மரண அறிவித்தல்

.


புத்திசிகாமணி இராமநாதன் காலமானார் 



பிறப்பு 24 -11- 1935 -இறப்பு 25-06-2012    













ஏழாலை வடக்கை பிறப்பிடமாக கொண்டவரும், அவுஸ்திரேலியாவில் Strathfield ஐ  வசிப்பிடமாகக்  கொண்டவரும், Spiceland முன்னாள் உரிமையாளருமான புத்திசிகாமணி  இராமநாதன்  அவர்கள் 25-06-2012 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற புத்திசிகாமணி இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், ரத்னாவின் அன்புக் கணவரும், கஜன், சாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சதிஷ் அவர்களின் அன்பு மாமனாரும்,  இஷான், யுவன் ஆகியோரின் அன்பு பாட்டனுமாவார்.
இவர் பத்மநாதன், சிதம்பரநாதன், செல்வராசா, தவமணி ஆகியோரின் சகோதரனும், சித்திரா நடராஜா, மகேசன், கனேசன், ரஞ்சன் கந்தவனம் ஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னாரின் பூதவுடல் 29-06-2012 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை Strathfield-Town Hall, 65 Homebush Road,Strathfield என்ற இடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
ஈமக்கிரியைகளும், தகனக்கிரியையும்  Macquarie Park crematorium, corner of Delhi and Plassey Roads, North Ryde என்ற இடத்தில் 30-06-2012 சனிக்கிழமை காலை 10:30 மணியிலிருந்து 2 மணிவரை நடைபெறும்.
உற்றார், உறவினர்கள், நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.

சிட்னியில் மாபெரும் இசை நிகழ்ச்சி 23,24/6/12

.


                                                                                         (படப்பிடிப்பு ஞானி )

ATBC யின் கலைஒலிமாலை 1/ 07/ 2012

.

சைவமன்றமும் உலக சைவப்பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையும் இணைந்து நடாத்திய சேக்கிழார் விழா 2012 - க சபாநாதன்


கடந்த ஞாயிற்றுக்கிழமை 17-06-2012 அன்று சிட்னி முருகன் கோயில் கல்வி கலாசார மண்டபத்தில் சைவமன்றமும் உலக சைவப்பேரவை அவுஸ்திரேலியாக் கிளையும் இணைந்து சேக்கிழார் விழாவைச் சிறப்பாகச் செய்திருந்தார்கள். இவ்விழா தொடர்ந்து ஐந்தாவது வருடமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவிற்காக அறுபத்திமூன்று நாயன்மார்களின் உருவப்படங்களும், நான்கு சந்தானகுரவர்களுடன் மாணிக்கவாசக சுவாமிகளின் உருவப்படமும் சேக்கிழார் பெருமானது உருவப்படமும் ஆலயத்து வசந்தமண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு வைத்து மாலை 5.00 மணிப்பூசையுடன் விஷேட பூசை நடைபெற்றது. இப்பூசையைத் தொடர்ந்து இளஞ்சிறுவர்களுடன் இளைஞர்களும் சேர்ந்து பல்லக்கில் சேக்கிழார் பெருமானையும்; ஏனைய திருத்தொண்டர்களின் திருவுருவப்படங்களையும் கும்பம், விளக்கு, குடை, நந்திக்கொடி, ஆலவட்டம் ஆகியவற்றுடன் மணியோசை முழங்க பெரியோர்கள் ஓம் நமசிவாய எனும் தமிழ்மந்திரம் ஓத ஆலய வீதி வலம் வந்தார்கள்.

உடனே திரும்பவேண்டும் (சிறுகதைகள்) -அ.முத்துலிங்கம்


.
முதலில் கடித்தது தும்பு இலையான். தும்பு இலையான் உண்மையில் கடிக்காது, முட்டைதான் இடும். என்னுடைய மகள்
கைக்குழந்தை. அவள் தோள்மூட்டில் முட்டையிட்டிருந்தது. கண்ணுக்குத் தெரியாத அந்த முட்டைப்புழு சருமத்துக்குள் புகுந்து வளர
ஆரம்பித்தது. சருமம் வீங்கி குழந்தை நிறுத்தாமல் அழுதது. நாங்கள் ஆப்பிரிக்காவுக்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்தன. எங்களுக்கு
என்ன செய்வதென்று தெரியவில்லை.
 அடுத்து அவளுக்கு நுளம்பு கடித்து மலேரியாக் காய்ச்சல் பிடித்தது. மருத்துவ மனைக்கு ஓடினோம். குழந்தை மெலிந்து
உருக்குலைந்து கொண்டு வந்தது. அந்த நேரம் பார்த்து என்னை நைரோபி அலுவலகத்துக்கு அவசரமாக வரும்படி பணித்தார்கள். சியாரா
லியோன் ஆப்பிரிக்காவின் மேற்கு கரையோரம் என்றால் நைரோபி கிழக்கு கரை. நீண்ட தூரம். நேரடியான விமான பறப்பு இல்லை.
போவதற்கும் வருவதற்கும் மூன்று நாள் எடுக்கும். மனைவியை எப்படியும் சமாளிக்கச் சொல்லிவிட்டு புறப்பட்டேன். நான் திரும்பி வர
எட்டு நாட்கள் ஆகும் என்பது எனக்கு அப்போது தெரியாது. வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத ஒரு பயணமாக அது அமையும் என்பதும்
நான் நினைத்தும் பார்த்திராத ஒன்று.

