வீரகேசரிக்கு அகவை 89 கலை - இலக்கியத்தில் வீரகேசரியின் வகிபாகம் - முருகபூபதி


இந்தியா - தமிழ்நாட்டில் தனவணிகர் சமூகத்தைச்சேர்ந்தவர்கள் செறிந்து வாழ்ந்த
செட்டி நாட்டு மண்ணில் ஆவணிப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்து, வளர்ந்து கொழும்புக்கு
வர்த்தகம் செய்யவந்திருக்கும், பெரி. சுப்பிரமணியம்
செட்டியார், 1930 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்
6 ஆம் திகதி வீரகேசரி பத்திரிகையின் முதல்
இதழை வெளியிட்டார்.

அந்த இல்லமும் வரலாற்று முக்கியத்துவம் மிக்கது
என்பதை பலரும் அறியமாட்டார்கள்! அங்குதான் இலங்கையின் முன்னாள் அதிபர் ஜே.ஆர். ஜெயவர்தனா
பிறந்திருக்கிறார்.

வ.ரா. என சுருக்கமாக
அழைக்கப்படும் வ. ராமசாமி அய்யங்கார் மகாகவி பாரதியின் நெருங்கிய நண்பருமாவார். மகாத்மா
காந்தி சென்னைக்கு வந்த சமயத்தில் அவர் தங்கியிருந்த இல்லத்தின் வாயில் காப்போனாகவும்
பணியாற்றியவர். இந்தக்காட்சியை பாரதி திரைப்படத்திலும்
பார்த்திருப்பீர்கள்.
இத்தகைய பின்புலத்தில் வெளிவந்திருக்கும் வீரகேசரிக்கு
இன்று ஓகஸ்ட் 6 ஆம் திகதி 89 வயது பிறக்கிறது.

இலங்கையில் சிறந்த சிறுகதைகளை வெளியிட்ட இதழ்
என்ற பெருமையும் வீரகேசரி வாரவெளியீட்டையே சாரும். காலத்துக்காலம் சிறுகதை, நாவல் மற்றும் கலை இலக்கியப்போட்டிகளையும் வாரவெளியீடு
நடத்தியிருக்கிறது.
கடந்த 88 வருடகாலத்தில் வீரகேசரியில் பல புகழ்பூத்த
படைப்பாளிகள், கலைஞர்கள் பணியாற்றியிருக்கிறார்கள் என்பது முக்கியமான தகவல்.
வீரகேசரியில் ஈழத்து எழுத்தாளர்கள் அ.ந. கந்தசாமி,
கே. கணேஷ், சில்லையூர் செல்வராசன், செ. கதிர்காமநாதன், காசிநாதன், அன்டன் பாலசிங்கம்,
க. சட்டநாதன், ஆ. சிவநேசச்செல்வன், சோமசுந்தரம் ராமேஸ்வரன், மூர்த்தி, தெய்வீகன்,
சூரியகுமாரி பஞ்சநாதன், சந்திரிக்கா சுப்பிரமணியன், ரவிவர்மா, எஸ்.எம். கோபாலரத்தினம், முருகபூபதி, டீ.பி.எஸ்.ஜெயராஜ், சொலமன்
ராஜ், ஜீ.நேசன், சுபாஷ் சந்திரபோஸ், அன்னலட்சுமி இராஜதுரை, கமலா தம்பிராஜா, யோகா பாலச்சந்திரன்,
கு. இராமச்சந்திரன் , வி.ஏ. திருஞானசுந்தரம் உட்பட பலர் வீரகேசரி - மித்திரன் மற்றும்
முன்னர் வெளிவந்த ஜோதி முதலானவற்றின் ஆசிரிய பீடங்களில் பணியாற்றியவர்கள்தான்.
தமிழகத்தில் திரைப்படத்துறையில் பாடலாசிரியராக
விளங்கிய கு.மா. பாலசுப்பிரமணியமும் ஒரு காலத்தில் வீரகேசரியில்தான் பணியாற்றியவர்.
வீரகேசரியில் தமது கன்னிப்படைப்பை எழுதிய பலர்
பின்னாளில் மிகச்சிறந்த எழுத்தாளர்களாகவும் தேசிய சாகித்தியவிருது முதலான சிறப்பு விருதுகளை
பெற்றவர்களாகவும் திகழ்ந்துள்ளனர்.
நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம்13 ஆமர் வீதியில் மேதினமன்று கொல்லப்பட்ட ரணசிங்க பிரேமதாச ஏழைப்பங்காளன் வாழ்வு வீதியில் முடிவுற்ற சோகத்தை சுமக்கும் நினைவுத்தூபி - ரஸஞானி
கிராண்ட்பாஸ் வீதி நெருங்கும் ஆமர்வீதிச் சந்தி
இலங்கை அரசியல் வரலாற்றிலும் உலக அரசியல் வரலாற்றிலும் தவிர்க்கமுடியாத ஒரு அத்தியாயத்தை
எழுதிவைத்துள்ளது.


