சிட்னியில் தமிழோசையின் பத்தாவது ஆண்டு நிறைவு - செ.பாஸ்கரன்

.


சிட்னியில் வெளிவரும் மாதாந்த சஞ்சிகையான தமிழோசை தனது பத்தாவது ஆண்டு நிறைவை சென்ற திங்கட்கிழமை 01.10.2018  அன்று
ரெட்கொம் மண்டபத்தில் கொண்டாடியது.

ஈழத்து எழுத்தாளரான மாத்தளை சோமு அவர்கள் இதன் ஆசிரியராக இருந்து கடந்த பத்து ஆண்டுகள்  புலம் பெயர்ந்த நாட்டினில்  இதனைக்  கொண்டுவந்திருப்பது ஒரு சாதனை என்றே கூறவேண்டும்.
எத்தனையோ தமிழ் சஞ்சிகைகள் வெளிவந்து சில மாதங்களிலோ அல்லது சில வருடங்களிலோ நின்று போகின்ற இந்தக் காலகட்டத்தில் தமிழோசை தொடர்ந்து பத்து ஆண்டுகள் வெளிவந்திருப்பது பாராட்டப் படவேண்டிய ஒன்றாகும்.

இதை தொடர்ந்து பதிப்பித்துக் கொண்டிருக்கும்  பதிப்பகத்தார்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மக்களின் அன்பும் ஆதரவும் நிறையவே இருக்கின்றதென்பதை  அன்றைய தினம் இடம் பெற்ற பத்தாவது ஆண்டு விழாவிற்கு வருகை தந்திருந்த மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டமே சாட்சி.

நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் Melodic Rhythms.

.
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கலை வாழ்வில் திகழும் நடன நர்த்தகி திருமதி கார்த்திகா கணேசர் அவர்களின் நடனப் பள்ளி மாணவியர் வழங்கும் நடன நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி, சனிக்கிழமை, மாலை 6.30 மணிக்கு Redgum Function Centre இல் நிகழவுள்ளது.
அனுமதி இலவசம். அனைவரும் கலந்து சிறப்பித்து ஆதரவு தாரீர்.

Image may contain: 2 people, people smiling

பார்சிறக்க வாழ்ந்திடுவோம் ! - ( எம். ஜெயராமசர்மா ..... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )



                             கடவுள்   பக்தி    தனையின்று 
                                  காசைக்  கொண்டு  பார்க்கின்றார்
                             கடவுள்   பக்தி   என்றுசொல்லி
                                     கழுத்தை  அறுத்துக்  கொல்லுகின்றார்
                             கடவுள்  பக்தி எனும்பெயரால்
                                        கற்பை  விலை  பேசுகிறார்
                               கடவுள்  பக்தி  எனுமுணர்வை 
                                         கருத்தில் கொள்ளா  இருக்கின்றார்  ! 

                                 குரு  பக்தி   நாட்டிலிப்போ 
                                         குன்றிப்  போய்  இருக்கிறது
                                 குரு   கூட   இப்போது 
                                           குறை  கொண்டே  உலவுகிறார்
                                  நல்ல   குரு   வாய்த்துவிடின் 
                                           நம்  எண்ணம்  உயர்ந்துவிடும் 
                                  நல்ல  குரு  ஆசிபெற்று 
                                           நாம்  வாழ்வோம்  சிறப்புடனே  ! 


மானிப்பாய் இந்துக் கல்லூரி, இந்து மகளிர் கல்லூரியின் இராப்போசன விருந்து 30.09.2018

.