Thirumurai Muttrothal 73rd session


இலங்கைச் செய்திகள்

சர்வமத மாநாட்டு தீர்மானங்கள்

கட்டுப்படுத்த முடியாத பெரும் சவாலாக டெங்கு

வறுமையில் வாழும் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள்

ஜனாதிபதியின் லண்டன் விஜயமும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களும்

இரணைமடுக் குளத்தில் மீன் பிடித்த தொழிலாளர் மீது படையினர் தாக்குதல்

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதுவர்களுக்கு இராணுவ முகாமில் செயலமர்வு

முள்ளிக்குளம் கிராமத்தைச் சூழ கடற்படைப் பாதுகாப்புடன் சிங்கள மக்கள் குடியேற்றம்!

 தமிழ் கல்வி முறையாக இல்லாததால் சிங்கள பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள்

மன்னாரில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் வழங்கலில் முறைகேடு

திருகோணமலைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான தடை நீக்கம்

ஜூலாம்பிட்டியே அமரேவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

பின்தொடரும் வியட்நாம் தேவதை - முருகபூபதி-


    .
வியட்நாம் போரின் நாற்பது ஆண்டு நிறைவில், நினைவாக ஒரு பதிவு.

  காலத்தின் கோலத்தில் முரண்நகைக்குட்பட்ட தேசங்கள்

வாழ்க்கைப்பயணத்தில் நாம் எத்தனையோ பேரைச்சந்திக்கலாம். ஆனால் அவர்களில் எத்தனைபேர் எமது நெஞ்சங்களில் நீக்கமற நிலைபெற்று, எமது நினைவுகளில் தொடர்ந்து வந்துகொண்டிருப்பார்கள்?
அவ்வாறு நினைவுகளில் தொடருபவர்களுடனான முதல் சந்திப்பு ‘பல முதல்கள்’ போன்று மறக்கவே முடியாத நிகழ்வாகிவிடும். சுமார் இருபத்தி ஏழு வருடகாலமாக என்னைத்தொடர்ந்துவரும் ஒரு வியட்நாம் தேவதையைப் பற்றி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காகவே இந்த ஆக்கத்தை எழுதுகின்றேன்.
இருபதாம் நூற்றாண்டில் நடந்த  வரலாற்று முக்கியத்துவம் மிக்க சம்பவங்களை பதிவுசெய்துள்ள இணையத்தளங்கள் மற்றும் இதழியல் ஊடகங்களில் இடம்பெற்ற அந்தப்படத்தை எவரும் இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள்.

வானொலி மாமா நா.மகேசனின் குறளில் குறும்பு 36 மரண தண்டனை



.
சுந்தரி : (பத்திரிகை வாசிக்கிறாள்) வங்கியில் கொள்ளை அடித்த இருவருக்கு மரண தண்டனை…… வேணும். சரியான தண்டனைதான். இந்தக் காலத்திலை கொலை, களவு, கொள்ளை எல்லாம் கூடிப்போச்சு. உப்பிடித் தண்டனை குடுத்தால்தான் உதுகள் அடங்கும்.

ஞானா : என்ன அம்மா…. ஆருக்குத் தண்டனை?

சுந்தரி: வங்கியிலை  கொள்ளை  அடிச்ச இரண்டு பேருக்கு மரண தண்டனை எண்டு இந்தப் பேப்பறிலை போட்டிருக்கு.

ஞானா : இதென்ன அநியாயம். வங்கியைக் கொள்ளை அடிச்சதுக்கு மரணதண்டனையோ? அதுகும் இந்தக் காலத்திலையோ?

சுநதரி : அதிலை என்ன பிழையெண்டு கேக்கிறன்? நீ திருக்குறள் ஆராயிற உனக்குத் தெரியாதே? திருவள்ளுவரே உப்பிடித்தான் தண்டனை குடுக்க வேணும் எண்டு குறளிலை சொல்லியிருக்கிறார். நான் முன்னை படிச்ச ஞாபகம். குறள்தான் தெரியேல்லை.

