்த்தி & விநாயகர் கலைவு - 31/08/2025

 


வி


சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி 27/09/2025



முத்தமிழ் மாலை 29/11/2025