வித்தகன்
அப்பாவி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்குள் அச்சத்தை உண்டாக்கும் அரிவாள் அரக்கர்களை பற்றின கதை தான் வித்தகன் இது பார்த்திபனின் 50 படமாகும்.
ரௌத்திரன் ஒரு ஸ்ட்ரெயிட் பார்வட் பொலிஸ் ஆபீசர் மட்டுமல்ல, கிரிமினலும்கூட. புத்திசாலித்தனமாய் எதிரிகளை துவம்சம் செய்யக் கூடியவன். அவனுக்கு பயம் என்பது, பாசம் என்பதும் கிடையாது.
அவன் ஒரு அனாதை அதனால் தான் எதுவும் செய்ய முடியவில்லை
என்று டி.சி சொல்கிறார். இப்படிப்பட்ட ஹீரோவால் பாதிக்கப்பட்ட வில்லன்களுக்கு பதில் சொல்ல முடியாமல் டி.சி விழித்துக் கொண்டிருக்கும் போது ரௌத்திரனே வாய் ஸ்லிப்பாகி தன் அப்பா என்று சொல்லிவிட, அவரை பற்றி விசாரித்து அவரை வேலையை விட்டு தூக்குகிறார்.
ரௌத்திரன் ஏன் அப்படி பொய் சொன்னான் என்பதற்கு ஒரு ப்ளாஷ் கட் ப்ளாஷ்பேக்கில் சுருக்கமாய் சொல்லியிருக்கிறார்கள். ரௌத்திரனுக்கு பொலிஸ் வேலை போகிறது. ஜெயிலில் இருந்த வந்தவர் டான் ஆகிறார். ஆனாலும் பொலிஸ் வேலை பார்க்கிறார்.
அப்பாவுக்கு தெரியாமலே ஹீரோ பொலிஸ் வேலைக்கு படிச்சு அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆகி சமூக விரோதிகளை போட்டுத்தள்ளறார். தன் தங்கையை கொலை செஞ்ச வில்லன் இப்போ தாய்லாந்து நாட்டுல படம் லோ பட்ஜெட் என்பதால் ஹீரோ தாய்லாந்து போக முடியல தன்னோட சாணக்கியத்தனத்தால வில்லனை இங்கே வரவழைக்கறார். சாதாரண எக்ஸிக்கியூட்டிவ் முடிக்க வேண்டிய வேலையை கம்பெனி பாஸே செஞ்சா எப்படி இருக்கும்? அப்டி இருக்கு அந்த வில்லன் தமிழ் நாடு வர்றது.
சரி.. ஹீரோ ஆடும் ஆடுபுலி ஆட்டத்துல ஹீரோயினுக்கு என்ன வேலை? அவரை எப்படி கதைக்குள்ள கொண்டு வர்றது? ரொம்ப ஈசி.. ஹீரோ செய்யற ஒரு கொலையை அவர் நேர்ல பார்த்துடறார்.. என்ன ஏது? எதுக்காக அவர் கொலை செஞ்சார்ங்கற ஃபிளாஷ்பேக் எல்லாம் அவர் தெரிஞ்சுக்காததுக்கு முன்னேயே அவர் ஒரு பொலிஸ் ஆஃபீசர்னு தெரிஞ்சதும் லவ்வ ஆரம்பமாகின்றது
இடைவேளை ட்விஸ்ட் வேணுமே, அதுக்காக ஹீரோ பொலிஸ்ல மாட்டிக்கிறார்.. இடைவேளைக்குப்பிறகுதான் டர்னிங்க் பாயிண்ட்.. தண்டனை முடிஞ்சு ஹீரோ வெளில வந்து தாதா முன்னேற்றக்கழகம்னு எதும் ஆரம்பிக்காமலே தாதா ஆகிடறார்.. இப்போ ஊர்ல 3 தாதா.. ஒண்ணு ஹீரோ தாதா.. 2 வில்லன் தாதா.. 3 சைடு வில்லன் தாதா.. 2வது வில்லன் தாதா ஹீரோ கிட்டே கெஞ்சறாரு.. நீங்க 3வது வில்லனை போட்டுடுங்க...அப்போ நான் முதல் இடத்துக்குப்போயிடுவேன்.... நீங்க 2வது இடத்துக்கு வந்துடலாம்னு. ஹீரோ தன்னோட அதி புத்திசாலித்தனத்தால என்ன செய்யறார்.. எப்படி ஜெயிக்கறார்? பழி வாங்கறார்ங்கறதுதான் மிச்ச மீதி திரைக்கதை.