அப்பா: (வந்து) படிச்சதை மறக்கக் கூடாது எண்டும் வள்ளுவர் சொல்லியிருக்கிறார் சுந்தரி. நான் நினைக்கிறன் ஞானா திருக்குறளிலை செங்கோன்மை எண்ட அதிகாரத்திலை உதைப்பற்றி ஏதோ ஒரு குறள் இருக்கு.

அவுஸ்திரேலியா நோக்கி ஆபத்தான கடல் பயணம்

Monday, 18 June 2012

அவுஸ்திரேலியா நோக்கி படகுகளில் கொண்டு செல்லப்படும் மக்கள் பலர் கடலில் காணாமற் போவதாகவும் கடந்த ஆண்டில் தென்னிந்தியாவிலிருந்து இரு படகுகளில் புறப்பட்ட மக்களுக்கு என்ன நடந்ததென்பது இதுவரை தெரியவில்லை எனவும் கலாநிதி கிளட்சன் சேவியர் மற்றும் சந்திரகாசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட பிறிஸ்பன் ரைம்ஸ் ஊடகத்தில் அதன் செய்தியாளர் பென் டொஹேத எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்


.


இயல் விருது – 2012 

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோவில்  யூன் 16ம் தேதி ராடிஸன் ஹொட்டலில் நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது  எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இயல் விருதை தொடர்ந்து மற்றைய விருதுகளும் வழங்கப்பட்டன:

புனைவு இலக்கியப் பிரிவில் 'பயணக் கதை' நாவலுக்காக  யுவன் சந்திரசேகருக்கும்,  அபுனைவு இலக்கியப் பிரிவில் 'கெட்டவார்த்தை பேசுவோம்’ நூலுக்காக பெருமாள் முருகனுக்கும், கவிதைப் பிரிவில் ’இரண்டு சூரியன்’ தொகுப்புக்காக தேவதச்சனுக்கும்,  ’எனக்குக் கவிதை முகம்’ தொகுப்புக்காக அனாருக்கும், மொழிபெயர்ப்பு பிரிவில் ’என் பெயர் சிவப்பு’ நூலுக்காக ஜி.குப்புசாமிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர் கட்டுரைப் போட்டியில் ராம் அட்ரியன் பரிசு பெற்றார்.

சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட ’கணிமை விருது’ வாசு அரங்கநாதனுக்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவுக்கு பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.
nantri: amuttu.net

அவுஸ்திரேலியாவுக்கு 200 இலங்கை அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்து


 21/06/2012





  அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரிச் சென்ற 200 இலங்கைத் தமிழ் அகதிகளின் படகு கிறிஸ்மஸ் தீவிற்கு அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தின்போது 75 இற்கும் மேற்பட்டோர் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. படகு விபத்தில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் எண்ணிக்கை விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. 

நன்றி வீரகேசரி  

உலகச் செய்திகள்


நைஜீரியாவில் தொடரும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள்

கிலானியின் பதவியை பறித்தது உயர் நீதிமன்றம்: பாகிஸ்தானில் பரபரப்பு

நைஜீரியாவில் பல்வேறு குண்டுத் தாக்குதல்கள் 36 பேர் உயிரிழப்பு; பலர் காயம்

பிரான்ஸ் தேர்தலில் சோசலிசக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி

நேபாளத்தில் அரசியல் குழப்பம் ஆளும் கட்சிக்குள் பிளவு

சவூதியில் நால்வருக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றம்

தமிழ் சினிமா


மறுபடியும் ஒரு காதல்

மருத்துவராக இருக்கும் கதாநாயகன் ஜீவாவுக்கு, அவர் படித்த மருத்துவ கல்லூரியில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவ்விழாவிற்கு செல்லாமல் மது அருந்திவிட்டு லாரி ஒன்றில் அடிபட்டு கீழே விழுகிறார். அப்போதிலிருந்து பிளாஷ் பேக் விரிகிறது.

கதாநாயகி கவிதா லண்டனில் இருக்கிறார். லண்டனில் பெரிய புள்ளியாக இருக்கும் சுமனின் ஒரே மகள் இவர்.

லண்டனில் உள்ள எப்.எம் ரேடியோ நடத்தும் கவிதைப் போட்டி ஒன்றில் சென்னையில் இருக்கும் நாயகனும், லண்டனில் இருக்கும் நாயகியும் கலந்து கொள்கின்றனர்.

