காதலிக்கப்படும்போது....

.இரு கண்களில்
ஓர் அழுகை

உள்ளங்களிரண்டில்
ஒரு புன்னகை

உதடுகளிரண்டில்
ஒரு உச்சரிப்பு

இரண்டு என்றவைகளுக்கெல்லாம்
ஒன்று என்ற பொருள்

காதுமடல்களில்
செல்லப்பெயர்களின்
தேடல்

மறந்துவிட்டு
வாழும் வாழ்க்கை

வாழ்கையில் சிக்கிய
தேவை

சிக்கலில் சிக்கி 
அவிழ்க்கும் முடிச்சுகள்

காதலிக்கப்படும் போது......

மெல்பேர்ணில் தியாகதீப கலைமாலை நிகழ்வு

.பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிருநாட்களாக நீர்கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து 26-09-1987அன்று ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 29வது ஆண்டு நினைவுதினமும் கலைமாலை நிகழ்வும் ஒஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரில் 30-09-2016 வெள்ளிக்கிழமையன்று சென்யூட்ஸ் மண்டபத்தில் மாலை 6.00 மணியளவில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 26-09-2001 அன்று புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான்வீதியில் சிறிலங்காப்படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கேணல் சங்கர் மற்றும் 25-08-2002 அன்று சுகயீனம் காரணமாக சாவைத் தழுவிக்கொண்ட கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத்தளபதி கேணல் ராயு ஆகிய மாவீரர்களும் நினைவுகூரப்பட்டனர். 

கீதவாணி விருதுகள் - JHC Old Boys NSW 08/10/2016அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இலக்கியச்சந்திப்பு

.


அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் இன்று 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  -  மெல்பனில்,  சங்கத்தின் உறுப்பினர் எழுத்தாளர் திரு. எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் இல்லத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட  இலக்கியச்சந்திப்பு  அனுபவப்பகிர்வு

                                                        நாடக, திரைப்பட, தொலைக்காட்சி கலைஞரும் கல்கி, சாண்டில்யன் முதலான வரலாற்று இலக்கிய ஆசிரியர்களின் படைப்புகளை ஒலிப்புத்தகமாகத்தயாரித்தவரும், மோகமுள் திரைப்படத்தில் நடித்தவருமான தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த  கலைஞர்  திரு. பம்பாய் கண்ணன், இங்கிலாந்திலிருந்து வருகை தந்த மூத்த எழுத்தாளர் திரு.  ரத்னசபாபதி அய்யர், குவின்ஸிலாந்திலிருந்து வருகை தந்திருந்த சங்கத்தின் உறுப்பினரும் பிறிஸ்பேர்ண் தாய்த்தமிழ்ப்பள்ளி, மற்றும் தமிழ் விக்கிபீடியாவில் இயங்குபவருமான திரு. முகுந்தராஜ் ஆகியோர் தமது கலை, இலக்கிய, கல்வித்துறை சார்ந்த அனுபவங்களை  இச்சந்திப்பில்  பகிர்ந்துகொண்டனர்.

உமாவின் Patchwork அமைப்புக்காக ரசம் லயம் மூலம் புதுமை படைத்துவிட்டார்கள் - திருமதி பரா சுந்தா


.


  உமாவின் Patchwork அமைப்புக்காக                                        சேரனும்ஜனகனும்  தங்கள்  குழுவினரோடு  இணைந்து                                ரசம் லயம் மூலம்  புதுமை   படைத்துவிட்டார்கள்   தாய் மண்ணிலே நிகழ்ந்த  கோரப்போரிலே அங்கவீனப்பட் டவர்களுக்காக பலவழிகளிலும்  உதவும் நோக்குடன்  அவுஸ்திரேலியாவிலிருந்து PATCHWORK  என்னும் அமைப்பை நடத்திவரும் உமாவின் அளப்பரிய சேவை  பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது

 நீண்ட காலமாக  நடனக் கலைஞர் சேரன் சிறீபாலன் தனது நடனநிகழ்ச்சிகள் மூலம்  இந்த அமைப்புக்கு அர்ப்பணிப்போடு பொருளுதவி  செய்து வருவதையும் நாம் அறிவோம் 


