ஆல முண்ட ஆண்டவனே அவர் அவலம் போக்கிவிடு !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா 




வளர்ந்து வந்த நாடாக
வரைபடத்தில் இடம் பிடித்து
மருத்துவத்தில் பல கண்டு
வானுயர வாழ்த்துப் பெற்ற

பாரதத்தின் நிலை காண
பதை பதைப்பு வருகிறது
பாதை எலாம் ஓலமிடும்
மக்கள் துயர் பெருகிறது  ! 

 

அலை இரண்டின் எழுச்சியதால்
அவலங்கள் பெருகி நின்று
அல்லல் படும் மக்களினை
ஆர் அணைக்க வருவாரோ !

ஆக்கிசனை தேடி மக்கள்
அலைந் தலைந்து ஓடுகிறார்
அல்லல் உறும் மக்கள்தமை
ஆர் காக்க வருவாரோ !

பரா மரிக்கும் மருத்துவர்கள்
பரி தவித்து நிற்கின்றார்
பால் அருந்தும் பாலகரும்
மருந் தின்றி தவிக்கின்றார் !

அம்புலன்சு கொண்டு வரும்
அவஸ்த்தைப் படும் பலபேரும்
ஆர்வருவார் என ஏங்கி
அதற் குள்ளே மாழுகிறார் !

பரா மரிக்க வழியின்றி
படுக்கும் நிலை பாதையிலே
பதை பதைத்து துடிதுடித்து
பாதை எலாம் மரணங்கள் !

நந்தவனத்து ஆண்டிகளும் போட்டுடைத்த தோண்டிகளும் அவதானி



நேற்றைய செய்தி நாளைய வரலாறு என்பார்கள்.  வரலாற்றிலிருந்துதான் பாடங்களையும் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.

எதனையோ கேட்டு, எதனையோ அடைந்து, இறுதியில் ஆப்பிழுத்த குரங்கின் கதிக்கு ஆளாகிய பாடத்தை கற்றுக்கொண்ட வரலாற்றையே கடந்துகொண்டிருக்கின்றோம்.

அகிம்சையில் தொடங்கி, ஆயுதபாதைக்கு தள்ளப்பட்டு, இப்போது இராஜதந்திர அரசியல் செய்கிறோம் எனச்சொல்லும் தமிழர் தரப்பின் பேச்சாளர்களை சமகாலத்தில் பார்த்துவருகின்றோம்.

இலங்கைத் தீவுக்கு விஜயன் வந்து  ஈராயிரம் ஆண்டுகள் கடந்த நிலையில், உள்நாட்டு சுதேச மன்னர்கள், சிற்றரசர்கள்


வசமிருந்தபோது, யாழ்ப்பாணம், கண்டி, கோட்டே முதலான இராஜதானிகள் இருந்ததாக வரலாறு கூறுகிறது.

வர்த்தக நோக்கத்துடன் வந்த விதேசியர்கள் நாட்டைப்பிடித்து, தங்கள் உள்நோக்கங்களை நிறைவேற்றிவிட்டு, எங்கள் தேசத்தை     அம்போ  என கைவிட்டுச்சென்ற பின்னர், ஏதோவெல்லாம் நடந்து முடிந்துவிட்டன.

அன்றையசெய்திகள் யாவும் வரலாறாகியதுதான் மிச்சம்.

தந்தை செல்வா, வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பின்னர் 1976 ஆம் ஆண்டு, தேசிய அரசுப்பேரவையில் ( அன்றைய நாடாளுமன்றம் ) பேசுகையில்,   தமிழ் மக்கள் இழந்த உரிமைகளை மீட்க, நாங்கள் ஒரு காலத்தில் இணைப்பாட்சி                ( சமஷ்டி )   கேட்டோம். அதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவது சாத்தியம் இல்லை என்பதை பட்டறிவு மூலம் உணர்ந்தோம். எனவே, நாங்கள் பிரிந்து  வாழ்வதுதான் வழி என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். இதை நாம் செய்யாவிடின் தமிழினம் இழந்த தனது உரிமைகளை ஒருபோதும் மீட்க முடியாது. எங்களுக்கென ஒரு பாரம்பரிய பூமி உள்ளது. நாங்கள் பிரிவினை கோரவில்லை. இழந்த எங்கள் உரிமைகளை , எங்கள் அரசை மீட்டுப் பெறுவதே எங்கள் நிலை. தனித்தமிழ் ஈழம் என்ற இலட்சியத்தை நோக்கி நாங்கள் முன்னேறுவோம்.

