காத்திடுவாய் தாயே ! மகாதேவஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் ... அவுஸ்திரேலியா



முதலாவது அனைத்துலக சிலப்பதிகார மாநாட்டிலே நடைபெற்ற கவி அரங்கம்



முதலாவது உலகச் சிலப்பதிகார மகாநாடு அருள்மிகு துர்க்கை அம்மன் கோவில்  வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்திலே நடைபெற்றது. அதன் கடைசி நாளன்று ஞாயிறு மாலை 6 மணிக்கு நடைபெற்ற கவியரங்கத்தை பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். கவிஞர் திரு நந்திவர்மன் கவிஞர் திரு பாஸ்கரன் கவிஞர் சௌந்தரி கனேசன்  கவிஞர்  ஜெயராம சர்மா ஆகியோர் பங்கேற்றனர். சென்ற திங்கள் இதழிலே கவிஞர் ஜெயராம சர்மா அவர்களின் கவிதை பிரசுரமாகியது. இன்றைய இதழிலே பல்வைத்திய கலாநிதி  இளமுருகனார் பாரதி அவர்களின் கவிதை பிரசுரமாகிறது.


கலைமகள்வாழ்த்து  

நாவினிக்கத் தேமதுரச் செம்மொழித் தமிழை
    நாவமர்ந்து அளித்தருளும் வெண்க மலத்துப்
பூவினிக்க உறைசெல்வி பூங்க ழல்கள்
    போற்றிநின்று ஏத்திடுவேன் புதுமைப் பொருளில்
தேனினிக்கும் கவிதைகளைக்  கவிய ரங்கம்
   செவியினிக்க வழங்கவரும் இந்த நல்ல
நாளினிக்கத் தமிழ்முருகன் திருப்பொற் பாதம்
   நானிருகை கூப்பிநின்று வணங்கு வேனே! 


மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகதீப நினைவுவணக்க நிகழ்வு 2019.

நீர் கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்த தியாகி திலீபனின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு மெல்பேணில் கிளேன் வேவலி சென் கிறிஸ்தோபர் ஆரம்ப பாடசாலை மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 22 – 09 – 2019 அன்று சிறப்பாக, உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.
இளைய செயற்பாட்டாளர் செல்வி மது பாலசண்முகன் நிகழ்வை தொகுத்து வழங்க மாலை மணிக்கு நினைவு கூரல் நிகழ்வு ஆரம்பமானது.
அவுஸ்திரேலிய தேசியகொடியை இளைய செயற்பாட்டாளர் யது பாலசண்முகன் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழ தேசிய கொடியை இளைய செயற்பாட்டாளர் பவித்திரன் சிவநாதன் ஏற்றிவைத்தார்.

சிட்னியில் சிலப்பதிகார விழா முதலாம் நாள் நிகழ்வுகள்


.



சங்கடப்படுவாரா கோத்தாபய ?


03/10/2019 ஜனா­தி­பதி தேர்தல் பற்­றிய அறி­வித்தல் வெளி­யா­கி­யதும் தேர்­த­லுக்கு சுமார் இரண்டு மாதங்­க­ளுக்கு முன்பே நாட்டின் அர­சி­யலில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. அந்த பர­ப­ரப்பு பல்­வேறு வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்கு இட­ம­ளித்து, வேட்பு மனு தாக்கல் செய்­யப்­ப­டு­கின்ற இறுதித் தரு­ணத்தில் எதிர்­பா­ராத திருப்­பங்­களைக் கொண்ட கள­மாக மாற்றம் பெற்­றுள்­ளது.
இந்தத் திருப்­பங்கள் முக்­கிய கட்­சி­களின் வேட்­பா­ளர்­க­ளாக யார் யார் அதி­கா­ர­பூர்­வ­மாக வெளிப்­படப் போகின்­றார்கள் என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தி­லேயே அமையும் என்று எதி­ர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் தொடர்பில் இந்தத் திருப்பம் ஏற்­படக்கூடும் என்­பதே அந்த எதிர்­பார்ப்பு.
பெரு­ம­ள­வி­லான ஆத­ர­வா­ளர்­க­ளையும் பொது­மக்­க­ளையும் ஒன்று திரட்டி முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ரா­கிய கோத்­தாபய ராஜ­பக்ஷவை தனது வேட்­பா­ள­ராக அறி­வித்த பொது­ஜன பெர­முன இப்­போது திரி­சங்கு சொர்க்க நிலை­மைக்கு ஆளா­கி­யுள்­ளது.
அமெ­ரிக்க பிர­ஜை­யா­கவும் இலங்கை பிர­ஜை­யா­கவும் இரட்டைக் குடி­யு­ரிமை பெற்­றி­ருந்த கோத்­தாப­யவின் குடி உரிமை நிலை­மையைத் தீர்­மா­னிப்­பதில் ஏற்­பட்­டுள்ள சிக்­க­லான நிலை­மையே இதற்குக் கார­ண­மாகியுள்­ளது.