சென்ற ஞாயிறு  செப்டெம்பர் 25'ம் நாள் 2016  அன்று பரமற்றா  றிவர்     சைட்  அரங்கத்தில் சேரனோடு    லய வித்துவான்ஜனகன் சுதந்திரராஜ்  அவர்களும்  இணைந்து   பல இளைய இசைக்கலைஞர் நடனமணிகளுடன்   புதுமையான நிகழ்வொன்றைப்படைத்து உமாவின் PATCHWORK  அமைப்புக்கு    நிதி சேகரித்து  உதவிய  செயல்  பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது 

சிட்னி முருகன் கோவில் நவராத்திரி பூசை
கவி விதை - 17 - --விழி மைந்தன் --

.
சதுரங்கம்.

அவளோ  அழகி.

சேலான  விழியும், நூலான இடையும், தேனான மொழியும் உடையவள்.


கிராமத்துப் பெருந்தனக்  காரர் மகள்.

கிராமத்து விவசாயி ஒருவன் அவளைக் காதலித்தான்.

ஏழையானாலும், கட்டுறுதி உள்ள உடல், கண்ணிலே நல்ல குணம், ஒப்புரவே நன்றாய் உரைத்திடும் சொல் உடையவன்.

அவளுக்கும் பொழுது போகவில்லை. முதலில் உதாசீனம் செய்வது போல் இருந்து விட்டுப்  பிறகு அவன் காதலை ஏற்றுக் கொண்டாள்.

வயல் வரப்புகளிலும், மாந்தோப்புகளிலும், தென்றல் காற்று கிச்சு கிச்சு மூட்டும் நாணல் புதர்கள் நிறைந்த ஆற்றங்கரைகளிலும் வளர்ந்தது அவர்கள் காதல்.

துர்க்கை அம்மன் ஆலயம் & தமிழ் இலக்கியக் கலை மன்றம் பரிசளிப்பு விழா 09/10/2016துர்க்கை அம்மன் ஆலயம் &
தமிழ் இலக்கியக் கலை மன்றம்
பரிசளிப்பு விழா 2016
சமய அறிவுப்போட்டி, திருக்குறள் போட்டிகளில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசளிப்பு

நாள்: ஞாயிற்றுக்கிழமை 9 அக்டோபர் 2016
நேரம்: மாலை 6 மணி
இடம்: தமிழர் மண்டபம், ஸ்ரீதுர்க்கை அம்மன் கோயில்,
21 Rose Crescent
Regents Park 

படித்தோம் சொல்கின்றோம் - ரஸஞானி - மெல்பன்

.

 பொற்கரையில்  ஊற்றெடுத்த  தமிழ் நதி
                                                 

"துளியாய்,  துளித்துளியாய்,  துளி  மழையாய், சிறுமழையாய், பெருமழையாய்,  விண்நீங்கி  மண் நனைக்கும் விசும்பின் துளிகள்போல்,  இங்கும்  வீழ்ந்தன  சில  துளிகள்"
இந்த கவித்துவ வரிகளை பதிவுசெய்தவர் அவுஸ்திரேலியாவில் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பொற்கரை என்று சொல்லப்படும் GOLD COAST இல் மருத்துவராகப்பணியாற்றும்  திருமதி வாசுகி சித்திரசேனன்.
இவர் இலங்கையில் கண்டி மாநகரில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அசோக்கா வித்தியாலயம்  என்ற கல்விச்சாலையை தொடக்கிய நடராஜா மற்றும் கலை, இலக்கியவாதி லலிதா ஆகியோரின் புதல்வி.
" கடல்  நமக்கே  சொந்தமென  எந்தக்கரையுமே உரிமை கொண்டாட முடியாது. கடல் இருக்கும் வரைதான் கரைகளும் இருக்கும். அதேபோல் தமிழ் தமக்கு மட்டுமே சொந்தமென யாரும் நினைக்க முடியாது. தமிழ் தழைக்கும்வரைதான் தமிழர்களும்  தழைக்கலாம்.  தலைமுறைகளும் செழிக்கலாம்.  ஊற்றெடுத்து வேறிடமெனினும் தமிழ் நதியெனும் மகா நதியில்  சங்கமித்து  இன்று  இங்கே   இணைந்துள்ளோம்.  அனைத்துத் தமிழர்களையும்   அணைத்து   இணைத்து  பிணைத்துச்செல்லும் பெருநதியாக  என்றும்  வற்றாது  பிரவாகிக்கவேண்டும். "  இவ்வாறு அண்மையில்  அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய

சிட்னி ஸ்ரீ துர்க்கா அம்மன் கோவில் நவராத்திரிஒலிம்பிக் தங்கத்துக்குப் பின்னே அக்காவின் சைக்கிளும் அம்மாவின் அலைச்சலும்!