சிட்னி தமிழ் இலக்கிய கலைமன்றம் நடத்திய சிலப்பதிகார விழா

 படப்பிடிப்பு : நிரஞ்சன் நிரோஷன் 

   ஏப்ரல் மாதம் 10ம் திகதி சிட்னி  தமிழ் இலக்கிய கலைமன்றம் நடத்திய சிலப்பதிகார விழா வெகுசிறபப்பாக நடைபெற்றது.

இரண்டாயிரம் ஆண்டுகளிற்க்கு முத்தமிழிற்கு சிறப்பாக தமிழரின் பண்பாடுகளை தமிழ் இசைக்கு இலக்கணம் வகுத்த

சிலப்பதிகாரத்தை அருளிச்செய்த இளங்கோ அடிகளின் சிலைக்கு மாலைஅணிவித்து விழா தொடங்கியது.
திருக்குறள் போட்டி, சமய அறிவுப் போட்டி ஆகியவற்றின் பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.



படித்தோம் சொல்கின்றோம்: நடேசன் எழுதிய அந்தரங்கம் கதைத் தொகுதி மாயாவாதமும் அவிழ்க்கவேண்டிய முடிச்சுகளும் கொண்ட கதைகள் ! முருகபூபதி


னித வாழ்வில் அந்தரங்கங்களுக்கு குறைவிருக்காது.  அந்தரங்கம் அவரவர்க்கு புனிதமானது. ஜெயகாந்தனும் அந்தரங்கம் புனிதமானது என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதியவர்.

அவுஸ்திரேலியாவில் மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக வதியும்  நடேசன்,  இங்கு வந்தபின்னரே இலக்கியப்பிரதிகளும் அரசியல் பத்தி எழுத்துக்களும் எழுதத் தொடங்கியவர்.

சிறுகதை, நாவல், பயண இலக்கியம், அரசியல் பத்தி எழுத்து மற்றும் தான் சார்ந்த விலங்கு மருத்துவத்துறை அனுபவங்கள் சார்ந்த பதிவுகள் என்பனவற்றை தொடர்ச்சியாக எழுதிவரும் நடேசனின்  சிறுகதைகளும், நாவல்களும் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும்


மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவ்வாறு படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டுவரும் நடேசனுக்கு இதழாசிரியர் என்ற முகமும் உண்டு. சிலவருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் உதயம் என்ற மாத இதழின் நிருவாக ஆசிரியராகவும் பணியாற்றியிருப்பவர்.

சிறுகதையாகட்டும், நாவலாகட்டும், அரசியல் பத்திகளாகட்டும், இவர் எழுதும் எந்தவொரு படைப்பிலும்   அங்கதம் இழையோடியிருக்கும்.

அந்தரங்கம் கதைத்தொகுதியும் விலக்கல்ல.

இதனை வெளியிடுவதற்கு முன்னின்றுழைத்த கருணாகரன், இந்நூலுக்கு  அசாதாரணங்களின் கதை என்ற தலைப்பில் மிகவும் பொருத்தமான அருமையானதோர் முன்னுரையை வழங்கியிருக்கிறார்.

2010 ஆம் ஆண்டு,  முதல் முதலில் நடேசனை யாழ்ப்பாணத்தில் சந்தித்தது தொடக்கம்,  இத்தொகுதி வெளியாகியிருக்கும் இந்தத் தருணம் வரையில் தான் அவதானித்த நடேசன் பற்றியும்,  நடேசனின் இலக்கியம், மற்றும் சமூக அரசியல் பணிகள் பற்றியும்   விளக்கியிருக்கிறார்.

தமிழகத்தின் மூத்த இதழாளரும் இலக்கியப்படைப்பாளியுமான மாலன் இத்தொகுதியில் இடம்பெறும் கதைகள் தொடர்பான தமது வாசிப்பு அனுபவத்தை  முன்னுரையாக எழுதியுள்ளார்.

 “ நடேசனுடைய புனைவுகளின் பொதுத்தன்மை என்ற ஒன்றை வகுக்கமுடியுமானால், அது மனிதனின் பாலுணர்வு அவனை ஆட்டிவைக்கும் தருணங்களைப் பற்றியதாக இருக்கும். அந்தத் தருணங்களில் நிகழும்   அகப்போராட்டங்களைப்பற்றியதாகவோ அல்லது அந்த அகப்போராட்டங்களின் காரணமாக நிகழும் புறநிகழ்வுகள் பற்றியதாகவோ இருக்கும்.  “  என்று கூறுகிறார் மாலன்.  இது நடேசனின் கதைகளில் இடம்பெறும் பாலுணர்வு சம்பந்தமான விடயங்களை அவதானிக்கும் வாசகர்களுக்கு  முன் தீர்மானத்தையும் தரும்.

