கொடுங்கோலர் கொழுத்தியே விட்டார்கள் ! - யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதை வெளிப்படுத்தும் இதயத்தின் குமுறல் - மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ..... அவுஸ்திரேலியா


யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் இசைத் தென்றல் 2019 - எனது பார்வையில்

.



கடந்த ஞாயிற்று கிழமை மாலை Riverside Parramatta வில் நடைபெற்ற யாழ் மத்திய கல்லூரியின் இசைத்தென்றல் 2019 இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். நிகழ்ச்சி சரியாக அறிவித்திருந்த படி மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு யாருமே பிரத்தியேகமாக இந்தியாவில் இருந்து இந்த முறை வருகை தரவில்லை என்பதால், பாடகர் முகேஷ் அவர்களே நிகழ்ச்சியை ஆரம்பித்து தான் ஓர் பாடகன்தான் ஆனால் தன்னை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குமாறு கேட்டுக்கொண்டதால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன் என்று கூறி முதல் பாடலை சோனியா அவர்கள் பாட வருகின்றார் என கூறி சோனியாவை மேடைக்கு வரவேற்றார். புத்தம் புது காளை என்னும் பாடலை மிகவும் அழகாக பாடினார். பின்னர் அவரே அடுத்து பாட வருபவரை அறிமுகம் செய்து வைத்தார். அடுத்ததாக ஸ்ரீகாந்த் ராசாளி என்னும் அச்சம் என்பது மடமையடா திரைப்படப் பாடலை வயலின் வாசித்தபடியே பாடினார். இதுவே அவரின் முதல் ஆஸ்திரேலியா பயணம். அதன் பின் ப்ரியங்கா சின்ன சின்ன வண்ணக்குயில் பாடலை தனது இனிமையான குரலில் பாடி பலரது கைத்தட்டலையும் பெற்றுக்கொண்டார். அவரைத்தொடர்ந்து முகேஷ் தனது வசீகரக் குரலால் ரோஜா ரோஜா என்னும் பாடலை  பாடினார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒருவரும் இல்லாததினால் நிகழ்ச்சி சற்று தொய்வடைந்த மாதிரி இருந்தது. இருந்தாலும் முகேஷ் அப்பப்போ தன்னால் இயலுமானவரை சற்று சுவாரசிகமாக பேசி நிகழ்ச்சியை கொண்டு செல்வதற்கு முயற்சி செய்தார்.
முகேஷும் பிரியங்காவும் இணைந்து அவர்கள் youtube இல் பாடிய காலத்தால் அழியாத மலர்ந்தும் மலராத என்னும் சரோஜாதேவி மற்றும் சிவாஜியின் நடிப்பில் திரையில் மலர்ந்த பாடலை பாடினார்கள். பிரியங்கா மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவராக தென் பட்டார். முகேஷ் அவரை ஏதாவது பேசும்படி கூறிய போது தனக்கு உடனே பேசுவதற்கு கொஞ்சம் தயக்கம் இருப்பதாகவும், போக போக பேசுவேன் என்றும் கூறினார்.

சோனியா இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன எனும் மரியான் திரை பாடலை மிகவும் இனிமையாக ஸ்ரீகாந்துடன் இணைந்து பாடினார்.  பிரியங்கா தனது வசீகரக் குரலால் நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா என்னும் பாடலை மிகவும் இனிமையாக பாடி ரசிகர்களின் பலத்த கரகோஷத்தை பெற்றார்.

அனைவருமே ஆசை கொள்வோம் ! மகாதேவஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் ..... அவுஸ்திரேலியா


