புத்தாண்டு வாழ்த்துக்கள்


வானம் நீலமாகத்தானிருந்தது - கருணாகரன்

.

காலடியில் இருக்கும் நிழலை
அள்ளிச் சென்றது நீயா தீயா சருகா தெரியவில்லை
அந்த இரவு
கடற்கரையில் இனந்தெரியாத பிணத்தின் அருகில்
உறங்கினேன்.
அதிகாலையில் நான் வரும் வழியில்
ஒரு இதயம் கிடந்து துடித்துக் கொண்டிருந்தது.
நான் எதிர்பார்க்கவில்லை
நீங்களும் எதிர்பார்க்கவில்லை
நம்பிக்கையானவர்கள் நம்மை விட்டுச் சென்றார்கள்.
ஒரு பாழடைந்த வீட்டில்
நாங்கள் தனித்துவிடப்பட்டோம்.
ஆனாலும் அன்றும்
வானம் நீலமாகத்தானிருந்து.

இன்று துர்கை அம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற அம்மன் மேல் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா 12 04 15

.













ஐயப்ப சுவாமி நிலையத்தில் மன்மத வருட தமிழ்ப் புத்தாண்டு 13 04 15

.










சேயோனின் மிருதங்க அரங்கேற்றம் என் பார்வையில் - டாக்டர் ஜெயமோகன்

.

சென்ற சனிக்கிழமை (04-4-15) riverside  அரங்கில் நடைபெற்ற செல்வன் சேயோனின் மிருதங்க அரங்கேற்றத்திற்கு சென்றிருந்தேன். 6 மணிக்கே அரங்கம் நிரம்பியிருந்தது. அதீதமான "எடுப்பு சாய்ப்பு" ஒன்றுமில்லாமல் அடக்கமான  முறையில் நிகழ்வு இனிதே நடந்தது . முக்கியமாக இசைக்கு முட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருந்தது மனதுக்கு மிக வும் இதமாக  இருந்தது.
அரங்கேற்ற நாயகன் சேயோன் 11ம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் இளைஞன் . அதிகமாக சங்கீதம், நடனம் மற்றும் வாத்தியக்கருவிகள் பயின்று கொடிருக்கும் இளைஞர்கள் , 11,12ம் வகுப்புக்கள் வந்ததும் இசை வகுப்புகளுக்கு போவதை இறுதிப்பரீட்சை முடியும் வரை நிறுத்தி விடுவார்கள். பிள்ளைகள் விரும்பினாலும் பெற்றோர்கள் விடுவதில்லை! மாறாக சேயோன் மிகக்கடுமையான பயிற்ச்சியை மேற்கொண்டது மட்டுமல்லாமல் ஒரு அரங்கேற்றத்தை வேறு நிகழ்த்தி காட்டியிருக்கிறார். இது இசையின் மேல் இவர் கொண்டிருக்கும் நாட்டத்தையும் அபிமானத்தையும் காட்டுகின்றது. மிருதங்கத்தில் இவர் ஈடுபாட்டுக்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு.

அம்மாவின் ஆஸ்திரேலியா நிகிழ்வுகள் - சிட்னி 13 & 14/04/2015; மெல்பெர்ன் 16, 17 & 18/04/2015













நூறாண்டுகள் நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம் - முருகபூபதி

.

தமிழ்நாட்டில் கடலூரில் 24-04-1934 ஆம் திகதி பிறந்து தமது 81 வயதில் கடந்த 08-04-2015 ஆம் திகதி சென்னையில் மறைந்த மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் - படைப்பிலக்கியவாதி - பத்திரிகையாளர் - சினிமா வசனகர்த்தா - பாடலாசிரியர் -திரைப்பட இயக்குநர் என பன்முக ஆளுமை கொண்டிருந்தவர். அவரது வாழ்வும் எழுத்தும் கம்பீரமானது. அவர் நீண்டகாலம் ஈடுபட்ட துறைகள் குறித்து ஏற்கனவே ஏராளமான மதிப்பீடுகள் வெளியாகியிருக்கின்றன.
அவரது படைப்புகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் உட்பட ருஷ்ய மற்றும் ஐரோப்பிய மொழிகளிலும் வெளியாகியுள்ளன. தமது படைப்புகளுக்காக மாஸ்கோவிலிருந்து ரோயல்ட்டியும் பெற்ற ஒரே ஒரு தமிழக எழுத்தாளர். பாரதியை தமது ஞானகுருவாக வரித்துக்கொண்ட ஜெயகாந்தனிடம் பாரதியின் இயல்புகளும் இருந்தன.
சில வருடங்களுக்கு முன்னர் ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும் என்ற தலைப்பில் நான் எழுதிய இக்கட்டுரையை அவரது மறைவின்பொழுது அவர் நினைவாக மீண்டும் சமர்ப்பிக்கின்றேன். ஜெயகாந்தன் என்றும் எம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பார்.
முருகபூபதி
அவுஸ்திரேலியா


