புதிய நம்பிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்போம்!

 Saturday, January 1, 2022 - 6:00am

இறைவன் படைப்புகளில் மிகவும் அழகானது இவ்வுலகம். இறைவனின் படைப்புகளில் மிகவும் மேன்மை வாய்ந்தவர்கள் மனிதர்கள். அழகான இந்த உலகத்தில் மேன்மை வாய்ந்தவர்களாய் வாழ்வதை விட சிறப்பானதொன்று இருக்க முடியாது.

இறைவன் நமக்கு புதியதொரு ஆண்டைப் பரிசாகத் தந்திருக்கிறார். இது இறைவனின் ஆசிர்வாதத்தின் வெளிப்பாடு. புதிய ஆண்டுக்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன்பதாக நாம் கடந்த ஆண்டுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

இயற்கைக்கு மாறாகச் செய்த இயற்பகையார் !

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மாna
 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

   நீரின் ஆழமும் தெரியாது. நெருப்பின் சூடும் தெரியாது.புயலும்


தெரியாது. பனியும் தெரியாது.மழையும் நனைக்காது. வெய்யிலும் தாக்காது. இனிப்பும் ஒன்றுதான். கசப்பும் ஒன்றுதான். இன்பமும் ஒன்றுதான். துன்பமும் ஒன்றுதான். இப்படி எண்ணு பவர்கள் உல கத்தில் இருக்கிறார்களா இருந்தார்களா என்று எண்ணிடத் தோன்று கிறதா ஆம் .. இப்படியானவர்கள்தான் “ ஓடும் செம் பொனும் ஓக்க நோக் குபவர்கள் “. இவர்களைப் பெரியவர்கள்,  அரி யவர்கள் என்றும் அழைக்கலாம் அல்லவாஇப்படிப் பெரியவர்க ளையும்அரியவர்களையும் யாவருக்கும் காட்ட வேண்டும் என்று ஒருவர் ஆசைப்பட்டார். அவரின் ஆசையின் விளைவாக மலர்ந்த துதான் “ பெரியபுராணம் “.பெரியபுராணம் என்று இப்புராணத்து க்கும் பெயர் அமைந்தமைக்குக் காரணமே பெரியவர்களாக அடி யார்களைச் சேக்கிழார் தன்னுடைய மனத்தில் இருத்திக் கொண் டமையே எனலாம்.  இதனை மனதில் வைத்துத்துத்தான் எங்கள் ஒளவைப்பாட்டியும் “ தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே “ என்றாரோ என்று எண்ணிடத் தோன்று கிறதல்லவா ?

எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 74 விம்மல் பெருமூச்சுடன் நகர்ந்த ஆறு நாட்கள் ! விடை கொடு எங்கள் நாடே…!! முருகபூபதி


அன்று 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  31 ஆம் திகதி. நான் அவுஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கு ஆறு நாட்கள்தான் இருந்தன.

அம்மா அழுதுகொண்டிருந்தார்கள்.  அவர்களை தேற்றுவதா..?  எஞ்சியிருக்கும் அந்த சொற்ப நாட்களுக்குள் நான் செய்து முடிக்கவேண்டிய வேலைகளை கவனிப்பதா..?  வயிற்றில்  எமது மூன்றாவது குழந்தையை – ( அது ஆணா, பெண்ணா என்பதும் தெரியாது. -   முதல் இரண்டும் பெண்குழந்தைகள். )  சுமந்துகொண்டிருக்கும் மனைவியை இந்த வேளையில் விட்டுச்செல்கின்றேனே..? ! என்ற யோசனை பற்றி சிந்திப்பதா..? கண்முன்னால் ஓடி விளையாடிக்கொண்டிருக்கும்  எனதும் மற்றும் அக்கா, தங்கை, தம்பியின் பிள்ளைகளை விட்டு விட்டு தொலைதூரம் செல்வதா..?  அந்த ஆறுநாட்களும் மிகுந்த மனக்குழப்பத்திலிருந்தேன்.

அத்துடன் விமான டிக்கட்டுக்கான பணத்தையும்  04 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்திவிடவேண்டும். அந்தப்பணத்தையும் தேடிப்புரட்ட  வேண்டும்.