மானிப்பாய் இந்துக் கல்லூரி, இந்து மகளிர் கல்லூரியின் இராப்போசன விருந்து சென்ற ஞாயிற்றுக்கிழமை 30.09.2018 அன்று இடம்பெற்றது . மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் மாணவிகள் அபிமானிகள்  என அரங்கம் நிறைந்து காணப்பட்டது .  தமிழ் வாழ்த்து கல்லூரி கீதம் மங்கள விளக்கேற்றல் தலைவர் உரை என பண்பாட்டு விடயங்களைத் தொடர்ந்து . குயின்ஸ்லாந்தில் இருந்து வருகை தந்திருந்த பஞ்ச இந்திர வில்லிசைக் குழுவினர் வில்லுப் பாட்டு நிகழ்வை நடாத்தினார்கள். 

தொடர்ந்து நடந்த பாடல் நிகழ்வுகள் சுருக்கமாகவும் இனிமையாகவும் இருந்தது. குறிப்பாக நீலக் குயிலாக வந்த இளம் பாடகி எல்லோர் மனதையும் வென்றுவிட்டார் .  வழமை போல ராஜஜோகன் நன்றாகப் பாடி சபையினரை உற்சாகமாக வைத்திருந்தார்.

மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகதீபம் கலைமாலைநிகழ்வு 2018.

பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர்க்கந்தன் ஆலய முன்றலில் நீர்கூட அருந்தாது பன்னிருநாட்கள் சாகும்வரை உண்ணாநோன்பிருந்து, ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல திலீபன் அவர்களின் 31வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள்  அவுஸ்திரேலியாவின்  மெல்பேர்ண் நகரில் சென்யூட்ஸ் மண்டபத்தில்  மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.
கடந்த 28 - 09 - 2018 வெள்ளிக்கிழமையன்று மாலை 6.00 மணிக்கு செல்வி லக்சிதா தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், அவுஸ்திரேலிய தேசியக்கொடியை மில்பார்க் தமிழ்ப்பள்ளி அதிபர் திரு சந்திரகுமார் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் கபிலன் நந்தகுமார் அவர்கள் ஏற்றிவைத்தார். தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களது திருவுருவப்படத்திற்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர் திரு அ. திலகராஜா அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.

அஞ்சலிக்குறிப்பு: ஒரு தேவதைக் கனவை இலக்கியத்தில் பதிவுசெய்து, அற்பாயுளில் மறைந்த இலக்கியத்தேவதை கெக்கிராவ ஸஹானா மல்லிகை ஜீவா, ஜெயகாந்தனின் ஆசிபெற்று வளர்ந்த இலக்கிய ஆளுமை - முருகபூபதி


