மரண அறிவித்தல் - நாகராஜா உருத்திரகுமார் J.P

.
                                      உருத்திரகுமார் நாகராஜா 

மரண அறிவித்தல்
நாகராஜா உருத்திரகுமார் J.P
              மலர்வு; 12-12-1960                           உதிர்வு; 24-02-2016 

யாழ்ப்பாணம் மானிப்பாயை பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன், சிட்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா உருத்திரகுமார் அவர்கள் சிட்னியில் 24/02/16 புதன் கிழயமயன்று காலமானார்.

அன்னார் மஸ்கன்ஸ் நிறுவன உரிமையாளர் காலஞ்சென்ற நாகராஜா, கமலாசனி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற புவனேந்திரன், சரஸ்வதி அம்மா ஆகியோரின்  மருமகனும்,

நிலந்தினியின் அன்புக் கணவரும், நிரோஷனின்  பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற நகுலேஸ்வரன், விஜயநாதன் (சுவிஸ்), உமாவதி (அவுஸ்தினரலியா), லோகநாதன் (லண்டன்), உஷாதேவி ( லண்டன்), சுகன்யா தேவி (லண்டன்), நிலாமதி (அவுஸ்தினரலியா), கணேஷ்ராஜ்(லண்டன்), காலஞ்சென்ற ஸ்கந்தராஜ், ரவீந்திரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், குணராணி, வசந்தி, பாலேந்திரன், ஈஷானி, குலேந்திரன், சிவக்குமார், குகநேசன் , கீதா, மாதினி, பிரசாந்தி, சுபோதினி, முரளிதரன், ராகினி, பிரகலாதன், துஷ்யந்தி ஆகினயாரின் அன்பு மைத்துனரும்  ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

பார்வைக்கு: 27/02/2016 Saturday – 5:30 to 7:30 PM Liberty Funeral Parlour, 101 South                 Street, Granville

இறுதிகிரியைகள்: 29/02/2016 Monday – 10:30 to 1:00 PM South Chapel ,Memorial Avenue,                   Rookwood.


தகவல்களுக்கு; நிலந்தி: +612 8608 6085 
உமா: +61 469 807 500 
பிரபா : +61 409 783 725 
சடா: +61 402 040 415

மரண அறிவித்தல்

.
                                        கதிரித்தம்பி கணபதிப்பிள்ளை அவர்கள் 
மறைவு  21-02-2016 

வடமராட்சி அல்வாய் மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், அவுஸ்திரேலியா சிட்னி மற்றும் மெல்போன் நகரங்களில் வசித்து வந்தவருமான கதிரித்தம்பி கணபதிப்பிள்ளை அவர்கள் 21-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவ பதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் மூத்த அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், வேதநாயகி அவர்களின் ஆருயிர்க் கணவரும், தங்கவேலாயுதம் (இலங்கை), பரமேஸ்வரி (லண்டன்),  காலஞ்சென்ற குமாரரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்  Dr.சந்திரகௌரி  ரவீந்திரன் (மெல்போன்), யோகானந்தன் (சிட்னி)  வல்லபானந்தன் (சிட்னி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ரவீந்திரன் (மெல்போன்), மனோவதனி (சிட்னி), ஸ்வர்ணகௌரி (சிட்னி) ஆகியோரின் அன்பு மாமனாரும்  Dr. ஹரிஹரன், ரிஷிதரன், வரன் சாய், அரன் ஷாமா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-02-16 செவ்வாய்க்கிழமை அன்று Corner of Burwood Highway and Stud Road, Wantirna South ல் (390 Burwood Highway, Wantirna South)  உள்ள Allison Monkhouse ல் மாலை 7 மணி தொடக்கம் 9 மணி வரை பார்வைக்கு வைக்கப்படும்.

இறுதிக் கிரியைகள் 24-02-16 புதன்கிழமை அன்று 1237Riversdale Road, Box Hill South உள்ள அன்னாரின் இல்லத்தில் காலை 11 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரையில் இடம்பெற்று springvale crematorium  மில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Funeral Details
Viewing
Date: 23rd Feb 2016, Tuesday
Time: 7pm to 9pm
Place: Alison Monkhouse, Corner of Burwood Highway and Stud Road, Wantirna South

Last rites and Cremation
                Date: 24th Feb 2016, Wednesday
                Time: 11:00am to 1:00pm
                Place: Family home at 1237, Riversdale Road, Box Hill South, Vic – 3128
Cremation thereafter at Springvale (No viewing).

