சுய துரோகம் - தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்


.

மூலம் - ஜகத் ஜே.எதிரிசிங்க (சிங்கள மொழியில்)



நேற்று
நீ நான் காதலில் பின்னிப் பிணையாதிருந்தோம்
காதல் வார்த்தைகளைப் பகராதிருந்தோம்
காதல் கவிதைகளை எழுதாமலிருந்தோம்
காதல் கீதங்களை இசைக்காமலிருந்தோம்
எதிர்கால இனிய கனவுகளைக் காணாதிருந்தோம்
நேற்று
நாங்கள் சந்திக்காதிருந்தோம்
இரு கரங்களையும் கோர்த்துக் கொள்ளாமலிருந்தோம்
காதலுடன் அரவணைத்துக் கொள்ளாமலிருந்தோம்
பெருமூச்சொன்றின் உஷ்ணத்தை
அனுபவிக்காதிருந்தோம்
நேற்று
நான் கண்ட அதே நிலவை
நீ காணாதிருந்தாய்
நான் அனுபவித்த தென்றலின் தழுவலை
நீ அனுபவிக்காதிருந்தாய்
நேற்று
நீயென்று ஒருவர் இருக்கவில்லை
நான் மாத்திரமே இருந்திருக்கக் கூடும்
இன்றும் அவ்வாறே
நான் மாத்திரமே
பாதம் பதிக்க இடமற்ற


மெல்பேணில் நடைபெற்ற இலக்கிய அரங்கும் நூல்வெளியீட்டு நிகழ்வும்


 .


 அவுஸ்திரேலியாவில், மெல்பேணில் கடந்த 14.10.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்களின் நூல்களின் வெளியீட்டு நிகழ்வும், கேசி தமிழ் மன்றத்தின் இலக்கிய விழாவும் ஒரே மேடையில் மிகவும் விமரிசையாக நடைபெற்றன.
விக்ரோறிய பல்லினக்கலாசார ஆணையாளர் திரு. சிதம்பரம் ஸ்ரீனிவாசன், அவர்கள், முனைவர் திரு. சிலம்பொலி செல்லப்பன் அவர்கள், எழுத்தாளர்கள் திருமதி இராணி தங்கராசா அவர்கள், திருமதி. கனகமணி அம்பலவாணபிள்ளை(மெல்பேண் மணி) அவர்கள்,
கலைவளன் திரு.சிசு நாகேந்திரன் அவர்கள் ஆகியோ மங்கல விளக்கில் சுடர் ஏற்றிவைத்தார்கள். இராக மாளிகா இசைப்பள்ளி மாணவிகள் பாடிய அவுஸ்திரேலியத் தமிழ் வாழ்த்துப்பாடலுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. 

சிட்னி முருகன் கோவில் நடாத்திய கலைக் கோலம் 27/10/2012

 .
படப்பிடிப்பு  ஞானி




சிட்னி மார்டின் பிலேசில் தீபாவளி 31/10/2012


இலங்கைச் செய்திகள்

.
ஒரு இலட்சம் பேரை தடுத்து வைப்பதற்கு தடுப்பு முகாம் அரசினால் நிர்மாணம்: அருண சொய்சா

மீள் குடியேறிய மக்களின் கூடாரங்களுக்குள் வெள்ளம்: மீண்டும் இடம்பெயரும் வன்னி மக்கள்

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: உதவிய நபருக்கு 35 வருட சிறைத் தண்டனை

ஒரு இலட்சம் பேரை தடுத்து வைப்பதற்கு தடுப்பு முகாம் அரசினால் நிர்மாணம்: அருண சொய்சா