" திருமதி ஸஹானாவின் ஒரு தேவதையின் கனவு சிறுகதைத்தொகுதி வெளிவருவது குறித்து பெரு மகிழ்ச்சியடைகிறேன். தெளிவுற அறிந்திடவும், தெளிவுபெற  மொழிந்திடவும், சிந்திப்போர்க்கு அறிவுவளர, உள்ளத்தே ஆனந்தக்கனவு பல காட்டலும் கைவரப்பெற்றவர்கள் எழுதும் படைப்புகள் காலத்தால் என்றென்றும் போற்றப்படும். அவை என்றும்  புதியவை. அத்தகு இலக்கியவரிசையில் தேவதையின் கனவும்  இடம்பெற வாழ்த்துகின்றேன்"  என்று 22-01-1997 ஆம் திகதி சென்னையிலிருந்து ஜெயகாந்தன் வாழ்த்தியிருந்த, ஈழத்தின் இலக்கியப்படைப்பாளி  கெக்கிராவ ஸஹானாவும் கடந்த மாதம் எங்கள் இலக்கிய உலகிலிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டார்.
"அற்பாயுள் மரணமும்  மேதா விலாசத்தின் அடையாளமோ? " என்று ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலில் சுந்தரராமசாமி எழுதியிருந்ததுதான் நினைவுக்கு வருகிறது. 1968 இல் பிறந்து 2018 இல் மறைந்துள்ள கெக்கிராவ ஸஹானா, குறுகிய காலத்தில்  ஈழத்து இலக்கிய வானில் சுடர்விட்டு பிரகாசித்த நட்சத்திரம்.  எங்கள் மத்தியில் உதிர்ந்துள்ள இந்த நட்சத்திரம் எம்மிடம் விட்டுச்சென்றுள்ளவை அவருடைய அருமைக்குழந்தைகளும், இலக்கியப்பிரதிகளும்தான்.
இனி எம்முடன் பேசவிருப்பவை கெக்கிராவ ஸஹானவின் ஆக்க இலக்கியப்படைப்புகளும் ஆய்வுகளும் மொழிபெயர்ப்பு பிரதிகளும்தான். கவிதை, சிறுகதை, விமர்சனம், அறிவியல் கட்டுரைகள் ஊடாக பாடசாலைப்பருவம் முதலே தேடலில்  ஈடுபட்டு வந்துள்ள ஸஹானா ஆசிரியையாக பணியாற்றியவர்.
டொமினிக் ஜீவாவின் மல்லிகை கண்டெடுத்த இலக்கிய மலர், இலங்கையிலும் தமிழகத்திலும் தமிழர்கள் புலம்பெயர்ந்த தேசங்களிலும் மணம்பரப்பியது.
மல்லிகை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான காலத்தில், 1980 காலப்பகுதியில் 12 வயதுச்சிறுமியாக பாடசாலையில் பயிலும் காலத்தில் இவருக்கு அதனை அறிமுகப்படுத்தியவர் மர்ஹ_ம் கோயா அப்பாஸ் என்பவர் என்ற தகவலை மறக்காமல் நன்றியுணர்வோடு தனது முதல் கதைத்தொகுப்பான ஒரு தேவதைக்கனவு நூலின்  என்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.  
இலங்கை வானொலி,  நாளாந்த தினசரிகள்,  தென்னிந்திய சஞ்சிகைகள் மூலமாகவும் பள்ளி ஆசிரியர்களின் உதவியுடனும் பாரதி முதல் ஜெயகாந்தன் வரையில் தேடிக்கற்றவருக்கு  -  இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாத அந்த  இளம் பருவத்தில் இவருக்கு மல்லிகை அறிமுகமாகியிருக்கிறது. மல்லிகை ஆக்கங்கள் அந்தச்சிறுமிக்கு பிரமிப்பூட்டியவை. அதனால் வாசிப்பதுடன் நின்றுகொண்டவர்,  அதில் எழுதுவதற்கு தயங்கியிருக்கிறார். எனினும் எழுதிப்பார்க்கத்தூண்டிய பல படைப்புகளை இனம் கண்டுள்ளார்.

நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 18 பல சொல்ல மறந்த கதைகளைச்சொல்லும் பண்டாரநாயக்கா மாவத்தை - ரஸஞானி

கடந்த வாரம் இந்தத் தொடரில் நாம் குறிப்பிட்ட அஸ்பெஸ்டஸ் கூரைத்தகடு உற்பத்தி செய்யும் மஸ்கன்ஸ் நிறுவனத்திற்கு முன்னால் செல்லும் பண்டாரநாயக்கா மாவத்தை பற்றி அறிந்திருக்கிறீர்களா?
களனி கங்கை தீரத்தில் தலைநகரில் அமைந்துள்ள ஏனைய வீதிகளைப்போன்றதுதான் இந்த மாவத்தையும். ஆனால், இந்த வீதியிலும் பல சுவாரஸ்யமான கதைகள் உள்ளடங்கியிருக்கின்றன.
ஏன் இந்த வீதிக்கு இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் பெயர்வந்தது...?அவர் அத்தனகல்லை தொகுதியில் ஹொரகொல்லையில் பிறந்தமையால் அந்தப் பிரதேசத்தை ஹொரகொல்லை வளவ்வை என்றும் அழைப்பர். அவரது தந்தையாரின் பூர்வீகக்காணியில்தான் வியாங்கொடை ரயில் நிலையமும் அமைந்துள்ளது என்றும் ஒரு செய்தி இருக்கிறது.
அதனால் அந்தப்பாதையினால் பயணிக்கும் அனைத்து ரயில்களும் அங்கே நிச்சயம் தரித்துச்செல்லும். பண்டாரநாயக்கா குடும்பத்தினருக்கு இந்தப்பத்தியில்  நாம் குறிப்பிடும்  மாவத்தையிலும் ஒரு வளவ்வை  (பெரிய காணி) முன்பிருந்திருக்கிறது.

