மரண அறிவித்தல்



திரு. இ. சேனாதிராஜா (1938 - 2016)

யாழ்ப்பாணம், புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், இலங்கை தேசிய வீடமைப்புத் திணைக்களத்தில் முகாமையாளராக இருந்தவரும், பப்புவா நியு கினியில் வாழ்ந்தவரும், சிட்னி Enfieldஐ  வதிவிடமாகக் கொண்டவருமான திரு. இராசையா சேனாதிராஜா அவர்கள் 02-09-2016 வெள்ளிக்கிழமை அதிகாலை தனது 78வது வயதில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற இராசையா – தங்கம்மாள் தம்பதிகளின் அன்புப் புத்திரனும், காலஞ்சென்ற ஜெயலக்சுமியின் அன்புக்கணவரும், South Strathfield  ஐச் சேர்ந்த மோகன், மேகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும், விஜிதா, ராஜ்மோகன் ஆகியோரின் மாமனாரும், தங்கரத்தினம் (லண்டன்), கனகாம்பாள் (கிளிநொச்சி), காலஞ்சென்ற இராஜேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற நாராயணபிள்ளை, Dr. தர்மலிங்கம், லிலிமலர், நவரஞ்சிதமலர் (வவுனியா), காலஞ்சென்ற இரட்ணசிங்கம், வீரசிங்கம் (யேர்மனி), குலவீரசிங்கம் (லண்டன்), ராஜி தில்லைநடேசனின் (Strathfield) மைத்துனரும், Dr பாஸ்கரனின் (Newcastle) மாமனாரும், Dr. தர்ஷா ஜேம்ஸ், விக்கிஷா விநாயக், மதுரா மயூரதன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், லக்சன், விஜே, கிரிஷா, கிஷோரா, ஹரிணி ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 06-09-16 செவ்வாய்க்கிழமை மாலை 7 மணி முதல் 9 மணி வரை Liberty Funeral Parlour, 101 South Street, Granville இல் வைக்கப்பட்டு, மறுநாள் புதன்கிழமை (07-09-16) காலை 10.15மணிக்கு Rookwood Crematorium East Chapel, Lidcombe  இல் இறுதிக்கிரிகைள் நடைபெற்று பிற்பகல் 1.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். மேலதிக விபரங்களுக்கு மோகன் (0470 358613), மேகலா (9703 5082) ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும்.

நட்பு - மணிமுத்து

.


இரவு

முழுவதும் யோசித்தும்

ஒன்றும் எழுதவில்லை!

பிறகுதான்

தெரிந்தது!

நமது நட்பை

ஒருவரியில் எழுதமுடியாதென்று!


உன்னுடைய இடத்தை மட்டும்

பூர்த்தி செய்ய

இதுவரை

யாரும் இல்லை தோழி.

நம் கல்லூரியின் கடைசிநாள்

சிட்னி முருகன் இராப்போசனம் 28-08-2016

.
 வருடம் தோறும்  சிட்னி முருகன் ஆலயம் நடாத்தும் இந்த நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள்  BOWMAN Hall, BLACKTOWNல்   பங்குபற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வு மூலம் சேகரிக்கப்படும் நிதியானது வருடா வருடம் ஈழத்தில் உள்ள எமது  உறவுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் சிட்னி முருகன் ஆலயத்தால்    அனுப்பி வைக்கப்படுகின்றது     என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் இந்த நிகழ்வின்  படத் தொகுப்புகளை கீழே பார்க்கலாம்


திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
பவளவிழா நாயகன் பத்மநாப ஐயரும்  கலை - இலக்கிய பதிப்புலகமும்
அனைத்துலக  தமிழ்   இலக்கியப்பாலமாகத் திகழ்ந்தவரின்  வாழ்வும்   பணிகளும்
 
                                                                         