சங்க இலக்கியத் தூறல் - --- அன்பு ஜெயா, சிட்னி

.
வேதமந்திரங்கள் ஒலிக்கா திருமணம்!


அன்று திருமண நாள். ரோகிணி நட்சத்திரம் கூடிய சுபதினத்தின் காலை வேளை. வீட்டிற்கு முன்னே தரையில் புது மணல் கொண்டுவந்து பரப்பி இருந்தது. அந்த மணற்பரப்பில் பல கால்கள் நட்டு பெரிய பந்தல் போடப்பட்டு, அதில் பல மலர் மாலைகள் தொங்கவிடப்பட்டு விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.
குழைவாக வேகவைத்த உளுத்தம் பருப்பைச் சேர்த்த பொங்கல் அந்த காலை வேளையில் தொடர்ந்து வந்துகொண்டிருந்த விருந்தினர்களின் பசியை ஆற்றிக்கொண்டிருந்தது.
மங்கல மகளிர் சிலர் தலையில் தண்ணீர்க் குடத்தை சுமந்தபடியும், சிலர் கைகளிலே மண்டை எனப்படும் புதிய பெரிய அகல் விளக்குகளை ஏந்தியபடியும், சிலர் மணப்பொருள்களைச் சேர்த்துவைத்தபடியும் திருமணத்தைச் செய்துவைக்கும் ஆரவாரத்துடன் கூடியிருந்தனர். சிலர் முதலில் எந்தப் பொருளைக் முதலில் கொடுக்கவேண்டும், அடுத்தபடியாக எந்தப் பொருளைக் கொடுக்க வேண்டுமென்று அறிந்து அந்த முறைப்படி தந்துகொண்டிருந்தனர்.

அபயகரம் (23ம் ஆண்டு) 2015 04 18

.



உலகச் செய்திகள்


யேமனில் புதி­தாக இடம்­பெற்ற மோதல்­களில் 17 பொது­மக்கள் உட்­பட 58 பேர் உயி­ரி­ழப்பு

யேமனில் இடம்பெற்று வரும் மோதல்களில் சிக்கி 540 பேர் உயிரிழப்பு; 1,700 பேர் காயம்

 தொடரும் இனப்படுகொலை: வெள்ளையரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான கறுப்பினத்தவர்: வீடியோ காட்சி வெளியானது

ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஆங்கில மொழி வானொலி ஒலிபரப்புச் சேவை ஆரம்பிப்பு


சிட்னி தமிழ் அறிவகம் வழங்கும் வசந்த மாலை 2015 - 19/04/2015

.





எங்கள் தமிழ் மொழி - கலாநிதி சந்திரலேகா வாமதேவா

.