முதலில் அம்மாவின் அழுகைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

 “ உனது தம்பிமார் இருவரும் மத்திய கிழக்கிற்கு தொழில் நிமித்தம் சென்றார்கள். விடுமுறையில் வந்து திரும்புகிறார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு தொழில் தெரியும்.  உனக்கோ, பேப்பரையும் பேனையையும் விட்டால் வேறு எதுவும் தெரியாது.  உலக மெப்பை பார்த்தால், அவுஸ்திரேலியா கண்டம் எங்கோ தொலைவில் இருக்கிறது. அதுவும் தனித்திருக்கிறது.  அங்கே போய் நீ என்ன செய்யப்போகிறாய்..? உனக்கு என்ன தெரியும்…?  ஏற்கனவே இரண்டும் பெண் குழந்தைகள். தற்போது அவளும் வாயும் வயிறுமாக இருக்கிறாள். எனக்கு ஓரே யோசனையாக இருக்கிறது. இந்தப்பயணம் வேண்டாம். நீ….. வீட்டுக்கு மூத்த ஆண்பிள்ளை.  தம்பிமார் வெளியே போய் வரட்டும்.  அப்பாவும் போய்விட்டார்.  மீண்டும் வீரகேசரிக்கு வேலைக்குப்போ…. “ அம்மாவின்  ஏக்கம் நிரம்பிய குரலின் சுருக்கம் இதுதான்.  அடிக்கடி சேலை முந்தானையால் கண்களை துடைத்துக்கொண்டிருந்தார்.


 “வீழ மாட்டோம்

நாம் வீழ மாட்டோம்

எங்கள் விரல்கள் யாவும் 

விழுதுகள் ஆனதா......?

ஆழி திரண்டு அலைகடல் எம்மைத் தின்றாலும்

ஊழி திரண்டு உயிர்களைத் தின்றாலும்......”

சுனாமிப் பேரலை அனர்த்தத்தை நினைவு கூர்ந்து வெளிவந்த “வீழ மாட்டோம்” இசைவட்டு வெளிவந்து 17 ஆண்டுகள் மிதக்கும் நேரம் அந்தப் பாடல் தொகுப்பில் உரப்போடு அந்த முன் பத்தி வரிகளைப் பாடிய பாடகர் மாணிக்க விநாயகம் அவர்களும் விடைபெற்று விட்டார்.

“அத்த மக நெனப்பு

வெத்தலைக்கு சிவப்பு ஓ…..

ஓ...

கொத்தமல்லி

சிரிப்பு பத்திக்குச்சு நெருப்பு

ஓ....”

அட ! ஒரு துள்ளிசைப் பாடலிலும் கூட இலாவகமாக ஒரு சங்கதியைத் தொட்டும் தொடாமாலும் போகிறாரே என்று பிரமிக்க வைத்தவர். அன்று தொடங்கிய திரையிசை இயக்கம் “கண்ணுக்குள்ள கெளுத்தி வச்சிருக்கா சிறுக்கி” பாடலும் வந்து இந்த ஆண்டோடு 20 ஐத் தொடுகிறது. 

( அமரர் ) சண்முகம் சபேசனின் நூல் வெளியீட்டு அரங்கு

 


காற்றில் தவழ்ந்த சிந்தனைகள்

                                    நூல் வெளியீட்டரங்கு  

            எழுத்தாளர், வானொலி ஊடகவியலாளர், சமூகச்செயற்பாட்டாளர், தமிழ்த்தேசியப் பற்றாளர்

                   ( அமரர் ) சண்முகம் சபேசன் எழுதிய

                           காற்றில் தவழ்ந்த சிந்தனைகள்  

            நூல் வெளியீட்டரங்கு இம்மாதம்  22  ஆம் திகதி                                      ( 22-01-2022 ) சனிக்கிழமை மாலை 4-00 மணிக்கு மெல்பனில்


               Glen Waverley Community Centre   மண்டபத்தில்

         (692-724 Waverley Road, Glen Waverley, Vic – 3150

               Corner of Springvale Road & Waverley Road)

