மரண அறிவித்தல்
.
திரு. ராஜசிங்கம் அரியரட்ணம் மக்கன்ரையர்
மரண அறிவித்தல்
திரு. ராஜசிங்கம் அரியரட்ணம் மக்கன்ரையர்
மறைவு 14 .12 .2012
Rajasingham Ariyaratnam Macintyre passed away on 14 December 2012.
He is the father of Rabindranath and Yohan. Jennifer Joseph is his former wife.
He is the brother of Ernest Macintyre, Gandhi Macintyre, the late Chelvasingham
Macintyre, and Evelyn Macintyre
The funeral will be at South Chapel, Rookwood Cemetery between 3:30pm and 4:15
pm on Wednesday 19 December.
அழிக்கப்பட முடியா தேசம் - -தமயந்தி -
.
சிறுவயதுக் கரையோரம்
சிறுவயதுக் கரையோரம்
கட்டிய மணல் வீட்டை அலை
வந்து வந்து அழித்துப் போனது.
மீண்டும் மீண்டும்
கட்டக் கட்ட
அழித்தல் சாத்தியமாயிற்று அலைக்கு
பின்,
என்சிறு கிராமக்கோடியில்
வியர்வையாலுங் குருதியாலும்
கட்டிய என்சிறு குடிலை
சிதைக்க முடிந்தது உங்களால்
மீண்டும் மீண்டும்
கட்டக் கட்ட
அழித்தல் சாத்தியமாயிற்று உங்களுக்கு
இப்போ
நகரங்களாலும், ஊர்களாலும், கிராமங்களாலும்
கட்டியெழுப்பப்பட்ட எனது தேசத்தை
எந்தப் பீரங்கி கொண்டும், யாராலும்
அழித்துவிட முடியாது என்பதை
அறுதிட்டுச் சொல்ல முடியுமென்னால்.
ஏனெனெல்,
ஓர் அகதியின் கனவுகளாலனவை
எனது தேசம்.
Nantri:piraththiyaal.com
இந்திய சிதார் மேதை ரவிசங்கர் காலமானார்
.
. |
சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் சாண்டியாகோ நகரில் காலமானார். அவருக்கு வயது 92.
உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், லா ஜோல்லாவில் உள்ள
ஸ்கிர்ப்ஸ் நினைவு மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மூச்சுத்திணறல் கோளாறு இருந்துள்ளது. இந்நிலையில், இவர் செவ்வாய் மாலை அவர் காலமானார்.
இந்தியப் பாரம்பரிய இசைக்கு வலு சேர்த்தவர் பண்டிட் ரவி சங்கர். இந்திய இசையின் தூதுவர் என்ற சிறப்பு பெற்றவர்.
ஷோபாசக்தி - நேர்காணலை நிகழ்த்தியவர்: லெ.முருகபூபதி.
.
1. தங்களது படைப்புகளின் ஊடாகவே தங்களது சிந்தனைகளை வாசகர்கள் தெரிந்துகொள்கின்றனர்.
புலம்பெயர்ந்து வாழும் பல படைப்பாளிகளுக்கு மத்தியில் தாங்கள் மிகவும் துணிச்சலுடன்
கருத்தாடலில் ஈடுபடுபவர். தங்களுடன் கருத்தியல் ரீதியாக முரண்படுபவர்கள் கூட தங்களின்
படைப்புகளை விரும்பிப் படிப்பதாக அறிகின்றோம். ஈழத்து வாசகர்களுக்கு தங்களது எழுத்துலகப்பிரவேசம்
பற்றிய தகவல்களை சொல்லுங்கள்?
மிகச் சிறிய வயதிலேயே
எனக்குத் தமிழ் தேசியப் போராட்டத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டுவி்ட்டது. அரசியல்
முழக்கங்களை உருவாக்கி சுவர்களில் எழுத ஆரம்பித்து, அரசியல் துண்டறிக்கைகள், கவிதைகள்,
நாடகம் எனப் பரப்புரை எழுத்துகளை எழுதியவாறே நான் எழுத்துத் துறைக்குள் நுழைந்தேன்.
பரப்புரை எழுத்துகள் என்பதற்கு அப்பால் தீவிர இலக்கியம் நோக்கி நகருவதற்கு ஏதுவான
நிலைமைகள் அப்போது என் சூழலில் இருக்கவில்லை.