நடன அரங்கேற்றம் - மாதுமை கோணேஸ்வரன்


-->
தமது வாழ்க்கையிலே பெரிதாக ஒன்றைச் சாதிக்க விரும்புகின்றவர்கள் இலட்சியக் கனவுகளைக் காண்பார்கள்.  அந்தக் கனவுகளை நனவாக்க எத்தனையோ முயற்சிகளைச் செய்து, அயராது பாடுபடுவார்கள்.  அவர்கள் கண்ட கனவு நனவாகும் போது அவர்கள் அடைகின்ற மகிழ்ச்சியை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.
அப்படியொரு கனவு நனவான ஒரு நடன அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கும் அரிய வாய்ப்பொன்று எனக்குச் சென்ற வாரம் கிட்டியது. 
தனது பரத நாட்டியக் கலையை அரங்கேற்றியவர் செல்வி மாதுமை கோணேஸ்வரன்.  தனது சிறு வயது முதலே, தான் என்றேனும் ஒரு நாள் நடன அரங்கேற்றஞ் செய்வேன் என்று கனவு கண்டு வந்திருக்கின்றார்.  அந்தக் கனவை நனவாக்க அவர் பட்ட சிரமங்களையும், தாண்டிய தடைகளைப் பற்றியும் அறிந்த போது பிரமிப்பாக இருந்தது.
அவரது தாயார் திருமதி கோணேஸ்வரன் அலுவலகப் பணி காரணமாக இலங்கையில் பல இடங்களுக்கு மாற்றலாகிச் செல்ல வேண்டியிருந்தது.  சிறுமி மாதுமையும் தனது தாயாருடன் புதிய இடங்களுக்கு அடிக்கடி மாறிக் கொண்டே இருந்தாள்.  ஆனாலும் அப்படிப் போன இடங்களில் எல்லாம் ஒரு நடன ஆசிரியரைத் தேடிப் பிடித்து நடனத்தை விடாமல் பழகிக் கொண்டு வந்திருக்கின்றார் செல்வி மாதுமை.
இப்படிப் பல ஆசிரியர்களிடமும் நடனத்தைப் படித்ததே அவருக்கு எந்த நடனத்தையும் எளிதாக ஆடக் கூடிய வல்லமையையும் ஒரு வித்தியாசமான நடன பாணியையும் தந்திருக்கின்றது!
சிட்னி, அவுத்திரேலியாவில் அவருக்குத் திருமதி அபிராமி குமரதேவன் குருவாக அமைந்து அவரது நடனக் கலையின் நிறைவுச் சுற்றை நன்றாகவே மெருகேற்றி இருக்கின்றார்.
நியுசவுத் வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அரங்கேற்றம் பிள்ளையார் வணக்கத்துடன் தொடங்கிற்று.  “விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்” என்ற திருமுறைப் பாடலுக்குச் செல்வி மாதுமை நடனமாடி அரங்கேற்ற நிகழ்வை ஆரம்பித்த போது பரவசமாக இருந்தது!