" ராஜம் கிருஷ்ணனின்  அலைவாய்க்கரையில்  நாவலைப்படித்த பின்னர், முருகபூபதியின் சுமையின் பங்காளிகள்  சிறுகதைத்தொகுதி படிக்கக்கிடைத்தது.   இலங்கையில்  ஒரு  பிரதேசத்தில்  வாழும் கடற்றொழில்  புரியும்  மீனவ  மக்களைப்பற்றிய கதைகள்.  இந்த நூல் பற்றி  'தாமரை' யில்  எழுதவிருக்கின்றேன்." -  என்று எழுதப்பட்ட  ஒரு வாசகர்  கடிதம் 1975 ஆம் ஆண்டின்  இறுதிப்பகுதியில்  மல்லிகையில் வெளியானது.
அதனை  எழுதியிருந்தவர், தமிழக முற்போக்கு இலக்கிய விமர்சகர் பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள்.

இந்தியாவின் கானக் குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு சிட்னியில் நூற்றாண்டு விழா (1916 -2004) - சந்திரிகா சுப்ரமண்யன்

.

அண்மையில் இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டு விழா சிட்னியில் நாட்டியாஞ்சலி மற்றும் தமிழ் கலை பண்பாட்டு கழகம் ஆகிய அமைப்புக்களின் கூட்டு முயற்சியால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
நிகழ்வின் முதல் பாதியில் எம் எஸ்சின் பாடல்களை சங்கீதா ஐயர் பாடி மகிழ்வித்தார். பின் பாதியில் எம் எஸ்சின் பாடல்களுக்கு ராதிகா சுரஜித் வடிமைத்து காயத்ரி கிருஷ்ண மூர்த்தியின் நாட்டியாஞ்சலி மாணவர்கள் வழங்கிய நடனமும் இடையில் வழக்கறிஞர் சந்திரிகா சுப்ரமண்யன் வழங்கிய எம் எஸ். பற்றிய காட்சி உரையும் இடம் பெற்றன.

எம்.எஸ்.சுப்புலட்சுமி -   மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி . இவர் 16.09.1916ல் மதுரையில் சண்முகவடிவு அம்மாள் என்பவருக்குப் பிறந்தார். இவர் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

கவி விதை- 16 - காலங்கள் -- விழி மைந்தன் --

.

வெள்ளைக் கல்லில் கட்டிய அந்த அழகிய வீட்டின் முன்னால்  ஓங்கி வளர்ந்த மரம் ஒன்று நின்றது. மரத்தின் காலடியில் வளர்ந்து வந்தது சின்னஞ்சிறு  பூச்செடி.

பூமியின் மத்திய கோட்டை  விட்டு எட்டியே  நிற்கும் தேசம் அது. நான்கு பருவங்கள் மாறி மாறி வந்தன.


குளிர்காலத்தில் மரம் இலைகளை உதிர்த்து விட்டுத் தூங்கப் போய்விடும். தன்னுள் தானே ஒடுங்கி, பனிக்காற்றில் நடுங்கி நிற்கும் சின்னப் பூச்செடி. இவற்றைச் சுற்றி நிற்கும் மற்றத்  தாவரங்களும் ஆடையின்றி, வாடையில் மெலிந்து, நீண்ட இரவுகளில் மட்டுமின்றிப் பகலிலும் துயில்வன. வடக்கே இருக்கும் வானத்தின் வெளிகளில் விளையாடப்  போயிருக்கும் சூரியன் திரும்பி வருவது பற்றிக் கனவுகள் காணும்.

உலகச் செய்திகள்


வந்துவிட்டது பேராபத்து .!

இடி மின்னல் தாக்கி 323 மான்கள் பலி

அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கத்தை அதிகரித்து வருவது ரஷ்யாவுக்கு அதிருப்தியை உண்டாக்கும்; சீனா எச்சரிக்கை

இந்தோனேசியாவில் உலகிலேயே வயதான மனிதர் 145 வயது என ஆவணங்களில் தகவல்

ரௌத்திரம் பழகுவேன்…..

.