இலங்கை மாணவர் கல்வி நிதியம் (1988 - 2018) அவுஸ்திரேலியா 30 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும் வருடாந்த ஆண்டுப்பொதுக்கூட்டமும்


            
இலங்கையில்  நீடித்த போர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட  தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு,   1988 ஆம் ஆண்டு முதல்  அவுஸ்திரேலியாவிலிருந்து  உதவிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் முப்பதாவது ஆண்டு  நிறைவு நிகழ்வும்,  வருடாந்த ஆண்டுப்பொதுக்கூட்டமும்  இம்மாதம் 27 ஆம் திகதி ( 27-10-2018) சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணிவரையில் மெல்பனில் வேர்மண் தெற்கு சனசமூக நிலையத்தில்  ( Vermont South Community House -  Karobran Drive, Vermont South VIC 3133)   நிதியத்தின் தலைவர் திரு. விமல் அரவிந்தன் தலைமையில் நடைபெறும்.
இதுவரையில் நூற்றுக்கணக்கான அன்பர்களின் ஆதரவுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவிய கல்வி நிதியத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான செயல் அமர்வும், மாணவர்களின் முன்னேற்றம் பற்றிய தகவல் அமர்வும் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு நிதியத்தின் உறுப்பினர்களையும்,  மாணவர்களுக்கு உதவ விரும்பும் அன்பர்களையும் அன்புடன் அழைக்கிறது இலங்கை மாணவர் கல்வி நிதியம்.

உமாஜி எழுதிய “காக்கா கொத்திய காயம்”


சிட்னியில் பனைமரக்காடு - முழுநீளத் திரைப்படம் 14/10/2018

ஈழத்து திரைப்படங்களில் ஒன்றான பனைமரக்காடு என்ற திரைப்படத்தின் முதலாவது காட்சி மெல்பேர்ணில்  ஒக்ரோபர் 6 ஆம் திகதி மாலை 3 மணிக்கும், சிட்னியில் ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணிக்கும், பின்னர் மாலை 5 மணிக்கும் என இரண்டு காட்சிகளாகவும் திரையிடப்படவுள்ளது.


அதேவேளை ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தின் ராஜா திரையரங்கில் சிறப்பு விருந்தினர்களுக்கான மூன்று காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஈழத்தின் அனைத்து பகுதிகளிலும் தமிழர் புலம்பெயர் தேசங்களிலும் திரையிடுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மெல்பேர்ண் காட்சி விபரம்
காலம்: ஒக்ரோபர் 6 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு
இடம்: Menzies Building E365, Monash University, Wellington Road, Clayton Victoria
அன்பளிப்பு: $10 வெள்ளிகள்
தாயகத்திலிருந்து புதிய வெளியீடாக கேசவராஜனின் இயக்கத்தில் வெளிவரும், பனைமரக்காடு என்ற முழுநீள திரைப்படமானது போரிற்கு பின்னரான காலத்தில், தமிழ்மக்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
ஈழத்து படைப்புக்களமானது உரியவகையில் ஆதரவு வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படாது போனால், எமது தாயகத்தின் உயிர்ப்பான வரலாறுகள் மறைக்கப்பட்டுவிடும்

வளர்த்தவர்கள் – சிறுகதை - கே.எஸ்.சுதாகர்


ஆராதனாவிற்குத் திருமணம். தாலி கட்டி முடிந்துவிட்டது. எல்லாரும் வரிசையில் நின்று மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். ஹோல் நிரம்ப மகிழ்ச்சி ஆரவாரம்.