அஞ்சலிக்குறிப்பு: நாடகக் கலைஞர் கண்ணன் நினைவுகள் - முருகபூபதி


அவுஸ்திரேலியாவில்  தமிழ்  நாடகக்  கலை சார்ந்த ஈடுபாடுகளில் தனது கவனத்தை தீவிரப்படுத்தியிருந்த நண்பர் கண்ணன் அவர்களின் மறைவு அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் தருகின்றது.
நான் இந்த கங்காரு தேசத்திற்கு புலம்பெயர்ந்து வந்த காலப்பகுதியில்தான் கண்ணனும் தனது குடும்பத்தினர் சகிதம்  வந்து இங்கு மெல்பனில் குடியேறினார்.
1989 ஆம் ஆண்டு நண்பர் இராஜரட்ணம் சிவநாதன்  ஒருங்கணைத்த தமிழ்க்கலை மன்றத்தின் ஏற்பாட்டில் மெல்பன் – பார்க்வில்லில் அமைந்த பல்கலைக்கழக உயர்தரக் கல்லூரியில் நடந்த கலைமகள் விழாவில் இடம்பெற்ற நாடகக் கலைஞர் மாவை நித்தியானந்தனின் கண்டம் மாறியவர்கள் நாடகத்தில்தான் கண்ணனின் நடிப்பை முதல் தடவையாக பார்த்து ரசித்தேன்.
கண்ணன், இலங்கை வடபுலத்தில் மானிப்பாய் சுதுமலை வடக்கில் 1952 ஆம் ஆண்டு  சின்னத்துரை – அன்னபூரணம் தம்பதியரின் நான்காவது பிள்ளையாகப்பிறந்தார்.   தந்தையார் சின்னத்துரை அக்காலப்பகுதியில்  P. W. D.  ஓவஸீயராக எங்கள் நீர்கொழும்பூரிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பாதையில் வரும் சிலாபம்  பிரதேசத்தில் பணியாற்றியவர்.  கண்ணனின் பெற்றோர்கள்   அந்த மாநகரத்திற்கு சமீபமாக இருக்கும் பாடல்பெற்ற திருத்தலமான முன்னேஸ்வரத்தில் வசித்தனர்.
கண்ணன்,  சிலாபம் கத்தோலிக்கப் பாடாலையில் தனது ஆரம்பகல்வியையும்  அதன்பின்னர், மானிப்பாய் இந்துக்கல்லூரியில் மேற்கல்வியையும் தொடர்ந்தவர்.  
இளம்பராயத்திலிருந்தே நாடகக்கலை மீது ஆர்வம்கொண்டிருந்தமையால் தமிழ் மரபார்ந்த நாடகங்களை எழுதியவர். தனது பாடசாலைப் பருவத்தில், தந்தையார் தனது கல்வி சார்ந்த பாடங்களை எழுதுவதற்கு வாங்கித்தரும் பயிற்சிக் கொப்பிகளில் முதல் பக்கங்களில் பாடக் குறிப்புகளையும் இறுதிப் பக்கங்களில் நாடகங்களும் எழுதியவர்.
இதனால் தந்தையாரின் கண்டனங்களுக்கும் பல தடவை ஆளாகியவர்.
மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆண்டு விழாக்கள் மற்றும் பெற்றோர் தின விழாக்கள், மாணவர் கலை இலக்கிய மன்றம் ஆகியவற்றுக்காக நாடகங்கள் எழுதியும் இயக்கியும் தனது கலை ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். இக்கல்லூரியில் வாகீசர் இல்லத்தில் இணைந்திருந்த கண்ணன், இல்லங்களுக்களுக்கிடையிலான நாவன்மைப்போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றிபெற்றிருக்கிறார்.