ரௌத்திரனாக வருகிறார் பார்த்திபன் சும்மா சொல்லக்கூடாது மிடுக்கான
அசிஸ்டெண்ட் கமிஷனர் ரோல்லயும் சரி.. தெனாவெட்டான தாதா ரோல்லயும் சரி, சும்மா அசால்ட்டாக நடித்திருக்கிறார் பார்த்திபன்.. படம் முழுக்க அவரது எள்ளல்கள், நக்கல்கள், நையாண்டிகள் கொட்டிக்கிடக்கு.. ரசிக்கலாம்.. சில இடங்களில் மட்டும் ஓவர்.. வித்தியாசமாக படம் எடுக்கிறேன் பேர்வழி என்று நிறைய இடங்களில் வித்தியாசமே இல்லாமல் படம் எடுத்திருப்பது வேதனை. மேக்கப்பை பார்க்கும்போது விட்டால் பவர் ஸ்டாரை வீழ்த்திவிடுவாரோ என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது. திரைக்கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குநர் என எல்லா மட்டத்திலும் பட்டையைக் கிளப்பியிருக்கும் பார்த்திபன், படத்தின் முடிவில் வில்லன் மனச்சிதைவு நோய்க்கு ஆளாகி, தனது ஆட்களையே போட்டுத் தள்ளுவது கொஞ்சமல்ல நிறையவே மிகை! அடியோடு தவிர்த்திருக்க வேண்டிய சித்தரிப்பு.
பூர்ணா முந்தய படங்களில் டல்லா இருந்தவர் இந்த படத்தில் நல்லா இருக்கிறார். அம்மணிக்கு மாடர்ன் டிரஸ் கொஞ்சம்கூட சூட் ஆகலை. ஆனா சேலை, சுடிதாரில் பூரண அழகு. ஸ்விம்மிங் தெரியாது ஆனால் அதற்கு ஸ்பெல்லிங் மட்டும் தெரியும் என்று ஒரு காட்சியில் வசனம் பேசுகிறார். அதேமாதிரி ஆக்டிங் என்ற வார்த்தைக்கும் ஸ்பெல்லிங் மட்டும்தான் தெரியும் போல. இரண்டாம் பாதியில் சம்பந்தமே இல்லாமல் இரண்டொரு முறை தலைகாட்டி எரிச்சலூட்டுகிறார். கடைசியில் உயிர் தியாகம் செய்து அனுதாப ஓட்டுக்களை அள்ளிச்செல்கிறார்.
ஹீரோ ஹீரோயின் தவிர்த்து படத்தில் ஒரு பாத்திரக்கடையே இருக்கிறது. யாரும் குறிப்பிட்டு சொல்லும்படி எதையும் சாதிக்கவில்லை (அ) சாதிக்க வாய்ப்பளிக்கப்படவில்லை. ம்ம்ம் அந்த பில்லு கட்ட மல்லு கட்டும் காமெடியில் வரும் பெரியவரை மட்டும் குறிப்பிடலாம். பார்ப்பதற்கும் வசன உச்சரிப்பிலும் 'என்னத்த' கண்ணையா சாயல். ஆனால் இவர் அவரல்ல. திரைக்கதையில் ஆங்காங்கே சில திரைக்கவிதைகள். அமைச்சரை கைது செய்ய வரும்போது பெருச்சாளி ஒன்று பம்முவது போல காட்டுவது, பூர்ணா சேலை டிசைனில் இருக்கும் பூக்கள் நிஜப்பூக்களாக மலர்வது, குறிப்பாக இடைவேளை போடும்போது காட்டும் கேப்பு - ஆப்பு மேட்டர் போன்றவைகளை உதாரணமாக குறிப்பிடலாம்.
நன்றி விடுப்பு