ஆராதனாவிற்கு சமீபத்தில்தான் பதினெட்டு வயது முடிந்திருந்தது.

ஆராதனாவின் அப்பா வழி உறவினர்கள் எல்லாரும் வாழ்த்துத் தெரிவிக்கையில் “நான் தான் ஆராதனாவைத் தூக்கி வளர்த்தேன்” என்று மறக்காமல் மாப்பிள்ளையிடம் சொன்னார்கள். அம்மா வழி உறவினர்களுக்கு அந்த பாய்க்கியம் கிடைக்கவில்லை.

“நான் தான் ஆராதனாவைத் தூக்கி வளர்த்தேன்.”
“நான் தான் ஆராதனாவைத் தூக்கி வளர்த்தேன்.” மாப்பிள்ளைக்குக் கேட்டுக் கேட்டுப் புளித்துவிட்டது.

சுமதி மச்சாள் அட்சதை போடும்போது, அதற்கும் மேலே போய், “உன்ரை அம்மா இதையெல்லாம் பாக்கக் குடுத்து வைக்கவில்லையே” என மூக்கால் சிணுங்கி ஆராதனாவைக் கட்டிப்பிடித்து அழுதாள். ஆராதனாவின் கண்கள் குளமாகின.

ஆராதனாவின் அம்மா சிவகாமி இறந்து ஒரு வருடம்கூட ஆகியிருக்காது. அதற்கிடையில் அவசர அவசரமாக அவளின் படிப்பையும் குழப்பி, கனவுகளையும் சிதைத்து ஏன் இந்தக் கலியாணம் என்பது ஆராதனாவிற்குப் புரியவில்லை. அப்பா குமரேசன் தன் கடமை முடிந்தது என்பதுமாப் போல் எல்லாவற்றையும் முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்.

இலங்கைச் செய்திகள்


யாழில் ஆவா குழு சார்ந்த 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.'  யாழ் பொலிஸ்மா அதிபர்

முல்லைத்தீவில் வனவளத் திணைக்களத்தின் செயற்பாட்டால் 40 குடும்பங்கள் நிர்க்கதி!!!

அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி கிழக்கு பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்!

பெளத்த பிக்குகளை தொல்பொருள் திணைக்களம் எவ்வாறு ஆய்வுகளில் ஈடுபடுத்தமுடியும்?: நீதிமன்றம் எச்சரிக்கை !

தமிழர்களது பூர்வீக நிலங்கள் பறிக்கப்படுவது குறித்து ஆதாரங்களுடன் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டவுள்ளதாக த.தே.கூ. அறிவிப்பு

அரசியல் கைதிகளுக்காக வவுனியா அமைப்புக்களுடன் இணைந்து குரல் கொடுத்த சிங்கள இளைஞர்கள்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மட்டுவில் உண்ணாவிரத போராட்டம்




யாழில் ஆவா குழு சார்ந்த 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.'  யாழ் பொலிஸ்மா அதிபர்

02/10/2018 “யாழ்ப்பாணம், சுன்னாகம், கோப்பாய் மற்றும் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 27 குழு மோதல் சம்பவங்கள் இடம்பெற்று உள்ளன. அவற்றுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் 38 பேர் கைது செய்யப்பட்டனர். 