இருவரும் வெற்றிபெற, கதாநாயகி மட்டும் பரிசினை பெற வருகிறார். அங்கே கதாநாயகனின் கவிதையைக் கண்ட நாயகி, எப்.எம். மூலம் நாயகனின் மின்னஞ்சல் முகவரியைப் பெறுகிறார். இமெயில் சாட்டிங்காக மாற அது காதலாக மாறுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் காதலித்துக் கொள்கின்றனர்.

இந்நிலையில் சுமன் தன் மகளை தமிழ்நாட்டிற்கு கூட்டி வருகிறார். தனது காதலனின் தகவல்களை பென் டிரைவில் எடுத்து வரும் நாயகி, அதை தவற விட்டு விடுகிறார். சென்னை வரும் கதாநாயகி மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார். இக்கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறார் நாயகன்.

இருவருக்குமான சாட்டிங் தொடர்பு லண்டனோடு முடிந்து போகவே, இருவரும் தவித்துப் போகிறார்கள். இதனிடையே சில சந்திப்புகளால் நாயகன், நாயகி பெற்றோர்கள் ஒன்றிணைய, இருவருக்கும் வற்புறுத்தி கல்யாணம் செய்து வைத்து விடுகிறார்கள்.

தன் கணவர்தான் தான் காதலித்தவர் என்று நாயகிக்கு தெரியாமலும், தன் மனைவிதான் தான் காதலித்தது என நாயகனுக்கு தெரியாமலும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்துகின்றனர். இருவரும் தங்களது காதலை எண்ணி ஒருவரை ஒருவர் வெறுத்துக் கொள்கிறார்கள்.

இறுதியில் இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.

ஜீவா கேரக்டரில் வரும் அனிருத் சிறப்பாக நடித்திருக்கிறார். கவிதா கேரக்டரில் வரும் ஜோஷ்னா கண்ணுக்கு பார்க்க அழகாக இருக்கிறார். போலி டாக்டர் சிங்காரம் கேரக்டரில் வரும் வடிவேலுவின் காமெடி படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றே சொல்ல வேண்டும்.

நாயகனின் தந்தையாக வரும் ஒய்.ஜி. மகேந்திரன், நாயகியின் தந்தையாக வரும் சுமன் ஆகியோர்கள் தங்களது கேரக்டரை நிறைவாய் செய்திருக்கிறார்கள். காதலை சுருக்கமாய் காண்பித்து, பிரிவினை பெரிதாக காண்பித்திருப்பது திரைக்கதையின் பலவீனத்தை காட்டுகிறது.

கண்ணனின் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன. நாயகன் நாயகியின் சோகத்தை ஒரு டிராக்கில் அமைத்து, மறு டிராக்கில் வடிவேலுவின் காமெடியை வைத்து படத்தை சமன் செய்ய முயன்றிருக்கிறார் இயக்குனர் வாசு பாஸ்கர். கிளைமாக்ஸில் எதிர்பாராத முடிவை தந்து படத்தை முடித்திருக்கிறார் வாசு பாஸ்கர்.

மறுபடியும் ஒரு காதல் - ரசிகர்களிடம் புதைந்து போகும் காதல்.

நடிகர்: அனிருத், வடிவேலு, ஒய்.ஜி.மகேந்திரன், சுமன்.
நடிகை: ஜோஷ்னா.
இயக்குனர்: வாசு பாஸ்கர்
இசை: ஸ்ரீகாந்த் தேவா.
ஒளிப்பதிவு: கண்ணன்.



முரட்டுக்காளை


ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முரட்டுக்காளை படத்தின் கதையைப் போன்றே இப்படத்தையும் எடுத்திருக்கிறார்கள்.

தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயத்தைப் பார்த்துக் கொண்டு, தனது நான்கு தம்பிகளோடு கிராமத்தில் வாழ்கிறார் காளை.

பக்கத்து ஊரில் ரேக்ளா பந்தயம் நடக்கவே, அதில் கலந்து கொள்ளும் காளை வெற்றி மகுடம் சூட்டுகிறார்.

அந்த ஊரின் பெரியபுள்ளியான வரதராஜனின் தங்கை பிரியா, காளையைப் பார்த்ததும் அவர் மேல் ஒருதலையாய் காதல் கொள்கிறார். தனது ஆசையை தனது வீட்டில் வேலையாளாக இருக்கும் திருநங்கை சரோஜாவிடம் தெரிவிக்கிறார்.

காளையின் ஊருக்கு வரும் சரோஜா, காளையை பற்றி முழு தகவல்களை அறிந்து கொண்டு பிரியாவிடம் வருகிறார். காளைக்கு நான்கு தம்பிகள் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் சம்மதம் சொன்னால் காளை உன்னை திருமணம் செய்து கொள்வார் என்றும் சொல்கிறார்.

