சிட்னி முருகன் ஆலய வருடாந்த முதலாம் திருவிழா
மார்ச் மாதம் 21 ம் திகதி முதலாம் திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்க கோலாகலமாக இடம் பெற்றது . சுவாமி வீதிஉலா வரும் அந்த அழகிய காட்சியை கீழே காணலாம்.
அழுகிறதே அறிவுலகு ! - எம் . ஜெயராமசர்மா
ஊனநிலை வந்தாலும் ஊக்கமதை இழந்திடாமல்
தானெடுத்த முயற்சிதனில் சாதனையைப் படைத்துநின்ற
இங்கிலாந்தின் விஞ்ஞானி இணையில்லா ஸ்டீபன்தனை
எல்லோரும் வியந்துநின்று இதயத்தால் வாழ்த்துகிறார் !
பேராசிரியாய் இருந்து பெரும்பொறுப்பை நிருவகித்தார்
பெருங்குறைகள் தனக்கிருந்தும் பேதலிக்கா மனமுடனே
பேரண்டம் தனையாய்ந்து பெருமைதனைப் பெற்றுநின்றார் !
வைத்தியர்கள் கைவிட்டும் மனமுடைந்து போகாமல்
வாழுவேன் எனும்துணிவில் மற்றவரை வியக்கவைத்தார்
வாழ்ந்துநின்ற வாழ்க்கைதனை வையகத்துக் குதவவைத்தார்
மறைந்தாலும் ஸ்டீபன்ஹாக் மக்கள்மனம் உறைகின்றார் !
புறவழகை அவரிழந்தார் அகவழகில் அவர்நிறைந்தார்
புத்தூக்கம் புத்துணர்ச்சி மொத்தமாய் அவர்மிளிர்ந்தார்
வருங்கால இளைஞருக்கு அவருழைத்த நல்லுழைப்பு
வாழ்வுக்கு வழிகாட்டும் மாமருந்தாய் இருக்குதன்றோ !
கணனிதனை வசமாக்கி கருத்தனைத்தும் கொடுத்துநின்று
உலகிலினிலே விஞ்ஞான சாதனையால் உயர்ந்துநின்றார்
நிலவுலகில் ஸ்டீபனைப்போல் இருப்பாரை யாம்காணோம்
அவர்பிரிவை நினைத்தேங்கி அழுகிறதே அறிவுலகு !
வீ.ஏ. திருஞானசுந்தரம் மறைந்தார்
23/03/2018 இலங்கை
ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் வீ. ஏ. திருஞானசுந்தரம்
நேற்று கொழும்பில் மறைந்தார்.


அத்துடன், ஓய்வு பெற்ற பின்னரும் சில ஊடகத்துறை நிறுவனங்களில் முக்கிய பதவிகளிலும் சேவையாற்றியவர்.
சொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 05 சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்தவாறு சிங்கள இலக்கியங்களை தமிழுக்குத்தந்த முஸ்லிம் சகோதரர்கள் தர்மபோதனை செய்யவேண்டிய தேரர்களை அரசியலுக்குள் இழுத்து தேசத்தையும் கண்டத்துள் சிக்கவைத்த சிங்களத்தலைவர்கள் - முருகபூபதி - அவுஸ்திரேலியா

