நல்லூர் கந்தன் தேர்த்திருவிழா 2011

.
படங்கள் கீழே உள்ளதுவரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழா நேற்று வெகு பக்திபூர்வமாகக் கொண்டாடப்பட்டது.  காலை 7 மணிக்கு வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேதராய் முருகப்பெருமான் தேரில் எழுந்தருளியிருந்தமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.

என் நம்பிக்கையும்; உறங்கா இரவின் கனவுகளும் - வித்யாசாகர்

.
ரு பேசிடாத இரவின் 
மௌனத்தில் 
அடங்கா உணர்வின் 
நெருப்பிற்கு மேலமர்ந்து
எதற்கு சாட்சி சொல்லிட இந்தப் போராட்டமோ?!!

மூடி  இறுகும் கண்களின் 
இமை விலக்கி 
கடக்கும் பொழுதின் மடிப்புகளுள் 
கரையும் உயிரின் சொட்டொன்றில் 
விற்காத புத்தக அடுக்கின் பயத்தை
மீண்டும் மீண்டும் எழுத்தாக்கி 
அதற்குள்ளேயே என்னையும் சேமிக்கிறேன்;

நான் ரசித்த Aithra's Musical Night - செ.பாஸ்கரன்

.
தொடர்ச்சி 
.

ஞாயிறு மாலை ரம்மியமான மாலைப்பொழுது விஜேய் யேசுதாஸ் பாட்டு நிகழ்சிசி இருக்கின்றது என்பதே ஒரு இன்ப நினைவாக இருக்கிறது. சிம்பொனி என்ரரைனேர்ஸின் Aithra's Musical Night ,  5.30 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்க இருக்கின்றது அதற்கு முனபே போய்விடவேண்டும் என்று செல்கின்றோம்.
கார் நிறுத்தும் போதே 5.35 ஆகிவிட்டது வழமை போல் அப்போதுதான் என்னைப்போல் பலரும் உள்ளே வருகின்றார்கள். சற்று மன நிறைவோடு உள்ளே சென்று அமர்கின்றேன். பிரம்மாண்டமான The Hill Center மண்டபம் நிறைந்து கிடக்கிறது. 5.50 மணிக்கு விளக்குகள் அணைகின்றது வழமைக்குமாறாக பட்டுப்பாவாடை கட்டிய ஒரு சிறு பெண் குழந்தை மேடைக்கு வருகின்றது. வந்தவர் "நான்தான் வாணிஜெயராம் " என்று கூறி நிறுத்துகின்றார். ஜயையோ வாணிஜெயராம் இவ்வளவு சின்ன குழந்தையாக மாறி விட்டாரா என்று எண்ணும்போது மீண்டும் அந்த சிறுமி "நான்தான் வாணிஜெயராம் அவர்களையும் விஜே யேசுதாஸ் அவர்களையும் ஹரிச்சரன் அண்ணா அவர்களையும் அறிமுகம் செய்வதற்கு சின்மயி அக்காவை அழைக்கின்றேன்" என்று மழலைக் குரலில் கம்பீரமாக கூறி முடிக்கின்றார். வித்தியாசமான அந்த அறிமுகத்தை தந்தவர் வேறுயாருமல்ல விஜயாள் விஜே அவர்கள்தான். புதியதோர் அறிவிப்பாளர் அறிமுகமாகியுள்ளார்.

திருமுறை முற்றோதல் (63வது மாதாந்த தொடர்நிகழ்ச்சி) 04.09.2011 ஞாயிற்றுக்கிழமை

.
உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தல்

உலக சைவப் பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையின் மாதாந்த திருமுறை முற்றோதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 04.09.2011 காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது. அன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறையில் இருபதாம் பதிகத்திற்கு (திருகோளிலி பதிகம்) திரு மா அருச்சுனமணி அவர்களால் விளக்கம் கூறப்பட்டு பின்னர் ஏழாம் திருமுறையில் பதினைந்தாம் பதிகம் (திருநாட்டியத்தான்குடி) தொடக்கம் திருமுறைப்பாடல்கள் கூட்டுவழிபாட்டு முறையில் பாராயணம் செய்யப்படவுள்ளன.

சிவநேயச்செல்வர்கள் அனைவரையும் இவ்வழிபாட்டில் கலந்து எமது வாழ்நாளில் பன்னிரு திருமுறைகளிலும் உள்ள 18இ000 இற்கு மேற்பட்ட பாடல்களையும் ஓதி வழிபட்டு திருவருள் பெறுமாறு உலக சைவப் பேரவையின் அவுஸ்திரேலியாக் கிளை கேட்டுக்கொள்கின்றது.