இலங்கைச் செய்திகள்
.
கைதுசெய்த மாணவர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் விடுதலை
காணாமல்போன உறவுகளைக் கண்டறியக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்
நீதியரசர் மீதான குற்றப்பிரேரணைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
தென்னிலங்கை தேவாலயம் ஒன்றின் மீது "பிக்குகள் தலைமையில் வந்த கும்பல் தாக்குதல்
அமைச்சர் கெஹலியவை படுகொலை செய்யத் திட்டமிட்ட பெண்ணுக்கு 20 வருட சிறைத்தண்டனை
வவுனியா சாளம்பைக்குளத்திலிருந்து தமிழர்களை வெளியேறுமாறு அச்சுறுத்தல்: முஸ்லிம்களின் காணியெனவும் தெரிவிப்பு
கைதுசெய்த மாணவர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் விடுதலை
காணாமல்போன உறவுகளைக் கண்டறியக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்
நீதியரசர் மீதான குற்றப்பிரேரணைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
தென்னிலங்கை தேவாலயம் ஒன்றின் மீது "பிக்குகள் தலைமையில் வந்த கும்பல் தாக்குதல்
ராஜபக்ஸ ஆட்சிக்கு எதிரான ஒரு எதிர்ப்புச் சின்னமாக ஷிராணி பண்டாரநாயக்க மாறிவருகிறார்.
தாரிஷா பஸ்ரியன்ஸ்
பிரதம நீதியரசருக்கு ஆதரவாக வடக்கு சட்டத்தரணிகள் போராட்டம்
கண்டியில் சட்டத்தரணிகள் எதிர்ப்பு பேரணி
பிரதம நீதியரசருக்கு ஆதரவாக உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக சட்டத்தரணிகள் போராட்டம்
பிரதம நீதியரசருக்கு ஆதரவாக உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக சட்டத்தரணிகள் போராட்டம்
இராணுவம் குறித்து கூட்டமைப்பின் நிலை!
என் சத்தியமூர்த்தி
வவுனியா சாளம்பைக்குளத்திலிருந்து தமிழர்களை வெளியேறுமாறு அச்சுறுத்தல்: முஸ்லிம்களின் காணியெனவும் தெரிவிப்பு
உலகச் செய்திகள்
.
சூடானின் துறைமுகத்திற்கு மீண்டும் விரைந்த ஈரானின் போர்க்கப்பல்கள்: இஸ்ரேல் கடும் எதிர்ப்பு
மலாலாவை சந்தித்த சர்தாரி
ஜப்பானில் மேலுமொரு அணு மின் நிலையம் மூடப்படுகின்றது!
சூடானில் உளவுபார்த்த இஸ்ரேலிய கழுகு
மலாலா 'தேசத்தின் மகள்': பாக். பாராளுமன்றத்தில் தீர்மானம்
உக்ரைனில் கடும் பனியையே கரைய வைத்த நிர்வாணப் பெண்களின் போராட்டம்
அமெரிக்க ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கிச் சூடு 27 பேர் பலி

செங்கடல் பகுதியில் அமைந்துள்ள சூடான் நாட்டின் போர்ட் சூடான்
துறைமுகத்திற்கு ஈரான் நாட்டின் இரு ஏவுகணை மற்றும் விமானம் தாங்கி
கப்பல்கள் விரைந்துள்ளன.
வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு - 49 மனைத்தக்க மாண்பு
ஞானா: ….ம்…திருவள்ளுவர் வந்து எப்போதும் பெண்களிலைதான் அழுத்தம் போடிறது வழக்கம். இப்ப பாருங்கோ வாழ்க்கைத் துணைநலம் எண்ட 6 வது அதிகாரத்திலை முதலாவது குறளிலையே “மனைத்தக்க மாண்புடையளாகி எண்டு பெம்பிளையிலை தானே அழுத்தத்தைப் போடிறார். அந்த அதிகாரம் முழுக்கப் பெண்ணிலைதான் preassure.
அப்பா: (வந்து) என்ன மேனை ஞானா ஆருக்குப் preassure? ஏன் ஆருக்கும்
blood pressure ஆமே. அப்பிடி எண்டால் டாக்குத்தரிட்டைப் போக வேண்டியது தானே.