.

பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டி நேரடி ஒளிபரப்புக்காக நள்ளிரவு ஒரு மணியில் இருந்து பெரியவடகம்பட்டியில் உள்ள அந்த தெரு பரபரத்துக் கிடந்தது. மாரியப்பனின் நண்பர்கள், உடன்பிறந்தவர்களின் விழிகளிலோ உறக்கத்தை மீறிய உற்சாகம்.

அதே நேரம் ஒற்றை அறை கொண்ட வாடகை வீட்டில் தன்னந்தனியாக தன் மகன் பற்றிய நினைவுகளுடன் காத்துக் கொண்டிருந்தார் சரோஜா அம்மா. நிசப்தமான ஊரின் அதிகாலையை பட்டாசு ஒலிகள் நிரப்ப... சரோஜா அம்மாவின் ஆனந்தக் கண்ணீரோடு விடிந்தது அதிகாலை. ஊனமான பையன் என்று சிறுவயதில் இருந்து கேலி கிண்டல்களை அனுபவித்த சரோஜா அம்மாவின் மகன் மாரியப்பன்... பாராலிம்பிக் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்ற நாள் அன்று! சச்சின் டெண்டுல்கர், பிரதமர் மோடியில் ஆரம்பித்து ரஜினிகாந்த் வரை அத்தனை பேரும் மாரியப்பனை வாழ்த்துகளால் நிறைத்திருந்தனர். அந்தச் சுவடு எதையுமே தன்னில் கொண்டு வராமல் வழக்கம்போலவே அமைதியாக கிராமத்து மனுஷிக்கான வெள்ளந்தித்தனத்தோடு இருக்கிறார் சரோஜா அம்மா. அவரிடம் விரிவாகப் பேசினோம்.

நாகேஷ் - ருத்ரா இ பரமசிவன்

.

"நீங்களும் ஒரு கோடி வெல்லலாம்"
என்ற நிகழ்ச்சிக்கு
மடி நிறைய ஒரு கோடியை
கனமான கனவாக்கி 
சுமந்து சென்று அதில்
ஒரு ரூபாய் கூட வெல்லாத‌
"தருமி"யின் புலம்பல் 
எப்படியிருக்கும்?
இன்றும் தமிழ் நாட்டு தியேட்டர்களில்
எல்லாம் எதிரொலிக்கிறது.
சிம்ம கர்ஜனையின் எதிரே
இந்த நகைச்சுவைப் பூனையின்
கணீர் கணீர் களில்
மியாவ் களை கேட்கவில்லை.
ஒரு டைகர் நாகேஷ்
அந்த மண்டபத்துத் தூண்கள் 
கிடுகிடுக்க நம்மை சிரிக்கவைத்தார்.
"கேள்வியை நீ கேட்கக்கூடாது
நான் தான் கேட்பேன்"
என்ற வசனத்தில்
அந்த வெல வெலப்பு.
ஒரு பொய் மிடுக்கு
சிவ பெருமானையே 
கடுப்பேற்றிப் பார்க்கும்
ஒரு துறு துறுப்பு...

உலக தமிழ் நாடக விழா 2016 24/25 - 10 -2016

.


இலங்கைச் செய்திகள்


இலங்கையை வந்தடைந்தார் நிர்மலா சீத்தாராமன்.!

முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக பொகவந்தலாவையில் பாரிய ஆர்ப்பாட்டம்

தெல்லிப்பளையில் குண்டுகள் மீட்பு

 “இழுவைப் படகிற்கு அனுமதியுங்கள் அல்லது சவப்பெட்டியை தாருங்கள்”

 இந்தியாவின் மத்திய அமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு : கொழும்பு நகரில் பெரும் போக்குவரத்து நெரிசல்

எட்கா உடன்படிக்கை : அழுத்தம் பிரயோகிக்க மாட்டோம் : ஒன்றாக இருப்பதா ? இல்லையா ? என தீர்மானியுங்கள்: இந்தியா

ஜயந்த சமரவீர  நிதி மோசடி விசாரணை பிரிவில்

யோசித ராஜபக்ஷ வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

 ரஞ்சனுக்கும் ஊடகவியலாளருக்கும் கடுமையான வாக்குவாதம் : கெமராவை தாக்கிய ரஞ்சன் : அதிர்ச்சி தகவல்களையும் வெளியிட்டார் (காணொளி இணைப்பு)

ஹட்டன் - பொகவந்தலாவ  வீதியை மறித்து   மக்கள் ஆர்ப்பாட்டம்  ; வீதியை புனரமைக்குமாறு கோரிக்கை

நியாயமான சம்பளத்தை பெற்றுகொடுக்க கோரி தோட்டத் தொழிலாளர்கள்  ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற உறுப்பினர்  ஜயந்த சமரவீர கைது

இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்.!

நாய் தோண்டிய குழியிலிருந்து  3 கைக்குண்டுகள் மீட்பு ; யாழில் சம்பவம்

நீஷா பிஷ்வாலை சந்தித்தார் கடற்படை தளபதி

ரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜப்பான் கொடுத்த கௌரவம்

201610021138160727_japan-honor-to-sivakarthikeyan-after-rajini_secvpfதயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார் சிவகார்த்திகேயன். அவர் நடிக்கும் படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு காசை கொட்ட தயாராக உள்ளார்கள் இந்த முத்தரப்பினரும். அந்த தைரியம் தான் இதுநாள்வரை சிவகார்த்திகேயன் நடித்தராத அளவுக்கு தற்போது அவர் நடித்துள்ள ‘ரெமோ’ படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க 24AM தயாரிப்பு நிறுவனத்தை தூண்டியுள்ளது.
பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ‘ரஜினி முருகன்’ சிவகார்த்திகேயனின் ராசி ஜோடியான கீர்த்தி சுரேஷ் மீண்டும் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் சதீஷ், யோகிபாபு, சரண்யா, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.

மைக்கை தூக்கி எறிந்து தொலைக்காட்சி பேட்டியிலிருந்து கோபமாக வெளியேறிய பிரகாஷ்ராஜ்- ஏன்?

.
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணசித்திர நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் நடிப்பில் விரைவில் ”இதொல்லே ராமாயணா” என்ற கன்னட படம் வரவிருக்கின்றது.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இவரிடம் காவேரி பிரச்சனை குறித்து கருத்து கேட்டுள்ளார் தொகுப்பாளர்.
உடனே கோபமான பிர்காஷ்ராஜ் ‘நான் ஒரு திரைப்பட நடிகர், படத்தை ப்ரோமோஷன் செய்ய வந்துள்ளேன், காவேரி பிரச்சனை நேற்று ஆரம்பித்து, இன்று முடிவதில்லை.
மிகவும் ஆழமான பிரச்சனை அது, உங்கள் பலனுக்காக சினிமா நடிகனிடம் இந்த மாதிரி கேள்விகளை எல்லாம் கேட்காதீர்கள், இது மிகவும் தவறு.
மேலும், இந்த மாதிரி சமயத்தில் நீங்கள் தான் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும், இப்படி பொறுப்பே இல்லாமல் வாய்க்கு வந்த விஷயங்களை கேள்வியாக கேட்காதீர்கள்.
இதை அப்படி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புங்கள்’ என கூறி மைக்கை தூக்கி எறிந்து விட்டு சென்றுவிட்டார்.

Nantri cineulagam.com

முதல்வர் எப்படி இருக்கிறார்?

.