அவுஸ்திரேலியாவில் எழுத்தாளர் நடேசனின் நூல்களின் அறிமுகமும் விமர்சன அரங்கும்


அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும் பத்தி எழுத்தாளருமான விலங்கு மருத்துவர் நடேசன் இதுவரையில் எழுதியிருக்கும் நாவல்கள், சிறுகதைகள், தொழில் சார் அனுபவ நூல்கள் மற்றும் பயண இலக்கியம் தொடர்பான அறிமுகமும் விமர்சன அரங்கும் எதிர்வரும் 08 ஆம் திகதி (08-06-2019) சனிக்கிழமை மெல்பனில் நடைபெறும்.
நடேசன் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரே இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கியவர். இவரது விலங்கு மருத்துவத்துறை சார்ந்த கதைகளை உள்ளடக்கிய நூல் வாழும் சுவடுகள் இதுவரையில் இரண்டு பதிப்புகளைக்கண்டுள்ளன.  இதுவே இவரது முதலாவது நூலாகும்.
இலங்கையில் மதவாச்சியா தொகுதியில் பதவியா என்னுமிடத்தில் விலங்கு மருத்துவராக இவர் பணியாற்றிய அனுபவத்தின் பின்னணியில் எழுதிய முதலாவது நாவல் வண்ணாத்திக்குளம். இக்கதையை தமிழக திரைப்பட இயக்குநர் (அமரர்) முள்ளும் மலரும் மகேந்திரன் திரைப்படமாக்குவதற்கு விரும்பி, திரைக்கதை வசனமும் எழுதியிருந்தார்.
எனினும் இலங்கை அரசியல் சூழ்நிலைகளினால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. எனினும் இந்த நாவல் Butterfly Lake என்ற பெயரில் ஆங்கிலத்திலும், சமணள வெவ என்ற பெயரில் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன.
1983 இனக்கலவரத்தை பின்னணியாகக் கொண்டு நடேசன் எழுதிய உனையே மயல்கொண்டு என்ற நாவலும் Lost in you என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது.
நடேசனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகளும் மலேசியன் எயர் லைன் 370 என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இந்த நூலும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அசோகனின் வைத்தியசாலை என்ற நாவலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சுக்குத்தயாராகியுள்ளது.
எதிர்வரும் ஜூன் 08 ஆம் திகதி  பிற்பகல் 2.30 மணிக்கு மெல்பனில், வேர்மன் தெற்கு கல்வி நிலையத்தில், கலை, இலக்கிய ஆர்வலர் மருத்துவர் ( திருமதி) வஜ்னா ரஃபீக் தலைமையில்,  நடேசன் இதுவரையில் எழுதியிருக்கும் அனைத்து நூல்களின் விமர்சன  அரங்குடன்,   புதிய நாவலான கானல் தேசம், மற்றும்    நனவிடை தோயும்  சுயவரலாற்று பத்தி எழுத்து தொகுப்பான எக்ஸைல் முதலான நூல்களும் அறிமுகப்படுத்தப்படும்.

பயணியின் பார்வையில் -- அங்கம் --09 காதல் காதல், காதல் போயின் சாதல் - இது அன்று டாவு டாவுடா, டாவு இல்லாட்டி டையடா! - இது இன்று காதலர் தினத்தை கற்பு கொள்ளையர் தினமென்று பிரகடனப்படுத்திய சுவரொட்டி! - முருகபூபதி


கடந்த  பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில்தான், இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தில் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா பகுதியில் ஶ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் இந்திய இராணுவத்தினர் மீது தற்கொலைத்தாக்குதல் நடந்தது. இவ்வேளையில்தான் எனது சென்னைப்பயணமும் நிகழ்ந்தது.
பெப்ரவரி 14 ஆம் திகதி நடந்த இத்தாக்குதலில் சுமார் 40 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.  இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, உத்தரபிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, மேற்கு வங்கம், அஸ்ஸாம், மஹாரஷ்ட்ரா, உத்தரகாண்ட், ஒரிஸா, பீகார், கேரளா, கர்னாடகா, மத்தியபிரதேசம், ஹிமாச்சல், ஜம்மு - காஷ்மீர் பிரதேசங்களைச்சேர்ந்த இராணுவ வீரர்களே கொல்லப்பட்டனர்.
தமிழ்நாட்டில் தூத்துக்குடி, அரியலூர் மாவட்டங்களைச்சேர்ந்த வீரர்களும் இதில் அடக்கம். இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் படங்கள் இடம்பெற்ற பெரிய சுவரொட்டிகளையும் பதாதைகளையும் வீதியோரங்களில் காணமுடிந்தது.
சென்னையில் பார்க்குமிடங்கள்தோறும் சுவரொட்டிகளுக்கு பஞ்சமிருக்காது. கால்நடைகளும் தம் பசியாறுவதற்கு சுவரொட்டி பிரசுரங்களை நாடுவதையும் பார்த்திருப்பீர்கள்.
ஜெயலலிதா காலத்தில், " அம்மா,  வாழ்த்த வயதில்லை! வணங்குகிறோம்" என்ற பெரிய எழுத்து சுவொரொட்டிகளையும் மதுரையில் " அஞ்சா நெஞ்சன் அழகிரி " சுவரொட்டிகளையும் பார்த்திருக்கும் எனக்கு,  தேசத்தின் எல்லைப் பாதுகாப்பிற்காக கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் உறக்கம் இழந்து காவல் காக்கும் அந்த வீரர்களுக்காக மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தது கவனத்தை ஈர்த்தது.
இந்திய நாடாளுமன்றத்தின் தேர்தலுக்கு நாள் குறித்திருந்த காலப்பகுதியில் காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் நடந்த அதிரடி தற்கொலைத்தாக்குதலின் பின்னணியிலிருந்தவர் அகமது தார் என்ற 20 வயது இளைஞர் என்பது விசாரணைகளிலிருந்து தெரியவந்திருந்தது.

