ஒருநாள் விடியும் ஒளியும் தெரியும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண் ....அவுஸ்திரேலியா 
























மயக்கம் கலக்கம் மனதில் குழப்பம்
வருவதை எண்ணி கலங்கிட வேண்டாம்
வாழ்க்கையில்  யாவுமே வந்துமே போகும்
உளமதை குலையா வைத்திட நினைப்போம் 

பகலும் இரவும் வந்துமே போகும்
பசியும் நோயும் பற்றியே தீரும்
நினைவில் பலபல வந்துமே நிற்கும்
மனதைத் திடமாய் வைத்திட வேண்டும்

உறவே பகையாய் ஆகவும் கூடும்
உலகம் தூக்கி எறியவும் செய்யும்
தலையில் இடிகள் வீழவும் செய்யும்
தளர்வினைத் தகர்த்து எறிந்திடல் வேண்டும்

தேடியே தீயது வந்துமே நிற்கும்
திசையெலாம் இருளாய் சூழ்ந்துமே செறியும்
வாடிய மனத்தை வதைத்திட முனைவார்
வதங்கிடல் துவண்டிடல் ஒழித்திட வேண்டும்

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 76 அடையாளம் பற்றிய புரிதலும் அங்கீகாரமும் ! ஆளுமைகளால் மகிமை பெறும் விருதுகள் !! விருதுகளால் மகிமை பெறும் ஆளுமைகள் ! ! ! முருகபூபதி

அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்.


எனது எழுத்தும் வாழ்க்கையும்  ( இரண்டாம் பாகம் ) தொடரின் 76 ஆவது அங்கத்தை இங்கிலாந்திலிருந்து எழுதுகின்றேன்.  கடந்த  11 ஆம் திகதி,  பாரிஸ் மாநகரிலிருந்து ரயில் மார்க்கமாக புறப்பட்டு  இங்கிலாந்திற்கு வந்து சேர்ந்தேன்.

எழுத்தாளரும், தொலைக்காட்சி , சமூக வலைத்தள ஊடகவியலாளருமான  நண்பர் எஸ். கே. ராஜனும், எனது தங்கை மகன் சதீஸ்குமாரும் என்னை வரவேற்றனர்.

பிரான்ஸ் வென்மேரி அறக்கட்டளையின் விருது விழா கடந்த 06 ஆம்


திகதி நடந்தது. அதற்காக வருகை தந்து, அந்த விழா முடிவுற்றதும், சில நாட்கள் பாரிஸில்  தங்கியிருந்து சில கலை  இலக்கிய நண்பர்களை சந்தித்தேன்.

பிரான்ஸில் Hotel B & B இல் விருதாளர்களுக்கான தங்குமிட வசதி வழங்கப்பட்டிருந்தது.  வென்மேரி அறக்கட்டளையின் நிறுவுனர் வென்ஸிலாஸ் அநுரா  அறக்கட்டளையின் உறுப்பினர்களுடன் இணைந்து அனைத்து ஒழுங்குகளையும் மேற்கொண்டிருந்தார்.

இங்கிலாந்திலிருந்து வருகை தந்திருந்த நூலகர் செல்வராஜா, பாலேந்திரா – ஆனந்தராணி தம்பதியர்,  டென்மார்க்கிலிருந்து வந்திருந்த ‘ ‘நிலக்கிளி  ‘ அ. பாலமனோகரன் தம்பதியர்,  கனடாவிலிருந்து வந்திருந்த பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் தம்பதியர், மற்றும் கனடா உதயன் பத்திரிகை ஆசிரியர் லோகேந்திரலிங்கம்,  அவுஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த பேராசிரியர் ஆசி. கந்தராஜா தம்பதியர், நியூசிலாந்திலிருந்து கலாநிதி மரீனா இல்யாஸ் ஷாபி தனது கணவருடனும், நோர்வேயிலிருந்து நரம்பியல் மருத்துவ நிபுணர் ரூபவதனா மகேஷ்பரன் தனது தாயார் மற்றும் கணவருடனும் வருகை தந்து குறிப்பிட்ட  Hotel B & B இல் தங்கியிருந்தனர்.

 எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியனும்,  கலை, இலக்கிய ஆவணச்சேகரிப்பாளர் – பதிப்பாசிரியர்  பத்மநாப அய்யரும் வெளியே உறவினர்கள் – நண்பர்கள் இல்லத்தில் தங்கியிருந்து விருது விழாவுக்கு வந்தனர்.