இடம்: ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலை
(
Cnr Burlington Rd
&
Rochester St
), Homebush

நேரம்: 04.09.2011 ஞாயிற்றுக்கிழமை

காலை 9.15 முதல் 10.15 வரை

பதிக விளக்கம் - ஏழாம் திருமுறை

இருபதாம் பதிகம் - திருகோளிலி

(திரு மா அருச்சுனமணி அவர்கள்)

காலை 10.30 முதல் 12.30 வரை

திருமுறை முற்றோதல்;;

மேலதிக விபரங்களுக்கு:

திரு க சபாநாதன் Tel: 96427767

திரு சி சிவஞானசுந்தரம் Tel: 96425406

திரு மா அருச்சுனமணி Tel: 87460635

ராஜிவ் கொலையாளிகள் மூவருக்கு 9ம் தேதி தூக்கு : வேலூர் சிறைக்கு வந்தது உத்தரவு


.
Rajiv-mordவேலூர்: ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை மனுக்கள் நிராகரிப்பு உத்தரவு ஜனாதிபதியிடமிருந்து, வேலூர் சிறை கண்காணிப்பாளருக்கு முறைப்படி நேற்று வந்தது. இதனால் மூவரையும், வரும் செப்டம்பர் 9ம் தேதி தூக்கில் போட முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தூக்கு தண்டனையை குறைக்க, ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். கருணை மனுக்களை, ஜனாதிபதி நிராகரித்தார். மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான உத்தரவு, வேலூர் சிறைத்துறை அதிகாரிக்கு நேற்று மதியம் 2 மணிக்கு வந்தது. சிறைத்துறை துணைத் தலைவர் கோவிந்தராஜ், கருணை மனு நிராகரிப்பு உத்தரவை, முறைப்படி வேலூர் சிறை கண்காணிப்பாளர் அறிவுடையநம்பியிடம் கொடுத்தார். பின், மூன்று பேரையும் தூக்கில் போடுவது குறித்து ஆலோசனை நடத்தினர்."முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர், செப்டம்பர் 9ம் தேதி தூக்கில் போடப்படுவர்,'' என, வேலூர் சிறை கண்காணிப்பாளர் அறிவுடையநம்பி கூறினார். மூன்று பேரும், வேலூர் சிறையில் இருக்கும் தூக்கு மேடையில், 10 நிமிட இடைவெளியில் ஒருவர் பின் ஒருவராக தூக்கில் போடப்படுவார்கள் என, சிறைத்துறை அதிகாரிகள் கூறினர்.

சுமைதாங்கி-ஜெயகாந்தன்

jeyakanthan

வீட்டுக் கொடியில் துணி உலர்த்திக் கொண்டிருந்த அந்த அம்மாளைப் பார்க்கும்போது, அவன் கண்கள் கலங்கின. அவள் போலீஸ்காரனைப் பார்த்து, "ஏன்.. இருக்கான்; என்ன விஷயம்? ஏலே ஐயா! இங்கே வா" என்றதும் உள்ளிருந்து ஒரு பையன் ஓடி வந்து, போலீஸ்காரனின் தலையைக் கண்டதும், "நான் வரமாட்டேன்" என்று பயந்து உள்ளே ஒளிந்து கொண்டான்.

"எதுக்குடாய்யா பயப்படறே? ஒண்ணும் பண்ண மாட்டாரு, வா" என்று பையனை அழைத்தாள் தாயார்.

போலீஸ்காரன் பெருமூச்சுவிட்டான்: "கூப்பிடாதீங்கம்மா... இருக்கட்டும். தோ, அங்கே ஓவர் பிரிட்ஜீகிட்ட, லாரியிலே சிக்கி ஒரு பையன் போயிட்டாம்மா... அப்படியே மண்டெ செதறிப்போச்சம்மா... ஸ்" என்று சொல்ல முடியாமல், சற்று நேரத்துக்கு முன் தன் பாபம் செய்த விழிகளால் கண்டதை எண்ணும்போதே போலீஸ்காரனின் உடம்பு சிலிர்த்தது.

இலங்கைச் செய்திகள்

.
வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகளில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு Monday, 22 August 2011

வடக்கு,கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் திட்டமிட்டு இடம்பெற்று வரும் பெரும்பான்மையினத்தவர்களின் குடியேற்றங்கள் தொடர்பில் தமிழ்த் தரப்பினரால் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டு வந்த போதிலும் அது தொடர்பிலான நடவடிக்கைகள் எதுவும் இன்று வரை எடுக்கப்படாததனால் தமிழ் மக்களின் பாரம்பரிய இடங்கள் மட்டுமன்றி வாழ்வாதாரத் தொழிலான கடற்றொழிலும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.யுத்தம் முடிவடைந்து பாதுகாப்புக் கெடுபிடிகளும் ஏதோ ஒப்பீட்டளவில் தளர்த்தப்பட்டிருப்பதாக கருதப்படக் கூடிய நிலையில் இனிமேலாவது தமது வாழ்க்கையில் மேம்பாடு ஏற்படக் கூடியதாக இருக்குமென்ற நம்பிக்கையிலிருந்த வடக்கு,கிழக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் இன்றுமேற்கொள்ளப்பட்டு வரும் பெரும்பான்மையின குடியேற்றங்களினால் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.

சென்னைக்கு இன்று வயது 372 - டிஎன்எஸ்


.