                                    நடைபெறும்

தகவல் :  சிவமலர் சபேசன்  0420 893 072

                                        ( குறுந்தகவல்களுக்கு )

malarsabesan@yahoo.com

அஞ்சலிக்குறிப்பு : முன்மாதிரியாக இயங்கிய பொலிஸ் அத்தியட்சர் அரசரத்தினம் விடைபெற்றார் முருகபூபதி


காவல்துறை உங்கள் நண்பன் – என்ற வாசகம்  எமது தமிழ் சமூகத்தில் பொதுவானதாக இருந்தபோதிலும்,  இலங்கை, இந்தியா உட்பட கீழைத்தேய நாடுகளிலும் குறிப்பிட்ட சில மேலைத்தேய நாடுகளிலும் நடைமுறையில் அவ்வாறில்லை என்பதை நாம் ஊடகங்களில் பார்த்து வருகின்றோம்.

பொலிஸார் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தும்  சித்திரவதை குறித்து ஜெய்பீம் திரைப்படத்தில்  மட்டுமல்ல,  வேறும் பல செய்தி ஆவணப்படங்களிலும் தெரிந்துகொள்ள முடியும்.

இந்திய சினிமா அது எந்த மொழியில் வெளிவந்தாலும், பொலிஸாரை கோமாளிகளாகவும், வில்லன்களாகவும்,  கற்பனை செய்தும் பார்க்க முடியாத நேர்மையாளர்களாகவும் சித்திரித்து யதார்த்தத்திற்கு புறம்பான திரைக் கதைகளை வழங்கிவருகின்றது.

கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் கிழக்கிலங்கை திருக்கோவில்


பொலிஸ் நிலையத்தில் நடந்த துப்பாக்கி வேட்டுச்சம்பவத்தில்  ஒரு பொலிஸ் சார்ஜன்டினால் கொல்லப்பட்ட – படுகாயமுற்ற பொலிஸார் பற்றிய செய்தி ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்தப்பின்னணிகளுடன்தான் கடந்த 29 ஆம் திகதி கொழும்பில் மறைந்த பொலிஸ் அத்தியட்சர் கே. அரசரத்தினம் அவர்கள் பற்றிய நினைவுகள் மனதில் நிழலாடுகின்றன.

அவர் குறித்த இந்த அஞ்சலிப்பதிவின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட  “ காவல்துறை உங்கள் நண்பன் “ என்ற வாசகத்திற்கு முற்றிலும் பொருத்தமானவராக விளங்கியவர்தான் அரசரத்தினம் அவர்கள்.

எப்பொழுதும் புன்னகை தவழும் முகத்துடன் நடமாடிய அவரது திடீர் மறைவுச்செய்தியை தொலைவிலிருந்து அறிந்தபோது  கலங்கிவிட்டேன்.

2011 ஜனவரியில் நாம் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்தியபோதுதான் பொலிஸ் அத்தியட்சர்   அரசரட்ணம் அவர்கள்  எனக்கு அறிமுகமானார்.

அவர் அப்போது கடமையிலிருந்தமையால் பொலிஸ் சீருடையுடனேயே  வருகை தந்து நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் மாநாடு நடைபெற்ற நான்கு நாட்களும் அங்கே பொலிஸ் பாதுகாப்பினையும் அவர் வழங்கினார்.

வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் மக்களும், அரசுகளும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அவதானி


“ உனக்கும் கீழே வாழ்பவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு  “ என்ற ஒரு பாடல் வரியை எமது மக்கள் நினைத்துப் பார்க்கவேண்டிய காலம்தான் கடந்த இரண்டு வருடகாலமாக நீடித்துக்கொண்டிருக்கிறது.

2020 ஆண்டு தொடக்கத்திலேயே  கொரோனோ பெருந்தொற்று முழு உலகையும் ஆட்டிப் படைக்கத் தொடங்கியவுடன், அந்த கண்ணுக்குத் தெரியாத எதிரியான கிருமியை சீனாதான் பரப்பிவிட்டது என்று மேலைத்தேய அரசுகள், அதிலும் சீனாவை சகிக்க முடியாத நாட்டின் தலைவர்கள் குறிப்பாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர்  டொனால்ட் ட்ரம்ப் உட்பட சிலர் கருத்து தெரிவித்தனர்.