தேவைப்படும் இந்த நேரத்தில் இந்தியாவுக்கு உதவி வழங்க ஸ்ரீ வெங்கடேஸ்வர ஆலயத்தில் (SVT) ஹோமம் 23/05/2021


SRI VENKATESWARA TEMPLE(SVT)

1 Temple Road, Helensburgh, Sydney, NSW – 2508, Australia





உங்களுக்குத் தெரியும், கடந்த ஆண்டு தொற்றுநோய்களின் தொடக்கத்திலிருந்து, இந்தியா முழுவதும் தொற்று மற்றும் இறப்பு மிக அதிகமாக எழுந்ததால் இந்தியா ஒரு பெரிய சுகாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. நாட்டின் தேசிய மருத்துவமனை முறை சரிந்துவிட்டது மற்றும் தனியார் மருத்துவமனைகளும் சரிவின் விளிம்பில் உள்ளன, ஏனெனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற விரும்பும் நோயாளிகளின் எண்ணிக்கை. ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், பாதுகாப்பு உடைகள், மருந்துகள் போன்ற மருத்துவ உபகரணங்கள் நாட்டிற்கு தேவை.

தேவைப்படும் இந்த நேரத்தில் இந்தியாவுக்கு உதவி வழங்க பல நாடுகள் முன்வந்துள்ளன. முதலில் இந்துக்களாகவும், இரண்டாவதாக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய புலம்பெயர்ந்தோராகவும், நமது கடமை, தேவைப்படும் இந்த நேரத்தில் அந்த நாட்டுக்கு உதவ எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். இந்தியாவில் வாழும் நம் சக மனிதர்களிடம் நாம் இரக்கத்தையும் தயவையும் காட்ட வேண்டும். எனவே, SVT யின் மேலாண்மை இந்த உன்னதமான காரணத்தில் தனது பங்கைச் செய்ய முடிவு செய்துள்ளது:

'மீண்டும் தொடங்கிய நாட்டிய மிடுக்கு', வாழ்த்துகின்றோம்! -ஜெய்ராம் ஜெகதீசன்-

நோக்கம்

மிக இளவயது முதல் ஒரு புலம்பெயர் தேசத்தில் வளர்ந்து,
கலை பயின்றுகொண்டிருக்கும் இளைஞர்களின் நலம்பயக்கும் புதிய முயற்சியை,
நாம் தமிழ்ச் சமூகமாக அறிந்து; அவர்தம் நன்முயற்சிகளும் கலைப் பயணமும்,
மென்மேலும் வளர வாழ்த்தவேண்டும் என்ற விருப்பத்தோடு,
இப்பதிவை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.




🌺 🌺 🌺
முடக்கம்
உலகெங்கும் கொள்ளை நோயால் ஸ்தம்பித்து, அச்சத்தோடு கழிந்தது 2020ஆம் ஆண்டு.
நல்ல கலையாட்சிமிக்க சிட்னி சபாக்களிலும் சதங்கைகளின் நாதம் நிசப்தமாய்ப்போன வேளையிது.
அல்லற்பட்ட பலரையும்போல, விழா அமைப்பாளர்களிடமும் எழுந்த,
நிகழ்வுகளை நடாத்தலாமா? இல்லையா?
கட்டிய முற்பணம் மீண்டு வருமா? இல்லையா?
மண்டபங்களை மாநகர சபையினர் பாவனைக்குத் தருவார்களா? தந்தாலும் இரசிகர்கள் வருவார்களா?
எத்தனை பேர்வரை உள்ளடக்க முடியும்? ஊர் முடக்கம் திடீரென அறிவித்தால் என்னாவது? என,
இத்தியாதி உலகியற் கேள்விகளோடு முடிந்தது ஆண்டு.



🌺 🌺 🌺
சற்றே வெளிச்சம்.
ஆகூழாய்க் கங்காறு தேசத்தார்க்குப் புதிதாய் மலர்ந்த 2021ஆம் ஆண்டில்,
சற்றே வெளிச்சம் கிட்டியதற்குக் காரணம், இறையருள் என்றுதான் கூறவேண்டும்.
மீண்டும் 2021ஆம் ஆண்டு - ஜனவரியின் நிறைவிலிருந்து,
பரதநாட்டிய அரங்கேற்றங்களும் கலை நிகழ்வுகளும், குறித்த சுகாதாரக் கட்டுப்பாடுகளோடு,
மண்டபங்களை அலங்கரிக்கத் தொடங்கிய தருணத்தில்;
சிட்னியில், தாமும் தம் கன்னி முயற்சியில் துணிச்சலோடு களம் இறங்கினர் ‘நிறைவதி' நங்கையர் இருவர்.

