துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் - மாசிமக தீர்த்தத் திருவிழா

மாசிமக தீர்த்தத் திருவிழா 07 .03 .2012 புதன்கிழமை பக்தி பூர்வமாக இடம் பெற்றது.  துர்க்கை அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு மயில் வாகனத்தில்  வீதி உலா வந்த காட்சி கண் கொள்ளா காட்சியாக இருந்தது .

திருவிழாவிற்காக மலேசியாவில் இருந்து வருகை தந்திருக்கும் தவில் வித்துவான் உள்ளூர் கலையர்களுடன் அருமையான இசையை தந்தார் .


படங்கள் கீழேதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 9ம் நாள்

படங்கள் கீழேசிட்னியில் நாதஸ்வர தவில் இன்னிசை நிகழ்ச்சி 09.03.2012 மாலை6:30துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 8ம் நாள்

படங்கள் கீழே

துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 7ம் நாள்

7ம் நாள் திருவிழா நேற்று(௦04-௦03-2012) பக்தி பூர்வமாக இடம் பெற்றது. துர்க்கை அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்த காட்சி கண் கொள்ளா காட்சியாக இருந்தது .திருவிழாவிற்காக மலேசியாவில் இருந்து வருகை தந்திருக்கும் தவில் வித்துவான் உள்ளூர் கலையர்களுடன் அருமையான இசையை தந்தார் .


படங்கள் கீழே


அணைக்கட்டு உயர்ந்து கொண்டு போகின்றது.- செ.பாஸ்கரன்


நியூ சவுத்வேல்ஸ் மானிலம் வெள்ளப்பெருக்கால் திணறிக்கொண்டிருக்கிறது. மழையோ தொடர்ந்து கொட் டிக்கொண்டு இருக்கிறது. warragamba அணைக்கட்டு 30 வருடங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து கொண்டு போகின்றது. சனிக்கிழமை இரவு தமிழ்முழக்கம் வானொலியில் நான் இதுபற்றி இவற்றோடு பணிபுரியும் தமிழ்ப் பொறியியலாளர் திரு. மகேஸ்வரன் அவர்களோடு கலந்துரையாடினேன் அவர் பல வகையில் இந்த வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டிருக்கும் விழைவுகள் பற்றி பேசியதோடு குடிதண்ணீரில் எந்தப் பிரச்சினையும் இல்லை தொடர்ந்து பருகக்கூடிய வகையில் பராமரிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்ததை பல நேயர்கள் கேட்டிருப்பீர்கள்.

warragambaஅணையின் நீர்மட்டம் உயர்துள்ளதால் தானியங்கி கதவு திறந்து நீர்மட்டத்தை குறைக்கும் செயற்பாடு நடைபெறுவதாகவும் மேலதிக நீர் ஆற்றில் விடப்படுகின்றது என்றும் அறிந்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு சென்று அதை பார்வையிட்டார்கள். நாங்களும் அதை பார்த்து விடுவோம் என அங்கு சென்று அதைப்பார்த்தோம். இங்குள்ளவர்களுக்கு 30 வருடங்களுக்கு பின்பு நடந்த இந்த நிகழ்வு மிகப்பெரிய விடயமாக இருந்திருக்கலாம் ஆனால் கிளிநொச்சியில் இரணைமடு வான் பாய்ந்த காட்சியை பார்த்த என்னை இந்த அணைக்கட்டால் பாய்ந்த தண்ணீர் பெரிதாக கவர்ந்திருக்கவில்லை என்பதே உண்மையாகும்.

ஆரோக்கியமேரி என்றழைக்கப்பட்ட மேரி ஃபிலோமினா


- எம்.ரிஷான் ஷெரீப்


'ஓ பரமபிதாவே'
துளி நம்பிக்கையும் சிதறிப்போன அன்று
ஆச்சியின் அழுகை ஓலம்
ஆஸ்பத்திரி வளாகத்தை
அதிரச் செய்திருக்கக் கூடும்

சளி இறுகிச் சிதைத்த நெஞ்சுக் கூட்டோடு
வசதிகள் குறைந்த வவுனியா வைத்தியசாலை
பல நூறு கிலோமீற்றர்கள் தொலைவில் அவளை
கண்டிக்கு அனுப்பியிருந்தது
வானமும் அதிர்ந்த நாளதில்
உயர் மருத்துவம்
மகளை எப்படியும் காப்பாற்றிடும்
நம்பிக்கையும் ஜெபமாலையும் துணையாக
ஆச்சியும் வந்திருந்தாள்

மௌனம் கலைகிறது 6 - நடராஜா குருபரன்

.
கனவாகிப் போன சிவராமின் எதிர்பார்ப்பும் இராணுவ நிகழ்ச்சி நிரலுக்கு ஆட்பட்ட கருணாவும்.