வணக்கம் சென்னை. இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க நகரமான சென்னைக்கு இன்று (ஆக.22) வயது 372 ஆகும்.
இந்தியாவின் நான்காவது பெரிய நகரான டெட்ராய்ட் சென்னை, வந்தாரை வாழவைக்கும் சென்னை, எத்தனை லட்சம் பேருக்கு வாழ்க்கை கொடுத்த, கொடுக்கப்போகும் சென்னை.
1639ஆம் ஆண்டு இதே நாளில் சென்னப்ப நாயக்கரிடமிருந்து இந்த இடத்தை கிழக்கிந்திய கம்பனியின் வணிகர்கள் பிரான்ஸிஸ் டே மற்றும் ஆன்ட்ரூ கோகன் வணிகம் செய்வதற்காக வாங்கியதாகவும், கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் 'சென்னப்பட்டினம்' என்று அழைக்கப்பட்டது என்பதும், சென்னப்பட்டினத்துக்கு தெற்கே அமைந்திருந்த ஊர் மதராஸ் என்று அழைக்கப்பட்டது என்பதும் வரலாறு.

மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் -பகுதி 6


.
                                                                                                         பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா                                              
பிரிவினால் வாடல்


கணவன்-மனைவி, காதலன்-காதலி என்பவர்கள் ஏதேதோ காரணங்களால் சில வேளைகளில் பிரிந்திருக்கவேண்டி ஏற்பட்டுவிடுகிறது. அந்த நேரங்களில் தங்கள் பிரிவுத் துயரங்களை அவர்கள் வெளியிட்டபோது எழுந்த பாடல்கள் மிகவும் அருமையானவை. கவிநயம் மிக்கவை. இலக்கியச் செறிவு நிறைந்தவை. அத்தகைய பாடல்கள் சிலவற்றை இப்பகுதியில் காணலாம்.


உலகச் செய்திகள்

முடிவுக்கு வருகிறது கடாபியின் சகாப்தம் திரிபோலியும் கிளர்ச்சியாளர்கள் வசம் கடாபியின் மகன்மார் கைது
Tuesday, 23 August 2011

Gadafiலிபியத் தலைவர் முஅம்மர் கடாபியின் 42 வருட அதிகாரம் முடிவுக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தலைநகர் திரிபோலிக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள் அதன் பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.பத்மஸ்ரீ ஹரிஹரன் சாரங்கன் ஸ்ரீரங்கநாதன் கலந்து சிறப்பிக்கும் இன்னிசை நிகழ்ச்சி

.

அகதிகளை பொறுப்பேற்பதற்கு நியூஸிலாந்து இணக்கம்


25/8/2011

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஒரு தொகுதி அகதிகளை பொறுப்பேற்க நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ இணக்கம் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போது இந்தோனேஷியாவில் உள்ள 88 இலங்கை அகதிகளை பொறுப்பேற்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில், அவர்கள் நியூஸிலாந்தை நோக்கி பயணித்தார்கள் என்பதற்கான எந்த ஆதாரங்களுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருள் கவ்வ இரத்தமாய்க் கிடந்த ஒரு காலைப் பொழுது -கவிதை

.                                                                          ந.சத்தியபாலன் 

ஒளியின் பாதை மூடிக் கொள்கிறது
பீடம் விட்டெழுந்து தடித்த இருளிடை
கொலைக் கருவிகளுடன் அலைகின்றன
தெய்வங்கள்
மெல்லப் பரவுகிறது இரத்த வாடை
ஊர் முழுதும்
திறந்து கிடந்த கதவை அவசரமாய்
அறைந்து மூடிப்போகிறது காற்று


தமிழ் சினிமா

ரௌத்திரம்

பிறருக்கு துன்பமெனில் 'ரௌத்திரம்' பழகுவதில் தவறில்லை என்ற மையக்கருத்தை கருவாக வைத்து உருவான கதை.


சென்னை சட்டக்கல்லூரி மாணவி ஸ்ரேயா. ஸ்ரேயாவின் தோழியிடம் சில்மிஷம் செய்துவிடுகிறான் சட்டக்கல்லூரியில் படிக்கும் ரௌடி ஒருவன். கல்லூரி முதல்வரிடமும், பொலிஸ் அஸிஸ்டண்ட் கமிஷ்னரான தன் தந்தையிடமும் புகார் தெரிவிக்கிறார் ஸ்ரேயா.

அவன் பிரபல ரௌடி 'கௌரி'க்கு வேண்டப்பட்டவன் என்பதால் நடவடிக்கையெடுக்கத் தயங்குகிறார்கள். கலங்கிப் போகும் இருவரும் சாலைக்கு வருகிறார்கள். சில்மிஷம் செய்தவன் சாலையில் அடிபட்டு வந்துவிழுகிறான்.... ஜீவா நடுரோட்டில் அவன் கூட்டத்தைச் சேர்ந்தவர்களைப் புரட்டியெடுக்கிறார். காரணம்.. ஜீவா பயணித்த ஷேர் ஆட்டோ விபத்திற்குள்ளாவது சட்டக்கல்லூரி ரௌடி மற்றும் அவனது கூட்டத்தினரால். ஜீவாவின் கோபத்தைப் பார்த்து காதல் கொள்கிறார் ஸ்ரேயா.