உறவினர்களுடன் ஒருமுறை உணவகத்திற்குச் செல்ல நேர்ந்தது. சர்வர் நிரம்பப் பணிவுடன் வந்து எங்களுக்கு வேண்டியதைக் கேட்டுச் சென்றார். சிறிது தாமதமாவதை உணர்ந்து அந்த சர்வரை அளவுக்கு அதிகமாகக் கடிந்து கொண்டார் உறவினர்களுள் ஒருவர். அதிகார வர்க்கத்தோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முனையும் சில பல அடிவருடிகளின் பிரதிநிதியாக இவரைக் கொள்ளலாம்.
இந்த கடாஃபியின் அதட்டலுக்கு பயந்து உள்ளே சென்ற சர்வர் சொற்ப நேரத்தில் உணவுகளோடு வந்தார். நூடுல்ஸ் போன்ற சீன சைவ உணவுகளும், இன்ன பிற தந்தூரி உணவுகளும் , “தங்கள் யாக்கை எங்களைச் செரிப்பதற்கு மிகவும் திண்டாடும்” என எச்சரித்ததை நான் மட்டுமே கவனித்தேன். எனக்கான தட்டு வைக்கப்பட்டதும் சர்வருக்கு நன்றி கூறிவிட்டு சாப்பிடத் தொடங்கினேன். நிஃப்டி, பங்குச்சந்தை வீழ்ச்சி, அமெரிக்க நிறுவனங்கள், கட் ஆஃப், கோச்சிங் சென்டர் என இவர்கள் அறுத்துத் தள்ளியதை நான் காதில் வாங்கவில்லை ஆதலால், தயிர்சாதமும் ஊறுகாயும் பிரமாதமாக ரசித்தது.

சுகமுடன் என்றுமே வாழலாம் ! - எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண்

.
   
   சிரிப்பு ஒரு மருந்து
   தினமும் அதைநீ அருந்து
   அகத்தில் சிரிப்பு எழுந்தால்
   முகத்தில் சிரிப்பு மலரும் !

  குழந்தைச் சிரிப்பு குதூகலம்
  குருவின் சிரிப்பு பெருமிதம்
  தந்தை சிரிப்பு மனநலம்
  தாயின் சிரிப்போ தனித்துவம் !

 நட்பின் சிரிப்பு நற்கொடை
 நாட்டின் சிரிப்பு விடுதலை
 கற்பின் சிரிப்பு கண்ணகி
 கயவர் சிரிப்போ காரிருள் !

 அஹிம்சையின் சிரிப்பு காந்தியில்
 ஆன்மீகச் சிரிப்பு ரமணரில்
 மெளனத்தின் சிரிப்பு புத்தரில்
 வாழ்விலே சிறந்திடச் சிரித்திடு !

இலங்கைச் செய்திகள்


ஓமந்தையில் ஒருதொகை ஆயுதங்கள் மீட்பு

எத்தனை தடைகள் வந்தாலும் வத்தளை தமிழ் பாடசாலை அமைக்கப்படும்

இலங்கையினை இலக்குவைத்துள்ள அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு

மாணவர்கள் மீது கண்ணீர் புகைப்பிரயோகம்

யோஷிதவின் பாட்டி நிதி மோசடி விசாரணைப்பிரிவில் ஆஜர்

கோத்தாபயவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு தாக்கல்.!

கைதுசெய்யப்பட்ட சிறுவன் 37 இணையத்தளங்களை ஊடுருவியுள்ளார்

ஓமந்தையில் ஒருதொகை ஆயுதங்கள் மீட்பு

30/08/2016 ஓமந்தை பிரதேசத்தில் விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் ஆயுதங்கள் சிலவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இலங்கை மாணவர் கல்வி நிதியம்

.

