மலர்ந்துவிடு புத்தாண்டே ! மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா
புத்தாண்டே நீ வருக
புத்துணர்வை நீ தருக
நித்தமும் நாம் மகிழ்ந்திருக்க
நிம்மதியை நீ தருக
சொந்தம் எலாம் சேர்ந்திருக்க
சுப ஆண்டாய் நீவருக
எம்தமிழர் வாழ்வில் என்றும்
இன்பம் பொங்க நீவருக
வாருங்கள் என அழைத்து
வரும் மக்கள் வரவேற்கும்
சீர் நிறைந்த நாட்டிலிப்போ
யார் வருவார் சீர்திருத்த
எனும் நிலையே இருக்கிறது
நீ வந்து புத்தாண்டே
நிலை திருத்தி வைத்துவிடு
ஆட்சி பீடம் ஏறுகின்றார்
அறம் வெறுத்து ஒதுக்குகிறார்
ஆட்சி பீடம் அமரச்செய்தார்
அல்லல் பட்டே உழலுகிறார்
அறம் வெறுத்து நிற்பவர்கள்
அறம் பற்றி உணர்வதற்கு
திறல் உடைய மருந்துடனே
நீ வருவாய் புத்தாண்டே
படித்தோம் சொல்கின்றோம்: "சிப்பிக்குள் முத்து " கி. லக்ஷ்மணன் அய்யாவின் நூற்றாண்டு வெளியீடு - முருகபூபதி

மானநட்ட
வழக்கிற்கும் தள்ளிவிடும் கொடிய இயல்பு இந்தப்பிசாசுக்கு இருக்கிறது. அதுதான் அச்சுப்பிசாசு. மொழிக்கு ஆபத்துவருவதும் இந்தப்பிசாசினால்தான். 1990 ஆம் ஆண்டு மறைந்த
எங்கள் கல்விமான் இலக்ஷ்மணன் அய்யாவை நினைக்கும்
தருணங்களில் அவர் ஓட ஓட விரட்டிய இந்த அச்சுப்பிசாசுதான்
எள்ளல் சிரிப்போடு கண்முன்னே தோன்றுகிறது."

அண்மையில் எனக்கு கிடைத்துள்ள அய்யா
எழுதியிருக்கும் "சிப்பிக்குள்
முத்து" நூலை படிக்கின்றபோது அவர் நேரில் தோன்றி உரையாற்றுவதுபோன்ற
உணர்வுதான் வருகிறது.
இந்த அரிய நூலை அய்யாவின் செல்வப்புதல்வி மங்களம்
வாசன் தொகுத்துள்ளார். கடந்த சில வருடங்களாக மங்களம் மேற்கொண்ட அயராத முயற்சி
திருவினையாகியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
கி. இலக்ஷ்மணன் அய்யாவின் நூற்றாண்டு காலம் தொடங்கியிருக்கும்
இக்காலப்பகுதியில் " சிப்பிக்குள்
முத்து" வெளியாகியிருப்பது பெரும் சிறப்பு.
இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளுக்குப் பொருத்தமான ஓவியங்களை பிரபல ஓவியர் பத்மவாசன் வரைந்துள்ளார். கி.லக்ஷ்மணன் அவர்கள் இலங்கை - தமிழக தமிழ், ஆங்கில இதழ்களிலும் சிறப்பு மலர்களிலும்
முன்னர் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பாக சிப்பிக்குள்
முத்து ஒளிர்கின்றது.