For Information & Contact : Seth Ravindran - 0407 500 297

சிட்னி ஸ்ரீ துர்க்கா ஆலய மாசி மஹா மகம் தீர்த்தம் 22/03/2016







நீ முதல் நான் வரை



 





வெற்றி பெற 
வாழ்த்துகிறேன் 

வெளிப்படையாய் 
கைகுலுக்குகிறேன் 

வெற்றிபெற்று வருகையிலோ 
உள்ளுக்குள் பொருமுகிறேன் 
உதட்டளவில் பாராட்டுகிறேன் 

என்னிலும் ஒருபடி 
ஏறிவிடாதபடி 
எச்சரிக்கையாய் இருக்கிறேன் 

முட்டி மோதி 
மூச்சுத் திணறுகையில் 
குழிபறிக்க வழிபார்க்கிறேன் 

முயன்று முன்செல்கையில் 
குறிவைக்க வெறி கொள்கிறேன் 

எல்லாரையும் விழுங்கி ஏப்பம் விடும் 
இந்த மனித நாடகத்தில் 
என் பாத்திரம் எம்மாத்திரம் ? 

அதைமட்டும் ஏனோ 
அவ்வப்போது மறந்துவிடுகிறேன். 

சகாரா 

துர்கா தேவி தேவஸ்தான அலங்கார திருவிழா

.
துர்கா தேவி  தேவஸ்தான அலங்கார  திருவிழா இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது . இன்று 22 02 2016 மாசி  மக தீர்த்தோற்சவம்  இடம் பெற  உள்ளது

சிட்னி ஸ்ரீ துர்க்கா ஆலய மாசி மஹா மகம் தீர்த்த உற்சவம் 13.02.2016 to 24.02.2016



திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
இலங்கையின்  கடலோரத்திலிருந்து  ஜேர்மனியின் கார்ல்ஸ்ரூ  வரையில்   பயணித்த  பெண்ணியவாதி
இலக்கியத்திசை  காட்டிய   வழிகாட்டி  தேவாஹெரால்ட்
சிலம்பினுள்ளே  ஒரு  செல்வியை  கண்டவர், செல்விகளின்   குரலாக   உயர்ந்தார்.
    


இந்திரவிழாவினை  மிகச்சிறப்பாகக்  கொண்டாடிக்கொண்டிருக்கிறது பூம்புகார்.   பட்டும்  பவளமும்  சந்தனமும்  அகிலும்  முத்தும்  மணியும்   பொன்னுமாக  நிறைந்த  விண்ணுலகோ ?  என ஐயுறவுகொள்ள   நினைத்தன-------- நகைகள்  அணிந்து  நனிசிறக்க மாதவியும்   கோவலனும்  இன்பம்  துய்க்கின்றனர்.   இவ்வரிய வேளையிலே  கானல்  வரியினை  கோவலன்  இசைக்கின்றான். மாதவி   தான்  ஒன்றின்  மேல்  பாடுவாள்  போல்  இசைத்தாள். இதனைக்கேட்ட   கோவலன்   சினக்கின்றான்.   வெறுக்கின்றான்.
கானல்வரி  யான்பாடத்  தான்  ஒன்றின்  மேல்   மனம் வைத்து மாயப்பொய்   பல  கூட்டும்  மாயத்தாள்  பாடினாள்  யாழ் இசைமேல்வைத்து   தன்ஊழ்வினை   வந்து   உருத்தது  ஆதலின்--- என்றவாறு   மாதவியை   உதறிகண்ணகியைக் காணச்செல்கின்றான் கோவலன் "     இவ்வாறு    ஒரு   பந்தி சிலம்பினுள்ளே    ஒரு    செல்வி   என்ற  கட்டுரையில்  தொடங்குகிறது.