ஒரு இலட்சம் பேரை தடுத்து வைப்பதற்கு ஏதுவான தடுப்பு முகாமொன்றை அரசாங்கம் நிர்மாணித்துள்ளது. இது எதிர்காலத்தில் இலங்கையில் உருவாகவுள்ள இராணுவ ஆட்சிக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாகும் என்று ருகுணு மக்கள் கட்சியின் தலைவர் அருண சொய்சா தெரிவித்தார்.
அடுத்த பொதுத் தேர்தலில் அரசாங்கம் தோல்வியுற்றாலும், பலாத்காரமாக ஆட்சியிலிருக்கும் திட்டங்களை தயாரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அருண சொய்சா இதனைத் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி   

யாழ் இந்து கல்லூரி விக்டோரியா பழைய மாணவர் சங்கம் - கான மழை 2012



நான் ரசித்த குறும்படம் - சைனா டீ

.
 இந்த குறும்படத்தை பார்த்து விட்டு நான் நினைத்து நினைத்து சிரித்து கொண்டு இருந்தேன், அந்த அளவுக்கு நல்ல திரைக்கதை அமைத்து, ஆட்களும் அவர்களின் நடிப்பு என்று பிரமாதம் போங்கள் !!

ஒரு ஊரில் இருக்கும் டீ கடையில் வியாபாரம் ஆகவில்லை என்று இருக்கும்போது, ஒரு சேல்ஸ்மேன் தரும் சைனா டீ தூள் அவர்களின் தலை எழுத்தை மாற்றுகிறது என்பதை அவ்வளவு அருமையாக காமெடி
உடன் சொல்லி இருக்கிறார்கள். இதை யார் இயக்கி இருக்கிறார் என்று தெரியவில்லை.....ஆனால் அவருக்கு ஒரு அருமையான எதிர்காலம் உள்ளது.



குஞ்சுண்ணியும், வேதாளமும்

.

எழுதி எழுதியே எழுத்தாய் போன 

குஞ்சுண்ணியின் கதையிது

குஞ்சுண்ணிக்கு திடீரென
பேய்க்கதைகள் எழுதும் ஆசை வந்தது

நடுநிசியில் எழுந்த குஞ்சுண்ணி
ஊர்க்கோடி கல்லறை நோக்கி
தனியாக நடக்க ஆரம்பித்தார்

நூறாண்டு வயதான
முருங்கை மரத்தடியில்
பேப்பர் பேனாவுடன் அமர்ந்தார்

இரிசிக் காட்டேரி
இரத்தக் காட்டேரி
ஆலகால பேய்
ஆளை கொள்ளும் பிரம்ம ராட்சஷன்
கதாபாத்திரங்களை வரிசையாக எழுத ஆரம்பித்தார்

ஏதேதோ கிறுக்க ஆரம்பித்தார்
என்ன எழுதியும் குஞ்சுண்ணிக்கு
திருப்தி வரவில்லை
எல்லாமே ஏற்கனவே எழுதியாயிற்றே
இனி நடக்கப்போவதும் எழுதப்பட்டவையே