ஞானா: Blood Pressuer இல்லை அப்பா. இது திருக்குறள் pressure.
அப்பா: எனக்கு விளங்கேல்லையே ஞானா.
ஞானா: திருக்குறள் வந்தப்பா பெண்களிலை கன அழுத்தங்களைப் போடுது எண்டு தான் சொல்ல வாறன்.
அப்பா: நீ மகளே பழையபடி திருக்குறளிலை பிறெஷர் போட வாறியே. எந்தக் குறள் உன்னிலை அழுத்தத்தைப் போடுது?
'இராக சங்கமம்' - புதியதோர் இன்னிசைப் போட்டி.
.
சிட்னி ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் பெருமையுடன் வழங்கும்,
'இராக சங்கமம்' - புதியதோர் இன்னிசைப் போட்டி.
சிட்னிபுகழ் சப்தஸ்வராஸ் இசைக்குழுவினரோடு,
இசையமைப்பாளர் சதீஷ் வர்சன் இணைந்து வழங்கும் இசைத் திருவிழா.
இவ்விசைப்போட்டிகள், இராகங்களை அடிப்படையாகக் கொண்ட மெல்லிசை மற்றும் திரையிசைப் பாடல்கள், பக்திப் பாடல்கள் போன்ற தெரிவுகளை நான்கு பிரிவுகளாகக் கொண்டு அமையவிருக்கின்றது.
அப்பிரிவுகளாவன:
1. சிறுவர் பிரிவு (12 வயதிற்குட்பட்டவர்கள்).
2. இளையோர் பிரிவு (13-21 வயதிற்குட்பட்டவர்கள்).
3. திறந்த போட்டியாளர் பிரிவு (வயதெல்லை இல்லை).
4. ஜோடிப் பாடகர் பிரிவு (வயதெல்லை இல்லை).
3. திறந்த போட்டியாளர் பிரிவு (வயதெல்லை இல்லை).
4. ஜோடிப் பாடகர் பிரிவு (வயதெல்லை இல்லை).
மு.தளையசிங்கத்தை வாசித்தல் - பகுதி 01
.
“இலக்கியம் என்பதன் மூலம் கட்சி இலக்கியத்தை நான் கருதவில்லை. கட்சி இலக்கியத்தை அடியோடு வெறுக்கிறேன். கலை கலைக்காக என்ற வாதம் பிழையானது. ஆனால் அதைவிடப் பிழையானது கலை கட்சிக்காக என்ற வாதம். முன்னதில் கொஞ்சமாவது தனித்தன்மைக்கும் புதிய தத்துவங்கள் பிறப்பதற்கும் வசதி இருந்தது. பின்னதில் அந்த வசதி கொஞ்சமும் இல்லை. ஒருமைப்பாடு, ஒருமைப்பாடு! ஒரே ராகம்! எல்லாப் பிரச்சினையையும் தீர்ப்பதற்கு ஒரே formula கலை மக்களுக்காக - நானும் கை தூக்குகிறேன். ஆனால், மக்கள் என்பதைக் கட்சியாக மாற்றுவதை நான் அடியோடு எதிர்க்கிறேன். கட்சி என்பது மக்களாக விரிய வேண்டும். ஆனால் அது இன்றைய அரசியல் கட்சிகளால் முடியாது. வேறு எந்தக் கட்சிகளாலும் முடியாதது. காரணம் மனிதத் தன்மைகள், எண்ணங்கள், மன எழுச்சிகள் என்பவற்றை ஒரு formulaவைக் கொண்டு அளக்க முடியாது. அவை விசாலமானவை. மிகச் சிக்கலானவை. ஒவ்வொரு கட்சியும் அந்தச் சிக்கலான பரந்த அளவில் ஒரு சிறு பின்னந்தான். ஒரு பின்னம். அது, முதலாளித்துவ ஜனநாயகத்திலும் சரி தொழிலாளித்துவ சர்வாதிகாரத்திலும் சரி ஒன்றேதான்.”

1.
