கவியரசு
கண்ணதாசனுக்கு பதினான்கு பிள்ளைகள். அவருக்கு மூன்று மனைவிகள் என்பது உலகறிந்த செய்தி.
தனது
ஆண் பிள்ளைகளுக்கு தான் நேசித்த ஆளுமைகளின் பெயர்களையே சூட்டினார்.
கண்மணி சுப்பு ( பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் சுப்பு ரத்தினம் ) காந்தி,
கலைவாணன், அண்ணாதுரை.
இவர்கள்
மூவரையும் சந்தித்திருக்கின்றேன். கண்மணி சுப்புவும், கலைவாணனும், அண்ணாதுரையும் ,
விசாலினியும் சினிமாவுக்குள் பிரவேசித்தனர். காந்தி, சட்டம் பயின்றுவிட்டு, கண்ணதாசன் பதிப்பகத்தை நடத்தி வருகிறார்.
தமிழ்நாடு
பதிப்பாளர் சங்கத்திலும் தலைவராக இருந்தார்.
1990
ஆம் ஆண்டு சென்னைக்குச்சென்றிருந்தபோது, பச்சையப்பன்
கல்லூரியில் எங்கள் ஊர் நண்பர் விக்னேஸ்வரன் உயர் வகுப்பில்
படித்துக்கொண்டே கண்ணதாசன் பதிப்பகத்திலும் பகுதி நேரமாக பணியாற்றினார். அத்துடன் கலைவாணன்
கண்ணதாசன் இயக்கிய திரைப்படங்களில் அவருக்கு உதவி இயக்குநராகவும் இருந்தார்.
கலைவாணனை
அவர் எனக்கு தனது பிறந்த தினத்தன்றுதான் அறிமுகப்படுத்தினார். மார்ச் மாதம் 24 ஆம் திகதி விக்னேஸ்வரனின் பிறந்த தினம். அவ்வேளையில் கலைவாணன்
கண்ணதாசன், வா அருகில் வா என்ற திகில் – மர்மங்கள் நிறைந்த திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருந்தார்.
அந்தத்
திரைப்படத்திற்காக கோடம்பாக்கத்தில் ஒரு அலுவலகம்
இயங்கிக்கொண்டிருந்தது. அந்த அலுவலகத்தில்தான்
விக்னேஸ்வரன், கலைவாணனுக்கும் அந்த திரைப்படத்தில்
வேலை செய்துகொண்டிருந்த ஏனையோருக்கும் மதியபோசன விருந்து வழங்கினார்.
அச்சமயம்தான்
கலைவாணன் எனக்கு முதல் முதலில் அறிமுகமானார்.
அவர் நடிகராகவிருந்து இயக்குநரானவர். அவர் முதலில் நடிகை ஷோபாவுடன் அன்புள்ள
அத்தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
“ அந்தப்படத்தை நான் பார்த்திருக்கவில்லை “ என்றேன்.
“ நல்லது
. மிகவும் நல்லது “ என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
காரணம்
கேட்டேன். “
“நடிப்பதில்
ஆர்வம் இல்லை. இயக்குநராகிவிட்டேன். ” என்றார்.
கலைவாணனிடம்
ஷோபாவின் தற்கொலை மரணம் பற்றிக்கேட்டேன்.
“ என்ன
சொல்வது..? பாவம். அற்பாயுளில் அப்படி ஒரு
முடிவை எடுத்துக்கொண்டார். இனி அதைப்பற்றி என்ன பேச இருக்கிறது . “ என்று சோகம் கப்பிய முகத்துடன் சொன்னார்.