முதலில் கிழக்கின் உடைவு-கருணா-தராக்கி என்ற பகுதி பற்றி வந்த முக்கியமான சில விமர்சனங்களுக்குப் பதிலளித்துத் தொடரவிரும்புகிறேன்..

சிவராம் என்கிற தனிமனிதரைத் தாக்குவதற்காக அல்லது அம்பலப்படுத்துவதற்காகவே நீ உனது மெளனத்தைக் கலைத்ததுபோற் தெரிகிறது எனச் சில நண்பர்கள் விமர்சித்திருந்தார்கள்.

எனது இந்தத் தொடரை ஆரம்பத்தில் இருந்து கவனமாகவும் ஆழமாகவும் வாசித்து வருபவர்கள் இத்தொடர் தனிநபர் மீதான சேறடிப்பை நோக்கமாகக் கொண்டதல்ல என்பதை உணர்வார்கள். மேலும் கடந்த மூன்று வருடங்களாக இயங்கி வரும் எங்களது ஊடக வெளியில் தனிநபர் தாக்குதல்களோ சேறடிப்புக்களோ நிகழ்ந்ததில்லை என்பதை அனைவரும் அறிவர்.

இலங்கைச் செய்திகள்

பயணிகளை வீடு தேடிச் சென்று ஏற்றுவதால் கொழும்புக்கு தாமதமாகச் செல்லும் பஸ்கள்

காணிக் கொள்வனவில் அதிகரித்துவரும் மோசடிகள்

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு

டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 123 ரூபாவாக குறைந்தது
இலங்கைக்கு உதவ ஈரான் உறுதி: றிசாத்கொள்ளுப்பிட்டி தமிழ்ப் பெண் கொலை: சந்தேக நபர் கைது


50 இலட்சம் ரூபா சீதனம் பெற்ற பின் பெண்ணை ஏமாற்றிய வைத்தியர்


காலம் கனிந்து வரும் நிலையில் தமிழ்த் தலைமைகள் முரண்பட்டால் தமிழ் மக்களுக்கு அது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்


இரவிச்சந்திராவுக்கு ஓடர் ஒவ் அவுஸ்திரேலியாவிருது


.
பிரபல மிருதங்க வித்துவான் இரவிச்சந்திராவுக்கு
ஓடர் ஒவ் அவுஸ்திரேலியா (OAM விருது.    பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


மெல்பேணில் கடந்த 29 வருடங்களாக வாழ்ந்துவரும் மிருதங்க வித்துவான்  மதியாபரணம் இரவிச்சந்திராவுக்கு அவுஸ்திரேலிய அரசின் சமூகசேவையாளர்களுக்கான உயர்ந்த பாராட்டுக்களில் ஒன்றான “ஓடர் ஒவ் அவுஸ்திரேலியா” என்ற விருது அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வழங்கப்படும் “பத்மவிபூசன்”; விருதுக்குச் சமமானதாக இதனைக் கொள்ளலாம். உத்தியோக ரீதியாக விக்றோட்ஸ் நிறுவனத்தில் உயர்பதவி வகிக்கும் ஒரு பொறியியல் பட்டதாரியான இரவிச்சந்திரா மிருதங்க ஆசிரியராக அவுஸ்திரேலியாவில் இதுவரை தனது 38 மாணவர்களுக்கு அரங்கேற்றம் கண்டவர். அவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மிருதங்கக் கலையினைப் பயின்றுவருகின்றார்கள்.

குட்டிக் கதை ஒன்று..

.
ஒரு நாள் உடல் உறுப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்த வயிற்றைப் பற்றிக் குறைபேசிக்கொண்டிருந்தன.
என்னடா இது நாமெல்லாம் உழைக்க இந்த வயிறு மட்டும் எந்த வேலையும் செய்யாமல் உண்டு உண்டு வயிறுவளர்க்கிறதே என்று..
இந்த சத்தம் வயிற்றுக்கும் கேட்டது. 