நானும் Hotel B & B இல் இருந்தேன்.  இங்கிருந்த நாட்கள் கலகலப்பாக கழிந்தன.

எனது  பால்ய காலத்தில் எனக்கு  ஏடு துவக்கி வித்தியாரம்பம் செய்வித்து, நீர்கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில்               ( இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி ) 1954 ஆம் ஆண்டு முதல் மாணவனாக  இணைத்துக்கொண்ட ஆசான்          ( அமரர் ) பண்டிதர் வட்டுக்கோட்டை க. மயில்வாகனன் அவர்களின் நினைவாக எனக்கு விருது வழங்கப்பட்டது.

அதனால், அவரது புதல்வர்கள்  முருகானந்தனும், மகேசானந்தனும் ( இரட்டையர்கள் )  எனது நலனில் கூடுதல் கவனம் செலுத்தினர் என்பதை இங்கே நன்றியுடன் குறிப்பிடுகின்றேன்.

விருது விழா ஓகஸ்ட் 06 ஆம் திகதி வெகு சிறப்பாக நடந்தது.

பாரத விலாஸ் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 பாரத நாடு சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் ஆகி விட்டன.


பல்வேறு சமயங்கள்,இனங்கள், மொழிகள், கலாசாரங்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழும் நாடாக பாரதம் திகழ்கிறது. இந்த ஒற்றுமையைத்தான் தேசிய ஒருமைப்பாடு என்று பெருமிதத்துடன் போற்றுகிறார்கள் . இந்த தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் படம் ஒன்று வந்தது. அந்த படம் தான் பாரத விலாஸ்.


சிவாஜி கணேசனின் நடிப்பில் தனது சினி பாரத் நிறுவனத்தால் பாபு படத்தை தயாரித்து இயக்கி வெற்றி கண்ட ஏ சி திருலோகசந்தர் இரண்டாவது தயாரிப்பாக இந்தப் படத்தை எடுத்தார். திரைக்கதை எழுதி படத்தையும் தயாரித்து இயக்கினார் அவர்.

சென்னையில் ஒரு வெள்ளைக்கார அதிகாரிக்கு சொந்தமான வீட்டில்

சந்தர்ப்ப வசத்தால் நான்கு குடும்பங்கள் வாடகைக்கு குடியேறுகிறன. தமிழ், மலையாள முஸ்லீம், கன்னட தெலுங்கு பேசும் தம்பதி, பஞ்சாப் குடும்பம் என குடியேறும் இந்த நான்கு குடும்பங்களும் தாங்கள் வாழும் வீட்டுக்கு பாரத விலாஸ் என்று பெயரிட்டு ஒற்றுமையுடன் வாழ்கின்றன. இவர்கள் குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை. இந்த கதையை நகர்த்த ஏராளமான நடிகர்கள் படத்தில் இடம் பெற்றிருந்தார்கள்.

தமிழ் தம்பதியாக சிவாஜி, கே ஆர் விஜயா, பஞ்சாபி தம்பதியாக சுந்தரராஜன், தேவிகா, கன்னட தெலுங்கு தம்பதி எம் ஆர் ஆர் வாசு, மனோரமா, மலையாள முஸ்லிம் தம்பதியாக வி கே ராமசாமி, ராஜசுலோசனா இவர்களுடன் ஜே பி சந்திரபாபு, ஏ.சகுந்தலா, சிவகுமார்,ஜெயசுதா, ஜெயசித்ரா, சசிகுமார், எஸ் வி ராமதாஸ், எஸ் வி ராமதாஸ், சி ஐ டி சகுந்தலா, ராஜபாண்டியன், நீலு, டைபிஸ்ட் கோபு, ராஜவேலு, என்று ஒரு நடிகர் பட்டாளமே படத்தை ஆக்கிரமித்திருந்தது.

இவர்கள் போதாதென்று தெலுங்கு நடிகர் ஏ நாகேஸ்வர ராவ், மலையாள நடிகர் மது, ஹிந்தி ஹீரோ சஞ்சீவ்குமார் ஆகியோரும் கௌரவ நடிகர்களாக படத்தில் இடம் பெற்றார்கள். எல்லா நடிகர்களும் அனுபவசாலிகள். அதனால் அவர்களை இயக்குவதில் டைரெக்டருக்கு பெரிய சிரமம் எதுவுமில்லை. ஆனால் படம் முழுதும் வாசு கத்தி கத்தி பேசுவதை கட்டப்படுத்தியிருக்கலாம்!