உலக நாடுகள், அந்தக்கிருமிக்கு  கொவிட் – கொரோனோ என்று


பெயர் சூட்டிக்கொண்டிருந்தபோது, ட்ரம்ப், அதனை சீன வைரஸ் என்றே பகிரங்கமாகச் சொன்னார்.

சில மாதங்களில் அவரும் தேர்தலில் தோல்வியுற்று வீட்டுக்குச் சென்றார்.

இந்தப் பெருந்தொற்றிலிருந்த மக்கள் முற்றாக  விடுபட வேண்டுமானால், வீடுகளில் முடங்கியிருக்கவேண்டும் என்று பல உலகநாடுகள் அறிவுறுத்தின.

 மாநில எல்லைகள் மூடப்பட்டன.  வெளிநாட்டுப்  பயணங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  ஏற்றுமதி – இறக்குமதி பொருளாதாரமும் வீழ்ச்சிகண்டது.

தடுப்பூசிகள் பல்வேறு பெயர்களில் அறிமுகமாகின.  ஒன்று – இரண்டு – மூன்று – என அதன் எண்ணிக்கையும் கூடியது. நான்காவது வந்தாலும் ஆச்சரியம் இல்லை.

இறந்தவர் எண்ணிக்கை – தொற்றாளர் எண்ணிக்கை பற்றி  ஊடகங்கள் கணிப்புகளை வெளியிட்டன.

இத்தனை அமளிகளுக்கும் மத்தியில்  இந்த கண்ணுக்குத் தெரியாத எதிரியான கிருமி திரிபடைந்து… திரிபடைந்து புதுப்புதுப்பெயர்களுடன் உலாவிக்கொண்டிருக்கிறது.

கற்பகதருவைக் கருத்தினில் இருத்துவோம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 


                               [ சுவை இருபத்து மூன்று ]


 

   சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று தமிழ்


மூதாட்டி ஒளவையாரிடம் முருகப்பெருமான் கேட்டு - ஒளவையி னையே சிந்திக்க வைத் தார் என்று வழமையாக ஒரு கதை வழங்கி வருவதை அனைவரும் அறிவோ ம். அது நாவற்பழம். நாம் இங்கே பார்க்க இருப்பது " பனம்பழம்." பனம்பழத் தைச்  சுட்டும் சுவைக்கலாம். சுடாமலுமே சுவைக்கலாம். அந்தப் பனம்பழம் பற்றி முருகனிடம் மாட்டிக்கொண்ட ஒளைவைப் பாட்டி பாடியிருக்கிறார் என்றும் அறிகின்றோம்.

 

     திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்

     மங்கைக் கறுகிட வந்துநின்றார் மணப் பந்தலிலே
     சங்கொக்க வெண்குருத்து ஈன்று பச்சோலை சல சலத்து
     நுங்குக்கண் முற்றி அடிக்கண் கறுத்து நுனி சிவந்து
     பங்குக்கு மூன்று பழம் தரவேண்டும் பனந்துண்டமே 

 

பனம்பழத்தை விரும்பிக் கேட்ட மூவேந்தர்களுக்கும் உடனேயே பனம்பழம் கிடைக்கும் வண்ணம் ஒளைவைப்பாட்டி பாடிய பாடல்தான் இப்பாடல். ஒளை வையின் இப்பாடல் எங்கள் நவாலியூர் புலவரின் மனதிலும் பதிந்து விட்டது. அவர் பனையைப் பற்றி பல பாடல்களைப் பாடியிருக்கிறார். அவரின் கவித் துவத்தில் பனம்பழம் மட்டும் இடம் பெறாமல் போய்விடுமா ! அவரும் தன் கருத்தைப் பாட்டாக்கி வழங்குகின்றார்.