பாடலை மேடையில் பாடியவர் திரு அகிலன் சிவானந்தன்.  இவரே தனது அரங்கேற்றத்தில் பாட வேண்டும் என்று பல காலமாக விருப்பமுற்று அந்த விருப்பத்தையும் அன்று செல்வி மாதுமை நிறைவேற்றி இருக்கின்றார்.
அரங்கேற்றத்தில் அடுத்து மல்லாரியும், மயூர அலாரிப்பும் இடம்பெற்றது.  தான் நாட்டியத்தில் மிகவும் தேர்ந்தவர் என்பதை மாதுமை எடுத்த எடுப்பிலேயே இந்த நடனத்தில் காட்டி விட்டார்.

முதலாவது அனைத்துலக சிலப்பதிகாரமாநாடு மலர்


இதுவரை தமிழகத்தில் இது போன்ற  மலர் தயாரிக்கப்படவில்லை என்று பேசுகின்ற அளவிற்கு 700 பக்கங்களில் 140 ஆய்வுக்கட்டுரைகளை பதிவுசெய்து முதலாவது அனைத்துலக சிலப்பதிகார  மாநாட்டில் சிட்னியில்  வெளியிட்ட பெருமையும் சிட்னி தமிழ் இலக்கிய கலை மண்றத்திற்கு  சாரும்.  

சிட்னி ஸ்ரீ துர்காதேவி தேவஸ்தானத்தில் சிலப்பதிகார மாநாடு மலர் விற்பனையாகின்றது ($20 மட்டுமே)  Tel: 02 9644 6682






சிலப்பதிகார பேச்சுப் போட்டியில் தங்கபதக்கம் பெற்றவர்கள்

.

அவுஸ்ரேலிய தமிழ் இலக்கிய கலைமன்றம் நடாத்திய சிலப்பதிகார பேச்சுப் போட்டியில் மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பெற்றவர்களுக்கு சிலப்பதிகார மகாநாட்டு மேடையில் வைத்து தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது . மூவரும் போட்டியில்   பேசிய பேச்சுக்களை மீண்டும் அறிஞர்கள் முன்பாக பேசிக்காட்டி பலத்த பாராட்டை பெற்றுக்கொண்டார்கள்


முதலிடம் எடுத்து தங்கபதக்கம் வென்றவர்கள்
கீழ்ப்பிரிவு - செல்வன் .டேவேஷ் நந்தகுமார்
மத்தியபிரிவு - தேசினி கேதீஸ்வரன்
மேற்பிரிவு - மீரா தயாபரன்

கம்பன் விழா 12-13/10/2019









ஞான வேள்வி 10-11/10/2019




















கம்பன் கழகம் - உயர் "மாருதி" விருது 2019



புலம் பெயர்ந்த டாக்டர் ராஜா - பொன் குலேந்திரன் ( கனடா )


யாழ்குடா நாட்டில் உள்ள அரியாலை கிராமத்தில்  பிறந்து, வளர்ந்து ,படித்து டாக்டராகி  அரசில் இருபது வருடங்கள் வேலை செய்த, அதன் பின் ஓய்வு பெற்று சொந்தத்தில் தனது  ஊரில்  ஒரு கிளினிக் நடத்தியவர் டாக்டர்  சுப்பிரமணிம். அவர்  மகன் டாக்டர் ராஜா என்ற  ராஜரத்தினம் , தன் தந்தை படித்த சில கி மீ தூரத்தில் உள்ள  பரியோவான் கல்லூரியில் படித்து, கொழும்பு மருத்துவக் கல்லூரிக்கு தேர்வாகி, டாக்டர் பட்டம் பெற்றவர். அவர் முதலில் கொழும்பில் வேலை செய்து, அதன் பின்  கிழக்கு மாகாணத்தில்  உள்ள   கல்முனை அரச வைத்தியசாலையில் இரு வருடங்கள் வேலை செய்த காலத்தில் அவரை அந்த ஊர் மக்கள் கைராசிக்கார  டாக்டர் என்று அடைப்பெயர் வைத்து அழைத்தனர். அந்தப் பெயர் வரக் காரணம், ஒரு தடவை அவர் மருந்து கொடுத்தால் நோய் பஞ்சாய் பறந்து போய் விடும், கல்முனையில்  வேலை செய்து, அதன் பின் காலி, களுத்துறை,  பாணந்துறை ஆகிய சிங்கள ஊர்களில் வேலை செய்தார்.  அவர் எப்போதும் நேற்றியில் சிறு திருநீறு குறியோடு  வேலைக்கு செல்வது வழக்கம். அதை டாக்டர் ராஜாவின் தாய் தேவி அவருக்குச் சொல்லிக் கொடுத்த பழக்கம். டாக்டர் ராஜாவின் தந்தையின் திடீர் மரணத்தின் பின் அவனுக்குத் தாய் தான் எல்லாம் .