சிவாஜி அப்பாவியாக, அசடாக , கோபக்காரராக, பயந்தவராக , ஆவேசம் கொள்பவராக படத்தில் வருகிறார். தன் இமேஜை பற்றி கவலைப் படாது நடித்து நிறைந்த நடிப்பை தருகிறார். அவருடைய அத்தனை குணாம்சங்களுக்கும் ஈடு கொடுப்பவராக கே ஆர் விஜயா பாந்தமாக நடிக்கிறார். தேவிகா இருந்தும் இல்லாத நிலை. வி கே ராமசாமி சோகமாகவும் நடிக்க முடியும் என்று நிரூபிக்கிறார். படத்தில் வருபவர்கள் பல மொழி பேசுபவர்களாக இருந்த போதும் பொது மொழியாக அவர்கள் பேசுவது தமிழ்தான்!

கட்டுரை இப்படியும் நடக்கிறது August 13, 2023

 அந்தக் காலத்தில் தமிழக சஞ்சிகைகள் எல்லாமே யாழ்ப்பாணத்தில்


கிடைக்கும்.

யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகக் கடையில் ஓடர் கொடுத்து விகடனையும் குமுதத்தையும் வாங்குபவர்கள் உள்ளூர் மல்லிகை சஞ்சிகையை கண்டு கொள்வ
தில்லை.
வாங்குகின்ற தமிழ் சஞ்சிகைகளில் வருகின்ற நல்ல விடயங்களை படிக்கிறார்களோ இல்லையோ அவற்றில் வரும் நகைச்சுவை துணுக்குகளை படிப்பதை
யாரும் தவறவிடுவதில்லை.
அதிகம் ஏன் அந்த துணுக்குகளை படிப்பதற்காகவே அவற்றை வாங்குபவர்களும் உண்டு.
அப்படி வாங்கி படித்த சஞ்சிகை ஒன்றில் வெளிவந்த துணுக்கு ஒன்று இன்று ஞாபகத்திற்கு வருகின்றது.
ஒரு கூட்டுறவு கடையில் நின்றுகொண்டிருந்த ஒருவர் கடையில் நின்றவரைக் கேட்பார், ‘என்னப்பா இது… அநியாயமா இருக்கு… பட்டப்பகல்ல இப்படி மூட்டை மூட்டையா அவருக்கு அரிசி கொடுக்குறே..?’ அதற்கு ரேஷன் கடைக்காரர் சொல்வார்: ‘பின்னே… அவரோட குடும்ப கார்டுலமொத்தம் 234 பேர் இருக்காங்களே…?’ என்று.
யாழ்ப்பாணம் என்பது கூட்டுறவின் தலைநகரமாக இருந்தது ஒரு காலம்.
அமரர் வீரசிங்கம் கூட்டுறவின் தந்தை என்று வர்ணிக்கப்பட்டவர்.
ஒரு காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கிய பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் நாட்டின் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கே முன்மாதிரியாகச் செயல்பட்டன.

ஆடி அமாவாசை 15/08/2023


 

கட்டுரை இப்படியும் நடக்கிறது August 12, 2023

 சுழிபுரம் பறாளாய் முருகன் கோவிலின் தலவிருட்சமான அரசமரம்


குறித்து இரண்டு தினங்களுக்கு முன்னரும் இந்தப் பத்தியில் எழுதியிருந்தேன்.

அந்த அரச மரம் குறித்து முதலியார் இராசநாயகம் தொண்ணூற்று ஏழு வருடங்களுக்கு முன்னர் எழுதிய வரலாற்று நூல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்த தகவலை ஒரு சிங்கள இளைஞர் எனக்கு தெரிவித்தது குறித்தும் அதனை இலங்கை சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தமும் வெளியிட்டிருப்பது பற்றியும் அந்தப்
பத்தியில் எழுதியிருந்தேன்.
அதன் அர்த்தம் அதுதான் சரியானது என்பதல்ல.
இந்த விவகாரம் தொண்ணூறு வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றது என்றால் அது நூறு வருடங்களாக சர்ச்சைக்குரியதாக இருந்து
வருகின்றது என்பதை வெளிப்படுத்துவதே இந்த ஊர்க்குருவியின் நோக்கமாக இருந்தது.
சங்கமித்தை கொண்டுவந்து நாட்டிய மரம் என்று நம்பப்படுகின்ற அரச மரம் ஒன்று, அநுராதபுரத்தில் இருப்பதாக இன்றும் நம்பப்படுகின்றது.
அந்த மரத்துக்கு இரண்டாயிரம் வருடங்கள் வயது இருக்குமா என்பது தெரியவில்லை.