இச்சம்பவம் குறிப்பிட்ட கிராண்ட் பாஸ் வீதியும்
ஆமர் வீதியும் சந்திக்கும் நாற்சந்தியில் நடந்தது.
"விதி வலியது " என்பார்கள். அவர் கொல்லப்படுவதற்கு
சுமார் ஏழு நாட்களுக்கு முன்னர் தலைநகரின் புறநகரான கிருலப்பனை என்ற இடத்தில் நடந்த
தேர்தல் பிரசாரக்கூட்டம் ஒன்றில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி
சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரைச்சுட்டவர்யார்..? என்பது இதுவரையில் ஊர்ஜிதப்படுத்த முடியாத செய்தி...!
எனினும் அக்காலப்பகுதியில் லலித்தும் காமினி திஸாநாயக்காவும் பிரேமதாசவுக்கு எதிராக
இயங்கினார்கள். அதனால் லலித்தின் கொலைச்சம்பவத்தில்
பிரேமதாசவுக்கும் பங்கிருக்கலாம், அல்லது அவ்வாறு ஒரு சம்பவம் கிருலப்பனையில் நடக்கும்
என்று பிரேமதாசவுக்கு முற்கூட்டியே தெரிந்திருக்கலாம் என்ற வதந்தி தலைநகரில் பரவியிருந்தது.
இந்த வதந்தி பிரேமதாசவையும் எட்டியிருந்தது.
அத்தகைய வதந்தி விஷம்போல் பரவிவருவதை தனக்கு நம்பிக்கையான புலனாய்வாளர்கள் ஊடாக தெரிந்துகொண்ட
பிரேமதாச, தன்னை சுத்தமான தலைவராக நிரூபிக்கவேண்டிய தேவையும் வந்திருக்கவேண்டும்.
.
திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் ஸ்டாலின்
மெரினாவில் கருணாநிதிக்கு அடக்கம் செய்ய இடம் மறுத்து தீர்ப்பு வந்திருந்தால் என்னையும் அவருக்கு அருகில் அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டிருக்கும் என்று திமுக செயற்குழுவில் ஸ்டாலின் உருக்கமுடன் பேசினார்.
திமுக செயற்குழுவில் குரல் தழுதழுக்க ஸ்டாலின் உருக்கமுடன் பேசியதாவது:
“இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும் என்ற உணர்வோடு இந்த அவசர செயற்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அத்தனைபேரும் நமது அஞ்சலியை செலுத்திய பின்னர், தலைவருடன் நெருங்கிப் பழகியிருந்த இயக்க முன்னோடிகள் உரையாற்றினார்கள்.
பொதுச்செயலாளர் நிறைவுரை ஆற்றவேண்டும் என்று நிகழ்ச்சி அமைக்கப்பட்டது. ஆனால், பேராசிரியர் 'நான் பேச இயலாது, அந்த சூழ்நிலையில் நான் இல்லை, தயவு செய்து யாரும் என்னைக் கட்டாயப்படுத்தக்கூடாது' என்று என்னிடத்தில் தெரிவித்தார்.
தலைவர் இல்லாத இந்தக் கூட்டத்தை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. நீங்கள் எல்லாம் தலைவரை இழந்துள்ளீர்கள். நான் தந்தையையும் சேர்த்து இழந்துள்ளேன். தலைவர் தொண்டையில் ஒரு அறுவை சிகிச்சை செய்து பேச முடியாத நிலையில் இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவருடைய ஆசியுடன் செயல் தலைவர் பொறுப்பேற்று உங்களின் ஒத்துழைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த அடிப்படையில் மாவட்டந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்தினேன். அந்த ஆய்வு நிகழ்ச்சியில் ஒவ்வொரு கூட்டத்திலும் கட்சி நிர்வாகிகளோடு நான் கலந்துரையாடியபோது நான் அவர்களுக்குச் சொல்லி அனுப்பியது, “அனைவரும் ஒற்றுமையாக இருந்து, ஒன்றாகச் செயல்பட்டு வருகின்ற காலகட்டத்தில் திமுகவை வெற்றிபெறச்செய்து அந்த வெற்றியை அவர் காலத்திலேயே அவர் காலடியில் வைப்போம்” என்று சொன்னேன்.