இலங்கை தேசிய
சுவடிகள் திணைக்களம் மற்றும் பொது நூலகங்களிலிருந்து
தேடி எடுத்த கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலில்
தமிழ், கல்வி, இலங்கை வாசனை, சமயம், தத்துவம் ஆகிய தலைப்புகளில் 64 கட்டுரைகளும் ஆங்கிலத்தில் 9 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம
ஆசிரியர் ( அமரர் ) க. சிவப்பிரகாசம்,
வடமாகாண முன்னாள் முதல்வர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், சிறைச்சாலைகள்
மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள்( முன்னாள்)
அமைச்சர் திரு. டி. எம்.சுவாமிநாதன் (அமரர்கள்) பேராசிரியர் க.கைலாசபதி, சிரேஷ்ட
சட்டத்தரணி நீலன் திருச்செல்வம் ஆகியோர் உட்பட பலர் கொழும்பு றோயல்
கல்லூரியில் கற்ற காலத்தில், இவர்களின்
தமிழ் ஆசிரியராக பணியாற்றியிருக்கும் கி. லக்ஷ்மணன் அய்யா அவர்கள், தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழியை சரியாகவும்
பிழையின்றியும் எழுத வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருப்பவர்.
பவளவிழா நாயகன் செல்வத்துரை ரவீந்திரன் மெல்பனில் கலை இலக்கிய பொதுப்பணிகளில் இணைந்திருக்கும் எங்கள் ரவி அண்ணனுக்கு 75 வயது - முருகபூபதி
தந்தையார் செல்வத்துரை ஓவியர். ஒளிப்படக்கலைஞர்.
இலங்கையில் புகழ்பூத்த நவாலியூர் சோமசுந்தரப்புலவர் யோகர் சுவாமிகள் முதலானோரை தனது கெமராவில் படம் எடுத்தவர். அந்தப்படங்களே இன்றுவரையில் மக்களிடம் அறிமுகமாகியிருக்கிறது.
கலைஞர் செல்வத்துரை அய்யாவுக்கு ரவீந்திரநாத் தாகூரின்
எழுத்துக்களில் அலாதிப்பிரியம். அதனால், தனக்கு மகன் பிறந்தால் ரவீந்திரன் என்ற பெயரைச்சூட்டுவதற்கு
விரும்பியிருந்தார்.
செல்வத்துரை தம்பதியருக்கு இரண்டாவது புதல்வனாக
1943 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி பிறந்தவர் ரவீந்திரன். கொழும்பு இரத்மலானை
இந்துக்கல்லூரியிலும் படித்து பின்னர் சட்டக்கல்லூரியில் இணைந்து சட்டத்தரணியானவர்.

இந்த முகாம்களிலிருந்து சமஷ்டி சுயநிர்ணயம் தேசியம்
பேசிய பலருடன் நெருக்கமான உறவுகளைக்கொண்டிருந்த ரவீந்திரன் 1983 இல் இலங்கையில் நிகழ்ந்த
இனக்கலவரத்தையடுத்து இங்கிலாந்து சென்றார். அங்கு தமிழர் தகவல் நிலையம் மற்றும் தமிழ்
அகதிகள் புனர்வாழ்வுக்கழகம் முதலான அமைப்புகளுடன் இணைந்தவர்.
இதனால் தமிழ் அரசியல் இயக்கங்களுடன் மாத்திரமில்லாது
தமிழ் அகதிகள் நலன்களின் பொருட்டும் உருவாகிய
தமிழ் அமைப்புகளிலும் இணைந்திருந்தவர்.
அவுஸ்திரேலியா மெல்பனுக்கு வந்தபின்னரும் விட்ட
குறை தொட்ட குறையாக தொடர்ச்சியாக தனக்குத் தெரிந்த வழிமுறைகளில் தமிழர் சம்பந்தப்பட்ட
பணிகளில் ஈடுபாடு காண்பிப்பவர்.
இவரது தங்கை எழுத்தாளர் அருண். விஜயராணியின் இலக்கிய
நண்பர்களும் இவரது நண்பர்களாயினர். அத்துடன் இவரும் கலை இலக்கிய ஆர்வலராக விளங்கியமையினால்,
எனது நெஞ்சத்திற்கும் நெருக்கமானவர்.
எனது குடும்ப நண்பர் என்பதைவிட எனது மூத்த சகோதரர்
என்ற வாஞ்சையுடன்தான் அவருடன் உறவாடிவருகின்றேன். அவருக்கு டிசம்பர் 27 ஆம் திகதி
75 வயது என்று அவரது துணைவியார் எங்கள் அண்ணி சொன்னதும் மிகுந்த ஆச்சரியமடைந்தேன்.