புலம் பெயர்ந்த நாடுகளில், சிறப்பாக அவுஸ்திரேலியாவில் வளரும் பிள்ளைகள் தமிழ் படிக்க வேண்டுமா இல்லையா என்பது என்றுமே விவாதத்துக்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது. இங்கு வாழும் தமிழர் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழ் படிக்கும் பிள்ளைகளின் தொகை மிகக் குறைவாகவே இருக்கிறது. பல பிள்ளைகளும் அவர்களது பெற்றோரும் தாம் வாழும் நாட்டின் மொழி அதாவது ஆங்கிலத்தை அறிந்தாலே போதும் என்று நினைக்கிறார்கள். இங்கு வாழ, படிக்க, தொழில் பார்க்க ஆங்கில அறிவுதான் தேவை என்பது உண்மை. ஆனாலும் தாய்மொழியை அல்லது தமது பெற்றோரும் அவர்களது முன்னோர்களும் பேசிய மொழியை அறிந்திருப்பது அவர்களுக்கு வேறு பல நன்மைகளை வழங்கும் என்பதை அவர்கள் அறிவதில்லை. அல்லது நம்புவதில்லை. அவுஸ்திரேலியாவில் பாடசாலையில் படிக்கும் பிள்ளைகளில் நான்கில் ஒருவர் இரண்டாவது மொழியாகவே ஆங்கிலத்தைக் கொண்டுள்ளார். நகர்புறங்களில் இந்த விகிதாசாரம் இன்னும் அதிகம். சில பாடசாலைகளில் 90 வீதமான பிள்ளைகள் ஆங்கிலம் அல்லாத வேறு மொழி பேசுபவர்களின் பிள்ளைகள். சாதாரணமாக bilingual என்ற ஆங்கிலச் சொல் இரண்டு மொழிகளைச் சரளமாகப் பேசுதலையே குறிக்கும். ஆனால் இங்கு மொழி அறிவு குறித்துப் பேசும் போது இரண்டு மொழியை அறிந்திருப்பதையே குறிக்கிறது. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கொண்ட பிள்ளைகள் சமுகத்தில் பலதரப்பட்ட நிலைகளில் இருந்து வருவதுடன், தமது தாய்மொழியைச் சிறிதளவும் தெரியாதவர்கள், தமது வீட்டுச் சூழலில் விளங்கும் திறமை கொண்டவர்கள் ஆனால் பேசமுடியாதவர்கள் என்பது முதல், நன்கு பேசவும் எழுதவும் முடிந்தவர்கள் வரை என்று சில தரங்களில் இருக்கிறார்கள்.
தனி ஒரு மொழி தெரிந்தவர்களை விட இருமொழிகளில் அறிவு கொண்டவர்களுக்குப் பல நன்மைகள் உள்ளன. அவர்கள் problem sloving    மற்றும் lateral thinking அதாவது ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் திறமை உள்ளவர்களாக இருப்பார்கள். அத்துடன் இருமொழிகளில் அறிவு உள்ளவர்கள் மேலும் பல மொழிகளை இலகுவாக படிக்கும் ஆற்றல் உள்ளவர்கள். புத்திக்கூர்மையை பரிசீலிக்கும் பரீட்சைகளில் வாய்மொழி மூலம் அல்லது வாய்மொழி மூலமல்லாத முறைகளில் நடத்தப்படும் போது ஒரு மொழி தெரிந்தவர்களைவிட இருமொழிகள் தெரிந்தவர்கள் மிக அதிக புள்ளிகளை எடுப்பதாக McGill பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் வல்லுனர்களான Lambert, Peal ஆகிய இருவரும் குறிப்பிட்டிருக்கின்றனர். இரண்டு மொழிகள் தெரிந்திருத்தல் என்பது இன்னொரு வகை மக்கள், அவர்களது கருத்துக்கள், சிந்திக்கும் முறை, இலக்கியம் போன்றவற்றை அறிந்து கொள்வதாகும். இரு மொழிகளை நன்கறிந்தவர்கள் இருமடங்காக சிந்தித்து பேசும் ஆற்றல் கொண்டவாராக இருப்பர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கு பெரும்பாலும் வயது முதிரும்போது வரும் மறதி நோய்கூட இருமொழி அறிவுள்ளவர்களுக்கு சில வருடங்கள் பிந்தியே வரும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிட்னியில் அன்றும் இன்றும் Super Singers 19.04.2015

.













கலைத்தாகம் மிக்க தம்பதியரின் தணியாத தாகம் கலைத்தாகம்!

.