மு.தளையசிங்கம், ஈழத்தில் முகிழ்ந்த முக்கிய படைப்பாளி மட்டுமில்லாது கவனிக்கத்தக்கதொரு சிந்தனையாரும் கூட. அவருக்கு எழுத்தில் இருந்த நம்பிக்கையைப் போல களப்பணியாற்றுவதிலும் அக்கறையிருந்தது. எழுத்து என்பது உன்னதமானது என்றும் அதற்கு தனிமனிதர் ஒவ்வொருவரின் நேர்மையும், தனித்தன்மையும் முக்கியமானது என்றும் தொடர்ந்து வலியுறுத்தியவர். அவ்வாறு படைப்பில் நேர்மை அற்றவர்களையும், கட்சி/கொள்கை என்ற சட்டகங்களுக்கு அடங்கிப்போனவர்களையும், அதிகார மையங்களாக மாறுபவர்களையும் தொடர்ச்சியாக விமர்சித்து வந்திருக்கின்றார். தானொரு ஆக்க இலக்கியவாதியே அன்றி ஒரு விமர்சகன் அல்ல என்று தளையசிங்கம் கூறிவந்தாலும், அவரை அறியாமலேயே ஈழத்துச் சூழலில் ஒரு தனித்துவமான திறனாய்வுச்செல்நெறியை உருவாக்கியிருக்கின்றார் என்பதைக் கவனித்தாக வேண்டும்.

பல படைப்பாளிகளைப் போல எழுத்தில் ஒரு கற்பனாவாத புரட்சியை உருவாக்கி தமக்குப் பின் ஒளிவட்டங்களையும், பக்த கோடிகளையும் உருவாக்காது, தான் விரும்பிய/நம்பிய மாற்றங்களுக்காய் களத்திலும் தளையசிங்கம் இறங்கியவர். அன்றைய காலத்து தமிழ் அரசியல் கட்சிகளோடு முரண்பட்டு ‘சர்வோதய’ இயக்கத்தைத் தோற்றுவித்தவர். மாற்றங்கள் பிறரால்/பிறதால் உருவாகும்வரை காத்திருக்காது தாம் விரும்பும் மாற்றங்கள் தம்மிலிருந்து முகிழவேண்டும் என நினைத்து சர்வோதயத்தை ஒரு அரசியல் முன்னணியாக்கி, தேர்தலில் தம் இயக்கம் சார்பில் ஒரு வேட்பாளரையும் நிறுத்தியவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தண்ணீர் அள்ளும் உரிமை மறுக்கப்பட்டதற்கு -சாதி வெறியர்களுக்கு எதிராக- உண்ணாவிரதப் போராட்டத்தை தளையசிங்கம் தொடங்குகின்றார். இதனால் இவரும், அன்றைய காலத்தில் மாணவராய் இருந்த கவிஞர் சு.வில்வரத்தினமும் பொலிசால் மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர், இதன் நீட்சியில் தளையசிங்கம் நோயில் வீழ்ந்து, இரண்டு வருடத்திற்குள் தனது இளவயதிலேயே (38) மரணமடைகின்றார். தளையசிங்கம் அவரது காலத்தில் இலக்கிய அதிகாரம் ஒரு குறிப்பிட்ட கட்சியிடம்/முகாமிலும் குவிவதை மிகக் கடுமையாக எதிர்த்ததைப் போல, நிஜ வாழ்விலும் அதிகாரத்திற்கு/சாதிவெறியர்களுக்கு எதிராக நின்ற ஒரு சமூகப்பணியாளர் என்பதையும் நாம் நினைவுகூர்ந்து கொள்ளலாம்.
காவி நிறக்காதல் கொடிமர வேர்களில்
.
மீண்டும் காதல் என்ற சங்கீதத்தில் சில சுருதிகளை மீட்டுப்பார்க்க வேண்டும் என்ற உணர்வு. வாழ்க்கையை வாசித்த யாசித்த பண்பாட்டு மாற்றங்களை தன்பாட்டுக்குள் கொண்டுவந்த அந்த சாமி. காதலை மறப்பதற்காக ஒரு கோழைத்தனமாய் தன் காதலி பிரிகிறாள் என்ற எண்ணத்தில் காவியுடுத்திய காதலன் அந்த சாமி.