புரடசிக் கவி என்னும் பாரதிதாசன் காப்பியம்

 


புரட்சிக் கவி
 


E

புரட்சிக் கவி என்னும் காப்பியத்தைப் பாரதிதாசன் 1937 ஆம் ஆண்டு வெளியிட்டார். வடமொழியில் எழுதப்பட்ட பில்கணீயம் என்னும் காவியக் கருத்தில் தமிழ் உணர்வு கொடுத்துப் ‘புரட்சிக் கவி’ என்னும் காப்பியமாகப் பாரதிதாசன் படைத்துள்ளார்.

மன்னன் ஒருவன் தனது மகள் அமுதவல்லி என்பவளுக்குத் தமிழ்க் கவிதை புனையும் ஆற்றலைக் கற்பிக்க விரும்பினான். அமுதவல்லிக்குத் தமிழ்க் கவிதை கற்பிக்கச் சிறந்தவன், உதாரன் என்பவன் ஆவான் என்று அமைச்சர் தெரிவித்தார். ஆனால் அவன் இளைஞன்; நல்ல அழகன் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 

3.3.1 மன்னனின் திட்டம்
 

இளமை வாய்ந்த அமுதவல்லியும் இளைஞனான உதாரனும் நேரில் சந்திக்கக் கூடாது என்று மன்னன் கருதினான். எனவே, அமுதவல்லி தொழு நோயாளி என்று உதாரனிடம் தெரிவித்தான். உதாரன், குருடன் என்று அமுதவல்லியிடம் தெரிவித்தான். குருடனை நேரில் பார்ப்பது அபசகுனம். எனவே இருவருக்கும் இடையில் ஒரு திரையைக் கட்டித் தொங்க விடுங்கள் என்று தெரிவித்தான். அதன்படி அமுதவல்லிக்கும் உதாரனுக்கும் இடையில் ஒரு திரை கட்டித் தொங்க விடப்பட்டது. திரைக்கு இந்தப்பக்கம் இருந்து உதாரன் கவி புனையும் திறனைக் கற்பித்தான். திரைக்கு அந்தப் பக்கம் இருந்து அமுதவல்லி கற்றாள்.

எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 39 கொழும்பு கலை – இலக்கிய – பத்திரிகை நண்பர்கள் அமைப்பு வெட்ட வெட்ட தழைத்த வாழை மரங்கள் ! முருகபூபதி


 


எங்கள் தத்தா  குரக்கன் மா பிட்டு சாப்பிட்டார்.

எங்கள் அப்பா அரிசிமா பிட்டு சாப்பிட்டார்.

நாங்கள் பாண் – ரொட்டி சாப்பிடுகிறோம் !

எங்கள் தம்பி பாப்பா என்ன சாப்பிடுவான்…?

 

எங்கள் தாத்தா மாட்டுவண்டியில் சென்றார்.

எங்கள் அப்பா  கார் – பஸ்ஸில்  சென்றார்.

நாங்கள்  விமானத்தில்  பறந்தோம்.

எங்கள் தம்பிப் பாப்பா எதில் செல்வான்…?

 

எங்கள் தாத்தா கடவுளுக்குப் பயந்தார்.


எங்கள் அப்பா தாத்தாவுக்கு பயந்தார்.

நாங்கள் ஆர்மி, பொலிஸுக்கு பயப்படுகிறோம்.

எங்கள் தம்பிப் பாப்பா  எவருக்கும் பயப்படமாட்டான்…!

 

இந்தத்  தலைமுறை இடைவெளி கவிதையை ஒரு வடபகுதி மகளிர் கல்லூரி மாணவி எழுதி வீரகேசரிக்கு அனுப்பியிருந்தார்.

இதனை மித்திரன் நாளிதழில் பணியற்றிய நண்பர் மயில் தவராஜா எனக்கு காண்பித்தார்.  அக்கவிதையை இற்றைவரையில் என்னால் மறக்கமுடியவில்லை.

அச்சமயம் 1980 காலப்பகுதி, போர்மேகங்கள் படிப்படியாக சூழும் காலகட்டம்.   அந்தக்கவிதை எழுதிய மாணவி அப்போது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்.

இறுதியாக அக்கவிதையில் இடம்பெற்ற வரியில்  “ தம்பி  “ என்ற சொல்லுக்கு அவர் அழுத்தம் கொடுத்திருக்கவில்லை. ஆனால், பின்னாளில் ஈழத்தமிழ் சமூகமும் புலம்பெயர் தமிழ் சமூகமும் அந்தச்சொல்லுக்கு அழுத்தம் கொடுத்துப்  பேசியது!

உழைப்பை மதித்திடுவோம் ஓரணியாய் வாருங்கள் !