"அத்தானே அத்தானே எந்தன்   ஆசை அத்தானே கேள்வி   ஒன்று கேட்கலாமா  உன்னைத்தானே.? "   எனக்கேட்ட   கமலினி  செல்வராசன் அத்தானிடமே   சென்றார். திருமதி  கமலினி  செல்வராசன்  கொழும்பில்  மறைந்தார்  என்ற செய்தி   இயல்பாகவே  கவலையைத்தந்தாலும்,  அவர்  கடந்த  சில வருடங்களாக   மரணத்துள்  வாழ்ந்துகொண்டே   இருந்தவர்,  தற்பொழுது   அந்த   மரணத்தைக்கடந்தும்   சென்று  மறைந்திருக்கிறார் என்றவகையில்   அவரது  ஆத்மா  சாந்தியடையட்டும் எனப்பிரார்த்திப்போம்.
ஈழத்தின்   மூத்த  தமிழ்  அறிஞர்  தென்புலோலியூர் கணபதிப்பிள்ளையின்  புதல்வி  கமலினி,  இயல்பிலேயே  கலை, இலக்கிய,  நடன,  இசை  ஈடுபாடு மிக்கவராகத் திகழ்ந்தமைக்கு  அவரது   தந்தையும்  வயலின்  கலைஞரான  தாயார் தனபாக்கியமும் மூலகாரணமாக  இருந்தனர்.  எனினும்  புலோலியூர் கணபதிப்பிள்ளையின்   நெருங்கிய  நண்பராகவிருந்த  பல்கலை வேந்தன்  சில்லையூர்  செல்வராசன்,   அந்த  நெருக்கத்தை   அவர் புதல்வியின்   மீதும்  செலுத்தியமையினால்,  ஏற்கனவே  ஜெரல்டின் ஜெஸி   என்ற  மனைவியும்  திலீபன்,  பாஸ்கரன்,  முகுந்தன்,  யாழினி ஆகிய   பிள்ளைகள்  இருந்தும்  கமலினியை   கரம்  பிடித்தார்.

சங்க இலக்கியக் காட்சிகள் 46- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்,  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

தந்தையைப்போல, மகனே நீ தவறுகள் செய்யாதே!

செங்கோல் தவறாது முறைசெய்து மக்களைக் காக்கும் மன்னன் அவன். அவனது மனைவி - பட்டத்தரசி - மிகவும் அழகானவள். அரசன்ää அரசியுடன் அன்பாகவும், இல்லற வாழ்வில் இன்பமாகவுமே இருந்தான். ஆனாலும் அவனுக்குப் பிறமங்கையரோடும் தொடர்பு இருந்தது. அரசோச்சுவதில் நல்லவனாகத் திகழ்ந்த அவன் காமக்களியாட்டத்திலும் வல்லவனாகவே இருந்தான். அரசனுக்கும் அரசிக்கும் ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அதற்குப் பின்னரும் மனைவியை விட்டுவிட்டு, மற்றைய பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் அவனின் வழக்கம் தொடர்கிறது. குழந்தை வளர்ந்த சிறுவனாகின்றது. ஒருநாள் தாயும் மகனும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். தாயின் மடியில் தாவி அமர்வதும்ää வெளியே ஓடிச்சென்று குதிப்பதுமாக அந்தச் சிறுவன்


புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை பதிப்பித்து வெளியிட்டுள்ளது இந்திய சாகித்திய அகாதெமி

.
இந்திய சாகித்திய அகாதெமி, தெரிந்தெடுத்த 10 புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை பதிப்பித்து வெளியிட்டுள்ளது. 

அதில் எழுத்தாளர் ஆசி கந்தராஜாவின்  'ஒட்டுக்கன்றுகளின் காலம்' என்னும் சிறுகதையும் அவுஸ்திரேலியா சார்பாக தெரிவுசெய்யப்பட்டு பதிப்பக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு இணைப்பைப் பார்க்கவும்.




பேராசிரியர் சி.மௌனகுருவின் நொண்டி நாடகம் - இருவர் பார்வைகள்....

.

மட்டக்களப்பில் அண்மைக்காலங்களில்  ஆற்றுகைப் படைப்புக்கள் பல அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பேராசிரியர் மௌனகுருவின் நெறியாள்கையில் உருவான நொண்டி நாடகம் குறிப்பிடத்தக்கது. அவரது படைப்புக்களில் சக்தி பிறக்குது, சங்காரம், இராவணேசன் முதலியவை கலாரசிகர்களினதும், விமர்சகர்களினதும் வரவேற்பைப் பெற்ற பிரசித்தமான படைப்புக்களாகும்.