மடோல் தூவ நாவலை, வீரகேசரியில் பணியாற்றிய ஊர்காவற்துறையைச்சேர்ந்த கே. நித்தியானந்தன்,
" மடோல்த்தீவு" என்ற பெயரில் மொழிபெயர்த்து, வீரகேசரியில் தொடராக வெளியிட்டார்.
மஹரகமையைச்சேர்ந்த தெனகம சிரிவர்தன எழுதிய குருபண்டுரு
என்ற சிங்கள நாவலை, தென்னிலங்கை பண்டாரகமவைச் சேர்ந்த திக்குவல்லை கமால், குருதட்சணை என்ற பெயரில் மொழிபெயர்த்து தமிழ் வாசகர்களுக்கு
வழங்கினார்.
மட்டக்களப்பு மாவட்டத்துக் கிராமியச் சடங்குகளும் அவை தொடர்பான பாடல்களும் 📖 நூல் நயப்பு
திருமதி சுகந்தி சுப்ரமணியம் அவர்களால் தமிழ்த்துறையின் சிறப்புக் கலைமாணிப் பட்டத்துக்கான ஆய்வுத் தேடலாக எழுதப்பட்டு நூலுருப் பெற்றிருக்கிறது. தமிழ் ஈழத்தின் தென் கோடியில் இருக்கும் மட்டக்களப்புப் பிரதேசம் மொழிப் பயன்பாடு, கலை வெளிப்பாடுகள் போன்றவற்றில் தனித்துவத்தோடு விளங்குகின்றது. இன்று வரை பழந்தமிழர் கலைகளின் ஊற்றுக்கண்ணாய் பக்தி மரபில் இருந்து வாழ்வியல், பொழுதுபோக்கு அம்சங்கள் என்று தடம் பதிக்கின்றது.
இருப்பினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலை பெற்றிருக்கும் கலை வெளிப்பாடுகளோடு ஒப்பிடும் போது அவை குறித்து வரலாற்று ரீதியான மற்றும் ஆய்வு நோக்கிலான எழுத்துப் பகிர்வுகள் மிக அரிதே. இந்த நூலை வாங்கத் தூண்டியதே இந்த எதிர்பார்ப்பின் வெளிப்பாடு எனலாம். ஆனால் புத்தகத்தின் ஆரம்பப் பக்கங்களைப் பிரிக்கும் போது மிகுந்த மனச்சுமை ஒட்டிக் கொள்கிறது...ஆம் இந்த நூலாசிரியர் தற்போது நம்மிடையே இல்லை. அதாவது திருமதி சுகந்தி சுப்ரமணியம் அமரராகிப் பத்து வருடங்கள் கழித்து 2006 ஆம் ஆண்டு அவரது ஆய்வுத் தேடல் அச்சு வாகனமேறியிருக்கிறது.

“அவள் தலையில் எனக்கொரு விருப்பம் தலைக்குள் இருக்கும் மூளையில் வந்த விருப்பம் அது. அம்மூளைக்குத் தான் எத்தனை சிந்தனை. நிறைந்த வாசிப்பு, நிறைந்த சிந்தனை, நிறைந்த அறிவு” என்று தன் மாணவி சுகந்தி குறித்து நெக்குருகிப் பேசும் பேராசிரியர் சி.மெளனகுரு அவர்கள், மட்டக்களப்பு மாவட்ட மக்களது வாழ்வியல் சடங்குகள் குறித்து சுகந்தி சுப்பிரமணியம் அவர்கள் எழுதிய மேலுமொரு ஆய்வுப் பிரதியையும் தேடிப் பதிப்பித்தல் வேண்டுமென்கிறார்.
படைப்புலகில் 60 ஆண்டுகளை நிறைவுசெய்யும் மூத்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் படைப்பிலக்கியத்தை இலங்கையில் விட்ட இடத்திலிருந்து மீண்டும் புலம்பெயர் வாழ்வில் தொடங்கியவர் - முருகபூபதி