 


மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா  மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்  மெல்பேண் ... அவுஸ்திரேலியா 

       

ஊசிமுதல் உணவுவரை

உழைப்பாலே வருகிறது

உழைக்கின்றார் வாழ்வெல்லாம்

உயர்வுபெற மறுக்கிறது

காசுள்ளார் கைகளிலே

உழைப்பெல்லாம் போகிறது

கவலையுறும் உழைப்பாளி

கண்ணீரில் மிதக்கின்றான் !

 

சமத்துவங்கள் பேசுகிறார்

சங்கங்கள் அமைக்கின்றார்

நினைத்தவுடன் மாநாடு

நிறையவே வைக்கின்றார்

அனைத்துமே உழைக்கின்றார்

அனுசரணை என்கின்றார்

ஆனாலும் உழைக்கின்றார்

அல்லலிலே இருக்கின்றார் !


வியர்வையிலே தொழிலாளி

வேதனையில் தொழிலாளி

நலமிழந்து கிடக்கின்றான்

நயமெதுவும் காணவில்லை

முதலீட்டும் முதலாளி

தலைநிமிர்ந்து நிற்கின்றான்

முழுதுழைக்கும் தொழிலாளி

நிலையிழந்து தவிக்கின்றான் !



பணமெண்ணும் மனமகன்று

மனமெண்ணும் நிலைவேண்டும்

உழைப்பதனை உயர்வென்று

உணர்த்தியே விடவேண்டும்

உழைத்திடுவார் இருப்பிடங்கள்

உயரவெண்ணும் உளம்வேண்டும்

உழைப்பாளி முதலாளி

ஓரணியாய் வரவேண்டும் !

 

திருநாவுக்கரசர் (அப்பர்) குரு பூஜை விழா - ஸ்ரீ வெங்கடேஸ்வர ஆலயம் ஹெலென்ஸ்பேர்க் -09/05/2021


பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி

ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி

வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி

ஊழிமலி திருவாத வூரர்திருத்தாள் போற்றி

இடம்: சிவன் கோயில் வளாகம்

 காலை 8:30 மணி: நிருத்தி வலம்புரி கணபதிக்கு அபிஷேகம், அலங்கரம் மற்றும் மஹா தீபாரதனை , அதன்பின் மூலவர் மற்றும் திருநாவுக்கரசரின் பஞ்சலோக சிலைகளுக்கு அபிஷேகம் (அப்பர்) அப்பரின் தேவாரம் பாடுதல்.  
பிற்பகல் 12:30: சிவா வளாகத்திற்குள் அப்பரின் பஞ்சலோகா சிலை மற்றும் ஊர்வலத்திற்கான சிறப்பு பூஜை தொடர்ந்து மகா தீபரதனை.

இலங்கைச் செய்திகள்

ஜனாதிபதி - சீன பாதுகாப்பு அமைச்சர் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை 

இலங்கையின் முதல் தமிழ் பெண் வேந்தர் பேராசிரியர் யோகா இராசநாயகம் காலமானார்

ரிசாட் பதியுதீன் எம்.பியை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்

சிவராமின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

கிளிநொச்சி நகர் இராணுவத்தினர் கண்காணிப்பில்

ரிஷாட்டின் கைதுக்கு எதிராக நிந்தவூர் பிரதேச சபையில் கண்டன தீர்மானம்


ஜனாதிபதி - சீன பாதுகாப்பு அமைச்சர் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை 

ஜனாதிபதி - சீன பாதுகாப்பு அமைச்சர் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை-Chinese Defence Minister-President Gotabaya Rajapaksa Bilateral Discussion

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பிங் (Wei Fenghe) அவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த சீன பாதுகாப்பு அமைச்சரை ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர மற்றும் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் வரவேற்றனர்.

உலகச் செய்திகள்

அஸ்ட்ரா செனெகாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் வழக்கு 

பைசர் தடுப்பூசி போட்டவர்கள் இடையே இதய வீக்கப் பாதிப்பு

டெல்லியில் உடல்களை தகனம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை

இந்திய வகை கொரோனா 17 நாடுகளில் கண்டுபிடிப்பு

இந்தியாவில் தற்போது பரவுவது கொவிட் வைரஸின் 3ஆவது திரிபு

இடு காடாக மாறும் இந்தியா; இறந்த உடல்கள் கொத்து கொத்தாக தகனம்

இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா

இஸ்ரேலில் சமய விழாவில் நெரிசலில் சிக்கி 44 பேர் பலி

உயிரிழக்கும் பொலிஸாரை வீடியோ எடுத்தவருக்கு 10 மாதங்கள் சிறை (அவுஸ்திரேலியாச் செய்தி)    


அஸ்ட்ரா செனெகாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் வழக்கு 

அஸ்ட்ரா செெனகா மருந்துத் தயாரிப்பு நிறுவனம், குறைந்த அளவு தடுப்பூசிகளை மீண்டும் மீண்டும் விநியோகம் செய்ததற்காக அந்நிறுவனத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் வழக்குத் தொடுத்துள்ளது.