 நொண்டி நாடகம் முதன் முதலாக 1962ஆம் ஆண்டு ஆற்றுகை செய்யப்பட்டதாக அறிய முடிகின்றது. அதில் பாத்திரமேற்று நடித்த நடிகர்களில் பேராசிரியரும் ஒருவர் என்பது கவனத்திற்குரியது. 
52 வருடங்களின் பின்னர் மீண்டும் புத்தாக்கம் பெற்ற  நொண்டி நாடகம் பேராசிரியரின் படைப்புக்களில் ஒரு புதுவிதமானது என்று கூடச்சொல்லமுடியும். ஏனெனில், நாடகத்தினை அடிக்கட்டுமானமாகக் கொண்டு மரபு வழி இசையாலும், செந்நெறி சார் இசையாலும் இசைக் கலைஞர்களாலும் பிரமிக்கத்தக்க வகையில் உருவாக்கப்பட்டுள்ளமையாகும் 

மெல்பன் பாரதி பள்ளியின் 20 வருட நிறைவு விழா புத்தகக் கண்காட்சி

.
         மெல்பனில்  கடந்த  20  வருடங்களுக்கும்  மேலாக  இயங்கும்  பாரதி பள்ளியின் 20  வருட  நிறைவு  விழா  எதிர்வரும்  26-04-2015  ஆம்   திகதி   ஞாயிற்றுக்கிழமை   முற்பகல்  10   மணியிலிருந்து   மாலை  6   மணிவரையில்  Dandenong High School    மண்டபத்தில் (Ann Street, Dandenong - 3175 )  நடைபெறும்.   இவ்விழாவில்  பல்வேறு நிகழ்ச்சிகளுடன்   தமிழ்  புத்தகக்  கண்காட்சியும்  ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில்  தங்கள்  வெளியீடுகளையும்  தங்களிடமிருக்கும் அவுஸ்திரேலியா   அன்பர்களின்  வெளியீடுகளையும்  இடம்பெறச்செய்யலாம்.   கண்காட்சி  10  மணிக்கு ஆரம்பமாகவிருப்பதனால்  நூல்களை   காலை  9   மணியளவில்  கண்காட்சி  அரங்கில்    சேர்ப்பிக்குமாறும்  விழா  நிகழ்ச்சிகளில்  கலந்து  சிறப்பிக்குமாறும்  கேட்டுக்கொள்கின்றோம்.
கண்காட்சி  முடிவுற்றதும்  தங்கள்  நூல்களை   பெற்றுச்செல்ல  முடியும்.
மேலதிக   விபரங்களுக்கு:

லெ.முருகபூபதி :-   04 166 25 766  -   letchumananm@gmail.com

கனவுகளை விட்டுச்சென்றவர் ஜெயகாந்தன் - ஜெயமோகன்

.

ஜெயகாந்தன் மறைந்தார். எழுத்தாளரின் மறைவு என்பது ஒரு தொடக்கம். அவரை முழுமையாகத் தொகுத்துக்கொள்ள, அனைத்துக் கோணங்களிலும் அவருடைய பங்களிப்பைப் பற்றி அறிந்துகொள்ள அது ஒரு வாய்ப்பு. அத்தனை பேரிலக்கியவாதிகளும் இறந்த பின்னர் உயிர்த்தெழுபவர்கள்தான்.
நமக்கு சங்க காலத்துக்குப் பிறகு, இலக்கியவாதி என்ற அடையாளம் மட்டும் கொண்ட பெரிய ஆளுமைகள் இல்லாமலாயினர். இலக்கியமும் மதமும் ஒன்றாக ஆயிற்று. நாயன்மார்களோ சேக்கிழாரோ ஆழ்வார்களோ கம்பனோ மதம் சார்ந்த மரியாதையையே பெற்றனர். மற்றபடி இலக்கியவாதிகள் என்றால் அதிகாரத்தை அண்டிப் பிழைப்பவர்கள், பரிசில் வாழ்க்கை வாழ்ந்த மொழிநுட்பத் திறனாளர்கள். இலக்கியவாதி என்பவர் பிரபுக்களின் அவையிலுள்ள பலரில் ஒருவர் என்ற எண்ணமே மக்களிடமும் இருந்தது.
இந்த மனநிலை காரணமாக இங்கு இலக்கியவாதிக்கு மதிப்பு இருந்ததில்லை. 

தமிழ் வளர்த்த சான்றோர் விழா 26 04 15

.













.