இது   எழுதப்பட்ட   காலம்    இலங்கையில்  1967  ஆம்  ஆண்டு.
இவ்வாறு    எழுதியவர்,    சுமார்    31  ஆண்டுகளின்  பின்னர்,   1998  ஆம் ஆண்டு  அய்ரோப்பாவில்,   "  கண்ணகி அந்தக்கடற்கரையோரத்திலிருந்து   கடலையே வெறித்துக்கொண்டிருந்தாள்.   நீண்ட    அடர்த்தியான  அவளுடைய கூந்தல்  அலை அலையாய்--- கருநீலம் கொண்டதாய்,  இவள் முகத்தைப்பார்க்கத் துணிந்தேன்.   கோபம்  தணிந்திருப்பாள்.   இவள் என்னைக் கவனித்ததாகவே  தெரியவில்லை.  ஆனால்,  அவள் முகத்தில்   பெரியதொரு  திருப்தி  காணப்பட்டது.    எங்காவது சிலம்பொன்று    தென்படுகிறதாவெனத்தேடினேன்.    இல்லை. கடைசியாய்   அவளிடமிருந்த  ஒரு  சிலம்பையுமே  பாண்டிய மன்னனுக்கு   முன்னால்  போட்டு  உடைத்துவிட்டாளே, எனத்தொடங்கி,    என்   கையை   கண்ணகியின்  தோளில்  வைத்தேன். அவள்   குளிராய்  இருந்தாள்.   விறைத்துப்போயிருந்தாள். கல்லாய்ச்சமைந்திருந்தாள்"   என்று    சிலம்புச்சிலை   என்ற சிறுகதையை    முடிந்திருக்கிறார்.
புதுமைப்பித்தனின்   சாபவிமோசனம்  என்ற  புகழ்பெற்ற சிறுகதையுடன்  ஒப்புநோக்கக்கூடியது   இச்சிறுகதை.

தமிழில் தேவி மஹாத்மியத்தின் விளக்கவுரை - 26/02/2016



ஸ்ரீ பத்ரி நாராயணன் 
(ஸ்ரீ சச்சிதானந்தா சாயி) அவர்கள்  தமிழில் தேவி மஹாத்மியத்தின்
விளக்கவுரைகளை   ஆற்றவிருக்கிறார்
திகதி : 26 பெப்ரவரி 2016
நேரம் : மாலை  7.30 மணி  
(மாலை 7 மணி பூசைக்குப்  பின் )
இடம் : சிட்னி  ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம்

கவி விதை 11 - பாலைவனப் பயணி - --விழி மைந்தன்--

.

பாலை வனத்தில் தனியே நடக்கும் பயணி நான்.

நீலம், பச்சை என்ற நிறங்களின் நினைவற்றுப் போய்  விட்டது, என் கண்களுக்கு.

சிவப்பு, மஞ்சள், செம்மஞ்சள், இள மஞ்சள், மண்ணிறம், மண்-மஞ்சள், செவ்விள மஞ்சள்......என் பயணத்தில் கூட வருகிற நிறங்கள் இவை தாம்.

ஒவ்வொரு நாளும் எனக்கோர் திருவிழாத் தான் ..... தீ மிதிப்புத் திருவிழா.

காலையில் எழும்போதே, சூரியன் சிவந்த முகத்துடன் சினந்து கொண்டே எழுந்து வருகிறான்.

மத்தியானம் ஆகி விட்டால், வனாந்தரக் காற்று தீயை அள்ளிப் பொழிகிறது.

மணல் துகள்கள் ஒவ்வொன்றும், பழுக்கக் காய்ச்சிய பட்டாக் கத்திகள் போலக் கொதிக்கின்றன. குத்திக் கிழிக்கின்றன!

என்னுடைய நிழலில் நானே ஒதுங்க ஏதாவது வழியுண்டா என்று மனம் கேட்கிறது  -  வங்கிக் கடனை வங்கியிலே போட்டு விட்டு வட்டி கேட்பவனைப் போல!

தாகத்தில் வீங்கிய நாக்கு வாய்க்குள்ளே தத்துகிறது -  ஒரு தவளையைப் போல!

அரசையா இல்லாத யாழ்ப்பாணம் - பேராசிரியர் சி. மௌனகுரு

.