இலங்கைச் செய்திகள்

 13ஆவது திருத்தம் உள்ளிட்ட நாட்டின் சமகால விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றில் விசேட உரை

பொருளாதாரத்தில் முன்னேற டிஜிட்டல் மயமாக்கல் அவசியம்

சச்சின் டெண்டுல்கரினால் மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி

13: கடும்போக்கு அரசியல்வாதிகளின் கருத்துகளால் தென்னிலங்கை மக்கள் அச்சமடையத் தேவையில்லை

சரத் பொன்சேகா உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு


13ஆவது திருத்தம் உள்ளிட்ட நாட்டின் சமகால விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றில் விசேட உரை

(ஜனாதிபதி ஆற்றிய முழு உரை இணைப்பு)

August 9, 2023 9:39 am 

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் உள்ளிட்ட நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமகால விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்துகின்றார்…

உலகச் செய்திகள்

 அமெரிக்க ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த நபர் சுட்டுக்கொலை!

இத்தாலியில் அகதிகள் படகு விபத்தில் 41 பேர் உயிரிழப்பு

கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா எறிகணை தாக்குதல், ஐவர் பலி!

சீனாவில் பெய்த கனமழை காரணமாக, 33 பேர் உயிரிழப்பு


அமெரிக்க ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த நபர் சுட்டுக்கொலை!

August 10, 2023

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அதிகாரிகள் சிலருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த நபர், அமெரிக்க புலனாய்வு பிரிவான எப்.பி.ஐயினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேநபர், தமது சமூக வலைத்தளங்களின் ஊடாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தொடர்ந்தும் பதிவேற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுரை இப்படியும் நடக்கிறது August 11, 2023

 இந்த பதின்மூன்று என்ற வார்த்தையை கொஞ்ச நாட்களுக்கு எழுதுவதில்லை என்று நினைத்தாலும் சிலர் விடுவதாக இல்லை.


இலங்கை அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துகின்ற விடயம் இப்போது நாடு முழுவதும் பேசுபொருளாகியிருக்கின்றது.
அதனை அமுல்படுத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் ஜனாதிபதி அண்மையில் அவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்டிருந்தது வாசகர்கள் அறிந்தது
தான்.
ஆனால், இந்த கோரிக்கைக்கு பதில் எழுதியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ‘பதின்மூன்று தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியுமல்ல, தீர்வுமல்ல.
தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டியே இனப்பிரச்னையை தீர்க்க ஒரே வழியாகும்’ என தெரிவித்துள்ளது.
பதின்மூன்றை அமுல்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி கடந்த புதனன்று உரையாற்றிய ஜனாதிபதியும், ‘நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்துக்கும் ஏற்றவகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்’ என்றுதான் கூறியிருந்தார்.
இந்தப் பதின்மூன்றின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள மாகாண சபைகள் வடக்கு, கிழக்கில் மாத்திரம் உருவாக்கப்படவில்லை.
நாடு முழுவதிலும் ஒன்பது மாகாண சபைகள் இயங்குகின்றன.
இந்த மாகாண சபைகளால் இந்த நாடு ஒரு பெரிய சுமையை சுமக்கின்றது.

வரலக்ஷ்மி விரதம் - திருவிளக்குப் பூசை -25/08/2023

 


கட்டுரை - இப்படியும் நடக்கிறது August 10, 2023

 அவர் ஒரு தென்னிலங்கை இளைஞர்.