உரிய காரணமின்றித் தொடரப்பட்டுள்ள அந்த வழக்கில் தனது தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் வலுவாக முன்வைக்கவிருப்பதாக அஸ்ட்ரா செெனகா தெரிவித்துள்ளது. ஏற்கனவே உறுதியளித்திருந்த 120 மில்லியன் தடுப்பு மருந்தில் 31 மில்லியனை அஸ்ட்ரா செெனகா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விநியோகித்து விட்டது. அதேபோன்று ஜூன் மாதத்துக்குள் வழங்க உறுதியளித்த 180 மில்லியன் தடுப்பு மருந்தில், 70 மில்லியனை மட்டும் வழங்கப்போவதாக அந்நிறுவனம் கூறியிருந்தது.

சிங்கப்பூர் தமிழ் மொழி விழா 2021ல் - தமிழ்கூறும் நல்லுலகம்


தமிழன்னையை ஆட்சிக்கட்டிலில் ஏற்றி அழகு பார்த்த சிங்கப்பூர்த் தமிழர்கள் அவ்வன்னைக்குச் சூட்டிய மணிமகுடம் தான் தமிழ் மொழி விழா. ஓவ்வொரு ஆண்டும் தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம்’ என்ற முழக்க வரியோடு வளர்தமிழ் இயக்கம் மற்றும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிகுழுவின் ஆதரவோடு இவ்விழா சிறப்பாக அரங்கேறி வருகிறது. இத்துணை ஆண்டுகள் தீவெங்கும் ஒலித்த தமிழ்


முழக்கம் கடந்தாண்டு கொரோனா நோய்தொற்றுக் காரணமாக இணையத்தின் வழியே உலகெங்கும் ஒலித்தது. அதுபோல இவ்வாண்டும் மெய் நிகர் தொழில் நுட்பத்தின் வழியாகத்தமிழோசைப் பாரெங்கும் ஒலித்து வருகின்றது.இவ்விழாவில்2014 ஆண்டு முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ச்சியை முன்னெடுத்துவருகிறது. இதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும் ஏப்ரல் 24 ஆம் தேதி “தமிழ்கூறும் நல்லுலகம்” என்ற தலைப்பில் நிகழ்ச்சியை இணையத்தில் நடத்தியது. ‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி’ என்ற பாரதியின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலோடு நிகழ்வு சரியாக ஆறு மணிக்குத் தொடங்கியது. இந்த நிகழ்வின் நிகழ்ச்சி நெறியாளர்களாக நின்று நிகழ்ச்சியை வழி நடத்தினார்கள் திரு முத்து மாணிக்கம் மற்றும் திருமதி பிரதீபா அவர்கள்.

அடுத்த அங்கமாக வரவேற்புரையை வழங்கினார் சங்கத்தின் தலைவர் திரு.சௌந்தரராஜன் அவர்கள். ஆறு தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி இன்று உலகின் பல்வேறு கண்டங்களில்


பேசப்பட்டு வருகின்றது. அதனை அனைவரும் அறிந்துகொள்ளும் பொருட்டு ‘தமிழ்கூறும் நல்லுலகம்’ என்ற தலைப்புத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று இந்நிகழ்வின் நோக்கத்தைப்பற்றி எடுத்துரைத்தார். மேலும், இந்த நிகழ்விற்குத்தளம் அமைத்துக் கொடுத்த வளர் தமிழ் இயக்கம் மற்றும் கற்றல் வளச்சிக் குழு உறுப்பினர்கள், சிங்கப்பூரின் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், சிறப்புப் பேச்சாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்று நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று வரவேற்புரையை வழங்கினார்.


தமிழ்மொழிவிழாவின் முக்கிய நோக்கம் சிங்கப்பூரில் தமிழ் மொழியை வாழும் மொழியாக நிலை பெற செய்வதோடு மாணவர்களிடையே தமிழ்ப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்வதே ஆகும். அந்த வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கமும் மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் மாணவர்களுக்குப் போட்டிகளை நடத்திவருகின்றது. தமிழ் மொழியின் இலக்கியச் சிறப்புகளை நடைமுறை வாழ்வியலோடு பொருத்திப் பார்க்கும் வகையில் தலைப்புகள் கொடுக்கப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்களிடையே மொழியின்பால் ஆர்வத்தையும் ஈர்ப்பையும் உருவாக்குவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் "பிறமொழிகளில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் செல்வாக்கு" என்ற தலைப்பில் ஆய்வு செய்து தங்களது படைப்பை படைக்க உயர்நிலை மற்றும் தொடக்கக்கல்லூரி மாணவர்களிடையே போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் பதினான்கு பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 56 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பினை வழங்கினர். உயர்நிலை1&2, உயர்நிலை3&4 மற்றும் தொடக்கக் கல்லூரி என்று மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களைப்பற்றிய  விவரங்கள் முதலில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசைப்பெற்ற மாணவர்கள் தங்கள் படைப்பைப் படைத்தார்கள்.