 

             "   திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும்

                 பாண்டியனும் ஒளவை சொற்படியே
                 மங்கலமாயுண்ட தெய்வப் பனம்பழம் " 

 

⚡️ மின்னல் முரளி ❤️ ⚡

 


இந்தப் படத்தைப் பாதி கடக்கும் போது ஒருவர் மீது பெரும் எரிச்சல் வந்தது. 

அவர் வேறு யாருமல்ல குரு சோமசுந்தரம் தான்.

அந்தக் கடுப்பு குரு சோமசுந்தரம் என்ற நடிகன் மீதல்ல, அவர் ஏற்றிருந்தது “சிபு” என்ற அந்தப் பாத்திரம் மீது. அந்த அளவுக்கு பார்வையாளனுக்கு வெறுப்பை அள்ளி விதைக்கக் கூடிய, போகிற போக்கில் அள்ளி வீசி விட்டுப் போகும் யதாத்த நாயகனாக மிளிர்ந்தார்.

அதே சமயம், அந்த சுய நிலை பிறழ்ந்த சிபுவுக்குள் இருக்கும் ஒரு காதல், அதை அப்படியே மெல்ல மெல்ல விரித்துக் காட்டும் பாங்கு என்று சினிமாத்தனமே இல்லாத உணர்வோட்டம்.


அதுவும் ஒரு பக்கம் ஊரே திரண்டு வந்து சிபுவை அழிக்க நினைக்கும் போது, தன் காதலி இப்போதாவது தன் தூய அன்பைக் கண்டுணர்ந்தாளே என்ற பெருமிதத்தில் அவளின் கையை வாஞ்சையோடு அள்ளி முகத்தில் ஒற்றிக் கொஞ்சி உடைந்துருகும் கணத்தில் அப்படியே தூக்கிச் சாப்பிட்டு விடுகிறார் படத்தின் எல்லாக் கதாபாத்திரங்களையும். இந்தப் படத்தின் நிஜ நாயகன் இவரே.

ஏமாற்றம் எழும் போது தன் உதட்டைப் பிரித்து வெற்றுச் சிரிப்பால் காட்டி விட்டு நடத்தும் ஊழித் தாண்டவம் இருக்கே அப்பப்பா....இயக்குநர் ராஜூ முருகன் “ஜோக்கர்” படத்தின் கதையை குரு சோமசுந்தரத்திடம் போகிற போக்கில் சொன்ன போது, 

“ஏன் என்னையே நாயகனாக்கி விடுங்களேன்” என்று கேட்டாராம்.

அவ்வளவு தன்னம்பிக்கை கொண்ட ஒரு நடிகன். 

தலைவாசல் முரளி, பசுபதி என்று நம் சமகாலத்துக் குணச்சித்திரங்களை மலையாள உலகம் சுவீகரித்து வெகு அழகான பாத்திரங்களை எல்லாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். 

கற்பூரம் – குறும்கதை - கே.எஸ்.சுதாகர்


நடந்துவந்த களைப்புத் தீர, மரநிழலின் கீழ் இருந்த இருக்கையில் சோமுவும் பார்வதியும் அமர்ந்தார்கள். கோவிலுக்குள் பக்தர்கள் போவதும் வருவதுமாக இருந்தார்கள். முன்வாசலில் இருந்த கற்பூரச்சட்டியில் சுவாலை சுடர்விட்டு எரிகின்றது. தேங்காய்கள் சிதறிப் பறக்கின்றன.

கோவிலையொட்டி ஒரு சிறு கடை இருந்தது. கோவில் நிர்வாகத்தினால் நடத்தப்படும் அந்தக்கடையில் பூசைக்குத் தேவையான பொருட்களுடன் சமயப்புத்தகங்களும் கலண்டர்களும் இன்னும் இதர பொருட்களும் இருந்தன.