நெருங்கிய உறவுகளை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு வெளியில் தவித்துக் கொண்டிருந்த அனுபவம் கிட்டத்தட்ட நம் ஒவ்வொருவருக்குமே இருக்கக் கூடும். எனக்கு மிகச் சமீபத்தில் கூட வாய்த்தது. அப்பா உள்ளே இருந்தார். யாரையுமே உள்ளே விடக் கூடாது என்றிருந்தது. அப்பாவிடம் அருகில் நின்று அழுதார்கள். எதையாவது பேசினார்கள். நோய்க்கிருமி தொற்றிக் கொள்ளக் கூடும் என்றும் பயந்தேன். யார் உள்ளே வந்தாலும் சில வினாடிகளில் வெளியே அழைத்துச் சென்றுவிட்டேன். பல உறவினர்களுக்கும் என் மீது வருத்தம். பார்க்கும் வரைக்கும் பார்த்துவிட்டு அம்மா என்னிடம் வந்து ‘அவங்க அப்பாவை பார்க்கலாம்ன்னு வர்றாங்க....மனசுல கொஞ்சமாச்சும் பாசமில்லைன்னா அழுக மாட்டாங்க...அதைத் தடுக்கிறது நமக்கு உரிமை இல்லை.....ரொம்ப தடுக்காத’ என்றார். யோசித்துப் பார்த்தால் அம்மா சொன்னது சரிதான். அப்பா மீது எனக்கு அதிகமான உரிமை இருந்தாலும் அவர் மீது உண்மையான அன்போடு வந்து போகிற நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இருக்கிறது. 

மருத்துவரிடம் ‘இன்ஃபெக்‌ஷன் ஆகிடுமா?’ என்றேன்.

‘அப்பாவுக்கும் யாரையாவது பார்க்கலாம்ன்னு ஆசையா இருக்கும்..ரொம்பத் தடுக்க வேண்டாம்...பார்த்துக்கலாம் விடுங்க..’ என்றார். அதன் பிறகு யாரையும் பெரிதாகத் தடுக்கவில்லை.

உலகச் செய்திகள்


உலகில் முதல்முறையாக இரு தாய்மார் ஒரு தந்தை இணைந்து பெற்றெடுத்த குழந்தை

சீனாவில் சூறாவளி ; ஐவர் பலி ; 100 இற்கு மேற்பட்டோர் காயம் 

அமெரிக்காவில் இடம்பெற்ற பயங்கர ரயில் விபத்தால் பரபரப்புஉலகில் முதல்முறையாக இரு தாய்மார் ஒரு தந்தை இணைந்து பெற்றெடுத்த குழந்தை

28/09/2016 பொதுவாக ஒரு குழந்தைக்கு பெற்றோராக தாய் மற்றும் தந்தை என 2 பேர் இருப்பார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக 2 தாய்கள் ஒரு தந்தை என 3 பேர் இணைந்து ஒரு குழந்தையை உருவாக்கியுள்ளனர்.
ஜோர்டானை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மரபணு குறைபாடு இருந்ததுள்ளது. அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் கூடிய பெண்ணிடம் இருந்த மைட்டோ காண்ட்ரியா தானமாக பெற்று ஜோர்டான் பெண்ணின் கருமுட்டையுடன் சேர்க்கப்பட்டது.

தமிழ் சினிமா

ஆண்டவன் கட்டளைதமிழ் சினிமாவில் ஒரு உலகப்படம் என்று சொல்லக்கூடியது தான் காக்காமுட்டை. இப்படி இரு தரமான படத்தை கொடுத்த இயக்குனர் மணிகண்டன், தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதியுடன் கைக்கோர்த்தால் எப்படியிருக்கும்? அதற்கான பதில் தான் இந்த ஆண்டவன் கட்டளை.

கதைக்களம்

ஒரு சிறிய தவறு மனிதனை எத்தனை பிரச்சனைகளில் மாட்ட வைக்கின்றது என்பதே படத்தின் ஒன் லைன். விஜய் சேதுபதி குடும்ப கஷ்டத்திற்காக லண்டன் செல்ல முடிவு செய்கிறார்.
இவருடன் நண்பர் யோகி பாபுவும் வர, ஒரு ஏஜெண்ட் மூலம் பாஸ்போர்ட் எடுக்கிறார். அதில் கார்மேக குழலி என்று ஒரு மனைவி இருப்பதாக பொய்யும் கூறுகிறார். (எளிதில் விசா கிடைக்க வேண்டும் என்று).
விசா இண்டர்வியூவில் யோகி பாபுவிற்கு விசா கிடைக்க, விஜய் சேதுபதிக்கு கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் நாசர் வைத்திருக்கும் நாடக கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்.
அந்த நாடக கம்பெனி லண்டன் போக, விஜய் சேதுபதியும் அழைக்க, இந்த முறை பாஸ்போர்ட்டில் இருக்கும் மனைவி பெயரை எடுக்க வேண்டிய கட்டாயம். இதற்காக அதே பெயரில் இருக்கும் ரித்திகா சிங்கை இதற்கு சம்மதிக்க போராட, இறுதியில் விஜய் சேதுபதி லண்டன் போனாரா? இல்லை பிரச்சனையில் மாட்டினாரா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