ஜீவாவைப் பழிவாங்க நேரம் பார்த்திருக்கும் ரௌடிகள், ஜெயிலில் இருக்கும் கௌரி வெளியே வரட்டும் என்று காத்திருக்கிறார்கள். பால்ய காலத்தில் தாத்தா பிரகாஷ்ராஜிடம் பெற்ற பயிற்சியால் சாலையில் நடக்கும் குற்றங்களைத் 'தட்டி'க்கேட்கும் ஜீவா, ஒரு கட்டத்தில் ஜெயிலில் இருந்து வெளியேறி வரும் பிரபல ரௌடி கௌரியைக் காயப்படுத்தி விடுகிறார். கௌரி குழுவினரின் கொலைமுயற்சி, ஜீவாவின் குடும்பம், காதல் அனைத்தும் ஜீவாவின் கோபத்திற்கு முன்பு என்ன ஆனது என்பதை விறுவிறுப்பாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

படத்தில் உண்மையான ஹீரோ யாரென்றால் அது அனல் அரசுதான். அருமையாய் கோரியோகிராப் செய்யப்பட்ட சண்டைக்காட்சிகள். நிஜமாகவே இன்னவோட்டிவ் அண்ட் இண்ட்ரஸ்டிங். சண்டைக் காட்சிகளை எக்ஸிக்யூட் செய்த விதத்தில் அசத்தல். அதற்கு பிறகுதான் எல்லோரும். குறையாய் சொல்லப் போனால் சில இடங்களில் அந்த ஸ்லோமோஷன் ஆக்ஷன் சீன்கள் சுவாரஸ்யத்தை குறைக்கிறது. ஆரம்பக் காட்சியில் ஐந்து நிமிடமே வரும் பிரகாஷ்ராஜ் எபிசோட் அட்டகாசம். அதற்கு காரணம் பிரகாஷ்ராஜின் பாடி லேங்குவேஜும், அதை படமாக்கிய விதமும் நம்ப வைக்கிறது.

ஜீவாவிற்கு 'சத்யா' போல ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை வேண்டுமானால் நிறைவேறியிருக்கலாம். ஆரம்ப காட்சிகளுக்கு அப்புறம் ஒரு கீறல்கூட படாமல் தொடர்ந்து எல்லாரையும் பந்தாடிக் கொண்டேயிருப்பதை நம்ப முடியவில்லை. அதற்கான பாடி லேங்குவேஜும், நடிப்பும் குறையே. ஆக்ஷன் ஹீரோ வரிசையில் சேர்க்க வேண்டிய தகுதிகளை இப்படத்தில் காட்டியிருக்கிறார். வழக்கமாய் கலகலவென பேசியே பார்த்த ஜீவா இதில் கொஞ்சம் பேசாத ஜீவாவாக போரடிக்கவே செய்கிறார். தொடர்ந்து இவரை கொல்ல முயல்வதே ஒரு கதையாய் போனவுடன் ஆரம்பித்த சுறுசுறுப்பு சுர்ரென இறங்கிவிடுகிறது.

ஸ்ரேயாவுக்கு கொடுத்த காசுக்கு உருப்படியான கேரக்டர். வழக்கமாய் வரும் லூசுப் பெண் ஹீரோயின் கேரக்டர் போலில்லாம கொஞ்சம் யோசிக்கும்படியான கேரக்டரை கொடுத்த இயக்குநருக்கு ஒரு பெரிய கும்பிடே போடலாம். ஸ்ரேயா, ஜீவாவின் காதலியாக வருகிறார். "நாங்க தனியா இருக்கும் போதுகூட அவன் என்னை கிஸ் பண்ணினது இல்ல, காதலர் தினத்தன்னிக்கு பார்வர்ட் மெஸேஜ்கூட அனுப்பினதில்ல. இதே மாதிரிதான் என்னை தவிர அவன் வேற எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்க மாட்டான். அதான் என் சிவா" என ஜீவாவிற்கு தன் தோழியிடம் நற்சான்றிதழ் தரும் காட்சியில் ஸ்ரேயா அழகோ அழகு. தோழிக்காக தன் தந்தையிடம் கெஞ்சுவதும், கோபத்தால் சீறுவதும், நன்றாகவே நடித்திருக்கிறார். ஜீவா-ஸ்ரேயா காதல் காட்சிகள் சுவாரஸ்யம்.

கிட்டுவாக வரும் அந்த மகாகுண்டு கணேஷ் ஆச்சார்யா, கவுன்சிலர், கௌரியின் அல்லக்கை, இன்னொரு லோக்கல் அல்லக்கை ரவுடியாக வரும் இயக்குநர் கோகுல், பக்கா லோக்கல் பாஷை பேசும் எம்.எல்.ஏ என்று ஏகப்பட்ட கேரக்டர்கள். எல்லா கேரக்டர்களும் வரும் போது பெரிய பில்டப்போடு தான் வருகிறார்கள் முடியும் போது பொசுக், பொசுக்கென வீழ்ந்துவிடுகிறார்கள்.