இவர்களுக்குச் சமீபமாக சிலர் தள்ளித்தள்ளிக் குட்டிக்கடைகளைப் பரப்பியிருந்தார்கள். அவர்களில் ஒருத்தி கோவிலுக்குச் செல்பவர்களின் பின்னால் துரத்துவதும், பின்னர் தன் இருப்பிடத்துக்கு வந்து அமர்வதுமாக இருந்தாள். ஒருவரும் அவர்களைக் கவனிப்பதாக இல்லை. கோவிலுக்கு வருவோர் தமக்குத் தேவையான பொருட்களை, கோவில் நிர்வாகத்தினால் நடத்தப்படும் கடையினில் வாங்கினார்கள்.

இலங்கைச் செய்திகள்

 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளால் போராட்டம் முன்னெடுப்பு

முன்னாள் DIG அரசரட்ணம் நேற்று காலமானார்

இனப் பிரச்சினைக்கு தீர்வுகாண ஒத்துழைப்பு வழங்க கோரிக்கை

IMF உதவியை நாடாதது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி கேள்வி

ஜோசப் பரராஜசிங்கத்தின்16ஆவது ஆண்டு நினைவுதினம்


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளால் போராட்டம் முன்னெடுப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (30) காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு துணைபோகாமல் எமக்கான நீதியினை வழங்க முன்வரவேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.

மேலும், எமக்கான நீதி கிடைக்காத நிலையிலும் 12 வருடங்களாக தொடர்ச்சியாக நாம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். பெறுமதிமிக்க எமது உயிர்களை தொலைத்துவிட்டு நாம் வீதியாக வீதியாக போராடிக்கொண்டு  துன்பங்களையும், அவலங்களையும் அனுபவித்து வருகின்றோம். வருடங்கள் கடந்துசெல்கின்றதே தவிர எமக்கான நீதி மட்டும் கிடைக்கப்பெறவில்லை.


உலகச் செய்திகள்

அமைதிக்கான நோபல் விருது வென்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்

வெள்ளத்தில் மூழ்கியது சென்னை மாநகரம்!

பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ் இஸ்ரேலுக்கு அரிதான விஜயம்

 ரஷ்யா மீதான தடைகள் பற்றி பைடனை எச்சரித்தார் புடின்

நிர்க்கதியான அகதிகளுக்கு இந்தோனேசியா அடைக்கலம்

கோலனில் புதிய குடியேற்றம்: இஸ்ரேலிய அரசு அங்கீகாரம்


அமைதிக்கான நோபல் விருது வென்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்

தென்னாபிரிக்காவில் நிறவெறிப் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர உதவியவரும் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டுட்டு தனது 90 ஆவது வயதில் நேற்று காலமானார்.

“மிகச்சிறந்த தென்னாபிரிக்கர்களின் தலைமுறை ஒன்றுக்கு எமது நாடு பிரியாவிடை கொடுக்கும் துயரத்தின் மற்றொரு அத்தியாயம்” என்று அவரது மறைவு பற்றி தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்.

நடிகை நிரஞ்சனிக்கு அதியுயர் கௌரவம்

 Wednesday, December 29, 2021 - 6:00am

இலங்கையின் தமிழ், சிங்கள சினிமா நடிகையான நிரஞ்சனி சண்முகராஜாவுக்கு “விஸ்வாபிமாணி கலாகீர்த்தி” பட்டம் அளிக்கப்பட்டு அதியுயர் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

இவர் இலங்கையில் தயாரிக்கப்பட்ட  பல தமிழ், சிங்கள திரைப்படங்களில் நடித்துள்ளதுடன், கடந்த வருடம் இலங்கையில் வெளியிடப்பட்ட சுனாமி திரைப்படத்துக்காக சர்வதேச விருதுவென்ற இலங்கை நடிகையாவார்.

கேணல் கிட்டு நினைவான தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் - 2022 - இடைநிறுத்தப்பட்டுள்ளது.


ஒஸ்ரேலியா மெல்பேர்னல் எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
East Burwood Reserve மைதானத்தில் நடைபெறவிருந்த 
கேணல் கிட்டு ஞாபகார்த்த ”தமிழர் விளையாட்டு   விழா 2022”  தற்போதய தவிர்க்கமுடியாத காரணங்களால் இடைநிறுத்தப்பட்டுள்ளது 

 தமிழர் ஓருங்கிணைப்புக் குழு (விக்ரோரியா)

--