முதலில் உயர்நிலை1&2, பிரிவில் முதல் பரிசு பெற்ற தெமாசெக் தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி சித்வியா சிதம்பரம் ‘ஜப்பானிய மொழியிலே தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் செல்வாக்கு ’என்ற தலைப்பில் தன்னுடைய படைப்பைப் படைத்தார்.  தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் இடையே உள்ள மொழியியல் கூறுகள், இலக்கியம், கலாசாரம், விழாக்கள், உணவு என்று பல நிலைகளில் இரண்டுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைப் பற்றி எடுத்துரைத்தார். இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நெடுந்தொலைவு இருந்தபோதும் தமிழின் செல்வாக்கு ஜப்பானிய  மொழியில் காணும்போது தமிழின் தொன்மையும், தமிழின் செம்மையும் நன்கு புலப்படுகின்றது. அடுத்தாக உயர்நிலை3&4 பிரிவில் முதல் பரிசு பெற்ற தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவர் விஷால் அருண்குமார் ‘கொரிய மொழியிலே தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் செல்வாக்கு’ என்ற தலைப்பில் தன்னுடைய படைப்பைப் படைத்தார். முதலாம் நூற்றாண்டிலே வாணிகத்தின் பொருட்டு உருவான தொடர்பின் தாக்கத்தால் தமிழின் பல படிமகூறுகள் அம்மண்ணில் வேரூன்ற தொடங்கிய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். மேலும், இரண்டு மொழிகளுக்கிடையே உள்ள சொற்களின் ஒலிப்புமுறை, கலாசாரம், பழக்கவழக்கம், நடனம் ஆகிய வற்றில் காணப்படுகின்ற ஒற்றுமைகளைப் பற்றிக் குறிப்பிடபோது நம் பண்டைய தமிழர்களின் மரபும், பண்பாட்டு சிறப்பும் எத்தகைய நிலைப்பாட்டினைக் கொண்டு இருக்கிறது என்பதை நம்மால் கண்கூடாக அறிய முடிந்தது. நிறைவாகதொடக்கக் கல்லூரி பிரிவில் முதல் பரிசு பெற்ற டி.பி.எஸ் (D.P.S) சர்வதேசப் பொதுப் பள்ளியில் படிக்கும் மாணவி அனுஷாசந்திரன் ‘தமிழ் மொழிக்கும் தாய் மொழிக்கும் இடையிலான உன்னத உறவு’ என்ற தலைப்பில் தன்னுடைய படைப்பை படைத்தார். கங்கை கொண்ட சோழனால் தொடங்கப்பட்ட கலாசாரப் புரட்சியின் விளைவால் தாய்லாந்து மக்களின் கலை, கலாசாரம், கடவுள் வழிபாடு மற்றும் அரசியல் என்று அனைத்து தளங்களிலும் முத்தமிழின் முத்திரையைப்பற்றி எடுத்துரைத்தார். "பிறமொழிகளில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் செல்வாக்கு" என்ற தலைப்பு மாணவர்களின் சிந்தனையைத் தூண்டியதோடு, தமிழ் மொழியின் செல்வாக்கை அறிய ஏதுவாக அமைந்திருந்தது என்பதை அவர்களின் படைப்பின் வழி அறிய முடிந்தது. அடுத்த அங்கமாக அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னால்  மாணவர்கள் சங்கம்  2014 முதல் 2020வரை தமிழ் மொழி விழாவில் கடந்து வந்த பாதையைப் பற்றிய கண்ணோட்டம் இடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து விழா சிறப்பாக நடைபெற நிதி உதவி நல்கிய ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