வயிறு உடல் உறுப்புகளைப் பார்த்துக் கேட்டது..
'ஏம்பா என்னை எல்லோரும் சேர்ந்து திட்டுறீங்க? நான் என்ன எந்த வேலையுமே செய்யாமலா இருக்கிறேன்..

நானும்தான் வேலை செய்கிறேன்என்றது..
அதற்கு எல்லா உறுப்புகளும் ஒன்று சேர்ந்து சத்தமிட்டன..
ஆமாமா... நீயும் உழைப்பது உன் தொப்பையைப் பார்த்தாலே தெரியுதே என்று..

நாங்களெல்லாம் சேர்ந்து ஒரு முடிவெடுத்திருக்கிறோம் என்றது தொண்டை 

என்ன என்று அச்சத்தோடு கேட்டது வயிறு..

உதடுகள் பேசின..

இனிமேல் நாங்களும் உனக்காக உழைக்கப்போவதில்லை! நீ எப்படி வயிறு வளர்க்கிறாய் என்பதைத்தான் பார்க்கப்போகிறோம் என்று..
வயிறு எதுவும் பேசவில்லை... அமைதியாக இருந்தது.

சிட்னி ஸ்ரீ துர்கை அம்மன் திருக்கோயில் அலங்கார உற்சவம் 27-02-2012 முதல் 09-03-2012 வரை


எனக்குப் பயமாய்க்கிடக்குது – ஈழத்து சிறுகதை


.


வே.சிவராஜா- உப செயலாளர் மகாஜன சபை கலைஞர் வட்டம், சமூக சேவை உத்தியோகத்தர்-ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் பிரிவு அவர்களால் எழுதப்பட்டது. உதயன் நாளிதளின் வெள்ளி விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட எழுத்தாக்கப் போட்டியில் முதற் பரிசு பெற்றது.


“ஒருகாலத்திலை சரியெண்டு சொல்லப்பட்ட விசயம் இன்னொரு காலத்தில் பிழையாய் கேவலமானதாய் பேசப்பட்டிருக்குப்பிள்ளை. அஞ்சுபேருக்கு ஒருபொம்பிளை பெண்சாதியாய் இருந்ததைச் சரியெண்டு சொல்லியும் கதை வந்திருக்கு. ஒருத்தனுக்கு ஒருத்தி என்றும் ராமர்-சீதை கதை இருக்கு. இரண்டும் அந்தந்தக்காலத்துக்குச்சரி. காலம் மாறமாற நியாயங்களும் மாறும். இதுதான் சரியென்டு நிரந்தரமாய் ஒண்டும் இல்லைப் பிள்ளை. நீ ஒண்டைப் பற்றியும் யோசிக்காதை. இஞ்சை நாங்கள் உயிரோட இருக்கிறது தான் பெரிய விசயம்.” நலன்புரிமுகாமில் இருந்து முதற்கட்டமாக அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டபோது விடுதலையாகிச் சென்று விட்ட இந்ததத்துவ வரிகளுக்குச் சொந்தக்காரியான “மணியாச்சி” யின் நினைவு இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது. படிப்பறிவு குறைவு என்றாலும் உலகஅனுபவத்தில் கற்றுக்கொண்ட பாடத்தால் வாழ்க்கை பற்றிய ஒருதெளிவும் எந்தப்பிரச்சினைக்கான தீர்வும் ஆச்சியிடமிருந்தது. அறுபது வயது தாண்டியும் ஆச்சியால் எல்லாவேளையிலும் தெளிவாக சிந்திக்க முடிந்தது. ஆச்சி எங்களைவிட்டுப்போய் ஏறக்குறைய ஒருவருடம் கடந்து விட்டது. இப்பொழுதும் கூட இருந்திருந்தால் இந்தப்பிரச்சினைகளுக்கெல்லாம் சரியான தீர்வு சொல்லியிருப்பார் என்று தோன்றுகிறது.