வயது நாற்பதைக் கடந்தாலும் இளைஞர் என்று தானே சொல்கிறார்கள்.
ஒரு பௌத்தரான அவர் எப்போது என்னை சந்தித்தாலும் சைவசித்தாந்தம் பற்றி வகுப்பு எடுப்பார்.
தினமும் சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டுத்தான் அன்றைய கடமைகளைத் தொடங்குவார்.
எந்தத் துறைசார்ந்து பேசினாலும் அந்தத் துறை பற்றி ஒரு கலாநிதி பட்டம் பெற்றவர் போன்று பேசுவார்.
சில வேளைகளில் அதிகப் பிரசங்கித்தனம் போல இருக்கும்.
நேற்று முன்தினம் அந்த இளைஞனுடன் ஒரு மொறட்டுவை பல்கலைக்கழக பேராசிரியருடன் சந்தித்தேன்.
அப்போது அந்த இளைஞர் தன்னை அறிமுகம் செய்தபோது, மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் தான் ஆற்றிய ஒரு சிறிய பணி பற்றி எடுத்துச் சொன்னார்.
அவர் அப்போது உயர்தர வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாராம்.
வானியல் துறையில் மிகுந்த ஈடுபாட்டோடு இருந்த அவர் அது தொடர்பாக பல்வேறு நுல்களைப் படித்து அறிந்து வைத்திருந்ததை கவனித்த அப்போதைய பல்கலைக்கழக உபவேந்தர் அவரை பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்பெடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.
அவ்வாறு வகுப்பெடுத்தபோது, பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய விரிவுரையளர்கள், ‘இது என்ன ஒரு ஏ.எல். மாணவன் பல்கலைக் கழகத்தில் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதா?’ என்று கேள்வி கேட்கத்தொடங்கியிருந்தனராம்.
உபவேந்தர் உடனே இந்த ஏ.எல். மாணவனை விரிவுரையாளர்கள் முன்னால் வகுப்பெடுக்க கேட்டிருக்கிறார்.

கட்டுரை இப்படியும் நடக்கிறது August 8, 2023

 பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து பலரை பிரித்தெடுத்துத் தனி


அணியாக தனது ஜனாதிபதி தேர்தலுக்கான கூட்டணியில் சேர்க்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயன்று வருவது பற்றி முன்னரும் இந்தப் பத்தியில் தெரிவித்திருந்தேன்.

அதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளர் மற்றும் நிமல் லான்சா எம். பி. போன்றவர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது குறித்தும்
அந்தப் பத்தியில் தெரிவித்திருந்தேன்.
அதனை அண்மையில், யாழ்ப்பாணம் வந்திருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனும் தான் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.
பொதுஜன பெரமுனவை உடைப்பதற்கு ரணில் முயன்று வருவதாகவும் அது மிகப்பெரிய பிரச்னையை உருவாக்கலாம் என்றும் மனோ தெரிவித்திருந்தார்.
நிமல் லான்சா குழுவினரின் நகர்வால் கொதிப்படைந்திருக்கும் ராஜபக்ஷ அணியினர் அந்தப் புதிய அணி உருவாவதைத் தடுப்பதற்கு தம்மாலான முயற்சிகள் அனைத்தையும்
செய்துவருகின்றனர் எனவும் தெற்கில் விசயமறிந்த பத்திரிகையாளர் ஒருவர் தகவல் சொன்னார்.
அண்மையில், இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து முறையிட்ட பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ இது தொடர்பில் முறையிட்டபோது பேசிய சில விடயங்கள் இப்பொது சிங்கள ஊடகங்களில் பேசப்படுகின்றன.
உங்களை இந்தப் பதவிக்கு நாங்களே கொண்டுவந்தோம்.
அதனை மறந்து தமது கட்சியை உடைப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என்று பஸில் கூறியபோது, சிரித்துக்கொண்டே பதிலளித்த ரணில், நீங்கள் என்னைக் கொண்டுவரவில்லை.
உங்களை நான்தான் காப்பாற்றினேன்.

அகதி 15/09/2023


 'அகதி' - செப்டம்பர் 15ஆம் திகதி அன்று NIDA மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

உலகளவில், 14 நாடுகளில் உள்ள அகதிக் குழந்தைகளைக் கல்வித் திட்டங்களில் சேர்ப்பதற்கான,

அவர்களிற்கான திட்டத்தை ஆதரிப்பதற்காகஅவுஸ்திரேலியா - சிட்னியில் நடைபெறும் UNHCRஇற்கான நிதி திரட்டல் நிகழ்ச்சி இதுவாகும்.


'அகதி', அகதிகளின் வாழ்க்கை, மற்றும் போராட்டங்களின் நெருக்கமான உணர்வுகளை வெளிப்படுத்தும் முகமாக,

நடன அமைப்புகள் மிக நன்றாக அமைக்கப்பட்டுள்ள நாட்டியத் தயாரிப்பாகும்.

 

இந்த நடனத் தயாரிப்பு மூலம் அப்சராஸ் ஆர்ட்ஸ் அமைப்பினர் (சிங்கப்பூர்) அகதிகளின் வாழ்க்கையையும் அவலத்தையும் மக்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர்.