அடுத்த அங்கமாகச் சிறப்புப் பேச்சாளர்களின் சிறப்புரை தொடங்கியது. ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்ற பழமொழிகேற்ப கடல் தாண்டி திரவியம் தேட சென்ற புலம் பெயர்ந்த தமிழர்கள் பொருளைத் தேடுவதில் மட்டும் நாட்டம் கொள்ளவில்லை. அதனோடு தங்கள் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு போன்ற வற்றைத் தாங்கள் வாழ்ந்த மண்ணில் வேரூன்றுவதற்குத் தங்களால் முயன்ற முயற்சிகளைப் பன்னெடுங் காலமாகத் தொடர்ந்து  முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் அரும்பெரும் பணியால் பலநாடுகளில் இன்று தமிழ் மொழியின் மணம் கமழ்ந்து கொண்டிருக்கிறது.  அங்ஙனம் மணம் வீசும் ஐந்து கண்டத்திலிருந்து அனுபவமிக்கப் பேச்சாளர்கள்“ தமிழ்கூறும் நல்லுலகம்” என்ற தலைப்பில் தங்கள் உரையை ஆற்றினார்கள். முதலில் அமெரிக்கா கண்டத்திலிருந்து முனைவர் சோமலெ சோமசுந்தரம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அமெரிக்காவில் அடுத்த தலைமுறையினருக்குத் தமிழைக் கொண்டு சேர்க்க இசை, நடனம், சமயம் என்று பல்வேறு வழிகளில் அவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பற்றி எடுத்துரைத்தார். அடுத்ததாகஆசிய கண்டத்திலிருந்து பேராசிரியர் முனைவர் நா. கண்ணன் அவர்கள் இன்றைய தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல்வேறு தடைகளைக் கடந்து இன்று இணைய உலகில் பீடு நடை போடும் தமிழ் மொழிக்கு ஏற்பட்ட சவால்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அடுத்ததாக, ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து திரு லயன் ஜி. சிவசன்முகம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சீஷெல்ஸ் நாட்டில் வாழும் இன்றைய பிள்ளைகளிடம் நம்முடைய கலாசாரத்தையும், பண்பாட்டையும் தாய் மொழியின் வழியே கொண்டு சேர்க்க முடியும் என்பதை உணர்ந்து அதற்காக அவர்கள் முன்னெடுத்து முயற்சிகளைப் பற்றி எடுத்துரைத்தார். அடுத்ததாக, ஐரோப்பா கண்டத்திலிருந்து முனைவர் அலெக்சிஸ் தேவராஜ் சேன்மார்க் அவர்கள் உரையாற்றானார். இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்காட்லாந்து, போலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் தமிழின் வளர்ச்சிக்குப் பல்வேறு அறிஞர்கள், தமிழ்ச்சங்கங்கள், அமைப்புகள், கழகங்கள் போன்றவை அரும் பாடுபட்டு வருவதைப்பற்றிப் பகிர்ந்துகொண்டார். நிறைவாக, ஆஸ்திரேலியா கண்டத்திலிருந்து நாகை கா.சுகுமாரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தாய் மொழி சிந்தனையைப் பெற்றவன் தரணி ஆள்வான் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் ஆஸ்திரேலியா தமிழர்கள் கல்வி, அரசியல், பொருளாதாரம், பொழுது போக்கு என்று பலதுறைகளில் சிறந்து விளங்குவதைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். மேலும் பன்முகக்கலாசாரமிக்க ஆஸ்திரேலியாவில் தமிழை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்க அவர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப்பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

அடுத்ததாக, தலைமை பொறுப் பேற்று சிறப்பாக இந்நிகழ்வை நடத்திய ஏற்பாட்டுக்குழு தலைவர் திரு சந்தோஷ் அவர்கள் ஏற்புரை வழங்கினார். இந்தநிகழ்ச்சியைப் பொறுப் பேற்று நடத்தியதன் மூலம் புதிய அனுபவத்தைப் பெற்றதோடு மட்டட்ற்றமகிழ்ச்சியும் பெருமையும் கொள்வதாகக் கூறினார்.

நிறைவாக, நன்றியுரை ஆற்றினார் செயலாளர் செல்வி ஸ்வர்ணா வீரப்பன் அவர்கள். ஏற்பாட்டுக் குழுவினர், ஆதரவாளவர்கள், சிறப்புப் பேச்சாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ‘தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’ என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப பல்வேறு கண்டங்களில் தமிழ் முழங்கி வருகின்றது என்பதன் எதிரொலியாக ஐந்து கண்டங்களிலிருந்து பேசிய பேச்சாளர்களின் உரை அமைந்திருந்தது. ‘தமிழ்கூறும் நல்லுகம்’ என்ற தலைப்பு உலகளவில் பிறமொழி மற்றும் கலாசாரங்களில் தமிழ் மொழியின் செல்வாக்கைப் பற்றி அறிந்துகொள்ள ஏதுவாக அமைந்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும். எட்டாம் ஆண்டு நிகழ்ந்த இந்நிகழ்வு இணைத்தின் வாயிலாக எட்டுதிக்கும் பயணித்ததோடு இதனைக் கண்டு களித்ததமிழர்களின் நெஞ்சம் தமிழால் நிறைந்தது என்றால் மிகையில்லை.

செய்தி : பிரதீபா வீரபாண்டியன்