இலங்கைச் செய்திகள்


அம்பாறையில் புதிய நிரந்தர சோதனை சாவடி 

சிறுவர்தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டம்

பலாலி விமான நிலையத்தை பெயர்மாற்றத் தீர்மானம் 

நிதீஷாவை கரம்பிடித்தார் யோஷித்த ராஜபக்ஷ 

ஜனாதிபதி தேர்தல் ; 20 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

அரசியலில் பரபரப்பு ! சமல் ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தினார் 

 நீதிமன்ற தீர்ப்பையடுத்து கேக் வெட்டி கொண்டாடிய பொதுஜன பெரமுனவினர்

ஐந்து சர்வதேச விமான நிலையங்கள் சேவையில் இயங்கும் : ரணில் விக்கிரமசிங்க

ஞானசார தேரரைக் கைது செய்யக்கோரி யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம்



அம்பாறையில் புதிய நிரந்தர சோதனை சாவடி 

01/10/2019 அம்பாறை மாவட்டத்தின்  தமிழ் பேசும்  மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய நிரந்தர சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன்,  சாய்ந்தமருது பகுதிகளில் இராணுவத்தினரின் குழு ஒன்று மற்றுமொரு பாரிய  தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

உலகச் செய்திகள்


“உலகின் பழமையான மொழி தமிழ்..!” - பிரதமர் மோடி புகழாரம்

வடகொரியா நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து புதிதாக ஏவுகணையை ஏவிப்பரிசோதனை

எனது தாயின் வாழ்வுடன் விளையாடிய அதேசக்திகள் எனது மனைவியின் வாழ்க்கையுடனும் விளையாடுகின்றன- இளவரசர் ஹரி உருக்கம்

ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது முதல்தடவை துப்பாக்கிபிரயோகம் - ஒருவர் படுகாயம்- வீடியோ இணைப்பு

மோடிக்கு கடிதம் எழுதிய மணிரத்தினம் உட்பட 49 பேரிற்கு எதிராக பொலிஸ் நடவடிக்கை-

ஹொங்கொங்கில் பொலிஸார் மீது தீ வைத்த போராட்டக்காரர்கள் (காணொளி இணைப்பு)


“உலகின் பழமையான மொழி தமிழ்..!” - பிரதமர் மோடி புகழாரம்


30/09/2019 “உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் பழமையான மொழியைக் கொண்ட மாநிலம் தமிழகம். இந்தியாவின் மூத்த மொழி தமிழ் மொழி. உலகின் மிக பழமையான மொழியான தமிழை போற்றுவோம்” என்று, ,இந்தியாவில் சென்னை ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசினார்.

பொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்தரதாஸ் பகுதி 14

பெண்ணை வாழவிடுங்கள்

விலைமகளும் ஒரு பெண்தான் அவளுக்கும் மறுவாழ்வு கிடைக்க வேண்டும என்பதை வலியுறுத்தி கே பாலசந்தர் அரங்கேற்றம் படத்தை உருவாக்கினார். அனாதரவான பெண்ணும் வாழவேண்டியவள்தான் என்பதை உணர்த்தும் வகையில் ஸ்ரீதர் அலைகள் படத்தை தயாரித்தார். ஆனால் இந்த கருத்தை முன்வைத்து அரங்கேற்றம் அலைகள் வெளிவருவதற்கு நான்காண்டுகளுக்கு முன்னமே ஒரு படம் வெளிவந்தது.