ந்தி பயண இலக்கியத்தின் தந்தை என்று அறியப்படு பவரும் வாழ்நாளின் 45 வருட காலத்தை பயணங்களில் செலவழித்தவருமான மஹா பண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் (Mahapandit Rahul Sankrityayan) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 9). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
lகிழக்கு உத்தரப் பிரதேசத்தில் ஆஸிம்கார் என்ற கிராமத்தில் பிறந்தார் (1893). இவரது இயற் பெயர் கேதார்நாத் பாண்டே. இளம் வயதிலேயே தாய் இறந்துவிட்ட தால். பாட்டியால் வளர்க்கப்பட்டார். ஆரம்பக் கல்வி மட்டுமே கற்றார்.
l10 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி ஊர் ஊராக சுற்றி ஏராளமான விஷயங்களைக் கற்றார். காசி சென்று சாதுக் களுடன் மடாலயங்களில் தங்கியிருந்தார். அப்போது இவருக்கு ராம் உதார் தாஸ் என்று பெயர் சூட்டப்பட்டது.
lதமிழகம் வந்து சைவ, வைணவ நூல்களைக் கற்றார். தத்துவம், பயணம், வரலாறு, மதம், மொழி, இலக்கியம் என்று அனைத்து துறைகளிலும் இவரது அறிவு விரிவடைந்தது. இலங்கை முதல் லண்டன் வரை பயணம் மேற்கொண்டார்.

காலம் சொல்லும் கதைகள்! தங்கர் பச்சான்

.

காலையில் விழித்தெழுந்ததும் கண் திறந்து நான் பார்க்கும் இரண்டு முகங்கள் என் அப்பாவும், அம்மாவும்தான். முன்பின் அறிமுகமில்லாத சென்னையில் என்னைப் போட்டுவிட்டு, இருவரும் என்னைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டே சுவரில் தொங்கும் படத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அம்மாவுக்கு விதம் விதமாக நான் எடுத்த நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. அப்பாவுக்கு இருப்பது ஒரே படம்தான்.
50 திரைப்படங்களுக்கு மேல் பல லட்சம் அடிகள் யார் யாரையெல்லாமோ ஓடும் படமாகப் பிடித்துள்ளேன். அப்பா நடப்பது போன்றோ, பேசுவது போன்றோ ஒரே ஒரு நொடிகூட என் பிள்ளைகளுக்குக் காண்பிக்க எதையும் நான் பதிவுசெய்து வைக்கவில்லை.
சினிமா கேமராவைத் தொடுவதற்கு முன் எனக்கும் கேமராவுக்கும் தொடர்பே இல்லை. அதுவரை நான் எடுத்துக்கொண்டப் படங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று, ஐந்தாம் வகுப்பு பயிலும்போது கடைசி நாளில் வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து எடுத்துக்கொண்ட கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் அந்தப் படமும், சென்னைக் கல்லூரியில் படிக்கிறபோது பேருந்தில் பயணிக்க அடையாள அட்டைக்காக எடுத்துக் கொண்ட மார்பளவுப் படமும்தான்.

இலங்கைச் செய்திகள்


ஜனா­தி­ப­திக்கு பாகிஸ்­தானில் செங்­கம்­பள வர­வேற்பு

எதிர்பார்க்கப்பட்டவை நடைபெறவில்லை: ஆஸி.யிடம் சி.வி. முறையீடு!

  '2000 பேரின் கதை கேட்க ஒன்றரை வருடங்கள் எனில் 18000 பேரின் கதை கேட்கப் 10 வருடங்களா?"

 '200 பேர் இறந்ததாய் சொல்லிய நீங்கள், கொன்றவர் யார் என ஏன் சொல்லவில்லை?" 2ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டம்

தமிழகத்திலிருந்து திரும்பியவர்கள் காணிகளை கோரி ஆர்ப்பாட்டம்

ஜே.வி.பி.யின் யாழ். மாவட்ட மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறப்பு

 பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் 570 ஏக்கர் காணியை 2ஆவது கட்டமாக விடுவிக்க நடவடிக்கை




குணம் எமக்கு மாறவில்லை ! (. எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் )

.        