பக்கத்துக் குப்பத்தின் தாதாவாக பாலிவுட் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா. ஒரு பாடலில் மாறுபட்ட நடனம் மூலம் அசத்தியிருக்கிறார். 'இன்னா பெரியா பயிப்பாநீ...' என்று பொல்லாதவனில் மிரட்டும் சுருட்டைமுடி நடிகர்தான் பிரதான ரௌடி 'கௌரி'.

ஜீவாவின் பெற்றோர்களாக வரும் ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்களது பங்கை சிறப்பாகச் செய்திருக்கின்றனர். ஜீவாவிற்கும் அவரது தந்தையாக வரும் ஜெயப்பிரகாஷிற்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் நம் வீட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை காட்டுகின்றன. ஸ்ரீநாத், சத்யன் ஆகிய இருவரும் சில இடங்களில் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். எழுதி இயக்கியிருக்கும் கோகுல், முதல் படத்திற்கு நல்ல அவுட்புட்தான் என்றாலும் திரைக்கதையில் கோட்டைவிட்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும். முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாவது பாதியில் அப்படியே தொங்கிப் போய் சரிடா இப்ப அவனை கொல்லப் போறீங்களா? இல்லியான்னு புலம்ப வைத்துவிடுகிற அளவுக்கு டிராகிங்காக போனதுதான் பெரிய மைனஸ். குடும்ப சம்மந்தப்பட்ட காட்சிகளில் கிடைக்கும் சுவாரஸ்யம் பின் பாதியில் வரும் ஆக்ஷன் காட்சிகளில் இல்லாம போய்விடுகிறது. கௌரி.. கௌரி என்று ஆளாளுக்கு சொல்லும் போது நடு முதுகில் சில்லென ஏற வேண்டும் என்கிற அளவுக்கு முதல் பாதியில் பில்டப் செய்தவர்கள். அதற்கான கரெக்டான காஸ்டிங்கை செய்திருந்தால் இன்னும் ஏறியிருக்கும் சூடு.

இயக்குநரைப் போன்றே ஒளிப்பதிவாளர் என்.ஷண்முக சுந்திரத்திற்கும் அறிமுகப் படம் இது. பிரகாஷ்ராஜின் சண்டை, வில்லன் கௌரியை அறிமுகப்படுத்தும் காட்சி, இரவில் நடக்கும் சண்டைக் காட்சிகள், ஸ்ரேயாவும், ஜீவாவும் பாலத்தில் நடந்து வரும் காட்சி என்று பல காட்சிகளில் இவரது ஒளிப்பதிவு நம்மை மிரள வைக்கிறது. ஜீவா, ஸ்ரேயா காதல் காட்சிகளை கவிதை போல படம்பிடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் இவரது கேமராவும் பம்பரமாய் சுழன்றிருக்கிறது. கண்டிப்பாக இவர் முன்னணி ஒளிப்பதிவாளர்கள் வரிசையில் இடம்பிடிப்பார் எனலாம். இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கிக்கும் இது முதல் படம். படத்திற்கு பாடல்கள் பலம் சேர்க்கவில்லை. இன்னும் அதில் கவனம் செலுத்தியிருக்கலாம். 'மாலை மங்கும் நேரம்' பாடல் மட்டும் காதுகளில் ரீங்காரமிடுகிறது. மதன் குணதேவாவின் படத்தொகுப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. குட்டி குட்டியாய் நிறைய வேலைகளை இயக்குநர் செய்திருக்கிறார். கௌரியின் ஆட்கள், அந்த கவுன்சிலர், எம்.எல்.ஏ, எதிர் கோஷ்டி கிட்டு, அவனது ஆட்கள், இவர்கள் பேசிக் கொள்ளும் வசனங்கள் எல்லாம் படு நேச்சுரல். படம் ஆரம்பித்ததிலிருந்து ஏகப்பட்ட வில்லன்களை காட்டியதில் எவனோடு தான் ஜீவாவுக்கு பிரச்சினை என்று மழுங்கி போகும் அளவிற்கு ஒரே வில்லன் கோஷ்டியாய் இருப்பது ஒரு மைனஸே.
நன்றி விடுப்பு

கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை

வயது கோளாரால் ஏற்படும் காதல், அந்த காதலினால் உண்டாகிறது கலவரம்.

இந்த கலவரத்திற்கு இறையாகும் இரண்டு உயிர்கள் என மனிதர்களால் பிரிக்கப்படும் காதலர்களை, காலம் எப்படி ஒன்று சேர்க்கிறது என்பதுதான் கதை.

பள்ளிப்பருவக்காதலை 'வைகாசி பொறந்தாச்சு', 'அழகி, 'ஆட்டோகிராப்', மாதிரி நேர்த்தியான திரைக்கதையில் சொன்னவர்களும் உண்டு. லாஜிக் கோளாறுகளால் சொதப்பியவர்களும் உண்டு. முதல் பாதியில் எதார்த்தமாய் காதல் கதை சொல்லி விட்டு பின் பாதியில் குழப்பமான மன நிலையில் எழுதப்பட்ட திரைக்கதையால் வெற்றியை மயிரிழையில் தவற விட்டுட்டார் அறிமுக இயக்குநர் ஏகாதசி.