ஈரோட்டில் நடந்த கூட்டத்திலும் விரைவில் திமுக ஆட்சிக்கு வரும். அந்த வெற்றியை அவரது காலடியில் கொண்டு வைப்போம் என்று பேசினேன். ஆனால் அதை நிறைவேற்றிட முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் நான் உள்ளேன்.
அரசியல் பிரவேசம் குறித்து மௌனம் கலைந்தார் குமார் சங்கக்கார!

.
அரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவத்துள்ளார்.
சங்கக்காரவை எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவது குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், குமார் சங்கக்கார அறிக்கை ஒன்றின் மூலம் தனது அரசியல் பிரவேசம் பற்றி தெளிவுபடுத்தியுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிட உள்ளதாக வெளியான தகவல்களை மிகவும் கரிசனையுடன் வாசித்தேன்.
பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் எனது அரசியல் பிரவேசம் தொடர்பில் வெளியிட்ட ஊகங்கள், எதிர்பார்ப்புக்கள் பற்றி நன்கு அறிவேன். சிலர் எனக்கு ஆதரவாகவும் சிலர் எனககு எதிராகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இலங்கைச் செய்திகள்
முல்லைத்தீவு மீனவர்களின் உடமைகள் தீக்கிரை ; மூவர் கைது
இவ்வளவு காலமும் சிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் , திடீரென புத்தரின் பாதமாக மாறியதன் பின்னணி என்ன?
கொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வு
மடு திருவிழாவில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு
61 உயிர்களை காவுகொண்ட செஞ்சோலை நினைவேந்தல் மட்டக்களப்பில்!!!
இலங்கையின் தேசிய பாதுகாப்பு, ஜனநாயகத்திற்கு என்றும் பாகிஸ்தான் ஆதரவு
முல்லைத்தீவு மீனவர்களின் உடமைகள் தீக்கிரை ; மூவர் கைது
14/08/2018 முல்லைத்தீவு, நாயாற்றுப் பகுதியில் நேற்றிரவு தமிழ் மீனவர்களின் படகுகள், வலைகள் மற்றும் வாடிகள் என்பன தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தன் பேரில் மூவரை கைதுசெய்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உலகச் செய்திகள்
இம்ரான் கான் ஆட்சியில் பாக்கிஸ்தான் பயங்கரவாதம் அற்ற நாடாக திகழவேண்டும்; மோடி
இத்தாலியில் மேம்பாலம் இடிந்து விழுந்து பலத்த சேதம்
அந்த நாயை வேலையை விட்டு நீக்கியது சிறப்பான செயல் ; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்
இந்திய எல்லைக்குள் மீண்டும் ஊடுருவிய சீனா
கடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை
இம்ரான் கான் ஆட்சியில் பாக்கிஸ்தான் பயங்கரவாதம் அற்ற நாடாக திகழவேண்டும்; மோடி
12/08/2018 இம்ரான் கான் ஆட்சியில் பாக்கிஸ்தான் பயங்கரவாதம் அற்ற நாடாக திகழவேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா - பியார் பிரேமா காதல் திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் நல்ல காதல் படங்கள் வரும். முழுக்க முழுக்க காதல் நிரம்பிய படங்கள் தற்போதெல்லாம் ஒரு சில வந்து செல்கின்றது. அந்த வகையில் காதல் பாடல்களுக்கே பேர் போன யுவன், தன் ரசிகர்களுக்காகவே அறிமுக இயக்குனர் இளனுடன் இணைந்து உருவாக்கியுள்ள படம் தான் பியார் பிரேமா காதல், இந்த காதல் ரசிகர்களை காதலிக்க வைத்ததா? பார்ப்போம்.
கதைக்களம்
ஹரிஷ் கல்யாண் பல மாதங்களாக பக்கத்து கம்பெனியில் வேலை பார்க்கும் ரைஸாவை ஒரு தலையாக காதலிக்கின்றார். திடீரென்று ஒருநாள் அவருக்கே ஷாக் கொடுக்கின்றார் ரைஸா.
ஆம், ஹரிஷ் கல்யாண் வேலை பார்க்கும் கம்பெனியிலேயே ரைஸாவும் சேர, அதை விட ஷாக்காக ரைஸாவே முன்வந்து ஹரிஸிடம் பேசுகின்றார்.
அதன் பிறகு இவர்கள் பேச்சு, பழக்கம் எல்லாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர, ஹரிஷ் திருமணம் என்று வந்து நிற்கின்றார், ரைஸாவோ நான் நட்பாக தான் பழகினேன், திருமணம் செட் ஆகாது என்கின்றார்.
மேலும், எனக்கு கனவுகள் நிறையவுள்ளது என்றும் சொல்ல, பிறகு இவர்களுக்குள் வெடிக்கும் செல்லமான ஈகோ, ஒரு ஷாக்கிங்கான பிரிவு என்று கலகலப்பாக சொல்லியிருக்கின்றார் அறிமுக இயக்குனர் இளன்.