இலங்கைச் செய்திகள்
சர்வாதிகாரிகளை நிராகரிக்கக்கோரி வவுனியாவில் ஊர்வலம்
வெள்ளத்தால் வடக்கில் 16 ஆயிரத்து 872 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 819 பேர் பாதிப்பு
வவுனியா வடக்கில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிப்பு
வெள்ளத்தால் கிளிநொச்சியில் 12 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் பாதிப்பு
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் நிவாரணம் வழங்கி வைப்பு
மிளகாய் தூள் விவகாரம் : பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது விசாரணைக் குழு
சீனா அறிமுகப்படுத்தியுள்ள புதிய விமான சேவை
இலங்கையரான மொஹமட் நிசாம்தீன் மீதான சூழ்ச்சி : அவுஸ்திரேலிய வீரரின் சகோதரர் மீண்டும் கைது
பகிடிவதையால் தற்கொலைக்கு முயற்சித்த யாழ். பல்கலைக்கழக மாணவன்
பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் துப்பாக்கியுடன் கைது
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோர் தொகை ஒரு இலட்சத்தையும் தாண்டியது
ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை விநியோகம் ஜனவரியில் ஆரம்பம்
சர்வாதிகாரிகளை நிராகரிக்கக்கோரி வவுனியாவில் ஊர்வலம்
23/12/2018 ஜனநாயத்திற்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று வவுனியாவில் சர்வாதிகாரிகளை நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று இடம்பெற்றது.
உலகச் செய்திகள்
குமுறுகிறது எரிமலை - மீண்டும் சுனாமி ஆபத்து
இந்தோனேசியா சுனாமியில் சிக்கி உயிரிழந்தோரின் தொகை 373 ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் ; 45 பேர் பலி
சிரியா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்
புதிதாக பதவி ஏற்ற மெக்சிகோ பெண் ஆளுனர் ஹெலிகொப்டர் விபத்தில் பலி
ஈராக்கிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டு படையினரை சந்தித்தார் டிரம்ப்
ஹைப்பர் சொனிக் ஏவுகணை சோதனையில் வெற்றி
குமுறுகிறது எரிமலை - மீண்டும் சுனாமி ஆபத்து
24/12/2018 இந்தோனேசியாவின் அனக் கிரக்காட்டு எரிமலைக்கு அருகில் உள்ள கரையோர கிராமங்களை மீண்டும் சுனாமி தாக்கலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சனிக்கிழமை சுனாமிதாக்கியதன் காரணமாக 281 பலியாகியுள்ள நிலையிலேயே அதிகாரிகள் மீண்டுமொரு சுனாமி தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எரிமலை வெடித்தன் காரணமாக கடலுக்கு அடியில் ஏற்பட்ட அதிர்வுகளே பாரிய சுனாமிக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் எரிமலை மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளதை தொடர்ந்து சுனாமி ஆபத்து குறித்து பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எரிமலை வெடிப்பு தொடர்வதால் மற்றொரு சுனாமிக்கான வாய்ப்புகள் உள்ளன என இந்தோனேசியாவின் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக மக்கள் கடற்கரையோரங்களில் நடமாடக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் நன்றி வீரகேசரி
தமிழ் சினிமா - சிலுக்குவார் பட்டி சிங்கம் திரை விமர்சனம்
தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த விஷ்ணு ராட்சசன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு நடித்திருக்கும் படம் சிலுக்குவார் பட்டி சிங்கம். இப்படத்திலும் ஜெயித்தாரா பார்ப்போம்.
கதைக்களம்

முன்னாள் அமைச்சரான மன்சூர் அலிகானை கொலைசெய்ய சென்னையிலிருந்து வரும்போது சிலுக்குவார்பட்டியில் ஒயின்ஸாப்பில் குடிக்கிறார். அங்கு நடக்கும் கலவரத்தில் விஷ்ணு ஆப்பாயிலை தட்டிவிட்டதற்காக வில்லனை யார் என தெரியாமல் பொளந்துகட்டி ஸ்டேஷனில் உட்காரவைக்கிறார்.