மெல்பனில் தமிழ் - சிங்கள இலக்கியப் பரிவர்த்தனை கருத்தரங்கு 08/06/2019




அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூன் 08 ஆம் திகதி (08-06-2019) சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தமிழ் - சிங்கள இலக்கிய மொழிப்பரிவர்த்தனை தொடர்பான கருத்தரங்கு - கண்காட்சி - காணொளிக்காட்சி என்பன மெல்பனில் வேர்மண் தெற்கு  கல்வி நிலையத்தில் ( Vermon South  Learning Centre ) சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும்.
முகவரி:  Vermon South  Learning Centre - Karobran Drive, Vermon South  , Victoria - 3133
இலங்கையிலும் புகலிடத்திலும்  இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் - சிங்கள இலக்கிய மொழிப்பரிவர்த்தனை பணிகள் தொடர்பான தகவல் அமர்வாகவும் இடம்பெறவுள்ள இந்நிகழ்ச்சியில்,  மெல்பனில் வதியும் தமிழ் - சிங்கள  எழுத்தாளர்கள் மத்தியில் கலந்துரையாடலும் இடம்பெற்று,  எதிர்கால வேலைத்திட்டங்கள் பற்றியும் ஆராயப்படும்.
கலை, இலக்கிய ஆர்வலர்கள் அழைக்கப்படுகின்றனர்.

-->





இலங்கைச் செய்திகள்


புரா­தன விநா­யகர் ஆல­யத்­தை ஆக்­கி­ர­மித்து விகாரை அமைப்­பது அநீ­தி­யான செயற்­பாடு

கன்னியா பிள்ளையார் ஆலயம் அகற்றப்பட்டமைக்கு இந்துக்குருமார் அமைப்பு கண்டனம்

  ''வவுனியா வரவேற்கிறது'' வளைவை ஆக்கிரமித்துள்ள படையினர் 

 ஐ.எஸ்க்கு எதிராக யாழில் வெள்ளியன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்

செய்திகளுக்காகச் சென்ற ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் பொறுப்பதிகாரி: திடுக்கிட வைக்கும் காரணி

ஆசிரிய சமூகத்தை இழிவுபடுத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

யாழில் அதிகரித்துள்ள போலி காணி ஆவணங்கள்

சீனாவின் திட்டங்களுக்கு பாதுகாப்பு:இலங்கை படையினருக்கு பயிற்சி

சுற்றுலாத்துறை எதிர்கொண்டுள்ள நெருக்கடியை குறைக்க விசேட வேலைத்திட்டம்

டிசம்பர் 7 இல் ஜனாதிபதி தேர்தல் !

சிவாஜிலிங்கம் மீதான பயங்கரவாத வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சஹ்ரானின் மடிக்கணிணி, பெருந்தொகைப் பணம் மீட்பு

பெண் ஊழியர்கள் சேலை தவிர்ந்த வேறு ஆடைகள் அணிய முடியாது சுற்றறிக்கை வெளியானது

தேசிய அடையாள அட்டையில் கொண்டுவரப்படவுள்ள திடீர் மாற்றம்

77 வெளிநாட்டு அகதிகள் வவுனியாவில்  குடியமர்த்தப்பட்டனர்


உலகச் செய்திகள்


பிரதமராக 2 ஆவது தடவையாக பதவியேற்கிறார் மோடி ; பாதுகாப்பு தீவிரம் ; மைத்திரியும் பங்கேற்பு !

மீண்டும் பிரதமரானார் மோடி

எங்களின் சிறந்த நட்பு நாடு இந்தியா:ட்ரம்ப்

பாகிஸ்தானில் இந்து வைத்தியர் மீது மத அவமதிப்பு வழக்கு-கடைகளுக்கு தீ வைப்பு

கொங்கோவில் படகு கவிழ்ந்ததில் 45 பேர் பலி ; 200 க்கும் மேற்பட்டோர் மாயம்!