சிட்னியில் தீபாவளி 2012 - 4/11/2012

சொல்ல மறந்த கதைகள் - 18 மனிதம் முருகபூபதி

   .
போர்க்காலம் கொடுமையானது. மனித உயிர் அழிவுகளையும் சொத்தழிவுகளையும் இடப்பெயர்வுகளையும் அகதிவாழ்வையும் அதிகபட்சமாக ஒப்பாரி அழுகுரல்களையும் வேதனை, விரக்தி, இயலாமை என்பவற்றையும் தன்னகம் கொண்டிருப்பது.
இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கா பிரதமராக பதவியிலிருந்த காலப்பகுதியில் சமாதான காலம் வந்தபோது, போரின் கோரமுகங்களை சந்தித்த ஈழ மக்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.
வெளிநாடுகளில் சுகபோகத்துடன் வாழ்ந்த ஆயுதத்தரகர்களும் ஆயுத வியாபாரிகளும் இலங்கையில் கொழும்பு உட்பட ஏனைய பிரதேசங்களில் சவப்பெட்டிகள் உற்பத்திசெய்த ஜயரட்ண ஃபுளோரிஸ்ட் உட்பட பல சவப்பெட்டி முதலாளிகளும் மாத்திரம்தான்  கவலையடைந்த காலப்பகுதி. வியாபாரம் வீழ்ச்சிகண்டால் முதலாளிமாருக்கு நட்டம்தானே. அது எந்த வியாபாரமாகவும் இருந்தால் சரி.
அந்த சமாதான காலத்தில் கொழும்பிலிருந்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் தமது முஸ்லிம்காங்கிரஸ் அங்கத்தவர்கள் சிலருடன் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திக்கச்சென்றார்.
யாழ்ப்பாணத்திலிருந்து இருபத்திநான்கு மணிநேரத்தில், அங்கு நீண்ட காலம் வாழ்ந்த முஸ்லிம் மக்களை புலிகள் வெளியேற்றிய கசப்பான கறைபடிந்த நிகழ்வுகளை மறந்து, காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைச்சம்பவங்களையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டிராமல் புரிந்துணர்வை வளர்ப்பதற்காக பகை மறந்த இயக்கமாக முஸ்லிம் தலைவர்களின்  அந்தப்பயணத்தை அவதானித்தோம்.

வானொலி மாமா நா.மகேசனின் குறளில் குறும்பு- 44. - காசு-

.
ஞானா:        அப்பா….இப்ப சொல்லுங்கோ அப்பா திருக்குறளிலை காசு எண்ட சொல்லு இருக்கோ எண்டு.

அப்பா:        நான் அறிஞ்ச மட்டிலை திருக்குறளிலை காசு எண்ட சொல்லு இருக்கிறதாய்  தெரியேல்லை ஞானா.

ஞானா:        காசு எண்ட சொல்லு எப்படித் திருக்குறளிலை இருக்கும் அப்பா. காசு ஆங்கிலச்சொல்லிலை இருந்து வந்த தமிழ்ச் சொல்லுத்தானே.

சுந்தரி:        முந்தி வந்த செவியைப் பிந்திவந்த கொம்பு பாத்துக் கேட்ட மாதிரி இருக்கு ஞானா  உன்ரை கதை.

அப்பா:        வாரும் சுந்தரி வாரும். நல்ல நேரத்திலை வந்தீர். இவாள் பிள்ளை ஞானாவின்ரை அகராதியிலை காசு எண்ட சொல்லு இங்கிலீசிலை இருந்து தமிழுக்கு வந்திருக்காம்.

ஞானா:    அப்பா cash, chshier, cash box எண்ட சொல்லுகள் எல்லாம் ஆங்கிலச் சொல்லுகள்தானே.

சிட்னி முருகன் கோவிலில் மானம் பூ திருவிழா 24/10/2012

.
 படப்பிடிப்பு ஞானி




நவுரூ முகாம் அகதிகளின் அவசரக் கோரிக்கை

.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நவுரூ தடுப்பு முகாமிற்கு அனுப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களது அவலத்தைக் காண அங்கு நேரடியாக வரும்படி சர்வதேச ஊடங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தங்களுக்கு அவசரமாக உதவுமாறு சுமார் 400 புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்த அழைப்பினை விடுத்துள்ளனர்.

இந்த புகலிடக் கோரிக்கையாளர்களில் அதிகமானோர் இலங்கையர் என்பதுடன் அவர்கள் தற்காலிக குடில்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு 40 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதோடு அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதால் நோய்களுக்கு உள்ளாவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர் பலர் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஐந்து பேர் வரையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் கடந்த 11 நாட்களாக உணவு ஏதுமின்றியிருப்பதாகவும் இதனால் அவருடைய உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   நன்றி வீரகேசரி
 

உலகச் செய்திகள்

.
தென் கொரியா மீது எதிர்வரும் வாரம் இராணுவ தாக்குதல் நடத்தப்படும்: வட கொரியா

லெபனானிய சிரிய ௭திர்ப்பு புலனாய்வு தலைவர் கார் குண்டுத் தாக்குதலில் பலி: பிராந்தியத்தில் பதற்றம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இறுதிக்கட்ட விவாதத்தில் ஒபாமா வெற்றி

பூமி அதிர்ச்சியை எதிர்வு கூறத்தவறியமைக்கு சிறை!

