ஜெயா – சசி கும்பலை ‘கணக்கு’ போட்டு விடுவித்த நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பைத் தொடர்ந்து நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை வைத்திருந்த பலர்  – தமிழ்நாட்டைப் போலவே இந்தியாவின் பிற பகுதிகளிலும் – கசப்புடனும், ஆத்திரத்துடனும் எதிர்வினை ஆற்றியிருக்கின்றனர். பல்வேறு ஆங்கில இணைய தளங்களில் பின்னூட்டங்களாக வெளியிடப்பட்ட சில கருத்துக்களை இங்கு தொகுத்து தருகின்றோம். ‘அம்மா’ அவர்களின் விடுதலை இப்படியாக மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இனி நீதிமன்றம்தான் இறுதி நம்பிக்கை எனும் ஆசுவாசமெல்லாம் மக்களிடம் எடுபடாது.
- வினவு
இந்திய நீதித்துறைசூப்பர்மேன்களும்சூப்பர்வுமன்களும் –  by vorpal on May 12, 2015 07:51 PM ரீடிஃப்
லாலு பிரசாத் யாதவ் தண்டிக்கப்பட்டு, பின்னர் பிணை வாங்கி சந்தோஷமாக தனது வழக்கமான தொழிலை செய்து கொண்டிருக்கிறார்.
சல்மான் கான் 13 ஆண்டுகள் வெற்றிகரமான இழுத்தடிப்புக்குப் பிறகு தண்டிக்கப்பட்டாலும், ஒலியின் வேகத்தில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
ஜெயலலிதாவின் வழக்கு 19 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறது. மறுக்க முடியாத ஆதாரங்கள் இருந்த போதும் அவர் விடுவிக்கப்படுகிறார். அரசுத்தரப்பு மோசடியாக நடந்து கொண்டிருப்பது தெரிகிறது.
ஒரு பேருந்து ஓட்டுனர் அடித்து உதைக்கப்பட்டு இறக்கிறார்.