 

'அகதி', நன்கு அறியப்பட்ட தமிழ் கவிஞர்களான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மற்றும் மகாகவி சுப்பிரமணிய பாரதி,  கவியரசு கண்ணதாசன் ஆகியோரின் கவிதைகளை அடிப்படையாகக் கொண்ட இசையமைப்பைக் கொண்டுள்ளது.
அனைவரையும் இந்நிகழ்விற்கு வருகைதந்து ஆதரவு தருமாறு ஒழுங்கமைப்பாளர்கள் வேண்டுகின்றனர்நன்றி.

 

நுழைவுச் சீட்டுகளுக்கு:

https://premier.ticketek.com.au/shows/show.aspx?sh=AGATHEE23


கட்டுரை இப்படியும் நடக்கிறது August 7, 2023

 துருக்கியில் வாழ்ந்த அறிஞர் முல்லா.


ஒருநாள் காட்டு வழியாக வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார்.
வழியில் ஒரு முரடனிடம் அவர் சிக்கிக் கொண்டு விட்டார்.
அந்த முரடனுக்கு முல்லாவைப் பற்றியும் அவருக்கு இருக்கும் புகழைப் பற்றியும் நன்றாகத் தெரியும்.
அவரை அவமானப்படுத்த எண்ணிய முரடன் தன் கைவாளை உருவிக் கொண்டு ‘முல்லா அவர்களே உம்மைப் பெரிய மேதாவி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் உம்முடைய அறிவினாலேயே தப்பிப் பிழைப்பீர் என்றும் பேசிக் கொள்கிறார்களே அது உண்மைதானா?’ என்று கேட்டான்.
‘மக்களுக்குப் பொய் பேசத்தெரியாது.
அவர்கள் உண்மையைத்தான் பேசுகிறார்கள்’ என்றார் முல்லா.
‘அப்படியானால் உமது அறிவுச் சாதுரியத்தை நிரூபித்துக்காண்பியும் பார்க்கலாம்.
இதோ இந்த உடைவாளால் உமது கழுத்தை வெட்டப் போகிறேன், உம்மால் தப்பிப் பிழைக்க முடியுமா?’ என்று முரடன் கேட்டான்.
‘உம்முடைய கைவாளுக்குத் தப்பிப் பிழைக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை’ என்று கூறிய முல்லா திடீரென வானததைப்பார்த்து விட்டு மகிழ்ச்சியுடன் சிரித்தார்.
‘என்ன சிரிக்கிறீர்’ என்று முரடன் கேட்டான்.
‘அன்பரே, உமது கைவாள் எனது தலையைத் துண்டிக்கும் முன்பு அதோ வானத்திலே கண்களைப் பறிக்கும் அழகுடன் சிறகுகளை அசைத்துப் பறக்கும் அந்த
விநோதமான தங்கப் பறவையை ஆசை தீரப் பார்த்து விடுகிறேன்.
அதற்குப் பிறகு நீர் எனது தலையை வெட்டி விடலாம்’ என்றார் முல்லா.
‘தங்கப் பறவையா வானத்தில் பறக்கிறது?’ என்ற முரடன் வியப்புடன் ஆகாயத்தை அண்ணாந்து நோக்கினான்.
முல்லா திடீரென்று பாய்ந்து முரடன் கையிலிருந்த வாளைத்தட்டிப் பறித்து விட்டார்.

சினிமா ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டம்

 August 10, 2023

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சி (FDFS) 9 மணிக்கு வெளியானது.

இதனை ஆட்டம் பாட்டத்துடன், மேள, தாளங்களுடன் பட்டாசு வெடித்து ரஜினி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், வேலூர், சேலம் மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளிலும் ஜெயிலர் படம் வெளியாகியுள்ளது.

மதுரையில் சிறைக்கைதிகள் வேடம் அணிந்து ஜெயிலர் படம் பார்க்க ரசிகர்கள் சென்றனர்.

கர்நாடகாவில் காலை 6 மணிக்கு ஜெயிலர் படத்தின் முதல் காட்சி வெளியானது.

இதனிடையே, இலங்கையிலும் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள திரையரங்குகளில் திரைப்படம் வெளியான நிலையில், ரசிகர்கள் படையெடுத்துச் செல்கின்றமையை காணக்கூடியதாக உள்ளது.

ஜெயிலர் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார்.

அதிரடி சண்டைக் காட்சிகளுடனான திரைப்படமாக தயாரான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.   நன்றி ஈழநாடு