சட்டவிரோத குடியேற்ற வாசிகளை தடுத்து வைப்பதற்கு அவுஸ்திரேலியாவில் புதிய முகாம்

Thursday, 01 March 2012

சட்டவிரோதமாக குடியேறும் இலங்கை உட்பட ஏனைய நாடுகளின் அகதிகளை தடுத்துவைப்பதற்கு அவுஸ்திரேலியா தடுப்பு நிலையமொன்றை அமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் கிழக்கு பேர்த்தில் நோர்த்தாம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இந்த தடுப்பு நிலையம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் கட்டுமானப் பணிகள் இழுபறிக்குள்ளாகியுள்ளதால் மார்ச் மாதமே பணிகள் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் கடைசிப் பகுதியிலேயே இத்தடுப்பு முகாம் செயற்படத் தொடங்குமென தெரிவிக்கப்படுகிறது.

இந்த தடுப்பு நிலையத்தில் இலங்கை, ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 அகதிகள் தடுத்து வைக்கப்படவுள்ளனர்.

நன்றி தினக்குரல்

மார்ச் 14 இல் மற்றொரு ஒளிநாடாவை வெளியிடுகிறது பிரிட்டனின் சனல்4

Thursday, 01 March 2012

channel_4_video_லங்கை தொடர்பான மற்றொரு ஒளிநாடாவை பிரிட்டனின் சனல்4 இந்த மாதம் வெளியிடவுள்ளது. போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான புதிய ஆதாரத்தை இந்த ஒளிநாடா கொண்டிருக்கும் என்ற கூறப்படுகிறது. மார்ச் 14 இல் இந்தப் புதிய ஒளிநாடா வெளியிடப்படுமென சனல்4 கூறியுள்ளது

இதேவேளை, இங்கிலாந்தின் கிரிக்கெட் அணி மீண்டும் ஒரு தடவை இந்த மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையிலும் 2013 இல் பொதுநலவாய உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதென்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ள தருணத்திலும் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப் படமானது சர்வதேச சமூகத்தால் மக்கள் மோசமாக துன்பப்படுவது மறக்கப்பட்டிருப்பதை கண்டிருப்பதை நினைவூட்டும் விடயமாக உள்ளது என்று பிரிட்டனின் சனல் 4 செய்திச் சேவையின் பணிப்பாளர் கல்லும் மக்ரே குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு செய்திகள்

புனித நூல்கள் எரிக்கப்பட்டமைக்கு பழிதீர்க்கும் முகமாக ஆப்கானில் தாக்குதல்


புட்டினை கொல்வதற்கான சதித்திட்டம் முறியடிப்பு

சிரியாவில் இடம்பெற்று வரும் வன்முறைகளில் 7500 பொது மக்கள் இது வரை உயிரிழப்பு


நிரந்தர வதிவிட உரிமை பெற்றவர்களுக்கு பிரிட்டனில் பயோமெட்ரிக் உரிமம்


அமெரிக்காவில் பாரிய சூறாவளி 12 பேர் பலி ; பலரைக் காணவில்லைஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானில் 18 பயணிகள் பலி

தமிழ் சினிமாகாதலில் சொதப்புவது எப்படி
சின்ன சின்ன விசயத்திற்காக சண்டைப் போட்டு பிரிந்து விடும் இன்றைய காதலை, நகைச்சுவை கலந்து படமாக இயக்கி வெற்றிப் பெற்றுள்ளார் இயக்குனர் பாலாஜி மோகன்.

நீண்ட நாட்கள் கழித்து நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடித்து உள்ளார். படத்திற்கு இணை தயாரிப்பாளாராகவும் உள்ளார். அமலாபால் கதாநாயகியாக நன்றாக நடித்து உள்ளார்.

தொடர்ந்து இதுபோல படங்களில் நடித்தால் நடிகை ரேவதி போல சிறந்த நடிகைக்கான இடம் கிடைக்கும் . செல் பேசி ,இணைய முகப்பு புத்தகம், நண்பர்கள் இவற்றின் காரணமாக இன்றைய காதலர்கள் சந்திக்கும் பிரச்சனையை நன்கு கையாண்டு உள்ளார் இயக்குனர் பாலாஜி மோகன்.

காதலில் சொதப்புவது எப்படிஆண்களா ? பெண்களா ? என்ற பட்டி மன்றம் பார்ப்பதுப் போன்ற உணர்வு வருகின்றது . நேசிப்பது வெறுப்பது இரண்டிலும் பெண்கள்தான் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். ஆண்களை நண்பர்கள் உசுபேத்தி காதலை சொதப்பி விடுகிறார்கள். இன்றைய இளைஞர்கள் பலர் குடிக்கு அடிமை ஆகிறார்கள். குடியை பெண்கள் யாருமே விரும்புவதில்லை. நண்பர்களின் வற்புறுத்தலின் காரணமாக குடித்ததன் காரணமாக காதலில் சொதப்பி காதலியை இழந்த கதை நிறைய உண்டு.