ஒரு  வாரத்தின்  முன்  தொலைபேசியில்  அந்தக் கிழட்டுச்  சிங்கம்  தள தளத்த  குரலில்  என்னுடன்  பேசியது.
குரலின்  கம்பீரம்  குறையவில்லை.
சேர்  என்  நிலைமை  சரியில்லை. உங்களைக்  காணவும்  கன  கதைகள்  சொல்லவும்  ஆசையாக  இருக்கிறது
அரசையா  நான்  தற்சமயம்  நீண்ட  பயணம்  செய்யமுடியாத  நிலை. உடனே வரமுடியாத  நிலையிலுள்ளேன்.  முடியுமான  நிலை வந்தவுடன்  வருவேன்
இல்லை  சேர்  நான்  அதுவரை  இருக்க மாட்டேன். நாம்  சந்திப்போமோ  தெரியாது
" இல்லை  அரசையா  நீங்கள்  இன்னும்  பல  ஆண்டுகாலம்  இருப்பீர்கள்.  நானும்  இருப்பேன்.  அவசியம்  சந்திப்போம்
" சில  முக்கிய  விடயங்கள்  உங்களிடம்  சொல்ல  வேண்டும்  சேர்
அவர்  சொல்ல  ஆரம்பித்துவிட்டார்
நாடக உலகு  பற்றியே  அவர்  பேசினார்.
கம்பீரம்  குறையாவிட்டாலும்  தள  தளத்த  குரல்.
அவர்  மறு  பக்கத்தில்  அழுகிறார்  என்பது  தெரிந்தது.
என்  மனமும்  கண்ணீர் விட்டது.
அன்புக்கும்  உண்டோ  அடைக்கும்  தாள்.
அனைத்தையும்  நான்  பதிவு  செய்திருக்க வேண்டும்.
அந்தக்  குணம்  என்னிடத்தில்  இல்லை.
இன்றா  நேற்றா,   ஏறத்தாள  40  வருட  நெருக்கமான  உறவு.
1975  களில் அவரும்  குழந்தை  சண்முகலிங்கமும்  என்னை  நாடக அரங்கக்  கல்லூரியில்  அங்கத்தவனாக்க  திருநெல்வேலியில்  நான் குடியிருந்த  வீடு  தேடி  ஒரு  காலைப் பொழுது  வந்தமை பசுமையாக ஞாபகம்  இருக்கிறது

நினைவுகளின் நீட்சியில் அருண். விஜயராணி - தெய்வீகன் - ஆஸ்திரேலியா

.                 


நான்என்னுடைய  சந்தோசம்  என்ற  குறுகிய  அளவில் திருப்திப்பட்டுக்கொள்ள முடியாத  என்   ஆத்மாவின்  ஓலம்தான்  என் எழுத்தின்   பிறப்புக்கான  மூல  காரணம்
1991 ஆம் ஆண்டு படைப்பாளி  அருண் விஜயராணி   அவர்கள்  தனது கன்னிகாதானங்கள் நூல்   வெளியீட்டுவிழாவில் நிகழ்த்திய முன்னுரையில்  முன்வைத்த ஒப்புதல் வாக்குமூலம் இதுவாகும்.
எழுபதுகளில்  இலங்கை  படைப்புலக  பரப்பில்  தனது  இலக்கிய பயணத்தை  ஆரம்பித்து  கடந்த  நான்கு  தசாப்த காலங்களாக பெண்ணிய சிந்தனைகளுடனுடம் அளவுகடந்த மொழித்தாகத்துடனும் வீச்சுடன் வலம் வந்த அருண் விஜயராணி அவர்கள் கடந்து டிசெம்பர் 13 ஆம் திகதி ஆஸ்திரேலியாவில் காலமானார்.
அருண் விஜயராணியின் எழுத்துக்கள்  குறித்து கடந்த காலங்களில் பல மட்டங்களில்  பலரும் பேசியிருக்கிறார்கள். ஆனால், இவரது படைப்புக்களின்  வெற்றியின்  பின்னாலுள்ள  சூட்சுமம்  என்ன? அவரது எழுத்துக்களில்  அப்படி  என்னதான்  இருக்கிறது  என்று  இப்படி கம்பளம்   விரிக்கிறார்கள்   என்பதை  அறிய  பலரும்  ஆர்வப்படலாம்.
அருண் விஜயராணி அவர்கள் பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை மாத்திரம் முன்வைத்து சமரசம் இல்லாத எழுத்துப்பயணத்தை மேற்கொண்டது மட்டும்தான் அவரை ஒரு படைப்பாளியாக தொடர்ந்தும் தரமுயர்த்தி வைத்திருந்ததா?  இடைவிடாது எழுதிவரும் ஒரு படைப்பாளிக்கு  இந்த  ஒற்றை தகுதி  மட்டும் போதுமானதா? புலம்பெயர்ந்து வாழும் எத்தனையோ பெண் படைப்பாளிகள் மத்தியில் இவர் ஏன் தனித்துவமாக தெரிகிறார்?
இங்குதான் அருண் விஜயராணி அவர்கள் தன்னை சுற்றி மிகவும் கன கச்சிதமாக கட்டியெழுப்பிய இலக்கிய பேரரணை புரிந்துகொள்வது அவசியமாகிறது.