      காசெல்லாம் செலவு செய்து
      கடவுளை நாம் வணங்குகிறோம்
      நீசக்குணம் போயிட  நாம்
      நினைத்து என்றும் பார்த்தோமா

      ஆசைவார்த்தை கூறி நின்று
      அனைவரையும் மடக்கு கின்றோம்
      அல்லல் பட்டு நிற்பவரை
      அரைக்கணம் நாம் பார்த்ததுண்டா

      மோசடிகள் பல செய்து
      முழுவதையும் சுருட்டு கின்றோம்
      காசில்லா நிற்கும் அவர்
      கஷ்டமதை பார்த்த துண்டா

'தமிழ் ஊக்குவிப்புப் போட்டி - 2015' 01 08 2015

.
'தமிழ் ஊக்குவிப்புப் போட்டி - 2015'  பின்வரும் திகதிகளில் விக்டோரிய மாநிலத்தில் நடைபெறவுள்ளது. மேலும் , தேசியப் போட்டியும் இவ்வருடம்  விக்டோரிய மாநிலத்தில் நடைபெறவுள்ளது.  
The dates for 'The Tamil Competition 2015' have been finalized as mentioned below. The National Competition also will be held in Victoria this year.

விக்டோரிய மாநிலப் போட்டிகள் (Victorian Competition)
ஆகஸ்ட் 01,  2015   (01/08/2015 - சனிக்கிழமை / Saturday))
ஆகஸ்ட் 09,  2015   (09/08/2015 - ஞாயிற்றுக்கிழமை / Sunday))
ஆகஸ்ட் 15,  2015   (15/08/2015 - சனிக்கிழமை / Saturday))

தேசியப் போட்டி (National Competition)
செப்டெம்பர்  26,  2015   (26/09/2015 - சனிக்கிழமை / Saturday)

தேசிய மற்றும் விக்டோரிய மாநில பரிசளிப்பு விழா
(National and the Victorian Awards Ceremony)
செப்டெம்பர்  27,  2015   (27/09/2015 - ஞாயிற்றுக்கிழமை / Sunday)

முப்பாட்டன் முருகன் அல்ல; கணியன் பூங்குன்றன் — அ.ராமசாமி

.

ரண்டு வாரங்களுக்கு முன்  எனது சொந்தக் கிராமத்திற்கும் எனது மனைவியின் கிராமத்திற்கும் சென்று வந்தேன். இந்தக் கிராமங்களோடான உறவு முறிந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் அவ்வப்போது போய்வருவது வழக்கம். உசிலம்பட்டியிலிருந்து கிளம்பும் நகரப் பேருந்தில் பயணம் செய்யும் அனுபவம் ஒவ்வொரு முறையும் வேறாக இருக்கும். இந்தமுறை பேருந்தில் செல்லவில்லை; காரில் சென்றேன்.
பேருந்துப் பயணத்தில் நேராக எங்கள் கிராமங்களுக்குச் சென்று உறவினர்களைப் பார்த்துவிட்டுத் திரும்பிவிடும் வழக்கத்திற்கு மாறாகக் கைவசம் இருந்த கார் புதிய யோசனைகளைத் தூண்டியது. 30 ஆண்டுகளுக்கு முன்பு சாலைகளால் இணைக்கப்படாமல் வண்டிப்பாதைகளாலும் ஒற்றையடிப்பாதைகளாலும் இணைக்கப்பட்டிருந்த சின்னச்சின்னக் கிராமங்களையும் பார்க்கத்தூண்டியது.  அவையெல்லாம் எனது பள்ளிப் பருவத்தில் சல்லிக்கட்டு பார்க்கவும் வள்ளி திருமணம் பார்க்கவும் நடந்து போய் வந்த கிராமங்கள்.  பின்னர் கபடி விளையாடுவதற்காகச் சைக்கிளில் சென்றுவந்த கிராமங்கள். அப்போதெல்லாம் அந்தக் கிராமங்களில் பளிச்சென்று தெரிந்தவை எம்ஜிஆர் மன்றங்கள். எம்ஜிஆர் ரசிகர் மன்றங்களின் திரைப்படச் சுவரொட்டிகள் மாறிக் கொண்டே இருக்கும். அந்த மாற்றம் சாதிச் சங்கங்களின் – சாதிக்கட்சிகளின் சுவரெழுத்துகளாக மாறியபோது எங்கள் பக்கத்து கிராமங்கள் நசிந்து சிவகாசியும் திருப்பூரும் கோயம்புத்தூரும்  பெருத்து வீங்கியதைக் கண்டவன் நான்.