தன் கண்முன்னமே தன் காதலி யாருக்கோ மனைவியாகிவிடுவாள் என்று எண்ணி தாங்கொணா துயரம்தலையில் அழுத்த சாமி தேடி சாமியாகிறான். ஆனால் அங்கே யாரை மறக்கவேண்டும் மனதில் பதிந்த அந்த முகத்தை அழிக்க அழிக்கவேண்டும் என்று எண்ணி காவியுடை தரித்தானோ அதே அவளைத் தவிர அவள் முகத்தைத் தவிர அவன் பிரார்த்தனையும் மறக்க முடியாத தன்மையும் நின்று அவனை உலுக்கி எடுத்தது. முடியாமல் மீண்டும் மலையிலிருந்து காட்டிலிருந்து அந்த காவி இறங்குகிறது. கொடுமை என்னவென்றால் அதே உடையில் சில சில்லிடும் சிலிர்ப்புக்கு அந்த பழைய நினைவுகள் மட்டும் நிலைத்து நிற்க அந்த பழைய இடமும் புளிக்காத காதல் என்ற உணர்வும் மட்டும் கண்ணுக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் 18 வருசங்கள் கடந்த பின்னும் இன்னும்.......
பாவம் காதல் காதலிக்கவிடவில்லை இல்லை காதலித்த காதல் வாழவைக்கவில்லை அந்த சாமியை. பச்சைக் காடுகளில் பச்சையானவர் இங்கு பழைய இச்சைக்கான காதலை கச்சையில்(காவியில்) தேக்கிக்கொண்டு அலையலையாய் புதிய மாற்றங்களையும் ஒவ்வொரு நிகழ்கால நிகழ்வுகளையும் கடந்தகால அவரது நிஜங்களையும் ஒப்பிட்டு காதலிக்கிறார் இப்போதும் அந்த பழங்காதலை.

பாரதி- பாருக்கு ஓர் உதாரணம்
.
காத்திரமான எழுத்தினால் சமுதாயத்தைச் சிறப்பாக சீர்திருத்த
முடியும் என்பதையும் சீரிய கையாள்கைத் திறன் மொழியாற்றலுக்கு அவசியம்
என்பதையும் உலகுக்கு பறைசாற்றிய கவித்தலைவன் பாரதி. எத்தனையோ கவிஞர்களுக்கு
மத்தியில் மகாகவி என போற்றப்பட்ட பாரதியின் 130 ஆவது ஜனன தினம்.(11/12/2012)

கண்மூடித்தனம்!
.
.
ஒரு ஊரில் துறவி ஒருவர் இருந்தார். அவர் காற்றில் பறப்பதாகவும், தண்ணீர் மீது நடப்பதாகவும் அந்த ஊர்மக்கள் பேசிக்கொண்டார்கள். தாங்களும் அவரை போல காற்றில் பறக்கவும், தண்ணீரில் நடக்கவும் வேண்டும் என்பதற்காக நிறைய பேர் அவரிடம் சீடர்களாக சேர்ந்தார்கள்.
.
துறவி ஒவ்வொருநாளும் தனது குடிசையிலிருந்து வெளியே வந்து நதியின் மீது நடந்து பக்கத்து ஊருக்கு போவார். இதை பார்த்த சீடர்கள் தங்களுக்கும் நதியின் மீது நடக்கும் ரகசியத்தை சொல்லித்தருமாறு கேட்டனர்.
அதற்கு துறவி அதற்கான காலம் வரும் போது கற்றுத் தருவதாக சொன்னார். அதில் ஒரு சீடன் மட்டும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மறுநாள் துறவி நதியின் மீது நடந்து சென்றதும், அவர் பின்னாலேயே அந்த சீடனும் நடக்க முயற்சித்தான், அவனால் முடியவில்லை, நதி அவனை இழுத்து சென்றுவிட்டது. மற்ற சீடர்கள் துறவியிடம் சென்று நீங்கள் மட்டும் நதியில் நடக்கும் போது அவனால் ஏன் முடியவில்லை என கேட்டார்கள்.
அதற்கு துறவி நதியில் எங்கெங்கு பாறைகள் இருக்கும் என எனக்கு தெரியும், அதனால் அதன் மீது கால்வைத்து நடந்து செல்கிறேன் என்றார். கோடைகாலத்தில் தண்ணீர் வற்றும் போது உங்களுக்கு கற்றுக்கொடுக்கலாம் என்று நினைத்தேன்,

அதற்குள்... அந்த சீடன் நதியில் நடக்க முயற்சித்ததால் அவனை நதி இழுத்துசென்றுவிட்டது என்றார்.