உலகச் செய்திகள்


இந்தோனேசியா சுனாமி தாக்குதலில் இதுவரை 1350 பேர் பலி

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள்

புற்று நோய் சிகிச்சையில் புரட்சிகர கண்டுப்பிடிப்பாளர்களுக்கு நோபல் பரிசு

சீர் திருத்தத்துடன் உடன்பாட்டுக்கு வந்த அமெரிக்கா - கனடாவுக்கிடையிலான “நப்டா” ஒப்பந்தம்

ஆங் சான் சூ கீ யின்  கௌரவ குடியுரிமையை ரத்து செய்தது கனடா

"சபரிமலையில் பெண்களுக்கு தனி வரிசையில்லை"

இந்தியாவை சென்றடைந்தார் புட்டின் ; கோபத்தில் அமெரிக்கா

மோதல்களின் போது பாலியல் வன்முறைக்கு எதிராக குரல்கொடுத்தவர்களிற்கு நோபல்சமாதானப்பரிசு



இந்தோனேசியா சுனாமி தாக்குதலில் இதுவரை 1350 பேர் பலி

03/10/2018 இந்தோனேசியா நாட்டின் சிலாவேசி தீவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1350 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ் சினிமா -செக்கச்சிவந்த வானம் திரை விமர்சனம்



தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே படம் வெற்றி தோல்வி தாண்டி ஒவ்வொரு படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் விண்ணை முட்டும். அப்படி படத்திற்கு படம் எதிர்ப்பார்ப்பை எகிற வைப்பவர் தான் மணிரத்னம். அவருடைய இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ளது செக்கச்சிவந்த வானம்.
ரகுமான் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருப்பார், இது நாயகன் ஸ்டைல் படம் என்று, மேலும் மணிரத்னம் புல் ஃபார்மில் உள்ளார் என்றும் தெரிவித்தார், அவரின் வார்த்தைகள் உண்மையானதா? பார்ப்போம்.