அவுஸ்திரேலியா   மெல்பனில்   28 ஆவது  ஆண்டுப்பொதுக்கூட்டம்  
அவுஸ்திரேலியாவில் 1988 ஆம்  ஆண்டு  முதல்  இயங்கும்  இலங்கை மாணவர்   கல்வி  நிதியத்தின்  28  ஆவது   ஆண்டுப் பொதுக்கூட்டம் எதிர்வரும்  16-10-2016  ஆம்  திகதி  ஞாயிற்றுக்கிழமை  மாலை  4.00  மணிக்கு    மெல்பனில்  VERMONT SOUTH COMMUNITY HOUSE     (Karobran Drive, Vermont  South, Victoria 3133) மண்டபத்தில்  நடைபெறும்.
நிதியத்தின்  தலைவர்  திரு.விமல். அரவிந்தன்   தலைமையில் நடைபெறவுள்ள  28  ஆவது  ஆண்டுப்பொதுக்கூட்டத்தில்  நிதியத்தின் உறுப்பினர்களின்    ஒன்றுகூடலும்  தகவல்  அமர்வும்  இடம்பெறும்.
இலங்கையில்    நீடித்த  போரில்   பெற்றவர்களை   இழந்த  ஏழைத்தமிழ் மாணவர்களின்   கல்வி  வளர்ச்சிக்காக  1988  ஆம்   ஆண்டு   தொடங்கப்பட்ட நிதியம்,   இதுவரையில்  ஆயிரத்துக்கும்  மேற்பட்ட  மாணவர்களின்  கல்வி வளர்ச்சிக்கு   உதவியுள்ளது.    நூற்றுக்கணக்கான  மாணவர்கள்  நிதியத்தின் உதவியினால்   பல்கலைக்கழக  பட்டதாரிகளாகியிருப்பதுடன்  மேலும்  பல மாணவர்கள்   அரச  மற்றும்  தனியார்   துறைகளிலும்  பணியாற்றுகின்றனர்.
இலங்கையில்   வடக்கு  கிழக்கு  மற்றும்  தென்னிலங்கைக்கு   இடம்பெயர்ந்த   பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும்  இலங்கை  மாணவர்  கல்வி  நிதியம் உதவிவருகிறது.    மேலும்   பல  மாணவர்களின்  கல்வி  வளர்ச்சிக்கு  நிதியம்    உதவவேண்டியிருப்பதனால்  மேலதிக  விபரங்களை பெற்றுக்கொள்வதற்காகவும்  28  ஆவது    ஆண்டுப்பொதுக் கூட்டத்தில் தகவல்   அமர்வும்  ஓழுங்கு செய்யப்பட்டுள்ளது.


யாழ். நல்லூர்க் கந்தனின் மாம்பழத்திருவிழாக் காட்சிகள்

 
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழாவில் நேற்று(29) திங்கட்கிழமை காலை தண்டாயுதபாணி உற்சவம் (மாம்பழத்திருவிழா) இடம்பெற்றது.

அந்தக் காட்சிகள் கீழே,

கரிசல் இலக்கிய மன்னன் கி.ரா.வுக்கு விருது - ஏகாந்தன்

.

தமிழில், கரிசல்காட்டு இலக்கியத்தின் முடிசூடா மன்னர் எனக் கருதப்படுபவர் கி.ரா. என்று அழைக்கப்படும் கி. ராஜநாராயணன். அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலக்கிய தளத்தில் ஆரவாரமின்றி இயங்கி வரும் மதிப்புக்குரிய ஆளுமை. வாழ்நாள் இலக்கிய சாதனைக்கென கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பு `இயல்` விருதினை இவருக்கு இந்த ஆண்டு வழங்கி கௌரவித்துள்ளது.
கோவில்பட்டிக்கு அருகில் இடைசெவல் என்ற கிராமத்தில் பிறந்த கி.ரா. இயல்பில் ஒரு விவசாயி. கிராமத்துக்காரர். தேர்ந்த கதை சொல்லியும் கூட. அவருக்கு வாய்த்த கிராம வாழ்வே அவரின் சுற்றுச்சூழலான கரிசல் நிலத்து வாழ்வின் பல்வேறு அம்சங்களை எழுத்துப்படம் பிடிக்கவைத்தது. சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என அவரது படைப்புகள், அந்தப் பகுதியில் மனிதவாழ்வின் போராட்டம், இயலாமை, பரிதவிப்பு, சோகம், ஆசை என வாழ்வின் தவிர்க்கமுடியா படிகளை எழுத்து வடிவில் பிரதிபலித்தன. கரிசல் நிலத்தின் வெட்ட வெளி, வறுத்தெடுக்கும் வெயில், வேர்வையில் மின்னும் விவசாயிகள், வேப்பமரக் கிராமங்கள் என விதவிதமாகத் தெரியும் ஒரு காலகட்டத்தின் தமிழ்ப்பிரதேசத்தின் மறக்க முடியாக் காட்சிகள் அவரது எழுத்தில் பிரகாசம் அடைகின்றன.