பள்ளி காலத்தில் காதல் கொள்ளும் தேஜ்-கீத்திகா ஜோடியின் காதல் ஊர் பிரச்சினையால் உடைகிறது. வெவ்வேறு கிராமங்களைச் சார்ந்த இவர்களது காதல், இரண்டு கிராமத்திற்கும் இடையே ஏற்படும் பிரச்சினையால் பாதிக்கப்படுகிறது.

யாருக்கு வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணி கொடுப்பேன், அந்த ஊர்க்காரனுக்கு மட்டும் கட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கீத்திகாவின் தாய் மாமன் மல்லுக்கட்ட, அவருக்கு போட்டியாக கல்யாணம் என்று ஒன்று நடந்தால் அது அவனோடுதான் என்று தனது மாமாவை எதிர்க்கிறார் கீத்திகா. இப்படி காதலுக்காக போராடும் கீத்திகா, பஞ்சாயத்தில் தான் தேஜ்ஜை காதலிக்கவில்லை என்று திடீர் பல்டியடிக்க, மனமுடைந்த ஹீரோ சென்னைக்கு புறப்பட, சென்னையில் வசிக்கும் ஏகாதசியை திருமணம் செய்துகொண்டு சென்னையில் வாழ்கிறார் கீத்திகா.

காதலில் பிரிந்த இவர்கள் சென்னையில் பக்கத்து பக்கத்து குடியிருப்பில் வசிக்க நேரிட்டாலும், தங்களை ஒருவருக்கொருவர் தெரியாதவர்கள் போல வாழ்ந்து வருகிறார்கள். இதற்கிடையில் கீத்திகாவின் இளம் வயது காதலன் தேஜ் என்பது ஏகாதசிக்கு தெரிய வர கொடுமைகளுக்கு ஆளாகும் கீத்திகா இறுதியில் என்ன ஆனார் என்பதுதான் மீதிக்கதை. எட்டு வருடங்களுக்கு முன்பு தங்கர்பச்சான் இயக்கிய 'அழகி' படத்தின் சாயலை ஒத்திருக்கிறது படம்.

ஆனால் நகரமயமாதலில் முற்றிலும் சிக்கிவிடாத இடைநிலைக் கிராமங்களின் மனோநிலையை, நகல் எடுத்துக்காட்டிய வகையில் வேறுபட்டு நிற்கிறது படம். தொலைக்காட்சிப் பெட்டிகள் கொண்டுவரும் நாகரிக வாழ்க்கையைப் பற்றி எந்தக் கவலை இல்லாத ஒரு பழைய தலைமுறை... படித்து விட்டு மாநகரத்துக்கு புலம்பெயர்ந்து வாழும் இளையதலைமுறை... இந்த இரண்டு துருவங்களுக்கு மத்தியில் பயணப்பட்டிருக்கிறது கதை. நாயகன் தேஜுக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லையென்றாலும், தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

கதாநாயகி கீத்திகாவுக்கு அழகு கம்மியென்றாலும் நடிப்பு ஜாஸ்தி. ஒரு அரக்கனை கட்டிக்கொண்டு அவ்வளவு அமைதியாக இருக்கும் அவர், இறுதிக்காட்சியில் சாமி வந்ததை போல சிலிர்த்துக் கொண்டு கிளம்புகையில் நமக்கே அச்சம் வருகிறது. முறை மாமனாக நடித்திருக்கும் அந்த சிங்கப்பூர் துரைராஜ், பார்க்கும்போதே பதைபதைக்க வைக்கிறார். அவ்வளவு பெரிய பள்ளிக்கூடத்துக்கு ஒரே ஒரு வாத்தியார். அதுவும் மனோபாலா. சொல்லவே வேண்டாம்... சுத்தமாக எடுபடவேயில்லை. குத்தாட்டம் போட்டிருக்கிறார் சுஜிபாலா.

படத்தின் எதிர்மறையான அழகியலோடு வந்து நிற்கிறது ஏகாதசியின் கதாபாத்திரம். (இயக்குநரே நடிச்சு சும்மா அதகளம்பண்றாருங்கோ) சென்னை மாநகராட்சியின் கட்டணக் கழிவறை ஒன்றை குத்தகைக்கு எடுத்திருப்பவன். குறைவான கட்டணம் செலுத்தி கழிவறைக்குள் போய்வந்தவன் பொய் சொல்கிறான் என்பதை, அவன் கையை முகர்ந்து பார்த்துக் கண்டுபிடிக்கத் தயங்காதவன். யதாத்தத்திற்கு மிக அருகில் நிற்கும் ஒரு சாதாரணனின் இந்தக் கதாபாத்திரம் தமிழ்சினிமாவுக்கு புதுசு! தூக்கிக் கட்டிய வேட்டி, கழுத்தில் துண்டு என்று இவரின் கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தியிருக்கிறார். மொத்தத்தில் ஒரு ஹீரோவாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார் ஏகாதசி!