4 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு ; 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு ; 11 பேர் பலி, 6 பேர் காயம்

வேர்ஜீனியாவில் 12 பேர் சுட்டுக் கொலை - மேலும் சில தகவல்கள்

அமெரிக்காவிற்கான வடகொரியாவின் விசேட பிரதிநிதிக்கு நடந்த கொடுமை- வெளியாகியது அதிர்ச்சி தகவல்


பிரதமராக 2 ஆவது தடவையாக பதவியேற்கிறார் மோடி ; பாதுகாப்பு தீவிரம் ; மைத்திரியும் பங்கேற்பு !

30/05/2019 இந்தியாவின் 17 ஆவது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க  இடம்பெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது.

சிட்னி ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம் லக்ஸர்ச்சனை 09/06/2019









சேக்கிழார் விழா 9/6/2019










Sydney Music Festival 2019 - June 8th, 9th & 10th





தமிழ் சினிமா - தேவி 2 திரைவிமர்சனம்


பேய் படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்ற நம்பிக்கை இருப்பது வழக்கமான ஒன்று தான். அதே வேளையில் அடுத்தடுத்த பாகங்களாக வெளிவந்து வெற்றி பெறுமா என்பது மக்களிடத்தில் தான் உள்ளது. அந்த வகையில் இயக்குனர் விஜய்யின் தேவி படத்தை தொடர்ந்து அடுத்த பாகமாக தேவி 2 படம் வெளியாகியுள்ளது.

கதை பற்றிய அலசல்

தேவி 1 ன் படி திருமணமான பிரபுதேவா தமன்னா ஜோடிக்கு கையில் குழந்தை இருக்கின்றது. வேலைக்காக இருவரும் ஜோடியாக மொரிஷியஸ் நாட்டுக்கு குடிபெயர்ந்து செல்கிறார்கள்.
வழக்கம் போல வாழ்க்கை செல்ல முந்தய பாகத்தில் ரூபியாக வந்து போன பேய் இன்னும் இருக்கிறதா என்ற சந்தேகம் பிரபுதேவாவுக்கு. ஆனால் நடப்பதோ வேறு.
பிரபுதேவா வேறொரு பெண்ணுடன் பழகுவதை கண்ட தமன்னா அதிர்ந்து போகிறார். நடப்பதையெல்லாம் பார்த்து ஒன்றும் புரியாமல் குழம்பி போயிருக்க கோவை சரளாவின் உதவியை நாடுகிறார்.
இதற்கிடையில் பிரபு தேவாவின் வாழ்க்கையில் இரண்டு பெயர்கள் நுழைகிறார்கள். அவர்களோடு இவர் பழகுவதால் உயிருக்கு ஆபத்து. இதற்கிடையில் சில அமானுஷ்யங்கள் நடைபெறுகின்றன.
பிரபு தேவாவுக்கு நடப்பது ஒன்றும் விளங்கவில்லை. அதே வேளையில் தமன்னா அந்த இருவரிடமிருந்து தன்னை தன் கணவரையும் பாதுக்காக்க போராடுகிறார்.
யார் அந்த இரண்டு பெண்கள், அவர்களின் பின்னணி என்ன, பிரபு தேவாவுக்கு அந்த பெண்களுக்கும் என்ன தொடர்பு, ஆபத்தில் இருந்து அவர் தப்பித்தாரா, தமன்னா ஆட்டிப்படைத்த அமானுஷ்யம் என்ன என்பதே கதை.