அந்தப் படம்தான் பெண்ணை வாழவிடுங்கள். இந்தப் படத்தை பிரபல ஒளிப்பதிவாளரான எம் கர்ணன் தயாரித்தார்.  ஏ கே சுப்பிரமணியன் படத்தின் மூலக்கதையை எழுதியிருந்தார். 

தொழிலதிபரான ஜெய்சங்கர் நண்பர்களின் சகவாசத்தினால் குடிகாரனாகவும் பெண்பித்தனாகவும் மாறுகிறார். பொது நிகழ்ச்சிகளில் ஆடிப்பாடி பிழைக்கும் ஷீலாவை பெற்றோருக்கும் தெரியாமல் திருமணம் செய்கிறார்.

ஆனால் சர்ந்தர்ப்ப வசத்தினால் ஷீலா மீது சந்தேகம் கொண்டு திருமணத்தினத்தன்றே அவரை விட்டு நீங்குகிறார். பேற்றோர்கள் அவருக்கு கே ஆர் விஜயாவை திருமணம் செய்து வைக்கிறார்கள். விஜயாவின் முயற்சியினால் ஜெய் திருந்துகிறார். சட்டத்தரணியான விஜயாவைத் தேடி ஷீலா ஒரு நாள் வருகிறார். தம் இருவருடைய கணவனும் ஒருவனே என்று அறியாமல் தன் கணவனுடன் சேர்ந்து வாழ சட்டத்தின் மூலம் உதவும்படி விஜயாவை ஷீலா கோர விஜயாவும் அவர் வழக்கை ஏற்று உதவ முன்வருகிறார். அப்போதுதான் இருவர் கணவரும் ஒருவரே என்று விஜயா அறிந்து அதிர்ச்சியடைகிறார். 

இவ்வாறு போகும் படத்தின் வசனத்தை மா லட்சுமணன் எழுதியிருந்தார் கருத்தாழம் மிக்க அவருடைய வசனங்கள் படத்தின் காட்சிகளுக்கு மேலும் மெருகூட்டின.  ஒரு கண்ணில் தூசு விழுந்தால் மறு கண்ணும் கலங்கும். ஒரு பெண்ணுக்கு கஷ்டம் என்றால் மற்றொரு பெண்ணும் கலங்கத்தான் செய்வாள். கணவன் மனைவி உறவு திருக்குறள் மாதிரி ஒரு வரி பிரிந்தால் குறளுக்கு அர்த்தமல்லாத மாதிரிதான் தாம்பத்தியமும் கெட்டுவிடும் போன்ற பல வசனங்கள் காட்சிகளுக்கேற்போல் மா லட்சுமணலால் எழுதப்பட்டிருந்தன.