படத்தை பற்றிய அலசல்
ஹரிஷ் கல்யாண், ரைஸா இருவருமே நடித்துள்ளார்கள் என்று சொல்வதை விட கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவர்களின் ரொமான்ஸ் காட்சிகளுக்கு தியேட்டரில் உள்ளவர்களே வெட்கப்பட்டு தலை குனிந்தாலும் ஆச்சரியமில்லை. ஹரிஷ், ரைஸா பாஸ் மார்க்.
படம் முழுவதுமே இவர்களை சுற்றியே கதை நகர்ந்தாலும், அவ்வப்போது தீப்ஸ், முனிஷ்காந்த் வரும் காட்சிகள் காமெடிக்கு பஞ்சமில்லை. அதிலும் முனிஷ்காந்திடம் ஹரிஷ் அறிவுரை கேட்கும் காட்சிகள் எல்லாம் சிரிப்பிற்கு கேரண்டி. அதேபோல் அறிமுக நடிகர் தீப்ஸும், ரைஸா, ஹரிஷ் ஆபிஸிலேயே ரொமான்ஸ் செய்வதை பார்த்து, ‘ஹிம்ம் சூப்பர், கொஞ்ச நேரத்திற்கு இங்கு ப்ளம்பிங் வேலை நடக்கின்றது, யாரும் வராதீர்கள்’ என்று தன் பங்கிற்கு கவுண்டர் கொடுத்து மனதில் நிற்கின்றார்.
முதல் படத்திலேயே ஒரு சர்ச்சையான டாபிக், லிவிங்-டு-கெதர், அதை இளன் கையாண்ட விதம் பாராட்டத்தக்கது. ஏனெனில் இப்படத்தின் முடிவில் பெற்றோர்களே ‘அட இதில் என்ன தப்பு இருக்கின்றது’ என சொல்ல வைத்துவிடுவார் போல, முதல் படத்திலேயே முத்திரை.
படம் முழுவதும் ரைஸா, ஹரிஷ் காதல் காட்சிகள் நிரம்பி வழிந்தாலும், அதற்கு உயிர் கொடுத்ததே இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் யுவன் தான். இது தான் யுவனுக்கான களம் என்று நிரூபித்துவிட்டார், இப்படி ஒரு ஆல்பத்தை கேட்டு எத்தனை நாள் ஆகுது என்று நம்மையே கேட்க வைத்துவிட்டார். அதிலும் பின்னணியில் யுவன் என்றுமே முன்னணி தான்.
படத்தில் இவர்களை தாண்டி நாகேஷ் மகன் ஆனந்த்பாபு, ஹரிஷின் அப்பாவாக நடித்திருப்பவர் என பலரும் மனதில் நிற்கின்றனர். கலகலப்பாக செல்லும் முதல் பாதி, இரண்டாம் பாதியில் ஒரு சில இடங்கள் மட்டுமே கொஞ்சம் மெதுவாக நகர்கின்றது. அதையும் சேர்த்து கிளைமேக்ஸில் ஸ்கோர் செய்து விடுகின்றனர்.
படத்தின் ஒளிப்பதிவும் செம்ம கலர்புல்லாக இருக்கின்றது, வசனங்களும் இன்றைய ட்ரெண்ட் வார்த்தைகளை பயன்படுத்தியது எளிதில் இளைஞர்களை சென்றடையும், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், ட்ரைலரில் வந்த மெடிக்கல் ஷாப் காமெடி முதல், கிளைமேக்ஸில் தங்களுக்கு எது முக்கியம் என்று ஹரிஷ், ரைஸா சீரியஸாக பேசும் இடத்திலும் சரி கச்சிதமான வசனங்கள்.
க்ளாப்ஸ்
மிகவும் ப்ரஷ்-ஆன ஹரிஷ்-ரைஸா ஜோடி
படம் இருவரை சுற்றியே பெரும்பாலும் சென்றாலும், அதில் நட்பு, காமெடி, பெற்றோர்களுக்கான முக்கியத்துவம் என போரடிக்காமல் கொண்டு சென்றது.
இவை அனைத்தையும் மீறி யானை பலமாக யுவனின் இசை.
பல்ப்ஸ்
இரண்டாம் பாதியில் சில நேரம் மெதுவாக செல்லும் காட்சிகள்.
மொத்தத்தில் இந்த ட்ரெண்ட் காதலர்களுக்கான கொண்டாட்டம் தான் பியார் பிரேமா காதல்.
நன்றி CineUlagam
Subscribe to:
Posts (Atom)