தமிழ் சினிமா
நீர்ப்பறவை |
துப்பாக்கி, இரத்தமில்லாமல் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை காதலோடு இணைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. |
நீண்ட நாட்களுக்கு பின்பு தமிழ் சினிமாவில் நுழைந்திருக்கும் நந்திதாதாஸ், தன் கணவரின் வாழ்க்கையை ப்ளாஷ்பேக் மூலமாக தொடங்குகிறார்.
வீட்டிற்கு
வரும் நந்திதாவின் மகன் வீடை விற்க அனுமதி கேட்க, இது என் கணவன் வாழ்ந்த
வீடு என்றும் 25 வருடங்களுக்கு முன்பு கடலுக்கு சென்றவர் கண்டிப்பாக
திரும்பி வருவார் என கூறுகிறார்.
அன்று இரவே தன் வீட்டு தோட்டத்தில் "சமாதியில் பாடும் பாடலை" நந்திதா பாட, இதைப்பார்த்த மகன் மறுநாள் காலை அந்த இடத்தை தோண்டுகிறார்.
அந்த இடத்தில் எலும்புக்கூடுகள் கிடைக்க இது, தனது தந்தை தான் என உறுதி
செய்யும் மகன், தாய் நந்திதாவை பொலிஸில் காட்டிக்கொடுக்கின்றார்.
பொலிஸ் விசாரணையில் தன் கணவனை தானே கொலை செய்து வீட்டிற்கு பின்புறம்
புதைத்ததாக கூறினாலும் ப்ளாஷ்பேக்கை சொல்லும் போது நீர்ப்பறவை பறக்க
தொடங்குகிறது.
பெற்றோர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கும் நிலையில் கிளிநொச்சியிலிருந்து
அகதியாக வந்த விஷ்ணு(அருளப்பசாமியை) "பூ"ராம்- சரண்யா பொன்வண்ணன்
தம்பதியினர் தத்து வளர்க்கின்றனர்.
பெரும் குடிகாரனாக திரியும் விஷ்ணு, அப்பழக்கத்திற்கு அடிமையாகி கை,
கால் நடுங்கும் நேரத்தில் ஊர் ஊராக கடன் வாங்கி குடிக்க ஆரம்பிக்கிறார்.
இந்த சமயத்திலேயே கிறிஸ்தவ ஊழிய பெண்ணாக வரும் சுனைனாவை (யஸ்தர்) சந்திக்கிறார்.
தன் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி பணம் வாங்கிவிட்டு செல்லும் நாயகன் விஷ்ணு, அதையும் குடித்துவிடுகிறார்.
பின், விஷ்ணு குடிகாரன் என்கிற விடயம் அறிந்த சுனைனா விஷ்ணு தலை மேல் கை வைத்து ஆசிர்வாதம் செய்ய நாயகனுக்கு காதல் சிறகடிக்கிறது.
இருப்பினும் குடியை மறக்க முடியாமல் சிக்கித்தவிக்கும் நாயகனை பெற்றோர் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கின்றனர்.
அங்கிருந்து தப்பித்து வரும் விஷ்ணு, தேவாலய விழாவை முடித்துக்கொண்டு
அனைவரும் உறங்கும் சமயம் சுனைனா பக்கத்தில் படுத்துத்தூங்க மறுநாள் காலை
நாயகனுக்கு அடி உதை கிடைக்கிறது.
இந்த சம்பவத்தால் மிகவும் அசிங்கப்பட்ட விஷ்ணு, மீண்டும் மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து குடியை மறக்கிறார்.
குடியை மறந்து விட்டு சொந்த ஊர் திரும்பும் விஷ்ணு சுனைனாவை காதலிக்க முற்படுகிறார்.
இந்த சமயத்தில் வேலையில்லாத வெட்டிப்பயலுக்கு என் மகளை எப்படி கொடுப்பது என்று? நாயகி அம்மா கேள்வி கேட்க வேலை தேடி அலைகிறார்.
மீனவ சமுதாயத்தில் பிறந்து வெளியில் தொழிலாளியாக வேலை செய்வதை விட
"கடலில் நீ தான் முதலாளி" என்று சுனைனா சொல்லும் யோசனைகள் விஷ்ணுவிற்கு
ஆறுதலாக அமைகின்றன.