தமிழ் சினிமா - அசுரன் திரைவிமர்சனம்


ஆடுகளம், வடசென்னை வரிசையில் தற்போது தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வந்துள்ள அடுத்த படம் 'அசுரன்'. தனுஷ், மஞ்சு வாரியர், அம்மு அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் எப்படி இருக்கு? வாருங்கள் பார்ப்போம்..
கதை:
சிவசாமி (தனுஷ்) தன்னுடைய இளைய மகன் சிதம்பரம் (கென் கருணாஸ்) உடன் காட்டிற்கு பதுங்கி பதுங்கி செல்லும் காட்சியுடன் துவங்குகிறது படம்.
பின்னர் என்ன நடந்தது என பிளாஷ்பேக் காட்சிகள் விரிகிறது. அழகான மனைவி மஞ்சு வாரியர், இரண்டு மகன்கள் ஒரு மகள் என சந்தோசமாக வாழ்த்து வருகிறது தனுஷின் குடும்பம். அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார் மஞ்சு வாரியாரின் அண்ணன் பசுபதி.
வடக்கூர், தெற்கூர் என இரண்டாக பிரிந்திருக்கிறது ஊர். தெற்கூரில் இருக்கும் அனைத்து விவசாய நிலங்களையும் மிரட்டி வாங்கி வைத்துக்கொண்டிருக்கிறார் வில்லன் ஆடுகளம் நரேன். அங்கு ஒரு சிமெண்ட் பேக்டரி கட்ட வேண்டும் என்பது அவர்களது திட்டம். ஆனால் தனுஷ் மட்டும் தன்னுடைய 3 ஏக்கர் நிலத்தை தரமாட்டேன் ஏன நிற்கிறார்.
சுற்றிலும் பல்வேறு விதங்களில் குடைச்சல் கொடுக்கிறார் வில்லன். தனுஷின் மூத்த மகன் முருகன் (டீஜே அருணாச்சலம்) அதை தைரியமாக கோபத்துடன் தட்டி கேட்கிறார். அவரை போலீஸ் பிடித்துச்செல்ல ஊரில் இருக்கும் அனைவரது காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கிறார் தனுஷ்.
அதன் பிறகு முருகன் வீட்டிற்கு திரும்பினாலும், பின்னர் கொடூரமாக கொலை செய்கிறது வில்லன் கும்பல்.அதற்கு பழிதீர்க்க விருப்பம் இல்லாமல் மனதிற்குள்ளேயே புழுங்கிக்கொண்டிருக்கிறார் தனுஷ். அப்பா கோழையாக இருப்பதை பார்த்து இளைய மகன் சிதம்பரம் கடும் கோபமாகிறார்.
அதே கோபத்தில் அவர் செய்யும் விஷயத்தால் தான் தற்போது தனுஷ் அவரது குடும்பத்துடன் தலைமறைவாக இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தனுஷ் ஏன் இப்படி இருக்கிறார், இளம் வயதில் எப்படி இருந்தார் என மேலும் ஒரு பிளாஷ்பேக் வருகிறது.
இத்தனை பிரச்சனைகளையும் தாண்டி வில்லன் குரூப்பை எப்படி ஜெயித்தார் ஹீரோ தனுஷ் என்பது தான் மீதி கதை.
பாசிட்டிவ் & நெகடிவ்:
+ தனுஷின் நடிப்பு. வயதான கதாபாத்திரம் போல தத்ரூபமாக நடித்துள்ளார் அவர். அவருக்கு தேசிய விருது காத்திருக்கிறது இந்த வருடம்.
+ வெற்றிமாறன் திரைக்கதை. வெக்கை என்ற நாவல் கதையை படமாக்கி இருந்தாலும், திரைக்கதை மற்றும் ரியலாக இருந்த காட்சியமைப்புகள் எந்த இடத்திலும் சலிப்படைய வைக்கவில்லை.
+ ஜீ.வி.பிரகாஷின் பின்னணி இசை, ராமரின் எடிட்டிங்.முதல் பாதி படத்தில் நம்மை சீட்டின் நுனியிலேயே வைத்திருந்ததில் பெரிய பங்கு இசை மற்றும் எடிட்டிங்கிற்கு உண்டு.
+ மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டீஜே, அம்மு அபிராமி, பசுபதி, பிரகாஷ்ராஜ் என படத்தில் நடித்த அனைவரும் கச்சிதமாக நடித்திருந்தனர்.
+கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் சொல்லும் கருத்துக்கு கிளாப்ஸ் அள்ளுகிறது. "நம்மிடம் பொருள் இருந்தால் புடிங்கி கொள்வார்கள். ஆனால் படிப்பு இருந்தால்.." என மகனுக்கு அவர் செய்யும் அட்வைஸ் தற்போதைய இளைய சமுதாயத்திற்கு நிச்சயம் சொல்லப்படவேண்டிய ஒன்று.
மொத்தத்தில் அசுரன் ஒரு வார்த்தையில் சொன்னால் 'வெறித்தனம்'. 
நன்றி CineUlagam