படத்தில் மிகச்சிறந்த பகுதி என்றால், கிராமத்தில் இளம்பெண்களின் மனநிலை பாதிக்கப்பட்டால் அதற்கான உண்மையான காரணத்தை உணர மறந்து, பேய் பிடித்திருப்பதாக நினைத்து, பூசாரியைக் கொண்டு உடுக்கடிப்பதும், மந்தரிப்பதும் எத்தனை முட்டாள்தனமான மூட நம்பிக்கை என்பதை, இறுதிக்காட்சியில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள்.

படத்தின் அனைத்து பாடல்களையும் இயக்குநரே எழுதியிருக்கிறார். 'உசுர திருடிப் போறா...' பாடல் அழகான தாலாட்டு. பின்னணி இசையிலும், பாடல்கள் இசையிலும் கிராமத்தையும், கிராமியத்தையும் நம் கண்முன் நிறுத்தும் பரணியும், 'மைனா' புகழ் ஒளிப்பதிவாளர் சுகுமாரும் படத்தின் பலம்!

சின்ன விஷயங்களை ஊதி பெரிதாக்கி, அரிவாளால் வெட்டிக் கொள்ளும் கதைக்களத்தை பாரதிராஜா காலத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. ஆனால், வட்டி கொடுக்கல் வாங்கல் செய்யும் ஒருவனின் சின்னவிஷயம் எப்படி ஊர்ப்பகையாக உருவெடுக்கிறது என்பதை, நுணுக்கமாகச் சித்தரித்திருக்கும் அறிமுக இயக்குநர் ஏகாதசி, கொஞ்சம் முயன்றால் இன்னும் நல்ல படங்களை தரமுடியும்.

நன்றி விடுப்பு

சகாக்கள்

பழனிக்கு பாதயாத்திரை போகும் குழுவினரில் இருவருக்குள் ஏற்படும் காதல் அவர்களின் சகாக்களுக்கு இடையிலான அன்பு, பிரிவு பிரச்சினைகள் போன்றவற்றை விவரிப்பதுதான் இப்படத்தின் கதை.

படத்தின் கதாநாயகனும் கதாநாயகியும் இடைவேளையில்தான் சந்தித்துக் கொள்கிறார்கள் ஆனால் அதுவரை காதலித்துக் கொண்டும் இருக்கிறார்கள். வித்தியாசமான கதை சொல்லும் யுக்தியினைக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் முத்துக்குமார சுவாமி.

காதலித்தால் இவளைத்தான் காதலிக்கனும், கைபிடித்தால் இவளைத்தான் கரம்பிடிக்கணுமென்று, பஸ் ஸ்டாண்டில் ஏதேச்சையாக பார்த்த பேரழகியை தன் காதலியாக கற்பனை செய்து கொண்டு, தன் சகாக்களிடம் இஷ்டத்திற்கு ரீல் சுற்றும் ஹீரோ, ஒரு நாள் ஹீரோயினிடம் சிக்குகிறார்! அப்புறம்? அப்புறமென்ன...? அவர் சுற்றிய ரீல்கள் அத்தனைக்கும் அவர் தரும் விளக்கமும், கல்யாணத்திற்கு பின்பும் காதல் செய்தல் வேண்டும் எனும் சொல்லாக்கமும் நாயகிக்கும், நாயகன் மீது காதலை ஏற்புடுத்துகிறது. வெவ்வேறு சாதியை மட்டுமல்ல, வசதியையும் சார்ந்த இவர்களது காதல் சேர்ந்ததா...? சீரழிந்ததா...? என்பதுதான் மீதிக்கதை!

'குளிர்-100' படத்தில் நாயகராக ஏற்கனவே அறிமுகமான சஞ்சீவ்தான் இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காதல் என்றாலே எங்கேயுமே பிரச்சினைதான். காதல் எப்ப வரும்.. எப்படி வரும்.. யார் மீது வரும்.. என்பது பிரம்ம ரகசியம்தான். சஞ்சீவுக்கும் அப்படித்தான் அத்வைதாவைப் பார்த்த உடனே வருகிறது காதல். ஒரு கால்பந்தாட்ட வீரராக வந்து ரயில்வேயில் வேலை வாங்க வேண்டும் என்கிற முயற்சியில் இருக்கும் சஞ்சீவ் மைதானங்களில் கோல் போடுகிறாரோ இல்லையோ யதார்த்த நடிப்பில் கோல் போட்டு விடுகிறார். இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து நடித்தால் 'காதலிக்க நேரமில்லை' ரவிச்சந்திரன் போன்று புகழ் பெறலாம்.

'அழகர்சாமியின் குதிரை' படத்தில் நடித்த அத்வைதாதான் இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். முந்தைய படத்தைவிட அத்வைதா இதில் சும்மா புகுந்து விளையாடியிருக்கிறார். கிராமத்துப் பெண்களுக்கே இருக்கும் தைரியம், துடுக்கத்தனங்களை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். தான் திட்டி அனுப்பியவன் மீதே காதல் வயப்படுவதும் அதனை அப்பாவிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் இடங்களில் நம்மையும் அவரது சோகம் தொற்றிக் கொள்கிறது.