ஆனால் ஊரில் ஒரு கும்பல், மீனவ ஜாதி அல்லாதவர்கள் கடலில் மீன்பிடிக்க அனுமதி கிடையாது என விஷ்ணுவை விரட்டியடிக்கின்றனர்.
இந்த பிரச்னை தேவாலய நீதிமன்றத்திற்கு செல்ல, அங்கு விஷ்ணுவுக்கே சாதகமான தீர்ப்பு கிடைக்கிறது.
இருப்பினும் எதிர் தரப்பினர், யாரும் வேலைக்கு சேர்க்கமாட்டோம் என
தெரிவிக்க சொந்த படகு வாங்கி மீன் பிடிப்பேன் என சபதமிடுகிறார் நாயகன்.
இந்த படகை வாங்க உப்பளத்திற்கு போய் வேலை செய்யும் விஷ்ணுவிற்கு எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கிறது.
கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் இயக்குனர் சமுத்திர கனி, முன்பணம் பெற்றுக்கொண்டு தவணையில் படகொன்றை கட்டிக்கொடுக்கிறார்.
படகு தயாரானதும் சுனைனாவை திருமணம் செய்து கொள்ளும் நாயகன், தினமும் கடலுக்கு செல்கிறார்.
இந்த சமயத்தில் ஒரு நாள் கடலுக்கு சென்ற நாயகன், இரண்டு நாள்களாகியும் கரை திரும்பவில்லை.
குடும்பமே பதற்றத்தில் இருக்கும் அந்நேரம், மகனை தேடி தந்தை ராம் கடலுக்கு செல்கிறார்.
அங்கே இலங்கை கடற்படை விஷ்ணுவை துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்ததை
கண்டு அதிர்ச்சியுடன் தனது மகனின் பிணத்தை கரைக்கு மீட்டு வருகிறார்.
வீட்டோடு இருந்த பையன் வீட்டிலேயே புதைத்து விடுவோம், பொலிசுக்கு
தெரிந்தால் நியாயம் கிடைக்கிறதோ இல்லையோ உடம்பை போஸ்ட் மார்டம் பண்ணி நாசம்
செய்து விடுவார்கள் என புலம்பும் சமயம் இயக்குனர் சீனு ராமசாமி
பார்வையாளர்களை அழ வைக்கிறார்.
இந்த கதையை சுனைனா(சின்ன வயது) அதாவது நந்திதா தாஸ்(பெரிய வயது) பொலிசாரிடம் சொல்கிறார்.
இறுதியாக இவ்வழக்கு நீதிமன்ற வாசலை அணுகிய போது, இவ்வளவு நாளாக இதை ஏன்
மறைத்தீர்கள் என? நீதிபதி கேள்வி கேட்க, சொன்னால் மட்டும் நியாயம்
கிடைத்துவிடப் போகிறதா? என நந்திதா பதிலளிக்க இந்திய நீதித்துறையின் அவலம்
வெட்ட வெளிச்சத்திற்கு வருகிறது.
இலங்கை கடற்படை நடத்தும் துப்பாக்கிச்சூடு நாட்டில் மழை பெய்வது போல்
ஆகிவிட்டது என்றும் மீனவர்களுக்கு சட்ட சபையில் இட ஒதுக்கீடு என அடிக்கடி
பஞ்ச் வசனங்கள் பேசும் சமுத்திரகனிக்கு கைதட்டுக்கள் ஏராளம்.
தமிழ்வாத்தியாராக வரும் தம்பி ராமய்யா, சாரயம் விற்கும் வடிவுக்கரசி,
ஒளிப்பதிவாளர் சுப்பிரமணியனின் ஒளிப்பதிவு, ஏ.ஆர்.ரஹ்நந்தனின் இசை என
அனைத்தும் படத்துக்கு வலுசேர்ப்பதுடன் பார்வையாளர்களை படம் பார்க்க
தூண்டுகிறது என்பதை மறுக்க முடியாது.
கதாநாயகன்: விஷ்ணுகதாநாயகி: சுனைனா இயக்குனர்: சீனுராமசாமி ஒளிப்பதிவு: சுப்ரமணியன் இசை ஏ.ஆர்.ரஹ்நந்தன். நன்றி விடுப்பு |
Subscribe to:
Posts (Atom)