கதைக்களம்

பிரகாஷ்ராஜ் தமிழகத்தின் மிகப்பெரும் புள்ளி, விஜய் சேதுபதி ட்ரைலரில் சொல்வது போல் மதிப்பிற்கு உரிய கிரிமினல் தான் பிரகாஷ்ராஜ்.
இவரை ஆரம்பத்திலேயே ஒரு கும்பல் கொல்ல முயற்சி செய்கின்றது. அதை தொடர்ந்து அவரின் மூன்று மகன்களும் யார் அப்பாவை இப்படி செய்தார்கள் என தேட ஆரம்பிக்கின்றனர்.
ஒருவரின் மீது ஒருவருக்கு சந்தேகம், இடையில் பெரியவர் இடத்தை யார் பிடிப்பது என்று போட்டியும் கூட.
ஒரு கட்டத்தில் பிரகாஷ்ராஜ் இறக்க, அவரை கொல்ல முயற்சி செய்தது யார், அந்த இடம் யாருக்கு என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என 4 நடிகர்களை வைத்து இவர்கள் அனைவருக்கும் சரியான கதாபாத்திரம் கொடுத்து அதை வெற்றிக்கரமாக முடிப்பது சாதாரண விஷயமில்லை. அப்படி ஒரு விஷயத்தை மணிரத்னத்தை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்று இந்த வயதில் நிரூபித்து நிமிர்ந்து நிற்கின்றார்.
அரவிந்த்சாமி படத்தின் 4 கதாபாத்திரங்களில் கை ஓங்கி நிற்பது இவருக்கு தான், முரடன் அப்பா சொல்வதை மட்டுமே கேட்டு சுதந்திரம் என்றே இல்லாமல் அடிதடி என்று வாழ்ந்தே, வாழ்க்கையை ஓட்டுகின்றார். அவர் அப்பாவின் இடத்தை பிடிக்க விரும்புவது, அதற்கான விஷயங்களை மேற்கொள்வது, அதன் இழப்பு, சோகம், வருத்தம் என செம்ம ஸ்கோர் செய்கின்றார்.
வெளிநாட்டு ஜாலி பறவைகளாக அருண்விஜய், சிம்பு. எல்லோருக்கும் ஒரே நோக்கம் பிரகாஷ்ராஜ் இடத்திற்கு யார் வருவது என்பது தான், அருண் விஜய் செம்ம ஸ்டைலிஷாக இருக்கின்றார், இவரை வைத்து எத்தனை பெரிய ஆக்‌ஷன் காட்சிகளையும் அசால்ட்டாக எடுத்துவிடலாம், அதிலும் நீச்சல் குளத்தில் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பிரமிப்பு.
சிம்பு கடைக்குட்டி, அண்ணனால் தனக்கு ஒரு வலை சுற்றப்படுகின்றது என அறிந்து அவர் ஒரு கேங்கை தேற்றி களத்தில் இறங்குகின்றார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவிற்கு பல எமோஷனில் நடிக்கும் ஒரு வாய்ப்பு, அதுவும் தன் அம்மாவிடம் ‘நீ எனக்கு மட்டும் அம்மாவா இருமா’ என்று அழும் இடத்தில் சூப்பர். இந்த சிம்பு தான் இத்தனை நாட்கள் மிஸ்ஸிங்.
விஜய் சேதுபதி அட மணிரத்னம் படத்தில் மீண்டும் ஒரு வைலன்ஸ் சைட் மௌனராகம் கார்த்திக் என்றே சொல்லலாம். அவருக்கே உரிய ஸ்டைலில் வசனத்தில் வரும் காட்சிகளில் எல்லாம் சிக்ஸர் தான், கடைசி வரை ‘நீங்க நல்லவரா, கெட்டவரா?’ என்று ஆடியன்ஸ் கேட்கும்படியே அவர் கதாபாத்திரம் கொண்டு போனது ரசிக்க வைக்கின்றது.
இவர்களை தவிர ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் என பெரிய பட்டாளமே இருந்தாலும், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா நடிப்பு தனித்து நிற்கின்றது. கேங்ஸ்டர் கதை தளபதி, நாயகனுக்கு பிறகு மணிரத்னம் தொட்டு இருக்கு களம்.
ஆனால், இன்றும், தன் இடம் தனக்கு தான் என நிரூபிக்கின்றார், ‘இதெல்லாம் எதுக்கு சொடக்கு போட்டால் இந்த உயிர் இப்படி போய்டும், நீ நான், நாளைக்கு பிறக்க போறவன் வரைக்கும் சைபர்’ தான் என வரும் வசனம் எல்லாம் ஆயிரம் அர்த்தம்.
படத்தின் ஐந்தாவது ஹீரோ ரகுமான் தான், பாடல்கள் மாண்டேஜாக வந்தாலும், பின்னணியில் படத்தை தூக்கி வேற லெவலுக்கு கொண்டு செல்கின்றார். அதேபோல் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு பல இடங்களை மிக அழகாக படம்பிடித்து காட்டியுள்ளது.

க்ளாப்ஸ்

படத்தின் திரைக்கதை, இத்தனை கதாபாத்திரத்தை வைத்து அதை அழகாக கொண்டு சென்றவிதம்.
நடிகர், நடிகைகள் நடிப்பு, முடிந்தளவு எல்லோரும் ஸ்கோர் செய்துள்ளது.
கிளைமேக்ஸ் டுவிஸ்ட் ட்ரைலரை பார்த்து அப்படியே படம் செல்கின்றது என்று நினைக்கும் தருணத்தில் தடம் மாறும் கிளைமேக்ஸ்.
படத்தின் இசை, ஒளிப்பதிவு என டெக்னிக்கல் விஷயங்கள்.

பல்ப்ஸ்

மணிரத்னம் படத்திற்கே உண்டான கொஞ்சம் அதுவும் இரண்டாம் பாதியில் மெதுவாக நகரும் சில காட்சிகள் (ஆனால், கதைக்கு அதுவும் தேவை தானே).
ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ் இவர்கள் எல்லாம் நட்சத்திர அந்தஸ்திற்காகவே தவிர பெரிதும் கவரவில்லை.
மொத்தத்தில் ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் மணிரத்னம் இஸ் பேக்.
நன்றி  CineUlagam