வில்லன் ஆட்கள் ஸ்டேஸனுக்குள் நுழைந்து போலிசை அடித்துவிட்டு வில்லனை கூட்டி செல்கின்றனர். தன்னை சாதாரண கான்ஸ்டபல் அடித்து அவமானப்படுத்தியற்காக விஷ்ணுவை கொல்லத்துடிக்கிறார்.
வில்லன் பெரிய ரவுடி என தெரிந்ததும் அவரிடமிருந்து தப்பிக்க மாறுவேடங்களில் சுற்றும் விஷ்ணு தைரியமானாரா அவரை கைது செய்தாரா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தையடுத்து மீண்டும் முழுக்க காமெடிகதையில் நடித்து அசத்துகிறார் விஷ்ணு. பயந்தாங்கொள்ளியாக இருந்தாலும் காதலி முன்பு கெத்தை விடாமல் நடிப்பது வில்லனுக்கு பயந்து விதவிதமான கெட்டப்பில் அசத்துவது என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார்.
ரெஜினா வழக்கமான கதாநாயகிகளின் வேலையைத்தான் செய்கிறார். இரண்டு பாடலுக்கு ஆடிவிட்டுசெல்கிறார். ஓவியாவும் நடித்துள்ளார்.
பிக்பாஸ்க்கு பிறகு பெரிய ஹீரோயினாக வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களை ஏமாற்றும் விதமாக கனகா கதாபாத்திரத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு ஆடி இரண்டு காட்சிகளில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
காமெடி படம் என்பதால் காமெடியன்களுக்கு குறைவில்லாமல் இருக்கிறார்கள். கருணாகரன், சிங்கமுத்து, லொல்லுசபா மனோகரன் என பலரும் காமெடியில் கலக்குகின்றனர்.
பாட்ஷா படத்தில் ஆம்னி இந்திரனாக மிரட்டிய ஆனந்த்ராஜ் இதில் ஷேர் ஆட்டோ சந்திரனாக காமெடி செய்துள்ளார்.
யோகிபாபு தான் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் காமெடியில் கலக்கியுள்ளார். வில்லன் கூடவே வந்து சீரியசான காட்சிகளில் கூட கவுண்டர் கொடுத்து படம் முழுவதும் அனைவரையும் கலாய்த்து தள்ளுகிறார்.
வில்லனாக வரும் சாய்ரவியும் சீரியஸ் வில்லன், காமெடியாக அடிவாங்கும் கதாபாத்திரம் என சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
முதல் 20 நிமிடம் கொஞ்சம் போரடித்தாலும் கதைக்குள் நுழைந்ததும் படம் முழுவதும் சிரிப்பு சத்தத்தோடு நகர்கிறது.
படம் காமெடியாக இருந்தாலும் எதுவுமே புதிய காட்சியாக தோன்றவில்லை. பல காட்சிகள் ஏற்கனவே பார்த்து பழகிய சுந்தர்சி, எழில் போன்றவர்களின் காமெடி படங்கள் கண்முன்னே வந்து செல்கிறது.
க்ளாப்ஸ்
படம் முழுவதும் ஒட்டியிருக்கும் காமெடி காட்சிகள். யோகிபாபு, சிங்கமுத்துவின் காமெடி அதிகம் ரசிக்க வைக்கிறது.
படம் முடிந்து சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு வைத்திருக்கும் பாட்ஷா படத்தின் ஆனந்த்ராஜின் ப்ளாஷ்பேக் காட்சி
பல்ப்ஸ்
முதல் 20 நிமிடம் கொஞ்சம் சோதிக்கிறது.
பார்த்து பழகிய கதை, க்ளைமேக்ஸ் சேஷிங்வரை பல காட்சிகளும் ஏற்கனவே பார்த்த அனுபவத்தை கொடுக்கும்.
மொத்தத்தில் சிலுக்குவார்பட்டி சிங்கத்தை குடும்பத்துடன் பார்த்து ஒருமுறை சிரித்து வரலாம்.
நன்றி CineUlagam
Subscribe to:
Posts (Atom)