ஒரு நல்ல சிறுகதையைப் படிக்கும் வாசகனுடைய சிந்தனையானது கதை முடிந்த பின்னும் சிறிது தூரம் ஓடவேண்டும். சிறுகதையின் முழுமை அவன் சிந்தனை ஓட்டத்தில்தான் நிறைவேற வேண்டும். ஒரு உண்மையான சிறுகதை அது முடிந்த பிற்பாடுதான் தொடங்குகிறது. - இப்படிச்சொல்லியிருப்பவர் தன்னை ஒரு இலக்கிய விமர்சகராகவோ அல்லது இலக்கியப்பேராசிரியராகவோ அறிமுகப்படுத்திக்கொண்டவர் அல்ல.
ஒரு குடும்பத்தில் திடீரெனக் காணாமல் போனவர் திடுதிப்பென சுமார் இருபத்தியைந்து ஆண்டுகளுக்குப்பின்னர்
விந்தையான இயல்புகளுடனும் கருத்தையும்
கவனத்தையும் ஈர்க்கும் தோற்றத்துடனும் திரும்பிவந்து இதோ நான் இன்னமும் இருக்கின்றேன் எனச்சொல்லும்போது அந்தக்குடும்பத்தினரிடம் தோன்றும் வர்ணிக்க வார்த்தைகளைத்தேடும் பரவசம் இருக்கிறதே அது போன்றதுதான் நண்பர் அ.முத்துலிங்கம் அவர்களின் இலக்கிய மறுபிரவேசம் என்று நினைக்கின்றேன்.
இலங்கைச் செய்திகள்
"எங்களால் தெரிவுசெய்யப்பட்ட நீங்கள் நீதியை நிலைநாட்டுங்கள்"
சரத் வீரசேகர குழுவுக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்குமிடையில் ஜெனிவாவில் வாதப்பிரதிவாதம்
களேபரமான ஜெனிவா உபகுழுக்கூட்டம் : சரத் வீரசேகர குழுவினரும் புலம்பெயர் அமைப்பினரும் வாக்குவாதம்
கோத்தாவின் கீழ் இயங்கியோரே எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தினர் ; ஜெனிவாவில் தெரிவித்த பெண்
"10 வருடங்களாக எனது மகனை தேடி அலைகின்றேன்"
செய்நன்றி மறக்கமாட்டேன் : யாழில் ஜனாதிபதி
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழில் ஆர்ப்பாட்டம்
ஜெனிவா உபகுழுக்கூட்டத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய சரத் வீரசேகர
"எங்களால் தெரிவுசெய்யப்பட்ட நீங்கள் நீதியை நிலைநாட்டுங்கள்"
21/03/2018 தொண்டர் ஆசிரியர்களாக நீண்ட காலமாக சம்பவத் திரட்டுப் பதிவேடுகள் முறையாக பதிவு செய்யப்பட்டும் எமக்கு நியமனம் கிடைக்கவில்லை. ஆனால் பதிவேடுகள் இல்லாதவர்களுக்கு நியனமங்கள் வழங்கப்படுகிறது. இது யாருடைய அரசியல் தலையீடு. வடமாகாண முதலமைச்சராகிய நீங்கள் இதனை கருத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொண்டராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகச் செய்திகள்
மீண்டும் ஜனாதிபதியாகிறார் விளாடிமிர் புட்டின்
கடனட்டை மோசடி குற்றச்சாட்டு : பதவியை இராஜினாமா செய்தார் மொரீசியஷ் ஜனாதிபதி
இலங்கை வம்சாவளிப் பெண் அமெரிக்கத் தேர்தலில் போட்டி
பிரான்ஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் : 2 பொலிஸார் பலி ; துப்பாக்கி முனையில் பொதுமக்கள் சிறைப்பிடிப்பு
நான் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவன் எனக் கத்திய துப்பாக்கிதாரி ; நால்வர் பலி ; 16 பேர் காயம் : நிறைவுக்கு வந்தது பிரான்ஸ் சம்பவம்
மீண்டும் ஜனாதிபதியாகிறார் விளாடிமிர் புட்டின்
19/03/2018 ரஷ்யாவின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் 75 சதவிகித வாக்குகள் கணக்கிடப்பட்ட நிலையில், தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 76.11 சதவிகித வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

தமிழ் சினிமா - 6 அத்தியாயம் – திரை விமர்சனம்
படத்தின் தலைப்புக்கு ஏற்ப இந்த படம் அமானுஷ்யங்கள் அடங்கிய 6 கதைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் வெவ்வேறு கதைகளை கொண்டதாக இருந்தாலும், அவை அனைத்தும் அமானுஷ்யம் என்ற கருவை மையமாக வைத்து உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஹீரோ
நாயகன் தமன் குமாருக்கு நெருக்கமானவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை, உயிர் பாதிப்பு ஏற்படும் நிலை வந்தால் அது அவருக்கு முன்கூட்டியே தெரிய வருகிறது. இதுகுறித்து மருத்துவர் ஸ்டான்லியிடம் ஆலோசிக்க செல்கிறார். அப்போது அவர் சொல்வதில் உண்மை இருப்பதாக உணரும் மருத்துவர் என்ன செய்தார்? தமன் குமார் அப்படி நடக்க காரணம் என்ன? என்பதே முதல் அத்தியாயமாக காட்டப்பட்டுள்ளது.