படத்தை பற்றிய அலசல்

தேவி படத்தின் முதல் பாகத்தை கொஞ்சம் மனதில் நினைவுபடுத்த வேண்டிய வேலையை படத்தில் எளிமையாகாட்டி தான் தேவி 2 க்குள் நம்மை அழைத்து செல்கிறார்கள்.
இயக்குனர் ஏ.எல்.விஜய் தேவி 1 படத்தில் நம்மை குஷியாக்கினார். தற்போது தேவி 2 படத்திற்காக ஸ்கிரிப்டில் கூடுதலாக ஒர்க்கவுட் செய்திருக்கிறார் என தெரிகிறது. வழக்கமான கதையாக தான் இருக்கும் என நினைத்தவர்களுக்கு எதிர்பாராத சர்ப்பிரைஸ் வைத்திருக்கிறார்.
பிரபுதேவாவை இந்த வயதில் அதே இளமை துள்ளலோடு இருக்கிறாரே என அவரை பார்க்கும் தோன்றலாம். 2 ரூபங்களில் கலக்கியிருக்கிறார். இரண்டிற்கும் கூலாக சேஞ்ச் ஓவர் காட்டியிருப்பது ஆச்சர்யம். நடனம் சொல்லவே வேண்டாம்.
தமன்னா பார்ட் 1 ல் கிளாமர் ஹீரோயினாக கலக்கினார். தற்போது தேவி 2 குடும்பத்து பெண்ணாக தன் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். பேய்யிடம் மாட்டிக்கொண்டு அவர் படும் பாடு நல்ல எண்டர்டெயின் மெண்ட்.
கோவை சரளாவுக்கு இங்கு என்ன வேலை என கேட்கலாம். பேய்யை டீல் பண்ணுவதில் அவருக்கு தான் முக்கிய பங்கு உண்டு. பேய்கே அக்ரீமெண்ட் போட்டு தமன்னாவும் இவரும் செய்யும் அட்டகாசங்கள் கவனத்தை கூடுதலாக்குகிறது.
பிரபு தேவாவின் நண்பராக வரும் ஆர்.ஜே.பாலாஜிக்கு சின்ன ரோல் தான். எந்த விசயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும் என தமன்னா, சரளா போகும் போது குறுக்கே வந்து ஒரு வழியாக்கிவிடுகிறார் பாலாஜி. மொத்த குடும்பமும் பைத்திய மாகிடுச்சோ என பாலாஜி படும் கஷ்டம் நல்ல காமெடி.
ஒளிப்பதிவாளர் போஸ் என்பவரின் இயல்பான படிப்பிடிப்பு, எடிட்டர் ஆண்டனியின் தெளிவான காட்சிகள் அமைப்பு, ஓவர் கிராஃபிக்ஸ் இல்லாமல் இயல்பாக கதையை கொண்டு சென்றது கதைக்கு கொஞ்சம் பிளஸ்.
அலட்டல் இல்லாத பாடல், போதுமான பின்னணி இசை என படம் எங்கேயும் சலிப்பு வராமல் கொண்டு போகிறது.

கிளாப்ஸ்

முதல் பாதியில் தொடங்கி கிளைமாக்ஸ் வரை இண்ட்ரஸ்டிங்கான கதை அமைப்பு.
பிரபு தேவா, தமன்னாவின் ரோல் பிளே ஸ்மார்ட்.
கோவை சரளாவின் காமெடி ஹார்ட் கோர்.

பல்பஸ்

தேவி 2 கதைக்கு பெயர் கொஞ்சம் பொருந்தவில்லையோ என ஒரு ஃபீல்.
மொத்தத்தில் தேவி 2 கோடை விடுமுறையில் நல்ல பொழுதுபோக்கு. கொடுத்த காசுக்கு ஒர்த்.

மரண அறிவித்தல்



டாக்டர் ராசு வடிவேல் முதலியார்

தமிழ் நாட்டினைப் பிறப்பிடமாகவும் சிட்னியை வதிவிடமாகவும் கொண்டிருந்த டாக்டர் ராசு வடிவேல் முதலியார் அவர்கள் மே மாதம் 26 ம் திகதி சிட்னியில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்ற பழனி முதலியாரின் பேரனும் காலம் சென்றவர்களான இராசு முத்துக் குமார முதலியார் வள்ளியமை தம்பதிகளின் அன்பு மகனும்
முத்து வடிவேல் குமரன், ஆறுமுகம் வடிவேல் குமரன், மீனாட்சி வடிவேல் குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
டாக்டர் வடிவேல் அவர்கள் சிட்னி முருகன் கோவிலை நிர்வகிக்கும் சைவ மன்றத்தின் ஸ்தாபக உறுப்பினர்கள் ஐவரில் ஒருவரும், சைவ மன்றத்தின் முதலாவது உறுப்பினரும் ஆவார்.
அன்னார் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தொடக்க காலத்தில் இந்திய செய்திகளைத்; தயாரித்து வழங்கியவரும், 
திருமுறைப் பாடல்களை உள்ளடக்கிய  Siva Tamil. Com  என்னும் இணையத் தளத்தினை உருவாக்கியவும் அதன் உரிமையாளரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் இறுதிக் கிரிகைகள் ஜுன் மாதம் 1 ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் 11.45 மணி வரை 
--> Magnolia Chapel Macquarie Park  மயானத்தில் நடைபெற்றது.

தொடர்புகளுக்கு: முத்துக் குமரன் 0403 311 259 மீனாட்சி 0413 402 847