இன்று சமூகத்தில் நடக்கும் பல 420 வேலைகளை கண்முன் கொண்டு வருகின்றது. பாஸ்போர்ட்டில் எத்தனை முறைக்கேடு நடக்கின்றது, எதிலும் நியாயம் வேண்டும், தவறான வழியை தேர்ந்தெடுத்தால் எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க வேண்டும் என்பதை மணிகண்டன் தெளிவாக கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி இனி நாங்கள் சொல்லி அவர் சிறந்த நடிகர் என்று தெரிய வேண்டியது இல்லை. எந்த கதாபாத்திரம் என்றாலும் சிக்ஸர் தான், அதிலும் வாய் பேச முடியாதவராக இவர் செய்யும் செய்கைகள் திரையரங்கே கைத்தட்டல் பறக்கின்றது.
ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு என்ன செய்வார் என்று எதிர்ப்பார்க்க, தான் எந்த வழியில் போக வேண்டும் என்பதை தெளிவாக தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். ரிப்போர்ட்டராக வந்து விஜய் சேதுபதிக்கு உதவும் இடத்திலும் சரி, விவாகரத்திற்காக இவர் கோர்ட் கவுன்ஸிலிங்கில் பேசும் காட்சிகளிலும் சரி, அத்தனை முகபாவனையில் ரசிகர்களை கவர்கிறார்.
விஜய் சேதுபதியின் நண்பராக வரும் யோகி பாபு, ஏற்கனவே இவர் பிஸி தான். இந்த படத்திற்கு பிறகு நிற்ககூட நேரம் இருக்காது போல, இவர் திரையில் வந்தாலே சிரிப்பு சத்தம் பறக்கின்றது. அதிலும் விசா கிடைத்தவுடன் விஜய் சேதுபதியை கலாய்க்கும் இடமெல்லாம் செம்ம.
இலங்கை தமிழராக வருபவரும் மனதை கவர்கிறார். தன் குடும்பத்தை தொலைத்து, அகதி என்று கூட சொல்ல முடியாமல் அவர் படும் கஷ்டம், பல வலிகளை தாங்கி செல்கின்றது. படம் பாஸ்போர்ட் முறைக்கேடுகள், ஏமாற்றுதல் பற்றி எடுத்திருந்தாலும் விவாகரத்து பற்றி காட்டிய விதம் சுவாரசியம்.
கே இசையில் பாடல்கள் ஏதும் மனதில் நிற்கவில்லை என்றாலும், பின்னணி இசை நன்றாக உள்ளது. படத்தில் எல்லாம் நன்றாக இருந்தும் திரைக்கதை மட்டும் நாம் தான் தள்ளி செல்ல வேண்டிய கட்டாயம்.

க்ளாப்ஸ்

எடுத்துக்கொண்ட கதைக்களம், நடிகர், நடிகைகளின் யதார்த்தமான நடிப்பு.
சென்னையில் ஒரு வீடு வாடகைக்கு கிடைக்க எத்தனை கஷ்டம் என்று காட்டிய விதம்.
யோகி பாபு வரும் அனைத்து காட்சிகளும்.

பல்ப்ஸ்

மிகவும் மெதுவாக நகர்ந்து செல்லும் திரைக்கதை.
மொத்தத்தில் ஆண்டவன் கட்டளை பார்ப்பவர்களை இனி ஒரு சிறிய தவறு செய்யக்கூட யோசிக்க வைக்கும்.
Direction:
Music:
K

நன்றி cineulagam