அதை இளைஞர்களுக்கு உணர்த்தும் விதமாக திரைப்படத்தில் காட்டி உள்ளார். புரிதல் இல்லாமல் சிறு சண்டைப் போட்டுப் பிரியும் காதலர்கள் பற்றிய கதை. காதலில் சொதப்புவது எப்படி?என்று, படத்தின் பெயர் எதிர்மறை சிந்தனையாக உள்ளதே என்று நான் யோசித்தேன். ஆனால் இந்தப் படம் பார்க்கும் காதலர்கள், சொதப்பாமல் காதலிப்பது எப்படி?என்பதை உணர்த்துகின்றது. தமனின் இசை நன்றாக உள்ளது.

அமலாபால் பெயர் பார்வதி, பார்வதியின் அம்மா அப்பா இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். விவாகரத்து வாங்க முயல்கின்றனர். அப்பா அம்மா பிரிவு பார்வதியின் மன நிலையை வருத்தப் படுத்துகின்றது. அந்த வருத்தம் அவள் காதலில் பிரதிப்பலிக்கின்றது. காதலனுடன் சண்டையிட நேருகின்றது. பார்வதியின் தாத்தா பாட்டிக்கு எண்பது திருமணம் வருகின்றது. பிரிந்து வாழும் தந்தையை பார்வதி திருமணத்திற்கு அழைக்கின்றாள். தந்தையாக நடிகர் சுரேஷ் நன்றாக நடித்து உள்ளார்.

மாமனாரின் எண்பது திருமணத்திற்கு வந்து பிரிந்த மனைவியை சந்திக்க பாசம் வந்து அன்பு வந்து விவாகரத்து எண்ணத்தை கைவிட்டு இணைகின்றனர். கருத்து வேறுபாடு வந்தால் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். பேசாமல் இருந்து பிரிவது தவறு. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற கருத்தை நன்கு உணர்த்தி உள்ளார்.

காதலில் மட்டுமல்ல குடும்பத்தில் சொதப்பாமல் இருபது எப்படி? என்பதையும் உணர்த்துகின்றது. படத்தில் ஆபாசம் நடனம், வன்முறை, வெட்டுக் குத்து, குத்துப் பாட்டு எதுவும் இல்லாமல் தரமாக மென்மையான காதலை மிக மேன்மையாக வடித்துள்ளார்.

தாத்தா பாட்டி தலைமுறை இறுதி மூச்சு வரை இணைந்து வாழ்கின்றது. அப்பா அம்மா தலைமுறை பிரிய முயலுகின்றது. பேரன் பேதி தலைமுறை உடனே பிரிந்து விடுகின்றது என்ற கருத்தை வலியுறுத்துகின்றார். காதல் கிடைப்பது அரிது கிடைத்த காதலை சொதப்பி இழந்து விடக் கூடாது. சிறு சிறு விசயங்களைப் பெரிதுப்படுத்தி காதலை இழந்து விடாதீர்கள்.

இப்படி பல்வேறு தகவல்களை படத்தில் வழங்கி உள்ள இயக்குனர் பாலாஜி மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள். வழக்கமான தமிழ்த் திரைப்படப் பாணியில் இருந்து மாறுபட்டு வித்தியாசமாக சிந்தித்து, படத்தை நன்றாக வழங்கி உள்ளார்.


நன்றி விடுப்புஅம்புலி

தமிழின் முதல் ஸ்டீரியோஸ்கோப் 3 டி படம் என்ற அறிமுகத்தோடு வந்திருக்கிறது அம்புலி.

மனோஜ் ஷியாமளனின் வில்லேஜ் மாதிரி ஒரு த்ரில்லர் கதையை 3 டியில் சொல்ல முயன்றிருக்கிறார்கள் புதிய இயக்குநர்கள் ஹரி சங்கர் - ஹரீஷ் நாராயணன்.