அமெரிக்காவில் 'சான்டி' : 6 கோடி பேர் பாதிப்பு, 60 பேர் பலி

கனடாவில் 7.7 ரிச்டர் நிலநடுக்கம்






தென் கொரியா மீது எதிர்வரும் வாரம் இராணுவ தாக்குதல் நடத்தப்படும்: வட கொரியா


தென் கொரியா மீது இரக்கமற்ற விதத்தில் இராணுவ தாக்குதலொன்றை எதிர்வரும் வாரம் மேற்கொள்ளப் போவதாக வட கொரிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட கொரிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறி, தற்போது தென் கொரியாவில் வசிக்கும் குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை எல்லைக்கு மேலாக பறக்க விடப்படும் பலூன்களிலிருந்து பிரசார துண்டுப் பிரசுரங்களை விழ விடுவதற்கான தமது திட்டத்தை முன்னெடுக்குமானால் மேற்படி தாக்குதல் ஆரம்பிக்கப்படும் என வட கொரிய மக்கள் இராணுவம் சூளுரைத்துள்ளது.

மேற்படி துண்டுப் பிரசுரங்களை விழ விடுவதற்கான சிறிய நகர்வொன்று அவதானிக்கப்படுமாயின் எதுவித எச்சரிக்கையுமின்றி, இரக்கமற்ற இராணுவத் தாக்குதலொன்று நடத்தப்படும் என வட கொரிய இராணுவம் கொரிய உத்தியோகபூர்வ முகவர் நிலையத்தினூடாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் சினிமா