இதனையடுத்து காளையின் தம்பிகளை சந்திக்கும் பிரியா, தனது கல்யாணத்திற்கு அவர்களிடம் சம்மதமும் வாங்கிக் கொள்கிறார்.

வரதராஜன் தன்னிடம் வேலையாளாக இருப்பவரின் தங்கையாக வரும் புவனா மீது மோகம் கொள்கிறார். அவரை அடைய நினைக்கும் முயற்சியில் புவனாவின் அக்காவை கொலை செய்து விடுகிறார். இதனால் தனித்து விடப்படும் புவனா உயிர் பிழைத்துக் கொள்ள காளையின் வீட்டில் அடைக்கலமாகிறார். அவருக்கு காளையும் அடைக்கலம் தருகிறார்.

இந்நிலையில் தனது தங்கை காதலிக்கும் ஆள் காளை என்பதை விட, அவரது நிலத்தில் கனிமப் பொருள் இருப்பது வரதராஜனுக்கு தெரியவரவே, அவர் மாப்பிள்ளை கேட்டு காளை வீட்டிற்கு வருகிறார். இது அறியாமல் திருமணத்திற்கு சம்மதிக்கிறார் காளை.

நிச்சயதார்த்தத்தின் போது வரதராஜனின் நிலத்தாசை தெரிய வருகிறது. பிரியா தன் தம்பிகள் மேல் வெறுப்பு காட்டுவதும் தெரிய வருகிறது. இதனால் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விடுகிறார். இதனால் காளையும் வரதராஜனும் எதிரிகளாகி விடுகின்றனர்.

தம்பிகள் மேல் அன்பு காட்டும் புவனாவை காளைக்கு பிடித்துப் போகிறது. அவரை கைப்பிடிக்க நினைக்கிறார். இதற்கு பலவிதமான முட்டுக் கட்டைகளைப் போடுவது மட்டுமின்றி ஒரு கொலைப்பழியையும் அவர் மீது சுமத்துகிறார் வரதராஜன்.

இத்தனை பிரச்சினைகளையும் காளை சமாளித்தாரா? புவனாவை கரம் பிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

காளை வேடத்தில் சுந்தர் சி நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும், ரேக்ளா பந்தயக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். புவனா கேரக்டரில் வரும் சினேகா அழகாய் நடித்திருப்பது மட்டுமின்றி, பாடல் காட்சிகளில் கவர்ச்சியும் காட்டியிருக்கிறார்.

வரதராஜன் வேடத்தில் வரும் சுமன் வில்லன் நடிப்பில் அசத்துகிறார். பிரியா கேரக்டரில் வரும் சிந்து துலானி தன் பங்கை உணர்ந்து நடித்திருகிறார்.

திருநங்கை சரோஜாவாக வரும் விவேக் சிறப்பாக நடித்திருக்கிறார். சுமனோடு இருந்து கொண்டு அவருக்கு எதிராக காளையை கொம்பு சீவி விடும் பாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.

தனி டிராக்கில் இவர் நடத்தும் காமெடி, சில காட்சிகளில் சிரிப்பைத் தருகிறது. இவர் குளியல் போடும் காட்சிகளில் அருவறுப்பைத் தருகிறது.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் 5 பாடல்கள். பொதுவாக என் மனசு தங்கம் ரீமிக்ஸ் பாடல், சிம்பு பாடிய சுந்தர புருஷா பாடல் தாளம் போட வைக்கிறது.

ரேக்ளா பந்தயம், டிரெயின் சண்டை காட்சி, கிராமத்து பசுமை ஆகியவற்றை சான்டோனியோ கேமிரா அள்ளி வந்திருக்கிறது. அதனை அழகாக திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள் படத்தொகுப்பாளர்களான பிரவீண் மற்றும் ஸ்ரீகாந்த்.

ரஜினியின் முரட்டுக் காளையை இப்படத்தில் மீள்பதிவு செய்ய முயன்றிருக்கிறார் இயக்குனர் செல்வபாரதி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய படம் இது. இப்போது வந்திருந்தாலும் ரசிக்கும் படியாகவே கொடுத்திருக்கிறார் செல்வபாரதி.

நடிகர்: சுந்தர் சி, சுமன், விவேக்.
நடிகை: சினேகா, சிந்து துலானி.
இயக்குனர்: செல்வபாரதி.
இசை: ஸ்ரீகாந்த் தேவா.
ஒளிப்பதிவு: சான்டோனியோ.

 நன்றி விடுப்பு