தாநாயகியின் அப்பாவாக ஜெயப்பிரகாஷ் நடித்திருக்கிறார். வெண்ணிற ஆடை மூர்த்தி அடிக்கும் லூட்டி, தியேட்டரில் விசில் சப்தத்தை கிளப்புகிறது. சஞ்சீவின் ஒரு சகாவாக வரும் சங்கர்(மெய்யர்) ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பாக்யராஜ், ராஜேந்தர், சிம்பு இன்னும் ஒரு படி மேலே போய் எம்.ஜி.ஆர். சிவாஜி என்று அனைவரையும் வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கிராமத்து இளைஞன். செம டைமிங், ஆட்டம், காமெடி என்று தூள் பறத்துகிறார்.

சஞ்சீவின் சகாக்கள் சங்கரும், சிவசங்கரும்(லெஃப்ட் பாலு) ஜோடி சேர்ந்து சும்மா காமெடித் திருவிழா நடத்தியிருக்கிறார்கள். எதிர்காலத்தில் இருவரும் இணைந்து செயல்பட்டால் தமிழ்சினிமாவின் எவர்கிரீன் வெற்றிக் கூட்டணி கவுண்டமணி-செந்தில் போன்று சிகரங்களைத் தொடுவார்கள்.

சஞ்சீவ், அத்வைதா மற்றும் சஞ்சீவின் நண்பர்கள் பழனிக்குப் பாதையாத்திரை செல்லும் காட்சிகள் அந்த பாதயாத்திரையில் நடக்கும் ஆட்டம், பாட்டம், பரவசம் மற்றும் சுவராஸ்யமான சம்பவங்கள் அழகு. சகாக்கள் பார்த்து விட்டு தமிழக இளைஞர் கூட்டம் இன்னும் அதிக அளவில் பழனிக்குப் பாதையாத்திரை புறப்படலாம்.

தமிழகத்தில் இல்லாத கோவில்களா அல்லது கடவுள்களா..? இங்கிருந்து வேறு மாநிலம் செல்லும் போது அடிப்படை வசதிகள்கூட நம்ம ஆளுங்களுக்குச் செய்து கொடுக்க மறுக்கிறார்கள். அப்படி இருக்கும் போது நாம் ஏன் அங்கெல்லாம் செல்ல வேண்டும். பழனி ஒன்றே போதும். பழனியை ஒரு சர்வதேச ஆன்மிகச் சுற்றுலாத்தலமாக நாம், நம் இளைஞர்கள் நினைத்தால் மாற்றலாம். சகாக்களில் காட்டியிருக்கும் பாதயாத்திரைக் காட்சிகள் நிச்சயம் அவர்களை அவ்வாறு செய்யத்தூண்டும்.

முற்பகுதியில் கதையைப் புதிதாகச் சொன்ன இயக்குநர் பிற்பகுதியில் அரதப்பழசான காட்சிகளுடன் கதையை நகர்த்தியிருக்கிறார். நீபா கதாபாத்திரம், அத்வைதா, சஞ்சீவ் மீது காதல் வயப்பட ஒரு காரணமாக இருக்கத் திணிக்கப்பட்டது போன்ற உணர்வினையே ஏற்படுத்துகிறது.

அதைப்போலவே அத்வைதா, தந்தையிடம் தன் காதலைச் சொல்ல வருவதும் அந்த நேரத்தில் அவர் அதனை ஏற்றுக் கொள்ளக்கூடியவர் அல்ல என்பதனை வேறு ஒரு சம்பவம் மூலம் புரிய வைப்பதும், அதன் பிறகு சொல்லத் தயங்கி சொல்லாமல் இருந்து விடுவதும், ரொம்ப பழசு இயக்குநர் அவர்களே. இடைவேளை வரை யூகிக்க முடியாத சுவராஸ்யமான காட்சி அமைப்புகள் அதன்பிறகு..?

ஸ்ரீ.எம். அழகப்பனின் ஒளிப்பதிவும், ஏ.எல்.ரமேஷின் படத்தொகுப்பும் படத்திற்கு உறுதுணையாக இருக்கின்றன. சாதாரணமாக நமக்குப் பொரையேறுச்சுன்னா யாரோ நம்மை நினைக்கிறார்கள் என்று சொல்வோம் அந்த யதார்த்த வரிகளையேக் கொண்டு யுகபாரதி எழுதிய 'நீ என்ன நெனைக்கிறியா..' பாடல் அருமை.. திரும்பத் திரும்ப கேட்கத்தூண்டும் அளவிற்கு இசையமைத்திருக்கிறார் தயா ரத்னம். மற்ற பாடல்கள் கேட்கலாம் ரகம்.

நண்பர்கள் கதையென்றாலும் தெருமுனை குட்டிச் சுவரில் அமர்ந்து தம் அடித்து பொழுதுபோக்குவது, சைட் அடிப்பது போன்ற காட்சிகள் இல்லாமல் நட்பையும், காதலையும் யதார்த்தமாக சொல்லியிருக்கும் அறிமுக இயக்குநர் முத்துக்குமார சுவாமியை வாழ்த்தி வரவேற்போம்.

நன்றி விடுப்பு