இனி தொடரும்
பாப் சுரேஷின் வீட்டில் ஒரு குழந்தை பந்து விளையாடுகிறது. ஆனால் பாப் சுரேஷுக்கு அந்த குழந்தை இருப்பது தெரியவில்லை. மாறாக அந்த பந்து மட்டும் தெரிகிறது. இந்நிலையில், அங்கு வரும் பேபி சாதனா அந்த குழந்தையுடன் பேசுகிறாள். கடைசியில் பாப் சுரேஷின் கண்ணுக்கு ஏன் அந்த குழந்தை தெரியவில்லை? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே அடுத்த அத்யாயத்தின் கதை.

மிசை
நாயகன் கிஷோர் அவரது நண்பர்கள் பிரசன்னா, கதிர், ராண்டில்யாவுடன் தங்கியிருக்கிறார். இந்நிலையில், கிஷோர், மதுஸ்ரீ மீது காதல் வயப்படுகிறார். பின்னர் ஒரு கட்டத்தில் தனது காதலை மதுஸ்ரீயிடமும் சொல்கிறார். ஆனால் அவரது காதலை மதுஸ்ரீ ஏற்காததால் தவறான முடிவை எடுக்கிறார். இந்நிலையில், மதுஸ்ரீ, கிஷோரை காதலிப்பதாக வர பின்னர் என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.

அனாமிகா
வாடகை கொடுக்க கஷ்டப்பட்டு குறைவான தொகை கொடுத்து ஒரு வீட்டில் தங்குகிறார் கேபிள் சங்கர். அவரது வீட்டிற்கு வருகிறார் நாயகன் குளிர் சஞ்ஜீவ். சஞ்சீவிடம் இந்த வீட்டில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறும் கேபிள் சங்கர் தனது அவசர வேளையாக வெளியூர் செல்ல முடிவு செய்0கிறார்.
முன்னதாக சஞ்சீவின் உதவிக்கு, அந்த வீட்டிற்கு அருகில் இருக்கும் தாத்தா ஒருவரை அறிமுகம் செய்துவைக்கிறார். அந்த தாத்ததாவை பார்க்க சென்ற இடத்தில் நாயகி காயத்ரியை பார்க்கிறார் சஞ்சீவ்.
பார்த்தவுடன் காயத்ரியுடன் காதல் வயப்படுகிறார். மீண்டும் அவளை பார்க்க செல்லும் போது அவள் அங்கில்லை. மாறாக அப்படி ஒரு பெண்ணே இல்லை என்று அந்த தாத்தா கூறுகிறார். பின்னர் வீடு திரும்பும் சஞ்சீவ் தன்னைச் சுற்றி அமானுஷ்யங்கள் நடப்பதாக உணர்கிறார். ஒரு கட்டத்தில் காயத்ரி இரவு மெழுகுவர்த்தியுடன் அந்த வீட்டுக்கு வர மயக்கம் போட்டு விழுகிறார். கடைசியில் சஞ்சீவ் முழிக்கும் போது என்ன நடந்தது? காயத்ரி உயிருடன் தான் இருந்தாரா? அல்லது அங்கு ஏதேனும் அமானுஷ்யம் இருந்ததா? என்பதே மீதிக்கதை.

சூப் பாய் சுப்பிரமணி
நாயகன் சுப்பிரமணி தனது காதலியை வெளியே அழைத்துச் செல்கிறார். முடிவில் நாயகி சுப்பிரமணியை அடித்துவிட்டு காதலை முறித்துவிட்டு செல்கிறாள். இதையடுத்து மற்றொரு பெண்ணுடன் காதல் வயப்படுகிறார் சுப்பிரமணி. அவளும் அவனை அடித்துவிட்டு காதலை முறித்துவிட்டு செல்கிறாள். தனது காதலை ஏதோ ஒன்று பிரிப்பதாக கருதும் சுப்பிரமணி மந்திரவாதி ஒருவரை சந்திக்கிறார். சுப்பிரமணியின் கடந்தகால வாழ்க்கையை பார்க்கும் மந்திரவாதி அதற்கான காரணத்தை சொல்லி அவருக்கு ஒரு முடிவை சொல்கிறார். அது என்ன முடிவு? அதில் இருக்கும் ருசீகரமான கிளைமேக்ஸ் என்ன என்பதே மீதிக்கதை.