தனிநாயகம் அடிகளின் பேத்தி யாம் , அவள் அனந்னியா

.
அனந்னியா  வின் பேச்சை  கேட்டு பாருங்கள் . தனிநாயகம் அடிகளின்  பேத்தி யாம்  அவள் . ​



கம்பன் விழா 2015 - சிட்னி



தமிழ் சினிமா - சி.எஸ்.கே




தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர்கள் தான் தற்போது கலக்கி வருகின்றனர். அந்த வகையில் சத்ய மூர்த்தி சரவணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் சி.எஸ்.கே.
பெரிய நடிகர்களை நம்பி எடுக்காமல் இளம் நடிகர்களை மட்டும் கையில் எடுத்து கொண்டு சூப்பர் த்ரில்லர் படத்தை கொடுத்துள்ளது இந்த படக்குழு.
கதை
வைரங்களை வியாபாரம் செய்யும் ஒரு காப்பரேட் கம்பெனியில் பணிபுரிபவர் நாயகி கார்த்திகா. சென்னை சூப்பர் கிங்ஸில் எப்படியாவது இடம் பிடித்து கிரிக்கெட் வீரராக வலம் வரவேண்டும் என்ற லட்சியத்தோடு இருப்பவர் சார்லஸ். கார்த்திகாவிடம் காதலில் விழுந்த சார்லஸ், இலட்சியங்களை விட்டு தன் காதலை நிறைவேற்றத் துடிக்கிறார். காதலில் இருவரும் கலந்துவிட, மதம் தடையாக வந்து நிற்கிறது.
இன்னொரு பக்கம் தூத்துக்குடியில் கடத்தல் தொழிலை செய்து வரும் ஒரு தாதா. பல கோடி ரூபாய்க்கான ஒரு கடத்தல் பிசினஸ் நடக்கிறது. போலிஸுக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதால், வைரங்களை கடத்திவர புதிதாக ஒருவனை வேலைக்கு சேர்க்கிறார்கள். தன் குடும்ப சூழலால் இந்த வேலை செய்ய ஒப்புக்கொள்கிறான் ஷஃபிக்.
கார்த்திகா பணிபுரியும் கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்யும் இரண்டு முக்கிய புள்ளிகள் தான் இந்த கடத்தலுக்கு முக்கியமானவர்கள் என்று தெரியவருகிறது. கம்பெனியில் குடைச்சல் அதிகமாகிக்கொண்டே போக, வைரம் எப்போது கைக்கு வரும் என்ற டென்ஷனோடு பதபதைக்கிறார்கள்.
ஷஃபிக்கை போலிஸ் துரத்திக்கொண்டு வர, திடீரென சந்திக்கும் கார்த்திகாவிடம் வைரங்களை கைமாற்றுகிறான். உள்ளே இருப்பது என்ன என்றே தெரியாமல், அந்த டப்பாவை வாங்கி பைக்குள் போடுகிறாள். வைரங்கள் கைக்கு வந்து சேராத கோபத்தில் தூத்துக்குடி தாதா ஆத்திரமடைய, ஷஃபிக் என்ன ஆனான்? கார்த்திகாவிடம் இருக்கும் வைரங்கள் யார் கைக்கு போய் சேர்கிறது? சார்லஸ்-கார்த்திகாவின் காதல் என்ன ஆனது? என பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமான திரைக்கதையால் நமக்கு திரில்லிங்கை கொடுக்கிறது படத்தின் இரண்டாவது பகுதி.
க்ளாப்ஸ்
படத்தின் திரைக்கதை அடுத்த காட்சி என்ன என்று கேட்கத்தோன்றுகிறது. கதையில் வரும் அந்த மூன்று கதாபாத்திரங்களும் இளம் நடிகர்கள் என்றலும், மிக யதார்த்தமாக நடித்துள்ளனர்.
படத்தில் அவ்வபோது வரும் டுவிஸ்ட் வெகுவாக ஈர்க்கிறது. படத்தின் வசனங்கள் மிகவும் ஈர்க்கும் படி உள்ளது.
பல்ப்ஸ்
கடந்த சில வாரங்களாக இது போன்ற கடத்தல் சார்ந்த பல கதைகளை பார்த்து விட்டோம், இதனால் இப்படம் முந்தைய சில படங்களை நியாபகப்படுத்துகிறது.
மொத்தத்தில் கிரிக்கெட்டில் மட்டுமில்லை சினிமாவிலும் CSK கவனிக்க வைக்கின்றது.
ரேட்டிங்-3/5
நன்றி cineulagam