அசுர உழைப்பு என்பார்களே?
அதை
நேரில் பார்க்கும் போது அணு அணுவாக உணரக் கூட அளவுக்கு மேடையில் அந்த அலைவரிசையைப்
பார்வையாளருக்குக் கடத்திய உணர்வு மேலிட்டது.
தெல்லிப்பழை
மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் சிட்னியில் மார்ச் மாதம் 9 ஆம் திகதி
நிகழ்த்திய அரங்கு
பிரமிப்பும், பெருமிதமும், பூரிப்பும் நிகழ்ந்த அனுபவமாக அமைந்து
விட்டது.
கட்டியம் கூறி சிலப்பதிகாரம் தொடங்கிய போது முன்னோட்டமாக அந்தச் சிறுமிகள் ஆடலும், பாடலுமாகக் கொடுத்த நேர்த்தியில் கண் கலங்கிவிட்டது.
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவியும், ஆசிரியருமான பெருமை மிகு ஈழத்துப் படைப்பாளி கோகிலா மகேந்திரன் அவர்களின் புதல்வர் முனைவர் பிரவீணன் மகேந்திரன் அவர்களது கச்சிதமான அறிமுகத்தோடு தொடங்கிய மகாஜன மாலை 2025 நிகழ்வில் இரண்டு அரங்கச் சுவை அம்சங்கள் அமைந்திருந்தன.
தொடக்கத்தில் “சிட்னி அரங்கக் கலைகள்
சக இலக்கியப் பவர்” வழங்கிய “மாலை” என்ற குறு நாடகம்.
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்குப்
பின் இந்த அமைப்பு ஃபீனிக்ஸ் போல உயிர்த்தெழுந்திருக்கிறது.
இவர்களின் நாடகங்களை முன்னாளில் அனுபவித்தவர்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பாக இருக்க அதற்குச் சரியான “மாலை” போட்டது.
.jpg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.png)
.png)
-1_page-0001.jpg)
-8_page-0001.jpg)