சித்திரம் கொல்லுதடி
புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்டும் வினோத் கிஷன் அந்த புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்களை அப்படியே வரைந்துவிடும் திறமையுடையவர். இதுவரை பார்க்காத முற்றிலும் புதிய முகத்தை வரைந்து கொடுக்கும்படி ஒரு விளம்பர நிறுவனம் ஒன்று அனரை அணுகுகிறது. அதற்காக சில புத்தகங்களை வாங்கி வருகிறார் வினோத். அப்போது தவறுதலாக கோகிலா என்ற புத்தகத்தின் ஒரு பாதி மட்டும் அவருக்கு கிடைக்கிறது.
அந்த புத்தகத்தை படித்து அதில் வரும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை தனது கற்பனையில் வரைந்து விடுகிறார். ஆனால் அவளது கண்களை மட்டும் வரைய முடியவில்லை. இதையடுத்து அந்த புத்தகத்தை எழுதியவரை தேடிச் செல்கிறார். ஆனால் அந்த புத்தகத்தை எழுதியவர் இறந்துவிடுகிறார். கடைசியில் அந்த உருவத்தை வினோத் வரைந்து முடித்தாரா? அதன் பின்னணியில் என்ன அமானுஷ்யம் நடந்தது என்பதே மீதிக்கதை.

தனித்தனியாக குறிப்பிட்டு கூறாமல் 6 அத்தியாயங்களிலும் நடித்த தமன் குமார், எஸ்.எஸ்.ஸ்டான்லி, பாப் சுரேஷ், பேபி சாதன்யா, திவ்யா, கிஷோர், மதுஸ்ரீ, பிரசன்னா, கதிர், ராண்டில்யா, விஷ்ணு, பிரான்சிஸ், சந்திரகாந்தா, சங்கீதா, ஈஸ்வரி, வினோத் கிஷன், அரவிந்த ராஜகோபால், சோமு சுந்தர், சாருலதா ரங்கராஜன் என அனைத்து கதாபாத்திரங்களுமே அவரவர்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருந்ததுடன் கதாபாத்திரத்திற்கு மெருகேற்றி இருக்கின்றனர்.
6 அத்தியாயங்களுக்காகவும் தனித்தியாக பணியாற்றிய கேபிள் சங்கர், சக்தி வி.தியாகராஜன், அஜயன் பாலா, சுரேஷ் இ.ஏ.வி., லோகேஷ், ஸ்ரீதர் வெங்கடேசன் என அனைவரும் செய்த வேலைகளில் சிறப்பாக பணியாற்றி இருக்கின்றனர்.
சினிமா வரலாற்றில் முதல் முறையாக அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது என்றே சொல்லலாம். ஆறு இயக்குனர்கள் இயக்கியுள்ள, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும், படத்தில் இறுதியாக வரும் கிளைமாக்சில் தனித்தனியாக சொல்லப்படுகிறது. ஒரு சில இடங்களில் திரைக்கதை ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என்றாலும், ரசிக்கவும் வைத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவில் சி.ஜே.ராஜ்குமார் (2 அத்தியாயங்கள்), பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோராஜா (தலா ஒரு அத்தியாயம்) இவர்களின் பங்கு சிறப்பு. இன்னமும் மெருகேற்றி இருக்கலாம். பி.சி.சாம், தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் பிராங்க்ளின், சதீஷ் குமார் என அனைவருமே பின்னணியில் கலக்கியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் `6 அத்தியாயம்’ அலட்டல் இல்லை.
நன்றி tamilcinema.news
Subscribe to:
Posts (Atom)