நடிகர்கள்: பார்த்திபன், அஜய், ஸ்ரீஜித், தம்பி ராமையா, சனம், ஜோதிஷா அம்மு, ஜெகன், கோகுல்

இசை: வெங்கட் பிரபு சங்கர், சாம், சதீஷ், மெர்வின்

பிஆர்ஓ: மவுனம் ரவி

ஒளிப்பதிவு: சதீஷ் ஜி

எடிட்டிங்: ஹரி சங்கர்

எழுத்து - இயக்கம்: ஹரி சங்கர் - ஹரீஷ் நாராயணன்.

தயாரிப்பு: கேடிவிஆர் லோகநாதன்


இந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் அவர்களுக்குக் கிட்டியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். க்ளைமாக்ஸை இன்னும் புத்திசாலித்தனமாக, மிரட்டலாக அமைத்திருந்தால் இந்தப் படத்தின் ரேஞ்சே வேறு.

எழுபதுகளின் இறுதியில் நடக்கிறது கதை. கிராமத்தையொட்டியுள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் வேந்தன் (ஸ்ரீஜித்) அமுதன் (அஜய்) இருவரும், கோடை விடுமுறைக்கு கூட ஊருக்குச் செல்லாமல் கல்லூரி வாளகத்திலேயே தங்கிவிடுகின்றனர். வேந்தனின் தந்தை தம்பி ராமையாதான் அந்தக் கல்லூரி வாட்ச்மேன். அமுதனுக்கு பக்கத்து கிராம பஞ்சாயத்து தலைவர் பெண் மீது காதல். இந்த விடுமுறையில் காதலைச் சொல்ல அங்கேயே தங்கிவிடுகிறான்.

ஒரு இரவு நண்பன் துணையுடன் தன் காதலியைப் பார்க்கச் செல்கிறான். இந்த கிராமத்திலிருந்து பக்கத்து கிராமத்துக்கு செல்ல ஒரு சோளக்காட்டு குறுக்கு வழி உண்டு. ஆனால் அந்த வழியாக யாரும் செல்லப் பயப்படுவார்கள். காரணம் அம்புலி. அம்புலி ஆளை அடித்து கொன்றுவிடும் என்ற பயம். அதற்காகவே சோளக்காட்டுக்கு குறுக்கே தடுப்பு சுவரெழுப்பி வசிக்கிறார்கள் கிராமத்தினர்.

ஆனால் அந்த பயமின்றி, நண்பனை தடுப்பு சுவர் அருகில் நிற்கவைத்துவிட்டு நிலா இரவில் காதலியைப் பார்க்கப் போகிறான் அமுதன். போகும்போது பிரச்சினையில்லை. வரும்போது அவனை நடுங்க வைத்துவிடும் அளவு திகிலான நிகழ்வுகள் நடக்க அலறிப் புடைத்துக் கொண்டு வருகிறான் அமுதன்.

தனக்கு நேர்ந்ததை நண்பனிடம் சொல்ல, அதைக் கேட்கும் தம்பி ராமையா அம்புலியின் கதையைச் சொல்கிறார்.

ப்ளாஷ்பேக்கில் கர்ப்பிணியான உமா ரியாஸுக்கு குழந்தை பிறக்கிறது. பிறக்கும்போதே மிருகமாகப் பிறக்கும் அந்தக் குழந்தை, மருத்துவம் பார்த்த பெண்ணின் கழுத்தைக் கடித்துக் கொன்றுவிடுகிறது. ஊர் பயந்து நடுங்குகிறது. அந்த குழந்தையை கொல்லச் சொல்லி வற்புறுத்த, கொல்ல மனமின்றி, புறவாசல் பக்கம் இருக்கு சோளக்காட்டுக்கு துரத்திவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்கிறார் உமா. அந்தக் குழந்தை வளர்ந்து அம்புலியாகி, மனிதர்களை அடித்துக் கொன்று சாப்பிடும் அளவுக்குப் போய்விட்டதாக தம்பி ராமையா சொல்கிறார். இந்த அம்புலியுடன் பிறந்தவரான பார்த்திபன் மட்டும் அம்புலிக்குப் பயப்படாமல் சோளக்காட்டுக்கு நடுவில் குடிசை கட்டி வசிக்கிறார்.