தமிழ் சினிமா


Enakku Veru Engum Kilaigal Kidaiyathu

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது

கவுண்டமணி இவரை திரையில் பார்த்தாலே ரசிகர்களுக்கு ஓர் சந்தோஷம் தான். 80 மற்றும் 90களில் கவுண்டமணியை மட்டும் நம்பியே பல படங்கள் திரைக்கு வந்து வெற்றி வாகை சூடியது, இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த படம் 49 ஓ, அதை தொடர்ந்து இன்று கணபதி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது.

கதைக்களம்

கவுண்டமணி சென்னையில் ஹீரோ, ஹீரோயினுக்கு கேரவன் வழங்கும் வேலைப்பார்த்து வருகிறார், இது மட்டுமின்றி சைடில் காதல் ஜோடிகளை சேர்த்து வைக்கின்றார். அப்படி ஒரு கட்டத்தில் சௌந்தர்ராஜன், ரித்விகா காதலை அவர்கள் குடும்பத்தில் எதிர்க்க, மதுரையிலிருந்து சென்னை ஓடி வருகின்றனர்.
அப்படி வருகையில் கவுண்டமணியை யதார்த்தமாக சந்திக்க பிறகு இவர்கள் காதல் என்ன ஆனது, இருவரையும் கவுண்டமணி சேர்த்து வைத்தாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

கவுண்டமணி ஒன் மேன் ஷோ தான், வயது தான் ஏறியிருக்கிறதே தவிர, அவருடைய காமெடி இன்றைய ட்ரண்டிலும் ஒர்க் அவுட் ஆகின்றது, ஒன் லைன் காமெடியின் என்றுமே இவர் தான் கிங், படத்தில் ஒருத்தரையும் விட்டுவைக்கவில்லை, எல்லோரையும் கலாய்த்து தள்ளிவிட்டார்.
சௌந்தர்ராஜன், ரித்விகா ஏற்கனவே பல படங்களில் நாம் பார்த்திருப்போம் இவர்கள் நடிப்பை, யதார்த்தமாக ஸ்கோர் செய்வார்கள், அப்படியே தான் இந்த படத்திலும் மிக யதார்த்தமாக நடித்துள்ளனர்.
படத்தின் மேக்கிங் தான் பெரும் பலவீனம், ஏதோ குறும்படம், சீரியல் நியாபகம் தான் பல இடங்களில் வந்து செல்கின்றது.

க்ளாப்ஸ்

வேறு என்ன நம்ம கவுண்டமணி அவர்கள் தான், அவர் மட்டுமே படத்தை தாங்கி செல்கிறார்.

பல்ப்ஸ்

பாடல்கள் மேலும் ப்ளஸாக கவுண்டமணி இருந்தாலும் சில இடங்களில் அவர் வசனம் பேச கஷ்டப்படுவது வயது காரணமாக தெரிகிறது.
மொத்தத்தில் கவுண்டமணியை நம்பி அவருக்காக மட்டுமே ஒரு முறை சென்று வரலாம்.
Music:

நன்றி   cineulagam