பீட்சா

லிவிங் டூ கெதர் என்று சொல்லி திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழும் நவீன யுக தம்பதிகள் விஜய் சேதுபதி(மைக்கேல்) - ரம்யா நம்பீசன்(அனு).
பிட்சா விநியோகிக்கும் நபராக விஜய் சேதுபதி. காதலி வயிற்றில் தன் குழந்தை இருப்பது தெரியவர காதலியை மணக்கிறார்.
மனைவி ரம்யா நம்பீசன் ஒரு நாவல் எழுதுவதற்காக பேய்களை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். எப்போதும் பேய் படங்களை பார்ப்பதும், பேய்களை பற்றி சிந்திப்பதுமாய், கூடவே பேய் சம்பந்தமான விஷயங்களை சொல்லி கணவர் விஜய் சேதுபதியை கிலி ஏற்றுவதுமாய் சுவாரஸ்யமாய் நகர்கிறது இவர்களின் வாழ்க்கை.
பேய் இருக்கு! அது உனக்கும் ஒரு நாள் தெரிய வரும். அந்த நாள் ரொம்ப தூரத்துல இல்ல! என்று தன் மனைவி சொன்ன வார்த்தைகள் அவ்வப்போது இதயத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது விஜய் சேதுபதிக்கு.
ஒருநாள் யதார்த்தமாக பீட்சா டெலிவரி பண்ண ஒரு பங்களா வீட்டிற்கு போகிறார். அங்கு தான் அவர் டைம் ஸ்டார்ட் ஆகுது. யப்பா... திரைக்கதையில் என்னமா திகில் கிளப்பி இருக்கிறார் இயக்குனர்.
காசு கொண்டு வர உள்ளே சென்ற பெண்மணி காணாமல் போக, உள்ளே சென்று பார்த்தால் அந்த பெண் பிணமாக சுவற்றில் தொங்க, கரண்ட் இல்லாமல் கதவையும் திறக்க முடியாமல், விஜய் சேதுபதியின் அவஸ்தகள் சொல்லி முடியாதவை. ஒரு நொடி கூட கவனத்தை சிதறவிடாமல், இருக்கையின் நுனிக்கு நம்மை கொண்டு வந்து, திக் திக் நிமிடங்களால் நம்மை அதிர வைக்கிறது இயக்குனரின் திரைக்கதை.
இதையெல்லாம் எப்படி நம்பவது, இதெல்லாம் ரீல்-ஆ இல்லை ரியல்-ஆ என்ற கேள்வி எழும் போதே அதற்கு அடுத்து வரும் காட்சிகளில் எதிர்பார்க்கவே முடியாத சில திருப்பங்கள் திரைக்கதையில் இருக்கிறது.
எல்லாமே டூப் சங்கதிகளாக இருந்தாலும் அதை டாப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
விஜய் சேதுபதி நல்ல நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்திருகிறார். தமிழ் சினிமாவில் அவருக்கான தனி இடம் இருக்கப்போவது உறுதி. விரிந்த கண்களோடு, வியர்வையில் பயந்தபடியே பேய் வீட்டில் அல்லாடும் காட்சிகளாகட்டும், காதல் காட்சிகளாகட்டும், நச்சுன்னு ஒரு நடிப்பு!
அனுவாக வரும் ரம்யா நம்பீசன் முதலில் வரும் காதல் காட்சிகளில் இயல்பாக தோன்றி காட்சியில் ஒன்ற செய்கிறார். படத்தில் வரும் சின்னச்சின்ன கதாபாத்திரங்கள் எல்லாமே சுவாரஸ்யமாக இருக்கின்றன. குறிப்பாக வீர சந்தானம், நரேன், ஜெயக்குமார் அனைவருமே கதாபாத்திரத்தை பிரதிபலிக்கிறார்கள்.
படத்தின் மிகப் பெரிய பலம் அதன் தொழில்நுட்ப கலைஞர்கள் தான். ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் படத்தில் இவரும் ஒரு கதாநாயகன் என்றே சொல்ல வேண்டும். ஒரு வீட்டுக்குள் டார்ச் லைட், மெழுகுவர்த்தியை வைத்தே ஒளிப்பதிவில் வித்தை காட்டியுள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இசை. எங்கு தேவையோ அங்கு மட்டும் அதை தந்து படத்திற்குள் ரசிகர்களைக் கொண்டு போகிறார். முதலில் அறிமுகமான அட்டகத்தியை அவரே மிஞ்சி இருக்கிறார். படம் கச்சிதமாக வந்ததற்கு இன்னொரு காரணம் எடிட்டர் லியோ ஜான்பால்.
படத்தின் முடிவில் வரும் மாண்டேஜ் ரசனையான ஐடியா. ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், இயக்கம் அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்த ரசனையான அனுபவத்தை தருகிறது.
எழுதி, இயக்கியிருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். ஏற்கனவே குறும்படங்களில் பெயரெடுத்தவர். இப்போது முதல் படத்திலேயே எந்த தடுமாற்றமும் இல்லாமல் தெளிவான திரைக்கதை. கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்து சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.
முன் பகுதி சிறிது நேரம் மெதுவாக நகர்ந்தாலும் பின் பகுதியின் வேகம் அதை மறக்கச் செய்கிறது. இவ்வளவு நல்ல திரைக்கதையோடு ஒரு சினிமா வந்து எவ்வளவு நாளாகிறது?... என்று கேட்க வைக்கும் பீட்சாவுக்கு கிடைத்திருப்பது பாஸ் மார்க்.
நடிகர்: விஜய் சேதுபதி.
நடிகை: ரம்யா நம்பீசன், பூஜா.
இயக்குனர்: கார்த்திக் சுப்பாராஜ்.
இசை: சந்தோஷ் நாராயணன்.
ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்.

நன்றி விடுப்பு