ஒரு பெண்ணின் வயிற்றில் இப்படியொரு மிருகம் தோன்ற காரணம் என்ன என்பது இன்னொரு கிளைக்கதை. இந்த அம்புலியை எப்படி அழித்தார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

தமிழில் சில காட்சிகளைத்தான் இதற்கு முன்பு 3 டியில் காட்டினார்கள். ஆனால் இந்தப் படத்தில் அனைத்துக் காட்சிகளுமே 3 டி. சில காட்சிகளில் ஈட்டி கண்ணைக் குத்திவிடுமோ என சட்டென்று கண்ணாடியைக் கழட்டுமளவுக்கு அசத்தல்.

மகள் சொல்லச் சொல்ல கேட்காமல் சோளக்காட்டுக்கு நடுவில் குடித்துவிட்டு தடுமாறிக்கொண்டே அடமாக மொட்டை ராஜேந்திரன் நடக்கும் அந்தக் காட்சியே கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது.

ஆனால் சில காட்சிகள் தொடர்பற்றுத் தெரிவதால், குழப்பங்கள், கேள்விகள். பார்த்திபன் பாத்திரம் மிரட்டலாக இருந்தாலும், அந்தப் பாத்திரம் அம்புலியைக் கொல்ல வருவது எதனால் என்பதில் தெளிவில்லை.

அம்புலி என்ற அந்த கேரக்டருக்கு படம் முழுக்க அவ்வளவு பில்ட் அப் கொடுத்துவிட்டு, கடைசியில் மனிதக்குரங்கை விட சற்று பெரிய சைஸ் உருவத்தைக் காட்டி, இதுதான் அத்தனை கொலைகளுக்கும் காரணமான அம்புலி எனும்போது சப்பென்றாகிவிடுகிறது, அந்த சஸ்பென்ஸ்.

குறைகள் சில இருந்தாலும், ஒரு வித்தியாசமான முயற்சி என்ற வகையில் இந்தப் படத்தை பாராட்டத்தான் வேண்டும். அதுவும் எந்த வெளிநாட்டு கலைஞர்களின் துணையுமின்றி, கோடம்பாக்கத்திலேயே இத்தனை நுட்பமாக 3டி படம் காட்டியிருப்பது சாதாரண விஷயமல்ல.

வெறும் ஹார்ரர் வகைப் படமாகக் காட்டாமல், விஞ்ஞான ஆராய்ச்சி என்ற பெயரில் நடக்கும் விபரீதங்களைத் தவிர்ப்போம் என்ற மெசேஜும் படத்தில் உண்டு.

ஹீரோக்கள் என்று யாரையும் சொல்ல முடியாது. எல்லோருமே முக்கிய பாத்திரங்கள்தான். இவர்களில் பார்த்திபன் அசத்தலாக செய்திருக்கிறார். என்ன அவரது தோற்றம்தான் ஆயிரத்தில் ஒருவனை நினைவுபடுத்துவதாக உள்ளது.

புதியவர்கள் ஹரீஷ், ஸ்ரீஜித், கோகுல், சனம், ஜோதிஷா அம்மு என அனைவருமே சரியாக செய்திருக்கிறார்கள் தங்கள் பாத்திரங்களை. தம்பி ராமையா வழக்கம் போல அருமையான நடிப்பைத் தந்துள்ளார்.

ஜெகன்தான் படத்தில் அம்புலியை உண்மையில் கண்டுபிடிப்பவர். சிறப்பாக செய்துள்ளார். அம்புலியாக கோகுல் நடித்துள்ளார்.

நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்த படம். இரண்டு பாடல்கள் ஓகே. பின்னணி இசை நன்றாக உள்ளது. ஒளிப்பதிவுதான் படத்துக்கு உண்மையான ஹீரோ. அந்த சோளக்காட்டை காட்டிய விதத்திலேயே பாதி பயத்தை மனதில் விதைத்துவிடுகிறார் ஒளிப்பதிவாளர் சதீஷ் ஜி. ஹரி சங்கரின் எடிட்டிங் கச்சிதம். படத்தை இரண்டரை மணி நேரத்துக்குள் முடித்திருப்பது இன்னொரு ப்ளஸ்.

முதல் பரீட்சையே கடினமானதாக அமைந்திருந்தாலும், விருப்பத்தோடு செய்திருப்பதால் பார்வையாளர்களிடம் பாஸ் மார்க்கோடு, பாராட்டுகளையும் பெறுகின்றனர் புதிய இயக்குநர்கள்!

நன்றி குசும்பு